கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மனிதம் இறந்து கிடந்த போது கண்ணை மூடி இருந்தவர்களுக்கு ஏதோ காய் நகர்த்தல்களில் கணக்குப் பிழைத்து விட்டது கட்டிப் போட வருகிறார்கள் ஜனநாயகவாதிகள் இந்து சமுத்திரத்தில் வந்து குதித்த கம்யூனிச றகனை. பா.உதயன் ✍️
-
- 3 replies
- 810 views
-
-
இன அழிப்பின் இறுதிப் போர் மே மாதம் கவிதைகள் தீபச்செல்வன் 17 May 10 12:15 am (BST) ஆட்களை இழந்த வெளி வானம் நேற்றுக் காலைவரை உறைந்திருந்தது. இப்பொழுது சிதறி கொட்டிக்கொண்டிருக்கிறது. வானம் அழுகிறதென யாரோ சொல்லிக்கொண்டு போகிறார்கள். இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை. சனம் தகர்ந்து அடங்கிப்போயிறுக்கிறது. குடி எரிந்து முடிகிறது. டெலிகப்ரர்கள் அலைந்து கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது எரிந்த வாகனங்களை மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா. எல்லாம் நசிந்துபோக அடங்கிக் கிடக்கிறது ஆட்களை இழந்த வெளி. கைப்பற்றப்பட்டவர்களாக குழந்தைகளை தொலைக் காட்சிகள் நாள் முழுவதும் தின்று கொண்டிருந்தது. நான் தேடிக்கொண்டிருக்கிறேன். …
-
- 1 reply
- 1.9k views
-
-
உனக்கு எப்பொழுதும் அடுத்தவர் துன்பத்தில் ஆனந்தம் அதுவும் தமிழர்கள் பிணங்களை எண்ணுவது பேரானந்தம் நீ செய்ய நினைத்ததை அவன் செய்தான் - ஆதலால் அவன் ரகு வம்சம் நாம் அரக்கர்கள் ஆனோம். தூது போக அனுமார்கள் தேவையில்லை இருக்கிறார்களே எம்மூர் விபீசணன் மார் அரசியல் எமக்கு தெரியாது - ஆனால் காலம் காலமாக அண்டிப் பிழைக்கிற ஆக்களை அடையாளம் காணத் தெரியும் மகா பாரதம் உனக்கு பொருந்துதோ? இல்லையோ ? எம் தர்மம் ஒரு நாள் வெல்லும்
-
- 1 reply
- 670 views
-
-
இனமான உணர்வோடு தன்னாட்சி வென்றெடுப்போம் 41 Views தொல்புவியில் நாமாண்ட வரலாறு மீண்டெழுத வல்லாண்மைத் திறத்தினொடு அதிவிவேக நுண்மதியால் பல்நாட்டு வல்லரசார் உள்ளத்தை ஊடுருவி சல்லடையாய் சிங்களத்தைத் துளைத்தெடுத்த வேந்தனெங்கே! கர்மவீரன், திடசித்தன், களங்கமில்லாத் தூயநெஞ்சன் தந்தை செல்வா முன்மொழிந்த தமிழ் ஈழம் உருவாக்கி தர்மநெறி தழுவியவர் நாற்படைகள் அரணமைக்க அதர்மத்தை வேரறுத்து இனம்காத்த செம்மலெங்கே! பதினெட்டு வயதினிலே விடுதலையின் கனல்மூண்டு கதியற்றுத் தடுமாறித் தவித்ததமிழ் மக்கள்துயர் பதியத்தன் னுள்ளத்தில் பகையொடுக்கும் ஆவேசம் …
-
- 5 replies
- 889 views
-
-
சிரங்கள் சிதையினும் எமக்கென்ன -நாம் சிவனைத் தொழுது பயனடைவோம் உயிர்கள் தொலையினும் எமக்கென்ன -நாம் உமையைத் துதித்துப் பயனடைவோம் பிள்ளைகள் இறப்பினும் எமக்கென்ன -நாம் பிள்ளையாரைப் புகழ்ந்து பயனடைவோம் முறை கெட்டாலும் எமக்கென்ன -நாம் முருகனைப் பாடி பயனடைவோம் அநீதி நடந்தால் எமக்கென்ன -நாம் ஆண்டவனைப் போற்றி பயனடைவோம் ஈழமே எரியினும் எமக்கென்ன -நாம் ஈசனை வேண்டிப் பயனடைவோம் இனமே அழியினும் எமக்கென்ன -நாம் இறைவனை நினைந்து பயனடைவோம் http://gkanthan.wordpress.com/index/eelam/payan/
-
- 0 replies
- 746 views
-
-
இனம் தின்னும் ராஜபக்சே கவிஞர் வைரமுத்து சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத் தாருங்கள் பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தை தொட்டு மனித குலம் நிற்கிறதே! மனம் இரங்கி வாருங்கள்! வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிடும் சிறுவர்க்குக் கைகொடுக்க வாருங்கள்! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்கள வெறிக் கூத்துக்களை நிரந்தரமாய் நிறுத்துங்கள்! …
-
- 1 reply
- 826 views
-
-
இனி அழுவதற்கில்லை... கடல் சூழ்ந்த யாழ் நாட்டில் உப்புக்கே வழியில்லையாம்... சொல்லடி அபிராமி..தமிழ் இழைத்த தப்பென்ன தப்பு... வந்தாரை வாழவைத்து.. வயிராற விருந்து வைத்தோம்.. வரந் தரும் அபிராமி-என் பிள்ளைப்பசி தீர என்ன செய்ய மூலைக்கு ஒரு பொங்கல்.. முளை சுரந்த பசுவுக்கு ஒரு பொங்கல்.. முற்றத்தில் பொங்க அபிராமி-ஒரு சொநடதமில்லை எங்கு செல்ல.. அன்று வருடத்திற்கு இரண்டுதினம் பட்டாசு சத்தம் வரும்..இன்று நித்தம் நித்தம் அபிராமி.-எங்கள் இதயவறை அதிருதடி.. ஊருக்கு ஒன்று பறிபொடுத்தோம்.. வீட்டுக்கொன்று பறிகொடுத்தோம்.-என்.. தாயே அபிராமி..இப்ப வீட்டோடு சாகுதம்மா.. வாடி வதங்கி நின்று.. கூடி அழுததெல்லாம்..கூத்தாடி வேடமென்றோ அபி…
-
- 4 replies
- 1.2k views
-
-
இனி எம் கல்லறைகளுடன் பேசுக! எம் இருதயத்தை பிளந்த யுத்தக் கல்லை பார்த்ததுபோதும் எமை கொன்று வீசிவிட்டு வெற்றிக் கூச்சலிடும் உம் படைவீரரின் சிலையை பார்த்ததுபோதும் எம் தேசமழித்து அழிக்கப்பட்ட எம் உடல்களின்மேலே ஒற்றை நாடென நடனமாடும் வரைபட கல்லைப் பார்த்ததுபோதும். எம் வீரர்கள் விதைக்கப்பட்ட நிலத்திற்கு வருகவெம் சிங்களச் சகோதரர்களே! வந்தெம் முகங்களின் காயங்களைப் பார்க்கவும் நூற்றாண்டாய் எம் தலைகளை அழுத்திய பெரும் பாதங்களின் வீரத்தைப் பார்க்கவும் மனிதம் தலைகுனிய கல்லறைகளுடன் போர் புரிந்த உம் படைகளின் தீரத்தைப் பார்க்கவும் மாண்டவர்களின் துயில் கலைத்து உறங்க இடமறுத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
இனி எம் காலம்!. தெறிக்கும் பொறி பறக்கும் புலி படை கண்டு பகை கலங்கும்! வெளிக்கும்! இனிச் சிரிக்கும்-கதிர் தமிழர் கிழக்கில் உதிக்கும்! எதற்கும் இல்லை கலக்கம்!எட்டு திசையும் இங்கே வெளிக்கும் பதுங்கும் புலி பாயும் இனி பொறுப்பதில்லை!. விலங்கு உடைக்கும்! வெடிக்கும் சிங்களக் கூடம்! வேங்கை அடக்கும்! பேரினத்தீயை! எடுக்கும் ஓட்டம் மகிந்த கூட்டம்! பறக்கும் எம் கொடி தலை நகரில்!
-
- 6 replies
- 1.4k views
-
-
தோழிகளின் கிண்டல் பேச்சில் "வெட்கித்து தலைகுனிந்திருந்த" தருணங்களவை.... எதிர்வரும் பேய்களின் கண்ணிற்க்கு "விருந்தாகி நாணிக்குறுகியிருந்த" தருணங்களவை.... தலைவனின் தழுவலில் "பெண்மையில் சிலாகித்திருந்த" தருணங்களவை.... குழந்தையின் அரவணைப்பில் "தாய்மையில் திளைத்திருந்த" தருணங்களவை.... கண்ணாடியின் பிம்பங்களில் வழிந்த "வனப்புகளில் பெருமித்திருந்த" தருணங்களவை.... . . . அவ்வாறு இருக்க கூடாதென "கடவுளை வேண்டியிருந்த" தருணங்களவை.... அப்படியேயென கும்பிட்ட "கடவுள் கைவிட்ட" தருணங்களவை... தனக்கு மட்டும் ஏன்? இப்படியென "ஆற்றாமையில் அழுதிருந்த" தருணங்களவை.... "கற்சிலைக்கேன் இத்துணை கலைநயமென" கண்கள் பூத்திருந்த தருணங்களவை ... "கடன்பட்டு புலம்பெயர்த்…
-
- 16 replies
- 1.2k views
-
-
இனி வருமா டோறா...??? ஆழக் கடல் ஏறி... ஆடி வந்த டோறா பாதி வழி வந்து பாதியானதே..... தமிழ் ஈழமது காற்றில் சேதி யானதே...இன்று சேதியானதே.... பாயும் புலி வேங்கை படை தனை அழிக்க ஓடி வந்த டோறா ஒய்ந்து போனதே - இன்று ஓய்ந்து போனதே.... அண்ணனவர் சொல்லில்- வேங்கை அலையதில் நடக்க பாய்ந்து வந்த டோறா பாதியானதே சுக்குநுாறாய் போனதே... எங்கள் புலி வீரரை ஏளனங்கள் செய்தவன் அஞ்சி ..அஞ்சி ..போனான்- இன்று அஞ்சி..அஞ்சி..போனான்... எங்கள் கடலேறி இன்னும் பகை வரு..மா..? வந்தால் அடி முழங்கும்- வானில் வேங்கை கொடி ஆடும்... //// ஆழக் கடல் ஏறி... ஆடி வந்த டோறா பாதி வழி வந்து பாதியானதே..... தமிழ் ஈழமது காற்றி…
-
- 6 replies
- 2.1k views
-
-
என் தேசப்பெருநிலமெங்கும் குவிந்து கிடக்கும் வெண் சாம்பல் மேடுகள் புன்னகைக்கின்றன....... தோழர்களே நன்றி. காலநீட்சியின் கனவுகள் சுமந்த வாழ்தலை ஈழமீட்சிக்காய் உதிர்த்துவிட துணிந்த வீரம் கண்டு, உமிழ முடியாத பெருவெப்பம் சுமந்து உறங்குமவர்கள் விழிகள் பனிக்கின்றன............ உங்களுக்காக............ தொண்டைமான் நீரேரியும் வழுக்கியாறும் -அழகிய சப்ததீவுக்கூட்டங்களும் தசாப்த உறக்கம் கலைத்து நோக்குகின்றன, சோழமண்டல உறவுகளே உங்களின் எழுச்சியை, வல்லைமுள்ளி வெளிகளுக்கும் பகைபணிந்த ஆனையிறவுக்கும், வலசைவரும் ஆயிரமாயிரம் பறவைகளிடம் வாழ்த்துக்களை பகிர்கின்றனர் கண்களால் எம்மவர்கள் -அவை நாளையாவது உங்களிடம் வரும் என்ற நம்பிக்கையில். கருக்கொண்ட மேகங்கள் எழத்தொடங்கிவிட்டன-…
-
- 2 replies
- 742 views
-
-
இனிக்கும் நினைவலைகள் நெடிதுயர்ந்த நிழல்மரங்கள் கீழ் நிழலில் நீட்டிக்கால் வைத்துநான் நீண்டு படுத்திருந்திருந்தேன் விடிகாலை எழில்கூடி வெளிவந்த ஆதவனும் நடுவானில் நின்றிருந்து சுடுகதிரை வீசிநின்றான் துடிகூட அசையாத தளிர்ச்சோலை மலர்க்கூட்டம் தம்மழகால் எனைமயக்கி தாள்வாரம் நின்றுவிட இடையிடையே தொலைவினிலே இறக்கையினம் இசைபாட இன்னிசைபோல் தென்றலிலே மிதந்து வந்ததுவே முடிசார்ந்த மன்னவரின் முன்சரிதை மலர்எடுத்து இடையின்றி ஒவ்வொன்றாய் இனித்துச் சுவைத்திருந்தேன் துடியிடையும் பிடிநடையும் துவளும் தமிழ்ப்பாவையர்கள் வடிவழகின் வர்ணனையை மனக்கண்ணால் ரசித்திருந்தேன் அடியாளும் அடிசிலொடு இரசமுடன் இருகறிகள் மடைபோட்டு முடித்துவிட்டு மன்னவ…
-
- 10 replies
- 3.6k views
-
-
இனித்தூங்கி கிடக்கோம்.. குரல் ஓங்கிக் கொடுப்போம்.. கண்ணைமூடி வணங்கும் போது கரும்புலியே உன் வதனப் பட்டொளி பார்த்தேன்..... காலங்கள் அழிக்காமல்.. காட்டாறு கலைக்காமல்-ஈழ மாந்தர் தம் இதயத்தில் நீர் போட்ட கோலம்... எத்தனை அழகு... எத்தனை நிறைவு... எத்தனை ஈகம்... எத்தனை வீரம்... மானம் துறக்காமல்... ஈனம் அழித்தவரே... தாயை தலை நிமிர்த்த எதிரி தலைகளெடுத்தவரே.. உங்கள் துயிலகங்கள்.. எங்கள் இதயங்கள்... என்றும் நினைவோம்... என்றும் கண்ணீர்மழை காணிக்கை செய்வோம்.. வீரவணக்கங்கள்.. விழுதான விருட்சங்களே.. இனித்தூங்கி கிடக்கோம்.. குரல் ஓங்கிக் கொடுப்போம்.. ஈழம்..மலரும்வரை.. செந்நீரை இறைப்போம்.. எம் போரை நினைப்போம் வாழ்க தமிழ்.. …
-
- 8 replies
- 1.8k views
-
-
-
நான் பட்ட -அவமானம் எனக்கு அதுதான் -வருமானம் உறுதியாக எடு -தீர்மானம் வெற்றி என்பது -அனுமானம் வாழ்க்கை என்பது -பிரமானம் உன் முடிவில் வாழ்வது -தன்மானம்
-
- 3 replies
- 4.1k views
-
-
அதிகாலை எழுந்து..... ஆண்டவனை நினைத்து ..... இனிய புன்னகையுடன்..... ஈகை எண்ணத்துடன்...... உழைக்க ஆரம்பியுங்கள்.... அனைத்தும் வெற்றியாகும்.....!!! ^^^^^ இனிய காலை வணக்கம் இனிய உள்ளங்களே இவன் உங்கள் இனியவன் ^^^^^^ இனிய காலைமதியம் மாலை இரவு வணக்கத்தை தெரிவிக்க விரும்பும்உறவுகள் இந்த திரியில் தொடர்ந்து வாழ்த்தலாம் நன்றி நன்றி
-
- 0 replies
- 996 views
-
-
தீப திரு நாளில் ..... தீய எண்ணங்கள் தீயாகட்டும்..... தீய செயல்கள் தீயாகட்டும்..... தீய குணங்கள் தீயாகட்டும்......!!! தீயை போல் நிமிர்ந்து நிற்ப்போம்....... தீயவற்றுக்கு தீயை மூட்டுவோம்...... தீண்டாமைக்கு தீயூட்டுவோம்......!!! தீபாவளி அன்று...... தீனி இல்லாதோருக்கு ..... தீனி போடுவோம்.... தீபத்தை ஏற்றும்போது .... ஒளிரட்டும் அகம்...... அகம் மட்டுமல்ல உள்ளகமும் ...... ஒளிரட்டும்.............!!! & இனிமையான....... இன்பமான....... இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இனியவன்
-
- 2 replies
- 790 views
-
-
இனியது கேட்கின். ------------------------------------------------------------ நிதானமாக நடந்து வந்த குளிர்காலம் மரங்களைத் துகிலுரித்து அவற்றின் கிளைகளெங்கும் தன் நிர்வாண சர்வாதிகாரத்தை நிலைநாட்டியிருந்தது. நகரின் சந்தடிகளையும் வாகன இரைச்சல்களையும் விட்டொதுங்கி நீ நகர்ந்து கொண்டிருந்து கொண்டிருந்தபோது மனித முகங்கள் உன்னிலிந்து தொலைவில் உலர்ந்து ஆவியாகின. புனித மார்ட்டீன் ஓடையின் கரைகளை ஒளித்துவைத்திருந்தது மண்டிக்கிடந்த பனிமூட்டம் புறப்படுவதற்காகவோ அல்லது தரித்து நிற்பதற்காகவோ ஒரு உல்லாசக் கப்பல் அங்கு தனியனாக மிதந்துகொண்டிருந்தது. ஒரு பூனையும் வெளியே புறப்படாத குளிரிரவில் …
-
- 8 replies
- 1.9k views
-
-
இனியவனே உனக்காக நீ இருக்கும் போதும் என்னைப் போல் யாரும் உன்னை நேசிக்கவில்லை நீ இறக்கும் போதும் யாரும் உன்னுடன் இறக்கப் போவதில்லை ஆனாலும் அவர்களுக்கெல்லாம் பயந்து கொண்டு உன்னை நேசிக்கும் என்னை எப்போதும் ஏமாற்றிவிடுகிறாய் நீ உன்னை நான் துரோகி என்று சொல்லவில்லை.... பாவி என்றும் சொல்லவில்லை..... அந்தளவுக்கு என்னிடம் தைரியம் இல்லடா..... மறக்கத்தான் நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை சொல் தாங்கமாட்டேன் கல் இல்லை என் இதயம் கசக்காதே உன் வார்தைகளால் வலிக்குதடா...... பலர் வாழும் உலகம் இது... நீயும் வாழனும் தானேடா எங்கேனும் நீ சந்தோசமாய் வாழ்ந்திடு...
-
- 2 replies
- 914 views
-
-
என் நினைவுகள் நம் காதலையும் மீட்டுப் பார்க்கின்றன தினம் தினம் என் உணர்வுகளை உனக்குக் கூற நினைக்கின்றன என் வேதனைகளை உன்னிடம் இறக்கி வைக்க ஆசைப்படுகின்றன வேதனைகள் வாட்டும் நேரத்தில் உன் தொலைபேசியின் இலக்கத்தை அழைக்கின்றன குரலின் மயக்கத்தில் துன்பங்கள் பறந்து சொல்கின்றன என் துயரங்களை கேட்டு நீ அவதைப்படுவதை என் மனம் ஒத்துக் கொள்ளவில்லை உன் மேல் உள்ள பாசங்கள் அதைக் கூற மறுக்கின்றன என் சோகங்கள் என் பாதையில் தொடரட்டும் உன் பாதைகள் பூவாய் பூக்கட்டும் இனியவனே எங்கிருந்தாலும் நீ வாழ்க!!!!
-
- 7 replies
- 2.1k views
-
-
-
உன் ஒவ்வொரு சந்திப்பின்போதும் காதல் என்னை மொழிபெயர்த்து கவிதையாய் அழகுபடுத்தியது. உன்னை நினைத்துக் கொண்டு என்னைப் பார்தால் கண்ணாடியிலும் நீதான் தெரிகிறாய் உன்னை பார்க்க கவிதையோடுதான் தினம் வருவேன் கண்டதும் மெளனமாய் தலை குனிகிறாய் கண்டபடி வெளியில் சுத்தாதே உன்னில் விழிக்க எல்லாரும் தவம் கிடக்கிறார்கள். -யாழ்_அகத்தியன்
-
- 9 replies
- 1.8k views
-
-
இனியவளே… என்னைக் கோவப்படுத்தி பார்ப்பதற்க்கானா உன் தேடல் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது தோல்விக்கு மத்தியிலும் ம்ம்… உனக்கெப்படி தெரியும் உன்னை யாரும் கோவப்படுத்தினால்தான் எனக்கு கோவம் வருமென்று நமக்குள் பிரிவே வரக்கூடாது அப்படி வந்தால் உன்னால் வரக்கூடாது ஏனெனில் அந்த சோகத்தின் கதாநாயகியாக நீ இருந்துவிட கூடாதென்பதால் உன் கல்மனதுக்குள் நுழையும்வரைதான் யோசித்தேன் எப்படி நுழைவதென்று நுழைந்தபின் மறந்தே போனேன் எப்படி யோசித்து நுழைந்தேனென்று ***************************************************** கவிதைகள் எழுதத் தெரியுமா என்று கேட்டார்கள் நான் தெரியாது என்றேன். அப்ப என்ன தெரியுமென்று கேட்டார்கள…
-
- 5 replies
- 1.3k views
-