கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
உனை வர்ணிக்க....... கண்மணி உனை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் போதவில்லை என்று வானவில்லை நாட்டினேன் வானவில்லின் நிறங்கள் கூட உனை வர்ணனை செய்ய மறுத்துவிட்டதால் தென்றலிடம் நாடினேன் தென்றல் கூட தான் அடிக்கடி சூறாவளியாக மாறுவதால் மறுத்துவிட கடலிடம் சரணடந்தேன் கடல் கூட தான் பல பேரின் உயிரைக் குடித்துவிட்டேன் என்று கவலையோடு உரைத்துவிட நிலவை நாட்டினேன் நிலவு கூட உன் அழகிய வதனம் கண்டு பொறாமையோடு மறைந்து சென்றுவிட அன்பே...அன்பே நான் எதைக்கொண்டு உன்னை வர்ணிக்க..???? ஒன்றே ஒன்று மட்டும் என் மனதில் பிரசவித்த வார்த்தை அம்மணி..... நீ.... என் உயிரினில் பூத்துவிட்ட அ…
-
- 10 replies
- 1.9k views
-
-
ஏன் ஏன் இந்த மாற்றம் நம் இன சில பெண்களுக்குள் ஏன் இந்த மாற்றம்???? பரந்து வாழும் நம் இன மக்கள் கடல் கடந்து வந்து அன்னிய நாட்டினிலே... இங்கே கொள்கைகள் உண்டு உதவிகள் பல உண்டு சுதந்திரங்கள் பல பல வகை உண்டு.. போக போக ஆடைக்குறைப்புகள் குறைகின்றதே அத்துமீறிய நம் இன சில பெண்டிர்களால் ஆடைக்குறைப்புகள் குறைந்து போகின்றதே... தினம் தினம் ஆடவரை மாற்றி சேர்ந்து ஊர் சுற்றும் அடக்கமில்லாத நம் இன சில மங்கைகள் உருவாகின்றனரே நாளுக்கு நாள் உருவாகின்றார்களே... ஒரு கையில் ஆறாவது விரலாக சிகரெட்டை புகைவிட்டு கற்புள்ள காற்றை மாசுபடுத்தியும் நம் இன இழ சமுதாயத்தை வீதிக்கு அழைக்கும் தான்தோன்றித்தனமான நம் இன சில பெண்கள் பற்றி வி…
-
- 10 replies
- 1.4k views
-
-
காணவல்லாயோ எனும் எனது கவிதையின் மீது கண்ணெறிந்தோர் அனைவருக்கும் குறிப்பாக அனஸ் அவர்களுக்குமாக இன்னொமொரு கவிதை. "ஊருக்குப் போனேன் " எனும் தலைப்பில் எனது பயண அனுபவத்தையும் வீடு செல்லும் அனுபவத்தையும் சில காலத்திற்கு முன் இத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். பலர் வாசித்துப் பாராட்டினார்கள். இங்கு நான் வெளியிடும் இக்கவிதையும் "வீடு செல்லலுடன்" தொடர்புடைய ஒரு கருத்தியலை முன்வைக்கிறது. புகலிட வாழ்க்கையும் அதன் அனுபவப்படிவுகளும் உள்நோக்கிய பார்வையினூகக் கவனிப்படவேண்டியவை என நான் கருதுகிறேன். சந்தமும் சொல்லடுக்கும் மாத்திரமே கவிதை என எண்ணிய காலம் அவதியாகிவிட்டதென நான் கருதுகிறேன். அதற்காக சந்தமும் சொல்லடுக்கும் தேவையற்றவை என நான் சொல்லுவதாகக் கருத வேண்டாம். …
-
- 10 replies
- 1.6k views
-
-
மானாட மயிலாட கலைஞரோட குடும்பம் ஆட ஊழல் கண்மணி கனிமொழி பொன்னாடை தூக்கியாட செம்மொழியாம் தமிழ்மொழி ஆங்கிலம் கலந்தாட.. நாடோடித் தமிழினம் ஈனத்தமிழராய் சிதைந்தாட.. கொட்டும் அந்தக் கோடிகளில் கொட்டமடித்து திமுக துள்ளி ஆட கூடவே கூட்டணிபோட்ட புண்ணியத்தில் சோனியாவும் பிணைந்தாட பங்கு கேட்டு ஐங்கரனும் பக்காவா சரிந்தாட வரி ஏய்க்க பெட்டி நிரப்ப லைக்காவும் வளைந்தாட.. அங்கோ ஈழத்தில்.. தமிழின எதிர்காலம் பாடையிலே ஆடுது சிங்களத்தான் சேனை முன்னே..! தமிழீழ மண்ணதில் சிங்களம் இனவாதக் களமாட கலைஞர் அதில் தமிழருக்காய் மானாட மயிலாட இடையில்.. மெரினாவில் உண்ணாவிரதக் கூத்தாட மன்மோகன் சிங்கும் கெட்டியாய் பிடித்ததில் சிக்கி முக்கியாட சிதைந்த வனமதில்..…
-
- 10 replies
- 1.4k views
-
-
கடலை போன்றது நிலையாய் இருக்கா அலையும் காற்றும் உறங்க விடா படகில் பலர் அலையுடன் பேசி நகர என் மன வானில் விடி வெள்ளி சீவாத தலை முடியும் பொட்டில்லா உன் நெற்றியும் எனக்கு அம்மவாசை இரவை நினைவில் கொண்டுவர உன் புன்சிரிப்பு நட்சத்திரம் ஆனது நீ பேசினால் புல்லாங்குழல் இப்பொழுது எனக்கு சங்கு சத்தமா கேட்குது உன் அண்ணன் பார்த்த நாள் முதல் கனவிலும் சுடலை தெரியுது நான் உன்னை பார்க்கிறேன் காதல் பார்வை நீ என்னை பார்க்குறாய் ஏக்க பார்வை நான் உன்னை அடைய விரும்பினேன் ஆனால் உன் அண்ணன் என்னை அடிக்க தேடுறான் என்றோ ஒருநாள் உன்னை சேரும் நாள் வரும் அதுவரை என் மனம் நிலையில்லா கடலில் பயணம் செய்து கொண்டு இருக்கும் உன்னை தேடி காதலியே .
-
- 10 replies
- 1.4k views
-
-
உன் எண்ணம் உன் வாழ்க்கை! எண்ணங்கள் வானை நோக்கி! எழுத்துக்கள் உயர்வை நோக்கி! கண்ணிமைக்கும் காலம் கூட எடுத்துவை இலக்கை நோக்கி! நாளை என்று நாளைத் தள்ளி வைக்காதே உயர்வைத் தள்ளி! இன்று" ஒன்றே உண்மை தம்பி உயர்வாய் நீ உன்னை நம்பி! தடுமாற்றம் வந்து உன்னை தடம் மாறச்செய்யக் கூடும்! கொள்கையில் உறுதிகொண்டால் தடையது திரும்பி ஓடும்! கண்களில் தெளிவு கொண்டு எண்ணத்தில் வலிமை கொண்டு! உழைப்பினில் மகிழ்வு கொண்டு! வென்றிடு வாழ்க்கை நன்று! நன்றி.
-
- 10 replies
- 6.8k views
-
-
பரமேஸ்வரன் பாதுகாக்கப்படுவானா...? பனியுறை தேசத்துப் பாராளுமன்ற வாசலுக்குள் பரமேஸ்வரன்...! சாவோடு தினம் குருதிச் சேற்றோடு சாகும் இனத்தைச் சாக்கொண்டு போகாமல் சாகும் வரை விரதமுடன்.... சத்தியனே பரமேஸ்வன் செத்துவிடலாம் போலிருக்கிறது. உனையும் திலீபன் போல இழந்து போவோமோ ? பயம் நெஞ்சுகளில் நெருப்பின் கனதியோடு..... சொகுசுக் கதிரைகளுக்குள் சொர்க்கத்தைக் காண்கின்ற சொக்கன்கள் இங்கும் அதிகம் தோழனே....! இவர்கள் வைத்த வினை ஈழத்தமிழர்களின் இத்தனை விதிக்குமாய் இட்ட வினை. இதையறுத்து எமக்காய் ஒளிதருவர் என்ற நம்பிக்கையின் கடைசித் துருப்பாய் உன்னையுருக்கி உணவுறுத்து உணர்வோடு இன்னும் அனைத்துலகம் மீதான நம்பி…
-
- 10 replies
- 2.3k views
-
-
முள் தீண்டுகிறது ஏன்பதற்காக றோஜா மலரை வெறுக்கலாமா? வேள்ளம் வருகிறது என்பதற்காக மழையை வெறுக்கலாமா? சோகத்தின் பக்கத்தில் சொர்க்கம் இருப்பதையும் நீ சுகத்தின் பக்கத்தில் துக்கம் இருப்பதையும் நீ அறிந்து கொள்! சில சோகங்களை நேசிக்கப் பழகு சில சோகங்களை வாசிக்கப் பழகு சோகங்கள் - உன்னை சேதுக்கும் உளி - நீ சிதையாதே! து. செல்வக்குமார் என்னை மிகவும் கவர்ந்த கவி
-
- 9 replies
- 2.2k views
-
-
கண் மூடி உள் நினைக்க படம் போல உன் நினைவு விரியும்! தடம் மாறி பல மனம் மாறி அலைந்த என்னை உன்னோடு அணைத்துக் கொண்டாய் உள்ளத்தில் அமிர்தத்தை தெளித்துச் சென்றாய் வனம் போல் இந்த மனம் பல மிருகங்கள் அதில் நடமாடும் உன்னிரு கரம் பட்டதாலே அவை சாந்தமாகிச் சாதுக்களான விந்தையென்ன? உருவத்து அழகில் மயங்குவது சில மாதத்தில் முடியும் உள்ளத்து அழகில் வாழ்நாள் உள்ளளவும் மயங்கலாம் என்று உன்னாலே அறிந்தேன்! நில்லாத உயிர் நிலைக்காத வாழ்க்கை எல்லாமே புரிகிறது நீயில்லாத வாழ்வை நினைக்க நினைவெல்லாம் சுடுகிறது! திட்டுவது போல் பாசாங்கு செய்வதும் சற்றே என் முகம் வாடினால் 'என்னடா' என்றென்னைத் தழுவி அணைப்…
-
- 9 replies
- 1.6k views
-
-
என் வானமும் என் தரையும் கந்தக நெடிகளாகி ......... வாழ்வின் அர்தத்தையே அகலப்படுத்தின . தூரத்தே நாளை என்னும் நம்பிக்கைப் பொட்டுகள் கண்சிமிட்டும் நட்சத்திரமாய் கண்ணாம் மூஞ்சி காட்டும் எனக்கு . எட்டுப்பட்டிச் சுற்றமும் ஏறுதளநாருமாய் இருந்த " நாங்கள் " இன்று " நானாகி " போனதில் , இறுக்கமான வலி இறுகியே பாயும் என் மனதில் . இன்பமும் துன்பமும் காலதேவன் வகுத்த சுற்றில் என்கால் நாளையை நம்பி உரமாகவே நடைபயிலும் .
-
- 9 replies
- 811 views
-
-
வர்ணங்கள் காட்டுகின்றாய் இருக்கும் இடம் கொண்டு படைத்தவன் பெருமையது பாரினில் அது மிகச்சிறப்பு உயிர் காக்கதந்த வரம் உத்தமனார் கொடுத்த நிறம் பகுத்தறிவு கொண்ட மானிடா....................... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்றாய் சந்தர்ப்பம் கண்டு-நீயும் மாறுகின்றாய் பச்சோந்தி மனிதனாக...... நியாயமா?
-
- 9 replies
- 4.1k views
-
-
-
- 9 replies
- 2k views
-
-
மீண்டும் மீண்டும் உருவேற்றி மீளவும் நினைவில் பெருந்தீ மூட்டி சொல்லவும் மெல்லவும் முடியாமல் உள்ளத்தில் அனல்கின்ற சிறுபொறியை அணையாமல் காப்பது நம் கடனே அடையாளம் அத்தனையும் தொலைத்து அடுத்தவனின் கருச் சுமந்து கிடக்கிறாள் எங்கள் அன்னைத் தமிழீழ பூமி உள்ளத்தில் சுழன்றாடும் சிறு நெருப்பை உருவேற்றி கடத்துவோம் நாளை உலகுக்கு இனம் ஒன்று அழிந்ததன் அடையாளம் இல்லாமல் செ…
-
- 9 replies
- 1.8k views
-
-
காதல் இல்லாமல் வாழ முடியவில்லை காதலோடு வாழவும் தெரியவில்லை விரைவில் மரணத்தை கொடு இறைவா, அவளை அதிகம் கேள்வி கேட்கின்றேன் அவள் மீது அப்படி ஒரு பிரியம் - ஆனால் எனது போக்கு அவளுக்கு கசப்பாய் இருக்கின்றது, அது தெரிந்தும் என்னை மாற்றிக்க முடியவில்லை மாறாவிட்டால் அவள் எப்படி இன்பமாய் இருப்பாள் அவள் சந்தோசம் தான் எனக்கு வேண்டும், எனக்கு அவளை விட யாரும் இல்லை அவள் இருந்தும் அநாதை போல் உணர்கின்றேன் நான் மண்ணோடு மண்ணாக வேண்டும், அப்போது தான் அவள் பூமியில் பெண்ணாவாள் இப்போது என் உயிராக அவள் இருப்பதால் அந்த பெண் உணர்வுகள் அடங்கிவிட்டன, முடக்கப்பட்ட அவள் உணர்வுகள் விரைவில் தெளிவு பெற வேண்டுகிறேன் ஆனால் அதை தாங்கும் சக்தி எனக்கில்லை, அந்த பெண் பெண்ணாக வேண்டும் அ…
-
- 9 replies
- 1.2k views
-
-
பறவை ஒன்றை வரையத் துவங்கினேன் வரைந்து முடிந்ததும் அது பறந்து விட்டது மீண்டும் ஒரு பறவையை வரைந்தேன் அதுவும் பறந்து விட்டது நான் வரைந்துகொண்டே இருந்தேன் அவைகள் பறந்து கொண்டே இருந்தன இறுதியாக மரம் ஒன்றை வரைந்து முடித்தேன் பறந்து போன அத்தனை பறவைகளும் வந்து அமர்ந்து கொண்டன........... நன்றி: தென் பாண்டியன் கவிதை ஒன்று இந்த டிசெம்பர் மாத 'உயிரெழுத்து' பத்திரிகையில். http://rprajanayahem.blogspot.fr/2012/08/blog-post_29.html
-
- 9 replies
- 983 views
-
-
ஒரு நாள் உன்னை விட்டு பிரிந்து வந்ததற்கே எப்படி பிரிய முடிந்ததென்றா கேக்கிறாய் எங்கே உன் இதயத்தை திறந்து பார் பிரிவுக் கவிதை எழுதிக்கொண்டிருப்பேன் நீயே சொல் .. என் நம்பிக்கை நீயென்ற பின் நம்பிக்கை இல்லாமல் நீ தள்ளியே நின்றால் விழுந்திட மாட்டெனோ உன் முதல் சந்திப்பும் உன் முதல் பிரிவும் சில நாட்களுக்குள் நடந்தேறியிருந்தாலும் உன் பிரிவு மட்டும் இன்னும் என்னை வாட்டுகிறது உனக்கும் இரவில் உலாப் போக பிடிக்குமா சரி வா போய் வருவோம் அதற்க்கு முன் நிலாவிடம் சொல்லிவிட்டு வா கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து வரும்படி உன்னை நான் பார்க்க வரும் போது மட்டும்தான் ஏறும் பேருந்தையும் இறங்கும் தரிபிடத்தையும் பக்கத்தில் இரு…
-
- 9 replies
- 5.3k views
-
-
முல்லைத்தீவு போயிருந்தேன் - அந்த முள்ளிவாய்க்கால் தாண்டிப் போனேன் இறங்கி நின்று படமெடுக்க - என் இதயம் ஒன்றும் இரும்பால் ஆனதில்லை விசுமடு தாண்டிப் போக நான் தொழுத வீரர் புதைந்த குழி மேடாய் கண்ட பின்னர் வீதி வழி விடுப்புப் பார்த்து மனம் கனக்க விருப்பம் இன்றி பூனை போல ஆகி நின்றேன் ஆனந்தபுரமும் மாத்தளனும் பெயர்ப் பலகையிலே அருகிருந்த தம்பி தட்டி அதன் கதை சொல்லி காட்ட ஆவி அடங்கி அத்தனை உயிர் கொடுத்த இடத்தை ஆர்வம் இன்றி அகம் கனக்க அகன்று போனேன் வட்டு வாக்கால் பாலம் தாண்ட தேக்கி வைச்ச மீதிக் கண்ணீர் விழி உடைத்து வழி தேட வார்த்தைகள் வாய் திறந்து உதிர்க்க மறுத்து வரலாற்றில் பதிந்த அந்தத் தடம் கடந்தேன் இந்த ஏரிதான் எங்கள் உறவுகள் உடலங்க…
-
- 9 replies
- 1.4k views
-
-
கௌதம முனிவரின் மனைவியை ஏமாற்றி கெடுத்தவன் தேவன் ஆனான் கண்ட பெண்களிடம் எல்லாம் காதல் லீலை புரிந்தவன் கடவுள் ஆனான் பத்து இருவது என மனைவிகளை அடுக்கிவன் எல்லாம் அரசன் ஆனான் நேசித்து பழகிய ஒரே பெண்ணிற்காக அலையும் நான் மட்டும் பொறுக்கி ஆனேன் . - வை .நடராஜன்
-
- 9 replies
- 1.1k views
-
-
சமாதானத்தின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்ட இன்றைய நிலையின் நாளைய நோக்குக் குறித்து எழுதும் கவிஞர் புதுவை இரத்தின துரையின் உலைக்கள வரிகள் இவை நெஞ்சுக்குள் அலையெற்றிய மாயக்கனவுகள் வெளியேற நிஜமனிதர்களாக நிற்கிறோம் இப்போது. மினுங்கிய மின்சாரமற்று தொடர்புக்கிருந்த தொலைபேசியற்று செப்பனிடப்பட்ட தெருவற்று மாவற்று - சீனியற்று - மருந்தற்று ஏனென்று கேட்க எவருமற்று கற்காலத்துக்குத் திரும்புகிறோம் மீண்டும். கணினிகளையும் காஸ்சிலிண்டர்களையும் வீட்டு மூலையில் வீசிவிட்டு மெருகு குலையா மதில்களின் மின்குமிழ்களையும் விறாந்தையின் தரைவிரிப்புகளையும் மாடியிற் பூட்டிய அன்ரனாக்களையும் அசுமாத்தமின்றி அகற்றிவிட்டு பதுங்கு குழிக்குப் பால்காச்சிவிட்டோம். …
-
- 9 replies
- 3.8k views
-
-
உன் மௌனங்கள் என்னை, வாட்டும் போது விழிகளில் பொங்குகின்றன , கண்ணீர்த் துளிகள் உன் மௌனத்தோடு சிதைந்துவிடுமா என் ஞாபகங்கள்
-
- 9 replies
- 2.5k views
-
-
முத்துக்குமரா! முகம் தெரியாப்போதினிலும் செத்துக்கிடக்கின்றாய் எமக்காக, எனவறிந்து தேகம் பதறுகிறதே திருமகனே! உந்தனது, ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில் அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள். உன் மேனியில் மூண்ட நெருப்பு உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார் நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன். சின்ன அக்கினிக்குஞ்சே! உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய் அந்தச்சோதிப்பெருவெளிச்சம் எமக்குச்சக்தி தரும் வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும். உன் இறுதி மூச்சு புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும். எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி உனக்கு…
-
- 9 replies
- 2.4k views
-
-
விழுகை என்பது விதிப்படியும் எழுகை என்பது வினைப்படியும் நிகழ்ந்தே ஆகவேண்டும். நேற்றொரு நாள் சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம், புனைவெல்லாம் விடுதலைத் தழலில் வெந்து போயின. சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது. இந்தியத்தை விட்டு காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது. இனத்தின் நித்திய வாழ்வுக்கு நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன் சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான். பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி தோற்றதன் எதிரொலியை ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது. மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன. ஒப்பாரியின் உள்ளொலியில் பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன. கால நெ…
-
- 9 replies
- 1.7k views
-
-
அன்புத் தோழியின் மரணம் தரும் துயரோடு....! 05.03.2014.., அழகிய வாழ்வை - மரணம் அள்ளிக் கொண்டு போகக் காத்திருக்கிறது. அழகான உனது புன்னகையும் இனிமையான உனது குரலின் கீதமும் எங்கள் காதுகளிலிருந்து இறங்கி மெல்ல மெல்லத் - தனது இறுதிப்பயணத்தின் கதையை எழுதத் தொடங்கியிருக்கிறது.....! 1990...., மாற்றத்தின் பெறுமதிகள் மண்விடுதலை யாகத்தில் வரியுடுத்திய தலைநிமிர்வின் அடையாளம் நீயுமாய் உனது நிமிர்வின் வீரம் இன்னும் நிழலாய் தொடர்கிறது....! 1991...., ஆனையிறவும் அகிலன் வெட்டையும் அந்த உப்பளக்காற்றின் ஈரமும் உன் தோழ் சுமந்த கனரகத்தின் கனவுகளையும் காலம் தன் கைகளில் பொத்தி வைத்துக் காக்கும் பொக்கிசம் நீ. எல்லோர் போலவும் உனக்கான வாழ்வும் வசந்தங்களும் ஆற்றல் மிக்க குழந்தைகளும…
-
- 9 replies
- 1.3k views
-
-
கோடி அழகுகள் கொட்டிக் கிடந்தாலும் ஆயிரம் அற்புதங்கள் அவனியில் இருந்தாலும் உயிரோடு உலவுகின்ற உவமையிலா ஓவியம் நீ கனவோடு காத்திருக்கும் கனிவான காதலன் நான் நதியாகி நான்வரும் திசைபார்த்து வழிமாறி விலகி ஓடுகிறாய் நீ பெண்ணே விரைவாக அலைகொண்டு கரைமோதும் கடலாகி ஓரிடத்தில் கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக
-
- 9 replies
- 1.5k views
-
-
நீ நடந்து வரும் பாதையை ... காத்திருந்தே என் கண்கள் .... காய்ந்து போகிறது....!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S ) இதயத்தில் இருந்து வெளியேறாதே.... என்னைவிட உன்னை யாரும் .... இந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S )
-
- 9 replies
- 1k views
-