கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
எனக்கும் அவனுக்கும் வாழ்கையென்னும் விடுதலையில்லா சிறைச்சாலைக்குள் புரிந்துகொள்ளா முரண்பாடு விரக்தியான நாட்கள் கண்ணீர் சிந்தும் கோலங்கள் முகமூடியால் மறைத்துக் கொள்ளும் முரண்பாடு போலியான உறவிற்கள் மலர்ந்து நிற்கும் சின்ன மலர்கள் சிக்கித் தவிக்கின்றது பாசமென்னும் முரண்பாட்டுக்குள் யாரோடும் சொல்ல முடியாச் சோகங்கள் எம் முரண்பாட்டால் நாளைய முதியோர் இல்லத்திற்காய் தயார்ராகின்றது
-
- 16 replies
- 4.3k views
-
-
சிவரமணியின் கவிதைகள் சிலவற்றை எனது பாடசாலை நாட்களில் படித்திருக்கிறேன். நல்ல கவிதைகள்.இவர் எண்பதுகளில் புளொட் அல்லது ஈ.பி்.ஆர்.எல்.எவ். அமைப்பில் இணைந்து இயங்கியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்..சரி யாகத் தெரியாது இவரைப்பற்றிய விபரங்கள் தெரிந்த யாராவது யாழ் களத்தில்இருந்தால் தெரியப்படுத்தவும்..அறிய ஆவலாயிருக்கிறேன்..அவரிற்கு என்ன மனவிரக்தியோ தெரியாது 90ம் ஆண்டளவில் தன்னுடைய கவிதைகளையெல்லாம் கொழுத்திவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டாராம்.இங்கு அவரின் கவிதை ஒன்றை இணைக்கிறேன் அவர் 83ம்ஆண்டு எழுதிய கவிதையொன்று இன்றை காலத்துடனும் ஒத்துப்போகின்றது எழுதிய ஆண்டு: 1983 எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன் புத்திசாலித்தனமான கடைசி மனி…
-
- 16 replies
- 5.9k views
-
-
கவியல்ல இது ஒரு காவியம் தேடியும் கிடைத்திடா தேவதையாய் எண்ணியது தேய்ந்து கட்டெறும்பான கதை சொல்லும் ஜீவகாவியம்…! ஊரின் ஓரத்தில் ஒரு தோப்பு தோப்பிலே குருவியொன்று சிங்காரச் சிறகு விரிக்க சுதந்திர வானம்….! சுதந்திரமாய்க் குடியிருக்க சின்னக் கூடு சுமை தாங்கியாய் சின்ன மாமரம்…! சுந்தரக் கானமிசைக்க தென்றல் போடும் தக திமி தாளம்..! இவை சேர தப்பாமல் தன்பாட்டில் வாழ்ந்தது மனதோடு மகிழ்ச்சி பொங்க….! அன்றொரு வேளை அந்திசாயும் மாலை நெருங்க அருமையாய் வசந்தம் பூத்திருக்க பூமி மகள் அழகு காட்டியிருக்க கண்ணினைக் காட்சிகள் காந்தமாய்க் கவர களம் ஏகியது குருவி….! கண்கொள்ளாக் காட்சிகள் விருந்துகள் படைக்க வாயோடு வந்த கீதம் இசைத்துப் ப…
-
- 16 replies
- 1.6k views
-
-
நான்கு வருடங்களுக்கு முந்தைய பதிவு இது. ஒரு பெருங் கவிஞனின் வாயில் உதிர்ந்த ‘துருப்பிடித்துப் போனவளோ?’ என்ற ஒற்றைக் கேள்விக்கு எழுதுகோல் உதிர்த்த பதில் இக்கவி வரிகள். மீண்டும் மானுட வாழ்வின் அசை போடலில் மீட்பித்துப் பார்க்கிறேன். இங்கு கீழ்க்காணும் கவிவரிகள் நேற்றைய காலங்களுக்கு உரியன. இருப்பினும் இன்றும் சில விடயங்கள் மாற்றமடையாமல் தொக்கி நிற்கின்றன. தூர தேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல். கட்புலன் அறியாக் காற்றே! உட்புலன் அசைக்கும் உந்து பொருளே! உயிர்ப்பில், இயற்கை அணைப்பில் நின்னை உணர்த்தும் உயிர் மூலமே! தூரதேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல் தந்தேன். தாயகக் கவிஞனவன் உலைக்களப்புலவனிடம் உரியபடி சேர்த்து விடு! - இல்லாவி…
-
- 16 replies
- 3k views
-
-
கருணாநிதிக்கு பல்வேறு தலைப்புகளில் பாராட்டு விழா நடத்தியாகி விட்டது. சமீப காலமாக பாராட்டு விழா நடத்தி நீண்ட நாட்கள் வேறு ஆகி விட்டன. அதனால் என்ன செய்யலாமென்று, திமுகவினர் யோசித்த போது அவர்களுக்கு வந்த திடீர் யோசனைதான், “ஊழல் மன்னன்“ என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கலாம் என்ற யோசனை. இதையொட்டி, நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு நம்ப தமிழ்நாடு சினிமா ராஜ்ஜியத்தின் ஆஸ்தான கவிஞர்கள் வைரமுத்துவும் வாலியும் கவிதை வாசித்தால் எப்பிடி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை....இதை நீங்கள் யாரவது கண்டினியூ பண்ணவும்... வைரமுத்து… அன்று சர்க்காரியா சொன்னார். நீ விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவன் என்று. ஆனால் இன்று விஞ்ஞானத்திலேயே நீ ஊழல் செய்திருக்கிறாய். வானில் உள்ள தேவர்களின் எ…
-
- 16 replies
- 4.2k views
-
-
[size=4][size=6]எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..![/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Wednesday, September 5, 2012[/size] [size=4]காலம் எழுதிய வெற்றிகளில் நெருப்பாய் இயங்கிய வரலாறு. இருளும் கடினமும் இயற்கையின் சீற்றமும் அசையாத இரும்பின் இருதயம் உனக்காய் படைக்கப்பட்டிருந்தது. ஒருகாலம் உனக்கான விலை உலகத்தாலும் கொடுக்க முடியாத பெறுமதி. கையுக்குள் வளர்த்து கடமைக்கு விடைதந்த காவியத்தின் கண்ணில் தெரிந்த ஒளியின் வெளியில் ஓர்மத்தை விதைத்து விடைபெற்ற வீரன். ‘செயலின் பின் சொல்’ அதிகாரியாய் , பணியாளனாய் இலட்சியப் போராளியாய் – நீ இயங்கிய தளங்கள் தந்த அனுபவங்களிலிருந்து இன்னோர் உலகின் மூலத்தைக் கண்ட முழுமுதலான். தடைகளகற்றித் தனித…
-
- 16 replies
- 1.2k views
-
-
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கவிதை இதோ! "உணவை மருந்தாக்கு உடம்பை இரும்பாக்கு மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு நோய்த் தடுப்பாற்றல் பெருக்குதல் சிறப்பு கோவிட் - 19 கொல்லுயிரியை எழுந்து எதிர்கொள் இந்திய நாடே!" உணவை மருந்தாக்கு உடம்பை இரும்பாக்கு மூச்சுப் பைகளில் நம்பிக்கை நிரப்பு நோய்த் தடுப்பாற்றல் பெருக்குதல் சிறப்பு கோவிட் - 19 கொல்லுயிரியை எழுந்து எதிர்கொள் இந்திய நாடே! #coronavirusindia #CoronaVirusUpdate — வைரமுத்து (…
-
- 16 replies
- 2.5k views
-
-
மறக்க முடியவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை... காற்றிலும் கண்ணீரிலும் தேடுகிறேன் உன்னை உன் நினைவுகள் கொல்கின்றன... உன்னுடன் கழித்த அந்த நாட்கள் நகைக்கின்றன மறக்க மறுகிறது மனம் உறங்க மறுக்கிறது விழிகள் சிரிப்பென்பது என்னவென்றே தெரியாமல் போய்விட்டது... இப்போதெல்லாம் என் இரவுகள் கனவுகளில் அல்ல கண்ணீரில் நிறைகின்றன... நினைத்த போதெல்லாம் வந்தாய் அன்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன் என்றாவது ஒரு நாள் வருவாய் என்று நிச்சயம் நீ வருவாய் என் இதயம் கலங்குவது தாங்காமால் நீ வருவாய் எல்லா நிராசைகள் போலவே இதுவும் ஒரு நிராசை இருந்தும் நினைத்திருபேன் நீ வருவாய் என இவையனைத்தும் நடக்காவிடின் நான் இறைவனிடம்…
-
- 16 replies
- 2.4k views
-
-
-
- 16 replies
- 2.9k views
-
-
ஏணி ..........ஏன் இனி?? அழகாய் அரவணைத்தும் ஆக்ரோசத்தோடும் விருப்போடும் வெறுப்போடும் செருப்போடும் செருக்கோடும் எப்போதும் எனை நீ மிதிக்கலாம் என்னால் ஏற்றி விடவும் இறக்கவும் மட்டுமே முடியும் என்னால் என்னிடத்தை விட்டு ஏறவும் முடியாது ஏறி மிதிக்கவும் முடியாது ஏறி விட்ட ..நீ இறங்கும்வரை காத்திருக்கவே முடியும் ஏனெனில் நான் ஏணி.... அய்...எனக்கும் கவிதை எழுத வந்திட்டுது.
-
- 16 replies
- 8.1k views
-
-
சில்லென்ற காற்று மார்புக்குள் நுழைந்து.. சில்மிஸம் செய்ய.. ஈரமண்ணில் கால்கள்.. ஆழப்பதிந்து.. நடையைத் தடை செய்ய.. உள்ளேறிய போதை ஜிவ்வென்று... பறக்கச்செய்ய... கடலலைகளின் பேரிரைச்சல்.. குழந்தைகளின் கூச்சல்.. சுண்டல்காரன்..கத்தல் எல்லாம் காதுக்குள் நுழைந்து..இதயச் சுவருனுள்..எதிரொலி செய்ய.. தள்ளாடி நடந்த கால்கள்.. கல்லில் மோதி..கீழே விழுந்து..மெல்லத் தவழ்ந்து.. கரையேற்றி விட்ட படகோடு சாய்ந்து.. வயிற்றுக்குள் குமட்ட.. எடுத்த வாந்தியோ.. சட்டையெல்லாம்... தொத்திக்கொள்ள.. நாற்றம் மீன்.. நாற்றத்தை தூக்கி சாப்பிட...தலைசுற்ற.. இருட்டும் கடல்.. நிலவோடு ஏளனம் செய்ய.. பக்கத்தில் யாரோ.. "இந்த அலையும்.. நீயும்..ஒ…
-
- 16 replies
- 1.7k views
-
-
பள்ளி என்னும் மூன்றெழுத்தில் - கூடி கல்வி என்னும் மூன்றெழுத்தில்- சேர்ந்து அன்பு என்னும் மூன்றெழுத்தில்- இணைந்து பிரிவு என்னும் மூன்றெழுத்தில்- தவிக்கின்றோம்...
-
- 16 replies
- 8.8k views
-
-
உரிமையுள்ள ஒன்றிற்காய் உளம் ஏங்கி உயிர் துடிக்கும் கருணையற்ற மனிதருக்கு காணும்வலி கணம்கூட உணராது நெஞ்சில் வெடித்தெழும் நேசத்து நிகழ்வுகளின் சொல்லொணாத் துயர் சுமந்து சொல்லி அழாச் சுமைகளுடன் காத்திருக்கும் கணங்கள் கவி சொல்லிட முடியாது காலாண்டு கூடவில்லை கடல்போல் அன்பு காட்டாற்று வெள்ளமாய் கரையுடைக்க காலத்தின் வரவுக்காய் காத்திருக்க மட்டுமே முடிகிறது முடிவின்றி முடிவேதுமில்லா அண்டப் பெருவெளியில் அரவமற்று அனாதையாய் நிற்பதாய் உணர்கையில் உள்ளத்தெழும் உணர்வின் கொடுமையில் உறக்கம் மட்டுமா தொலைந்து போவது???
-
- 16 replies
- 1.3k views
-
-
ஆதவனாய் அவதரித்த மாதவ அவதாரங்கள் பிரபஞ்சம் ஆளும் பிரபாவின் பிள்ளைகள் தாயின் அன்புதனை தலைவரில் கண்டவர்கள் சூரியனாய் ஒளிதந்து உரிமைக்கு உயிர்தந்து கார்த்திகை விளக்கான களம்கண்ட வேங்கைகள் வாழும் வயதினிலே வாழ்வை எமக்காக வழங்கிய வள்ளல்கள் பூமிக்கு மழைதரும் வானம் போல தம்மையே தாய் நிலத்துக்கு விதையாகத் தந்தவர்கள் மண்ணுலகில் தமிழ்வாழ விண்ணுலகை நிறைத்தவர்கள் தம் சுவாசம் தனை ஈந்து ஈழத்தாயை உயிர்ப்பித்த ஈழத்தின் விடி வெள்ளி கார்த்திகை மைந்தர்கள் http://www.thayakaparavaikal.com/kavithaigal.php
-
- 16 replies
- 2.2k views
-
-
கட்டழகி தந்த காயம்.... கவிதை...... என் பார்வையில் மயங்கி பதிலுக்கு சிரித்தாள் நானும் சிரித்தேன்........ பக்கத்தில் வந்தாள் நானும் மகிழ்ந்தேன்...... தன் பெயர் கூடச் சொன்னாள் என் பெயர் நானும் சொன்னேன்..... ஓர் நாள் பழக்கத்தில் ஓர் உடல் ஆனோம்...... ஒன்றாகக் கை கோர்த்து பூங்காவில் நடந்தோம்..... சந்தோசத்தில் நாம் எமை மறந்து நடக்க.... கால் தடம் புரண்டு அவள் ஆற்றினில் விழுந்தாள்...... எனக்கு நீச்சல் தெரியாது இருந்தும் என் உயிரைக்காக்க ஆற்றினில் குதித்தேன்... என்னால் நீச்சல் முடியாமல் நீரின் மேலுக்கு வந்தேன்... தண்ணீரில் விழுந்த வலியும் தாங்காமல் என் மூக்கிலிருந்து நீரை எடுத்தேன்... என்னால் முய…
-
- 16 replies
- 2.4k views
-
-
மௌனம் மௌனம் தேவைதான் - ஆனால் காலமெல்லாம் மௌனிக்காதே! நாவைப்புூட்டி வைத்தல் நாளைய சந்ததிக்கு நல்லதெனில் மௌனத்தைக் காத்துக்கொள்! தேவை ஏற்படின் மோனம் கலையலாம். தென்றலை மீறிப் புயலாவும் வீசலாம். மௌனம் நிலைக்கும்வரை - அதன் மகிமை புரியாது. மாறி எழுந்த பின் மௌனிக்க முடியாது.
-
- 16 replies
- 2.7k views
-
-
அம்மா! தொலைவில் ஒரு குரல் இன்னும் எதிரொலிக்கின்றது பய பீதியில் உயிர்கள் பரிதவிக்கின்றது கொலை வாழுக்கு முன்னால் குற்றுயிராய் முனகும் குரல்கள் உயிருடன் எரியும் உடல்களில் இருந்து மானுட பாசைகளுக்கு விழங்காத உயிர்களின் ஓலம் மூச்சோடு திணறுகின்றது கண்ணில் தூசி விழுந்தால் கண்கள் வலித்து கலங்கும் எம் உறவுகளின் கண்களையே தோண்டி எடுத்த போது மானுடம் நிர்வாணமானது வன விலங்குகள் சிங்களத்தின் முகத்தில் காறித் துப்பின கணங்கள் அவை கறுப்பு யூலை அம்மா……………! அருகில் ஒரு குரல் இன்னும் வங்காலையில் சாமத்தின் நிசப்தங்களை கிழித்தெறிகின்றது அல்லைப்பிட்டியில் பிஞ்சுகளின் குரல் ஊமையின் அலறலாய் உலக மனட்சாட்சியிம் நிய…
-
- 16 replies
- 2.4k views
-
-
(நண்பன் ஒருவன் 2005இல் தனது முதற்காதல் பற்றிச் சொன்னதில் அவனது வலியினை கவிதையாக்கினேன்) என் சுவாச அறைகளின் சுழற்சியாய் இருந்தவளே ! காதல் வார்த்தையையே கௌரவப்படுத்திய கற்பூரமே. கடைசியாய் நீ தந்த கடிதம் என்றோ நீ சொன்னது போல கைகூடாத காதலின் சாட்சியாக.... உனது கண்ணீர் முழுவதையும் கட்டியனுப்பிய கடலது. கட்டுநாயக்கா நான் தாண்ட நஞ்சு தின்ற என் காதலியே ! எங்கேயடி இருக்கிறாய் ? கசங்கிய உன் கடைசிக் கடிதத்துடன்.... கண்ணீரைத் துடைத்தபடி நான்.... முதற் காதல் - நீ தந்த முத்து(த)க் கையெழுத்துக்கள் இன்னும் விரல்களில்.... வாசமடிக்கிறது. கூடப்பிறந்தவர்க்கும் , உன்னைக் காதலிக்க உயிர் தந்தவர்க்கும் அர்ப்பணமாய் என் காதல். அம்மாவி…
-
- 16 replies
- 1.2k views
-
-
[size=5]" ஈழ மரத்தடித் தேனீ "[/size] [size=5][/size] வாடி விழுந்த பூவுக்குள் சிறுதேனீ தேன்குடிக்க முயல்கிறது! தேடி வைத்த தேன்கூடு ஏதுமன்றி தனிமையில் காய்கிறது! செத்து விழுந்த சருகுகளுக்குள் சில காலூன்றி எழும்பி விழுகிறது! பறக்க முனைந்து பாதி சிறகுகளை வலிய விரித்து தவழ்கிறது! பல்லிகளுக்கும் ஓணான்களுக்கும் அழையா விருந்து நடக்கிறது! ஆடிப்பாடி பறந்து திரிந்த கூட்டம்… சிறுகச் சிறுக வருடங்களாய் சேர்த்து வளர்த்த தேன்வதை… ரீங்காரத்தோடு நிமிர்ந்து நின்ற கூடு… யாருடைய அகங்காரத்தால் வதைபட்டு அழிந்ததுவோ…? நன்றி : கவிதையின் கவிதைகள்
-
- 16 replies
- 1.1k views
-
-
-
கார்த்திகைப் பூக்களின் யாத்திரை இத் தேவகுமாரர்களின் சீரான பாதம் பட்டு புதை குழிகள் கூடப் புதுப்பிறப்பெடுக்கும் இவர் சுவாச வெப்பங்கள் மோதும் திசையெங்கும் வீரவிடுதலையின் வேதங்கள் சொல்லும் ஆர்ப்பரித்துப் பொங்கி எழும் ஆழிமகள் கூட இவர் அக்கினிப் பார்வையிலே அரைவினாடி மூச்சடங்கும் வானத்துத் தேவதையும் இவ்வனதேவதைகளுக்கு தூவானமாய் வாழ்த்தினை தூவி வழியனுப்பும் பூவரசம் பூவும் இப் புனித யாத்திரைக்கு சாமரம் வீசிவிட்டு தனக்குள்ளே சிலிர்க்கும் இக் காவிய நாயகர்கள் கவிதை வரிகளுக்குள் ஜீரணிக்க முடியா திவ்விய பிரபந்தங்கள்
-
- 16 replies
- 2.7k views
-
-
முத்துக்குமரா பார் நீ பாரில் தமிழீழ விடுதலை முத்துக்குமரா எங்களுக்காக உன்னுடல் வெந்தாய் விடுதலைக்காய் வித்தானய் வெந்தணல் மீது உன்னுடல் முத்தே உன் நினைவு எம்மை வாட்டுதய்யா! விடுதலை வித்தே ஈழ மக்களின் சொத்தே! உன் உறவுகள் நாம் எம் இனமடா நீ தீ வைத்தது உனக்கல்ல பேரினவாத பேரசுகளுக்கு வைத்தாய் ஈகை போராளியே உன் ஈகம் தமிழருக்கு விடுதலை தீயை விதைத்தடா பரவியது தீ பார் பாரெங்கும் விடுதலை பெறும் வரை உன் தீ அடங்குமாய்யா! எம் மனங்களில் அது விலகுமாய்யா! பார் நீ பாரில் தமிழீழ விடுதலை வா நீ வந்து பார் அதுவரை நாம் ஓயோம் சரவணை மைந்தன் http://www.eelampoem.tk/2015/01/muththu.html
-
- 16 replies
- 1.1k views
-
-
என் குடும்பம்..! மீசை அரும்ப ஆசை முளை விட அலை பாயும் ஆண் மனம் பெண் மனம் பொழுதொரு காதல் காமம் கண்டு கரங்கோர்க்க அற்ப சுகம் தேடிய உடலிணைவின் கதறலில் அழுகையில் உறவுகள் பிறக்கும் அதுவே குடும்பமாக.. மானிட வாழ்வு அடங்குகிறது குறுகிய விட்டமுடன் வட்டமாக..! ஓமோன்களின் ஆசைக்கு அடங்கும் சுயநலப் பொதிகளாய் எங்கும் மானிடர் மனங்கள். எல்லைகள் கடந்து.. தீட்டிய சம்பிரதாயங்கள் தாண்டி.. சிந்தனை விரித்துப் பறந்து வா... மனதை அகட்டி வா.. காண்பாய்.. அன்பின் பரிசாய் அளந்து கட்டி அன்பளிக்கப்பட்டவை.. அன்புக்கு ஏங்கும் குழவிகளாய்.. தந்தை தாயிருந்தும் அநாதைகளாய்... போர்களின் உச்சரிப்பில் உறவுகள் சிதைய …
-
- 16 replies
- 3.8k views
-
-
விரிந்து கிடக்கும் பூக்களில் தேன் குடிக்கும் வண்டினைப்போல்... திறந்து வைத்த ஜன்னலோரத்தில் நான்!!! அதிசயம் ஆனால் உண்மை...! பக்கத்து வீட்டில்தான் பால்நிலா வசிக்கிறது!!! நிலவுக்கும் எனக்குமான சில அடி தூரங்களும் பலகோடி ஒளியாண்டு இடைவெளியாய்த் தெரிகிறதே!!! இத்தனை நாளாய்ப் பார்க்காமல் எத்தனை அமாவாசைகளை கடந்திருப்பேன்!!! ஏய் நிலவே...!!! பறந்து போகும் என் எண்ணங்களுக்கு சிறகுகளை இலவசமாய்... நீதான் கொடுத்தாயோ??? மொத்தமாய் மறந்துபோகிறேன் என்னை நானே..!!! வீசுகின்ற பருவக் காற்றை நீதான் அனுப்பி வைத்தாயோ??? மெதுவாய் என் பக்கம் வந்து உன் பருவத்தின் வாசனையை பக்குவமாய்ச் சொல்லுதடி!!! அங்கே நீ எட்டிப் பார்த்துச் சிரிக்கையிலே இங்கே கூடுவிட்டு நழுவுதடி எ…
-
- 16 replies
- 1.3k views
-