கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஆனந்த விகடனில் இந்த வாரம் (18.11.15) "சிறுவர்களின் வீடு" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிறுவர்களின் வீடு சுற்றுச்சுவரில் ஒரு சிறுவன் பச்சிலையால் ஸ்டம்ப் வரைகிறான். வாசலில் ஒரு சிறுவன் பாண்டி விளையாடுகிறான். முற்றத்தில் ஒரு சிறுவன் மழையிலாடுகிறான். கூடத்தில் ஒரு சிறுவன் பல்லாங்குழி விளையாடுகிறான். சமையலறையில் ஒரு சிறுவன் சாமிக்குப் படைப்பவற்றை ருசிபார்க்கிறான். கழிப்பறையில் ஒரு சிறுவன் …
-
- 11 replies
- 2.2k views
-
-
ஆனந்த விகடனில் இந்த வாரம் (20.1.16) "மனசுக்குள் பனித்துளி" என்ற எனது கவிதை தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ளது, என்பதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மனசுக்குள் பனித்துளி ஒரு குழந்தையைக் கைப்பிடித்துக் கூட்டிவருவதைப்போல் இந்தக் குளிர்க்காலத்தை என்னிடம் கொண்டுவந்துவிட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டது மழைக்காலம். நெற்பயிரின் நுனியில் ஒரு பனித்துளி முழு வயலையும் வானத்தையும் தலைகீழாகப் பிரதிபலிக்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக கதிரின் வெம்மையில்ஆவியாகிறது. மறுநாளும் அதே நெற்பயிரில் அதேபோல் பனித்துளி …
-
- 2 replies
- 996 views
-
-
ஆனந்த விகடனில் இந்த வாரம் (26.11.15) "நடு விழா" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நடு விழா! என்னைக் கொன்று அழைப்பிதழ் அடித்தார்கள் என்னைக் கொன்று இடம் அமைத்தார்கள் என்னைக் கொன்று மேடை சமைத்தார்கள் என்னைக் கொன்று இருக்கை செய்தார்கள் என்னை நட உன்னை அழைத்தார்கள்! நன்றி: ஆனந்த விகடன்.
-
- 2 replies
- 2.2k views
-
-
ஆனந்த விகடனில் இந்த வாரம் (28.10.15) "பூம்பாவாய்" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பூம்பாவாய் பூம் பூம் மாடு வாசலில் நிற்கிறது. அதன் அலங்கார உடை கண்டு அறியாதார் அதிசயிப்பர். கொம்புகளின் கூர்மை குத்திக் கிழிக்குமோ என்று குழந்தைகள் அஞ்சும். பூம்பூம் மாட்டுக்காரன் வந்துவிட்டால் செய்கிற வேலையை விட்டுவிட்டு ஓடிவந்து பத்து ரூபாய் கொடுப்பாள். நான் அந்த மாட்டுக்கு இரு வாழைப்பழங்கள் கொடுப்பேன் அவளிடம் கேட்டுக்கொண்டு! (நன்றி: ஆனந்தவிகடன் 28.10.15)
-
- 6 replies
- 1.8k views
-
-
ஆனந்த விகடனில் சென்ற வாரம் (30.12.15) "திருடன் விளையாட்டு” நிலாக்கனவு" என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன, என்பதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் திருடன் விளையாட்டு ராஜா ராணி மந்திரி போலீஸ் திருடன் சீட்டெழுதிப் போட்டு விளையாடியது சண்டையில் முடிந்தது. அழுதுகொண்டே ஓடி வந்த நிலா சொன்னாள்.... “ராஜா - ராணி மந்திரி - போலீஸ், எல்லாரும் திருடன்!” ந…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆனந்த விகடன் (15.2.17) இதழில் வெளியான எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நகரத்தின் புதிய தந்தை எல்லாவற்றையும் மாற்றப்போவதாக வாக்களித்து நாற்காலியைக் கைப்பற்றிய நகரத்தின் புதிய தந்தைக்கு அவர் பராமரிக்கவேண்டிய பிள்ளைகளின் கணக்கு கொடுக்கப்பட்டது. சாதுவானவர்கள், அடங்காதவர்கள், ஊதாரிகள், அயோக்கியர்களென அனைவரின் புள்ளிவிவரம் அவரிடமிருந்தது. அடங்காதவர்களை அவர் கலாச்சாரக் காவலர்களாக்கினார். ஊதாரிகளுக்கு வெகுமதிகள் கொடுத்தார். சாதுவானவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்தார். …
-
- 6 replies
- 2.4k views
-
-
மெல்லென மாருதம் சில்லென வீச மெல்லிடை மேனியாள் கருவறை கூச வல்வையில் காந்தள் மலர்களும் விரிய வில்லென வீரத் திருமகன் உதித்தனன் நடந்த தின் நிகழ்வு ஐம்பத்தி நான்கினில் எழுநதது வீரமாய் எழுபத்தி ஐந்தினில் மலர்ந்தது புலிகளாய் எழுபத்தி யாறினில் பிளந்தது கண்ணியாய் எண்பத்தி மூன்றினில் மெல்லிய மாருதம் சூ றா வளி யாகிட வல்வைத் திருமகன் வனத்திடை புகுந்திட சொல்லிடக் காரணம் வையகம் மறுத்திட எல்லைகள் தாண்டின மெல்லிளங் குஞ்சுகள் அயலவன் நாட்டினில் பாசறை அமைத்தனர் சயனமும் துறந் தவர் சன்னத்தம் பயின்றனர் உயரிய நோக்குடன் இணைந்தனர் தோழர்கள் பயமறியா தமிழ் புலிப்படை அமைத்தனர் மதிமுக நங்கை பாசறை புகுந்தனள் மதியுரைத்தவரின் சொற்படி நடந்தனள் கதிர்க் கரன் க…
-
- 5 replies
- 1.5k views
-
-
மென்மதி மலர்மீது பூம்பனித் துளிகள் தேனி சிறகசைக்கத் துளிகள் ஒன்றாயின மஞ்சள்த் தேனியின் காலின் கறுப்பிற்கு மகரந்தச் செம்மஞ்சள் முறுவலை என்முகம் முளுதாய்ப் பிரசவித்தது. மலையில் உருளும் பனியருவி போல நேரம் உருண்டு தொலைந்தது கூடவே மாயையும் கரைந்துபோனது நிறம் மணம் மறைந்து ஆவி ஒன்றென ஆகி நின்றோம் எரியும் கட்டையோடு பிறிதொரு கட்டைபோடின், ஒரே நெருப்பு இரண்டிலும் எரிவதுபோல் தேனியும் மென்மதியும் மகரந்தமும் என்னுசிரும் ஜோதியில் ஒன்றாய்ப் புரிந்து கிடந்தன எங்கும் பரந்த முடிவற்ற வெளி ஆதியும் அந்தமும், அடியும் முடியும், நேரமும் மரித்த வெளி அருவத்துள் உருவத்துள் அனைத்துள்ளும் பரந்த ஒரே வெளி கடலிற்குள் உப்பற்ற நீர்த்துளி இல்லை இவ்வெளிக்குள் துளிகள் இல்லை, ஒ…
-
- 6 replies
- 932 views
-
-
ஆனந்தபுரம்: நஞ்சுண்ட வீரம் ஓரினத்தை அழிக்கும் யுத்தத்தில் சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றில் ஈற்றில் நஞ்சை ஆயுதமாக்க உயிரை வேலியாக நிலத்தில் ஊன்றி தடுத்து நின்றனர் போராளிகள் வெற்றியடைந்த எண்ணற்ற சமர்களின் கதைகளை அலங்கரிக்கும் கனவு வீரர்களின் கருணையான முகத்தை அன்புறைந்த வார்த்தைகளை சனங்களுக்காய் களமாடும் வீரத்தை கடக்க முடியா நஞ்சு தன்னலமற்று நஞ்சருந்திய போராளிகளின் கனவுகளால் பச்சை நிறமானது நிலம். பொறிக்குள் வைக்கப்பட்டிருந்த எல்லா வகையான தந்திரங்களையும் முறியடிக்க நெடுநேரம் போராடினார் சூழ்ச்சியால் அபாயமாக்கப்பட்ட நஞ்சு வலயத்தில் காற்றுக்குத் தவித்தனர் குழந்…
-
- 0 replies
- 984 views
-
-
யாழ் நகர் இந்துக்கல்லூரி பல கலை பயில் கழகமும் அதுவே தமிழர் தலை நிமிர் கழகமும் இதுவே கீதம் இசைத்த கல்லூரி...! நல்லூரின் வீதியிலே இராசையா திலீபனை பட்டினிப் போரிலே கிடத்திய கல்லூரி..! பொன்னம்மான் தொடங்கி... பல நூறு வேங்கைகள் தமிழீழக் களத்தில் அணிவகுக்க அழகு பார்த்த கல்லூரி..! ஒப்பரேசன் லிபரேசனிலே ராதா என்ற சாதனையாளனை சரித்திரமாக்கிய கல்லூரி..!! இன்று.. கிரிக்கெட் தொடர் என்று ஆனந்தாவோடு போடுவதென்ன.. சதிராட்டமா..???! ஆனந்தாவின் சிங்கள மைந்தர்கள் கோத்தபாய முதல் பொன்சேகா கண்டு பசில் ராஜபக்ச வரை.. பேரினச் சிங்களச் சேனையின் மூத்த இனவெறியர்கள்..! அன்னையே தெரியுமா அந்தச் சேதி உந்தனுக்கு..! தமிழினக் கொலையின் போர்க்குற்றவாளிகள் வேறு யா…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஆனால் நீங்கள் துரோகிகள். (சாந்தி நேசக்கரம்) ----------------------------------------- வீரமென்போம் விடுதலை தாகமென்போம். போராடிக்களம் வென்ற வேங்கைகள் கதைகள் சொல்வோம். ஓயாத எம் போர்க்குணத்தை உலக அரங்கில் ஒலிக்கச் செய்வோம். நினைவு தினங்கள் ஒன்றையும் மறக்க , தவற விடோம். கவனமாய் கவிபடித்துக் கண்ணீர் வடித்து தேசியத்தின் பொருளைரைப்போம். செல்பியெடுத்துச் செல்லுலாபேசிக்குள் சேமித்து முகங்களை சமூகவலைகளிலே பகிர்ந்து சத்தியம் செய்வோம். வெல்வோம் வீரம் எங்கள் முகம் போராட்டம் எங்கள் பெருங்கொள்கை. புலத்திலிருந்து போராடுவோம். குடியெல்லாம் போர் தின்னக்கொடுத்து கடன்பட்டு கப்பலேறி புலம்பெயர்ந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒரு ஆங்கில கவிதை. நான் சிறுவனாக இருந்தபோது, இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. இளைஞனான போது ஊரைத் திருத்த முனைந்தேன், முடியவில்லை. குடும்பத் தலைவன் ஆனபோது, குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன், இயலவில்லை. தந்தையான போது, பிள்ளைகளை மாற்றிவிட துடித்தேன், எவரும் என் பேச்சை கேட்கவில்லை. இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக, "நான் கொஞ்சம் மாறியிருக்கலாம்" என்று மரணப் படுக்கையில் தான் புரிகின்றது எனக்கு, ஆனால் நேரம் கடந்துவிட்டது..... ----------------------------------------------------------------------------------------யாஸிர். இடுகையிட்டது யாஸிர் அசனப்பா. https://civilyasir.blogspot.com/2011/09/blog-post_18.html
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
பஸ்சில் போனாலும் - எனக்கு கப்பலில் போவது போலவே இருந்தது. அலைகள் இருக்கவில்லை - ஆனால் ஆட்டம் இருந்தது. குன்றும் குழியுமான அந்த வீதிகளில் மழை நீர் தேங்கி... ஓரத்து வாய்க்காலோடு ஒன்று சேர்ந்து குளக்கரையை...நோக்கி சலசலக்கிறது. லொறிகள் ஒன்றிரண்டு ஆங்காங்கே புரண்டு கவிண்டு கிடந்தன. இருபக்கமும் நாட்டப்பட்டிருந்த விளம்பரப்பலகைகளிலும்... சேறு படிந்து புது வர்ணம் பூசப்பட்டிருந்தது. இடையிடையே "நன்றி மீண்டும் வருக " என்பது மட்டும் மகுட வாக்கியமாக... பொறிக்கப்பட்டிருந்தது. குலுக்கிற குலுக்கலில் குடல் வெளியே வந்து.. விடும் போல் இருந்தது. சாளரம் ஊடாக சிலர் கழுத்தை நீட்டி வாந்தி எடுத்தார்கள். பலர் இருக்க முடியாமல் துள்ளித்துள்ளி…
-
- 6 replies
- 955 views
-
-
கந்தகத்தூள் வாகனத்துடன் கலகலப்பாய் சென்றவரின் தூல உடம்பு சுக்கு நூறானது. விடுதலைத் தாகத்தால் வீறுகொண்டெழுந்து வெளியேறியது ஆன்மா காடு மேடெல்லாம் கடந்து களிப்புடன் மிதந்தது. எம்; மக்களைக் கொன்றவரை நான் கொன்றேன். என் இனம் விடுதலை பெறும் வரை நான் சாந்தியடையேன் என சபதம் எடுத்துச் சத்தியம் செய்தது. ராசபக்சாவின் இரத்தப் பிசாசுகள் முள்ளி வாய்க்காலை முற்றுக்கையிட்டு தமிழரின் இரத்தத்தால் தனக்குத் தானே அபிசேகம் செய்த வேளை பதபதைத்துத் தவித்து பற்பல ஆன்மாக்கள் கிழம்பின. எங்கள் தவிப்புப்போல், எங்களை அழித்தவன் தவிப்பான்; இதுதான் நியதி எனச் சாபம் போட்டு, துயிலும் இல்லத்தை சுற்றிய ஆன்மாக்களைக் கட்டித் தழுவி தங்கள் தவிப்பைக் கொ…
-
- 0 replies
- 592 views
-
-
தென்னாபிரிக்காவின் சேரிக் குடிசைகளின், கறள் படிந்த கூரைத் தகரங்களின் கீழும், சூரிய ஒளி நுழைய இயலாத, செம்மண் குடிசைகளின் இருட்டுக்களிலும், பெரு வீதிகள் குவிகின்ற, கூடார வளைவுகளின் கீழ்த்தளங்களிலும், தினமும் பசித்திருக்கின்ற, மனிதர்களின் வெற்று வயிறுகளிலும், உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்! ரொபின் தீவின் கரை தொடுகின்ற, கடலலைகள் எழுப்பும் அழுகுரலிலும், சுண்ணாம்புக் கற்களில் சம்மட்டிகள், செதுக்கிய துவாரங்களில் புகுந்து, வெளியில் வருகின்ற அனல்காற்று, எழுப்புகின்ற அவலம் கலந்த ஓசையிலும், ஆருமற்று அனாதைகளாய் இறந்து. புதைந்து போன சிறைக் கைதிகளின், உக்கிப்போன எலும்புக்கூடுகளிலும், உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்! காவலர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, கடல் வெளிக…
-
- 4 replies
- 667 views
-
-
ஆபிரிக்காவின் விடிவெள்ளியே மண்டேலா ! நிறவெறிக்கெதிராய் நெருப்பெடுத்த கறுப்புச் சுடர். காலம் ஆபிரிக்க இருளகல கைபிடித்தேற்றிய பேரொளி. இருள் கொன்று ஆபிரிக்கர் ஓளிகொண்டெழ உதித்த மூத்தவன் மண்டேலா. இனவிடுதலையை உயிராய் கொண்டதால் - நீ இருபத்தேழு வருடங்கள் இரும்புக்கம்பிகளில் அடைபட்டு வெளியில் வந்த போது நீயே உலக விடிவெள்ளியாய் ஆகினாய். போராடும் தேசங்களின் வழிகாட்டியாய் ஒளியூட்டிய இரும்பு. இறந்து போனாயாம் இன்றைய செய்திகள் உன்னையே நினைவில் உடுத்திக் கொள்கிறது. தங்கச் சூரியன் எங்கள் தலைவன் உன்னையும் சொல்லியே உருவாக்கினான் தமிழனை தமிழீழ விடுதலைப்போரை வரலாறாக்கினான். உனக்கு நிகராய் உனக்கு நேராய் வாழ்ந்த எங்கள் தலைவனை உன்னில் காண்கிறோம் உலகில் வாழ்…
-
- 6 replies
- 784 views
-
-
நெருடல் தந்த அகச் சிக்கல் பூமிப் பந்தில் புதியதோர் உலகம் வாரிச் சுருட்டிய மன அழுத்தம் நெம்பி மனமது விகல்பி நைந்து போயினவாம் நமதான வாழ்வாக! விரும்பிக் கேட்ட நிலையா? இடர் நீயாகத் தந்த வாழ்வாச்சு! உந்தன் பிறப்பு சாசுவதமாயின,; எந்தன் வாழ்வு அசுவதமாவோ? எமதான இறப்பில்,அதுவான இழப்பில், உமதான வாழ்வு சிறப்பாகும் என்ற நினைவுன்னை, சிதைவாக்கும் உண்மை சிந்தை கொள மறவாதே! உனதான வாழ்வுரிமை எமக்கானதுமாகும் இதை நீ மறுக்க கறுப்பாகும் உன் வாழ்வும்.; எமதான நிலத்தில் ஏகமாக நீயா? நமதான உரிமை நாதியற்று போமா? ஆனதான வாழ்வே ஆதியற்று போமா? வருடல் என்பது உனதான ஆத்மா! மருகல் ஒன்றே தமிழனவன் வாழ்வா! விரிதல் ஒன்றே எமதான ஆற்றல், பிரிதல் ஒ…
-
- 0 replies
- 592 views
-
-
நேற்றிரவு நிறையப்பேர் நித்திரை கொள்ளவில்லையென சொல்லினர்... அவன் விழிகள் வேட்டை நாயைப்போல வேட்டையாட துரத்துவதாயும் கொடும் கனவொன்றில் பெரும்பாம்பொன்றின் வாயில் சிக்கியதாயும் துப்பாக்கி முனையில் நானே நிற்பதைபோலாயும் அத்துணை பயத்திலும் ஏதுமற்ற ஞானியைப்போல எப்படி இயன்றதென்றும் இன்னோரன்ன புகழ்தலும் பிதற்றலும்,இரங்கலும் எள்ளலுமாய் நேற்றிரவு நிறையப்பேர் நித்திரை கொள்ளவில்லையென சொல்லினர்... எனக்கு, ஒவ்வொரு இரவும் பல்லாயிரம் வன்னி இரவுகளை நினைந்தும்,கதைத்தும்,அழுதும்,அரற்றியும் புலர்கிற பொழுதெலாம் புத்திரர் நினைப்பில் இதுவும் இன்னோர் இரவே....
-
- 2 replies
- 790 views
-
-
ஆண்டவன் என்றனர் சிலர் அரோகர போட்டனர் பலர் அவதாரம் என்றனர் சிலர் அடிமையானார் பலர் மகான் என்றனர் சிலர் மயங்கினோர் பலர் மகாத்மா என்றனர் சிலர் மன்டியிட்டனர் பலர் பாபா என்றனர் சிலர் பஜனை வைத்தனர் பலர் மனிதன் என்றனர் கேள்விகள் எழுந்தன என்ன மதம் என்ன மொழி என்ன சாதி அசியனா ஆப்ரிக்கனா ஜரோப்பியனா.............. ஆயிரம் கேள்விகள்
-
- 9 replies
- 1.6k views
-
-
ஆயிரம் தான் கவி சொன்னேன்--அன்னையருக்கு சமர்ப்பணம் https://www.facebook.com/photo.php?v=864189466928913
-
- 0 replies
- 966 views
-
-
ஆயுத கப்பல் வருகுது......!!! கடலில வருகுது கப்பலு கனரகம் தாங்கிய கப்பலு.... போர்க்கலம் ஆயிரம் தாங்கியே போருக்காய் வருகுது கப்பலு... அரபிக் கடலதை தாண்டியே அசைந்து வருகுது கப்பலு.... வின்னிடை பாயும் கணைகளும் தாங்கியே வருகுது கப்பலு.... கனரக ஆட்லெறி கனமதாய் காவியே வருகுதே கப்பலு.... கரிகாலன் படையனி களமதை கனம் பாக்க வருகின்ற கப்பலாம்..... சிங்கள பகையதை சிதைத்திட அந்தோ சிரித்தே வருகுதாம் கப்பலாம்.... சுதந்திர தீபம் ஏற்றிட அந்தோ சுதந்திர கப்பல் வருகுதாம்.... வருகுது கப்பல் வருகுதாம் பகை வஞ்சகம் தீர்க்க வருகுதாம்.... விரைவினில் ஈழம…
-
- 8 replies
- 2.3k views
-
-
என் கவிதையின் சொற்களைக் கொண்டு பழைய காலத்தை மீட்க முடியுமாவென்று கேட்கிறார்கள் பசித்த நிலங்களுக்கு நீர் வார்க்க முடியுமாவென கேட்கிறார்கள் ஒரு நாட்டின் விடுதலையை கவிதையின் சொற்கள் வாங்கித்தருமா என்கிறார்கள் எனக்கும் என் கவிதைக்குமிடையே எவ்வித கடிதத் தொடர்புமில்லை ஒரு கவிதையின் வேலை என்னவென்று கவிதைக்குத்தான் தெரியும் சொற்களை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியுமென்று யாரும் மதவாதிகளைக் கேட்டதில்லை வேதங்கள் புராணங்கள் புனித நூல்கள் இறைவசனங்கள் இன்ன பிற இத்தியாதிகள் எல்லாவற்றிலும் சொற்கள் அந்த சொற்களின் ஆயுள் நீளம் எவ்வளவோ அவ்வளவு காலத்திற்கு உண்மை போராட வேண்டியிருக்கும் கவிதைகள் எலி வலையல்ல; யுத்த கால முகாம்கள் கனவுகளை கவிதையில் வைக்கப் பழகியிருக்கிறோம் போராட்ட…
-
- 0 replies
- 685 views
-
-
ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! இலங்கையின்அமைதி ஆயுதத்தினாலே பாலஸ்தீனத்தின்அவதி ஆயுதக்குறைவினாலே! ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! இந்தியபாகிஸ்தானின் அமைதி அணுகுண்டினாலே திபெத் சீன அவதி அணுகுண்டின்மையினாலே ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! நன்றி: குழலி பக்கங்கள்!
-
- 7 replies
- 1.6k views
-
-
ஆயுள் கைதி அந்த வெள்ளைப் புடவைக்காரி என் வேதனைக்குச் சொந்தக்காரி சின்ன உதட்டுக்காரி சிலர் சிந்தனைக்கு உந்துசக்தி சொந்த மனங்களுக்குள் சந்தமிடும் சலங்கைக்காரி புள்ளித் தீ விழித்து புன்னகைக்கும் புகைபோக்கி கள்ளத்தை உள்ளே வைத்து களிப்பூட்டும் வித்தைக்காரி மெல்ல மேகமதில் மனம் மிதக்க வைக்கும் மாயக்காரி கொள்ளை சுகம் கொடுத்து கொள்ளையிடும் கொடுமைக்காரி பள்ளம் அருகே வைத்து பார்வை வீசும் பகட்டுக்காரி உள்ளம் இணைந்த பின்னும் உரிமை கொள்ளும் சக்களத்தி துள்ளும் இளமையையும் துரத்திவிடும் சாலக்காரி வெள்ளைப் பல்லின் வண்ணம் வித்தை மாற்றும் வேசக்காரி உள்ளும் புறமும் புற்று நோய் விதைக்கும் மோசக்காரி சுருள்சுருளாய் வளையமிட்டு சுகம் கொடுக்…
-
- 7 replies
- 2.3k views
-
-
என்னணை அப்பு? இடிஞ்சு போய் இருக்கிறாய்! எல்லாம் முடிஞ்சுது...! அது தான் இப்படி! என்னப்பு நடந்தது? ஆரம்பப் புள்ளிக்கே.., திரும்ப வந்திருக்கிறம்! இல்லை...இல்லை..! இன்னும் கொஞ்சம் சறுக்கியிருக்கிறம்! என்னப்பு.. கள்ளுத் தத்துவமோ? கள்ளில முன்னேற்றம் ! அதை விடு..! பிளாவிலை குடிச்சனாங்கள், இப்ப..., கிளாசில குடிக்கிறம்! ஆயிரமாய்த் துலைச்சு..., அலங்கோலங்கள் சுமந்து..., விலாசங்கள் கலைந்து,,, தலையில துண்டோட...! என்னப்பு நடந்தது? கொஞ்சம் விளக்கமாய் சொல்லணை! அது தானே சொல்லிறன்.., ஆரம்பப் புள்ளிக்கே.., திரும்ப வந்திருக்கிறம்!
-
- 13 replies
- 2.6k views
-