கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
இன்றோடு.....! இன்னுமொரு ஆண்டு . எமைக் கடந்து செல்கின்றது!, முள்ளி வாய்க்காலின், வெள்ளைக் கடற்கரையில், துளை போடும் சிறு நண்டுகள், இடை நடுவில்....., துளையிடுதலை நிறுத்துகின்றன! ஏதோ...! அவற்றின் கால்களுக்குத், தடை போடுகின்றன! வேறென்ன...? இடை நடுவில் எமைப் பிரிந்த, எங்கள் சொந்தங்களின், எலும்புக்கூடுகளாகத் தான் இருக்கும்! உழுது விதைக்கப் பட்ட, பாளையங்கோட்டையின் நினைவில், மனம் புதையுண்டு போகின்றது! அன்றைய..., பாஞ்சாலங் குறிச்சியின், குறு நிலத்து மன்னர்கள், இன்றைய ராஜதந்திரிகளாய், எமக்கென ஒரு தீர்வு தேடுகின்றார்கள்! பதின்மூன்று..பதினாலு., பத்தொன்பது என்று, தீர்வுத் திட்டங்களின், வரிசை நீள்கின்றது! எல்லோரும்....! இணைந்து வாழும் …
-
- 12 replies
- 2.9k views
-
-
அம்மா அகிலத்தின் ஆரம்பமே அம்மா ஆத்மாவின் துடிப்பே அம்மா இன்பத்தின் அத்திவாரம் அம்மா ஈகையின் சின்னமே அம்மா உறுதியின் உயிரே அம்மா ஊக்க மாத்திரையே அம்மா எளிமைக்கு உதாரணம் அம்மா ஏற்றம் தருபவள் அம்மா ஐயம் தீர்ப்பவள் அம்மா ஒழுக்கதின் உதாரணம் அம்மா ஓயாத அலையே அம்மா ஔடதம் வாழ்வில் அம்மா துளசி
-
- 12 replies
- 3k views
-
-
எல்லா அம்மாவிற்கும் தெரியும் தன் மகனிற்கு எது பிடிக்கும் என்று, ஆனால் 99% மகனிற்கு தெரியாது தன் அம்மாவிற்கு எது பிடிக்கும் என்று...
-
- 12 replies
- 1.6k views
-
-
என்றும் என்னுயிர் பேபிக்கு எண்ணிப்பார் ஒரு தடவை என்ற போது தள்ளிப் போ என்னை விட்டு என்றேன் இன்று தள்ளிப் போ என்று நான் சொல்லவில்லை அள்ளித் தா உன் அன்பை என்கின்றேன் கள்ளச் சிரிப்பால் என்னை மயக்கிய போது உன் கண்களைக் கண்டு வியந்தேன் இன்று உன்னைக் காணாத போது என் கண்களைக் கண்டு வியக்கின்றேன் ஆனால் உன்னைக் காணும் போது பட்டாசு போல் வெடிக்கின்றேன் ஏன் என்று எனக்குள் நான் இன்றும் வியக்கின்றேன் இன்று என்னுயிர் மனைவி நீ என்றும் என் குழந்தை நீ வாத்தியார் **********
-
- 12 replies
- 1.8k views
-
-
நண்பர்களே! தமிழீழ தேசிய கீதத்தை எழுதும் போட்டியொன்றை விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தமை நீங்கள் அறிந்திருக்கக் கூடியதே. இது வரை அப்படி ஒரு தேசிய கீதம் இயற்றப்பட்டதாகவோ யாரும் பரிசு பெற்றதாகவோ நான் அறியவில்லை. இங்கு கவி வடிக்கும் பல கவிஞர்களின் திறமையையும் கண்டு வியந்த நான் ஏன் நீங்கள் அதற்கு முயற்சி செய்யக்கூடாது என்று கேட்கிறேன்? தமிழீழ தேசிய கீதம் மிக எளிமையான சொற்களால் ஆனதாக இருக்கவேண்டும். ஆக, இது வரை நாம் அறிந்த இலகுவான தமிழ்ச் சொற்களின் கோர்வையே தமிழீழ தேசிய கீதமாக மலரப்போகிறது. ஆனால், அது எதைச் சொல்லப்போகிறது, சொல்ல வேண்டும் என்பதே கேள்வி. எனவே, பல்வேறு நாடுகளின் தேசிய கீதங்களையும் தமிழில் சேகரிப்போமென ஒரு முயற்சியைத் தொடங்குகின்றேன். சேகரிக்கப்படும் …
-
- 12 replies
- 4.8k views
-
-
போய்வரவா பிரியத்துக்கினிய தோழமையே ? கடற்காற்றின் மௌனம் உனது காலத்தை எழுதிச்சென்ற தடங்கள் கனவின் மீதத்தை இந்தக் கரைகளில் வந்தலையும் அலைகள் வந்து சொல்லியலைகிறது....! கால்புதையும் மணற்தரையில் உனது மௌனங்கள் நீ கரைந்த காற்றோடு வந்தலையும் வார்த்தைகளின் அர்த்தங்கள் ஒரு வரலாற்றின் சாட்சியாய்...! வழி நீளக்கிடக்கிற நினைவுத் துளிகளில் நீயும் நானும் எழுதத் துடித்த வாழ்வு ஈழக்கனவாய் ஆனபோது இடைவெளியின் நீளம் காலக்கரைவில் கண்ணீராய்....! நீ(மீ)ழும் நினைவுகளில் நிலையாய் காலம் கரையும் இந்தக் கடற்காற்று போய் வாவென்கிறது போய்வரவா பிரியத்துக்கினிய தோழமையே ? மறுபிறவி உண்டென்றால் மறுபடியும் இதே கரைகள் தொடும் அலைகளோடு அலையாவ…
-
- 12 replies
- 1.5k views
-
-
உன் இடுப்பில் எனைச் சுமந்து நிலாச்சோறு ஊட்டிய நாட்களில் உன் பொறுமையின் வலி நான் உணரவில்லை… தாவணிப்பருவத்தில் தோழி வீடுசென்று தாமதமாக திரும்பும் நாட்களில் உன் அவஸ்தையின் வலி நான் உணரவில்லை… கல்லூரிப்பருவத்தில் கண்ணாடியுடன் சினேகித்து பட்டாம்பூச்சியாய் பறந்த நாட்களில் உன் அறிவுரையின் வலி நான் உணரவில்லை… மணப்பந்தலில் உன் காலில் விழுந்தெழுந்த போது என் உச்சி முகர்ந்த உனது முத்தத்தில்தானம்மா உணர்ந்தேன் நம் பிரிவின் வலியை ***************************************************************************************************************************** எனதருமை மகனே ! எனதருமை மகனே ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் - நான் ம…
-
- 12 replies
- 14.2k views
-
-
Shine தமிழ் இளைஞர்களின் படைப்புகள்... கேட்டுப்பாருங்கள்.... பாடல்கள்(ஒலி வடிவம்) Right click and select "Save as.." to download http://www.roughrhythm.com/filestore/Shine...heendoftime.mp3 http://www.roughrhythm.com/filestore/Shine...nwillwerise.mp3 http://www.roughrhythm.com/filestore/Shine...meflywithme.mp3 http://www.roughrhythm.com/filestore/Shine...swillchange.mp3 பாடல்(ஒளி வடிவம்) http://www.roughrhythm.com/Artister/Shine/Video/ மேலதிக தகவல் http://www.roughrhythm.com/Artister/Shine/ நன்றி சாணக்கியன்
-
- 12 replies
- 2.8k views
-
-
ஆரியன் வந்தான் சாத்திரத்தையும் சாதியையும் விதைத்தான்..! மொகலாயன் வந்தான் மதத்தையும் மதத்தால் அழிவையும் விதைத்தான்..! ஆங்கிலயன் வந்தான் சுரண்டலையும் அதனால் பசியையும் வறுமையும் விதைத்தான்..! ஏமார்ந்த தமிழன் எல்லாவற்றையும் ஏற்று கொண்டான்..! தன்னை தானே இழித்து கொள்ளும் தரங்கெட்ட நிலைக்கு தாழ்ந்தும் போனான்..! கூத்தாடிகளை தலைவனாகவும் கொள்ளையர்களை தொண்டனாகவும் கொள்கையற்றும் போனான்..! ஈழம் சென்று கங்கை கொண்டு கடாரம் வென்று இமயத்தில் கொடி நாட்டியவன்..! இன்று இனம் பிரிந்து மொழி மறந்து அகதிகளாய் முகம் தொலைத்து முகவரியற்று அலைகிறான்..! இன்று அங்கவையும் சங்கவையும் கேலிபொருள்கள் கோப்பெருந்தேவியும் குழல்வாய்ம…
-
- 12 replies
- 1.3k views
-
-
கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!! என் நிம்மதி எங்கே என்று உன்னிடமே கேட்டேன் பார், கொள்ளை அடித்தவனிடமே போய் புகார் செய்தமாதிரி என்னைசெருப்பால் அடிக்க வேண்டும்........ உன் நினைவுகளோ என்னை மூழ்கடித்து விட்டது ஒரு ஆறு கட்டுமரத்தில் ஏறி இருந்தது போல !!!!!!!! என்னைக் கொள்ளை கொண்டவனே நான் சுதந்திரமாய் சிரித்து கனகாலமாகி விட்டதடா . நான் சிரிக்க முயற்சி செய்கின்றேன் நீயோ , ஏன் அழத் தொடங்குகின்றாய் என்கின்றாய் நான் அழமுயற்சி செய்தாலோ , ஏன் சிரிக்கின்றாய் என்கின்றாய் நீ என்னதான் சொல்லவருகின்றாய் ????????? நான் சுகமாக இருக்கின்றேன் என்று ஒருவரிடமே சொல்வதில்லை....... ஏதோ இருக்கின்றேன் என்றுதான் சொல்கின்றேன் . நான் விரைவாக அமைதியா…
-
- 12 replies
- 1.4k views
-
-
புலத்துக் கரும்புலியாய் ஓர் பேரொளி.... கவிதை - இளங்கவி போரின் கூக்குரல்கள் புகுந்தது தமிழ் நெஞ்ச்சுக்குள்... போரை நிறுத்தென்று மக்களில் ஒருவனாய்ப் புலம்பினான்.... உலகின் காதில் எம் குரல்கள் கேட்கவில்லை..... ஈழத்து அழுகுரல்கள் அவன் ஆயுளைப் பிழிந்தது.... அவன் கைகள் எழுதியது மரண சாசனம்..... கால்கள் இலக்கு நோக்கி ஓர் நீண்ட பயணம்..... திடீரென தோன்றிய முடிவல்ல அவன் சிந்தனையில் தோன்றிய தெளிவு..... பல்லாயிரம் உயிருக்கு பார்காத ஐ. நாவா பாவம் இவன் உயிரைப் பார்க்கும்.... அவனுக்கும் தெரிந்திருக்கும் ஆனாலும் ஈழத்து அழுகுரலில் அவன் ஆன்மா கரைந்திருக்கும்... அமைதி காக்க தோன்றிய ஐ.நா பொய் முகம் காட்ட..... புலத்துக் கரும்…
-
- 12 replies
- 1.3k views
-
-
புலிகளுக்கு ஓய்வு கொடு, உன் கையை நீ உயர்த்து இளங்கவி- கவிதை கவலைகளை நீ நீக்கு உன் கடமைகளை நீ நோக்கு தமிழினத்தை கரை சேர்க்க துடுப்புகளை நீ தூக்கு... தோல்விகளா நீ பெற்றாய் நம் தலைவனிடம் எதை கற்றாய்..? தணலிலே எரிந்தால் தான் ஜொலிக்கும் தங்கமாய் உருப்பெறுவாய்... துவண்டுவிட நீ வாழை மரமா...? இல்லை.! இரும்பு தெறிக்கும் வீர மரம்..! உன் நிலத்தில் வாழ்வில்லையென்றால் என் நிலத்தில் உன் வாழ்விருக்கும்.... கலங்கரை விளக்கத்தால் உனக்கு வழிகாட்டத்தான் முடியும்... அந்தவழி தொடராவிட்டால் இருள்தானே உன் வாழ்வில் மிஞ்சும்... எடுத்த உன் ஆயுதத்தால் உன் வீரம் சொல்லி நின்றாய்... இப்போது உன் கடமை அகிம்சையில் உரிமை வென்றிடுவாய்.... இதை விட…
-
- 12 replies
- 2.6k views
-
-
ஓப்ரா கவுசில் ஒரு மாலை பொழுது ஒலித்தது ஒரு கணீர் குரல் ஒவசீஸ் தமிழன் தனை இழந்தான் ஓப்பாரியும் ஓலங்களும் களத்தில் ஒப்ரா கவுசில் தேனிசை மழை ஒமந்தையில் குண்டு மழை ஒரு சாண் வயிற்று பசியிலும் போராட்ட உணர்வு அங்கு ஓய்யார பகட்டிலும் களியாட்டம் இங்கு ஓசி தமிழன் நாம் ஓடி விளையாடி,பாடி பாரதி கனவினை நனவாக்கிடுவோம் ஓடு ஓடு என்று விரட்டுகிறார்கள் ஓப் போடுகிறோம் நாம் ஒப்ரா கவுசில் தமிழ் வாழ்க தமிழன் வாழ்க
-
- 12 replies
- 1.9k views
-
-
மலர்ந்துகொண்டே இருந்தவள் நீ வண்ணமும் வாசமும் தான் நாளுக்குநாள் மாறிக்கொண்டன. நினைத்துக்கொண்டே இருந்தவன் நான் மலர்தலை தடுக்கவா முடியும். உன் விழிகள் ஏணியாகவும் இருந்தது _எனை தாலாட்டும் ஏணையாகவும் இருந்தது. சிரித்தேன். கடந்தும் திரும்பி பார்த்தாய். விரும்பித்தானே பார்த்தாய்? முடக்கில் போட்ட பனங்குத்தி மக்கி மடங்கும்வரை அரியாசனம். அப்புறமென்ன தரையே ஆசனம். கடந்து போனது நீ மட்டுமா, காலமும் தான். பகிர்ந்த சில வார்த்தைகளில் பொதிந்திருக்குமோ என்றெண்ணி, பகுத்தறிந்து அதுவா இதுவா என்றங்கலாய்த்தல்லவா_என் அனேக அந்திகள் கலைந்தது. மாரடிக்கும் பெண்(டு)கள் கூட ஓய்ந்ததுண்டு_உனை தேடிதிரிந்த நான்? எரிகல் விழுகையிலும் கல் எறிகையிலும் உன்னைத்தான் நினைக்கிறேன்…
-
- 12 replies
- 1.2k views
-
-
மலையாகி வாழ்ந்தார்...... மழையாகி பொழிந்தார்..... தாய் தந்த பாலுக்கு நன்றி சொல்ல...... தம்மையே நொறுக்கி போனார்! கூட்டுக்கு வெளிச்சம் தர.... குஞ்சுகள் தம்மை எரித்ததம்மா! வயலுக்கு உரம்தர...... நான் முந்தி நீ முந்தி என்றே....... நாற்றுக்கள் தம்மை நார் நாராய் கிழித்தே புதைத்தம்மா! நீர்கொண்டு போர் செய்யும் அலையே நில்லு...... நீலவானின் செல்லப்பிள்ளை..நீள்முகிலே..... நீயும் கொஞ்சம் நில்லு... ஓசையெழுப்பும் காற்றே நீயும்தான்......... எங்கள் ஓவியங்கள் உங்களிடமா சொல்லு! இது மன்னவர் நாள்! இது மண்ணை உயிர்ப்பிக்க.... தம்மூச்சு தந்தே தொலைந்துபோன.... தங்கங்களின் தவநாள்! கூனிகிடந்த தமிழனின் நரம்பில்....... ரோச இரத்தம் பாய்ச்சியவர் பெருநாள…
-
- 12 replies
- 4.1k views
-
-
கனவுகள் கொல்லப்பட்ட குழந்தைகள் ------------------------------------------------------------------ அவர்கள் நித்திரை கொண்டு கொண்டிருந்த சிறு பிள்ளைகள் மீது டாங்கிகளையும் ஏவுகணைகளையும் ஏவிக் கொல்கின்றனர் இறக்கும் போது அக் குழந்தைகள் எதை கனவு கொண்டு இருந்திருக்கும்.. வெடிகுண்டு சத்தம் கேட்காத ஒரு இரவை அதுகள் கற்பனை செய்து கொண்டு தாயின் மடியில் தலை வைத்தும் அப்பாவின் மடியில் கால் நீட்டியும் படுப்பதாய் கனவு கொண்டிருக்கும் ஒரு சின்ன பொம்மையுடன் கட்டிப்பிடித்து நித்திரை கொண்டு இருந்திருக்கும் தங்கள் வளர்ப்பு நாயின் குட்டிகள் மழையில் நனைந்துடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்ந்திருக்கும் தெருவில் தொலை தூரத்தில் வரும் ஐஸ் கிறீம் காரனின் பாம் பாம் …
-
- 12 replies
- 1.3k views
-
-
என் வீடும் அயலும் என் நினைவில் வந்து போனது பக்கத்து வீட்டு பாட்டியும் பாட்டனும் பொக்குவாய் கொண்டு சிரிக்கும் சிரிப்பும் பாக்கு வெற்றிலை இடிக்கும் சத்தமும் பழைய நினைவாய் வந்து போனது எதிர் வீட்டு அக்காள் எமக்குத் தெரியாமல் எம்வீட்டுப் பூக்களை பறித்து வந்ததும் எதுவும் கூறாமல் கொடுப்புள் சிரித்து எதிரி வேறென எமக்கே சொன்னதும் இன்று நினைப்பினும் சிரிப்பு வருகுது எங்கள் துலாவில் ஏக்கங்கள் அற்று எவ்வளவு தண்ணியும் அள்ள முடித்ததும் வாக்கால் வழிந்தோட கால்கள் நனைத்து வரம்புடைந்து வளவு நனைந்ததும் வீட்டுக்காரரின் வசைகள் கடந்து வசந்தமாய் சிரித்ததும் நினைவில் நிக்குது கிட்டிப் புள்ளும் கிளித்தட்டும் கீரைக் கறியும் கிழங்குகளும் பக்கத்து வீட்டில் பறித்த மாங்காய் பருவம் …
-
- 12 replies
- 1.1k views
-
-
[size=5]மரணம் கூடு கட்டிய மரங்கள்,,[/size] [size=5]முறிந்து விழுகின்றன![/size] [size=5]பூரண சந்திரனின் வெளிச்சம்,[/size] [size=5]புதைகுழிகளின் ஓரங்களில்,[/size] [size=5]பட்டுத் தெறிக்கின்றது![/size] [size=5]மழை வெள்ளம் தேங்கிய,[/size] [size=5]குழிகளின்,மத்தியில்,,[/size] [size=5]கார்த்திகைப் பூக்களின்,,[/size] [size=5]கைவிரல்கள் அசைகின்றன![/size] [size=5]அமைதியடையாத ஆத்மாக்கள்,,[/size] [size=5]உலகத்தை நோக்கிக்,[/size] [size=5]கரங்களை விரித்து,[/size] [size=5]நியாயம் கேட்கின்றன![/size] [size=5]உண்மைகள் நிதர்சனமாகி,[/size] [size=5]உலகை உலுக்குகின்றன![/size] [size=5]கண்கள் கட்டப்பட்ட,[/size] [size=5]நீதித் தேவதைக்கும் கூடக் ,[/size] [siz…
-
- 12 replies
- 1.1k views
-
-
காபன் இரு ஒட்சிசன் துணை சேர ஒரு மூலக்கூறாகி அந்தரிக்கும் வழியில் இலை வாய் வசம் அகப்பட்டு பச்சைய உருமணியின் பஞ்சணையில் தண்ணியடித்து தான் கிடக்க.. சூரியக் கதிரின் நீல சிவப்பு விளக்குகள் ஊக்கமூட்ட தாக்கம் நடக்க நிலை குலைந்து குளுக்கோசானது..! குளுக்கோசும் சும்மா கிடக்காமல் இணைந்து சுருண்டு மாப்பொருளாகி கலக்கிட்டங்கியில் சேமிக்கப்பட.. உணவுச்சங்கிலியில் காத்திருந்த சேவலும் பேடும் காதல் கொண்டு களித்திருந்த வேளையில் களைப்பு மிகுதியில் பசியெடுக்க தானியமாய் கொத்தி உண்டு மகிழ்ந்தது..! சேவலின் உணவுக்கால்வாயில் நொதியப் பீரங்கிகள் கொண்டு உடைபட்டு அகத்துறிஞ்சப்பட குருதியில் அடைக்கப்பட்டு ஈரலுக்குள்…
-
- 12 replies
- 1.8k views
-
-
கனவும்...கவியும்... நல்ல கவிதை வரி ஒன்று கனவில் வந்தது! எழுந்து பக்கத்தில் கிடந்த தாளில் குறிப்பெழுதி வைத்து உறங்கிப் போனேன்! காலையில் தாள் காணமல் போயிருந்தது! அடுத்தநாள் கனவில் வந்தது அதே வரி! இந்த முறை நாட்குறிப்பில் எழுதிவைத்தேன்! அதனால் எழுந்து ஓட முடியாது என்ற தைரியத்தில்! காலையில் நாட்குறிப்பு இருந்தது! வரிகள் இல்லை! - அடடா பேனாவில் மையில்லை! அதற்கு அடுத்த நாளும் அதே கனவு அதே வரி குறிப்பெடுத்து வைத்தேன் என்பதை கண்ணாடிப் போட்டு உறுதிப்படுத்தியப் பின் உறங்கிப் போனேன்! மறுநாள் காலையில் என் கையெழுத்து எனக்கே புரியவில்லை! இன்றைக்கு அந்த வரிகளை கனவில் கண்டவுடன் எழுந்து அமர்ந்து …
-
- 12 replies
- 2.5k views
-
-
என் ''சின்ரெல்லா'' சிறு தேவதையே...! கவிதை - இளங்கவி சோர்வு ...அரைத்தூக்கம்..... என் மனதில் பல கலக்கம்.... கண்ணிமைகள் தான் மூட கனிவான ஓர் குரல்.... மாமா....மாமா.. தூக்கமா? என் அரைத்தூக்கம் கலைந்து யாரது...? என பார்க்கிறேன்...! என் பக்கத்துவீட்டு குட்டிச்செல்லம்..? கையில் இரத்தக் கறைபடிந்த கரடிப் பொம்மையொன்று...? என்னடா செல்லம் ...? ஓடோடிச் சென்று அவளை அணைக்கிறேன்... ஆமி அடிச்ச செல்லில் என் அம்மா செத்திட்டா.... அப்பாவும் தான் மாமா...! நீங்கள் தந்த ''ரெடி பியர்'' ம் இரத்தத்தில் நனைஞ்சிட்டுது....! ''பெட் ரைம்'' கதைகள் சொல்லி என்னை படுக்கவைத்து ரசித்தீரிகள்.... ''சின்ரெல்லா'' கதையும் சொல்லி என்னை சிந்திக்கவும் வைத்தீர…
-
- 12 replies
- 2.5k views
-
-
பேரலையோடு பரள் பேசும் புதுக்கவிதை சங்கமச் சத்தம்... பூ அவிழ பூக்காம்பு கேட்டு மயங்கும் மரகத வனப்புச் சத்தம்.. இளவெயில் பட்டு இலையூஞ்சல் ஆடும் குயில் பாட்டு குழையும் சத்தம்... மூங்கில் காட்டில் முட்டும் காற்று முத்தம் தந்து முனகும் சத்தம்.. மெல்விரல் படின் இலை மூடும் தொட்டாச்சிணுங்கி நாணிச் சிணுங்கும் வெட்கச் சத்தம்... காதல் மொழி பேசும் அழகு பேடைக்கிளி இரண்டும் கொஞ்சும் சத்தம்... நள்ளிரவு நிலாநேரம் நீரின் மேலே தவளை தாவும் தளுக் சத்தம்... வண்டு வரும் பூச்செண்டு அறியும் ரம்மிய கமக ரீங்காரச் சத்தம்... கேட்கா சத்தம் கேட்கும் நித்தம் கேள்விக் குறியாய் வாழ்க்கை மட்டும்.. வாழச் …
-
- 12 replies
- 2.2k views
-
-
மண்ணும் விண்ணும் மட்டுமல்ல மனசும் பூச்சூடிய ஒரு இரவின் பாடல். அதை எப்படி ஆரம்பிப்பது ? யார் எடுத்துத் தந்த அடியிலிருந்து ? இல்லை எடுத்துச் செல்லுங்கள் உங்கள் அதீத கற்பனைகளை. மதுவும் விந்தும் ஊறிய சொற்க்களை. கனவு வரை மண் தோய அவள் இட்ட அடிகளில் உள்ளதே கவிதை. அவள் பி.ஏ முடிக்கவில்லை என்றார்கள். அவள் காட்டில் என்றார்கள் மேலும் அவள் ஒரு கெரிலா போராளி என்றார்கள். நானோ அவளை கொழும்பு நகரத் தெருவில் பார்த்தேன். நான் உறைந்தது அச்சத்திலா ஆச்சரியத்திலா அல்லது அவள் மீதான மதிப்பினிலா. கோப்பிக் கடை மேசையுள் மறைத்தேன் நடுங்கும் என் கால்களை. அவள் அதே அமைதி ததும்பும் முகமும் குருத்துச் சிரிப்புமாய் முகவரி கேட்காதீர்கள் என்றாள். …
-
- 12 replies
- 2.4k views
-
-
தலைவனுன்னா… மக்கள் விட்டு எட்ட நின்று.. குளிரூட்டி வாகனத்தில் தான் மகிழ்ந்திருந்து.. வெயில் காய்ந்த புழுதி குளித்த வியர்வை வழிந்தோடும் மக்கள் முன்.. கசங்காத வெள்ளை வேட்டி மேடை தரிசனம் தந்து.. வலு விழந்த வாழ்விழந்த சொந்தங்கள் முன்.. நாலு வார்த்தை நயவஞ்சகமாய் உதிர்த்து… எதிரி தாழ் பணிந்து சூழ்ச்சி மகுடம் சூடி… கேட்ட கேள்வி நேரிடைப் பதில் இன்றி மேவிப் பேசி.. வாய்கிழிய தத்துவம் பேசி… புத்திசீவித்தனம் என்று தலைக்கன ரவுடீசம் செய்து நடப்பவனல்ல..! தானைக்கும் தலைவன்… தமிழர் தரணிக்கும் பரணிக்கும் சொந்தக்காரன் தமிழர் தளபதி… தகுதி விகுதி என்றின்றி… தமிழ் தாயை தரையில் வந்து அவள் நிகராய் நின்று கையெடுத்து வணங்கி.. அவள் புரியும் மொழி கொண்டு …
-
- 12 replies
- 1.3k views
-