கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
பண்டித எழுத்தாளர்கள் பழித்தனர் பாமரனின் எண்ணங்களின் எழுத்துக்களை தலித் இலக்கியங்கள் தரம் குறைந்தவை என்றனர் புரட்சி பண்டிதர்கள் புத்தக புரட்சியே புனித புரட்சி என்று புலியெதிர்ப்பு புராணம் வடித்தனர் ஆயுதம் ஏந்தி அகிம்சையாக போராடி அன்னியனை அழிக்காதபடியால் தான் அர்சுடன் அண்டிப் பிழைக்கின்றார்களாம் அன்றைய போராளிகள் முதலுதவி பயிற்சி ஒருநாள் முன்னரங்கம் இருநாள் முடியாது தொடர பலநாள் என முடிவுடன் புறப்பட்டார்கள் முஸ்லிம் நாடு. முஸ்லிம் நண்பர்களுடனும் சில நாள் கடத்தல் பண்டிதர்களின் புண்ணியதில் கடல் கடந்தனர் கனடாவுக்கு கண்டவன் எல்லாம் கனடாவிலாம் கழகதார் மட்டும் கணவாங்களாம்.. இலக்கியம் எம்மவர்க்கு…
-
- 10 replies
- 1.4k views
-
-
மழைக்காலம் துவங்கும் மேய்ச்சல் நிலங்களை புற்கள் போர்த்தியிருக்கும் எல்லாம் எரிந்த சாம்பலிலிருந்து மூங்கில் துளிர்க்கும் நொண்டி நாய் தங்க நிறகுட்டிகள் நான்கை ஈனும் நீண்ட குரலெடுத்து பாடும் ஒற்றை வால்க்குருவி கூடடைந்திருக்கும் வண்ணத்து பூச்சியொன்றின் நிறங்கள் குலைந்திருக்கும் தூறல் நின்றபின் வெளிக்கிடும் தவளைக்காக நீர்ப்பாம்பு கரையை பார்த்திருக்கும் குயவனின் கனவுகளுக்குள் தலைபிரட்டை நீந்த கற்றிருக்கும் சம்பா நாற்று நீரில் மிதந்திருக்கும் பெருங்கிழவன் உளம் விளைந்திருக்கும் செப்பனிடாத கூரைவழியோடும் மழையருவி சிலந்தியின் பின்னலில் சன்னல்களை வரைந்திருக்கும் விட்டில…
-
- 14 replies
- 1.7k views
-
-
வறுமை எல்லோருக்கும் பொதுமை ..... உலகில் சதித்தவனும் .... சாதிக்க போகிறவனுக்கும் .... மூலதனம் - வறுமை ....!!! இவனுக்கோ .... பிறப்பிடமே - வறுமை - என்றால் .... கொஞ்சம் கேட்கவும் சகிக்கவும் .... உங்களுக்கு கடினமாய் தான் .... இருக்கப்போகிறது .....!!! யார் இவன் ...? அடிப்படை வசதிகள் குறைந்த .... அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ... தன்மானத்துடன் காத்திருந்து .... கிடைத்தால் சாப்பிட்டு .... கிடைக்கா விட்டால் ஈரதுணியை .... வயிற்றில் கட்டி வாழ்ந்த .... கௌரவம் மிக்க வறுமை குடும்ப .... நாயகன் - " ஆதவன் ".......!!! இவனது வாழ்கை தற்காலத்துக்கு .... எந்தளவுக்கு பொருந்தும் ... ஏற்கும் என்று தெரியாது .... ஆனால் இவனின் வாழ்கை .... இவனு…
-
- 5 replies
- 1.4k views
-
-
அலைகள் தொடும் கரையினிலே கரை தொடும் அலையினை ரசித்தபடி கற்பனை அலைகளை மனமெனும் கரையினில் மோத விட்டு காத்திருந்தாள் அவனுக்காய்... ஒருதலைக்காதலாய் வளர்த்திட்ட அவள் முடிவை அவனிடம் சொல்லிட அழைத்திட்டாள் அவனை அழைப்பை ஏற்ற அவனுக்காய் காத்திருந்தாள் கடற்கரையினிலே....... எதிர்கால வாழக்கையினை ஏணிபோல் ஏற்றிட இவன் வேண்டும் என்றெண்ணியவளாய் திரும்பினாள் எதிரினிலே அவன் நின்றான்..... அவனை பார்த்தவுடன் அவசரமாய் எழுந்து நின்றாள் ஆவலுடன் அவன் நலம் அறிந்து அமரும்படி அழைத்திட்டாள்...... இடைவெளியுடன் இருவரும் இரு கல்லில் அமர்ந்திட - அவன் இரு கண்கள் இயற்கையின் விந்தையை ரசித்திட இவள் பார்வை அவனை நோக்கி ஏக்கத்துடன்.... ஆறு வருடங்க…
-
- 12 replies
- 1.2k views
-
-
சென்னையில் உள்ள ஒரு சகோதரிக்கு ஈழத்து பெண் கவிஞர்களது தொடர்பு தேவை. குறிப்பிட்ட சகோதரி தனது ஆய்வாக தமிழக பெண் கவிஞர்களை பேட்டி கண்டு வருகிறார். ஈழத்து பெண் கவிஞர்களையும் தொடர்பு கொள்ள விரும்புகிறார். தெரிந்தவர்களும் , விரும்பியவர்களும் இங்கோ அல்லது எனது தனிமடலுக்கோ எழுதலாம். நன்றி! info@ajeevan.com க்கு கூட எழுதலாம்.
-
- 0 replies
- 849 views
-
-
பச்சைக் குழந்தை அங்கே பாலுக்கு அழுதிருக்க பாற்குட அபிசேகம் நீயிங்கு செய்தால் என்னைக் கடவுளென்று மனிதன் வணங்குவானோ சொல்? சத்தியமாய் அந்தக் கல்லுக்குள்ளே நான் இல்லையெடா! மானிடா! நான் கருணையுள்ளவன். ஏழை நெஞ்சுக்குள் தான் எப்போதும் இருப்பேனடா! உன் இரத்த உறவுக்கங்கே பாதி உயிர் போகையிலே எப்படி நான் கொலுவிருப்பேன்? நீயமைத்த மஞ்சத்திலே! எப்போதடா நான் கேட்டேன்? இப்போது நீ எனக்கென்று செய்வதெல்லாம்.. வானமே கூரையாய் உன் உறவு வாழ்வுக்கு வரமிருக்க கோபுரக் கோயில் கட்டி என்னை குடியிருக்க நீ கேட்டால் எப்படி இருப்பேனடா சொல்? அப்படி நான் இருந்தால் மனிதன் வணங்கும் தெய்வம் எனும் தகுதி எனக்கிருக்குமோ சொல்? மானிடா! ந…
-
- 14 replies
- 2.4k views
-
-
எனக்குத் தெரியும் என்றாலும் எதிர்மாடித் தமிழனைக் கேட்டேன், எப்போது வரும் தமிழ்ப் புத்தாண்டு? 'எப்போதும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரலில் தப்பாது வரும்' என்றான்! 'கண்ணீர் வடிக்கும் சித்திரையாளுக்குக் கைகுட்டை கொண்டுபோ' என்றேன். 'எங்கும் இன்பத் தமிழ் ஒலிக்க வேண்டும்' ஏமாற்றமா? இல்லவே இல்லை என் ஆசைக்கு! காதாரத் தமிழ்ப் பேச்சைக் கேட்கிறேன் கல்லறைகளிலிருந்து! மறைமலை, திரு.வி.க., பாரதிதாசன், பாவணர் தனித் தமிழில் இனிக்க உரையாடுகிறார்களே... கேட்கலையா உங்கள் செவிகள்? ஆனாலும் ஆவலினால் அன்றைய தொல்காப்பியன் திரும்பி வந்தான். மழலையர் பள்ளியில் ஆங்கிலம் படித்தான் அதிலே தவறி ஐந்தாம் வகுப்பிலேயே கல்வியை முடித்தான். ஆர்வத்தால் வள்ளுவனும் திரும்பி வந்தான். தமிழில் படிக்க வாய்ப்பில…
-
- 0 replies
- 426 views
-
-
முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை. இரவும் பகலும் இரத்த ஆற்றிலே எங்கள் வாழ்க்கை நீச்சல் அடிக்கிறது உலகம் முழுதும் தமிழர்களின் வீரவணக்கம் செய்திகள் படிக்க உயிரைப் பிழிகிறது! எமக்காக எழுந்த தெய்வங்களே ஏழு பேரையும் வணங்குகிறோம் ஒரு சோதிப்பெரு வெளிச்சம் எமக்குச் சக்தியானது போதுமையா! முகம் தெரியாத எம் முத்துகளே உயிராயுதம் ஏந்துவதை நிறுத்துங்கள் எழுத்தாணியைக் கையில் எடுத்து எட்டுத் திசையிலும் எழுதுங்கள்! உலகத்தின் விழிகளைத் திறப்பதற்கு உங்கள் உயிர்களை இழக்காதீர்கள் அவலத்தின் காணொளிகளை தொகுத்து உலகத்தின் விழிகளுக்கு காட்டுங்கள்! தெய்வங்களை நேரிலே பார்த்ததில்லை இன்று நெருப்பிலே பார்க்கின்றோம்! நேற்றிருந்த முகங்கள் இன்றில்லையே…
-
- 0 replies
- 840 views
-
-
பிறப்புக்கும் இறப்புக்குமான மானுட உனது உரிமைகளை கொண்டாடுவதும் நினைவு கூறுவதும் போன்றே எனது பிறப்புக்கும் இறப்புக்குமான நினைவுகளை நான் கொண்டாடுவதை நினைவு கூறுவதை மறுக்கும் உரிமை உனக்கில்லை. All human beings are born free and equal in dignity and rights
-
- 2 replies
- 966 views
-
-
ஏதாவது செய் ஏதாவது செய் உன் சகோதரன் பைத்தியமாக்கப்படுகின்றான் உன் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள் சக்தியற்று வேடிக்கை பார்க்கிறாய் நீ ஏதாவது செய் ஏதாவது செய் கண்டிக்க வேண்டாமா. அடி உதை விரட்டிச் செல் ஊர்வலம் போ பேரணி நடத்து ஏதாவது செய் ஏதாவது செய் கூட்டம் கூட்டலாம் மக்களிடம் விளக்கலாம் அவர்கள்…. கலையுமுன் வேசியின் மக்களே எனக் கூவலாம் ஏதாவது செய் ஏதாவது செய் சக்தியற்று செய்யத்தவறினால் உன் மனம் உன்னைச் சும்மா விடாது. சரித்திரம், இக்கணம் இரண்டும் உன்னை பேடி என்றும் வீர்யமிழந்தவன் என்றும் குத்திக் காட்டும். ஆத்திரப்படு கோபப்படு கையில் கிடைத்த புல்லை எடுத்து குண்டர்கள் வயிற்றைக் கிழி உன் சகவாசிகளின் க…
-
- 0 replies
- 851 views
-
-
நாய் நாய் என்று பலர் ஏசியும் வெக்கம் கெட்டு உங்கள் வாயிலோரம் அலைகிறேன் என்று கீழ் தரமாய் எண்ணாதீர்.. நான் உங்களைப் போல் நன்றி மறப்பவனில்லை... இப்படிக்கு.. நன்றியுடன்... நாய்
-
- 6 replies
- 1.4k views
-
-
நிலவின் வருகை: ஒரு இரவின் இடையில் உயிரின் கலசம் உடைந்தது உணர்வுகளின் ஆர்ப்பரிப்பின் உச்சத்தில் அவளை இறுகத் தழுவினேன் இறுக்கி அணைத்தேன் முத்தமிடா இடங்களை காதலின் உச்ச வரிகள் நிரப்பிச் சென்றன யுகங்களுக்கு அப்பால் இருந்து கால பைரவன் உயிரின் துளிகளை சுமந்து என்னிடம் தந்தான் என் தேவதையின் காதல் இடைவெளியை அந்த உயிர் துளிகளால் நிரப்பினேன் ஒரு மொட்டின் அசைவை தன்னில் என் தேவதை எனக்குச் சொன்னாள் ஆயிரம் கலவிகள் கடந்த வீரத்தையும் தன் நீந்தலையும் என்னுள் என் ஆண்மை தன்னைப் பற்றி வாய் வலிக்கச் சொன்னது 2 அந்த அறை எனக்கு கருவறை அந்த அறையில் ஒரு உயிரின் வருகைக்காய் காத்திருந்தேன் என் தாய…
-
- 87 replies
- 11.9k views
-
-
விளக்கெரியும் பொழுது எப்பாடலுமற்று யாரும் வாய்திறக்கா நள்ளிரவுகளின் காலத்தில் இருண்ட தேசத்தில் சூரியனுக்காய் காத்திருக்க சிதை மண்ணிலிருந்து கற்கள் முளைக்க கைகளால் மூட முடியாத மழை இடியோடு பெய்கிறது. வீழும் பொழுது அழுது மீளும் பொழுது தொழுது கனவுகள் முட்டும் கல்லறைகள் பெருகிய தேசத்தில் தாய்மார்களின் அடி வயிறுகளில் கார்த்திகைப் பூக்கள் மலர்கின்றன. வீட்டு மூலையில் விளக்கெரியும் கார்த்திகை மாலைப் பொழுதில் விளக்குகளை தூக்கி வந்து மழையில் நீர் சொட்டும் தென்னங் கீற்றுக்களில் ஒளிரும் உங்கள் முகங்கள் கண்போம். மூட முடியா மழை கொல்ல முடியா மரங்களில் பெய்ய அழியா முகங்கள் மனங்களில் தெரியும் அணைக்க முடியா விளக்குகள் தேசத்தை நிரப்பியெரியும் அப்பொழுது. * * *…
-
- 0 replies
- 718 views
-
-
-
- 27 replies
- 4.3k views
-
-
-
பெண்ணே.. பெண்ணே... காதல் கொண்டேன் உந்தன் கண்ணில் மின்னல் கண்டேன் உன்னால்தானே தூக்கம் மறந்தேன் விண் மேகம்போல நானும் மிதந்தேன் செல்லமாய்ச் சிரிக்கிற தேவதையே...! வெல்லமாய் இனிக்கிறாய் மனசுக்குள்ளே...!! கனவில் கன்னங் கிள்ளிப் போறவளே...! என் நினைவை அள்ளிக்கொண்டு போறாய் புள்ள...!! வெண்நிலவாய் நெருங்கி வருவாயா...? காதல் சொல்லித் தருவாயா? இல்லை... வேண்டாம் என்று மறைவாயா? என் இதயம் திருடித் தொலைவாயா? கண்ணே.. கண்ணே... என்னோடு சேர்ந்துவிடு ! என் காதல்.... நீ என்று... சொல்லிவிடு ! நீ அன்றி நான் வாழும் என் வாழ்வில் அர்த்தங்கள் இல்லை என்று... புரிந்துவிடு ! வாழ்வில் வண்ணக் கோலம் நீ போட... இதயம் சின்னச் சின்னத் தாளமிட... என் பக்கம் ஓடி நீ வாடி…
-
- 11 replies
- 1.8k views
-
-
என் சோம்பேறி மனசு செய்த வீரமான செயல் உன்னைக் கண்டதும் ஓடிப்போய் உன்னைத் தொட்டுவிட்டு திரும்பி வராததுதான் * கையசைத்துவிட்டு கல்லூரிக்குள் நுழைந்து விடுகிறாய் நீ விடை பெற்றுப் போகும் கடைசி நாள் மாணவன் போல் வீடு செல்ல மனமில்லாமல் நான் * நம் காதலுக்கு முதல் எதிரி நேரம்தான் பார் நாம் சேர்ந்திருக்கும் போது மட்டும்தான் போட்டி போட்டு ஓடுகிறது * உன்னைக் காதலிக்க வேண்டாம் என்பவர்களை கூட்டி வா ஒரு நிமிடம் நீ இல்லாத என்னை கொடுத்துப் பார்ப்போம் சமாளிக்க முடிந்தால் சமாதானம் பேசுவோம் * என் கைகளுக்கு இதுவும் தேவை இன்னும் தேவை என்னை எதுவும் கேக்காமலே உன்னை அணைத்து பழகி…
-
- 4 replies
- 1.3k views
-
-
கவிதையால் காதல் செய்கிறேன் இந்த கவிதை பகுதி ஒரு தொடர் கவிதை போல் எழுதுகிறேன் ஆனால் தொடர் கவிதை அல்ல .ஒவ்வொரு கவிதையும் தனி தனி அர்த்தமும் கருத்தும் கொண்டது . ஒரே திரியில் பலமுறை எழுதபோகிறேன் நன்றி கே இனியவன் ஏய் வான தேவதைகளே .... மறைந்து விடுங்கள் .... என் தேவதை வருகிறாள் .....!!! ஏய் விண் மீன்களே ..... நீங்கள் கண்சிமிட்டுவதை .... நிறுத்தி விடுங்கள் .... என் கண் அழகி வருகிறாள் ....!!! ஏய் வண்ணாத்தி பூச்சிகளே .... வர்ண ஜாலம் காட்டுவதை .... நிறுத்திவிடுங்கள் ..... என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன்
-
- 16 replies
- 2.2k views
-
-
ஏனிந்தக் கேள்வி ? ----------------------------------------------------------------------------- எப்படியெனப் புரிகிறது. ஏனெனப் புரியவேயில்லை. எந்தப் பதிலாலும் திருப்திகொள்ளாது ஏந்தச் சாக்குப் போக்குகளாலும் ஏமாற்றுப்படாது நிரந்தர விழிப்பிலிருக்குமொரு ஒற்றனைப்போல் கேள்வி மட்டும் தொடர்நது கொண்டேயிருக்கிறது சொந்தப் பதில்கள் இரவற்பதில்கள் சொத்திப் பதில்கள் சுரணையற்ற பதில்கள் குள்ளப் பதில்கள் கூனற்பதில்கள் குதர்க்கப் பதில்கள் குருட்டுப் பதில்கள் குழந்தைப் பதில்கள் வயோதிபப் பதில்கள் அழகிய பதில்கள் அற்பப் பதில்கள் ஆரவாரப் பதில்கள் ஊமைப்பதில்கள் நூதனப் பதில்கள் நொண்டிப்பதில்கள் ஆயிரமாயிரம் பதில்களெனப் பதில் வெள்ளம் பாயும் போதும்…
-
- 5 replies
- 1.8k views
-
-
இசை ஞானி காலத்தை வென்றவர்..! தயை கூர்ந்து இசை ஞானி அவர்களை ஈழ விசயத்தில் இழுக்காதீர்கள்..? அவர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல..! அவர் ஒன்றும் திராவிட/ ஆதி திராவிட அரசியலுக்கு மாற்று அல்ல..! அவரை ஏன் இழுக்க வேண்டும்..? ஈழ அரசியலில்..! கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு இவர் எப்படியும் பொறுப்பாளர் என்ற அவசியப் பொருள் முத்திரை ஏன்..? தடுமாற்றம் கொள்கிறார்களோ..? காலம் பெருவெளி சூனியம் அந்திவெளி வண்ணங்களில் தோன்றும் ராக ஓசைகள் இவை மிஞ்சியவை அல்ல அனைத்தும் என்று தெரியுமா உங்களுக்கு..? பழந் தமிழனின் கொடுந் துயரமோ இசை ஞானி அவர்கள்..? சங்கிலிக்கருப்பு
-
- 3 replies
- 831 views
-
-
இனி என்ன வாழ்க்கை என்ற சோகம் ராகம் வேண்டாமே விடுதலை தீயினை அணைத்திடும் துரோக எண்ணங்கள் வேண்டாமே உணர்வுகள் அழுவதால் வசந்தங்கள் விடியாதே உறவினை இழந்ததால் உறவுகள் முடியாதே நம்பிக்கை ஒன்றே வாழ்வை வெல்லும் நாணயம் ஆகிறதே கண்ணீரைத் துடை மனமே புதுக் காலம் இசை மனமே வெல்லும் நெஞ்சை உருவாக்கு வெற்றி வாழ்வை அரங்கேற்று !!!! (நன்றி முகநூல்)
-
- 0 replies
- 388 views
-
-
மானுட வேட்டை போலில்லை புலிகளின் வேட்டை. அச்சுறுத்தலின்றி அவை தூக்குவதில்லை தம் நக ஆயுதங்களை. புலிகள் அமைதி விரும்புபவை... தனித்து இருப்பவை... தனக்கென எல்லைகள் வகுத்துக் கொள்பவை... தன் எல்லை தாண்டி வராது புலிகள் எப்போதும்... புலிகளுக்கும் உண்டு எல்லை தாண்டா இறையாண்மை புலி இனம் அழிந்து வருவதாக யாரும் சொன்னால்கூட நம்பாதீர்கள்... காடுகளின் கம்பீரம் புலிகள். புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. சிங்கமும் புலியும் ஒரு வனத்தில் வாழ்வதில்லை. சிங்கமும் புலியும் ஒரு போரில் மோதுவதில்லை. மோதினால்... புலிதான் வெல்லுமென்கிறது வனங்களின் வரலாறு. -தாமிரா http://forwardeded.blogspot.com/2008/11/blog-post.html வலைப்பூவில் படித்தேன்…
-
- 12 replies
- 4.4k views
- 1 follower
-
-
கடன் கொடுக்கும் நாடுகளே மானாட மயில் ஆட கடன் வந்து மேல் ஆட ஸ்ரீ லங்கா கொண்டாட கடன் கொடுத்த நாடுகள் திண்டாட தயவு செய்து கடன் கொடுக்காதிர்கள் இப்படிக்கு அனலைதீவன்
-
- 0 replies
- 486 views
-
-
பாற்கடலில் பாவை குளிக்க அதைப்பார்த்துக் கண்கள் களிக்க நனைந்த தேகத்தில் அங்கங்கே மின்னிச் சிரிக்கின்றன மொட்டுக்கள்! மெல்ல மெல்லப் பாலாடை விலக சின்னச் சின்னதாய் சிந்தனை சிதற முழுதான நிர்வாணத்தின் அழகில் சொக்கிப்போகிறது மனசு! பாவையவள் பார்வையாலே எட்டிப்பார்க்கிறது அந்தரங்கம்! ஒளிந்து கிடந்த ஒற்றைத் தென்னைகூட இப்பொழுது ஒளிர்ந்து எழுந்திடுதே! கொஞ்சங்கொஞ்சமாய் முன்னேறி தன் அவசரத்தைக் காட்டுகிறாள்! ஜன்னலைத் திறந்துவைத்தால் என் கட்டில் வரை வருவாள்! காலையில், அவள் கணவன் வரும்வரைக்கும் என் இரவு.... இவளோடு கழியும்! அழகான, இவள் தேகம் புணர்வதினால் என் இதயம்.... இதமாகக் களிக்கும்! காலடியில் கிடக்கும் ஈரமான புல்வெளியை காலையில் பார்க்கும்போது... நேற்ற…
-
- 9 replies
- 3.8k views
-
-
என்ன நியாயம்??? கட்டிக்கரும்பே மரகத மணியே பவழம் பவழம் எம் இதழ்கள் என்று சொன்னவர்களும் நீங்கள்தான் ....... கயல் விழி என்றும் , எம் விழி அம்பால் பெட்டிப் பாம்பாய் அடங்கினோம் என்று , சொன்னதும் நீங்கள் தான் ........ எங்கள் கொடியிடை அசைவில் , உங்கள் மதி தறி கேட்டுப் போனதாய் சொன்னதும் நீங்கள்தான் ........ பாலைவனமாய் இருந்த உங்கள் வாழ்வில் கோடைத் தென்றலாய் நாங்கள் வந்தோம் என்று சொன்னவர்களும் நீங்கள் தான் ...... இப்பிடி, சும்மா இருந்த எங்களை உங்கள் கற்பனை குதிரைகளால் மேய்ந்து விட்டு !!!!!!!! இப்பொழுது மட்டும் மோகம் கலைந்தவுடன் " இல்லாள் " என்று சொல்வது என்ன நியாயம் ??? பி கு : கிட்டடியிலை இல்லாள் எண்டு சொல்லி பொம்பிளையளை மட்டம் தட்டி …
-
- 12 replies
- 1.3k views
-