கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அம்மா நீ வேண்டும் கூட்டுக்குள் புறா போல் நானும் வாழ்கின்றேன் போகும் இடம் தெரியவில்லை போகவும் யாரும் விடவும் இல்லை அம்மா என்றழைக்க அம்மா இங்கில்லை உறவு என்று எனை அணைக்க எனக்கு யாருமில்லை அரிச்சுவடி படிக்கவில்லை அம்மா நடை பழக்கவில்லை அம்மா முகம் பார்த்து தூங்க ஒரு புகைப்படம் கூட எனக்கில்லை என்னை ஏனம்மா தனியாக விட்டுசென்றாய் நான் உன்னை அம்மா என்று அழைக்கமுன்பே அதை கேளாமல் சென்றாயே உன்னைத்தான் நான் நம்பிவந்தேன் அம்மாவே என்னை எங்கே விட்டுசென்றாய் அம்மாவே அன்னம் உண்ண பழக முன் கஞ்சி குடிக்கின்றேன் அம்மா எனக்கு ஒரு வாய் சோறூட்ட நீ எப்பொழுது வருவாய் அம்மா தரையில் உறங்குகிறேன் அம்மா உன்மடி உறங்க நீ வருவாயா அப்பா எங்கே அம்மா உன்னோடு கூட்டி ச…
-
- 14 replies
- 3.2k views
-
-
போதிமரத் தேவதை..... இளங்கவி - கவிதை..... என் பக்கத்தில் என் கண்மனி நடந்துவர..... கவலையான முகத்திற்காய் காரணம் கேட்கிறேன்...... சொல்லாமல் தொடர்கிறாள்..... காற்றின் வேகத்தில் அவளின் கண்களுக்குள் ஏதோ சென்றுவிட...... முடியாமல் கண்ணை மூடுகிறாள்..... நான் பதை பதைத்து அவளின் பக்கத்திலே சென்று என்ன என்று கேட்டு அவள் கண்ணை ஊதுகிறேன்..... விடு என்னை என்று வெறுப்பாக விலகுகிறாள்..... கண்ணில் தூசி விழுந்ததற்கே இப்படித் துள்ளுகிறாய்....! தாய் மண்ணில்.... குழந்தைகளின் மண்டையில் கொத்துக் குண்டல்லா போட்டான்.... நீ என்ன செய்தாய்....? மூன்று லட்சம் மக்கள் முகாமில் ஒரு நேர உணவின்றி முடங்கிக் கிடைக்கையிலே நீ என்ன செய்கிறாய…
-
- 14 replies
- 1.3k views
-
-
நண்பி..... நண்பி......... நட்பு.... சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு உன்னை காணும் வரை ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே அன்பு காட்டும் உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன் அன்பை எண்ணி வியந்து போகிறேன்.... நண்பி......... மொழிகளோ.... தூரங்களோ........ வயதோ....... மற்ற எதுவுமே - நட்பை எதிர் பார்ப்பதில்லை... உன்னாலே புரிந்து கொண்டேன்.. என் வாழ்க்கைத் தோட்டத்தில் எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால் உன் நட்பைப்போல் எதுவும் மலர்ந்து மணம் வீசவில்லை கால வெள்ளத்தில் சிதறுண்டு போகும் உறவுகளில் நண்பி.............தொடர்வாயா உன் நட்பை இறுதி வரை..........?
-
- 14 replies
- 3.5k views
-
-
உள்ளம் பயந்து ஊமையாகுது கள்ளப் பெண்ணவளிடம் காதல் கொள்ளுது கொடி முல்லையென ஆடி வருவாள் குயிலின் நாதமெனக் கூவி வருவாள் செம்பருத்தி அவளென்னை ஊடல் செருமுனைக்கு* அழைப்பாள் பின்னே ஓடி வந்து என்னைக் கட்டி அணைப்பாள் நீள் முடி கோதி நிம்மதி நாடி புன்னகை செய்வாள் பின்னே பெருநகை செய்து என்னை ஏளனம் செய்வாள் முகத்திரண்டு கருவண்டு என்னை கிறங்கடிக்க வைக்கும் மூக்குத்தி மின்னொளியை மழுங்கடிக்கச் செய்யும் பேனாவை எடுத்து சிந்தனைக் குதிரையை தட்டிக் கொடுத்து புதுக் கவிதை ஒன்று எழுத்தில் வடிப்பேன் பூவை அணைத்து உயிர்க் கவிதை ஒன்று …
-
- 14 replies
- 2.1k views
-
-
ஈழத்தின் கரவெட்டியில் இருபத்தேழு ஆண்டுகள் முன் இன்னுயிராய் வந்துதித்தான் ஈழமகன் முருகதாசனவன் பத்து மாதம் பக்குவமாய் பாதுகாத்துப் பெற்றுன்னை பட்டங்கள் பெறவைத்து பார்புகழ வைத்தார் உன் பெர்றோர் வன்னியிலே வஞ்சகர் வதைகளில் சிக்கி வாழ்விழந்து எம்மினம் வீழ்தல் கண்டு வெந்தழலாய் உன்மனது கோபம் கொண்டதனால் கொடியவர் கொட்டம் அடக்கிட ஐநா முற்றலிலே உன் உடல் எரித்து உயிர் நீக்கி உறங்கச் சென்றனையோ? உயிருக்காய் உடலுக்காய் உணவுக்காய் உறவுக்காய் உயிர் காக்கவென உழைத்திடுவோர் மத்தியிலே உன் தாயைத் தந்தையை ஓடிவிளையாடிய தங்கையை தம்பியை நீ மறந்து துடித்த எம் இனத்துக்காய் தீயினில் குளித்ததை எம் அகக் கண்ணால் கண்டு நாமும் துடிக்கிறோம் உன்னைப் போல் ஒருவனின் உத்தமனி…
-
- 14 replies
- 712 views
-
-
அன்பென்றால் அம்மா அறிவென்றால் அம்மா அவனியில் அவள் அன்றி அரவணைப்பார் யாரம்மா துணையென்றால் தூண் அம்மா துணிவோடு தானம்மா தூரதேசம் ஏனம்மா துரத்தினதயே பாரம்மா செல்ல மகன் நானம்மா சென்றதனால் தானம்மா சொந்தமென வந்த செல்வம் செய்த வேலை சோகம்மா
-
- 14 replies
- 2.6k views
-
-
ஓஓ..... என் பழையவளே வருடங்கள் எத்தனை போனபின்பும் உன்நினைவுகளில் நான் என்நினைவுகளை நீ எத்தனையாவது பக்கத்தில் பதிந்து வைத்திருக்கறாய் உன்பெயரை மறக்க நான்உண்ட தூக்கமாத்திரை கூட தோத்து போனதே நீ மாறியிருக்கிறாய் கண்ணருகே கருவளையம் கருங்கூந்தல் நிறம்மாறி ஆனால் உதடுகள்மட்டும் அதேசிரிப்பு இப்போதும் நாம் பேச போவதில்லையா?? பேசமுடிந்தபோது பிரிந்தவர்கள் பேச முடியாத போது சந்திக்கிறோம் உன்நினைவுகள் உன்குழந்தையைபோல உறங்கியிருக்கலாம் ஆனாலும் ஒரேயொரு கேள்விதான் நீயும் என்னை காதலித்தாயா?? இது மீள் பிரசுரம் என்னுடைய பழைய வலைப்பக்கத்தை நோண்டிபொழுது அகப்பட்டது
-
- 14 replies
- 1.1k views
-
-
ஒரு மார்கழி இருபத்தாறில்தான், பேராறுபோல் பெருக்கெடுத்தாய்.... எம் ஊருக்குள்ளே! பொறுமையாய் பொறுத்தாழ்ந்த பூமித்தாயை... நீ கண்ணீரால் நனைத்தது அன்றைக்குத்தான்! சொல்லாமல் கொள்ளாமல் வந்து, எங்களையெல்லாம் கொன்று போட்டாய்..! இத்தனைநாளாய் உன்னில் அள்ளியெடுத்த செல்வத்தையெல்லாம், ஒற்றைநாளில் மொத்தமாய் நீ அள்ளியெடுத்தாய்..!! கடல்தாயே... மறந்துவிட்டாயா? சுனாமியென்றால் எமனின் பினாமியென்று அன்றைக்குத்தான் தெரியும்! என்றுமே...இயற்கையைப் போற்றினோம்...! அன்றுதான் உன்னைத் தூற்றினோம்...!! என் பாட்டன் உன்மேல் வலைவீசினான், என் அப்பன் உன்னில் தூண்டில் போட்டான், எம் பிஞ்சுக்குழந்தை.... உனக்கு என்ன செய்தது? நீ அலையலையாய் அடிக்க... நுரைக்குமிழி பிடித்து விளையாடிய பிஞ்சுக…
-
- 14 replies
- 1.8k views
-
-
-
- 14 replies
- 1.7k views
-
-
-
- 14 replies
- 2.1k views
-
-
எங்கு போனீர்கள் இங்கு நாம் சாகையிலே.... மூச்செடுத்து விட்டதுபோல்-வருசங்கள் முடிந்தோடி விட்டாலும் நேற்றுப்போல் இருக்கிறது-நெஞ்சில் நெருப்பெரிக்கும் நினைவுகள் ஊற்றுப்போல் மனதில்தோன்றி-ஓயாது உள்ளத்தைக் குடைந்தெடுக்கும் தோற்றுப்போன நாட்களின் -மாறாத் தொடரும் உயிர்வலிகள் மண்ணிண் காவலர்கள்-விடுதலைக்காய் மரணித்த தேசத்தில் இன்னும் புல்பூண்டு-முளைத்து இயற்கை சிரிக்கவில்லை கண்ணில் நெருப்பெடுத்து-மதுரையைக் கண்ணகி எரித்தகதை இன்னும் சரித்திரத்தில்-படிக்க இலக்கியப் புத்தகத்தில் எண்ணுக் கணக்கற்று-கண்ணகிகள் எங்கள் தேசத்தில் மண்ணுக்கு இரையானார்-மதுரைகள் இன்னும் எரியவில்லை வருசம் விழாஎடுத்து-நேர்த்திக்கு வளர்த்த கடாவெட்டி புருச…
-
- 14 replies
- 2.2k views
-
-
கடலை விட்டுப்போன மீன் குஞ்சுகள் கரையில் நின்று நீந்திக் கொண்டிருந்த மீன் குஞ்சுகள் சந்தோசத்தில் துள்ளி விழுந்து தரைக்கு வந்தன கடற்கரை மணலில் புரண்டு ஆசையை அள்ளிப் பூசின குழந்தைகளோடு பட்டம் விட்டு விளையாடி நாளை வருவதாகக் கூறி நடந்து சென்றன வெய்யிலில் நெடுஞ்சாலையில் நின்று வியர்த்து ஐஸ் குச்சியொன்றை வாங்கிச் சூப்பி கடல் நீரெல்லாம் உப்பென சொல்லித் துப்பின கோபுரக் கலசத்தின் விளிம்பு வரை ஏறி வியந்து, விசில் அடித்து மகிழ்ந்தன இலைகளின் மறைவில் அழகியை வீழ்த்தி இதழைக் கவ்விச் சப்பிய மனிதனையே பார்த்து வாய்பிளந்து முனகின கடலுக்கு அன்று திரும்ப மனமே இல்லை இருளில் பழுத்த இலைகளில் ஏறி கொட்டக் கொட்ட விழித்தே இர…
-
- 14 replies
- 3k views
-
-
அவளும் அலரி மாளிகை விருந்தும்...! -எஸ்.ஹமீத்- பாழும் போரில் பதியிழந்து பணியிழந்து நிதியிழந்து நிம்மதியிழந்து நின்ற வேளை சுதந்திரப் பசியெழுந்தது பெரிதாய்...! ***** அடிமைத் தளையறுக்கும் விடுதலைக் கனவால் ஆயுதங்களுடன் உறவாடி- ஆவேசத்துடன் போராடி- இரத்தத்தில் நீராடி- எதிரிகளைப் பந்தாடி ஈற்றில்... இலட்சியக் கோட்டை இடிந்துவிழ- தோற்றுத் துவண்டு சரணடைந்து- இன்றோர் மொட்டைத் திரியாய்- பட்ட கொடியாய் கெட்ட குடியாய்- ஓலைக் குடிலுள் ஒடுங்கிய வாழ்வு...! ***** சீராட்டி வளர்த்த சின்னக்கா, சிறு வயதிருந்தே சேர்ந்து வாழ்ந்த சினேகிதிகள், அப்பாவின் அண்ணன்மார் தம்பிமார் அவர்தம் குடும்பத்து அங்கத்தவர்கள் இன்னும்... உற்றார் உறவினர் ஊராரென அத்தனை பேரும் விட…
-
- 14 replies
- 1.4k views
-
-
மழை...... கவிதை - இளங்கவி மனதைத் தாலாட்டும் இயற்கையின் இன்பம் நீ...... மகிழ்வான சிறுவயதின் என்னை மகிழ்வித்த சொர்க்கம் நீ..... சிறுவனாய் நான்..... விளையாடி வரும்போது வெப்பமாகும் என் தேகம்..... மேலிருந்து நீ வந்து வந்து குளிரவைப்பாய் என் தேகம்.... என் சூடான சுவாசமும் சில்லென்று குளிர்ந்துவிடும்.... அதை இன்றும் நினைத்தாலும் ஜில்லென்று சுகம் தரும்.... இளைஞனாய் நான்...... தெருவோரம் அமர்ந்து தேடுவேன் என் பேரழகை.... திடீரென்று நீ வருவாய் சினத்தையும் நீ தருவாய்..... அந்த நேரம் என் அழகுச்சிலை வருவாள்... நீ துளிகளாய் அவள் முகத்தினிலே தொட்டதுமே ஒட்டிடுவாய்.... ஒட்டிய துளியொன்று அவள் மூக்குவளி இறங்கிவந்து அவள் …
-
- 14 replies
- 2k views
-
-
-
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஒரு ஈழத்தமிழனின் வாழ்த்து ரோஜாவில் பூத்த ராஜாவே உங்கள் இசையோடு புலம்பெயாந்த ஈழத் தமிழனின் வாழ்த்துக்கள். நூறு கோடி இசைத் தொகுப்புகளால் உங்கள் முகம் உலகமெங்கும் விரிகிறது. இசைக்கு மொழியில்லை என்று உங்கள் இசையே உலகுக்கு புரிய வைத்தது இசைக்கு ஏது எல்லையென்று உலக விருதுகளே உங்களைத் தேடி வருகிறது. ராஜாவின் இசைத் தாலாட்டில் நாங்கள் நனைந்தாலும் உங்கள் இசைகேட்டபோது தான் துள்ளிக் குதித்து எழுந்தோம். தாயகத்தைப் பிரிந்து நாங்கள் குளிர்க்கூடுகளில் வாழ்ந்தாலும் உங்கள் இசையே எங்கள் வீடுகளில் ஊர்வலம் போகிறது. நீங்கள் மீட்டுகிற கறுப்பு வெள்ளைக் கட்டைகள் அது ஏழு கட்டையோ அல்லது எட்டுக்கட்டையோ …
-
- 14 replies
- 3.2k views
-
-
பாரதியார் காதல் கவிதைகள் சொல்லும் ரசனை காதல் செய்வீர் காதல் செய்வீர் காதல் செய்வீர் 😀
-
- 14 replies
- 6.8k views
-
-
நீயல்லவோ உயிரே ....!!!***பத்து மாதம் என்னை சுமந்து பெற்றவள்என் உயிர் தாய் ....!!!வாழ்நாள் முழுதும் உன்னைசுமக்க இருக்கும்என்னை என்னவென்று ...அழைப்பாய் உயிரே ...?உயிரை உயிரால் எடுத்து ...என் உயிரை சுமப்பவளே ....தாயின் இன்னொரு பிறப்பு ....நீயல்லவோ உயிரே ....!!!+கே இனியவன் காதல் கவிதைகள் உன்னை வயிற்றில்சுமக்கும் பாக்கியம்தாய்க்கு கொடுத்தாய் ....!!!உன்னை தோளில்...சுமக்கும் பாக்கியம்தந்தைக்கு கொடுத்தாய் ...!!!உன்னை இதயத்தில் ....சுமக்கும் பாக்கியத்தை ...எனக்கு கொடுத்தாய் .....!!!வாழ்க்கை முழுவதும் ....ஏதோ ஒருவகை சுமை ....காதல் எல்லா சுமைகளின் ....கூட்டு மொத்தம் ....!!!+கே இனியவன் காதல் கவிதைகள் வளர விட்டேன் காதலை ....மனதில் அதுவே இன்றுஎன்னை மாற்றி சுற்றவைத்து விட்டது....!…
-
- 14 replies
- 9k views
-
-
கொடூர முகங்கள் கவிதை - இளங்கவி புலியாய் பாய்ந்தவள் பிணமாகிய பின்னும் அவளின் அம்மணத்தை ரசிக்கும் கொடூர முகங்கள்..... தமிழ் மானம் காக்க தன்னுயிர் தர நினைத்தவள் என்றோ நினைத்திருப்பாள் தன் உயிர்தான் முதலில் போகுமென்று.... உயிர் போனபின்னும் பிணம் தின்னிக் கழுகுகள் சுற்றி நின்று தன் பிணத்திலும் பெண்மையை ரசிக்கும் கூட்டத்தின் நடுவே தன் குருதி ஈழமண்ணை நனைக்க கருகிய பூக்களாய் கிடப்பாளென்று கனவிலும் நினைத்திருக்காள்......! மாவீரர் கல்லறையில் மரியாதையாய் துயில்கொள்ள நினைத்தவளுக்கு மானமில்லா கொடூர முகங்களின் கையடக்க தொலைபேசியில் புகைப்படமாய் கிடப்பாளென்று நினைத்திருக்கவே மாட்டாள் தான்....... பூப்படைந்த நாள…
-
- 14 replies
- 2.2k views
-
-
படித்ததில் மனதுக்கு பிடித்திருந்துச்சு, இணைத்துவிட்டேன் எங்கோ பிறந்தோம்! எங்கோ வளர்ந்தோம்! அனைவரும் இங்கே! சந்தித்துக் கொண்டோம்! இதயத்தை நட்பால சிந்தித்துக கொண்டோம்! முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை! இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை! எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை! ஏமாற்றங்கள் சிறிதுமில்லை! அவரவர் கருத்துக்களை இடம் மாற்றிக்க கொள்வோம்! பாரட்டுக்களை பரிமாறிக்க கொள்வோம் ! சின்ன சின்ன சண்டைகள் இடுவோம் சீக்கிரத்திலேயே சமாதானத்திற்கு வருவோம்! கவலைகளை கிள்ளி எறிவோம்! இலட்சியஙகளை சொல்லி மகிழ்வோம்! நன்மைகள் வளர முயற்சிப்போம்! நட்பால் உயர்ந்து சாதிப்போம்! நன்றி - adhikesan.blogspot.com
-
- 14 replies
- 1.7k views
-
-
அகதிகளாகி அலைகடல்-ஏறி அக்கரை சேர்ந்த ஓடங்களே.... உடமைகள்--இழந்து உறவினைப்-பிரிந்து உடல்களைச்-சுமந்த ஜீவன்களே.... உங்கள் அழுகையின் கண்ணீர் கடலுடன்-கலந்து உப்பாய்போனதோ சொல்லுங்களேன்.... இடை நடுவில் பகையது வந்து கதையை முடிக்குது பாருங்களேன்.... அவர்கள் உதிரங்கள்-பெருகி கடலுடன் கலந்து மீன்களும் கலங்குதோ சொல்லுங்களேன் .... கரைகள் சேர்ந்த உயிர்கள் கூட சுகந்திரமின்றி முடங்கி இருக்குது பாருங்களேன்
-
- 14 replies
- 1.8k views
-
-
எதுவரை...... கவிதை - இளங்கவி குளிர் நிலவை கைகளில் ஏந்தி.... கோடி மின்மினியை வானத்தில் காட்டி.... அப்பா வந்தால் அடித்திடுவார் சாப்பிடடி என் செல்லம் என்பாள்.... சோறுடன் சேர்த்து தமிழையும் ஊட்டிடுவாள்..... இது ஈழத்து மண் கண்ட இனிய பொழுதுகள்..... இன்று கனவுகளில் மட்டும் நாம் காணும் நினைவுகள்..... வாழ்ந்த நிலங்களெல்லாம் எரி நிலமாய் மாறிவிட..... எமை வாழவைத்த வயல்களெல்லாம் கந்தகத்தில் புதைந்து விட... நம் பிணக்குவியல் மேலே புத்த விகாரைகள் எழுகிறது.... எம்மை அடைத்து வைத்த சிறைகள் பூட்டியே இருக்கிறது.... அன்று உணவூட்ட நட்சத்திரம் அழைத்தாள்..... அருகில் இருத்திட நிலவையும் அழைத்தாள்.... இன்று முகாமில் நட்ச…
-
- 14 replies
- 1.5k views
-
-
நினைவுகள் வருது நினைவுகள் வருது நனவாய் இருந்த நினைவுகள் இன்று கனவாய் வருது கடலின் அலைபோல் மழைபோல் பொழிந்து கவியாய் வருது பிறந்த மண்னில் தவழ்ந்த ஞாபகம் நினைவினில் வருது மயிலின் நடைபோல் நடைபயின்ற செம்மண்வாசம் நறு மணமாய்வருது கிளியின் மொழிபோல் தமிழ் சொன்ன முதல் ஆசான் நினைவுகள் வருது பொழியும் மழையில் ஆடும் மயில்போல் மழையில் நனைந்த நினைவுகள் வருது ஆலமரத்து விழுதில் ஊஞ்சல் ஆடிய நினைவு கடல்அலை போல் அடி வருது நிலாவின் முற்றத்தில் உறவுகள் சேர்ந்து கூழ் குடித்த நினைவுகள் கண்ணீராய் வருது திருவிழாக்காலத்தில் கன்னி அவளைக் காதல் செய்த நினைவுகள் வலியாய் வருது பள்ளி நாட்களில் தோள் தோள் நின்ற …
-
- 14 replies
- 2.3k views
-
-
பொறுமைகாத்த தமிழன் படை பொங்கி எழுந்தது தலைநகரில் வெறியர்படை தலைகள் தெறிக்குது மகிந்தாவின் சிந்தனையாம் மதிகெட்டு ஓடுது தலைவரின் சிந்தனையில் தமிழர்படை முன்னேறுது போர்என்று வந்தபடை போராயுதம் போட்டு ஓடுது கடலிலே கடற்புலிகள் கடல்வீரம் காட்டுது கடற்படை வெறியான் கடற்கலங்கள் வெடித்துசிதறுது தற்காப்புப் போரில் தமிழன்படை வென்றுகுவிக்குது ஓயாதலைகள்5 இல் வெறியர்படை ஓடுதுஅங்கே ஓடுதுவிரைந்து இந்தமீட்புப்போரில் தம் உயிர் ஈந்த இம் மாவிரருக்கு வீரவணக்கம்
-
- 14 replies
- 2.6k views
-
-
மனத்தின் ரணங்களால் மரணத்தின் வாசலில் மண்டியிட்டு தினமும் கண்ணீர் வடிக்கும் நான் ஒரு பெண் என்னோடு கதை ஆனால் வதைக்காதே நான் ஒரு நிலவு என்னை ரசித்திடு தொட நினைக்காதே நான் ஒரு கிளி எனை பறக்கவிடு அடைக்க முயலாதே நான் ஒரு வாசமுள்ள பூ மோர்ந்து பார் கசக்கி எறியாதே நான் ஒரு புல்லாங்குழல் என்னை வாசித்திடு முறித்து எறியாதே நான் ஒரு புரியா கவிதை எடுத்து படி மடித்து வீசாதே நான் ஒரு நெருப்பு எரிய விடு அணைக்காதே தயவுசெய்து தள்ளி நில்லு எனை அணைக்காதே மரணத்தின் வாசலில் நான்
-
- 14 replies
- 2.4k views
-