கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தமிழினி என்னும் வலைப் பதிவாளரின் கவிதை, இது யாழ்க் களத் தமிழினியா என்று தெரியாது? :roll: http://eelavali.blogspot.com/2006/07/blog-post_20.html கனத்த மனதுடன் உங்களைக் கேட்கிறேன் கனிந்த மனதுள்ள உங்களைக் கேட்கிறேன் படித்த மனிதரே உங்களைக் கேட்கிறேன் பாரினில் புகழ்பெற்ற உங்களைக் கேட்கிறேன் இளகிய மனதது உங்களுக்குள்ளது இயற்கையின் அழிவையே தாங்கிடவற்றது பச்சை இலையதன் காடுகள் காப்பவர் பாசத்துடனே விலங்கினை பார்ப்பவர் விலங்கை விடவும் கேவலமாகிய விசயங்கள் ஈழத்தில் விஞ்சிக் கிடக்குது பச்சைக் குழந்தை செத்துக் கிடக்குது பாகம் பாகமாய் வெட்டிக் குவிக்குது நித்தம் நித்தமிங்கு சாவுகள் நடக்குது நினைத்திடாத பல கேவலம் நடக்குது உங்கள்…
-
- 15 replies
- 2.6k views
-
-
நான் நடந்த திசைகளின் பாதைகளில்... துணையில்லாத.... என் தனித்த பயணங்கள்! கண்ணுக்கெட்டிய தூரம்வரை... வெறுமை மட்டுமே, என்னை வரவேற்கத் தயாராய் இருந்தது!! தோல்விகளை மட்டுமே பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்ற காலங்கள்கூட... என்நிலை பார்த்துக் கலங்கியிருக்கும்! கலங்கிய கண்களுடன் உறங்கிய என் விழிகளுக்கு... கடினமான அதிகாலைகள்தான் இன்னொரு பொழுதினையும்... உயிருடன் பார்க்க வாய்ப்பளித்துப் போயின!! சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பு தாங்கொணாது, என் நிழலில் அமர முயன்று... தோற்றுப்போனேன்! கொதிக்கும் சூழலில் வெந்துபோனது... என் பிஞ்சு மனமுந்தான்! என் உடலினை... என் கால்களே சுமந்தாலும், மனதின் சுமைகள் காற்தட வழியோரமாய்... கண் வழி நீரூற்றி... ஆறுதல் சொல்லின!! …
-
- 15 replies
- 7.4k views
-
-
தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கும் அவருடன் காவியமான வீரப் புதல்வர்களுக்கும் வீரவணக்கம்! [size=4]புன்னகை தவழும் பொன்முகத்தோனே.....![/size] ------------------------------------------------------------ எம் மண்ணின் அழகாய் வலம் வந்த புன்னகை தவழும் பொன்முகத்தோனே தமிழர் இன்னல் களையும் வாஞ்சையுடன் உலகின் திசைகள் நாடி நின்றானே வெள்ளை மனிதரின் பெரும் வஞ்சகத்தால் புன்னகைப் பொன்முகம் சாய்ந்ததன்றோ! தமிழ் மான மரபினை மண்ணிலே பதிந்தவர் தமிழீழ மண்ணின் காற்றிலே கலந்தவர் பொய்மையின் நீட்சியாய் தொடரும் உலகிலே உண்மையின் சாட்சியாய் உயிர் துறந்தோரே! காலமும் பொய்த்தது களமும் போனது நினைவுகள் மட்டுமே நெஞ்சினில் வாழுது கனவுகள் தாங்கியே களத்தின் வீழ்ந்தவர் எம் மனதினுள் வா…
-
- 15 replies
- 871 views
-
-
வன்னிக்குச் சோறு கொடு இலங்கை வான்படைக்குக் குண்டு கொடு திண்டுவிட்டுச் சாகட்டும் தமிழினம் எண்டந்தப் பாவி சொன்னான் முண்டப் பேதைகளாய் இன்னும் முடங்கிக் கிடப்பாரோ தமிழர் தமிழகத்தில் இல்லை முண்டு பிடித்துத் தொடர்வாரோ தம்போரை பார்ப்பனியம் பணிவதில்லை அது பணியவைத்து ஆழ்வதுவே என்றந்தப்பாவி சொன்னான் இன்னமும் பொறுத்திடுமோ தமிழிதை இந்து மகாசதியும் பெளத்த மதவெறியும் இணைந்து நின்று தமிழைக் கொல்வமெனச் சொல்கிறதே இன்னும் என்ன தூக்கம் என்னருமைத் தமிழகமே நீ பொங்கியெழுந்தாலன்றி மழையில் நனைந்ததிலே பயனுண்டோ எண்ணிப்பார். 27.10.2008.
-
- 15 replies
- 2.2k views
-
-
உனனைத் தொடமாட்டேன் உன்னைத் தொடமாட்டேன் வெண்நிலவே உன்னைத் தொடமாட்டேன் கண்களிலே உன்னை நானும் கொள்ளை இடமாட்டேன் காதல் என்று சொல்லி உன்னை இழுக்கமாட்டேன் உன்னைப்போல நானும் தேய்ந்து வளரமாட்டேன் காதல்கன்னி அவள்போல உன்னை இம்சை செய்யமாட்டேன் எட்டாத உயரத்தில்-நீ ஏனி வைத்தும் உன்னைப் பிடிக்கமாட்டேன் உன்னைப்போல நானும் இங்கே தனிமையில் ஏங்கமாட்டேன் தேன் நிலவு தேவதையே-நான் தேம்பியழமாட்டேன் தேடி நீ என்னை வந்தாலும் உன்னைத் தீண்டிவிடமாட்டேன்
-
- 15 replies
- 2.1k views
-
-
நவராத்திரி நாயகியே! முத்தமிழாய் இனிக்கின்ற முப்பெரும் தேவியரின் விந்தைகளை வித்தைகளைக் கொண்டாடும் நாள் வருது! இத்தரையில் பிறந்துவிட்ட அத்தனை பேரினுள்ளும் சக்தி என்றே ஒன்றேதான் இயக்கங்கள் நடத்திடுது! "அன்னை" என்ற சொல் ஒன்றே அன்பை அள்ளி வழங்குதல் தான் தேவைகளைத் தான் அறிந்து கொடுக்கின்ற உறவு அவள் தான்! முதல் மூன்று நாட்களும் மன உறுதி வீரம் தனை அள்ளித் தருகின்ற மலைமகளாய்!அடுத்த மூன்று நாட்களிலும் குறையாத வளம் நிறைவாகத் தரும் செல்வி திருமகளாய் நிறைவாய் மூன்று நாட்களிலும் அறிவுக்கண்ணைத் திறந்து கல்விஞானம் கொடுக்கின்ற கலைமகளாய் அருள் வழங்கும் சக்தி அவள்! அவல்,கடலை,சுண்டல் என இந்து வீடெங்கும் களைகட்டும்! பாடல்களும் பண்ணுமங்கே மனசுக்கு சுகம் கூட்டும்! விண்ணாளும் த…
-
- 15 replies
- 2.5k views
-
-
என் உயிர்ப்பினை, உன்னிடமே.... விட்டு விடுகிறேன். நிச்சயமாய் சொல்கிறேன் நிச்சலனமான நேசங்களையும் நிதானமாய் கிழித்துப்போடும் வரமொன்றை சாபமெனப் பெற்றவன் நான். என் ஏகத்துவங்களின் எரிதணலுக்குள் சிதையாகிப் போகும் நேசங்கள் குறித்து நீண்ட விவாதங்களையெப்போதும் நிகழ்த்தியதேயில்லை நான். பொக்கிஷமென போன்றவேண்டிய புனிதமிகு நேசங்களை புழுதிக்குள் விட்டெரிந்துவிட்டு தனித்தவன் நானென சங்கற்பம் கொள்கிறேன். அசத்தியங்களின் மாயையில் சத்தியங்களை புதைத்துக்கொண்டு உண்மையில் பொய்மையும் பொய்மையில் உண்மையுமென புலப்படா நிஜங்களில் போதிஞானம் தேடும் சாமன்யனின் நாட்குறிப்பாய் நகர்கிறது வாழ்வெனும் நிர்ப்பந்தம். என் ஏகத்துவங்கள் ஏற்றிய சிதையில் எ…
-
- 15 replies
- 2.2k views
-
-
உன் கற்பனை -----------;;;;;? அறிவான புூவே ...நீ அன்புபடைத்த குணமே உனக்கு உன் பேச்சி; ஓர் இiசையே பல சோகங்கள் மனசில் கொண்டு வெளியில் நல்ல மனிதன் போல் நடமாட? உன் மனசி;ல் குடி கொண்டிருக்கும் ஓர் இளம் காற்று--? அந்த காற்றை தேடித் தேடி பாக்கிறாய் காணவில்;லை ? கனவில் வரும் கற்பனைகள் வளர--- கண்களில் நீர்கசிய கல்லான இதையத்தை கனிய வைத்து காற்ரேயே நினைத்த படி கலங்கி நிக்கின்றாய் நீ------? காற்றின் இசையை கேட்டு அழவில்லாத கற்பனைகளை வளர்த்து தல்லாடும்உன் நெஞ்சம் ஏமாத்துவாளா என்று ஓர் பயம் அவளின் இசைகளைஉன் மனதில் அளவில்லாமல் வளர்த்துக்கொண்டாய் --நீ அந்த காற்றின் இசைகளைக் கேட்டு வீனான கற்பனைகளைவளர்த்த நீ அவளை மறக்கவும் முடிய…
-
- 15 replies
- 2.4k views
-
-
காதல் ஒன்றும் பரீட்சையல்ல காகிதத்தில் எழுதிச் சொல்ல கண்களின் உரையாடல் மொழியொன்றும் தேவையில்ல இமைகளின் அசைவில் புகுந்திடும் காதல் இடைவெளியின்றி தொடர்ந்திடும் மோதல் ஆயிரம் கோடி ஆசைகள் ஆன்மாவில் ஊறும் அன்பின் பெருக்கம் அருவியாய்ப் பாயும் இதயத்தின் துள்ளல் இணைவினைச் சொல்லும் விநாடிகள் வந்து உணர்வுகள் ஊறும் விளக்கமின்றி உதடுகள் விரியும் விடிவினைக் கண்கள் விரைவாய் அழைக்கும் காதலன் முகம் காண ஆசைகள் பறக்கும் விழித்துக் கொண்டே கனவுகள் மிதற்கும் காதல் உள்ளம் அத்தனையையும் வெல்லும் ஆழ்கடல் தொலைவில் ஆன்மாக்கள் உலாவும் அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல் உணர்ந்தவர்களுக்கு மட்ட…
-
- 15 replies
- 3.2k views
-
-
வடலி சி.சிவசேகரம் இந்தக் கருப்பனைகள் இங்கேதான் முளைக்கும் இடம்பெயரச் சொல்லி எவர் வேரோடு கல்லி வெளியே எறிந்தாலும் வடலி வளரமுதல் வெட்டிச் சரித்தாலும் கிழங்கு முளைவிடுமுன் கீறி எடுத்தாலும் இந்தக் கரும்பனைகள் எப்போதோ என்றோ இங்கேதான் முளைக்கும் எத்தனையோ பெரும் புயல்கள், இடிமழைகள், சுடுவேனில் எல்லாமே எத்தனையோ நூற்றாண்டாய்க் கண்டவைதாம். பொன்னில் முடி புனைந்து ஆண்ட பரம்பரையார் போயழிந்தார். ஆனாலும் எங்கள் கரும் பனைகள் எங்கள் வெளிகளிலே ஓலையிலே முடி புனைந்து ஓங்கி அரசாளும் எனவேதான் எத்தனை நாட்போனாலும் எத்தனை தான் கடிதாய் நீவிர் முயன்றாலும் எங்கள் கரும்பனைகள் இங்கேதான் முளைக்கும். பனைவடலி அல்லவே எங்களது பாலகர்கள் என…
-
- 15 replies
- 2.3k views
-
-
நாலெழுத்து படித்து விட்டால் நானே ஊருக்கு நாட்டாமை என்பான் கோர்ட்டும்- சூட்டும் அணிந்து விட்டால் நான் கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை என்பான் அவன் பாட்டன் - கோவணத்துடன் திரிந்ததை ஒருவருக்கும் சொல்லான் மறைப்பான் -மகிழ்ச்சி வேறு கொள்வான்! ஏனடா நீ இப்பிடி? வெள்ளையும் சுள்ளையுமாகி நீ இங்கு திரிந்தாலும் வெள்ளைகாரனுக்கு நிகர் என்று சொன்னாலும் கிளிந்த சேலையுடன் இருந்த போதும் உன் அப்பன் இருக்க உன் தாய் தாலி அடைவு வைத்து தாயகத்தை பழிப்பவனே- உன்னை அனுப்பி இருப்பாள் உணர்ந்ததுண்டா-உறைக்காதா சீ போடா- மூடா !!
-
- 15 replies
- 2.5k views
-
-
பூவுக்குள் பூவாய் இவள் உறங்கிக் கொள்ள கண்ணீர் கொண்டு பாசத்தோடு என் உறவுகள் சுற்றி நிற்க இவளையும் வெறுத்திடும் இதயங்கள் பெருமூச்சு விட்டு நிற்க ஏனடா இவளை சந்தித்தோம் என சிலர் திட்டி நிற்க இவள் மட்டும் பூவோடு பூவாய் வாடாது உறங்கிக் கொண்டாள்! தன் இறுதி விடுதலைப் பயணத்தில் மகிழ்ச்சியாய்...! இவளுக்காய் அழுதிடும் உறவுகள் மறந்திடுவார் மரணத்தை மீண்டும்!!!
-
- 15 replies
- 2.3k views
-
-
2.11.16 ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பிதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நானிலம் போற்றும் நீதி காடு இருந்த இடத்தில் அமைந்திருக்கும் முல்லை நகரில் கழனி இருந்த இடத்தில் வீடுகட்டிக் கொண்டவர்கள் கால்வாய் இருந்த இடத்தில் சாலை அமைப்பதை எதிர்த்து வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். குளம் இருந்த இடத்தில் அமைந்திருக்கும் உயர்மன்றத்தில் நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது! -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 2.11.16) (எனது பதிவுகளி…
-
- 15 replies
- 2k views
-
-
அன்னைமண் காக்க ஆசைகள் துறந்து ஆயுதம் ஏந்திய போராளிகளை.... சதிவலையால் சிதைக்கப் பட்ட போது சரணடைந்த போராளிகளையே.. துரோகிகளாக்கும் சமூகத்தில் நானும் ஒரு துரோகிதான்.... மூன்றுலட்சம் மக்களையும்,போராளிகளையும் முட்கம்பி வேலிக்குள்ளிருந்து... மீட்க பேய்களின் கால்களில் விழுந்தேனும் காக்கத் துடிக்கும் இதயங்களும்... அவர்களுக்காக ஒலிக்கும் ஓரிரு குரல்களும் துரோகியானால் நானும் ஒரு துரோகிதான்... சோற்றுப்பாசலும் காசும் கொடுத்துவிட்டு சொல்லித்திரியும் உள்ளங்களின் மத்தியில்.. சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து அநாதையாக நிற்கும் மக்களும்.. சொந்த சகோதரனைப்போல் ஒவ்வொரு புலிவீரனையும் நெஞ்சில் சுமந்ததால் சொல்லாமல் கொள்ளாமல்... ச…
-
- 15 replies
- 2.6k views
-
-
-
- 15 replies
- 5.4k views
-
-
இடைத்தங்கல் முகாங்கள்...... கவிதை..... இடைத்தங்கல் முகாங்களில் எங்கள் துன்பங்களும் தெரியாமல் தம் வாழ்வு அங்கே ஏனென்றும் புரியாமல் தீராத பசியினிலும் மணல்வீடு கட்டும் ; நம் மழலைகளின் முகம் பார்த்தேன்...! அனைத்து உணர்வுகளும் அடங்கும் நிலை மரணம்....! அங்கேயும் அதே நிலைதான் அதைப் பார்ப்போர்க்கும் அதே நிலைதான்..... உயிர்காக்க ஓடிவந்து உயிர்மட்டும் காத்துவிட்டு உணர்வெல்லாம் செத்து உறவெல்லாம் பறிகொடுத்து உறக்கம் ஏதுமின்றி ஒவ்வோர் மூலையிலும் ஒதுங்கிவிட்ட நம் உறவு கண்டேன்...! கோத்தபாய வாசகமாய் தமிழீழ குமரிகளின் பருவத்தின் அழகுதனை பார்த்து அனுபவித்து படுகொலை செய்வதற்கு பத்திரமாய் முகாமொன்று அதன் பெயரோ விச…
-
- 15 replies
- 1.5k views
-
-
களனி கங்கையின் இசை நிலவிலே பெளத்த நாட்டிளம் பெண்களுடனே சுந்தர சிங்களத்தில் பாட்டிசைத்து ரயில்,பஸ் ஒட்டி விளையாடிடுவோம் யாழ்ப்பாணத்து செம்மண் புறத்து பனம்பண்டம் புளத்சிங்கள வெத்திலைக்கு மாறு பண்டம் முஸ்லிம் மக்களின் கவிதை கொண்டு அரபிய தொப்பிகளை பரிசளிப்போம் புலத்து தமிழருக்கோர் பாலம் அமைப்போம் இணையத்தை பலப்படுத்தி உறவு சமைப்போம் மகாவலியில் ஒடிவரும் நிரின்மிகையால் எல்லா மாவட்டங்களிலும் பயிர் செய்திடுவோம் மலையகத்தில் தேயிலை பயிரிடுவோம் வெளிநாட்டுக்கு ஏற்றியிடுவோம் மட்டுநகரில் கருவாடு காயவைப்போம் தொப்புள் கொடி உறவுகளுக்கு பார்சல் பண்ணிடுவோம் ஆயுதம் செய்வோம் நல்ல குடியேற்றம் செய்வோம் விகாரைகள் வைப்போம் அகதி முகாம் வைப்போம் ச…
-
- 15 replies
- 2.3k views
-
-
தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன் தமிழ் யூடியூப் சில தம்பிமாருக்கு லொத்தர் சீட்டிலுப்பு விழுந்தது போல் சோக்காய் தான் வாச்சுப்போச்சு இலங்கை தேர்தல் திருவிழாவாச்சு சுத்தி அடிச்சு கதை பேசி சும்மா எல்லாம் உசுப்பேத்தி நாளுக்கு ஒரு கதை சொல்லி ஆளுக்கு ஒரு அரசியல் ஆய்வாளர் போல காலை ஒரு காணொளி மாலை ஒரு காணொளியாய் கனக்கவெல்லோ வருகுதிப்போ புலத்திலும் தான் நிலத்திலும் தான் சிங்கம் தனியா சிங்குலா வருகுது கோட்டைக்கு என்று வட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலை சொல்லி அரசியல் வகுப்பு எடுக்கினம் யாருக்கும் ஒன்றும் தெரியாது போலவே கனக்க எல்லாம் புழுகியடிச்சு பணத்தை மட்டும் பார்கிறார்கள் சொந்த இனத்தை எண்ண…
-
-
- 15 replies
- 1.1k views
-
-
வலிகளை சுமந்து வாழ்கிறேன் வாழ்கையில் ஒர் அர்த்ததை தேட தேடிய இடங்கள் எல்லாம் ......... மீண்டும் தேடல் தொடர்கிறது வாழ்க்கை என்ற போ..ராட்டினத்தில் வலம் மட்டும் வருகிறேன் வாசல் இல்லாமல். வருத்தங்கள் சூழ்ந்து வா வா என்கிறது போவதா ? வேண்டாமா? என்று புலம்ப தொடங்கிறது புலன் ஆசைகள் தீர்ந்து அடங்கிடும் மனது மட்டும் போகாதே என்கிறது அங்கே ....அது சுட்டு விடும் காடு சுடு காடு
-
- 15 replies
- 2.2k views
-
-
இது எங்கள் கவிகளுக்கன திரி, 1995 இடப்பெயர்விற்க்கு நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பிபோய், எங்களுடைய வாழ்வை மெல்ல மெல்ல தொடங்கிய காலம், எல்லாம் இழந்து உயிரை மட்டும் கொண்டு போய் வாழ்வை தொடங்கிய காலம், எங்கட பீடத்தில் நடத்த கவிதைப் போட்டிக்கு கொடுத்த தலைப்பு "இந்தளவும் போதும் எனக்கு" உண்மையில் இது ஒரு " எதிர் மறையான" தலையங்கம்.. எங்களது இழப்பை எல்லாம் சொல்லிவிட்டு, ஆறுதலுக்காய், "இந்தளவும் போதும் எனக்கு" என்று முடிப்பது.. அப்பா சொல்லுவார், முஸ்லீம் சாகோதரர்க்கள் சொல்லுவார்களாம், " வீடு எரிந்தாலும் அல்லா சுவரைக் காத்தார்" என்று.....யாரும் குறையாக எடுக்க வேண்டாம். புலத்தில் உள்ள கவலைகளையும் சொல்லலாம்.. நான் நல்ல ரசிகன்...ஆனால் எழுத தெரியாது.. உங்கள் ஆக்கங்களை …
-
- 15 replies
- 2k views
-
-
-
எண்பது தமிழனை கொன்றுவிட்டு நான் அவனில்லை - என்றே சிங்களன் கால் கழுவு! குத்தரிசி சோறு வேணாம் ஈர பலாக்கை போதுமென்றே அலை- அலைந்து திரிந்து அசிங்கமாய் திரி! அப்பனையும் ஆத்தாளையும் ஐந்து பத்திற்காய் கொல்லு! கொன்றபின் பன்சலைக்கு சென்று சிங்களனுடன் சேர்ந்து ப்ரீதும் ஓது! புலியை அழித்தால் புது வாழ்வா உனக்கு? புலி அழிந்து போகும் ஒரு நாள் வந்தால் உன் குரல் வளையே சிங்களனுக்கு அடுத்த இலக்கு - இதை நம்பினால் நீ நம்பு! தமிழீழ விடுதலை புலியை அழிப்பதா அவன் குறி? அட தடுமாற்றகாரா தமிழன் தலை எடுப்பதுதாண்டா அவன் வெறி! மரத்தோடு மரமாய் ஒட்டி தேவாங்கு போல தூங்கு! செருப்புக்கு ஆசை படுறாய் உன் கால் மெதுவாய் அறுந்துபோகுது! கவனி- !…
-
- 15 replies
- 3.6k views
-
-
காதலென்று அலைந்ததில்லை கனவதில் மிதந்ததில்லை என்னோடு உன்னை கற்பனைக் கண்கள் காணும் வரை! காலம் உன்னை இனங்காட்ட காரணமில்லாமல் கரைகிறது என் மனம் உன் நினைவில்! பாராத உன்னுருவம் பார்க்கத் துடிக்குது என் பருவம் பார்த்த விழிகள் பூத்திருக்கு இமைகள் அசைக்காது.! இடியே வரினும் இசைக்காத என் செவிகள் ஏங்குதுன் காற்றிலாடும் சொல் வாங்க! அர்த்தமில்லா கீதம் கூட அற்புதமாய் காதில் விழுகுது! இடைவிடாது இடிக்கும் அந்த இதயம் கூட அமைதிகாக்குது இதமாய் உன் பெயர் உச்சரிக்க! இரவோடு வந்த உறக்கம் கூட இரந்து கேட்டும் இரக்கப்படமால் இல்லையென்று கிடக்குது.! மோதலுக்கு வரியெழுதும் கரங்கள் கூட காதலுக்கு வரியெழுதத் துடிக்குது! நடை பயில பஞ்சிப்பட்ட கால்கள்…
-
- 15 replies
- 2.3k views
-
-
பயணம் தொடங்கினேன்... தூறலும் தொடங்கியது அம்மா சொன்னவ ''மழையில நனையாதை'' எண்டு! ஒதுங்க இடம் தேடி...ஓடி... கடைசியில் - ஒரு தாவாரம்.. ஒதுங்கினேன்........ தாவாரம் வழியே தூவானம் வர உடல் நனைந்தது.... மனம் அடித்துக் கொண்டது... அம்மா சொன்னவ... ''மழையில நனையாதை'' எண்டு! தலைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது
-
- 15 replies
- 2.4k views
-
-
காதல் மலர்ந்து இன்பம் கனிந்து கவிதை தவழ்கின்ற இந்நேரம் என்னை சேரமுடியாமல் பிரிந்தாய் -நீ என்ன பாவம் செய்தாய்? நீ சுவாசித்த மந்திரத்தை தினம் கேட்க கோவிலுக்கு சென்றாய் இன்று பூசைகளில் நிம்மதியை நாடுகின்றாய் அப்படி நீ என்ன பாவம் செய்தாய்? இலவசமாக கூட குடிபூற மறக்கும் உன் உள்ளத்தில் தீபத்தை கையில் ஏந்தியபடி உன் வாசல் வந்தவளை- நீ இழந்ததேன்?? தாய்க்கு தாயாக தோழிக்கு தோழியாக காதலிக்கு காதலியாக அவள் மடியில் தவழ்ந்த உன் வாழ்க்கை இன்று கேள்விக் குறியானதேன்??! ஒலிவடிவில்....
-
- 15 replies
- 2.5k views
-