Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புறநானூற்றில் இருந்து தொடரும் தமிழ் இலக்கிய மரபில் புகழ்பூத்த சில கவிதைகளில் கவிஞர்களின் ஊடலும் கோபமும் பதிவாகியுள்ளது. சின்ன்ம் சிறுவயதில் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான வன்முறைப் போர்க் களத்தில் சந்தித்ததில் இருந்து கவிஞர் புதுவை இரத்தினதுரையும் நானும் ஆப்த நண்பர்கள். மாக்சிய கருத்தாடல்களோடும் கள்ளோடும் கவிதைகளோடும் கழிந்த நாட்கள் பல. 2006ம் ஆண்டின் பின்பகுதியில் வன்னியில் என்னுடைய அம்மா நோய்வாய்ப் பட்டிருந்தபோது நான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அம்மவை புதுவை சென்று பார்க்கவில்லையென கேழ்விப்பட்ட கோபத்தில் அம்மா கவிதையை எழுதினேன். அதனை புதுவையே தான் வெளியிடும் வெளிச்சம் 100 மலரில் வெளியிட்டது சிறப்பு. 1000 வருடங்கள் நிலைக்கவுள்ள எனது கவிதைகளுள் அ…

    • 7 replies
    • 1.9k views
  2. உலகம் இன்று நீதி தர்மம் அறம் அத்தனையும் தொலைந்து சுழல்கிறது எங்குமே யுத்த சத்தங்களும் மனிதப் பேரழிவுமாய் பசி பட்டினியுமாய் மனிதத் துன்பங்களுமாய் கிடக்கிறது. இனி பிறக்கும் வருடத்தில் எங்கும் மனிதாபிமானமும் அமைதியும் சமாதானமும் நிலவி இருள் கடந்து ஒளி பிறக்கட்டும். -பா.உதயன் செந்தமிழாய் எங்கும் இசை- காலை புலரும் நேரம் கடல் கரையில் ஒரு ஓரம் தானாய் வந்த பறவை எல்லாம் ஏதோ சொல்லிப் பாடுது ஏழு கடல் ஓடி வந்து எத்தனையோ வர்ணம் தீட்டும் காடு எல்லாம் ஆடி ஆடி கவிதை பல பேசும் ஆலமரம் செழித்து நிற்கும் அன்னைத் தமிழ் இசை பாடும் பாடி வரும் தென்றல் காற்று பண் இசைத்து ஓடி வரும் வசந்தம் எல்லாம் பூத்திருக்கும் வானம் எங்கும் கவி பாடும் பச்சை கிளி பறந்து …

  3. என் வாழ்க்கைப் பயணங்களில் சுமந்த பொதியாய், என் வலிகளும் கூடவே வந்தன! எனக்கிந்த சாபம் எதுவரையென... எனக்குத் தெரியவில்லை இதுவரை! நம்பிக்கைகளை சாகடித்தபடியே... துரோகங்கள் என் பாதையை மாற்றியமைக்கிறது! வலிகளும், மாறும் வழிகளும் எதுவானாலும்... என் பாதம் நேர்வழி மட்டுமே தொடரும்! இன்னும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் நானிருப்பேன், தன்னம்பிக்கை எனக்கிருக்கு! சிறகெரிந்த வாசத்தில் மூச்சுத்திணறிய பீனிக்ஸ் பறவை, விழ விழ எழுவதுபோல்... நானும் எழுவேன்! வரைகின்ற வட்டம் போல... சுற்றிவரும் புள்ளிகளில், இரு முகங்கள் சந்தித்துக்கொள்ளும்! பயணங்களின் காரணங்கள் ஒரு வட்டத்துக்குள், முழுநிலவாய் சிரிக்கும்போது... நேற்று வந்த முழுநிலவுதான் என் ஞாபகத்தில் வரும…

  4. கவிதையின் கவிதைகள் அழகிற்கும் மென்மைக்கும் பிறந்த பெண்மைகள், உள்ளங்களை வெண்மையாய் உடுத்திக்கொள்ளும் கள்ளங்களை அறிந்துகொள்ள... கடந்துபோகும் காலங்களால் மட்டுமே முடிகிறது! செல்லக் கதைபேசி எண்ணங்கவரும், வண்ணத் தேவதைகளின் இதயங்கள் கறுப்புத்தான்! சிந்தை சிதைக்கும் மடந்தைகளின் எண்ணங்களில்... ஆடவர் இதயங்கள் விளையாட்டுப் பொருள்தான் போல!? ஆரம்பம் என்பது அழகாய்த்தான் ஆரம்பிக்கிறது முடிவுகள் மட்டுமேனோ முடிவுகட்டிச் செல்கிறது! விடிவுகள் இல்லாத வாழ்வினையும் கண்ணீரையும் காதல் பரிசாக கொடுத்துவிட்டுச் செல்வார்... நிறம் மாறும் தேவதைகள்! காதலின் பெயரால் கட்டிப்போடும் தேவதைகள் கல்லறைக்கான பாதையையும் காட்டிவிட்டுச் செல்வார்! காரணமில்லாக…

  5. இந்த வார குங்குமம் இதழில் (25.4.16) வெளியாகியுள்ள எனது குறுங்கவிதை "சொல்", யாழ்களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! சொல் ஆயிரம் இருந்தாலும் நான் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்கிறார்கள். நமக்குள்ளே இருப்பது ஆயிரம் இல்லை ஒன்றுதான், அதை வேறெப்படிச் சொல்வது?

  6. நெஞ்சம் எங்கும்நினைவாலே நிலைத்தவள்நித்தம் என் நினைப்பினில்நீர்க்கமற நிறைந்தவள்உடல் முழுதும் தழுவிஉவகை தருபவள்உதடுகளின் இடை புகுந்துஉல்லாசமாய் நுழைந்தவள்நாசி வழி புகுந்துநாபிக் கமலத்தை நிறைப்பவள்துள்ளி ஓடும் குருதியிலும்தீர்க்கமாய் நிறைந்தவள்அள்ளி ஆசையோடு முத்தமிடும்அழகுச் செவ்வண்ண மேனியாள்நிகரில்லா அவள் வனப்பின்நினைவுகளைச் சுமக்கிறேன்நித்தமும் அவள் மடி துயிலவேதகிக்கிறேன் தவிக்கிறேன்நாடிச் சென்று அவள் மேனி தழுவநாதியற்று நிற்கிறேன்...#ஈழத்துப்பித்தன்06.05.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post.html

    • 0 replies
    • 1.7k views
  7. கனடாவில் தாயகமக்களின் இன்னல் துடைக்க ரொரன்ரோ பெருநிலத்தில் ரொரன்ரோ மத்தி கலைபண்பாட்டுக்கழகம், ஸ்காபுரோ கலைபண்பாட்டுக் கழகம், பீல் கலை பண்பாட்டுக் கழகம், மார்க்கம் கலைபண்பாட்டுக் கழகம் ஆகிய நான்கு கலை பண்பாட்டுக் கழகங்களும் இணைந்து வழங்கிய “சிறங்கை” எனும் 27 மணித்தியாலத் தொடர் நிகழ்வில் களத்துமேடு எனும் கவியரங்கில் ஆற்றப்பட்ட கவியுரை இங்கு யாழ்க்கள நண்பர்களுக்காக பதிவிடுகிறேன். நாமுள்ளோம் அஞ்சற்க. என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே! புன்னகை அழகே! பொதிகையின் அரசே! விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே! நின்னடி பணிந்தேன். தாயே!... என்னுளம் நுழைக. முத்தாய்த் தாங்கி முன்னூறு நாட்சுமந்து இத்தரையில் எனை ஈன்ற பெத்தவளை, மெத்தை மடிவிரித்தென் தத்துநடை பார்த…

  8. [size=5]ஓரிடத்தில் மாவீரரைத்துதிப்போம்[/size] [size=5] [/size] [size=5][/size] [size=5]தமிழே உயிரே தலைதாழ்த்தியொரு வணக்கம் தரணியில் உனக்கென்றொரு நாட்டுக்கென்ன சுணக்கம் தண்ணொளி மண்ணிலின்று உன்னவர்களுக்குலில்லை இணக்கம் தரங்கெட்ட மனிதராய் தமிழர்களுக்குள்ளே பிணக்கம்.[/size] [size=5] தமக்கென வாழாது நமக்கென மாண்டவர்கள் தன்னலம் பாராது சமராடிய தாண்டவர்கள் தமிழ்த்தாய் மீது அழியாப்பாசம் பூண்டவர்கள் தரணியிதில் மாவீரரென்று பேர்கொண்ட ஆண்டவர்கள்.[/size] [size=5]மங்காத வீரமுகம் தன்னை கொண்டவர்கள் மகிழ்வாக தலைவன் அடியொற்றி [/size]நின்றவர்கள் [size=5]மண்டியிட்டு மாற்றான்பாதம் தொழுதிடா மன்னவர்கள் மறப்பரோ அவர்தம் மாண்புகள…

  9. மின்னல்கள் கூத்தாடுதே உன்விழிகள் பார்த்து மேகங்கள் மழை தூவுதே உன் அழகை பார்த்து விட்டு விட்டு தூறும் மழையே கொஞ்சம் நில்லாயோ நெஞ்சை தொட்டு போகும் பெண்ணின் முகவரி சொல்லாயோ மேகங்கள் கொண்டு வானம் மழை பொழிகிறது மேகத்தில் நின்று மின்னல் ஒளி தெறிக்கிறது மழை போல் நீ வருவாயோ மண் போல் நான் ஏங்குகிறேன் வானத்தின் தூரத்தில் உன்னை நான் தேடுகின்றேன். http://www.youtube.com/watch?v=113R1IanoMo

  10. உணர்வாய் என் தமிழா! இடர்கள் இடர வைக்கும் தடைகள் தளர வைக்கும் நம்பிக்கை ஒன்றே கொண்டால் நல்ல வழி பிறக்கும்! 'வெற்றி" ஒன்றே என்றும் சொந்தம் என்ற திமிர் கூடாது! தோல்விகளே பாடம் சொல்லும் அதனால் உடையக் கூடாது! "நேற்று" நடந்த கசப்புநிகழ்வு இறந்த காலம் ஆயாச்சு இந்த நொடி உந்தன் கையில்! எழுந்து நின்று போராடு! வாழ்க்கைச் சுழலில் இன்பதுன்பம் எல்லாம் உந்தன் கையோடு! மனதில் தளரா உறுதி கொண்டால்! என்றும் வெற்றி உன்னோடு!!

  11. தரணியில் தலை (குனிந்த) சிறந்த இராணுவம்....... வல்லரசு நாடுகள் அனைத்திலும் மானத்தை விற்று மண்டியிட்டு பொய்களை அவிட்டு விட்டு ஆயுதத்தையும் ஆள்பலத்தையும் அளவு கணக்கின்றிப் பெற்றுக் கொண்டு பயங்கர வாதத்தை ஒழிக்கிறோம் என வான் பிளக்க பரப்புரை செய்து கொண்டு ஒன்றும் அறியா அப்பாவி பொது மக்களை இரக்கம் இன்றி குலை குலையாக கொன்று குவித்துவிட்டு போர் விதி முறைகளை புதைகுழிக்குள் போட்டு புதைத்து விட்டு சில நாட்கில்; போர் முடியும் என சொல்லி பல மாதங்கள் தொடர்ந்து முட்டாள் தனமான ஆதாரங்கள் பல புனையப்பட்ட அப்பட்டமான பொய்யுடன் வெற்றி வாகை சுhடி நிற்கும் இராணுவமே தரணியில் தலை சிறந்த இராணுவம்

    • 0 replies
    • 1.5k views
  12. அன்னைமண் காக்க ஆசைகள் துறந்து ஆயுதம் ஏந்திய போராளிகளை.... சதிவலையால் சிதைக்கப் பட்ட போது சரணடைந்த போராளிகளையே.. துரோகிகளாக்கும் சமூகத்தில் நானும் ஒரு துரோகிதான்.... மூன்றுலட்சம் மக்களையும்,போராளிகளையும் முட்கம்பி வேலிக்குள்ளிருந்து... மீட்க பேய்களின் கால்களில் விழுந்தேனும் காக்கத் துடிக்கும் இதயங்களும்... அவர்களுக்காக ஒலிக்கும் ஓரிரு குரல்களும் துரோகியானால் நானும் ஒரு துரோகிதான்... சோற்றுப்பாசலும் காசும் கொடுத்துவிட்டு சொல்லித்திரியும் உள்ளங்களின் மத்தியில்.. சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து அநாதையாக நிற்கும் மக்களும்.. சொந்த சகோதரனைப்போல் ஒவ்வொரு புலிவீரனையும் நெஞ்சில் சுமந்ததால் சொல்லாமல் கொள்ளாமல்... ச…

    • 15 replies
    • 2.6k views
  13. 1.1. செய்யுளும் கவிதையும் யாப்பு என்பது கட்டும் நியதி. யாத்தல் என்பது பிணித்தல், புனைதல். யாவெனும் வினையடிப் பிறந்தது யாப்பு. எழுத்தும் அசையும் சீரும் தளையும் தொடுத்து அடிகளில் ஒருசேரக் கட்டிப் பொருளினை விளக்கிச் செய்யுள் அமைக்க உரிய இலக்கணம் யாப்பிலக் கணமாம். செய்யுள் என்பது செய்யப் படுவது. பத்தியும் பாட்டும் காவியம் உரையும் செய்யுள் என்பதன் பிரதி பதங்களே. கவிதை என்பது கவினுற விதைத்தல். பாட்டு என்பது பாடப் படுவது. செய்யுளும் பாட்டும் கவிதை வடிவமே. மலரும் கொழுந்தும் சேர்த்துத் தொடுத்த மாலை போலச் சொற்கள் விரவி சீர்படத் தொடுத்தது செய்யுள் எனலாம். மாலையின் நுகர்ச்சி மணமே போலச் செய்யுளின் நுகர்ச்சி பொருளே எனலாம். மாலையின் ஊடகம் அதன்நார் என்றால் செய்ய…

  14. பொதுவாகவே தமிழ்நாட்டுகாவல்துறையினர் அனைவரும் என்றில்லாது விட்டாலும் அதிகமானவர்கள் ஈழத்தவன் ஒருவனை ஆத்திரத்தில் பேசும்போதும் அடிக்கும்போது வன்மத்துடன் அழைக்கும் பெயர் 'அநாதை அகதிப்பயலுகளா' என்பதுதான்.போனவாரம்கூட செங்கல்பட்டுதடுப்புமுகாமில் இப்படி சொல்லியே தாக்கியுள்ளனர்.அதனையே தலைப்பாக வைத்து ஒரு கவிதை (நன்றி: Tamil_Araichchi கூகிள் குழுமத்தில் ச.ச.முத்து) அநாதை அகதிப் பயலுகளா….! – ச.ச.முத்து செப் 6, 2013 1 அநாதை அகதிப் பயலுகளா… எப்போதும் இங்கு தெருவிலோ, முச்சந்தியிலோ எதிரே வருபவனோ எவனோ சொல்லிச்செல்லும் வசனம்தான். அகதிக்கறுப்பா…! போ வீட்டுக்கு..! கேட்டுக்கேட்டே வாழப்பழகிவிட்டோம் நாம். குளிர்கூட ஊடுருவ முடியாத…

  15. விழுகை என்பது விதிப்படியும் எழுகை என்பது வினைப்படியும் நிகழ்ந்தே ஆகவேண்டும். நேற்றொரு நாள் சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம், புனைவெல்லாம் விடுதலைத் தழலில் வெந்து போயின. சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது. இந்தியத்தை விட்டு காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது. இனத்தின் நித்திய வாழ்வுக்கு நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன் சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான். பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி தோற்றதன் எதிரொலியை ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது. மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன. ஒப்பாரியின் உள்ளொலியில் பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன. கால நெ…

  16. காவல் தேவதை மாலதி. வீரம் தந்தவள் விடுதலைப் பயணத்தின் வீரியம் சொன்னவள் எங்களில் ஓர்மத்தை விதைத்த எழுச்சியின் குறியீடு எழுதிய வரலாறு மாலதி. சுதந்திரப் பொருளுரைத்துப் பெண்ணின் பெருமையை பேறாக்கிய பெருமை பெரும் பேறாய் எம்மினத்தில் பிறந்த பெருந்தீ. கோப்பாய் வெளிக்காற்று ஈரம் சுமக்கும் இன்றுமுன் வீரம் கண்ணகை தெய்வமாய் அங்கெல்லாம் மாலதி காவல் தேவதையாய்....! காலநதி உன் கலையா நினைவோடு கரைகிறது தோழி மாலதியென்றெம் மனங்களில் மூட்டிய தீயின் அடையாளம் மாலதி படையணியாய்....! 10.10.2002 (11வருடங்கள் முதல் எழுதிய கவிதை அல்லது அந்த நேரத்து உணர்வு. மீளும் நினைவாய் ) http://mullaimann.blogspot.de/2013/10/blog-post_10.html

    • 13 replies
    • 3.8k views
  17. கார்த்திகை பெற்றெடுத்த கல்லறைகளே.. கலங்கரை விளக்குகளாய் நீவிர்... மனக்கரைகளில் நிமிர்ந்து நிற்கையில் கார்த்திகைப் பூக்களுக்கு கண்ணீர் விட ஏது தேவை.?! கார்கால இருளின் மின்னல்களே ஒளிரும் தாரகைகளாய் நீவிர் விண்ணெங்கும் நிறைந்திருக்க.. காட்டுச் சிறுத்தைக்கு சிணுங்க ஏது தேவை...?! தேசக் காற்றின் வாசமான இளம் தென்றல்களே... உயிர் மூச்சுக்களாய் நீவிர் சுவாசப்பைகள் எங்கும் நிறைந்திருக்க... எங்கள் வாகைக்கு வாடி நிற்க ஏது தேவை..?! கடல் கொண்டாடும் அலையாகி நிற்போரே ஓயாத அலைகளாய் நீவிர் உயிரோடிருக்க தத்தித் திரியும் அந்தச் செம்பகத்துக்கு சோர்ந்திருக்க ஏது தேவை..??! கால வெளியில் கோலங்கள் மாறலாம் தேசங்கள் அலங்கோலமாகலாம் கண்மணிகளாய் நீவிர் …

  18. பாட்டியின் கைகளால் சுடப்படும் அப்பம் ... அம்மாவின் சேலையால் தலை துவட்டும் போது.. அப்பாவின் தோளில் ஏறி இருந்த பொழுதுகள் .. அண்ணனின் கைகளால் முதல் வாங்கிய அடி .. அக்காவின் கை பிடித்து கோயில் போன காலம் .. தங்கையை வெருட்டி அழவைத்த நேரம் . தம்பி என்னை கண்டால் ஓடி ஒழிந்த நிமிடம் .. ஒரு ரொட்டியை எட்டா பிரித்த சமயம் .. விலகி போன உறவு கதறி அழும் கணம் காதல் என்னை கலங்கடித்த கணப்பொழுது .. முதலில் அவளை தாவணியில் பார்த்த படம் .. கோயிலின் வடக்கு வீதி மேளசமா இனிமை ... சாண்டிலியன் கடல்புறா வர்ணனனை .. மெருவிரலால் தடவி மட்டி எடுத்த கடல் .. இசையில் மயங்கி ஒன்றிப்போன சங்கீதம் .. முதல் சினிமாவில் இருட்டில் தடவிய கதிரை ... எல்லாம் நினைவிருக்கு எனக்கு ஆனால் .. உ…

  19. மறந்துவிட்டாயம்மா...! நானும் கருப்பையில் தான் கற்பம் தரித்தேன் என்னையும் பத்து மாதம் தான் சுமந்து பெற்றாள் தாய்ப்பால் ஊட்டித்தான் சீராட்டினாய் இவர்தான் தந்தை என்றும் அறிமுகப்படுத்தினாள் இது ஆண்சாதி என்றும் இது பெண்சாதி என்றும் இது தாவரங்கள் என்றும் இது விலங்கினம் என்றும் அவள்தான் அன்று இனம் காட்டினாள்! ஆனால்... சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும் அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும் பணம் உறவின் வேடம் என்றும் மதம் பகையின் தோழன் என்றும் சாதி காதலின் எதிரி என்றும் ஏனே அன்று அவள் அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்...!! எழுதியவர்: நித்தியா

    • 220 replies
    • 28.7k views
  20. மனிதனாக எவரும் இங்கு வாழவில்லையே தனியுடமை இன்னும் இங்கு போகவில்லையே பொதுவுடைமை எங்கும் இங்கு வரவுமில்லையே பொல்லாத உலகம் இது மாறவில்லையே எல்லோர்க்கும் எல்லாமே கிடைக்கவில்லையே உழைப்பவன் கை இன்னும் உயரவில்லையே உனக்கும் எனக்கும் சமத்துவம் எதுகுமில்லையே சமூக நீதி வந்ததாக தெரியவில்லையே மாற்றம் இன்னும் இங்கு மாறவில்லையே அது வரும் என்ற நம்பிக்கைதான் கையில் இருக்குது. பா.உதயன் ✍️

  21. இளைஞனின் ஊக்குவிப்பான விமர்சனத்தை கருத்தில் கொண்டு மீண்டும் முயற்சி செய்து இருக்கிறேன். மீண்டும் பகுத்தறிவு!! மனிதன் நான் என்று சொல்லிக்கொள்வாய்........... ஆறறிவு கொண்டேனென்று அழகாய் ஒரு கிரீடம் ........... உனக்கு நீயே சூட்டிக்கொள்வாய்!.......... கண்ணுக்கு முன்னாலொரு சிசு பாலின்றியழுது தன் ஜீவன் கரைக்கையில்..... கண்ணுக்கு தெரியா கடவுளுக்கதை குடம் குடமாய் கொண்டு சென்று.. ஊற்றி கும்பாபிஷேகம் செய்வாய்! ஏழைச்சிறுவன் ஒருவனுக்கு கல்வி தராய்............ எரிகின்றதொரு வீட்டில் தணல் எடுத்து உன் வீட்டு உலை மூட்டுவாய்......... மஞ்சள் கயிறில்கூட ஒருதாலி கொள்ள முடியாமல் மலர்கள் சில.......... "மணமிழந்து" போகையிலே இல்லத்தாள் இருக்க.... இன்னொரு துணை தேட…

    • 21 replies
    • 3.7k views
  22. துரோகங்களையெப்போ புரியப்போகிறாய்…? புனிதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தந்தவன் நீ. அடர்வனப் புதர்களோடும் ஆயுதங்களோடும் ஆறாத்தவம் செய்த அற்புதம் நீ. பெயர்கள் யாருக்கோ பதியப்பட நீ பெயரின்றிப் புகழின்றிக் கடமையை மட்டும் கவனித்த களமாண்ட கடவுள் நீ. ஆயிரங்களாய் புதிய புதிய அவதாரங்களைச் சிருஸ்டித்த சிற்பி நீ. ஆயுதங்கள் மெளனித்து அனைத்தும் ஒரு கனவின் கணங்கள் போல காய்ந்து போனது களவாசம். நீ இன்னும் கனவுகளுக்காகக் கரைந்து கொண்டிருக்கிறாய். உன்னைத் தேடும் முகங்களுக்குள் நீ மூழ்கடிக்கப்படுகிறாய். உனது மனிதம் மிக்க இதயத்தை அவர்கள் மிருகத்தனமாய் மிதிப்பதைக் கூடப் புரிந்து கொள்ளாத ஒரு குழந்தையின் இதயம் உனக்குப் படைக்கப்பட்ட…

  23. நீ எப்படி.. அவன் என்றும் இவன் என்றும் அடுத்தார் வாழ்வை எடை போடும் மனிதா நீ எப்படி-உன் வாழ்வெப்படி.. அடுக்கடுக்காய் ஊர்வம்பை அளக்கின்ற போது.. ஆனந்தம் கடலாய் அலைமோதுகிறதோ.. அழ்மனத்து சகதியை வெண்திரை மூடுகின்றதோ.. உன்னைத்திருத்திக் கொள் உலகம் திருந்துமென்றார்... உண்மை அது மெய்..- நீ உன் வாயை உளறவிட்டு ஊர் வாயை அலறவிட்டாய்.. ஊரார் வம்பை ஊட்டி வளர்த்து தன் வம்பை தானே வளர்ததாய்.. வந்த நாள் நல்ல நாள் வாழும் நாள் கொஞ்ச நாள்-அதற்குள் ஆயிரம் பேர் தலையை உருட்ட நினைக்கும் அபூர்வ சிந்தாமணியே.. துன்பத்தில் வீழ்ந்தோரை வம்புக்குள் இழுத்து இன்பத்தைக் காண்பதுமேன்.. பிறர் துன்பத்தில் இன்பத்தை கண்டு களித்து வாழ்வுக் க…

  24. மரணம் அல்ல ஜனனம் பூஜைக்கென்று பூத்த மலர் புயலடித்து சாய்ந்ததம்மா! கண்ணியிலே கால் இடறி கன்னிமயில் வீழ்ந்ததம்மா! செம்புழுதிக் காற்றே சொல்லு புங்கை நகர் தேவதை எங்கே! பள்ளிக்குப் போன எங்கள் பருவநிலா தொலைந்த தெங்கே! வன்கொடுமைத் தீயில் வீழ்ந்து வதைப்பட்ட போது நெஞ்சில் என்ன நினைத்தாளோ! ஐயோ!..... பெண்பிறப்பே கொடியதென்று சொல்ல நினைத்தளோ! வெறி புடிச்ச நாய் கடிச்சா யாரை தப்பு சொல்வது வெறிநாயை விட்டுவைச்ச சமூகத் தப்பு அல்லவா! மாநிலத்தில் தமிழ் ஆட்சி வெறும் காட்சி மாற்றம்தான் கண்ணகி சிலை மறைப்பில் காம வெறி ஆட்டம்தான்! கண்ணா!......கண்ணா!....என்று கத்தினாள் பாஞ்சாலி அண்ணா!.......அண்ணா!......என்று அலறித் துடித்தாயோ! …

  25. எத்தனை கடவுளிடம் எனக்காக வேண்டியிருப்பாய்! எத்தனை மணித்துளிகள் எனக்காக காத்திருந்தாய்! எத்தனை இரவுகள் என் வரவுக்காக விழித்திருந்தாய்! எத்தனை ஆண்டுகள் இரவில் விழிக்காமல் நானிருக்க விழித்து கொண்டு நீ இருந்தாய்! * கருவறையில் இருக்கும் கல்லைவிட,கள்ளகபடமில்லாத, கருவறையில் சுமந்தவளே, கடவுள் என்பதை நீ உணர்த்தினாய்! * என் வலிக்காக நான் அழுதேன். வளர்த்தவளுக்காக நான் அழுததில்லை... காரணம் தெரியாமல் என்னோடு நீ அழுதாய்! * இதயத்தை உதைத்தவளுக்காக வலியால் நான் அழுதேன்... காரணம் ஏதும் கேட்காமல் அப்போதும் என்னுடன் நீ அழுதாய்! * அன்பு ஒன்றே உலகில் சிறந்தது என்பதை தெரியவைத்தாய்! அன்புதான் அழுகையாக வெளிப்படுகி…

    • 7 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.