கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
மரம் செடி இலைகள் போல மண் வாழும் உயிர்கள் போல மூச்சுவிடத் தெரிந்த முதலை நீருக்குள் எதற்காய் போச்சு? கூடுகள் குகைகள் இன்றி நீரடியில் உறங்கலாச்சு நரிக் குகையில் சிங்கம்போகும்; குயில் முட்டை காக்கை கூட்டில்; காக்கைகள் மனிதர் வீட்டில்; புற்று மண் எறும்பு கட்ட, பாம்புக்கு அதுவே கட்டில்; உன்சுவர் எனது வீட்டில் என் கலப்பை உனது வரப்பில் அடுத்தவர் உழைப்பில் சுகிக்கும் எண்ணமே முதலைக் கில்லை நீரடி எல்லாம் இங்கே பூமித் தாய் கருப்பை போல எல்லைகள் இல்லா தேசம் திசைகூட அழியும் ஆங்கே மனிதர்கள் பிரித்துப் போட்ட நிலம் பார்த்து சோகத்தோடு அழுவதே முதலைக் கண்ணீர் தெரிந்தபின் குறை சொல்லாதீர் நன்றி : பாலகுமாரன் http://tnmurali.bl…
-
- 0 replies
- 684 views
-
-
கொதிக்கும் கல்லறைகள்...... கவிதை - இளங்கவி.... வன்னி முற்றத்தின் வெண்ணிலவைப் பார்த்து வான் குருவி சொன்னது.... உன்னைப் பார்த்து சோறு உண்ண இங்கே குழந்தைகள் இல்லை... இரத்தத்தில் தோய்ந்தும் கந்தகத்தில் எரிந்தும்... மண்ணிலே புதைந்தும்; அவர்கள் இறந்து பல மாதங்களாகிவிட்டது..... உன்னைப் பார்த்து சோறூட்ட இங்கே தாயுமில்லை அவர் மடியில் சேயுமில்லை.... ஆனாலும் உனக்கு வேலையொன்று இருக்கிறது... இலட்சியத்துக்காக உயிர் நீர்த்த மாவீரர் புதைகுளிகளுக்கு மேல் உன் குளிர்வையும் ஒளிர்வையும் காட்டு தலைவர்கள் எனும் பெயரில் தமிழ் தேசியத்துக்கு சேறு பூசுபவர்கள் செயல்கண்டு கொதித்துப் போயிருக்கும் கல்லறைப் பூக்களின் ஆன்மாவாவது சாந்த…
-
- 0 replies
- 684 views
-
-
அகதித் துயர்வெளி 01. மழைநாளில் இடம்பெயரும் தெருவொன்றில் வெட்டப்பட்ட குழியைப்போலிருக்கும் கூடாரங்களுக்குள் பாலஸ்தீனக் குழந்தைகள் வந்து ஏன் ஒளிந்திருக்கின்றனர்? அகதிகளாக சனங்கள் வெற்றிக்கொள்ளப்பட்ட நாளில் உலகத்தின் எல்லா அகதிக் குழந்தைகளும் ஒரே மாதிரி அழுகின்றன சிறுவர்கள் துப்பாக்கிகள் பிடிக்கும் நாளில் தாய்மார்கள் பொதிகளை சுமந்தலையும் காடுகளின் வெளியில் எல்லோருமே ஏதோ ஒரு நடவடிக்கையில் துரத்தப்பட்டனர் வீடு அழித்துத் துடைக்கப்பட்டதையும் நகரம் சிதைத்து உரு மாற்றப்பட்டதையும் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதையும் இந்த அகதிச் சனங்கள் தாங்க முற்படுவர் அகதிகளின் காலங்கள் அலைச்சலால் நிரம்பியிருக்கின்றன மீண்டும் மீண்டும் பொருட்களைக் தூக்கிக்கொண்டு …
-
- 2 replies
- 683 views
-
-
[size=3][size=4]உலகின் எந்த ஒரு இனமும்[/size][/size] [size=3][size=4]கருணைக்காக இவ்வளவு காலமும் ஏங்கி இருக்காது . உலகின் எந்த ஒரு இனமும் சுதந்திரத்திற்காக இவ்வளவு வாதைகளை தாங்கியிருக்காது.[/size] [/size] [size=3]உலகின் எந்த ஒரு இனமும் வாழ்தலின் பொருட்டு இவ்வளவு இழப்புகளை எதிர்கொண்டிருக்காது. [size=4]உலகின் எந்த ஒரு இனமும் சர்வதேசத்தால் இவ்வளவு தூரம் புறக்கணிக்கப் பட்டிருக்காது. உலகின் எந்த ஒரு இனமும் தன் இனத்துரோகிகளால் இவ்வளவு அபத்தமாக காட்டிக் கொடுக்கப்பட்டிருக்காது. உலகின் எந்த ஒரு இனமும் இறையாண்மையின் பெயரால் இவ்வளவு கொடூரமாக கொன்றொழிக்கப் பட்டிருக்காது. . பக்கத்தை வெளியிடு உலகின் எந்த …
-
- 0 replies
- 683 views
-
-
நிலத்தை உடைத்துப் பீறும் நெருப்பாற்றை… நவம்பர் 11, 2020/தேசக்காற்று/உலைக்களம்/0 கருத்து நிலத்தை உடைத்துப் பீறும் நெருப்பாற்றை கைகளால் பொத்தலாம் என்றா நினைத்தாய்? மின்னாமல் ஒரு இடி எதிரியின் மடியிலே – விழுந்தது. பகைவனின் சிம்மாசனத்தின் பட்டு பட்டுத்துணியில் பொத்தல் விழுந்தது. கண்டியில் எண்கோண மண்டபத்தின் சுவர்கள் வெடித்துச் சிதறிக் கொண்டன. ஜெயவர்த்தனபுரத்தின் பாராளுமன்றப் படிக்கற்கள் மந்திரி;களின் பாதம்படுவதற்கு கண்டனம் தெரிவித்தன. ‘இலங்கை இராணுவம் அணிவகுப்புக்கு மட்டுமே அழகானது’ சிங்கள மக்கள் தெரிந்து கொண்டனர். “சிசில்” வெறும் விசில் என்பதை பூநகரிக்குள்ளே புலிகள் புகுந்தபோது கூலிப்படைகள் க…
-
- 0 replies
- 683 views
-
-
ஒரு துளி இறுக்கியணைத்த விறைப்பு இறங்க ஓடத்தொடங்கிய ஒரு இலட்சம் வீரியங்கள் விழ விழ எழ முடியாமல் ஒன்று மட்டும் திரும்பி பார்த்து வீழ்வேன் என நினைத்தாயோ? உட்புகுந்தது :lol: :lol: வேறையார் நான்தான். சும்மா ஏதோ தோன்றியது கனக்க யோசிக்க வேண்டாம்
-
- 4 replies
- 683 views
-
-
நெஞ்சுக்குள் தரிசனம்.! எங்கள் பண்பாட்டின் ஆன்மீக அடையாளமாய் நிமிர்ந்த நல்லூர் முருகா! நின் பெருந்திருவிழா அழகில் நெஞ்சு நிமிரும் நாளுக்காய் காத்திருந்தோம் இன்று.. நின் தரிசனம் காண அடையாள அட்டை இன்னுமின்னும் பற்பல நிபந்தனைகள் அந்தக் கிருமிக்கு அவ்வளவு வல்லமையா… 650 பேர் சோதனை செய்து 300 பேருக்கு மட்டும் அனுமதியாம்! எனது எண் 301 ஆனால்…. நெஞ்சு தளர்ந்தேன்! நெஞ்சுக்குள் நின் அழகு தரிசனம் காணும் நினைவிலே அமைதி காண்பேன்.!! – சண்முக பாரதி https://www.vanakkamlondon.com/nallur-sanmugaparathi-25-07-2020/
-
- 0 replies
- 683 views
-
-
யுகமாறு காலம் நிலாந்தன் முந்தித் தப்பினவன் நீதிபதியானபோது பிந்தித் தப்பினவன் துரோகியாக்கப்பட்டான் குற்றவுணர்ச்சியின் மீது கொழுவப்பட்டிருக்கிறது நியாயத்தராசு முந்தித் தப்பினவன் தனது வம்சத்தையும் வம்சவிருத்தியையும் பாதுகாத்துக் கொண்டான் பாதுகாப்பான ஒரு இறந்தகாலத்தைப் பெற்றவனெல்லாம் நிகழ்காலத்தின் பேச்சாளன் ஆனான் சீவியத்தில் நேசித்தவரை மரண நேரத்தில் கைவிட்டுச் சென்றவனெல்லாம் இறந்த காலத்தைத் தத்தெடுத்து விட்டான் சீவியத்தில் நேசித்தவரை மரணம் வரை பின்தொடர்ந்தவனோ மரணத்தால் உமிந்து விடப்பட்டு கைதியும் அகதியுமானான். வீரயுகமொன்றின் முடிவில் கொல்லப்படாதவனெல்லாம் கோழையெனில் தற்கொலை செய்யாதவனெல்லாம் ஒற்றனெனில் எங்களில் எ…
-
- 3 replies
- 683 views
-
-
This day, previous year, More than quarter a million innocent lives Butchered by the brutal force of Chemical bombs, Cluster bombs And the most cruel ammunition Barred by the U.N. Blood-thirsty barbarians Destroyed tiny babies, innocent children And helpless ladies; Genocide carried in broad daylight When the U.N. stood as a passive spectator! No big powers dare open their mouths! No peace-brokers wished to mediate! The biggest democracy, U.S. Failed to condemn the genocide The Land of Lincoln Swerved from protecting The rights of minority! The country of George Washington Decli…
-
- 0 replies
- 682 views
-
-
-
-
- 5 replies
- 681 views
-
-
கசிந்துகொண்டிருக்கிறது தொலைக்கப்பட்ட அன்பின் மீதான கடைசி துளிகளும். முதல் சில நாட்களைப்போலவே இல்லை இந்த பிந்திய நாட்கள், அதீதமான அரவணைப்பை வெறுத்தொதுக்கும் மழலையொன்றின் பக்குவமற்ற நாட்களாய் கடந்துபோனது முந்தைய சில நாட்கள். எல்லை நோக்கி வளர்ந்துகொண்டிருக்கும் மரணமொன்றை, எல்லைகடந்து வளர்ந்துகொண்டிருக்கும் வாழ்தலொன்றை, உணர்த்தியழுதத்துகின்றன இந்த நாட்கள். தொலைக்கப்பட்ட அன்பு அழிந்துபோய்விடுவதில்லை - அது வேர்களில் அடங்கிக்கிடக்கிறது பின் அதுவே இலைநுனிகளில் நீராய் திரண்டும் வருகிறது. யாரவது ஒருவருடைய கண்களை பார்க்கும் போதும், யாராவதொருவர் முகத்தினை தடவும் போதும், யாரவது ஒருவர் கை அசைக்கும் போதும். தொலைக்கப்பட்ட அன்பு மிக கனதிய…
-
- 6 replies
- 681 views
-
-
-
சுஐப் எம். காசிம்- ஒவ்வொரு வருடத்தின் ஒக்டோபர் இறுதிதினம் நெருங்கி வரும் நாட்களிலே நெஞ்செல்லாம் வலியெடுக்கும் நினைவெல்லாம் தடுமாறி நீர் நிறையும் கண்களிலே உணர்வெல்லாம் தத்தளித்து உதிரம் அலையெழுப்பும் தாயகத்தின் நினைவெழுந்து தவிதவித்து மனம் கதறும் வேகாத உடலோடு வெந்த உயிர் தொங்கி நின்று பிறந்த தாய் மண்ணினைவில் பிரிவில் துடிதுடிக்கும் "இன்னுயிர்த் தாய் ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகள் போல் நூறு பலஆண்டுகளாய் நோகாதும் நொடியாதும் ஒருயிராய், ஈருடலாய் ஒன்றிணைந்து வாழ்ந்த அந்தக் காலத்தின் நினைவெழுந்து கண்கள் குளமாகிவிடும் ஓர் புலத்தில் தான் வாழ்ந்…
-
- 0 replies
- 680 views
-
-
நினைவுகளை மட்டும் விட்டுச் சென்ற நினைவழியாப் போராளி பிரகாஸ் ! 2ம் ஆண்டு நினைவுநாள்10.07.02013 எழிலெனும் எழிமையான விடுதலை புலியே எங்கள் எண்ணங்களில் நிலைபெற்ற இனியவனே திருமலை மண்ணிலிருந்து புறப்பட்ட எரிமலையே தியாகப் பயணத்தின் வழியெல்லாம் தோழொடு தோழாய் வந்த அன்புத் தோழனே ! விடுதலையின் வேர் நாட்டி உலகின் திசையெங்கும் விழுதெறிந்து சென்றவனே நீயாற்றிய பணிகள் கண்டு நிமிர்ந்தோமே அன்று நாங்கள். அடிமை விலங்குடைய அன்னை மண் விடுதலையடைய உனை வருத்தி நீ சாதித்தவைகள் ஏராளம். சாவின் விளிம்பில் நின்றாலும் சாதுரியமாய் வென்று வரும் சாதனையாளன் நீ. உன் சாவைக் கூட அறிவிக்காமல் சத்தமில்லாமல் போனாயே ! பறந்து திரிந்த புலியுன்னைப் புற்றுநோய் தின்று நீ பாடையிலே போய் முடியு…
-
- 2 replies
- 680 views
-
-
கனதிகள் அற்ற காகிதக் கப்பலாய் மாறி கவலைகள் அற்று நான் கண்வளர வேண்டும் நினைவின் விளிம்புவரை நிழல்தரும் அனைத்தும் நிர்மூலமாக்குவதாய் நெருடலாய் நிதம் நிகழும் நெருக்குதல்கள் நீங்க நிழற்குடையின் கீழ் நான் நீள்துயில் கொள்ள வேண்டும் மனவறையின் பக்கம் மண்டிய படி கிடக்கும் மூச்சுப் புகமுடியாப் புதரின் முடிவற்ற மீதங்களை மட்டுப்படாத காலத்தால் கருனைக் கொலை செய்திட மனம் ஆர்ப்பரிக்கிறது ஆயினும் அறுதியிட முடியா ஆழத்தில் கால்பதித்து அகக்கதவை எப்போதும் அறைந்து சாற்ற முடியாத அகத்தின் அறம் இழந்து அளக்கமுடியா ஆளத்தை அடிமுடி தேடியபடியே அல்லலுடன் கடக்கிறேன்
-
- 2 replies
- 680 views
-
-
____________________ பொருட்களை எந்த நேரத்திலும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்றபடி தயாராகவே வைத்திருக்கிறேன். எதிர்பாராத பின்னேரமாகவே நாங்கள் அழைக்கப்பட்டோம். எண்ணிக்கையற்ற பிரகாசமும் மகிழ்ச்சியும் எல்லாவற்றையும் மறைத்து முன்னால் நின்றுகொண்டிருந்தன. எங்கள் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்படுவதாக ஏற்றிக்கொண்டு சென்ற பேரூந்தில் பொருத்திய ஒலிபெருக்கி அறிவித்தது. பார்க்க முடியாதபடி நிலம் முழுவதும் அழிந்துபோயிருப்பதை கண்டேன். கடந்த வாரம் அதுவும் ஒரு மாலை நேரமாய் நிதிலேகாவையும் குழந்தையையும் மீளக்குடியிருத்த ஏற்றிச் சென்றார்கள். தான் விட்டுச் செல்லும் பொருட்களை எல்லாம் அவள் எனக்கே தந்திருந்தாள். என்னுடன் மிகவும் பிரியமாயிருந்த அவளது குழந்தையை நான்…
-
- 0 replies
- 680 views
-
-
ஆசைகள் அங்கும் இங்கும் ஒன்று தான்... உடலின் சேர்க்கையில் திரவங்களின் கலப்பில்.. வந்தன விளை பொருட்கள்..! தாயென்றும் தந்தையென்றும் உறவுகள்.. சமூகமென்றும் மக்களென்றும் கூட்டங்கள் கூச்சல்கள்...! எல்லாமே இயற்கையின் விதிப்படி..! ஆனால்... போட்ட குட்டிகளுக்கு இரை தேட வழியின்றி மனிதன்..!! போட்ட குட்டிகளுக்காய் உடல் ஒட்டிய போதும்.. இரைக்காக இரங்கும்.. இதுவும் ஓர் உயிர்ப்புள்ள.. பிராணி தான்..! "சாட்" செய்து சோடி பிடித்து கை கோர்த்து.. காதலித்து மேடை போட்டு வேதம் ஓதி.. தாலி கட்டி தேன்நிலவு கண்டு வந்தால் என்ன.. உடல் ஒட்டி குட்டையோடு.. வீதியோரம் இழுபட்டு நொந்து நூலாகி வந்தால் என்ன விளை பொருள் எங்கும் ஒ…
-
- 2 replies
- 679 views
-
-
இல்லாதவர்களின் கனவு மீள் எழுத்து : தீபச் செல்வன் அவர்கள் பெருங்கனவுடனே மரணத்தை முத்தமிட்டனர். கடைசியில் அவர்களின் ஞாபகம் நிரப்பிவிடப்;பட்ட கல்லறைகளும் நம்மிடம் இல்லை. தாய்மார்கள் தீப்பந்தங்களையும் தமது பிள்ளைகளுடன் இழந்து விட்டனர். மனைவிமார்கள் தங்கள் புன்னகையுடன் கல்லறைமீதான தமது சொற்களையும் இழந்து விட்டனர். கனவின் அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிடக்கிறது. இம்முறை எந்தப் பூக்களும் மலரவில்லை. இலைகளில் குருதி ஒழுக பூமரங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன. தலைகளை மின்கம்பத்தில் மோதி இல்லாதவர்களை அழைக்கிறது நம்பிக்கையற்ற மனம். கனவை உறிஞ்சி எடுத்துக்கொண்டு அவர்களை தின்று முடித்துவிட்டது உலகம். அவர்கள் மீதெழுதப்பட்ட மரணப்பாட…
-
- 0 replies
- 679 views
-
-
நான் நல்ல நடிகன் நான் ஒரு நடிகன் அம்மாவுக்கு நல்ல மகன் ஆசானுக்கு வல்ல சீடன் பள்ளியில் நல்ல ஆசான் ஊருக்கு பேர்பெற்ற சமூகத் தொண்டன் மாமாவுக்கு நல்ல மருமகன் மனைவிக்கு ஏற்ற கணவன் என் குழந்தைக்கு செல்ல அப்பா பாட்டிக்கு அன்புப் பேரன் உற்ற தோழன் அவனுக்கு நல்ல நண்பன் தங்கைக்கு ஒரு அண்ணன் அண்ணாக்கு நான் தம்பி நான் நல்ல நடிகன்
-
- 0 replies
- 679 views
-
-
ஏன் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறோம் நாங்கள் இன்னும் ஏன் எரிந்து கொண்டிருக்கிறோம் என்ன பாவம் செய்தோமென்று எங்களுக்குப் புரியவில்லை வாசலில் சுடுகலனேந்திய அன்னியப் படை அடக்குமுறை அரசு சொல்கிறது பாதுகாப்பென்று.. காணாமற் போதல்கள் கைதுகள் பாலியல் வன்புணர்வுகள் அடையாளமற்ற கொலைகள் தொடர்கிறது.. மக்களைப் பேசாத ஊமைகளாக்க முகாம்கள் முளைக்கின்றன புதிய அணிகள் புதிய திசைகாட்டுவதாக உறுமுகின்றன. விசையிருந்தால் பறக்க முயற்சிப்பதாய் சிறகசைக்கின்றன! நாமே ஆசீர்வதிக்கப்படவர்கள் நாமே அனுபவமுள்ளவர்கள் நாமே ஆற்றலாளர்கள் முடிநரைத்துக் கூன்விழுந்தாலும் முடியும் வரை தொடர்வோம் தீர்வுதேடித் தருவோம்…..! சிங்களமும் தொடர்கிறது புதிது புதியாய் நடுகிறது சித்தார்த்தன் சிலைகளை.. வீதி முலையில் இருந்து எங்களுக…
-
- 0 replies
- 679 views
-
-
கனவும் நனவுமாய்ப்போன காலபைரவர்களே கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி கடலளவு கருணை இல்லாவிடினும் _சிறு கடுகளவேனும் நெஞ்சில் ஈரம் கொண்டு விடுதலை வேட்கையைக் கூட விலைபேசும் மனிதர்கள் மத்தியில் வீர வரலாறு எழுதினாயேடா தோழா வீர வரலாறு எழுதினாயே... தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் எமக்காய் தினம் தினம் சிலுவை சுமந்தாயே தோழா தினம் தினம் சிலுவை சுமந்தாயே... உணவுண்ட கோப்பையில் மலங்கழிக்கும் ஈனமா இனத்திற்காய் உன் இன்னுயிரை ஈய்ந்தாயே தோழா இன்னுயிரை ஈய்ந்தாயே... கூடப்பிறந்த சோதரியை கூட்டாக கருவறுக்கும் போது கூட்டிக்குடுக்கும் கயவர்கள் மத்தியில் குண்டு சுமந்தாயேடா தோழா குண்டு சுமந்தாயே... இரக்கப்பட்டு விடும் கண்ணீரையே …
-
- 3 replies
- 679 views
-
-
மெல்லத் தமிழினி மேற்சாகப் போகுதோ மெல்ல ரும் மெளனம் காட்டுமோ வுலகம் வெழுதினான் வல்லவனிருந்தே வெறத்தானுணவை மெல்லக் கதறினேன் மூழ்கினேன் சோகத்தில் மெல்ல முடியா மலே. வெள்ளிப் பனியுறையும் வெள்ளையர் தேசத்தே தெள்ளிய குறிக்கோளாய் தானவர் தரணிக்கு காவுகொள்ளும் தமிழனத்தின் குருதியது வழிந்தோட மேவியே வழிகாட்டும் அரக்கர்களின் கொடுமைதனை சீலத்தன்மையொடு சிந்தனையும் சேர்த்தங்கே காலவன் கைகளுக்கு கைவிலங்கு போட்டிடவே மனிதத்தின் வகையறிந்து மாயுமெங்கள் உறவுகளை கனிவுகொண்டு காத்திடவே கருவாக எண்ணியங்கே பண்பாளன் பார்த்திபனாம் திலீபனென்னும் மறுபெயரான் காட்டிய வழிநெருங்கி கடந்தவீரெட்டு தினங்களாய் ஏட்டிலோரைந்து கோரிக்கை தான் வைத்து …
-
- 1 reply
- 678 views
-
-
மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கைகளோடு…… ஈரம் காயாத உனது குருதிச் சுவடுகளின் மீதேறிச் சென்று கொண்டிருக்கிறது வன்மங்களின் வெறியடங்கிய மெளனம்…… உறைந்து போன கனவுகளை அள்ளியபடி அலைகிறது உனது உயிரின் காற்று…… நீ நேசித்த நிலவும் நிசப்தம் நிறைந்த இரவும் உனது ஆத்ம அலைவின் எச்சமாய் இரவெல்லாம் காய்ந்து பகலில் பயங்களோடு தேய்கிறது….. கடைசிச் சாட்சியங்களுடன் கடல் கடந்திருப்பாயென்ற எங்களது நம்பிக்கையை கடைசிவரை உன்னோடிருந்து காலொன்றையிழந்து கடைசியாய் மீண்ட தோழனின் சாட்சியங்களுடன் நீயில்லையென்பதை நிரந்தரமாக நம்புகிறோம்…. கண்முன் இறந்த குழந்தைகளுக்காய் நீயழுததும் களத்தில் கூட நின்ற தோழர்களுக்காய் நீ வாழ்ந்ததும் கடைசிவரையும் நீ ந…
-
- 0 replies
- 678 views
-
-
தலைநிமிர்த்தி எழுந்திடுடா தமிழா தமிழைக்காப்போம் -உடல் தளர்வகற்றி புறப்படுடா தமிழா விடியல் காண்போம்- எழும் தடை தகர்த்திட தோள்கொடுடா தமிழா தமிழீழம் அமைப்போம். நேற்றுவரை வானேறினாய் காற்றாகி களமாடினாய் இன்றேன் போயுறங்குகிறாய் கோழைமகனாடா நீ -மாவீரன் பண்டாரவன்னியன் குலமடா மாற்றுவழி யேன்தேடி அலைகிறாய் ஏற்றடா ஏற்று போர்க்கொடி ஏற்று தோற்றிடில் மார்பில் குண்டை ஏந்து. திசையெட்டும் விடுதலைத்தீ மூட்டினர் தீந்தமிழோடு வாழ்ந்திட தமையீந்தனர் வசைகொட்டியவரை இகழ்கிறாய் -நீ வாழ்ந்திட அவர்புகழை போர்க்கிறாய் முறைகெட்டு பகைமடி அடைகின்றாயே -நீ திறங்கெட்டு போய்விடின் நாயென்றாகும் ஏற்றடா ஏற்று போர்க்கொடி ஏற்று தோற்றிடில் மார்பில் குண்டை ஏந்து. விலை கொண்டா வாங்குவ…
-
- 4 replies
- 678 views
-
-
நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது! எமக்குப் பின்னால் பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது! தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது வெண்பனி தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி எம் செவி வழி நுழைந்தது வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை ! சந்தடி ஓய்ந்த தெரு வழியே நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் ! இப்படியே எத்தனையோ இரவுகளில் விவாதிப்போம் நெடு நேரம் முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன் பிரிந்து செல்வோம் ! பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில் உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் ! பரணி... உன் நினைவுகள் தேய்ந்து கொண்ட…
-
- 0 replies
- 678 views
-