கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
கொட்டட்டும் - போர் முரசு கொட்டட்டும் எட்டும் திசை யெட்டும் விடுதலை உணர்வு பொங்கட்டும்! போடட்டும் - குண்டு போடட்டும்...- பின் தமிழ் பெண்ணோடு வீரம் கண்டு - எதிரி மண்ணோடு சாயட்டும்! போடும் வரையும்- யாரும் தடையும் போடட்டும்... தமிழ் மானம் கண்டு-பின் தம் வாயை மூடட்டும் ! எட்டும் வரை எட்டி வெற்றிப் புலிக் கொடி வானை முட்டட்டும் ! இந்தத் தாயினம் செய்திடும் சத்தியம் - நாளை சரித்திரம் சொல்லிடும் தமிழீழம்! (என்று) கொட்டட்டும் - போர் முரசு கொட்டட்டும் எட்டுத் திசை யெங்கும் எதிரி சிதறி ஓடட்டும் இல்லை- சாகட்டும்! இந்தத் தாயினம் செய்திடும் சத்தியம் - நாளை சரித்திரம் சொல்லிடும் தமிழீழம் !
-
- 21 replies
- 3.6k views
-
-
வாழ்கை போல் வசந்த காலத்தின் துடிப்புகள் எல்லாம் மெல்ல மெல்ல கண்களில் இருந்து மறைக்கிறது . சுயனலம் அற்ற போர்வீரர்கள் போல் இலைகள் மண்ணில் குவிந்து கிடக்கின்றது ஏகாந்தம் பேணிக்கொண்டு இறக்கையின் துடிப்பில் உலகை அளக்கும் தனித்த பறவைபோல் மெல்லிய குளிரின் வருகை அணைப்புகளற்ற வாழ்கையின் ஏக்கத்தை நினைவுபடுத்துகிறது வருடம் ஒருமுறை மாறிவரும் பருவத்தின் புதுமை முதுமையின் நீளம்போல் சோர்ந்து கிடக்கின்றது பிரிந்த நாள் முதலாய் ஊர்நினைவு வருமானமின்றிக் கட்டமுடியாத வட்டிக் கடனைப்போல் உள்ளுக்குள் பெருக்கி கொண்டே இருக்கின்றது
-
- 3 replies
- 3.6k views
-
-
என் வாழ்க்கைப் பயணங்களில் சுமந்த பொதியாய், என் வலிகளும் கூடவே வந்தன! எனக்கிந்த சாபம் எதுவரையென... எனக்குத் தெரியவில்லை இதுவரை! நம்பிக்கைகளை சாகடித்தபடியே... துரோகங்கள் என் பாதையை மாற்றியமைக்கிறது! வலிகளும், மாறும் வழிகளும் எதுவானாலும்... என் பாதம் நேர்வழி மட்டுமே தொடரும்! இன்னும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் நானிருப்பேன், தன்னம்பிக்கை எனக்கிருக்கு! சிறகெரிந்த வாசத்தில் மூச்சுத்திணறிய பீனிக்ஸ் பறவை, விழ விழ எழுவதுபோல்... நானும் எழுவேன்! வரைகின்ற வட்டம் போல... சுற்றிவரும் புள்ளிகளில், இரு முகங்கள் சந்தித்துக்கொள்ளும்! பயணங்களின் காரணங்கள் ஒரு வட்டத்துக்குள், முழுநிலவாய் சிரிக்கும்போது... நேற்று வந்த முழுநிலவுதான் என் ஞாபகத்தில் வரும…
-
- 27 replies
- 3.6k views
-
-
ஓல்(O/L) பரீட்சையில் ஓல்(all) எவ்(F) வந்ததும் தலை கிறுகிறுக்க அலைந்த போது.. இயக்கத்துக்கு ஓடிடுவானோ.. பயந்தாள் அம்மா. ஊருக்க வைச்சிருந்தா உவங்கள் வந்து இழுத்துக் கொண்டு போயிடுவாங்கள் உங்கால உள்ள காணியை வைச்சிட்டு அனுப்பிவிடு இவனை கொழும்புக்கு.. புத்தி சொன்னார் அப்பா. கொழும்பில போய் பொடி கெட்டிடும் உந்த ஊரெல்லாம் போகுது கனடா அனுப்பிவிடு அங்க.. பத்தாக்குறைக்கு பத்த வைத்தார் மாமா..! நானும் சோதனையில் பெயிலான (fail ஆன) சோகம் தீர புறப்பட்டேன் தாண்டிக்குளம் தாண்டி ரொராண்டோ. வருசம் ஒரு 5 போய் இருக்கும் நாலு காசு நாய்படா பாடுபட்டு வெள்ளைத் தோலிடம் ஏச்சும் இழிவும் வாங்கி உழைச்சது தான்..! அம்மா கேட்டாள் பொம்…
-
- 32 replies
- 3.6k views
-
-
காதல் கிங்கை மீண்டும் ஒருவர் கவிதை ஒன்றை எழுத உசுப்பேத்தி உள்ளார். நானும் எனது சரக்கை இங்கு அவிழ்த்து விட்டுள்ளேன். சொன்னாலும் சொல்லாட்டிலும் இவள் தாண்டா இப்ப மொடேர்ன் காதலி!!! எல்லாமே நீ தானடி!! கவனக் குறைவாக நான் எனது வாழ்க்கை காரை ஓட்டி அக் சிடண்ட் பட்ட போது உயிர்ப் பிச்சைதந்த Air Bag.. கயவர்கள் எனைப்பிடித்து அதளபாதாளத்தில் தள்ளிவிடும் அகால நேரங்களில் என் சுவாசத்திற்கு உதவும் ஒட்சிசன் சிலிண்டர்.. எனக்குள் இருக்கும் வியாதிகளைக் கண்டுபிடித்து சிகிச்சை தருகின்ற லேசர் கதிர்.. நான் சோர்வடையும் நிலையில் instant ஆக அன்பைப் பொழிகின்ற ATM மிசீன்.. என் உடலை செழிப்புடன் வைத்திருக்க ஊக்குவிக்கும் Fi…
-
- 24 replies
- 3.6k views
-
-
......::::::: கள உறவுகளுக்கு ஒரு கவிதைக் கணை....! இங்கே உள்ள சித்திரம் உங்கள் மனங்களில் தோற்றுவிக்கும் கவிதைகளை தாருங்கள். என்றும் அன்புடன் - இதயநிலா
-
- 25 replies
- 3.6k views
-
-
புதுவை இரத்தினதுரை அவர்களின் உலைக்களம் கவிதை- நூல் தொகுப்பு பகுதி 01: http://www.scribd.com/doc/122361060/Puthuvai-Ulaikalam-collection-1 பகுதி 02 : http://www.scribd.com/doc/122361169/Puthuvai-Ulaikalam-collection-2
-
- 0 replies
- 3.6k views
-
-
எண்பது தமிழனை கொன்றுவிட்டு நான் அவனில்லை - என்றே சிங்களன் கால் கழுவு! குத்தரிசி சோறு வேணாம் ஈர பலாக்கை போதுமென்றே அலை- அலைந்து திரிந்து அசிங்கமாய் திரி! அப்பனையும் ஆத்தாளையும் ஐந்து பத்திற்காய் கொல்லு! கொன்றபின் பன்சலைக்கு சென்று சிங்களனுடன் சேர்ந்து ப்ரீதும் ஓது! புலியை அழித்தால் புது வாழ்வா உனக்கு? புலி அழிந்து போகும் ஒரு நாள் வந்தால் உன் குரல் வளையே சிங்களனுக்கு அடுத்த இலக்கு - இதை நம்பினால் நீ நம்பு! தமிழீழ விடுதலை புலியை அழிப்பதா அவன் குறி? அட தடுமாற்றகாரா தமிழன் தலை எடுப்பதுதாண்டா அவன் வெறி! மரத்தோடு மரமாய் ஒட்டி தேவாங்கு போல தூங்கு! செருப்புக்கு ஆசை படுறாய் உன் கால் மெதுவாய் அறுந்துபோகுது! கவனி- !…
-
- 15 replies
- 3.6k views
-
-
திருமலை தந்த சீலனே திரும்பி பார்க்க மறந்தனர் புல தமிழன் புலிகளின் மூத்த தாக்குதல் தளபதி நீ உன் முதல் இலக்கு சிங்க கொடி உயிர் குடிக்கும் ஆயுததாரிகளின் முன்னே தனித்து நின்று தீக்கிரையாக்கினாய் அக்கொடியை தந்தையும் தனயனும் நெஞ்சில் சுமந்தனர் அக்கொடியினை புலத்தில் சுமந்தாய் நீ தமிழை நெஞ்சில் விளையாட்டு வேறு அரசியல் வேறு விளக்கம் கொடுத்தனர் கனவான்கள் விளையாட்டு பருவத்தையே துறந்தாய் விடுதலைக்காக,மறந்தனர் புல தமிழர் படைத்தான் தலைவன் உன் பெயரில் படையணி உன் உறவுகள் தொடர்ந்த்னர் உன் பணியினை தகர்ந்தன சிங்க கொடி இராணுவ தளங்கள் கொடி காவி விமானங்கள்,நிலையங்கள் காவுகின்றனர் கொடியினை கையில் புல தமிழர்கள் விளக்கம் கொடுக்கின்றனர் நடுநி…
-
- 23 replies
- 3.6k views
-
-
எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன எங்கள் இமைகள் கவிந்துள்ளன எங்கள் உதடுகள் அண்டியுள்ளன எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம் எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக எங்கள் முதுகில் கசையால் அடிக்குக எங்கள் முதுகுத் தோல் பிய்ந்துரிந்து போகட்டும் தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும் கவிந்த இமைகள் ஒருநாள் உயரும் இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும் கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும் அதுவரை நீங்கள் எங்களை ஆள்க அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக சண்முகம் சிவலிங்கத்தின் மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பிலிருந்து (பலர் ஏற்கனவே வாசித்திருப்பீர்கள். இருந்தாலும் இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதாகத் …
-
- 0 replies
- 3.6k views
-
-
அவளை அனுபவிக்கஇ அணு அணுவாய் உள்ளிழுக்கஇ இதழ் குவித்து இன்பம் காணஇ சுற்றம் மறந்து சுகம் காணஇ சற்று நேரம் சொர்கம் செல்லஇ விரல் இடுக்கில்இ இதழ் இடுக்கில் - இறுதியில் இதய அடுக்கில் - இன்பமாய் இடம் மாறிட. வெண்ணிற மேனியில் பொன்னிற கேணியில் மூழ்கி நான் மூச்சிழுக்க... அவளை அழைத்துஇ ஆடை உரித்துஇ வாயில் பொருத்தினேன் - சிகரெட்
-
- 7 replies
- 3.6k views
-
-
மேஜர் சிட்டுவின் 40வது பிறந்தநாள் நவம்பர் 4ம் திகதி. எங்கள் இனத்துக்காக வாழ்ந்த மாவீரர் சிட்டுவின் 40வது பிறந்தநாள் வலைப்பூவில் சிட்டுவின் பாடல்கள் நினைவுக்குறிப்புகளை பதிவிடும் நோக்கில் ஏற்பாடுகள் ஒழுங்காகிறது. யாழ்கள கவிஞர்கள் கருத்தாளர்களிடமிருந்தும் உங்கள் எண்ணங்கள் கவிதைகள் நினைவுப் பகிர்வுகளை அனுப்பி உதவுமாறு வேண்டுகிறேன். எங்களுக்காக வாழ்ந்து எங்கள் நினைவுகளில் வாழ்கிற மாவீரர்களின் வரலாறுகளைப் பதிவிடுவோம். உங்கள் எண்ணங்கள் கவிதைகள் நினைவுப்பகிர்வுகளை கீழ்வரும் மின்னஞ்சலுக்கு அஞ்சலிடுங்கள். 2ம் திகதி நவம்பருக்கு முன்னர் கிடைக்குமாறு அனுப்புங்கள். மின்னஞ்சல் முகவரி - rameshsanthi@gmail.com சிட்டுவிற்கான வலைப்பூ - http://chiddu1997.wordpress…
-
- 1 reply
- 3.6k views
-
-
சிறையை உடை சிறகை விரி இந்த இடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் காற்றோட்டமான அறை பெரிய மண்டபம் செயற்கைப் பூந்தோட்டம் பார்த்துப் பார்த்துக் கவனிக்க பலர் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கங்களையும் பார்த்துப் பார்த்து சுமைகளை எமதாக்கி சுகங்களை உமதாக்கி தோளிலும் மாப்பிலும் தூக்கிச் சுமந்தோம் எந்த உணவு பிடிக்கும் எந்த உடை பொருத்தமாக இருக்கும் எந்தப் பாடசாலை உங்களை உயர்த்தும் எந்தப் படிப்பு உங்களுக்கு இலகுவாக அமையும் ஆம், பார்த்துப் பார்த்து படியேற்றி விட்டோம் அதற்கு பிரதியுபகாரமாக நீங்கள் எம்மை இங்கு படியேற்றி விட்டுள்ளீர்கள் நேரத்திற்கு உணவு நாளுக்கோர் உடை வசதியான படுக்கை வளமான இருக்கை பிரயாணிக்க சொகுசு வண்டி கூப்பிட்ட குரலுக்கு செவிலி குறிப்பறிந்து கவனிக்க தாதி எல்லாமே எல்லாமே இருக்கும…
-
- 8 replies
- 3.5k views
-
-
இவை கவிதைகளும் அல்ல, ஹைக்கூக்களும் அல்ல, எவையும் அல்ல...ஆனால் ஏதோ கணங்களில் கடந்து போன சில வரிகள் 1. ரயிலில் எனை உதைத்தது நான் இருக்கை வழங்காத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை 2. பூச்செடி பூக்கவில்லை; தூக்கி எறியும் போது முளையில் தொங்கியது உயிர் கொண்ட புழு 3. சிவனே அர்த்தநாரீஸ்வரன்!! மறுத்து தானே என்றது மண் புழு சின்னக் குறிப்பு: மண் புழுவில் ஆண் உடலும் பெண் உடலும் சேர்ந்தே இருக்கும் 4. அன்று வைரவர் திருவிழா ! ஊரில் இருந்த நாய்களுக்கு காயடித்தனர் பக்தர்கள்
-
- 13 replies
- 3.5k views
-
-
தமிழ் ஈழம் அமைவதை இந்தியா அனுமதிக்காது. இலங்கை பிரதமர் இஸ்ரேலில் பேட்டி. அடப்போங்கப்பா... இஸ்ரேல் தடுத்தாலும் சரி... இலங்கை குதித்தாலும் சரி... இந்தியா குமுறினாலும் சரி.... தமிழ் ஈழம் நிச்சயம் அமையும்டா என் டுபுக்கு தமிழச்சி கவிதைகள் குமுதம்/பாமரன் பக்கம்
-
- 6 replies
- 3.5k views
-
-
கவிதை எழுதுகிறேன் ரசிகர்கள் ஆயிரம்.. கஞ்சிக்கு அழுகிறேன் கவனிப்பார் யாருமில்லை.! என் தாடியின் ரகசியம் காதல் தோல்வி அல்ல.. வெட்டி மழிக்க காசில்லை..!
-
- 28 replies
- 3.5k views
-
-
நியூயோர்க் ஜம்பரில் (NYjumper) லண்டன் ஸ்ரைலில் (style) அரைப் பென்ரர் (pender) தெரிய டெலிம் (denim) போட்டு.. பி.எஸ் 3 (ps3) வாங்க பிளாசா (plaza) போனேன்..! அங்கே.. பிற்சா கட் (pizza hut) பிற்சாவோடு (pizza) ஸ்ரைலா நிற்கையில் லப் ரொப் (laptop) அடக்கமாய் நீ இருந்தாய். திறி டி விசனில் (3D vision) உன்னைக் காண ஐ.ஆர் (IR) கொண்டு ஸ்கான் (scan) செய்தேன் எக்ஸ் பொக்ஸ் கேம் (XBox game)போல திறில்லாய் (thrill) இருந்தாய்..! உடனே.. புளூருத் (bluetooth) சிக்னலாய் என்னைத் தந்தேன் பதிலுக்கு.. மொபைல் போன் (mobile phone) கமராவாய் (camera) நீ என்னைப் பார்த்தாய். அதுதான் சாட்டென்று.. ஐபொட்(iPod) ஒன்று வாங்கியே அருகில் வந்தேன் எம்பி…
-
- 23 replies
- 3.5k views
-
-
என்ன செய்ய??!! பூக்களை தருவதற்காய் நான் வந்து கொண்டிருக்கிறேன் மாட்டுவண்டி ஒன்றிலே கரடு முரடான பாதையிலே மெது மெதுவாய் வந்து கொண்டிருக்கிறேன் கண்ணைப் பறிக்கும் வண்ணம் கொண்ட சொகுசுக் காரிலே எனக்குப் போட்டியாக அவர்களும் வருகிறார்கள் வாண வேடிக்கைகள் முழங்க சுவரெல்லாம் செய்திகள் சொல்ல ஆடம்பரமாய் அவர்கள் வருகிறார்கள் நான் தருவதற்கு பூக்களை கொண்டு வருகிறேன் அவர்கள் விற்பதற்கு மலத்தைக் கொண்டு வருகிறார்கள் மக்கள் எல்லோரும் காரை நோக்கியே கட்டுக்கடங்காமல் ஓடி வருகிறார்கள் ஓடி வந்து தங்கத் தாம்பாளத்தில் வைத்து அவர்கள் கொடுத்ததை சந்தோசமாய் வாங்கிச் செல்கிறார்கள் என்னையும் பூக்களையும் சீண்டுவார்தான் யாரு…
-
- 25 replies
- 3.5k views
-
-
இது எங்கள் தாயகத்தைவிட்டு வெளிநாடு செல்ல ஏஐன்சிக்காரரிடம் காத்திருந்து, பின் ஏமாந்து போனவர்களுக்காகவும், இன்னும் வெளிநாடு வரமுடியாது. இலங்கை முழுவதும் அலைந்து, மனம் உடைந்து திரியும் உறவுகளுக்காக... என்ன? யாழ்கள உறவுகளே உங்களில்கூட எத்தனை பேர் இப்படிக் கஸ்டப்பட்டு வெளிநாடு வந்திருப்பீர்கள். அந்தக் காலத்தை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் கண்களில் கண்ணீர் வழியலாம்.. உங்கள் மனதை தலாட்ட இப்பாடல் காதல் மொழி இறுவட்டில் இருந்து வரும் ஐந்தாவது பாடல்...கேட்டு மகிழுங்கள். http://vaseeharan.blogspot.com/ -please click here to listen... கருத்தைச் சொல்லுங்கள். பல்லவி ஏஐன்சிக்காரன் ஏமாத்திட்டான்- என் கதிர்காம முருகன் காப்பாத்திட்டான் அப்பாவின் காசு காற்றோடு போச்சு …
-
- 24 replies
- 3.5k views
-
-
வான் வெளியில் வண்ண நிலா பொட்டு வைத்த வட்ட நிலா சேயைத்தாலாட்டும் தங்கத்தாய் அவளா கார் இருளில் விண் தாரகையா கண் சிமிட்டும் பெண் காரிகையா காதலன் விழிகளில் காதல் பைங்கிளியா வான வில்லின் வர்ண ஜாலங்களா கண்களில் அவள் காமா பாணங்களா மேகத்தில் தீட்டிய மேனகைதான் அவளா பொறுமையில் அவள் பெண் பெட்டகமா உயிர் கொடுத்த உன்னத சித்திரமா சுமைதாங்கும்-அந்த தூண்கள் அவள்தானா கவிதைகளில் அவள் காதல்க் கற்பனையா இனிக்கின்ற தமிழ் தேன் சுவை உச்சமமா பேசும் மொழிகளின் தாயும் அவள்தானா அவள் என்கின்ற தலைப்பில் முத்தமிழ்மன்றத்துக்காக புனைந்த கவி இது
-
- 25 replies
- 3.5k views
-
-
மறுத்ததேன்....? பலமுறை தொலைவில் பார்த்தேன் பார்வைகளால் ரசித்தேன் ஆர்வத்தில் தொடர்ந்தேன் தினம் உன்னையே சிந்தித்தேன் காதலை வளர்த்தேன் ஆதலால் சிலிர்த்தேன் ஆசையோடு இருந்தேன் திசை எங்கும் நடந்தேன் கற்பனையில் மிதந்தேன் பற்பல கவிதைகள் வடித்தேன் வானளவு உயரந்தேன் கானம் பாடி திரிந்தேன் கனவுகளில் உன்னோடு பறந்தேன் நினைவுகளை எனக்குள் சுமந்தேன் ஊன் சுவைதனை மறந்தேன் உறக்கத்தையும் துறந்தேன் உன் உருவை வரைந்தேன் கண்களுக்குள் காத்தேன் வெட்கத்தில் சிவந்தேன் துக்கத்திலும் சிரித்தேன் இன்றுனை சந்தித்தேன் தெத்திப்பல் தெரிய சிரித்தேன் காதல்மனசை திறந்தேன் அன்பே நீ மறுத்ததேன் என்னையும் வெறுத்ததேன்..?
-
- 25 replies
- 3.5k views
-
-
வெள்ளைக் கடற்கரையில்... வெள்ளைப் புற்றடி விநாயகரை வணங்கியே நாம் செல்ல மண்கும்பான் கும்பி மணல் மலையழகு காட்டும். மணலிடையே பனைமரங்கள் நுங்குதாங்கி நிற்கும் இதைப் பாhத்து நடக்கையிலே சோமர் கிணறு தெரியும் சுகமான குளிப்பென்று - அது எம்மை அழைக்கும். தெங்குகள் இடையினிலே பள்ளிவாசல் மிளிரும் தெவிட்டாத நீர் இங்கேயென சாட்டி வழி சொல்லும். மாதாவின் திருத்தலத்தின் மணி ஓசை கேட்கும்; மனத்திலே அதன் ஒலி அருள் நினைவு சுரக்கும் மேல் வானில் செங்கதிர்கள் அழகுக் கோலம் தெளிக்கும் அதன் கீழே பறவை இனம் வரிக் கோலம் போடும். கீழ்வானம் தேடியெங்கும் படகுகள் பாய் இழுக்கும் அதைப் பாhர்த்துச் சிறையாக்கள் பாய்ந் தழகு கொடுக்கும் இதைப் பார்த்து நிற்கை…
-
- 20 replies
- 3.5k views
-
-
-
- 7 replies
- 3.5k views
-
-
அப்பாவுக்கு ஒரு கவிதை. எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா… முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை… அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என… கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொட…
-
- 0 replies
- 3.5k views
-
-
எம்தமிழ் தேசத்திலே ஏற்றமுடன் நாம் இருந்தோம் செந்தமிழ் தேசத்திலே சேர்ந்து நாம் வாழ்ந்திருந்தோம் அத்தனை உறவுகளும் ஆவலாய்க் காத்திருந்தோம் அண்ணன் பிரபாகரனின் ஆணையில் வாழ்ந்திருந்தோம் விடுதலை விலங்ககலும் வேளைதான் பார்த்திருந்தோம் விதி செய்த வலையினதில் வெந்தே நாம் வீந்துவிட்டோம் அஞ்சி அஞ்சி நாம் அடிமையாய் வாளோமென அன்னை மண்ணின் அடிமை விலங்கொடிக்க வெஞ்சினம் கொண்டே வேங்கைகள் எழுந்தனர் போராட்ட வீரராய் போர்க்கோலம் பூண்டனர் சொத்து சுகங்கள் சொந்தங்கள் இழந்தனர் பருவ வயதின் பற்றெல்லாம் துறந்தனர் அன்னை மண் காத்திட அத்தனை பேரும் ஆயுதங்கள் தாங்கி ஆணைகள் காத்தனர் புன்னகையுடன் அன்று பொருதிடச் சென்றனர் புறநானூறு படைத்தே புனிதராய் நின்றனர் சுதந்திரம் வேண்டி சுவாசத்தைச் …
-
- 17 replies
- 3.5k views
-