கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இன்னுயிர்தன்னை நெய்யெனச்சொரிந்து இலட்சியத்தீச்சுடர் காத்தவரே-உங்கள் புகழுடல் உறங்கும் பூமியில்-வெற்றி மலர்களைத்தூவிநாம் வணங்கிடுவோம். விதையெனமண்ணில் வீழ்ந்தவரே-உங்கள் விதைகுழிகளில் வேர்பாய்ச்சி வான்வெளி எங்கும் கிளைபரப்பி விழுதெறிந்து வளர்வோம் இனியென்றும் வீழ மாட்டோம் காலக்கிண்ணமதில்-இனியும் கனவுகளையா குடிப்போம் இல்லை...இல்லை... தலைவனின் தடங்களில்-விடுதலை தேரிற்கு வடம் பிடிப்போம். நாமாண்ட மண்ணும் எமையாண்ட தமிழும் இனியொன்றும் மாழாது-எம் உறவுகளைக்கொன்றபகை இனியென்றும் வாழாது. இது....., தமிழ்த்தென்றலின் வீடு புலிப்புயல்கள் உலவும்காடு பகையே....நீ..., …
-
- 9 replies
- 2.9k views
-
-
செடியின் துயரம் பலநூறு மொக்குகள் மலர புன்னகையுடன் பேசத் தொடங்கியது செடி முந்திக் கொண்ட ஒவ்வொரு மலரும் முணுமுணுத்தது தனித்தனி மொழியில் தானாகக் கண்டறிந்து சேர வழிகேட்டது கூந்தலுக்கும் கோயிலுக்கும் தோட்டத்தைச் சுற்றி இலைகளாய்ச் சிதறின சொல்சொல் என அவை முன்வைத்த வேண்டுகோள்கள் ஆளற்ற வெளியில் பரிதவிக்கும் பார்வையற்றவர்களென காற்றின் திசைகளில் விடைவேண்டி கைதுழாவி நடுங்கிக் களைத்தது காலம் சற்றே கடந்தாலும் ஒப்பந்தப்படியும் உரிமைப்படியும் பறித்தெடுத்தன பூக்காரனின் விரல்கள் போகுமிடம் தெரியாத இழப்பின் வலியில் கிளைகழற்றிக் குமுறியது செடி
-
- 9 replies
- 1.9k views
-
-
-
விழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது… ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது… (விழியிரண்டும்……) சுற்றிவர நரிக்கூட்டம் நடுவில் நாமோர் ஆட்டு மந்தை வெட்டவெளிப் பூமியிலே வெறுங்கையாய் நடைப்பயணம்… முள்வேலி முகாம் நோக்கி யாதொன்றும் பிழைபுரியாப் பாவியரின் நடைப்பயணம்… பாவியரின் நடைப்பயணம்… (விழியிரண்டும்……) பூனைகளின் குகை நோக்கிச் சுண்டெலிகள் நாங்களிங்கே ஏதிலியாய்ப் பாவியராய் பயணிக்கும் நேரமித…
-
- 9 replies
- 786 views
-
-
சிங்களவா........... 83 ......... ஆடி........ நாம் ஆடித்தான் போனோம்...... குத்தியும் வெட்டியும்...... குடல் சரிய எம்மை..... குத்தி வீழ்த்தியும்.......... கோவம் போகவில்லையென்றே சொல்லி........ கோவணமும் இன்றி எம்மை குந்தவைத்து.......... சுற்றி வர நின்று - கும்மாளம் போட்டீரே........ ஆடிய ஆட்டம் எல்லாம் ஓய்ந்ததா? உங்கள் ஆவி மேயும் பசி தீர்ந்ததா? இன்றும் ஆடி வருகிறது ....... கறுப்பு ஆடி .......... அந்நாளில் ......... ஆடிப்போவது - நீங்களா? நாங்களா????????? 8)
-
- 9 replies
- 2.4k views
-
-
எப்படிச் சொல்ல கரும்புலிகள் வீரத்தை..? தரைமீது மலைபோல பகை நின்ற போதும் தளராத துணிவோடு களமாடி வென்று தரைக் கரும்புலியானீர்.. கடல்மீது படை கொண்டு நிலம் விழுங்க வந்த... பகை முடித்து முடிசூடி கடற்கரும்புலியானீர்... வானத்தின் மீதேறி வண்டு போலச் சுற்றி வந்து வானதிரும் சாகசம் செய்து வான் கரும்புலியானீர்... விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபமாய் நிற்கும்.. கரும்புலிகள் வீரத்தைச் சொல எந்த இலக்கணத்தில் சொல்லெடுக்க.. அம்மாவின் அன்பைச் சொல்ல வார்த்தையுண்டோ? அப்பாவின் அரவணைப்புக்கு நிகருண்டோ...? அகிலத்தின் அதிசயத்திற்கு குறைவுண்டோ? அலைகடலின் ஆர்ப்பரிப்புக்கு அர்த்தமுண்டோ...? காற்றுக்கும் வேலியுண்டோ? கரும்புலிகள் வீ…
-
- 9 replies
- 1.8k views
-
-
நல்லெண்ணெய் வழிய வைத்து ..ஊரில் நல்லதண்ணி கிணறு தேடி போய்..வயலில் அள்ளி முழுக்காட்டி விட்டா என் ..அக்காள் அறுகம் புல்லு பிடுங்க போகையில்...தரைவைக்கு மணியத்தின் லாரி வரும் கொழும்பில் ...இருந்து மாமாக்கள் வாங்கி அனுப்பிய சீனவெடி ..கொண்டு சிங்காரமா புது சட்டை போட்டு ..தலைசீவி பொங்கல் பொங்கும் அம்மாக்கு ...உதவி கட்டித்தரும் பொங்கல் கொண்டு மாமி ..வீடு போகும்போது மனதில் வரும் வெட்கம் ..மச்சாள் இங்கேரு மாப்பிள்ளை வாறாரு என்று சொல்லும் ..மாமா வீட்டுக்கு வந்த உறவுகள் எல்லாம் ..கூடி முற்றத்தில் தொடங்குவர் விளையாட்டு ..கிளி சின்னவர் எங்களை தங்கள் காலுக்குள் ..வைத்து தள்ளி விடுகையில் விழும் அடி முதுகில் ...உறைக்க நினைவுகள் மட்டும் இப்பொழுதும் ...மனதில் மீண…
-
- 9 replies
- 938 views
-
-
பாங்கியும் நம்பியும் தம்பி நாராயணனும் போட்ட திட்டம் தமிழர் குருதி பெருக்கி.. சிவந்தது செங்கடல் அல்ல நந்திக் கடல்..! எல்லாம் முடிந்த பின் மூடி மறைக்க ஓர் அறிக்கை மறைத்ததை மூட ஓர் அறிக்கை மூடியதை மறைக்க இன்னோர் அறிக்கை.. மொத்தம் எத்தனை..??! இடைக்கிடை அருண்ட தேசத்துள்.. அமைதிப் புறாவை கட்டி இழுத்து வர ஆயிரம் தோறணைகள். சிங்களப் பேரினப் பசிக்கு சீனத்து ரகன்களின் தீச் சுவாலைக்கு அசோகச் சக்கரத்தின் அரக்கத்திற்கு அத்தனையும் பலி..! காலத்தே தெரிந்து ஓர் தப்பு காலம் கடந்து ஓர் அறிக்கை.. காலம் கடத்தி கற்பது பாடம்..! கற்றபின் பதவி உயர்வு தந்து நிற்பது கடன்...! இப்படியே போனால் உலக அமைதி என்பது …
-
- 9 replies
- 1.1k views
-
-
சுற்றமும் உற்றமும் ஊர் முற்றமும் முழு நிலவும் கவளச் சோறும் கருவாடும் பனங்கட்டியும் பணியாரமும் மண்சட்டியும் கல்லடுப்பும் தட்டை வடையும் எள்ளுப்பாகும் ஒடியல்கூழும் நண்டுக்கறியும் ஊறுகாயும் மோர்மிளகாயும் ஆலமரமும் பிள்ளையார் கோயிலும் வறுத்த கச்சானும் வில்லுப்பாட்டும் கிட்டிப்புள்ளும் கொக்குப்பட்டமும் மாட்டுவண்டியும் பொச்சுமட்டையும் பஞ்சுமுட்டாயும் இஞ்சித் தேநீரும் பூவரசும் நாதஸ்வரமும் வாழைமரமும் பாலைப்பழமும் வல்லைவெளியும் முல்லை நிலமும் பள்ளிக்கூடமும் பழைய நண்பரும் சித்திரைவெயிலும் செவ்விளநீரும் மாரி மழையும் மண்வாசமும் மதவடியும் உதயன் பேப்பரும் லுமாலா சைக்கிளும் குச்சொழுங்கையும் பேரூந்தும் ப…
-
- 9 replies
- 1k views
-
-
நந்திக்கொடி தூக்கினேன் சைவக்காவலர் என்றனர் சிவப்புக்கொடி தூக்கினேன் புரட்சிவாதி என்றனர் கட்ச்சிக்கொடி தூக்கினேன் அரசியல்வாதி என்றனர் கண்டுகொள்ளவில்லை ஜன நாயக உரிமை என்றனர் தேசியக் கொடி தூக்கினேன் பயந்தனர் ஆட்சியாளர்கள் என்னை பயங்கரவாதி என்றனர் பயந்தனர் அயலவர் என்னை பிரிவினைவாதி என்றனர்
-
- 9 replies
- 1.7k views
-
-
பாட்டி வீட்டுப் பழம் பானை பாட்டியின் வீட்டுப் பழம்பானையடா அந்தப் பானை ஒரு புறம் ஓட்டையடா ஓட்டைவழி ஒரு சுண்டெலியும் அதன் உள்ளே புகுந்து நெல் தின்றதடா உள்ளே புகுந்து நெல் தின்று தின்று வயிறு ஊதிப் புடைத்துப் பருத்தடா மெள்ள வெளியில் வருவதற்கும் ஓட்டை மெத்தச் சிறிதாக்கிப் போச்சுதடா பானையைக் காலை திறந்தவுடன் அந்தப் பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு பூனை எலியினைக் கண்டதடா அதை அப்படியே கௌவிச் சென்றதடா கள்ள வழியில் செல்பவரை எமன் காலடி பற்றித் தொடர்வானடா! நல்ல வழியில் செல்பவர்க்கு தெய்வம் நாளும் துணையாக நிற்குமடா! படித்ததில் பிடித்தது குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
-
- 9 replies
- 7.4k views
-
-
செவ்வந்திப்பூ! பூத்திருக்கும் பூக்களெல்லாம் சந்தோசக் கவிதை சொல்லும்! பார்த்திருக்கும் பொழுதெல்லாம் புன்னகைகள் மின்னலிடும்! இறைவா உன் படைப்பினிலே இத்தனை இனிமைகளா? பூரித்து நிற்கின்றேன் பொன்மனதும் மலர்கிறது! விதியின் முடிவுகள்! மகிழ்ந்து மலர்ந்திருக்கும் வசந்தங்கள் வாழ்வில் இல்லை! என்றாலும்… மனமது மரத்து விடவில்லை! கூடிக் குலாவித் திரிந்து அணைபோட முடியாத அன்பையெல்லாம் அர்ச்சித்து போற்றுதற்கு ஜோடி என்று ஒன்றுமில்லை! என்றாலும்… கண்ணிலும் கருத்திலும் கனிவிற்கு குறைச்சலில்லை! கண்டதும் இருட்டு! காண்பதும் இருட்டு! காணப்போவதும் இருட்டாகலாம்! என்றாலும்… மென்மையான மெளனங்களில் துளியான நிம்மதியில் வாழ்க்கை கழிந்தே தீ…
-
- 9 replies
- 2.1k views
-
-
முதல் கோணல் முற்றும் கோணல் பழமொழியாம்... முதல் கோணல் முன்னேறும் அறிகுறி என்பேன் நான்.. முதல் முறை உயர்தரம்.. தோற்றபோது கவலையுற்றேன் இரண்டாவது முறையில் உயர்வான பேறு கொண்ட போது உவகையுற்றேன் முதல் காதல் கண்டதும் காதல் வழமைபோல் தோற்றது வேதனை கொண்டேன் என் சகியைக் கண்டதன்பின் அத்தோல்விதான் விதிக்கெதிராக நான் செய்த சாதனை என்பேன் உலகத்தில் ஒரு விஞ்ஞானியும் முதல் முயற்சியில் வெற்றிகொண்டதாக சரித்திரம் இல்லை.. பின்பு ஏன் நீ நினைக்கிறாய் தரித்திரம் என்று.. நண்பா என்னனுபவத்தில் சொல்கிறேன் முதல் தோல்விதான் முன்னேறும் முதல் படி மறந்துவிடாதே.. ஆகவே நண்பா தோல்வியைக்கண்டு துவளாதே,முயற்சிசெய் முடியாதது எதுவும் இல்லை
-
- 9 replies
- 2.2k views
-
-
தை பிறந்தால் வழிபிறந்தது அன்று எத்தனை தை பிறந்தும் தமிழனுக்கு மட்டும் வழி பிறக்க வில்லையே ஏர் கொண்டு உழுது பயிர்கள் தான் செய்தோம் ஊரெங்கும் பச்சை வயல் பசுமைகள் கண்டோம் எவரையும் நம்பாது நாம் விழைத்து நம் மண்ணில் தன்னிறைவு கொண்டோம் செம்பாட்டு மண்ணில் செழித்து வளர்ந்திடும் செவ்விளநீரொடு மா பலா வாழை என வாயினிக்க நாமணக்க வகை வகையாய் வாழையிலை மஞ்சள் வானுயர்ந்த கருப்பு கட்டிப் பொங்கி மகிழ்ந்திட்டோம் யார் கண்ணோ பட்டதனால் நாமிருந்த பூமியெல்லாம் நாசமாய் போனதனால் நாள் கூட நமக்கின்றி நாதியற்றுப் போனோம் ஏர்கொண்டு ஏற்றமுடன் எமைக் காத்தோம் இன்று ஏழைகளாகி எதிர்பார்த்து ஏந்தி எம் கைகளை எல்லோரை நோக்கி ஏளனப் பொருளாகி எதுமற்ரோராகி எச்சில் இலைகளாய்…
-
- 9 replies
- 855 views
-
-
கோபுரம் கட்டி முடிக்கையில்....... அத்திவாரம் - ஆட்டம் கண்டதோ? மெல்ல முழைத்த உன் பாத விரல்கள்... பூமியில் அழுந்துமுன் - பொசுங்கி போயிற்றோ? ஏதுடா சமாதானம்? என்னையும் -உன்னையும் எரித்தபின் ஏதும் வந்தால் அது - சமாதானமா? அதன் பெயர் சமாதி! நான்கு வருடங்களாச்சு ....... கண்டதென்ன?...... செம்பருத்திக்கும் ....... தெருவினோர .......கழிவு நீருக்கும்...... வேறுபாடு............... பிரித்து பார்க்க முடியாமல் பேதலித்து கிடக்கிறாய்......! உன் பிறப்பின் அடையாளம் மெல்ல மெல்ல ....... அதன் ஆயுள் முடிக்கிறதே ..... அறிந்தாயா- நீ? கண்மணிக்குள் இரத்தம் பாயாதுதான்......... இல்லையென்று இல்லை....... உன் இதயத்தில் கூட அதன் இயக்கம் …
-
- 9 replies
- 1.7k views
-
-
பிரபல ஆங்கிலப் பாடகி Amy Winehouse (24) இன் பிரபல்ய பாடலான.. " Love is a losing game " பாடல் வரிகள் பற்றி.. ஒப்பீட்டு விமர்சனம் அளிக்க.. (இரு வெவ்வேறு கால பாடல்களுக்குரிய பாடல்களில் அமைந்த வரிகளின் தன்மைகளை ஒப்பிட்டு..) கேம்பிரிஷ் பல்கலைக்கழக ஆங்கில பாடப் பரீட்சையில் கேட்கப்பட்டுள்ளது. எங்கே.. எம் கவி வித்தர்கள்.. நீங்களும்.. உங்கள் கருத்தை இவ்வரிகள் தொடர்பில் சொல்லுங்கள் படிப்போம்... (உங்களை ஒப்பிடச் சொல்லவில்லை) Though I battled blind Love is a fate resigned Memories mar my mind Love is a fate resigned Over futile odds And laughed at by the Gods And now the final frame Love is a losing game Amy Winehouse இன் இணையத்தளத்தில் பாடலை…
-
- 9 replies
- 2.3k views
-
-
என் கல்லறைச் சினேகிதியே...... கவிதை....... என் கல்லறை சினேகிதியே உன்னை காணவென்று வந்தேன் உனை காக்க வரவில்லை....! நீ சொல்லிவிட்டுச் சென்ற என் கடமைகள் ஏராளம் அதிலும் சில நிமிடங்கள் உனக்காய் தருகிறேன்... அதுவே ஏராளம்....! பல வருங்களாய் நம் தேசத்துக்காய் போரிட உன் தூக்கம் இழந்தாய்.... உன் தாமரை விழியிரண்டும் செண்பக விழியானாய்.... உன் பஞ்சுப் பாதங்களால் பாறையிலும் நடந்தாய்.... எதிரியை எதிர்த்து மண் காக்கும் சமரில் விதையாக விழுந்து என் விழியையும் திறந்தாய்..... கல்லூரிக் காலத்தில் நீ என் கண்கவரும் காதலி நானோ உன்னைத் தேடுவேன் ; நீயோ விடுதலையைத் தேடிச்சென்றாய்... மூடிய சிறையில் உலவும் சுத…
-
- 9 replies
- 1.7k views
- 1 follower
-
-
புதுமைகள் ஏந்திய, புதிய ஆண்டொன்று பிறக்கட்டும்! பூக்கள் மலர்வது போல! புதுமையாக! பூக்கள் மரங்களில் இருக்கட்டும், பிடுங்கி எடுத்து மாலைகளாக்க வேண்டாம்! சர வெடிகள் இல்லாமல், சாதாரணமாக மலரட்டும்! வெடிச்சத்தம் கேட்டாலே, வேதனை கலந்த நினைவுகளே, வெடித்துக் கிளம்புகின்றன! புத்தம் புதுச் சேலைகளும், பட்டு வேட்டி சால்வைகளும், தொட்டுப் பார்க்க நேரமின்றித், தம் பாட்டில் தூங்குகின்றன! சீர் கொடுத்த நகைகள் கூடச், சேரிடம் தெரியாது, வருடக் கணக்காக, வங்கிப் பெட்டிகளில், வருகின்ற தலைமுறை பார்த்து, ஆறுதலாகத் தூங்குகையில், இன்னும் நகை எதற்கு? கஷ்டமென்று வரும்போது, கை கொடுக்க என்கிறோம்! இதுவரை, இல்லாத கஷ்டமா, இனிவரப் போகின்றது? …
-
- 9 replies
- 1.3k views
-
-
உன்னை பிரிந்தது வலியில்லை.... பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது .... மறந்து வாழ்வது வலியில்லை..... மறக்க வைப்பதுதான் வலி ..... காதல் வலியால் தைத்த ஆடை .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் தோல்வி கவிப்புயல் இனியவன்
-
- 9 replies
- 1.7k views
-
-
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஆண்டு இங்கு எட்டாச்சு...!! எப்போ நீ பிறப்பே என்று தான் இங்கு ஒரே பேச்சு...!! இதயத்து அறைகளிலே இளம்பிஞ்சே உன்முகம் தான்... என் கந்தகக் கருப்பையில் ஃபீனிக்ஸாய் எழுவாயா??? விரதமும் வேண்டுதலும் - உன் வரவைச் சொல்லலையே...!! வாடகைத்தாய் வாங்கக்கூட காசுபணம் எனக்கிலையே...!! சோதனைக்குழாய் முறைக்கும் - முதல் சோதனையிங்கு பணத்திலாமே?? சொச்ச ரொக்கமில்லையினா சோதனைக்குழாயும் கிடைக்காதாமே??!! உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய் என் உயிரே தவிக்குதிங்கே...!! நஞ்சுரைக்கும் வல்லூறால் - என் நெஞ்சு மருகி விம்முதிங்கே...!! ஆண்டுபல போனாலும் - உன் வரவு கனவில் தான் நிஜமாச்சு...!! 'ம்மா'-னு நீ…
-
- 9 replies
- 3.4k views
-
-
நட்சத்திரங்கள் உதிர்த்த கண்ணீர்த்துளிகள் காற்றினை நடுக்கமுற வைத்த இரவொன்றில் தனிமையின் பயத்தால் உனைப் பற்றிப் பேசத்தொடங்குகிறேன். பிரிய தோழி, நீ யன்னல் சீலைகளில் இருந்து இறங்கி அறியப்படாத வர்ணமொன்றாகி அறையெங்கும் நிறைகிறாய். வெட்கமகற்றிக் கூந்தல் கலைத்து இயல்பாயென் போர்வைக்குள் நுழைகிறாய். பரவும் வெப்பம் பெருமூச்சினை நினைவூட்ட என் தனிமை நிர்வாணத்துள் ஒளிந்து கொள்கிறது. குறிப்புணரா பொழுதொன்றில் நிறைகாமம் அழிந்துபோக ஆழியின் பெருமௌனத்துடன் அடங்கி விழித்துக்கிடக்கிறேன். அன்றொருநாள் உன், இதழ்களிலிருந்து இறங்கிய சாத்தான் மூன்றாம் இரவிலும் உயிர்த்தெழ, எதிர்கொள்ளத் துணிகிறேன் தற்கொலை ஒன்றுக்கு முன்னான அமைதியுடன்.
-
- 9 replies
- 874 views
-
-
கிறிஸ்மஸ் விடுமுறை வ.ஐ.ச.ஜெயபாலன் விடுமுறைத் தூக்கம் மதியப் பசியில் கலைய எழுந்தேன். வீடு அமைதியில். இன்று இரட்டிப்புக் கூலியென வேலைக்கு ஓடிவிட்டாள் மனைவி. வெளியே கொட்டுதே வெண்பனி. உள்ளே மின்னுதே என் பிள்ளைகள் கோலமிட்டு நிறுத்திய கிறிஸ்மஸ் மரம். முண்றிலில் கணகணப்பு ஆடைச் சிறுவர்கள் வெண்பனியில் வனைந்தனரே ஒரு மனிதனை. சிறுமி ஒருத்தி கறட் மூக்குவைத்துக் கைகொட்டிச் சிரிக்கிறாள். தேர்ந்த பொற்கொல்லனாய் கண் வாய் என்று கற்கள் பதிக்கிறான் என் பையன். ஒருநாள் உருகிவிடும் எனினும் ஆக்கி மழ்கிறாரே பனிமனிதனை. நாளை குப்பையில் எனினும் இன்றை ஒளிர வைக்குதே என் பிள்ளைகளின் கிறிஸ்மஸ் மரம். நீண்ட தூக்கமும், பெருஞ் சமையலும் ம…
-
- 9 replies
- 2.5k views
-
-
நங்கூரம் என்று ஒரு புது சஞ்சிகைக்கு எனது கவிதை கேட்டிருந்தார்கள். கனடா தமிழர் வாழ்வு குறித்த எனது எழுத்துக்களை ஆரம்பிபதற்க்கு ஒரு சந்தர்ப்பமாக் அந்த அழைப்பை எடுத்துக்கொண்டேன். கனடாவுக்கு மூன்று தடவைகள் சென்று ஒரு வருடங்களுக்கும் மேலாக ஒன்ராறியோவிலும் கியூபெக்கிலும் பயணம் செய்து கொஞ்சம் தங்கியிருந்து கற்றிருக்கிறேன். இரண்டாவது தடவை நான் சென்றிருந்தபோது "காங்" குழுக்களின் வன்முறைகள் உச்சதில் இருந்த காலம். குழு வன்முறை பற்றிய ஆய்வுகளிலும் விவாதங்களிலும் ஈடுபடக்கூடியதாக இருந்தது. முன்ன்றாவதுதடவை தேர்தல்காலம். கனேடிய அமைப்பை அறிந்துகொள்ளும் ஆவலில் ஜோன்காணிசுக்கும் மற்றும் பிளிண்டா ஸ்ரொனாச்சுக்கும் தேர்தல் வேலைகள் செய்தேன். இதற்க்குமேல் சொன்னால் என்னைத் தெரியாதவர்களுக்கு நம்பு…
-
- 9 replies
- 2.2k views
-
-
நான் ஒரு கவிஞை அல்ல. பெற்றெடுத்து அதை உலகத்தில் சிறப்பிக்க ஆனால் கவிஞை ஆக்கப்படுவேன் இருட்டில் நடக்கும் எண்ணங்களால் என் நெஞ்சில் கருவொன்று திணிக்க முயன்றான் ஒருவன் எண்ணங்களை உடைத்து துளிகளின் மேலமர்ந்து கசங்கிய நிலையில் விதைத்துப் போனான் ஒரு கவிதை மட்டுமே விளையும் கருவை. ஆள் அரவமின்றி காய்ந்து கிடக்கும் ஒரு தாளில் அழுத்தமாய் புள்ளியிட்டு சென்றுவிட்டான். என் கரங்களில் வலிமை இல்லை வலி ஏற்பட்ட நேரத்தில் என் கரங்களும் என்னிடமில்லை என்னை அறியாமல் திணிக்கப்பட்ட எண்ணக்கருவால் ஊற்றெடுத்தது கவிதை ஒன்று ஆம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். கரு என்ன என்பது அறியேன் ஆனால் கவிதை நிச்சயம். யாவருக்கும் ஏற்பட்ட அதே காலத்தில் கவ…
-
- 9 replies
- 1.7k views
-
-
மின்சார ரயில் மெல்ல மெல்ல .. வேகம் கொள்ளும் நிலை போல் .. உன் மின்சார பார்வை என்னையும் .. லேசா லேசா திரும்பி பார்க்க தூண்ட ... உடைந்து விழும் கண்ணாடி போல் .. மனதில் ஒரு சிதறல் கோடு .. நீ பாடல் கேட்டு தலை அசைப்பது .. எனக்கு ஏனோ சம்மதம் சொல்வதாய் .. உன் விரல்கள் கோலம்மிடும் கைபேசி திரை .. என் மூச்சு காற்றின் வெப்பம் அறியும் .. நீ பாடல்களை மாற்றிக்கொண்டு இருக்கிறாய் .. நான் வாழ்வின் பல படியை உன்னோடு கடக்கிறேன் .. ஒவ்வெரு தரிப்பிடமும் மூச்சு வாங்குது .. நீ எழுத்து போகக்கூடாது என்று வரம் கேட்குது .. நீ நிமிர்த்து பார்க்கும் நொடிகள் தான் .. நான் வாழ்தலின் பலனை எண்ணுகிறேன் .. என்றாவது ஒருநாள் உன் அருகில் நான் .. சேர்த்து பயணிப்பேன் என் காத…
-
- 9 replies
- 1.6k views
-