கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வெள்ளைக்கொடியெடுத்து விலங்கிடு மறவர் படை வீரத்தை குலுக்க நீழும் கரங்களை குதறி எறி-உன் கொடூரத்தின் பாரம்பரியம் காத்து தமிழச்சி கர்ப்பம்கிழித்து சிசுவினை உருவு-அதன் செந்தளிர் மேனியெங்கும் வாலும் வரிகளும் தேடு-களைத்தபின் கொடுந்தீயின் வாயினில் போடு. வெள்ளைக்கொடி எடுத்து விரலிடுக்கின் குருதி துடை உன்.... விந்தொழுகும் வக்கிரக்கண்கொண்டு வேட்டையாடு குமரியென்ன கிழவியென்ன கிளித்துக்கிளித்து கிணறுகளில் வீசியெறி உலகின் ஊனச்செவிகளில் ஓலம் விழுந்தால் வெள்ளைக்கொடியெடுத்து-அதன் விழிகளில் விட்டு ஆட்டு-பின்னர் தம்மபதம் ஓதி பஞ்சசீலம் பழகு. உன்..... உறக்கம் பறித்தவர் உறங்கும் இடமெங்கும்-அவர் வீ…
-
- 15 replies
- 2k views
-
-
உருகுதே உருகுதே... கண்டேன் கண்டேன் சூரியனைக் கண்டு உருகி உச்சி குளிர்ந்த வெண் பனிப்பாறையாறு சிலிர்க்க கண்டேன் -அது ஆதவன் அணைப்பில் சிணுங்கவும் கண்டேன் சினேகிதின்ர குட்டிக்கவிதை எப்பிடி இருக்கு :?:
-
- 14 replies
- 2.3k views
-
-
யார் அவள்? என் சித்தம் பேதலிக்க வைத்து தன்னைக் காதலிக்க வைத்தாள். ஒவ்வோர் வினாடியும் எனக்குள் உயிர் மூச்சாய் இறங்கி ஓதும் நூல்களில் நர்த்தனம் ஆடினாள். கைகளில் எழுதுகோல் விளையாட கன்னலாய் வீழ்ந்து காவியம் இயற்றினாள். மனப்பைகளில் நிறைந்து வழிந்து - என்னை பாவலர் வரிசையில் 'பா" வரைய வைத்தாள். வாசிக்க வாசிக்க இனிமையானாள். - நான் புூசிக்கப் புூசிக்கப் புதுமையானாள். நேசிக்க வைத்து - என்னை யாசிக்க வைத்தாள். யாசிக்கும் வேளையிலும் - என் நாசியில் மூச்சானாள். - அவளைப் பேசிப் பேசி நான் பித்தாகும் வேளையிலும் ஆசையோடு வந்தென்னை அணைத்துத்தான் மகிழ்விப்பாள். யார் அவள்? அவள்தான் என்னுயிர்த் தமிழாள்!
-
- 14 replies
- 2.9k views
-
-
-
நண்பனின் நட்பு போலி முகம் காட்டி புன்னகைத்ததும் இல்லை.... இவள் மனதினை என்றும் நோகடித்ததும் இல்லை... நண்பனைப் போல் நடித்ததும் இல்லை... நட்பினுள் புகுந்து சுத்து மாத்து செய்ததும் இல்லை... வாழ்க்கையில் தடம் மாறி போக சொன்னதும் இல்லை.... வீணான கதைகள் என்றும் கதைத்ததும் இல்லை... உன் நட்பெனும் உறவில் நான் பிரிய நினைத்ததும் இல்லை... உன்னை என்றும் நான் நினைத்துப் பார்க்க மறந்ததும் இல்லை... இல்லை இல்லை என்று சொல்ல நல்லவைகள் குறுகியனவும் இல்லை.... நம் நட்பெனும் வட்டம் போலியானதும் இல்லை....!
-
- 14 replies
- 3.1k views
-
-
புலத்து இளைஞர்களே புலம்பெயர் மண் இளைஞர்களே ! சற்று செவிமடுப்பீர் சொந்த மண்ணை ஏன் பிரிந்தோம்? சொந்த மண்ணில் என்ன நடக்கிறது? உம் இதயத்தை நீங்கள் கேட்பதுண்டா? சொந்த மண்ணில் எம் உறவுகள் அழியும் செய்தி உம் காதில் விழுவதுண்டா? இங்கே குழு மோதலால் எம் இனத்தை நீங்கள் அழிப்பது உள்ளம் உறுத்தவில்லயா? ஒர் உயிரைப் பறிக்கும் உரிமையை உமக்கு கொடுத்தவர் யார்? ஒர் உயிரை ஒர் நொடியில் பறித்து விடுகிறீர் எம் தமிழ்த்தாயின் கதறல் உம் காதில் விழவில்லையா? சுற்றி இருக்கும் உறவுகளின் வேதனை உமக்கு வேடிக்கையா? பழிக்குப் பழி தீர்ப்பதில்த் தான் உம் வீரம் உணர்கிறீரா? இக்கோர உள்ளம் எப்படிப் பெற்றீர்? புலம் பெயர்ந்த மண்ணில் நடைபெறும் வன்முறைகளைக்…
-
- 14 replies
- 2.3k views
-
-
நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு, துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு, தயக்கத்தில் கைகொடுக்க நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... புகழ் எதிர்பார்க்காதது நட்பு, சுயநலம் தெரியாதது நட்பு, தலைக்கனம் இல்லாதது நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... குழந்தையில் விளையாடிட நட்பு, இளமையில் குறும்புகள் செய்திட நட்பு, முதுமையில் கலந்துரையாடிட நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... உனக்கு உறவாக வாழ்வது நட்பு, உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு, உனக்கு உருதுணையாக நிற்பது நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... உன்னை மனிதனாக்குவதும் நட்…
-
- 14 replies
- 5.6k views
-
-
யாழ்ப்பாண கிழவனின் புலம்பல் கவிதை - இளங்கவி ராஜபக்க்ஷ மாத்தையா அடிசிட்டாராம் புடிச்சிட்டாராம் புலிகளையே மடக்கிட்டாராம்;என்று வெடியெல்லாம் வெடித்து அங்கே தமிழனை வீதியிலே போட்டிட்டாங்கள்.... வன்னி தமிழரெல்லாம் வாழ்வு இழந்து நிற்கையிலே அவசரமாய் தேர்தல் வைக்க அந்தக் கூட்டம் அலையுறாங்கள் அதுக்காய் வால்பிடிச்சு அங்கே இடம்பிடிக்க கறிக்கடை காகங்களாய் கண்டதெல்லாம் அலையுதுகள்.... வட்டுக்கோட்டை தீர்மானத்தில் ஈழமென்று தீர்வை வைக்க தமிழர்கள் எதிர்கட்சியாகி; எங்கள் ஈழத்தீர்வை சொல்லியிருந்தோம்... பழைய குருடி கதவை திறடி;என்று எங்கள் பழையவர்கள் மறுபடியும் பதவிக்கு ஆசைப்பட...... தமிழனை காக்கவென்று தரணியிலே அவன் உதிச்சான்.... …
-
- 14 replies
- 2.3k views
-
-
1 இறுக்கி பற்றி பிடித்து இருந்த .. உன் கைகள் லேசாய் பிடி தளரும் .. போது நான் புரிந்து இருக்க வேணும் .. நீ வளர்த்து வருகிறாய் என்று .. மகனே ... 2 ஓடும் உன் மகனை ... பிடிக்கும் வயதில் நான் .. இல்லை மகனே .. முதுமை .! 3 அப்பா என்று என்னை நீ அழைத்தபோது .. இன்னும் ஒருமுறை கூப்பிட மாட்டானா .. என் பிள்ளை என்னை என்று ஏங்கிய.. என்னை இப்பொழுது உனக்கு ஒன்னும் .. தெரியாது போப்பா அங்கால என்கிறான் ... லையிட்டா வலிக்குது மகனே மனது ..! 4 என்ன உனக்கு தொப்பை எட்டி பார்க்குது .. என்று கேட்பவர்களுக்கு தெரியுமா .. அது உனக்காக வளர்த்து தொப்பை என்று .. நீ சிரித்து சறுக்கி விளையாட மகனே ..! 5 உன்னுடன் மிட்டாய்க்கு இட்டா .. சண்டையை விட உன் எச்ச…
-
- 14 replies
- 5.8k views
-
-
நீ எப்படி.. அவன் என்றும் இவன் என்றும் அடுத்தார் வாழ்வை எடை போடும் மனிதா நீ எப்படி-உன் வாழ்வெப்படி.. அடுக்கடுக்காய் ஊர்வம்பை அளக்கின்ற போது.. ஆனந்தம் கடலாய் அலைமோதுகிறதோ.. அழ்மனத்து சகதியை வெண்திரை மூடுகின்றதோ.. உன்னைத்திருத்திக் கொள் உலகம் திருந்துமென்றார்... உண்மை அது மெய்..- நீ உன் வாயை உளறவிட்டு ஊர் வாயை அலறவிட்டாய்.. ஊரார் வம்பை ஊட்டி வளர்த்து தன் வம்பை தானே வளர்ததாய்.. வந்த நாள் நல்ல நாள் வாழும் நாள் கொஞ்ச நாள்-அதற்குள் ஆயிரம் பேர் தலையை உருட்ட நினைக்கும் அபூர்வ சிந்தாமணியே.. துன்பத்தில் வீழ்ந்தோரை வம்புக்குள் இழுத்து இன்பத்தைக் காண்பதுமேன்.. பிறர் துன்பத்தில் இன்பத்தை கண்டு களித்து வாழ்வுக் க…
-
- 14 replies
- 1.7k views
-
-
ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி மே13' நிகழ இருப்பது ஆண்டவன் கட்டளை.. ஈழத்து வேதனையின் ஏக்க விளைச்சல். கோபப்படாமல் ஐயா குறித்து வைத்துக்கொள்ளுங்கள் வெளியில் நீங்கள் வேசமிட்டு நாடகம் ஆடினாலும் உங்கள் கள்ளமான உள்ளுணர்வில் இப்படித்தான் நடக்கும் என்று கருக்கட்டி ஊற்றெடுத்த உண்மை உத்தியோக பூர்வமாக பிரசவமாகப்போகும் பொழுது. காலதேவன் உங்களுக்கு கட்டை இறுக்கப்போகும் கனிவான கடைசி நாள். சங்கடங்கள் நிறைந்த சகதிக்குள் இப்போதே நீங்கள் தத்தளிப்பது தெரிகிறது இருந்தும் இது சிறிய ஆரம்பம் மட்டுமே. தொடர இருப்பது பெருங்கதை . நவீன நரசிம்மர் உங்களுக்கு இனி நிரந்தர ஆட்சி விடுமுறை ஆனாலும் நீங்கள் தொடர்ந்து அரச விர…
-
- 14 replies
- 3.6k views
- 1 follower
-
-
மழைக்காலம் துவங்கும் மேய்ச்சல் நிலங்களை புற்கள் போர்த்தியிருக்கும் எல்லாம் எரிந்த சாம்பலிலிருந்து மூங்கில் துளிர்க்கும் நொண்டி நாய் தங்க நிறகுட்டிகள் நான்கை ஈனும் நீண்ட குரலெடுத்து பாடும் ஒற்றை வால்க்குருவி கூடடைந்திருக்கும் வண்ணத்து பூச்சியொன்றின் நிறங்கள் குலைந்திருக்கும் தூறல் நின்றபின் வெளிக்கிடும் தவளைக்காக நீர்ப்பாம்பு கரையை பார்த்திருக்கும் குயவனின் கனவுகளுக்குள் தலைபிரட்டை நீந்த கற்றிருக்கும் சம்பா நாற்று நீரில் மிதந்திருக்கும் பெருங்கிழவன் உளம் விளைந்திருக்கும் செப்பனிடாத கூரைவழியோடும் மழையருவி சிலந்தியின் பின்னலில் சன்னல்களை வரைந்திருக்கும் விட்டில…
-
- 14 replies
- 1.7k views
-
-
பச்சைக் குழந்தை அங்கே பாலுக்கு அழுதிருக்க பாற்குட அபிசேகம் நீயிங்கு செய்தால் என்னைக் கடவுளென்று மனிதன் வணங்குவானோ சொல்? சத்தியமாய் அந்தக் கல்லுக்குள்ளே நான் இல்லையெடா! மானிடா! நான் கருணையுள்ளவன். ஏழை நெஞ்சுக்குள் தான் எப்போதும் இருப்பேனடா! உன் இரத்த உறவுக்கங்கே பாதி உயிர் போகையிலே எப்படி நான் கொலுவிருப்பேன்? நீயமைத்த மஞ்சத்திலே! எப்போதடா நான் கேட்டேன்? இப்போது நீ எனக்கென்று செய்வதெல்லாம்.. வானமே கூரையாய் உன் உறவு வாழ்வுக்கு வரமிருக்க கோபுரக் கோயில் கட்டி என்னை குடியிருக்க நீ கேட்டால் எப்படி இருப்பேனடா சொல்? அப்படி நான் இருந்தால் மனிதன் வணங்கும் தெய்வம் எனும் தகுதி எனக்கிருக்குமோ சொல்? மானிடா! ந…
-
- 14 replies
- 2.4k views
-
-
இனிமையான அந்த நாட்கள் இருண்டுவிட்டதோ உங்கள் இளமை துள்ளும் இனிய இதயம் நோந்துவிட்டதோ இனிமையான அந்தவார்த்தைகள் இன்று அவனுக்கு புளித்துவிட்டதோ உன் வாழ்க்கை இன்று இருண்ட மேகமாகிவிட்டதோ தென்றலான உன் நினைவு இன்று மழை வெள்ளமாகிவிட்டதோ நீயும் தத்தளித்து தேம்புறாய கவிதை வெள்ளத்தில் உன்காதலனும் இங்கு கைகோடான இந்த நேரத்தில் அலைபாயும் மனம்தானா ஆண்கள் இதயங்கள் அதில் உன் நினைவுவர வில்லையா அந்த இதயத்தில்
-
- 14 replies
- 2.4k views
-
-
வரிப்புலி ஊர்வலம்! ----------------- ஆடிவரும் கடலையே - சொல்லு எங்கள் தேச ஆளூமை கொண்டவனை -எங்கே ஒளித்து வைத்தாய்? காற்றே வா மெல்ல எம் கதவு திற- பனியிலும் மழையிலும் - சுட்டெரிக்கும் வெய்யிலிலும் சுதந்திரமே பெரிசென்று சுழன்று திரிந்த சுந்தரனை- எங்காவது பார்த்தீயா? சொல்லி போ! சிங்களத்தின் மடியில் ஒரு இடியாய் வெடித்தவன் - சிறுத்தை இனத்தின் தலையில் மணிமுடியாய் உயிர்த்தவன் படை நடத்தும் வீரர்கெல்லாம் ஒரு பாடமாய் இருந்தவன் அவனை வெல்வதற்கு யார்க்கும் ஒரு வழியுமில்லை- விடை சொல்லாமல் போனானே அதுதான் - ஏனென்று இன்னும் தெரியவில்லை! எம்மை அடித்தவனை அடியோடு எரித்த பெரு நெருப்பு- எங்கள் அண்ணன் அணைத்து வளர்த்த அக்கினி குஞ்சு- கிட்டண்ணா - தமிழன்…
-
- 14 replies
- 3.1k views
-
-
என் அன்பான அம்மாவே---------------------- என்னை பத்துமாதம் சுமந்து பெற்று எடுத்த அம்மாவே எங்களை அன்போடு வாழத்து ஆளாக்கினாயே எல்ல கஸ்ரங்களையும் உன் மனசுக்குள் போட்டு விட்டு நீ எங்களுக்கு நல்ல அம்மாவாகவும் என் அப்பாவுக்கு ஒரு நல்ல மனைவியாகவும் ஊருக்கு நல்ல நண்பியாகவும் இருந்தாயே ஒரு குழந்தையால் நன்மையும் மறு குழந்தையால் துன்பமும் என்று அனுபவிக்கிறாயே நீ மட்டும் அல்லா இந்த உலகில் ஒரு பெண் எப்பொழுது ஒரு தாய் ஆகிவிடுகிறாளோ அன்றில் இருந்து அவளுக்கு இன்பம் துன்பம் தான் கவலைகளை மறக்கச் சொன்னால் உன்னால் எப்படி அம்மா முடியும் கண்ணீரும் சோறுமாக இருக்கின்ற நீ உன்னைப் பற்றிகொஞ்சம் சிந்தித்து பாரம்மா நீ அழுதுஅழுது உன்னையே அழித்…
-
- 14 replies
- 2.6k views
-
-
நிலவுக்கு விடைகொடுத்த பின்னும், தூங்காத விழிகளுடன்... மனதில் பாரத்துடன்... கனவுகளும் வெறுங் கனவாகிப்போக, உன் நினைவுகளை மீட்டியபடி... வளர்ந்து தேயும் நிலவுகளோடு, அமாவாசையானது என் ஆசைகளும்!
-
- 14 replies
- 1.5k views
-
-
சகோதரனே ! இன்று உன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் ஒன்றாய் வளர்ந்தோம் ஓரணியில் விளையாடினோம் கால அழைப்பை ஏற்று இன விடுதலைக்காய் உழைத்தோம் உனக்கும் எனக்கும் ஏழு வயது இடைவெளி -ஆனால் ஒரே நாளில் பிறந்தோம் எங்கு நின்றாலும் நம் பிறந்த நாளில் உன்னை நினைப்பேன் நீயும் அப்படித்தான் ஒரு குழந்தையின் மனநிலை கருதி நீண்ட நாள் காத்திருந்த இலக்கு கையிற்கு எட்டியபோதும் கைவிட்டு வந்தவன் நீ மீண்டும் சென்று வென்றுவந்த செயலில் வாழ்ந்த வீரன் நீ உனது தாக்குதல்கள் எங்கும் பேசப்பட நீயோ ஏதும் அறியாதவனாய் நகர்வாய் வீரனே உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் உன் வீடு வந்து திரும்பும் போது நீதான் என்னை சைக்கிளில் ஏற்…
-
- 14 replies
- 1.5k views
-
-
மாவீரர்கள் காவியங்கள் பல படைத்திட வங்கக் கடல்தனிலே வேங்கைகளாகப் புறப்பட்ட மாசற்ற மறவர்கள் அண்ணன் வழி சென்றே அவன் ஆணையை நிறைவேற்றியவர்கள் தாய் தந்தை மறந்தார்கள் தாய் நாட்டை நேசித்தார்கள் தாய் நாட்டை தம் தாயாக கருதியவர்கள் தமிழ் மக்களையும் தாய் மண்ணையும் காத்திடவே கரும் புலியாய்! கடற் புலியாய்! பல்வேறு வடிவங்களில் புயலாகப் புறப்பட்டு - இன்று எல்லோர் மனதிலும் வாழுகின்ற உன்னதப் புருசர்கள் மாவீரர்கள்
-
- 14 replies
- 2.8k views
-
-
[size=5]மண்ணுக்காய் மரணித்த மாவீரரே மண்டியிடுகின்றோம் உங்கள் முன் மரணத்தை மகிழ்வாய் ஏற்று மார்பில் குண்டேந்தி மாவீரரானீர் தேசம் என்னும் தேனடைக்காய் தெருவெங்கும் நீர் தேரிழுத்தீர் பால்ப் பருவம் மாறாத பதினாறு வயதிலும் பட்டினி கிடந்து பதமாய் ஆனீர் பகைவர் கோட்டைகள் பாங்குடன் தகர்த்து பாரினில் எம்மக்கோர் பாதையானீர் பள்ளிசெல்லும் பருவத்தில் பட்டு மெத்தை சுகம் துறந்து பெண்ணும் ஆணும் சரிநிகராய் பெருமை கொள்ளச் செய்திட்டீர் பெற்றவள் முகம் மறந்து உற்றவர் தனைத் துறந்து உம் தேசம் காப்பதற்காய் உயிர் தந்த உத்தமரே உம்மை நாம் எப்படி வணங்கிடுவோம் பேதைமை கொண்டவர்கள் பேர் வாங்கப் பணம் கொடுப்பார் பொன் கொடுப்பார் பொருள் கொடுப்பார் …
-
- 14 replies
- 956 views
-
-
பிரசவ வலி இருட்டு உலகத்திலிருந்து விடுதலையை விரும்பும் சிசுவின் போராட்டம் கருவறையின் சுகமான வேதனை - தாய்க்கு பிரசவம் உயிரின் வரவிற்காய் உயிரைப் பணயம் வைத்து உயிர்கள் நடத்தும் போராட்டம் குழந்தை இருட்டுச் சிறையிலிருந்து வெளிச்சச் சிறைக்கு இடம்மாறும் கைதி சிறுவயது வண்ணாத்துப் பூச்சியைப்போல வாழ்க்கையில் சிறகடித்துப்பறப்பதற்கான கற்றலின் ஆரம்பம் வாலிபம் ஆலோசனைகளை அலட்டல்களாக்கி அசட்டுத்துணிச்சலில் தனித்து எதையும் எதிர்கொள்ளத் துணியும் பருவம் காதல் ஓமோன்களின் காட்சிமாற்றம் எதிர்ப்பாலினரில் ஏற்படும் ஒ…
-
- 14 replies
- 1.2k views
-
-
வருடங்கள் நான்காகி, உருண்டு செல்கின்றது, காலம்! வறண்டு போன வனாந்திரத்தில், ஆழப்புதைந்திருக்கும் நீராக, அவலங்களின் நினைவுகள், பாதாளத்தை நோக்கிச் செல்கின்றன! புதைக்கப் பட்ட மனித எச்சங்களின் மீது, மனதாபிமானத்தின் முலாம் பூசிய உதவிகள், கட்டிடங்களாக உருவாகின்றன! பரம்பரை, பரம்பரையாய், வரம்பு கட்டி வளம் படுத்தியவர்கள், போரின் வடுக்கள் தந்த வலிகளில், புதைந்து போய் விட்டார்கள். சொந்தமென்று நம்பியிருந்த மண்ணில், வந்தேறு குடிகளாய்க், காடைகளும், காவாலிகளும், கலிகாலத்தின் சான்றுகளாய், களவாகக் குடியேறுகின்றன! தூக்கணாங்குருவிகளின், வாசல்கள் வளைக்கப் பட்ட, தொங்கும் குருவிக் கூடுகளாய்க், கவனமாகப் பின்னப்பபட்ட, கொலைக்கூட்டினுள், எமது மரணங்கள் நிகழ்த்தப் பட்டன! எட…
-
- 14 replies
- 1.4k views
-
-
வன்னியிலே உனக்கு இரத்ததானம் கவிதை இரத்ததானம் கொடு..! தயவுடன் இரத்ததானம் கொடு..! மேற்குலகின் தெருக்களிலே வாகனங்களில் தொங்கும் வாசகங்கள் இவை...! மேற்குலகே வன்னிக்கு செல்லுங்கள் வேண்டியளவை அள்ளுங்கள் உங்கள் உயிர்காக்கும் அதிசயத்திரவம் எங்கள் உயிர் நீங்க முதல் நாங்கள் தெருக்களிலே ஊற்றிடும் திரவம்......! அதில் உங்களுக்கும் உரிமையுண்டு உங்களின் ஆயுதங்களால் தானே உடலிலே ஓடாமல்; அது தெருக்களிலே பாய்கிறது.... ஏன் இன்னும் தயக்கம்....! கலந்துவிட்ட குருதிக்கூட்டங்களை பிரிக்கும் விஞ்ஞானம் புரியல்லையா உனக்கு...? இறைவனே...! அதுவும் புரிந்துவிட்டால் அலை மோதிடுமே உன் கூட்டம் வன்னித்தெருக்களிலே இன்று....! …
-
- 14 replies
- 2.4k views
-
-
பூட்டிய வீட்டுக்குள் புளுங்கிக் கொண்டிருந்தேன்..... காற்றினைத்தேடி கதவினைத் திறந்தேன்...... வந்தது காற்று ! ஒரு முறை..... பூஞ் சோலையில்- புகுந்து பூக்களில் புரண்டு புதுத் தென்றலாய்- மிதந்து (பூ) வாசனையோடு... வாசலில்- வந்தது ! மறுமுறை....... சாக்கடையில்- புகுந்து சகதிகளில் நனைந்து நாற்றத்தைச் சுமந்தபடி.... வாசலில்- வந்தது ! மறுமுறை...... கோவிலில்- புகுந்து தீபத்தில் எரிந்து தூபத்துள் புகைந்து தெய்வீக வாசனையாய்..... வாசலில்- வந்தது ! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு காற்று...... ஒவ்வொரு காற்றைப் போல் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு மனிதர்..! ம்..... ஒவ்வொரு காற்றையும் சுவாசிக்கப் ப…
-
- 14 replies
- 2.6k views
-
-
வேதப் பொருளே வெற்றுச் சிலையா நீ? சக்தியின் பெருவடிவே சங்காரத் திருவுருவே சிம்ம வாகனியே சிங்காரப் பெருந்தேவி சும்மா கிடக்கிறாயே.... உன் சுயம் எங்கு போனது? வேட்டை ஆடுகிறாய், வீதியுலா வருகிறாய் பாட்டம் கிடந்துழலும் பிள்ளைகளைப் பாராமல் மாற்றாரை உன் மண்ணில் மகிழ்ந்துலவ வைக்கிறாய் உனக்கென்ன கொலுவிருக்கும் இடமெல்லாம் கொண்டாடப் பெருங்கூட்டம் பட்டுப்பளபளப்பும், தங்கத் தகதகப்பும், பளிச்சென்று ஒளிவீசும் வைரச்சிலுசிலுப்பும், வெள்ளிக் கொலுசும், – வீரத் திருவாளும் , அள்ளி முடித்த கார்கொண்டை அலங்கரித்த வெள்ளி, பிறையும், துள்ளிக் குதித்தொளிரும் மின்னி மிடுக்கும் காணக்கண் போதாது அம்மையே….- ஆயினும்........ கள்ளச் சிரிப்பொளிரும் – உன் வதனக்கோலம் முள்ளாய் …
-
- 14 replies
- 997 views
-