கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பிறந்த நாட்டில் .... பிறந்த ஊரில் .... ஒருபிடி மண் தான் .... எனக்கு .... பொன் விளையும் பூமி .....!!! & கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -01 --- பேசும் மொழிகளில் .... எந்த மொழியில் .... கலப்படம் இல்லையோ .... அந்த மொழி .... எனக்கு தாய் மொழி ..........!!! & கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -02 மேலும் தொடரும் ....................
-
- 6 replies
- 891 views
-
-
ஓரு தடவை உன்னைப் பார்த்தேன் -ஆனால் இப்போழுது உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது! இது நட்பா? காதலா? இல்லை என் சொந்தமா? - ஆனால் இப்போழுது என் இதயம் மட்டு;ம் உன்னிடம் என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன் எனது தூக்கத்தை கலைக்கிறாய்? எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே! உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ வரும் வரை பாதுகாப்பேன்! உன்னுடன் இருக்கும் பொழுது என் இதயம் எதுவும் சொல்லவில்லை உன்னைவிட்டுப் பிரிந்தவுடன் என்னிடம் ஏதேதோ சொல்கிறதே! இவை யாவும் எனக்கு மட்டுமா? இல்லை உனக்கும் தான் பிரியா இவருடைய முதல் கவி இதுவென நினைக்கின்றேன்
-
- 6 replies
- 1.7k views
-
-
இரத்தம் எழுதிய கவிதை வ.ஐ.ச.ஜெயபாலன் (1985ல் குமுதினிப் படுகொலைச் சேதி கேட்டு எழுதிய கவிதை) மே பதினைந்தில் இந்துட்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய தோரணங்களும் கொடிகளுமல்ல. உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி! கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில் கடித்துக் கிடந்த நாவுகள் தோறும் இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன். போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என் மூதாதையரின் கிராமியப் பாடலில் முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன். கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில் தலைவிரித்தடின கறுத்த பனைகள். நெடுந்தீவின் பசும்…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஈகத்தின் சுடரே! மக்களுக்காக எரிதனலேந்தி மண்ணிலே சாய்ந்த மைந்தனே முருகா துன்பமே சூழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வினை மாற்ற தீயினைச் சூடிப் போரினைத் தொடுத்து பொன்னெழுத்துகள் சூடி மண்ணிலே சாய்ந்தாய்! தாய் மண்ணிலே இன்றும் துன்பங்கள் சூழத் துயரங்கள் ஆளத் துடிக்கிறார் மக்கள் வடிக்கிறார் உதிரம் உதிரத்தால் உறைந்த உயிரெனும் தாய்நிலம் அடிமையாய் இன்னும் அழிகின்ற நிலையாய் தொடர்வதும் ஏனோ! ஈகங்களாலே ஈன்ற எம் தேசம் வேடங்களாலே வேற்றவராள மாற்றான் போன்று மகுடிக்கு ஆடும் பாம்புகளான தலைமைகளாலே விடையென்று வருமென்று வானகம் இருந்தே முருகதாசனோ தவிக்கின்றான்! ஈகத்தின் சுடரே தலைகுனிகிறோம் தம்பி அங்கிங்கொன்றாய் எழுகின்ற தமிழனம் …
-
- 1 reply
- 712 views
-
-
தமிழ் தாய் ஈன்ற வீரர் தமிழீழம் தாங்கிய வீரர். அவர்கள் தான் எம் மாவீரர்கள். தமிழுக்காய் தமிழ் மண்ணுக்காய் தம் சுகபோகங்களை துறந்து காவியம் படைத்தவர்கள். அவர்கள் தான் எம் மாவீரர்கள். தம் இனம் தரணியில் தன்மானத்துடன் வாழ்வதற்காய்’ தம் உயிரைத் தியாகம் செய்தவர்கள் அவர்கள் தான் எம் மாவீரர்கள். தமிழர்கள் அடிமைப்படுவதையும் தம் தாயகம் பறிபோவதையும்-கண்டு வீறுடன் துடித் தெழுந்தவர்கள். அவர்கள் தான் எம் மாவீரர்கள். தானைத் தலைவன் வழியில் தடைகள் பல தகர்த்து தரை கடல் வான் படைகளாகவும் கரும்புலிகளுமாகி காவியமானவர்கள் அவர்கள் தான் எம் மாவீரர்கள் மறத் தமிழனாய் வாழ்ந்து காலன் வருகின்றான் என்று பின்வாங்காது களமாடி காவிய நாயகர்கள் ஆனவர்…
-
- 0 replies
- 657 views
-
-
எனக்கும் அவளுக்கும் .... உயிர் பிரியும்வரை .... காதல் பிரியாத காதல் .... இருக்கிறது .....!!! அவளூக்கு ஏதும் நடந்தால் .... நான் இறந்து பிறப்பேன் .... எனக்கு ஒன்றென்றால்.... அவளும் இறந்து பிறப்பாள்.....!!! நாம் ஒருவரை ஒருவர் .... சந்திக்கும்போது ..... கீறியும் பாம்புமாய் .... இருப்போம் -காதல் நகமும் சதையும்போல் இனிமையாய் இருக்கும் ....!!! + கே இனியவன் ஈகோ காதல் கவிதை
-
- 0 replies
- 2.4k views
-
-
{சோழன் ஆண்ட தமிழன் வாழ்ந்த பூமியில் கப்பலேறி குடியேற வரும் அரபுத் திமிர்கள்.. பேரீச்சை மரங்கள். ஈழத்தின் கிழக்கின் காத்தான்குடி என்ற ஊர் இன்று முழு முஸ்லீம் கிராமமாகி அரபு வடிவம் எடுக்கிறது} அரபிய மணற்படுக்கையின் அற்புதங்களே ஈச்சை மரத்து வேர்களே.. கூலிகளாய் நாம் அங்கு சிந்திய வியர்வை சிதறிய நீரில் வளர்ந்து பெருத்த திமிர்களே..! எட்ட வளர்ந்து கனி தரும் போது ஒட்டகமாய் தாங்கி நின்று பறித்துப் பெட்டியில் அடைத்து ஏற்றி விட்டு நாம் கூனி விட்டோம்..! எஜமானர்களின் எண்ணெய் காசில் நீரோ நிமிர்ந்து நின்று மினுமினுக்கிறீர்..! விமானம் ஏறி ஆசை கொண்டு அரபுலோகம் வர தங்கை மீது பழிமுடித்து அவள் தலை கொய்தீர்..! நீரோ.. வேரூன்ற கப்பலேறி தமிழீழம் வருகிற…
-
- 82 replies
- 6.3k views
-
-
ஈனக்குரல் - தேவஅபிரா அலையிழந்து அடங்கியகடல் ஆடையிழந்து கூடாகிய உடல் நிலைகுலைந்து நின்றது நீயும் நீ அவளில்லை. அவள் நீயில்லை. எவளில்லை நீ? எவளென்றாலும் கறைபடிந்த உள்ளாடையுடன் காத்திருப்பர். கூடு கலைந்து ஒடியநாளில் கைவிடப்பட உயிர்களிடம் எஞ்சியிருந்தவற்றைக் காவி வந்தவர்கள் எவருமில்லை படிமங்கள் ஆயிரம் புனைவுகள் கோடி போரையும் வாழ்வையும் சொல்ல முடிந்த கவிஞர்கள் இங்கில்லை. யாரையும் நோகாது செல்லக் காற்றுக்கு முடியும்; கண்ணீருக்கு முடியாது. பெண்ணே நீ நின்ற கடல் சேறானது. உன்னைக் கைவிட்ட காலம் ஊனமானது. செய்யாதன செய்த அவன் அரியாசனம் பற்றி எரிகவென்று அறம்பாடச் சொல்வறண்டு போன கவிஞனடி நான். பொன்னே பொய்வாழுதடி போடி போன இலட்சம் உயிர்களோ…
-
- 0 replies
- 509 views
-
-
ஈனர் மனம் கொழுத்தி நீதியை காத்திடம்மா! ஈனர் மனம் கொழுத்தி நீதியை காத்திடம்மா! நீதியின் தாயென நிமிர்ந்த தெய்வமே கண்ணகைத் தாயே! வரணியில் உன் சந்நிதியில் சாதிய திமிரை எப்படி அனுமதித்தாய்… ஊரெல்லாம் கூடி இழுக்கின்ற தேரை பாரமிழுக்கும் யந்திரத்தால் இழுப்பிக்க நீ எப்படி அதில் அமர்வாய். நிச்சயமாய் நீ அங்கு இல்லை என்பேன்! நீதி செத்த கோபத்தால் பாண்டியன் நாடெரித்து மனம் ஆறாமல் பாம்பாகி எங்கள் ஈழநிலம் அடைந்தாய் இங்கும் செட்டிச்சி பெண் தெய்வமாவது எப்படி என உருமாற்றியவர் நாண உருக்குலையாது நீ நிம…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈமத்தாழி - கவிஞர் தீபச்செல்வன் மஞ்சளும் சிவப்புமான ஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாக துயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான் யாரோ ஒரு சிறுவன் அழ முடியாதவர்களுக்காய் வானம் உருக விளக்குகளின் ஒவ்வொரு துளி நெருப்பிலும் தெரிந்தன களம் சென்ற வீரர்களின் புன்னகை மற்றும் இறுதிக் கையசைப்பு துயிலும் இல்லங்களின்மேல் முகாங்கள் கல்லறைகளின் மேல் காவலரண்கள் சிதைமேடுகளின் மேல் துப்பாக்கிகள் மண்ணுக்காய் மாண்டுபோனவர்கள் உறங்கும் மயானங்களைகளிலும் துப்பாக்கிகள் புதையுண்ட சிதைகளோடான யுத்தம் இன்னும் முடியவில்லை வாழ்தலும் இல்லை நினைவுகூர்தலும் இல்லை கண்ணாடிகளெங்கும் தெறிக்கின்றன தடைசெய்யப்பட்ட முகங்கள் சிதைக்கப்பட்ட கல்லறையை சுற்…
-
- 0 replies
- 593 views
-
-
ஈமத்தாழி - தீபச்செல்வன் ஈமத்தாழி மஞ்சளும் சிவப்புமான ஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாக துயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான் யாரோ ஒரு சிறுவன் அழ முடியாதவர்களுக்காய் வானம் உருக விளக்குகளின் ஒவ்வொரு துளி நெருப்பிலும் தெரிந்தன களம் சென்ற வீரர்களின் புன்னகை மற்றும் இறுதிக் கையசைப்பு துயிலும் இல்லங்களின்மேல் முகாங்கள் கல்லறைகளின் மேல் காவலரண்கள் சிதைமேடுகளின் மேல் துப்பாக்கிகள் மண்ணுக்காய் மாண்டுபோனவர்கள் உறங்கும் மயானங்களைகளிலும் துப்பாக்கிகள் புதையுண்ட சிதைகளோடான யுத்தம் இன்னும் முடியவில்லை வாழ்தலும் இல்லை நினைவுகூர்தலும் இல்லை கண்ணாடிகளெங்கும் தெறி…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
-
ஈரமான ரோஜாவே மலரே! தென்றல் தேடிய முகவரி நீ. முகவரி மாறிய தென்றலின் முதல் வரியும் நீ. தென்றல் தீண்டிட நீ மலர்ந்தாய் தென்றல் உன்னைத் தொட்ட போது நீ நிலை தடுமாறினாய் தென்றல் சுமந்த நீரால் நீ நனைந்தாய். தென்றல் உன்னை அணைத்தபோதும் நீ ஏனோ தலை குனிந்தாய். மழை கழுவிய மலரே உன் வாசம் போனதாய் வருந்தாதே வாழ்வு முடிந்ததாய் புலம்பாதே மலர் தழுவிய என்னில் சுவாசமாய் உன் வாசம் இன்று நான் மண்னோடு உன் வாசம் மீண்டும் காற்றோடு நாளை நீ என்னோடு உன் வாசம் அதே காற்றோடு கலங்காதே உனக்கும் எனக்கும் மட்டுமல்ல உலகிற்கே இதுதான் நியதி
-
- 19 replies
- 6.5k views
-
-
நீ வீசும் காற்றுக்காய் காதலால் துளைக்கப்பட்ட குழலே என் இதயம் * நீ எனக்குக் கொடுத்த தண்டனை எது தெரியுமா..? கடலில் வாழ்ந்த என்னைக் காப்பாற்றுகிறேன் என தொட்டிக்குள் கொண்டு வந்ததுதான் * நீ என்னில் முளைத்ததும் நான் உன்னில் முளைக்காமல் போனதிலும் தெரிந்து கொண்டது ஒரே விதையென்றாலும் வேர்விட எல்லா மண்ணும் சம்மதிப்பதில்லை என்பதுதான் * உன்னால் புகைக்கப்பட்ட சிகரட் நான் என்றாலும் உனக்கு முன்னே இறந்துபோன பாக்கியசாலி நான் * என் வாழ்க்கை எனும் பேருந்தில் இறங்கிப் போன மறக்க முடியாத சாரதி நீ -யாழ்_அகத்தியன்
-
- 9 replies
- 1.8k views
-
-
ஈரவிழி உலர்த்தி இகப்பரப்பை உலுப்பு! பண்பட்டுப் பண்பட்டு புண்பட்டுச் சிதைகிறோமே... பார்த்தெவரும் விழி நனைத்து வேதனைகள் தீர்த்தாரா? மண்பட்டு மரணம் தரும் கந்தக அமிலங்களைக் காட்சிப் படுத்தி எவரேனும் கணக்கெடுத்துக் கொண்டாரா? தாயக புூமியிலே.. பேய் ஏவும் கூர்முனைகள் பிண ஓலம் வளர்க்கிறதே... தீ ஏறி உலவிட - எம் தேச முகம் கருகிறதே.. வாயாறச் சொல்லின்றி விம்மி அழும் குரல் கொண்டு வீணர்களின் வேட்டுக்களால் - எம்மினம் வீதியெங்கும் சாகிறதே.... கணப் பொழுதும் இடைவிடா வேதனையைச் சுமத்தி - எங்கள் இனத்துவாழ் குடிநிலங்கள் பறித்தெடுக்கப் படுகிறதே.. இனவாதக் கோரப் பேய் - எம் இன இரத்தம் பருகத் தினவெடுத்துத் தினவெடுத்துத் திருமலையில்…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஈர்பத்து ஆண்டுகளில் திலீபனின் நினைவுகள். தித்திக்கும் பெயர்கொள் தேன்தமிழ் மறவா! திலீபா! சென்றனவே ஈர்பத்து ஆண்டுகள் எத்தனையோ பொன்மொழிகள் உதிர்த்தாய் திருவாயால் ஈழத்தாய் ஈன்றெடுத்த அரும்பொருட் பேறே! அத்தனையும் ஆணித்தர மாயெம் நெஞ்சினில் ஆழப் பதிந்து அகலவிரி கின்றனவே பத்தரை மாற்றுத் தங்கம்நீ புரிந்த பாங்கான ஈகைக்குப் பாரினில் நிகருண்டோ? கல்விச் செல்வமே கொடையெனக் கொள் கவினுறு இனத்தின் எண்ணத்தை உடைத்துத் துல்லியமாய் உணர்ந்தாய் தமிழீழ விடுதலையே தொடரும் வாழ்விற்கு முதன்மை வகிக்குமென. நல்கினாய் இன்னுயிரை இந்தியா நாணமுற நலமிகு உடலையும் ஈய்ந்தாய் மாணவர்க்காய் வல்லவனே இத்தகு கொடையினை அளித்திட வையகத்தில் யாருளர்? வணங்கினோம் வந்திடுவாய்! …
-
- 0 replies
- 829 views
-
-
-
வாழும் வயது அது பார்த்தீபா .. வண்ணங்கள் கோடி உண்டு உலகில் .. எண்ணங்கள் சுமந்து நீயும் .. எம்மைப்போல் வாழ்த்திருக்கலாம் .. திண்ணமாய் நீர் எடுத்த முடிவு .. கொள்கையின் பற்றும் பிணைப்பும் .. இலக்கினில் கொண்ட உறுதியும் .. எம்மைப்போல் மாறுது இருந்ததால் .. மரணித்து எம் மனங்களில் நிறைந்தாய் .. விடுதலை போரில் நாம் இழந்திருக்க கூடா புலி .. உன்னைப்போல் அரசியலின் தீர்க்கதர்சி எவர் .. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று அன்று... சொல்லிப்போன உன் வாய்மொழி இன்று .. வெடித்து நிக்கு ஐநா முன்றலில் கூட்டமா ... பார்த்தீபன் என்னும் விடிவெள்ளி எம்மை .. ஈழம் என்னும் நாடு நோக்கி அழைக்கும் .. தாகம் என்னும் சொல் இனி திலீபன் ஆகும் .. தவித்து வந்தது எமக்கு கண்ணீர் .. தாகத…
-
- 0 replies
- 749 views
-
-
ஈழமணித் திருநாட்டில் சுற்றிவரும் அலையோசை வளங்கொழிக்கும் குளிர்வாடை நாட்டிடையே ஆர்ப்பரிக்க வடதிசை யொலிக்கின்ற ஓங்கார நாதமுமே நடைபோடும் நல்லுலகின் யேசுபிரான் நாமமும் கீழ்த்திசை யலையோடு குர்ஆனும் ஒலிகேட்க திரிகரண சுத்தியுடன் திடமாக நின்றறிருந்தால் பரிவில்லாச் சிங்களனும் பார்த்துமே பறந்திருப்பான் தமிழனிற்குள் தனித்தொரு அணிபிரிந்து அழியாவண்ணம் வழிவழியே வையகத்தில் வசையான கேலிக்கதை நிலையாமல் நெஞ்சத்தில் நிறுத்தி நாளும் கலையாத கருத்தோடு காண்கின்ற ஒற்றுமையுள் ஈழமண்ணின் கனிச்சுவையும் இனிப்பான நன்னீரும் பாணன் தன் புகழ்சூழ்ந்த யாழ்ப்பாண நகர்தன்னில் தங்கத் தமிழ்மக்கள் தனித்தோர் கோலோச்ச மங்காத மறவர்கள் மரணித்து விதையாகி வஞ்சக எதிரிகளை வென்ற…
-
- 0 replies
- 785 views
-
-
ஈழ வேள்வி!.. சுதந்திரம் என்பது மஞ்சமா? -நாம் சிந்திய இரத்தங்கள் கொஞ்சமா? வீரர்க்கு எம்மிடை பஞ்சமா? நாம் வெகுண்டெழில் எதிரிகள் மிஞ்சுமா? சுதந்திரம் வேண்டிநாம் கூடினோம்-கையில் ஆயுதம் ஏந்தி ப்போராடினோம் சுடும் நெருப்பாகவே மாறினோம் நம்மை சூழ்ந்த பகைவரை சாடினோம்? வீரர்கள் சாவது இல்லையே -விழி நீரினை சிந்தாதே அன்னையே போரில் மடிவதை எண்ணியே -தமிழ் போராளி மகிழ்வது உண்மையே அன்னையே இன்னமும் கலக்கமா?-இனி மேலொரு துயரில்லை உனக்கம்மா அந்நியன் இனி இங்கு யாரம்மா? மகன் அரணாய் இருக்கிறான் பாரம்மா புலிகள் பசித்தாலும் புல்லையே -ஒரு போதும் புசிப்பது இல்லையே உலகினைத் தந்தாலும் அள்ளியே -நம் உரிமைகள் கைவிடார் உண்மையே!
-
- 5 replies
- 1.2k views
-
-
கொடும் தீ வந்தெம்மைத் தீண்டும் சுடும் போதெல்லாம் உண்மை தூங்கும் வெறும் வார்த்தை ஜாலத்தில் அறிக்கை பறக்கும்! உலகும் இவர் பேடித்தனம் கண்டு மெல்லச் சிரிக்கும்! அழும் குழந்தையின் கண்ணீர் கண்டும் விழும் தலைகளின் வணங்காமை கண்டும் வெ(ல்)லும் எம் பகை என்றெம் வீரர் குரல் கேட்டும் உதடு சுளிப்பார் உண்மை மறப்பார் கடும் கோபம் கிளறிவிட்டார் எம் குலப் பெண்மை பறிக்க வந்தார் போலிச் சமரசம் செய்து நின்றார் பொல்லாத போர்தன்னை வேர் ஊண்டித் தளைக்கச் செய்தார் சாயம் மாறும் ஒரு நாள் ஞானம் வரும் பின்னாள்(ல்) ஈழம் வரும் பொன்னாள் காயம் மாறும் அந்நாள் எம் கனவு பலிக்கும் திருநாள்
-
- 7 replies
- 1.5k views
-
-
ஈழக்கருவறையைக் காத்து வளர்த்தவன் ஆர்த்தெழுந்து தமிழ் தொடுத்துத் தாலாட்டுப் பாடிடவும், அனல் கொட்டும் வீரத்தின் மிடுக்கெடுத்து வனையவும், போக்கற்ற புரட்டனைத்தும் எழுத்தீயில் எரிக்கவும், எழுந்த என் எழுத்தாணி... இன்றுமட்டும், இலக்கு விட்டு.. ஏன் அழுது நிற்கிறது? புறம் படைக்கும் தமிழ் மகளின் போர்க்குணத்தை மொழியவும், புனை கவியில் எழுகை எனும் பெருநடப்பை விதைக்கவும், இணையில்லா விடுதலையில் வனப்பெடுத்துப் புனையவும் இலக்கெடுத்த என் பேனா இன்றேன் நலிகிறது? ஒப்பாரிப் பாடல்களை எப்போதும் பாடாத என் இதயம் இப்போதேன் அழுதபடி ஒப்பாரி உரைக்கிறது? அன்னை மண்ணிலே குருதியாறுகள் காயவில்லையே, உறையவில்லையே... இலக்கெடுத்த நம் தாயின் வேதனை ஆறவில்லையே,.. …
-
- 10 replies
- 2.1k views
-
-
காலை, தாமரை பூக்கும் நேரம் அல்ல, இரவு, அல்லி மலரும் நேரம் அல்ல. ஈழத்தில், நாள்களை சிங்களக்குருவிகளின் அலகுகள் திறக்கின்றன, மூடுகின்றன. அவற்றின் இறுக்கமான இரும்பு நகப்பிடிகள் நேரங்களை நிரப்புகின்றன தமிழ்ப்பிணங்கள் கொண்டு கறுப்புக் கனவுகளின் பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நனவுகளின் மார்பிலிருந்து இரத்தம் பவுத்த நெடியோடு பாய்கிறது குறுக்கும் நெடுக்குமாய் ஈழத்தில். தமிழ்மொழி பதைக்கிறது தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம் எல்லாமே- போராடும் தமிழன் கைகளில் ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன. இங்கோ தமிழனின் பதைப்பும் தவிப்பும். வேவு பார்க்கப்படுகின்றன விசாரணைக்குக்குள்ளாகின்றன. அர்த்தங்கள் மாற்றி வைக்கப்ப…
-
- 0 replies
- 764 views
-
-
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! http://www.worldtamilnews.com/ - Kural vadivam ingee. Kavithai Kelungal (new)-20.10.2008 உங்களைச் கொஞ்சம் உலகம் தேடும் முத்தமிழ் சிவப்பாகும் போர் மேகங்கள் சூழும் உங்களுக்கும் வலிகள் புரியும் இயந்திரப் பறவைகள் எதிரியாகும் ஆமிக்காரன் இயமன் ஆவான் உயிர் வெளியேறிய உடல்களை காகம் கொத்தும் விழிகளிலே குருதி கசியும் ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! தொப்புள் கொடியில் பலமுறை தீப்பிடிக்கும் பார்த்துக் கொண்டே இருப்பீர்களா? ஒரணியில் திரண்டு ஒரே முடிவு எடுப்பீர்களா? உங்கள் அரசியல் விளையாட்டில் எங்களைத் தோற்கடிக்காதீர்கள்! எந்த இனத்தவனும் உங்களை மன்னிக்கமாட்டான் சொந்த இனத்தவனைக் நீங்கள் காத்திட …
-
- 22 replies
- 5.3k views
-