கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
என்ன செய்ய??!! பூக்களை தருவதற்காய் நான் வந்து கொண்டிருக்கிறேன் மாட்டுவண்டி ஒன்றிலே கரடு முரடான பாதையிலே மெது மெதுவாய் வந்து கொண்டிருக்கிறேன் கண்ணைப் பறிக்கும் வண்ணம் கொண்ட சொகுசுக் காரிலே எனக்குப் போட்டியாக அவர்களும் வருகிறார்கள் வாண வேடிக்கைகள் முழங்க சுவரெல்லாம் செய்திகள் சொல்ல ஆடம்பரமாய் அவர்கள் வருகிறார்கள் நான் தருவதற்கு பூக்களை கொண்டு வருகிறேன் அவர்கள் விற்பதற்கு மலத்தைக் கொண்டு வருகிறார்கள் மக்கள் எல்லோரும் காரை நோக்கியே கட்டுக்கடங்காமல் ஓடி வருகிறார்கள் ஓடி வந்து தங்கத் தாம்பாளத்தில் வைத்து அவர்கள் கொடுத்ததை சந்தோசமாய் வாங்கிச் செல்கிறார்கள் என்னையும் பூக்களையும் சீண்டுவார்தான் யாரு…
-
- 25 replies
- 3.5k views
-
-
வீட்டுக்கு மேல் போர் விமானங்கள் பறக்க குழந்தைகளை இழுத்துக்கொண்டு நீங்கள் ஓடி ஒளியும்போது... கண்ணெதிரில் உங்கள் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்படும்போது... உங்கள் சகோதரன் சுட்டுக் கொல்லப்படும்போது... பட்டினியால் உங்கள் பெற்றோர் இறக்கும்போது... அப்போதுதான் போர் என்பது புரியும் எனில், அதுவரைக்கும் தமிழர்களே கிரிக்கெட் பாருங்கள். அடுத்த தேர்தல் வந்துவிட்டது வரிசையில் நின்று வாக்களியுங்கள். ---------------------------------------------- பயணத்தில் உங்கள் இருக்கையில் இன்னொருவர் அமர்ந்துகொண்டு எழ மறுத்தால் என்ன செய்வீர்கள்? சாலையில் உங்கள் வாகனத்தை இன்னொரு வாகனம் இடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் குழந்தையைப் பள்ளி ஆசிரியர் காயம…
-
- 2 replies
- 1.3k views
-
-
நாடிருந்தும் நாடோடியாய் நாளேல்லாம் நாடெல்லாம் ஓடுகின்றேன் ஓடுவதற்கு உடல்வலு தேவையில்லை மனவலு இருந்தால் மட்டும் போதும் ஓடுவதற்கு கால் எனக்கு தேவையில்லை போதிய உள வரம் வேண்டும் ஓடுவதால் மீண்டும் மீண்டும் உரம் பெறுகின்றேன் நாம் ஓடாமல் இருப்பதற்கு ஓர் சுதந்திர நிலம் அமைக்க வேண்டும் என்று இதை நான் எழுதவில்லை...எழுதியவர் ஒரு முன்னால் காலம் சென்ற புலிகளின் தளபதி...யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்
-
- 1 reply
- 840 views
-
-
என்ன தான் என்னவோ....??? குரங்குகளின் கைகளில் அகப்பட்ட பூமாலைகளைப் போல் எம் மண்ணில் பூக்கப்பட்ட எம் இன இளஞ்சிட்டுக்கள் முதல் தள்ளாடும் முதியோர்கள் வரை இவ் விசர் பிடித்த சிங்கள மடையர்களின் அடாவடித் தனங்களால் நித்தம் நித்தம் தம்மைக் காப்பாற்று என்று மரணதேவதையிடம் இரங்கல் பிரார்த்தனை செய்து கொண்டும் அல்லல்பட்டும் அவஷ்த்தைப் பட்டுக் கொண்டும் இருக்கின்றார்களே.... இதற்கு முற்றுப் புள்ளி என்ன தான் என்னவோ...????
-
- 1 reply
- 807 views
-
-
கரை தேடும் அலை மீண்டு(ம்) கடல் சேர்கிறது இலைஉ திரும் மரம் மீண்டும் துளிர் விடுகிறது மண் வீழும் நீரும் ஆவியாய் விண் மீள்கிறது என்ன தான் விசித்திரமோ? பிரிந்து போன நம் காதல் மட்டும் இன்னும் உயிர்ப்படைய வில்லை தரித்து நிற்கும் புகைவண்டி மீண்டும் பயணிக்கிறது இடைவேளைக்குப் பின்னரும் திரைப்படம் தொடர்கிறது நின்று போன யுத்தம் மீண்டும் நிகழ்கிறது என்ன தான் விசித்திரமோ? நின்று போன நம் காதல் மட்டும் மறுபடி தொடரவே யில்லை :wink:
-
- 41 replies
- 4.5k views
-
-
என்ன தேசமோ .......... செந்நீரால் ஒரு தேசம் , எழுதப்பட்டு கொண்டு இருக்கிறது . கால மாற்றத்தின் தண்ணீர் வெள்ளம் காலன் மகிந்து ஏவும் ,கொத்துக்குண்டு, கிளஸ்டர் அகோரம் , தாயை இழந்த பிள்ளை ,தலை சிதறிய தந்தை , பங்கருக்குள் அம்மம்மா ஐயோ என்னும் அவலக்குரல் கால் வயிறுககும் கஞ்சி இல்லை கை குழந்தையை தவறவிட்ட தாய் தாயும் மூன்று மாத குழந்தையும் , ஒரு பக்கம் தந்தை மண் மீட்க அக்காவை இழந்த தம்பி , ஊரை உறவை தொலைத்த சொந்தங்கள். இப்படி உங்கள் வாழ்வில் கேட்டதுண்டா ? தலை சிதறி ,தசை துண்டங்களாக வீதி யோரம் , உருக்குலைந்து , அடையாளமற்று , இறந்தவனை புதைக்க , இப்படி ஒரு அவலம் கண்ட தேசம் உண்டா? கிளியை பிடித்தோம் முல்லையை பிடித்தோம் , ஆன…
-
- 0 replies
- 656 views
-
-
கீழுள்ள இந்தப்புகைப்படத்தை பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கவிதையாக தரமுடியுமா? கவிதையாக வடிக்க முடியாதவர்கள் வசனங்களிலாயினும் கூறுங்கள். இப்புகைப்படம் பற்றிய எனது எண்ணங்களை கவிதையாக அல்லது வசன நடையில் இறுதியாக தருகின்றேன். நன்றி! (மேலுள்ள புகைப்படத்துடன் சம்மந்தப்பட்ட செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்)
-
- 11 replies
- 1.6k views
-
-
என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ... மே 18 இக்கு பிறகு எல்லாம் தலைகீழா தெரியுது எங்களுக்கு... ஒண்டு நாங்கள் தலைகிழா நிக்கிறோமா?-இல்லை எல்லாம் தலைகீழா நடக்குதோ? என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ... புலம்பெயர் தேசத்தில எல்லாமே புதிரா இருக்குது புரிஞ்சு கொள்ள புத்தி மட்டாக்கிடக்குது புதுசு புதுசா கனக்க முளைக்குது எது விதை?எது களை எண்டு எவருக்கேனும் தெரியுமோ? என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ... தமிழர் பேரவை என்றோம் உலகமெல்லாம் தமிழர் ஒருகுடை என்றோம் ஓங்கி குரல் கொடுப்ப…
-
- 7 replies
- 2.3k views
-
-
வேர்க்கும் குளிர் இரவுகளில் கோர்த்துக்கொள்கிறது விழிகளில் நீர் ....... நிசப்த யுத்த விளைவுகளின் வெப்பம் எரிக்கிறது கணங்களை ................ விரித்த சிறகுகளை மடக்கி திணிக்கப்பட நிகழ்வுகளை சுமந்து நேற்றைய வீற்றிருப்பின் கற்றைகளை சுமக்கையில் நாளைய வரவில் வல்லையில், எந்தநூர் வயல் வெளிகளில் , சந்நிதியில் , உப்பாற்றங்கரைகளில், வல்வைச்சந்தியில் , என்ன நிகழ்விருக்கும்? வரப்புகளில் நடைபோகும் நாரைகள் உரத்துக்கத்தும் ஊளைக்கிடாய் ௬ட்டம் பால்மொச்சையடிக்கும் சிறு குட்டியாடு பருவகால தும்பிகள் வண்ணாத்துப்பூச்சிகள் எல்லாமிருக்குமோ ? முற்றத்து மல்லிகை வேலியோர எல்லைப்பனை நாயுருவி சுமக்கும் தேன் ௬டு அகலபடந்த அறுகி…
-
- 1 reply
- 2.3k views
-
-
என்ன நியாயம்??? கட்டிக்கரும்பே மரகத மணியே பவழம் பவழம் எம் இதழ்கள் என்று சொன்னவர்களும் நீங்கள்தான் ....... கயல் விழி என்றும் , எம் விழி அம்பால் பெட்டிப் பாம்பாய் அடங்கினோம் என்று , சொன்னதும் நீங்கள் தான் ........ எங்கள் கொடியிடை அசைவில் , உங்கள் மதி தறி கேட்டுப் போனதாய் சொன்னதும் நீங்கள்தான் ........ பாலைவனமாய் இருந்த உங்கள் வாழ்வில் கோடைத் தென்றலாய் நாங்கள் வந்தோம் என்று சொன்னவர்களும் நீங்கள் தான் ...... இப்பிடி, சும்மா இருந்த எங்களை உங்கள் கற்பனை குதிரைகளால் மேய்ந்து விட்டு !!!!!!!! இப்பொழுது மட்டும் மோகம் கலைந்தவுடன் " இல்லாள் " என்று சொல்வது என்ன நியாயம் ??? பி கு : கிட்டடியிலை இல்லாள் எண்டு சொல்லி பொம்பிளையளை மட்டம் தட்டி …
-
- 12 replies
- 1.3k views
-
-
என்ன பார்க்கிறீர்கள்? மஞ்சள் குளித்து மரமொன்று நின்றது பச்சைப்பசேலென பார்ப்பதற்கு குளிர்ச்சியாய் நிழல் தந்து நின்றது இப்படி மாறிவிட்டதே! பார்த்து நின்றேன். என்ன விகைப்பாய்ப் பார்க்கிறீர்கள்? நாங்கள் பருவ காலத்துக்கேற்ப கோலத்தை மாற்றி வாழுகிறோம். உங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களோ நேரத்துக்கு நேரம் பணத்துக்காகவும் பதவிக்காகவும் குணமும் மாறுகிறார்கள் கொள்கையும் மாறுகிறார்கள் அவர்களைப் பார்க்காமல் என்னை ஏன் பார்க்கிறீர்கள்? வாயடைத்து தலைகுனிந்து வந்தேன். செண்பகன் 18.10.14
-
- 1 reply
- 950 views
-
-
எல்லாமே வீணாய்ப் போச்சு! இன்னும் என்ன இருக்கு? இதைச் சொல்லிச்சொல்லியே சமாதான புறாக்களாக பூரிப்போடு பறக்கின்றோம்! வேண்டும் என்று எதைக் கேட்டு நின்றோமோ; இன்னும் ஆரம்பத்திலேதான் நிற்கின்றோம்! தேவையென்று எதைத் தேடினோமோ; அதைத் தொலைத்துவிட்டுத்தான் தேடுகின்றோம்! என்னதான் தேவை எங்களுக்கு....? ஒன்றுமே தெரியவில்லையா உங்களுக்கு??? என்ன மனுஷரடா நீங்கள்??? அயல்நாடாம் தமிழ்நாட்டின் கொதிநிலை கூட, உங்கள் கண்ணீரில் இல்லையே! அச்சச்சோ... தவறாக சொல்லிவிட்டேனோ??? கண்ணீர் வந்தால்தானே...அதைப்பற்றி பேசமுடியும்! தமிழராய் இல்லாட்டியும் பரவாயில்லை... குறைஞ்சது, மனுஷராத்தன்னும் ஒருமுறை நினைச்சுப் பாருங்கோ! நடந்ததை எல்லாம்.... நடக்கின்றவை எல்லாம்... நடக்கப்…
-
- 26 replies
- 2.5k views
-
-
என்ன மாயம் நீ செய்தாய் யாழ்களமே என்ன மாயம் நீ செய்தாய் நீ கட்டிளம் காளையா கன்னிப் பெண்ணா தமிழைத் தாயென்று போற்றுதனால் உனையும் நான் பெண் என்பேன் அழகிய பெண்ணே நீ இத்தனைநாள் என்முன்னே உன் முகம் காட்டாது எங்கே மறைந்திருந்தாய். இரவு பகலென்று ஊனுறக்கம் இல்லாது கன்னியரும் காளையரும் உனைச்சுற்றி நிற்கின்றார் உற்சாகம் தரு மருந்தாய் உன்னை உணர்வதனால் உலகெங்கும் உள்ளோரை ஒன்று கூட்டி ஊர்ப்புதினம் அத்தனையும் உணர்வோடு சொல்லி ஆக்கம் தருவோரை அரவணைத்தும் நிற்கின்றாய் திண்ணையிற் கூடி திகட்டும்வரை நாம் பேச தடையொன்றும் சொல்லாத தாராள மனதோடு தொண்டுதான் செய்கின்றாய் தொடர்ந்தெமக்கு உன்னை அறிந்ததனால் உன்னோடு இருப்பதனால் உலகில் பிறந்திட என…
-
- 21 replies
- 1.4k views
-
-
-
கிழிந்த சட்டையுடன் துணிக்கடைக்கு போனேன்....! ஒரு சட்டையை காட்டியவன் மற்றொன்றை காட்ட மேலும்,கீழும் பார்த்தான்..! பட்டு சட்டை போட்டவன் கைக்குட்டை கேட்டான் மலைபோல் குவித்து காட்டினான் அவனுக்கு...! நான் எடுத்து வந்தேன் அவன் மறுத்து சென்றான்...! -வேடந்தாங்கல் http://www.ilankathir.com/?p=6291
-
- 0 replies
- 517 views
-
-
என்னடா வாழ்க்கையிது??????? அடிக்கடி வாயில வாற வார்த்தை இது! உண்மையில் அதுதான் உண்மை! ஏனென்று தெரியவில்லை! எதற்கென்றும் புரியவில்லை! என்னதான் நல்லது செய்தாலும் - கடைசியில என் தலையிலதான் வந்து விழுகுது! நல்லவனாய் வாழ்வதும் ... வாழ நினைப்பதும் ... எவ்வளவு கஷ்டம் என்பது ... இப்ப புரியுது!!! தன் கதை வசனத்துக்கு... என் தலையில, தலையெழுத்தாய் எழுதிவிட்டுப் போனவனை... இன்னும் தேடுகின்றேன் நான்! என் கையில் கிடைத்தால் தொலைந்தான் அவன்!!! "கடவுள்" எனும் நபரைப் பார்த்தால் எனக்குச் சொல்லுங்கள்! உங்கள் சார்பாகவும் ஏதாவது இருக்கும்! சேர்த்துச் செய்துவிட்டு... நான் போகின்றேன் நரகத்துக்கு!!! இந்த உலகத்தில் வாழுவதைவிட நரகம் எவ்வளவோ மேல்!
-
- 4 replies
- 1.2k views
-
-
என் உண்னதக் காதலலுக்கு புண்னைகையாய் வாந்தாய் பூவிழிலி ஓரம் நீர்த் துளி வழிவி என மேல் காதல் கொண்டாய் தேன் உதடால் மோகம் செய்து உருமை கொண்டாடினாய் பூ விரல் கொண்டு என் மேனி வருடினாய் அவள் கூந்தல் ஆண்டவன் செய்த கருநீர் அரிவி யார் இவளோ? தேன் அமுதோ? www.tamil1.tk www.tamil.2.ag
-
- 1 reply
- 884 views
-
-
என்னருமைத் தாய் நிலமே...... தசாப்தங்களாய்ப் போராடித் தாய் நிலத்திற்க்காய் உதிரமிட்டுக் கட்டிக் கட்டிக் காத்த கனவுகளை உன் பிள்ளைகளின் பெருவிருப்பைச் சிதைக்கும் ஊழிக்காலம் ஒன்று உன் மடியில் உருவான போது எப்படித் துடித்திருப்பாயம்மா என்னருமைத் தாய் நிலமே...... ஒட்டி உலர்ந்த வயிறுகளுடனும் வெடித்துப் பிளந்துபோன உதடுகளுடனும் எச்சிலைக்கூட விழுங்க இடைவெளியின்றி ஏவப்பட்ட செல்களின் நடுவே எங்கள் பச்சிளம் குழந்தைகள் பரிதவித்தனவாம் ஜயகோ.... எம்பிள்ளைகள் துடித்தபோது எப்படித்தாங்கினாயம்மா என்னருமைத் தாய் நிலமே...... கந்தகப்புகை நடுவே கண்ணுறக்கம் மறந்துவிட்டு உந்தனுக்காய் வெந்தணலில் நீராடிய வேகாத இலட்ச்சி…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
இளங்காலைப் பொழுதினில் இதழ் விரித்து மலரத் துடித்த போது உன் வசியப் பார்வை என்னை சட்டென மலரவைத்தது. உன்னைப் பார்த்த அந்நிமிடத்தில் இருந்து என் மனசுக்குள் எதோ ஒரு தாக்கம். இதைத்தான் காதல் என்பார்களோ? புரியவில்லை..! எனக்கு புரியவில்லை, கிளியே..! அவனிடம் ஒரு முறை கேட்டு சொல் மெளனத்தின் ஓரத்தில் நெஞ்சின் ஈரத்தில் வெட்கப்படும் என் மனசு இராத்திரியில் கனவுகள் பகலில் அவன் நினைவுகள் இதுதான் என் வாழ்க்கை கிளியே இதையும் அவனிடம் சொல் ஆயிரமாயிரம் கனவுகளில் அவன் வந்து என் கூந்தல் கோதி தூக்கத்தை கலைத்து விளையாடி மகிழ்ந்த அந்த இனிமையான இரவுகள் அதையும் மறக்கவில்லை நான் இதையும் அவனிடம் சொல் கிளியே. பசுவின் மடியினைத் தேடும் பசுங்க…
-
- 27 replies
- 4.6k views
-
-
என்னவனே.. உன்னை நினைத்து நினைத்து வாழ வேண்டும் உந்தன் மடியில் உயிர் துறக்க வேண்டும் வருவாயா? காலை மாலையாவதும் மாலை காலையாவதும் உந்தன் ஆசைக்குள் மறைய வேண்டும் வருவாயா? எந்தன் கோட்டையை விட்டு நீ போனாலும் நீ போட்டு விட்டு போன கோடுகள் ஆறவில்லை அதற்காகவேனும் வருவாயா? கோழி கூவினாலும் கோயில் மணி அடித்தாலும் கோலம் போட மறந்தாலும் உந்தன் மடியில் மறக்க வேண்டும் அதற்காகவேனும் வருவாயா? கனவில் நான் குளித்து நினைவில் காய்கிறேன் என்னை உடுத்திக்கொள்ள உண்ர்வோடு வருவாயா? அங்கத்தில் இடம் பிடித்தாய் ஆசையை தூண்டி விட்டாய் அனுபவத்தை கொளுத்தி விட்டாய் அணையாமல் எரிகிறேன் அதற்காகவேனும் வர…
-
- 8 replies
- 1.5k views
-
-
என்னவளாம் இன்னவள் அன்பின் சிகரமாம், அறிவின் ஒளிமயமாம், அழிகின் சிலைவடிவாம், என்னவளாம் இன்னவளின் செவ்விதழின் சிரிப்பொலியாம், பிரம்ம தேவன் படைப்பின் விசித்திரமாம், கலைத்தாயாம் கலைமகளையும் கவர்ந்த அந்த புன்னகையாள் கவியருளும் கவிமொழியும் அவள் நாவில் நற்றுணையானது.. நான் எதிர்பார்த்த அத்தனையும் அவளிடத்தில் இருக்கையிலே என்னவளாம் என்னவளை, என்னிடத்தில் சேர்ப்பதற்கு தூது சொல்லச் சென்றவளும் துணைவனிடம் சென்று விட்டாள். என்னவளாம் இன்னவளை என்னிடத்தில் சேர்ப்பதற்கு என்மனதில் துணிவில்லை, அவள் நாவின் வல்லமையால் என் நாவும் மௌனித்தது.. மௌனத்தின் மௌனத்தால் காத்திருக்கும் வேளையிலே காலங்கள் கரைந்தோடி கறுப்பினிலே நரை தட்டினாலும் காத்திருப்பேன் காத…
-
- 11 replies
- 1.9k views
-
-
என்னவளின் டயறி ---கண்களால் காதல் தந்து ....நினைவுகளை மனதில் சுமந்து ....வலிகளால் வரிகளை வடித்து ....என்னவளின் காதல் டயறி ....கண்டெடுத்தேன் கணப்பொழுதில் ....என் மீதுகொண்ட கவலைகளை ....தன் காகிதத்தில் பதிந்திருக்கிறாள்....காகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது ....அவைகூட அழுதிருக்கிறது ....!!!+காதல் நினைவுகளும் காதல் டயறியும்என்னவளின் பக்கம்( 01) உயிரற்ற காகித்தத்தில் ....உயிர் கொண்டு எழுதினேன் ....உதயனே உயிரானவனே ......!!!காகிதம் கூட உயிர் பெற்று ....உன்னையே எழுத சொல்கிறது ....!!!என் கையெழுத்தை தவிர ....அத்தனையும் உன் நாமமே ....கவலைகளை கண்ணீரால் ...வரிகளாய் எழுதுகிறேன் .....!!!+காதல் நினைவுகளும் காதல் டயறியும்என்னவளின் பக்கம்( 02) என்னவளின் டயறியிலிருந்து ......03 …
-
- 12 replies
- 2k views
-
-
என்னவளுக்கு ! இன்று தொழிலாளர் /உழைப்பாளர் தினம் இன்றுதான் உன் பிறந்த தினமும் "எட்டு மணி நேர வேலை "என்று தொடங்கி ரஷ்ய புரட்சியே வெடித்தது என்னவளே ! எந்த புரட்சியும் இல்லாமல் இன்னும் இரு எட்டு மணி நேர வேலை செய்கிறாய் ஒற்றையாய் ஒரு தசாப்தம் குடும்ப சுமை உன்மீது இரட்டையாய் ஒன்றானோம் புலம் பெயர்ந்து விரும்பா/எதிர்பாரா புலம்பெயர்வு எனக்கு எல்லாமே போனஸ் தான் நீயும் எனக்காய் மாறிப்போனாய் குழந்தைகளுக்காய் புதிய மண்ணில் மீண்டுமொரு போராடியவாழ்வு அத்திவாரத்திலிருந்து அலைகளில் அசைந்தவாழ்வு சுனாமியாய் அடித்து ஓய்ந்தது உயிரால் வரைந்த ஓவியம் உலகால் கலைந்த சீவியம் மனிதர்களுக்கு கடின வாழ்வு பச்சோ…
-
- 2 replies
- 770 views
-
-
என்னவளே என்னவளே என் கண்ணின் கருவிழியே! கருவுக்கு உயிர்கொடுக்கும் உன்னதப் பெண் இவளே! என்னவளே என்னவளே என் குருதியும் நீதான் என்னவளே! உன் குருதியை பாலாக்கி சேய்க்கு ஊட்டும் உமையும் நீதான் என்னவளே! என்னவளே என்னவளே உன் கூந்தல்தலின் கருமைதான் என்னவளே! மதிபோன்றமுகத்தின் கருமுகில்தான் உன் கூந்தலா மன்னவளே! என்னவளே என்னவளே உன் குரலின் இனிமைதான் என்னவளே! நான் கேட்கும் இசைதானா உன் குரல் என்னவளே! என்னவளே என்னவளே என் இதயத்துடிப்பும் நீதான் என்னவளே! நீ இல்லை எனின் என் இதயத்துடிப்பு நின்றுவிடும் மன்னவளே! என்னவள…
-
- 3 replies
- 1.2k views
-
-
உன் கள்ளம் பிடிபட்டது ..... கண்ணாடியில் நீயே.... உன்னைபார்த்து பேசுகிறாய் .... என்றுதான் இதுவரையும் .... நினைத்தேன் ....!!! இல்லை இல்லை ....!!! என் உருவத்தை நினைத்து .... என்னோடு பேசுகிறாய் .... என கண்டுகொண்டேன் .....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 01 #### ஏய் .... நீ தூங்கிவிட்டு எழுந்த ..... போர்வை கசங்கியிருக்கும் .... வடிவத்தை பார் ...... இதய வடிவத்திலேயே .... சுருண்டு கிடக்கிறது ..... அத்தனை நினைவகளுடன் .... கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 02
-
- 36 replies
- 37.4k views
-