கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
சவுக்கு மரக் காடுகளின் கூவலையும் தாண்டி நரிகளின் ஊளைச் சத்தம் காதைப்பிளக்கிறது...! கருமுகில்களுக்குள் ஓடியொளிந்து விளையாடும் பால்நிலவைப் பார்த்து தெருநாய்களெல்லாம் குரைக்கின்றன...! பசித்து பாலுக்கழும் குழந்தை அழுவது காற்றடிக்கும் போக்கில் இங்குவரை கேட்கிறது...! நேற்று இங்கு நடந்ததை எத்தனை தடவைதான் நினைத்து நோவது...?! அப்படியே தூங்கிவிட்டேன்...! எனக்குத் தெரியும்... நான் தூங்குகின்றேன்... அதை உணர முடிகிறது என்னால்! கனவுகள் என் தூக்கத்தை ஆக்கிரமிக்கின்றன... குதிரைகளின் குளம்பொலிச் சத்தம்... இந்த நேரத்தில் யாராயிருக்கும்...!? நிலவொளியின் வெளிச்சத்தில் நன்கு தெரிகிறது... ஆம் அவர்களேதான்! சவுக்கு மரக்காடுகளின் நடுவே... சிதைந்துபோன கல்லறைக்குள்ளிருந்த…
-
- 8 replies
- 1.2k views
-
-
9 நீ செய்யும் குழப்படி பார்த்து .... அப்படியே பேரனை போல என ... அப்பத்தா சொல்கையில் எனக்குள் ... ஓடும் ஒரு இனம் புரியா உணர்வு .. மகனே . 10 எனது சாப்பாட்டு தட்டில் .. இருக்கும் அப்பளத்தை எடுக்க .. நீ அம்மாவிடம் அனுமதி கேட்பது .. பயமா ...மரியாதையா என தெரியாமல் .. நான் மகனே . 11 நீ கேட்டு அம்மா கொடுக்காவிட்டால் ... நீ நின்று பார்க்கும் முறைப்பு பார்வை ... அதைகானும் அம்மா அப்படியே நீ .... உன் அப்பா போல கோவத்தில் என .. சொல்லும்போது நமக்குள் ஒரு ... திமிர் வந்துதான் போகுது மகனே .. 12 அம்மா அடிச்சுட்டா என முறைப்பாடு ... கேட்டுட்டு நான் அம்மாவை ஒரு தட்டு ... அதை பார்த்து நீ சிரிக்கும் சிரிப்பில் .. தொலைந்து போகிறது எனது துன்பம் ... மகனே . 1…
-
- 8 replies
- 1.6k views
-
-
[யாழ் உறவுகளின் உள்ள உணர்வுகளுக்கு அதி கூடிய மதிப்பளிக்கும் வகையிலும் மனச் சங்கடங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் படம் நீக்கப்பட்டுள்ளது.] பாலன் பிறக்கிறான் சேதி கேட்டு.. வேட்டை ஆரம்பம் கொலைகளின் நடுவே இரத்த ஆற்றில்.. அவன் வாழ்வு..! அற்புதங்கள் செய்கிறான் ஏழை மக்களை கவர்கிறான் சண்டாளர்களின் சாவில் இருந்து.. மக்களை காக்க சொற் கருவி ஏந்துகிறான்..! ஆட்சியாளர்களின் கர்வமும் கோபமும் பொங்க.. முட்கிரீடம் தரித்து சிலுவையில் உலோகங்களால் குத்தப்பட்டு மரிக்கிறான். அங்கும் மனித உரிமை மீறல்கள் நீதி விசாரணை இன்றி.. 2012 ஆண்டுகள்..! இவன் 1950 களில் பிறக்கிறான் காலத்தின் கோலமாய் சாதாரணமாய் வளர்கிறான். சிங்களப் பேரின அரக்கர்…
-
- 8 replies
- 886 views
-
-
தங்கைகள் தேவைப்படுகிறார்கள்... நடை பழகும் நாட்களில் கைபிடித்து கொள்ள அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்... அடம் பிடித்தோ அழுது புரண்டோ பொட்டோ, பூவோ முதல் முதலில் தங்கைக்கே வாங்குகிறான் அண்ணன்... '' அ" வில் தொடங்கி சைக்கிள் பழக்கி மகிழுந்து வரை அண்ணன்களே ஆசிரியர் தங்கைகளுக்கு... அண்ணனாக மட்டுமன்றி நண்பனாகவும் சில நேரங்களில் தந்தையாகவும் மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்... தங்கைகளின் எந்தவித கோரிக்கையும் அண்ணன்களிடமே வருகிறது தங்கைகளுக்கான முதல் சிபாரிசை அண்ணன்களே முன்னெடுக்கிறார்கள்... அக்காக்களிடம் மறைத்த அண்ணன்களின் காதலை அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்... அண்ணன்களுக்காக அப்பாக்களிடம் கோபம் கொள்வதில் தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்... தங்கைகளி…
-
- 8 replies
- 26.8k views
-
-
இந்த கணங்களை கடந்து போவது எப்படி என்று தெரியாமல்.... கனத்த மௌனத்துடன் சலனமற்றுக்கிடக்கிறேன் வெறுமையை சுமந்தபடி ... நீ உனது பிரியங்களால் தின்று கொண்டிருக்கிறாய். கண்ணீர் கூடப் பிரியம் தான். கனவுகளை தின்னும் பூதத்திடம் மோதுகிற வண்ணத்துப்பூச்சியே, ஏக்கம் தெறிக்கும் உன் கண்கள் என் அறைகளில் அலைகின்றன.. திரண்டெழும் நீரை மறுப்பதாக நடித்து நீ விழுத்தும் வார்த்தைகளோடு மௌனித்துப்போவதை விட வேறெதையும் செய்ய முடியவில்லை என்னால். என்ன செய்ய முடியும் என்னால் கண்ணீரை துடைப்பதற்கு விழி துடைக்கும் சிறுகரத்தினைவிடவா..!!! அநேக பொழுதுகளில், வணக்கத்தில் தொடங்கி கண்ணீரில் முடிந்துவிடுகிற வார்த்தைகளில் மூழ்கிக்க…
-
- 8 replies
- 1.3k views
-
-
நீ தடம் பதித்துப் போகும் பாதவெளியில் பட்ட பனித்தூறல் அதன் சூட்டில் உருகிப் பின் என்னைப்போல் உறைகிறது காண் ஒயாமல் மோதி விழும் பனிச் சாரலது உரைந்த பனியதன்மேல் உள்ளக்கற்பனைபோல் கோபுரம் கட்டி எழ ஒரு கோடி மேளங்கள் ஒன்றாய் இசைப்பதுபோல் ஓடி வரும் வான்துளியின் ஒட்டலுடன் ஒளி கீற்றும் சேரந்து வந்து கற்பனையின் ஒப்பனையை கலைக்குது பார் இயற்கைக்கு இயல் இதுவோ? உண்டாக்கி உருப்பெருக்கி உருக்குலைத்து பின் உண்டாக்கும் பெரு இயலோ இவ்வுலகில் யார் அறிந்தும் யார் உணர்ந்தும் முடியாத கற்பனைபோல் கோலமிடும் உள்மனது வான் பரப்பின் மேகமதாய் வாழ்கை எனும் வாழ்வுக்கு
-
- 8 replies
- 984 views
-
-
எரிகற்கள் விழுந்தழிந்த பூநிலத்தின், மீதியான மூத்த குடிகள் நாம்! எறிகணைகள் விழுந்த நிலத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட அகதிகள் நாம்! விட்டகுறை தொட்டகுறை முடிக்கவென... நல்லபடி விடியுமொரு நாளிலென... நம்பியிருந்தோம் நாம்! இழப்புகளும் வலிகளும் எமைத்துரத்த... ஓடியோடியே களைத்தோம் நாம்! ஒரு கையில் கைக்குழந்தை... மறுகைதோளில் அதன் தாயின் உடலென எத்தனை வலிகளை சுமந்தோம் நாம்! கால்வாசி புலமக்கள் மட்டும்... வீடு பெயர்ந்து வீதியில் போராட, நடுக்காட்டில் நாதியற்று ஒளிந்தோம் நாம்! பாதி உலகம் பகலோடு பார்த்திருக்க... பகையாலே பரிதவித்து அழிந்தோம் நாம்! மிச்சம் மீதியின்றி சிந்திய குருதியின்... செவ்வினமான மிச்சசொச்சம் ஆனோம் நாம்! சில இரவு பல பகலில்... வ…
-
- 8 replies
- 1.8k views
-
-
கவிதைகளால் மலர் தொடுத்துன் கழுத்தினிலே மாலையிட்டேன் கனிவான வார்த்தைகளாலுன் காதுகளில் இசை படித்தேன் காதல் மேவ காரிகையுன் கனியிதழில் இதழ் பதித்தேன் காலமெல்லாம் நீயே என்றுன் கரம் பற்றி நான் இருந்தேன் செந்தமிழில் செல்லமா யுனை செல்லக் கண்ணம்மா என்றேன் உந்தன் செல்லக் குறும் பையெல்லாம் உயிரோ டணைத்து உவகை கொண்டேன் உந்தன் தூக்க சந்தம் கேட்டு எந்தன் தூக்கம் நா னடைந்தேன் ஜென்ம மெத்தனை யெடுத்தாலுமினி உன் னோடு தான் வாழ்ந்திடுவேன்
-
- 8 replies
- 954 views
-
-
கவிதையின் கவிதைகள் அழகிற்கும் மென்மைக்கும் பிறந்த பெண்மைகள், உள்ளங்களை வெண்மையாய் உடுத்திக்கொள்ளும் கள்ளங்களை அறிந்துகொள்ள... கடந்துபோகும் காலங்களால் மட்டுமே முடிகிறது! செல்லக் கதைபேசி எண்ணங்கவரும், வண்ணத் தேவதைகளின் இதயங்கள் கறுப்புத்தான்! சிந்தை சிதைக்கும் மடந்தைகளின் எண்ணங்களில்... ஆடவர் இதயங்கள் விளையாட்டுப் பொருள்தான் போல!? ஆரம்பம் என்பது அழகாய்த்தான் ஆரம்பிக்கிறது முடிவுகள் மட்டுமேனோ முடிவுகட்டிச் செல்கிறது! விடிவுகள் இல்லாத வாழ்வினையும் கண்ணீரையும் காதல் பரிசாக கொடுத்துவிட்டுச் செல்வார்... நிறம் மாறும் தேவதைகள்! காதலின் பெயரால் கட்டிப்போடும் தேவதைகள் கல்லறைக்கான பாதையையும் காட்டிவிட்டுச் செல்வார்! காரணமில்லாக…
-
- 8 replies
- 1.4k views
-
-
சிங்களவன் உயிரணுவில் உதித்து.. சிங்களத்தி கருவறையில் வளர்ந்து அவள் முலை பிடித்து உணவருந்தி சிங்கள தேசத்தில் உருவானவன்..! ராஜபக்ச வம்ச வழியில்.. கோத்த பாய எனும் ராஜ கொலைஞனின் கொலைக் களத்தில் கோரம் செய்ய கற்றுக் கொண்டவன். தமிழ் பெண்கள் கற்பு எடுப்பு - பின் அவள் முலை அறுப்பு கோத்தாவின் கட்டளை...! பிசகாமல் அதை செய்து முடிப்பதே என் பிறவிக் கடன். முள்ளிவாய்க்கால் என் பயிற்சிக்களம்.. நந்திக்கடலில் எனக்கு பட்டமளிப்பு.. தமிழர் தலை கொய்து - அதில் பட்டம் பெற்றவன். பயங்கரவாதப் போர் முழக்கம்... கழுகுகள்.. மயில்கள்.. றகன்கள்.. பீனிக்ஸ்கள்.. எல்லாம் கைகோர்க்க.. சிங்கத்தின் கையால் புலி அழிப்பு அ…
-
- 8 replies
- 2.2k views
-
-
பெருமழைக்கான பிரார்த்தனைகளுடன்... -எஸ். ஹமீத் *இன்னும் எரிகிறது நெருப்பு... போதாதைக்குப் பெருங் காற்று வேறு; தீக் கங்குகள் எட்டுத் திசைகளிலும் எழுந்து பறக்கின்றன *பற்ற வைத்தவன் தூரத்தில் பத்திரமாய் ஒரு மாளிகைக்குள்; பாழும் நெருப்புக்கது தெரிந்துதான் பற்றி எரிகிறது...! *தொடங்கியவன் அவன் தொடங்குவதற்கும் தொடர்வதற்கும் உதவியது காற்று! *எல்லாவற்றையும் எரித்துவிடும் பொல்லாத ஆவேசம் நெருப்புக்கு; காற்று நன்றாகவே போட்டுக் கொடுத்தது..! *பைத்தியக்கார நெருப்புக்குப் பச்சை மரங்கள் கூடப் பலியாகிக் கொண்டிருக்கின்றன நேற்றந்தப் பசுங் கிளைகளைத் தழுவிய அதே காற்றின் உபயத்தில்..! *காட்டிக் கொடுத்தலே தொழிலாயான பின்னர் காற்றுக்கு வளர்ந்த மரமென்ன…
-
- 8 replies
- 860 views
-
-
கண்ணா லட்டு தின்ன ஆசையோ ?? எல்லோர்க்கும் தெரிந்த லட்டு எண்ணத்தில் இனிக்கும் லட்டு தின்னத் தின்ன திகட்டா லட்டு ரவா லட்டு , பூந்தி லட்டு....... நாலுபக்கமும் நாலுபேர் இழுக்க நாம் செய்த லட்டோ பலர் பல்லுடைத்து பாவப்பட்ட லட்டு.......... அவரவர் வாழ்வை அவராகவே தியாகம் செய்து திகட்டுவதற்கே , ரத்தத்தையும் தசையையும் பக்குவமாய் கலந்து தேசியத்தில் பதமாய் குழைத்து எங்கள் தியாகநெருப்பில் செய்த லட்டு ........... லட்டால் வந்த வெக்கை பலபேரைக் கிலி கொள்ள பலகைகள் ஒன்றாய் சேர்ந்ததே செய்த லட்டை பிரிக்கவே!!!!!!! லட்டுக்கு வந்த சோதனை உடன் சேர்த்த கஜூ பிளம்ஸ்சால்........ மெல்லிசு மெல்லிசாக லட்டுவும் உலுர்ந்ததே !!!!! மண்ணுடன் மண்ணாக கரைந்ததே !!!!!!!! கண்ணா ம…
-
- 8 replies
- 2.3k views
-
-
தவிப்பு... ஏனோ தெரியவில்லை எனக்குள் நானே தனித்துவிட்டது போன்ற பிரமை... உலகம் என்னை மட்டும் விலக்கி வைத்தது போன்றதோர் உணர்வு... அடிக்கடி அடி மனசில் அனல் பற்றியெரிகின்ற கொதிப்பு... எதையோ இழந்துவிட்டது போன்ற வெறுமை... எனதான வாழ்க்கை பயணத்தில் ஏமாற்றங்களை மட்டுமே சுமந்தது போன்ற விரக்தி... திடீரென தோன்றி மறையும் வானவில்லை போல சில சந்தோசங்கள்... ஆனாலும் அடிக்கடி நான் எதிலோ தொலைந்துதான் போகின்றேன் எதிலென்றும்... இதெல்லாம் ஏனென்றும்... புரிந்துகொள்ள முடியவில்லை...
-
- 8 replies
- 4.3k views
-
-
என் காதல் ...............................தோற்கவேண்டும் நினைத்து கிடைத்து விட்டால் ,கிடைத்ததற்கு மதிப்பு இல்லை தேடியது கிடைத்து விட்டால் சற்று நேர சந்தோசம் மனச்சிறையில் பூட்டி வைத்து கோவில் கட்டி வாழ்ந்து இருந்தேன் கண் திறந்து பார்த்த போது கண்ட சுகம் கொஞ்சம் கொஞ்சம் வேண்டாப் பெண்டாடி கால் படால் குட்டம் கை பட்டால் குற்றம் நினைத்து நடந்தது கேட்டது கிடைத்தது போட்டது வந்தது அருமை தெரியவில்லை ,நினைத்து ,கேட்டு , கிடைத்தபோது காதல் தோற்க வேண்டும் ,வாழ்வில் விளங்கும் வலியும் ,வழியும் குன்றில் ஏறி வைத்து இருந்தால் குத்து விளக்கும் ஒளி வீசும் குடத்துள் விளக்காக கூனி குறுகி ,எரிகிறது எண்ணையின்றி அருமை பெருமை தெரியவில்லை கண் கெட்ட சூரியன…
-
- 8 replies
- 2k views
-
-
கை பிடித்த போது..... என் கவிதை சிறகுகளுக்கு கால் முளைத்தது கன்னியவனை கண்ணுற்ற போது என் இலக்கிய உலகம் இனிய கதவு திறந்தது இனியவன் இமை திறந்த போது மண்ணில் விண்ணுலகம் பார்த்தது-ஆணழகன் மதிமுகம் பார்த்த போது தாய் மொழியைத் தலைக்கேற்றியது தேன்மொழியவன் இதழ் திறந்து பேசிய போது காட்டாறாக இருந்த எனை நீரூற்றாக மாற்றியது என்னவனைக் கை பிடித்த போது! நன்றி
-
- 8 replies
- 2.3k views
-
-
-
உனது துணைவி உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் ஆனால் உன் அன்னையோ கடவுளால் உனக்களிக்கப்பட்ட அரிய தொரு பரிசாகும் விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டவளுக்காக பொக்கிஷமான தாயைத் தொலைத்து விடாதே...
-
- 8 replies
- 1.2k views
-
-
மொழியென்று ஒன்றாய் திரண்டாலே...! ------------------------------------ தமிழரின் உடல்கள் அடுக்கப்பட்டன நிலத்தின் இருப்பைத் தக்க வைக்க ஒற்றுமை மணி சிதறியதால் ஒற்றர்களாகப் பலர் நுளைந்தார் சத்தியம் காப்பதே உறுதியென சளைக்காது உடல்களால் எல்லையிட்டார் சத்தியம் வெல்வது உறுதியெனச் சண்டாளர் கணித்தார் கவனமுடன் பட்டினியாலும் மடியவில்லை பரிசுகளாலும் வீழவில்லை உறவாடி வீழ்த்துதல் நல்லதென உலகெங்குமிருந்து உள்நுளைந்தே அரசொன்றை வீழ்திய மகிழ்வினிலே நரந்தின்னும் நாடுகளானதன்றோ நாடுகள் வாழ நாம் சாகும் சூனியமான சூழலன்றோ சூனியமான சூழலை நாம் எம் சாதுரியத்தால் மாற்றிடவே மதமென்று நின்றால் தோல்விகளே மொழியென்று ஒன்றாய் திரண்டாலே உலகெங்கள் உரிமைக்கு வழிவிட…
-
- 8 replies
- 735 views
-
-
பிரிவு வாழ்வில் எத்தனை பிரிவுகள் தாய் நிலத்தைப் பிரிந்தேன் தாய் தந்தையைப் பிரிந்தேன் தம்பி தங்கையையும் பிரிந்தேன் செல்ல நாய்க்குட்டியைப் பிரிந்தேன் கிளித்தட்டு ஆடும் சிறு திடலையும் பிரிந்தேன் சிட்டாய் பறக்கும் என் துவிச்சக்கர வண்டியைப் பிரிந்தேன் பசுமையான பள்ளித் தோளியரைப் பிரிந்தேன் நறுமணம் வீசும் முற்றத்து மல்லிகையைப் பிரிந்தேன் இனிய குயில்ப் பாட்டைப் பிரிந்தேன் மொத்ததில் எனது இனிய கனவுகளைப் பிரிந்தேன் இத்தனை பிரிவுகளும் எத்தற்கா செய்தேன்? பிரிவுகளின் கொடுமையில்த் தவியாய்த் தவிக்கிறேன். :cry: துளசி
-
- 8 replies
- 1.7k views
-
-
-
பூநகரியில் புலிதேடும் படலம்..... ஆமிக்காரனும் சட்டம்பியாரும் கேள்வியாயும் பதிலாயும் ஒரு கவிதை ஜயா....ஜயா ... நில்லு..நில்லு.! சந்தியிலே புலி நிக்கா சொல்லு.. சொல்லு ! அந்த வழில புலி கண்டிய... ...? ஒமோம்.. தம்பி... ஒமோம். அந்த வழியிலே புளி நிக்கு கனக்க கனக்க காச்சு கிடக்கு..! இல்ல இல்ல மாத்தய ..! கொட்டியா... கொட்டியா கண்டியா..! ஒமோம்..ஒமோம் கொட்டயோட தான் நான் கண்டேன் இனி கோதுடச்சு ... கொட்டயெடுத்து... கொழும்புக்கு அனுப்பலாம் நீங்கள்... டேய்..ஜயா.. உனக்கு காது கேட்காத..? மாத்தய..நீ போடா போட..! நான் அந்த ஜயாட்ட கேக்கிறன்... தம்பிகளா.. நான் மனதுக்குள்ள சொல்லுறன் புலி தேடவந்த பொன்சேகவின் தம்பிகளே …
-
- 8 replies
- 2.5k views
-
-
முதுமை என்பதோர் புதுமை முதுமை என்பதோர் புதுமை - அதை முழுதும் உணர்ந்தோர் யாரிங்கு? முதுமை தருவது அறிவாகும் - அதில் முழுமை பெறுவோர் சிலராவர் முதுமை என்பது எதுவரை - அதன் முடிவைச் சொல்பவர் யாருளர்? முதுமை தருவது நோயென்று - தினம் முடங்கிக் கிடத்தல் தகுமோ? இனிதே, தமிழரசி
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
காதலித்துப்பார்........... தேன் கசக்கும் வேப் எண்ணை இனிக்கும் அம்மா சொல்வது காற்றில் பறக்கும் காதலி சொல்வது வேதவாக்காகும், கெட்டவனாய் ஊர் உலகத்துக்கு தெரிவாய் நல்லவன் வல்லவன் ஆவாய் உன் காதலிக்கு, பகல் இரவாகும் சூரியன் சுகமாகும் இரவு பகலாகும் நிலவு சுடும் நீ உன் காலில் எழும்பி நிற்க முடியாதவரை சொல்வாய் உன் சிரிப்பு என்னை பலவீனமாக்கி விட்டது என்று பலம் பெற மீண்டும் ஒரு முறை சிரியேன் என்பாய் உன் வங்கியில் இருப்புக் குறைய கதலியின் கண்ணில் வெறுப்புத் தெரியும் உன் மடியின் கனம் குறையும் அவளை தேடி இன்னுமொரு மடி வரும் வங்கியில் இருப்புடன் தெளிவான வானமாய் உன் மனம் இருந்திருந்தால் நீ இந்த சாக்கடைக்குள் வீழ்ந் திருக்கமாட்டாய…
-
- 8 replies
- 1k views
-
-
வாழ்க்கையைக் கண்டு பயந்தேன்!! அதன் வசந்தத்தை அனுபவிக்காத வரை!! அன்பைக் கண்டு பயந்தேன்!! அது என் இதயத்தில் இருள் போன்ற கருமையை நீக்கி, நிகரில்லா வெளிச்சத்தை வீசும் வரை!! வெறுப்பைக் கண்டு பயந்தேன்!! அது அறியாமை என்று அறியும் வரை!! ஏளனங்களைக் கண்டு பயந்தேன்!! எனக்குள் சிரிக்கத் தெரியாதவரை!! தனிமையைக் கண்டு பயந்தேன்! நான் தனியாக இருக்கக் கற்றுக்கொள்ளும் வரை!! தோல்விகளை கண்டு பயந்தேன்!! தோல்வியே வெற்றிக்கு அறிகுறி என்று உணரும் வரை!! வெற்றிகளை கண்டு பயந்தேன்!! வெற்றியே வாழ்க்கையின் சந்தோஷம் என்று அறியும் வரை!! மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பயந்தேன்!! அவர்களுக்கும் என்ன…
-
- 8 replies
- 1.7k views
-
-
தமிழீழத்துக்கு ஓர் பயணம்.......... கவிதை.... சிறுவனாய் அன்று சிட்டுக்கள் வால் பிடித்து சுற்றிவந்த தெருக்களெல்லாம் வசந்தமாய் நினைவில் வர வானூர்தியில் அமர்ந்து வாழ்ந்த நிலம் செல்கிறேன்.... வட்ட நிலவுகளாய் வண்ண நிறங்களாய் குருவிக் கூட்டங்களாய் குளிர்விக்கும் வசந்தங்களாய் கூடி நின்ற எங்கள் சின்னஞ்சிறு காதலிகள் கூடிவந்த தெருக்கள் என்றும் எந்தன் நினைவுகளில் இன்பக் கனவுகளாய் அன்று நான் நண்பனிடம் அவள் என் கிளியென்பேன் அவளோ தன் தோழியிடம் அவன் என் புலியென்பாள் இப்படியாய் பல பல பள்ளிக் கால விளையாட்டு இவையெல்லாம் மனங்களில் மறையாத இன்பத் தேனூற்று.... சிட்டுக்களைச் சிறைபிடிக்க அவசரமாய் செல்வதென்றால் அம்மா…
-
- 8 replies
- 1.6k views
-