கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அடி முடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும் முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர்ச் சித்திரம். அம்மா!!! 2008ம் ஆண்டு அன்னையர்நாளின் போது தமிழ்க் காற்று வானொலியூடாக ஒலிபரப்பப்பட்டது. 2010 அன்னையர் நாளின்போது லங்காசிறீ இணையத்தளமூடாகப் பிரசுரிக்கப்பட்ட கவிதை. http://inuvaijurmayu...rch/label/கவிதை http://www.poems.lan...567&pidp=202577
-
- 22 replies
- 1.5k views
-
-
ஒவ்வொரு முறை நான் பிறக்கும் போதும் நீ எனக்காக ஒவ்வொரு முறையும் இறக்குறாய் , கட்டத்தில் அடைக்க முடிய வில்லை உன் கரை கடந்த அன்பை வார்த்தைகளை தேடி வலு விழந்து போகிறது மனசு உன் ஏக்கங்களே எனது காபரன்களாய் எக்காளிக்கும் கூட்டங்களை தாண்டி வளர்கின்றேன் உன்னாலே . தூக்கம் தொலைத்த இரவுகளில் விம்மி வெடிக்கிறது மனசு விபரம் தெரிந்த நாளில் இருந்து வடிவாக பார்த்ததில்லை எந்நாளும் கடமையில் நீ ஒரு கர்ம வீரி , வீட்டையே உனது உலகமாக்கி யுகம்களை கணமாக்கும் சாமர்த்தியசாலி . இருபத்தியிரண்டு வருடங்கள் இருக்கவில்லை உன்னருகில் , காலங்களே பாரங்களாகி கனக்கிறது இதயம் , இருக்கும் பொது யாருக்கும் தெரிவதில்லை அருமை காலமும் என் வாழ்க…
-
- 9 replies
- 1.3k views
-
-
அன்புக்கு இலக்கணமும் நீ தான் தமிழ் பண்புக்கு புததகமும் நீ தான் கற்புக்கு கண்ணகியும் நீ தான் பொறுமைக்கு பூமியும் நீ தான் கண்டிப்பதில் கிட்லறும் நீ தான் அன்புக்கு அன்னை திரேசாவும் நீ தான் படி என்று சொல்லவதற்கு ஆசானும் நீ தான் வீட்டில் இரட்சியத்துக்கு அரசியும் நீ தான் அன்போடு பேசும் தோழியும் நீ தான் பூமியில் வாழும் உயிர் உள்ள தெய்வமும் நீ தான்
-
- 2 replies
- 1.1k views
-
-
அம்மா தாய் அவள் தந்த உயிர் துடிப்புக்கள் சேயாய் தந்தவிட்ட சிறு சிணுங்கல்கள் தாய் மடி மீது கண் உறங்கிய பொழுதுகள் பாய் மீது படுத்த போதே தொலைந்ததே தாய் மீது கொண்ட எல்லையில்லா அன்புக்கும் தாய் மண் மீது கொண்ட பற்றுதலுக்கும் பாய் சொல்லி விட்டு பவித்திரமாய் ஹாய் ஆக புகுந்துவிட்ட வாழ்வின் அந்நியம் தேயாமல் மறையாமல் வளரும் நினைவுகள் தாய்மைக்கு தாயாக நானிங்கே பார்த்திட இயலாமல் இயங்குகின்ற பொழுதுகளில் தாயின் நோய் கண்டு மனம் நொந்து அம்மா என்றே வாய் விட்டு அழைக்கும் ஆன்மா இங்கே
-
- 23 replies
- 3.4k views
-
-
அம்மா அகிலத்தின் ஆரம்பமே அம்மா ஆத்மாவின் துடிப்பே அம்மா இன்பத்தின் அத்திவாரம் அம்மா ஈகையின் சின்னமே அம்மா உறுதியின் உயிரே அம்மா ஊக்க மாத்திரையே அம்மா எளிமைக்கு உதாரணம் அம்மா ஏற்றம் தருபவள் அம்மா ஐயம் தீர்ப்பவள் அம்மா ஒழுக்கதின் உதாரணம் அம்மா ஓயாத அலையே அம்மா ஔடதம் வாழ்வில் அம்மா துளசி
-
- 12 replies
- 3k views
-
-
எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உலகெங்கும் அன்னையர் தினம் அன்பான வாழ்த்துக்களுடனும் அழகான பரிசுப்பொருட்களுடனும் இனியநினைவுகளாய் ஆயத்தமாக எங்கள் தாய்மண்ணில் எப்படி நகர்கிறது? பத்துமாதம் சுமந்து பெற்று பகலிரவாய் கண்விழித்து கண்ணுக்குள் மணியாய் காத்து வளர்த்த மகன், நட்ட நடுநிசியில் வந்த கொடுங்கோலர் கூலிகளால் அடித்து உதைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட-அந்த கொடியநிகழ்விலிருந்து மீளாது துடித்து துவண்டு அழும் என் அன்பு அம்மா!-உனக்கு எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உடைந்த உள்ளமும் உடையாத நம்பிக்கையுமாய் படைமுகாம்கள்தோறும் பதைக்கும் மனதுடன்-என் தம்பியை தேடி அலையும்-உனக்கு எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உயிருடன் என் தம்பி மீள்வானா என இங்கிருந்து நான் தவிக்க, துள…
-
- 3 replies
- 604 views
-
-
அம்மா சொல்லிக்கொடுத்து சொல்லாமல் சொன்ன சொல் "அம்மா"... எண்ணும் கணக்கில் எண்ணாமல் எண்ணும் நெஞ்சம் "அம்மா"... தத்தி நடை நடந்து மண்ணில் தடக்கி அங்கே விழுகையிலும் முட்டி நிற்க்கும் கண்ணீர் முன்னே முந்தி வரும் வார்த்தை "அம்மா"... தள்ளாடும் வயதினிலும் சொல்லாடல் மாறாமல் உள்ளோடும் உயிரோடு உறைந்த உயர்ந்த வார்த்தை "அம்மா"... கண் மூடிப் தூங்க பாயில் போகும் போதும் "அம்மா" கனவு கண்டு உளறி வாய் உதிர்க்கும் வார்த்தை "அம்மா"... உண்ட உணவு தொண்டை வரை நிறைந்துவிடும் போதும் எடுத்துப் பெரு மூச்சுவிடும் வேளையிலும் "அம்மா"... களைத்து உடல் இளைப்பாறும் வேளையிலும் கூட இதமாய் கையை நிலத்தில் உன்றி சொல்லும் வார்த்தை "அம்ம…
-
- 5 replies
- 1.2k views
-
-
உன் முகம் காணாது என் மனம் வாடுதம்மா கண்களின் ஈரம் அது என்னை நனைக்குதம்மா உன் இமைகள் மூடுகையில் என் கண்கள் ஏங்குதம்மா பாசக் கயிற்றினாலே என் இதயம் நோகுதம்மா உன் குரல் கேட்கையிலே என் உள்ளம் ஆறுதம்மா வாழ்க்கையின் வழியில் முள்கள் குற்றுதம்மா வலியின் நோவுகள் இங்கு உன் நினைவு ஆற்றுதம்மா
-
- 3 replies
- 1.2k views
-
-
புறநானூற்றில் இருந்து தொடரும் தமிழ் இலக்கிய மரபில் புகழ்பூத்த சில கவிதைகளில் கவிஞர்களின் ஊடலும் கோபமும் பதிவாகியுள்ளது. சின்ன்ம் சிறுவயதில் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான வன்முறைப் போர்க் களத்தில் சந்தித்ததில் இருந்து கவிஞர் புதுவை இரத்தினதுரையும் நானும் ஆப்த நண்பர்கள். மாக்சிய கருத்தாடல்களோடும் கள்ளோடும் கவிதைகளோடும் கழிந்த நாட்கள் பல. 2006ம் ஆண்டின் பின்பகுதியில் வன்னியில் என்னுடைய அம்மா நோய்வாய்ப் பட்டிருந்தபோது நான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அம்மவை புதுவை சென்று பார்க்கவில்லையென கேழ்விப்பட்ட கோபத்தில் அம்மா கவிதையை எழுதினேன். அதனை புதுவையே தான் வெளியிடும் வெளிச்சம் 100 மலரில் வெளியிட்டது சிறப்பு. 1000 வருடங்கள் நிலைக்கவுள்ள எனது கவிதைகளுள் அ…
-
- 7 replies
- 1.9k views
-
-
போர்க்காலத்தில் வன்னியில் அம்மா சுகயீனமுற்றிருந்த பொழுது எழுதிய கவிதை. விடுதலைப் புலிகளின் உள்சுற்று இலக்கிய சஞ்சிகையான வெளிச்சம் இதழில் வெளிவந்தது. . 1.அம்மா போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையே வாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா தும்மினேன் அம்மா. அன்றி என்னை வடதுருவத்தில் மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ? அம்மா அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் நம் முற்றத்து மரங்களில் மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? தம்பி எழுதினான். வ…
-
- 0 replies
- 836 views
-
-
யார் சொன்னது ...? கூப்பிட்ட குரலுக்கு ... கடவுள் வராது என்று ...? கூப்பிட்டு பார் உன் அம்மாவை ......!!! அம்மா கடுகு கவிதை எவராலும் முடியாது .. நொடிக்கு நொடி என்ன ... தேவை என்பதை... உணரும் மனோ தத்துவ .. ஞானதன்மை ...!!! அம்மா கடுகு கவிதை பிறந்தபோது... ஈரத்துடன் பார்த்த ... முகத்தையே - இறந்து ... கிடக்கும் போது இதே ... முகமாக பார்க்கும் ... ஒரே -ஜீவன் - அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை உயிருடன் ... இருக்கின்ற போது மட்டும் ... அழைப்பதில்லை ... அம்மா ....!!! மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் அழைக்கும் உடன் சொல் .... ஒரே உலக சொல் -அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை இந்த உலகு புவி சுற்றால்... இயங்க வில்லை -தாயின் .. தூய அன்பால் சுற்றுகி…
-
- 5 replies
- 3.1k views
-
-
எல்லா அம்மாவிற்கும் தெரியும் தன் மகனிற்கு எது பிடிக்கும் என்று, ஆனால் 99% மகனிற்கு தெரியாது தன் அம்மாவிற்கு எது பிடிக்கும் என்று...
-
- 12 replies
- 1.6k views
-
-
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே நீயும் நானும் என்றும் ஓர் உயிராக பத்து மாத பந்தத்தில் இனத்தோடு ஆறாவதாய் ,பெற்ற இந்த உயிர் அரக்கரின் நுழைவால் சிதறியோடி அடைக்கலம் புகுந்த கோவில் உனக்கு எயமனின் பாச கயிறுஎனும் செல் விழும் இடம் என்று அறிந்திலேன் . உன் கடை குட்டியுடன் நீயும் என் குஞ்சுகளுடன் நானும் சிதறியோடிய அந்த நாள் பசி, பட்டினி ,யுடன் நான் இருந்தாலும் ,என் குஞ்சுக்கு மாப்பால் பருக்க கெஞ்சி நான் சுடு நீர் வைத்து பால் கொடுக்க , பிஞ்சு என் முகம் பார்த்து முறைத்து ,அடம் பிடிக்க , அம்மம்மாவின் கோமதியின் பசுப்பாலுக்கு ஏங்க ....நான் பட்ட துய்ர்கொஞ்சமா ? ஓடியும் நடந்தும் . பதுங்கியும் நானும் என் குஞ்சுகளும் ,என் மாமா மாமியும் தள்ளாத அவர் வயதில் தடுமாறி…
-
- 1 reply
- 1.9k views
-
-
அம்மா இங்கே வா வா!! அம்மா இங்கே வா வா! Arrest Warrant தா தா! வேலூர் ஜெயிலில் போட்டு கண்ணுல தண்ணியும் காட்டு! அப்புவும் ரவியும் கூட்டு சின்ன 'சாமி'க்கும் வேட்டு குடுத்தாங்க மாமீங்க பேட்டி சாயம் போச்சுது காவி வேட்டி பெருசுங்க பொருளுங்க குட்தாங்க கூடவே போட்டாவும் புட்ச்சாங்க எதிராளிய குத்தம் சொன்னாங்க மீதிய அமுக்கினு போனாங்க போஸ்டரு நோட்டிசு அடிப்பாங்க கட்டவுடுக்கு பாலும் ஊத்துவாங்க அந்த 'ஸ்டாரோட' குஞ்சு-கல காணோங்க பாலில்ல! ஒருபுள்ள போச்சுதுங்க அபலைங்க சோகமும் பார்த்தாச்சி அனுதாபமும் எரக்கமும் பட்டாச்சி பழய துணிமணி கொடுத்தாச்சி சுனாமி சோகமும் போயாச்சி மிருனாள் சென் -ஆ! யாருங்க? ஜெயலச்சுமி செரினா தெரியுங்க ஐயோ! '…
-
- 6 replies
- 1.8k views
-
-
அம்மா உன் அன்பு உள்ள வரை தனிமை தெரிவதில்லை உன் கரிசனம் இருக்கும் வரை உணவும் தேவையில்லை தனித்த் போது ஒரு சிணுங்கலில் தாவி ஓடி அணைத்திடுவாய் அள்ளி முத்தம் தந்திடுவாய் அம்மா மடி மீது நான் மட்டும் அரசாட்சி கண்ணுறங்க கதை சொல் வாய் அப்பாவை எனக்கு அறிமுகம செய்தவளே தப்புக்கள் நான் செய்தால் தட்டிக் கேட்பவளே பகட்டான பட்டுச்சட்டை கலர் கலராய் காலுறை மெத்தென்ற சப்பாத்தும் கை காது கழுத்துக்கும் நகையணிபூட்டி அழகு பார்த்தவளே பள்ளிக்கு சென்று நானும் பாடங்கள் பல படித்து பரீட்சையில் சித்தி பெற்று பட்டங்கள் பல பெற்று பாங்காய் ஒரு பணியிடத்தில் பல்லாயிரம் பணம் பெற்று பக்குவமாய் வீடு கட்டி பல பேரும் பார்த்து நிற்க பாரினில…
-
- 6 replies
- 3k views
-
-
அம்மா எனும் உறவு.... தாய்ப் பாசம் அனைத்து உயிரும் ஆசைகொள்ளும் உன்னதப் படைப்பு அவள்.... அம்மா என்று அழைத்ததுமே உன் அருகில் நிற்கும் நினைவு இவள்..... அவளை மனதிலே நினைத்துவிட்டால் காற்றுனை தாலாடும் உணர்வுகொள்வாய்... உன் கவலையெல்லாம் மறந்துவிடும் வானத்து நிலாகூட - உன்னை நெருங்கிவந்து முத்தம் தரும்.... அவளை நினைக்கும் போதெல்லாம் நீ மீண்டும் பிறந்திடுவாய்.... பிறப்பின் உணர்வு கொண்டு குழந்தைப் பருவதின் குதூகலம் உணர்ந்திடுவாய்.... தாயெனும் தெய்வமது தன் பசியில் உனை வளர்ப்பாள்... உன் தூக்கம் தருவதற்கு தன் இரவை செலவுசெய்வாள்... பல கண்டங்கள் தூரத்திலும் உன் துக்கம் அறிந்திடுவாள்.... அதுபோல நீயு…
-
- 1 reply
- 1k views
-
-
அம்மா கவனம் அம்மா இந்த நாட்கள் எம்முடனேயே முடியட்டும். இனி எவரும் இப்படி வாழவேண்டாம் . இவ்வாறு சாகவேண்டாம். உன்வைற்றில் உள்ள என் இளையவனோ இளையவளோ நான் பட்ட துன்பம் நீபட்ட சிரமத்தை நினைக்கவே கூடாது! இத் துன்பங்களும் அவர்களை நெருங்கவும் கூடாது!! நாம் நெருங்க விடவும் கூடாது! அப்பா இல்லை.இருக்கிறாரோ தெரியவில்லை! இருந்தாலும் இனி மனிதனாக நடமாடக்கூடியதாக அவர்கள் விட்டு வைத்துள்ளார்களா தெரியாது...??? ஆமி பிடிச்ச எதிர் வீட்டு மாமா திரும்பி வந்தபோது அவர் வந்தது எவ்வாறு எனக்கு தெரியும்.! அம்மா நீ கவனம் அதைவிட உன்னுள் உறங்கும் என் இளையவர் மிகக்கவனம். இப்போ சிங்களவன் இலக்கு பிறக்காத குழந்தைகள் தான். அவர்களுக்கு விருப்பம் தமிழ் சிசுவின் கொல…
-
- 4 replies
- 1.1k views
-
-
அம்மா சமாதி பன்னீர் வடிக்கும் கண்ணீரில் அம்மா சமாதியே அரை அடி உயரும். சசி துடைக்கும் கைக்குட்டையில் காவிரி டெல்டா ஒருபோகம் விளையும். அம்மாவை நினைத்தாலே அழத்தான் முடியும். அவர்களுக்கோ, அழுகை சிரிப்பின் முக்காடு சிரிப்பு அழுகையின் வேக்காடு. அழுகைப் போட்டியில் யாருக்கு முதல் பரிசு?. தடுமாறுது தமிழகம் அழுகாச்சி காவியத்தில் அமுக்கி எடுக்குது ஊடகம். சிரித்ததனால் நான் மனிதன் என்பது பன்னீரு சிரித்ததனாலேயே நீ மனிதனில்லை என்பது வெந்நீரு. நீ பெரிய குளமென்றால் நான் மன்னார் குடி! அம்மாவுக்கே நான்தான் ஆன்மா அடைக்கலம் தருமோ அம்மா ஆன்மா? மெரினா தியானத்தை கலைக்கும் சின்னம்மா! பேயைப் பற்…
-
- 5 replies
- 2.3k views
-
-
அம்மா திரும்பியிருக்கிற ஆற்றங்கரை காணி நிலம் தீபச்செல்வன் புற்களும் பற்றைகளுமாய் கிடக்கும் நிலத்தில் வீடு கரியிருக்கும் உருக்குலைந்த காணியில் அம்மாவின் களைப்பு தணலூட்டப்பட்டிருக்கிறது கடவுள்கள் எங்களை கைவிட்டதாய் ஒரு நாள் உணர்ந்தபொழுது காணி நிலம் தரும் பராசக்தியிடம் அம்மா உணவிழந்து பசியிருந்தாள் ஆற்றங்கரையில் கிடக்கும் இந்தக் காணிநிலத்தை பராசக்தி ஏன் கைவிட்டாள்? யுத்தக் குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்ட தண்டனைக்காலத்தின் எந்தச் சித்திரவதைகளையும் பகிரப்போவதில்லை என்று அம்மா ஒப்புதலளித்திருக்கிறாள். வீடு திரும்பியிருக்கிறோம் என்பதை இந்த ஆற்றங்கரைப் பறவைகள் கொண்டாடுகின்றன ஒரு நாள் ஆறு பெருக்கெடுக்கையில் என்னை கைகளில் அம்மா நிரப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்மா - நீ பெத்த கடனுக்கு நடையாய் நடக்கிறாய் கிடையாய் கிடக்கிறாய் ஆனாலும் அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். மண்றாடிப் பயனில்லை மண்டியிட்டும் பயனில்லை நான் தெளிவோடு சொல்கிறேன் அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். வரலாற்றைப் புரட்டிப் பார் சிக்கென்று இருந்த நீயே சிதைந்து போனது எதனால்..??! சில்லறை கூட வேண்டாம் சிலிர்த்து வந்த சிங்கத்தை கட்டி - நீ ஆண்டும் கண்டதென்ன..?! அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். அம்மா - நீ ஒரு காலத்தில் சிங்கக் குட்டிகளை பெற்றதாய் பெருமை கொண்டாய் அந்தக் குட்டிகள் - இன்று எலிக் குஞ்சுகளாய் பதுங்கும் நிலை பார்த்தாய் தானே அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். அம்மா - நீ கெஞ்சிக் கூத்…
-
- 25 replies
- 1.9k views
-
-
அம்மா நீ எங்கன இருக்கா? *************************************** எனே,... அம்மா எங்கன இருக்கிறா? கையில் ஒரு பூக்கூடை பையில் ஒரு படையல் என முந்தி மாதம் தவறா உன் விழி மழையின் வீழ்ச்சியில் குளிப்பாட்டி மகிழ்வித்து முத்தம் தந்து குளிர்விப்பவளே நீ எங்கன இருக்கிறா? நீ அறிவியான நான் சாகா வரம் பெற்றவன் யார் சொன்னார் என்னை இறந்ததென்று? மண்ணின் சுவாசத்துக்காக மண்ணில் வாசகம் செய்கிறேன். சாவுக்குள் கண்மூடி உறங்கி உயிர்த்தெழுகிறேன் திக்கெட்டும் தேடுகிறேன் என் உயிர் உறவுகளின் தாயை தேடும் ஓலம் மட்டும் காதில் ஒலிக்கிறதே உன்னை மட்டும் காணவில்லை நீ எங்கன இருக்கிறா? கைகள் மரத்து போய் விறகு விற்று நீ ஊட்…
-
- 2 replies
- 1.2k views
-
-
அம்மா நீ வேண்டும் கூட்டுக்குள் புறா போல் நானும் வாழ்கின்றேன் போகும் இடம் தெரியவில்லை போகவும் யாரும் விடவும் இல்லை அம்மா என்றழைக்க அம்மா இங்கில்லை உறவு என்று எனை அணைக்க எனக்கு யாருமில்லை அரிச்சுவடி படிக்கவில்லை அம்மா நடை பழக்கவில்லை அம்மா முகம் பார்த்து தூங்க ஒரு புகைப்படம் கூட எனக்கில்லை என்னை ஏனம்மா தனியாக விட்டுசென்றாய் நான் உன்னை அம்மா என்று அழைக்கமுன்பே அதை கேளாமல் சென்றாயே உன்னைத்தான் நான் நம்பிவந்தேன் அம்மாவே என்னை எங்கே விட்டுசென்றாய் அம்மாவே அன்னம் உண்ண பழக முன் கஞ்சி குடிக்கின்றேன் அம்மா எனக்கு ஒரு வாய் சோறூட்ட நீ எப்பொழுது வருவாய் அம்மா தரையில் உறங்குகிறேன் அம்மா உன்மடி உறங்க நீ வருவாயா அப்பா எங்கே அம்மா உன்னோடு கூட்டி ச…
-
- 14 replies
- 3.2k views
-
-
o ------------------------------------------------------------------ நாட்கள் சலித்துப்போன நாட்காட்டியில் குறித்து வைத்த திகதிகள் ஊட்டிய நிறத்தை இழந்துகொண்டிருக்கின்றன. வீடு திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மா மீளவும் ஒரு திகதியை அறிவித்திருக்கிறாள். யரோ ஒருவருடைய வீட்டில் அவிந்துகொண்டிருக்கிறது எங்களுக்கான உணவு. வெளியேறி வருவதற்கான அம்மாவின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட முதல் நாள் மாலை அரிசியும் காய்கறிகளும் வாங்கி வைத்திருந்தேன். புழுதி படிந்து காலம் முடிந்த பேருந்துகள் வந்துகொண்டிருக்கும் வழியால் நகர மறுக்கிற பேரூந்தில் அம்மா வருகிறாள். இன்னும் வளராமல் இருக்கிற தலைமுடியை இழுத்துக்கட்டியபடி தங்கை…
-
- 1 reply
- 1.2k views
-
-
அம்மா, இனி நீ இறந்து விடு.. பயமும் பட்டினியும் நோயும் என இன்னமும் எத்தனை காலத்திற்கு நீ செத்துக் கொண்டேயிருக்கப் போகிறாய் ? ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்கும் ஒரு நகரிலிருந்து இன்னொரு நகரிற்கும் ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்கும் ஒரு நோயிலிருந்து இன்னொரு நோயிற்கும் ஒரு பசியிலிருந்து இன்னொரு பசியிற்குமென ஒரு பொதியையும் காவிக்கொண்டு இன்னமும்எத்தனை காலத்திற்கு அலையப் போகிறாய்? உன் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கழுகுகள் காவிக்கொண்டு செல்வதையும் கண்டுவிட்டுத்தான் மடிவேன் என ஏன் அடம்பிடிக்கிறாய்? அம்மா, இனி நீ இறந்து விடு... அனைத்தும் பயனற்றுப் போய்விட்டது என்பதை அறிந்த பின்தான் போகவேண்டும் என நீ அட…
-
- 1 reply
- 798 views
-
-
அம்மா! தொலைவில் ஒரு குரல் இன்னும் எதிரொலிக்கின்றது பய பீதியில் உயிர்கள் பரிதவிக்கின்றது கொலை வாழுக்கு முன்னால் குற்றுயிராய் முனகும் குரல்கள் உயிருடன் எரியும் உடல்களில் இருந்து மானுட பாசைகளுக்கு விழங்காத உயிர்களின் ஓலம் மூச்சோடு திணறுகின்றது கண்ணில் தூசி விழுந்தால் கண்கள் வலித்து கலங்கும் எம் உறவுகளின் கண்களையே தோண்டி எடுத்த போது மானுடம் நிர்வாணமானது வன விலங்குகள் சிங்களத்தின் முகத்தில் காறித் துப்பின கணங்கள் அவை கறுப்பு யூலை அம்மா……………! அருகில் ஒரு குரல் இன்னும் வங்காலையில் சாமத்தின் நிசப்தங்களை கிழித்தெறிகின்றது அல்லைப்பிட்டியில் பிஞ்சுகளின் குரல் ஊமையின் அலறலாய் உலக மனட்சாட்சியிம் நிய…
-
- 16 replies
- 2.4k views
-