கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கித்தாளம் சின்னையா என்பது என் மாமன்.... 60 வயது இருக்கும் அவருக்கு....ஒரு மனைவி மூன்று பிள்ளைகள் என்பது official அறிக்கை. படலை பாய்ந்து, வேலி பாய்ந்து வாரிசை உருவாக்கியதில் அவர் தான் ஊரில் மன்னன் என்பது ஊர் பேச்சு இப்போ எல்லா மனுசியும் விட்டுப் போய், ஒரு கருத்த 35 வயது பெண்ணை வைத்திருக்கின்றார் என்பதும் ஊர் பேச்சுதான்...ஆனால் இடைக்கிடை இன்னும் வேலி பாய்கிறார் என அவரின் 35 வயது கடைசி மனுசி பக்கத்து வீட்டுக்காரனுக்கு சொன்ன செய்தி (சொல்லும் போது இரவு 11:30) அவருக்கு நான் "எழுதுவது" பற்றி பெரிய சந்தோசம்...திடீர் திடீரென தன்னுடைய சில கவிதைகளை அனுப்புவார்....எங்கே அனுப்பினாலும் உடனே திரும்பி வரும் அவரின் கவிதைகளை தரவேற்ற வேறு இடம் கிடைக்கவில்லை.....ஆகவே யாழை தேர்ந்தெட…
-
- 8 replies
- 1.2k views
-
-
எழுத்துப் பிழையின்றி எழுத நினைக்கும் காதல் எழுத்துப் பிழையின்றி வாசிக்க நினைக்கும் நட்பு * என் நண்பனை அறிமுகப்படுத்தினேன் சந்தோசப்பட்டனர் என் நண்பியை அறிமுகபடுத்தினேன் சந்தேகபட்டனர் * காதலி கொடுத்த பூ வாடிப்போனது நண்பி கொடுத்த பூ வாடவில்லை அதுதான் நட்பு * காயப்படுத்திய கரம் நட்பென்றாலும் அதே கரத்தையே தேடும் குணப்படுத்த நட்பு -யாழ்_அகத்தியன்
-
- 8 replies
- 2.1k views
-
-
என் மதத்தை கேலி செய்தேன் மாற்று மதத்தான் அரவனைத்தான் என் இனத்தை குறைகூறினேன் மாற்று இனத்தவன் புகழ்ந்தான் எம் போராட்டத்தை இழிவுபடுத்தினேன் மாற்றான் முற்போக்குவாதி என்றான் எம் போராளிகளை காட்டி கொடுத்தேன் என்னை புலனாய்வாளன் என்றான் எம் இனத்தின் உரிமைகளை தடை செய்தேன் என்னை அமைச்சராக்கினான் எம் இனத்தின் எதிரிக்கும் எதிராக ஆயுதம் தூக்காதே என்றேன் அகிம்சாவாதி என்றான் என் சனத்தின் சனநாயகத்தை சாகடித்தேன் என்னை சனநாயகவாதி என்றான் என் இனத்தின் அவலங்களை கண்மூடி பாராமல் காதை பொத்தி கேட்காமல் வாயை மூடி பேசாமல் இருந்தேன் காந்தியவாதி நீர் காந்தியவாதி என்றான்
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
புதுமனைப் புகுவிழா. என் செய்தி உனக்கானதென்பதை நீ மட்டும்தான் அறியமுடியும் யாரிடமும் இதுபற்றி எதையும் கூறிவிடாதே நான் மூடிப்போய்விட்ட என் கதவுகளின் முன்னால் நீ சினமுற்றிருக்கக் கூடும் நகர்வற்றுக் கிடந்த ஒரு நத்தையோட்டினுள் நான் குடிபெயர்ந்துகொண்ட செய்தி உனக்கெட்டியிருக்காதென்பதை நானறிவேன் புரியாமை உனக்குள் பிறப்பித்த சூறாவழிக்குக் காரணமானவன் நான் மட்டுமேயென நீ பிரலாபம் செய்துகொண்டிருக்கக்கூடும் என்னை நீ திட்டித்தீர்த்திருக்கவும் கூடும் என்சார்ந்து ஒரு பகையுணர்வை நீயுன்னுள் வளர்த்திருக்கவும் கூடும் இவையெல்லாம் நடைபெறட்டும் என்பதுதான் என்னை மீறிய எனது விருப்பமாகவுமிருந்தது நீ எனக்குப் பொம்மைகள் வாங்கித் தரவில்லை …
-
- 8 replies
- 4.1k views
-
-
அன்பால் உறவுகள் அதிகாரம் பண்ண அரசியல்வாதி பதவியால் அதிகாரம் பண்ண அகிம்சையால் அகிம்சாவாதி அதிகாரம் பண்ண ஆயுதத்தால் ஆயுததாரி அதிகாரம் பண்ண ஆலயத்தில் பக்தியால் பூசாரி அதிகாரகம் பண்ண ஆத்மீகத்தால் மகான்கள் அதிகாரம் பண்ண ஆசிரியர் அறிவால் அதிகாரம் பண்ண ஆண்டியானேன் அதிகாரமற்ற வாழ்வுக்காக அங்கும் பசி என்னை அதிகாரம் பண்ணிட்டே அடியே பசி என்னை அதிகாரம் பண்ணிட்டே அதிகாரம்
-
- 8 replies
- 3.2k views
-
-
பூக்களும் உம் கண்ணுக்கு புலிகள் ஆகினவோ எங்கள் மலர்களின் முக்கத்தைப் பாருமையா பெற்றோரை இழந்தனர் உற்றோரை இழந்தனர் அணைக்க கரங்கள் இன்றி அலையா அலைந்தனர் அலைந்த உள்ளங்களை அணைத்தது இச்சோலை அன்புக்கு ஏங்கிய உள்ளங்களை அன்புகாட்டிய இச்சோலை அழுத விழிகளை அழகுறச் செய்யது இச்சோலை அன்னையும் தந்தையுமாகி அமுது அளித்தது இச்சோலை துயரம் மறந்து சிட்டாய் பறந்தது இச்சிட்டுக்கள் அன்னையை பறித்தீர் தந்தையும் பறித்தீர் தப்பிய இக்குஞ்சுகளையும் பறித்துவிட்டீர் பூக்களும் உம் கண்ணுக்கு புலிகள் ஆகினவோ துளசி
-
- 8 replies
- 2k views
-
-
தாய் பிடிக்கும் என்மேல் பாசத்தை பொழிவதால் அண்ணன் பிடிக்கும் எனக்கு குடும்பதை வழி நடத்துவதால் அக்கா பிடிக்கும் எனக்கு தாய்க்கு ஆறுதலாய் இருப்பதால் தம்பி பிடிக்கும் எனக்கு சிறுவனாய் இருந்தும் என் தங்கையை படிப்பிப்பதால் தங்கை பிடிக்கும் எனக்கு என உயிர் தோழியாய் இருப்பதால் நட்பு பிடிகும் எனக்கு வழி நடத்தி செல்வதால் காதல் பிடிக்கும் எனக்கு காயங்களை கற்பித்ததால் மௌனம் பிடிக்கும் எனக்கு அது உன்னிடம் நிறையவே இருக்கின்றதனால்... காத்திருப்பு பிடிக்கும் எனக்கு உனக்காகவே காலம் பூராகவும் காத்திருக்க போவதால்.
-
- 8 replies
- 2.1k views
-
-
என்ன அநியாயம் நான் பிறக்குபுன்பே யாழ் மண்ணின் இதயம் அழிந்துவிட்டதாம் ஓ நான் கண்ணாலே கண்டதும் அந்த அழிந்த இதயத்தை தானே என்ன தான் எம் யாழ் இதயத்தை மீண்டும் கட்டி எழுப்பினாலும் இதயமது இழந்தவை மீளப்பெறமுடியாது கயவர்கள் யாழ் மக்களின் உயிரை உணர்வை...பண்பாட்டை எரித்துவிட்டார்கள் காடையர்கள் எதிரியின் இந்த கொடூரம் தான் தூங்கிகிடந்த தமிழனை விழிக்க வைத்தது... கயவர்கள் தீயிட்டதால் தீயாகவே எழுந்தார்கள் தமிழர்கள்...தீயவனை அழிப்பதென முடிவோடு அன்று வைத்த தீ தான் இன்று தமிழன் நெஞ்சில் சுடர்விட்டு எரிகிறது ஈடுகொடுக்க முடியாத இழப்பல்லவா எம் இதயத்தின் இழப்பு....... இறைவனே கயவர்களை கண்கொண்டு பாத…
-
- 8 replies
- 1.6k views
-
-
எதைக் கேட்டாலும் வெட்கத்தை தருகிறாய் வெட்கத்தை கேட்டால் விட்டத்தை நோக்குகிறாய் விட்டத்திலா இருக்கிறது என் காதல்? * - * - * - * - * மார்கழி மாசம் வாசலில் கோலம்! நடுவிலே சாணம் சாணத்திலே பூசணிப்பூ! அது பூவல்ல என் இதயம்! உன் இதயத்தை சாணத்தில் தான் வைத்தாளா என்று கேட்காதீர்! சாணம் கூட சந்தனமானது சந்தியாவின் விரல்பட்டு! * - * - * - * - * 'லவ்'டப், ‘லவ்'டப் சிலகாலமாக இதுதான் என் இதயத்தின் ஒலி! சண்டாளி தயவுசெய்து என்னை சாகடிச்சிட்டு போடி!! * - * - * - * - * நீ நெருப்பு நான் பஞ்சு காதல் ஊழிப்பெருந்தீயாய் பற்றியெரிவோம் வாடி! * - * - * - * - * எனக்கு கொடுக்க உன்னிடம் …
-
- 8 replies
- 2k views
-
-
வாடா வாடா வாடா தோழா நம்ம யாழ் களம் வந்து பார்டா தோழா.. எழுதிப் பார்ப்பம் எழுதிப் பார்ப்பம் வாடா நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா சேர்ந்து எழுதினா இந்த உலகம் நம்ம கையிலடா..! உன்னோட உயர்வுக்கு உன்னோட எழுத்து என்னோட உயர்வுக்கு என்னோட எழுத்து யார் எழுத்தையும் யாராலும் தடுக்க முடியாதடா யாரும் கெடுக்க முடியாதடா..! அடுத்தவன் வாயைப் பார்க்காம வாடா வாடா வந்து சுய ஆக்கமா எழுதிப் போடடா இது உன்னோட களமடா..! வாடா வாடா வாடா தோழா நம்ம யாழ் களம் வந்து பார்டா தோழா.. எழுதிப் பார்ப்பம் எழுதிப் பார்ப்பம் வாடா நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா சேர்ந்து எழுதினா இந்த உலகம் நம்ம கையிலடா..! அடுத்தவன் காக்காவை காவடியை தூக்கிப் போடடா …
-
- 8 replies
- 1.7k views
-
-
பல்லவி பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே Girlfriend இல்லாத boysஇன் வாழ்க்கை என்றும் இனிக்காதே Tim Hortenபோகாத ஆண்களுக்கு ஒரு உற்சாகம் பிறக்காதே அட நம்பர் கொடுக்காமல் நீங்கள் போனால் Friendship வளராதே சரணம் 1 E-மெயில் அனுப்பி இன்சல்ட் செய்து disturbe disturbe செய்வோமே sms செய்து உங்களை எழுப்பி Dating Dating கேட்போமே பாரப்பா பழனியப்பா வெளிநாட்டு girls பாருங்கப்பா ஊரெல்லாம் பெரிசப்பா போடுகிற dress தான் சிறுசப்பா yahoo chat இலே searching செய்யாத handsome handsome boys நாங்கள் தானே Girlsஐ கண்டாலே wallet open பண்ணாத Good boys Good boys என்றும் நாங்கள் தானே கார்மோன் துடிப்பில் புது வைரஸ் கிருமியாய் நுழைவோம் …
-
- 8 replies
- 1.5k views
-
-
காடுகளில் வாழத்தொடங்கும் வரை காடுகளின் சொர்க்கம் தெரிந்திருக்கவில்லை வீடும் சுற்றமும் அற்பமாய் போயிற்று காடுகளில் வாழும்வரை இன்று கலைந்த கூட்டில் தாயை தேடும் குஞ்சுகளாய் காடற்று வாழும் வாழ்வு காடுகளில் தவழும் இசையை கேட்க மனம் மீண்டும் மீண்டும் துள்ளும் பாலுக்கு அழும் குழந்தையைப்போல காடுகள் அபாயமானவை பழகாதவனுக்கு காடுகள் அதிசயம் நேசிப்பவனுக்கு ஊர்வாழ்க்கை சீனி/சர்க்கரை காட்டுவாழ்க்கை தேன் காட்டினுள் மிருகங்கள் குளம் நாடிவரும் அழகு வேட்டையால் சிதறும் கொடுமை அழகிய ஊரில் கிபீர் இரைச்சலுடன் குண்டு வீசுவது போல கொடும் வெயிலிலும் குளிர்மையை பரிசளிக்கும் காடு (யுத்த) காட்டுத்தீயால் வெந்தது கூடி வாழ்ந்த உறவுகளுடன் க…
-
- 8 replies
- 5.1k views
-
-
01, ஒரே பத்திரிகையில் பிறந்த நாள் வாழ்த்தும் நினைவஞ்சலியும் வாழ்க்கை 02, வீடு எரிகிறது ஒளி கிடைக்கிறதாம் வடக்கில் வசந்தம் 03, நெற்றிக் குங்குமப்பொட்டுக்கள் அழிக்கப்படுகின்றன கிழக்கில் உதயம் 04, கள்ளர் நாடாளுமன்றில் நல்லவர் தெருவில் வீடும் நாயும் 05, தேர்தலில் ராஜ பக்சர்களின் நாகாஸ்திரம் கள்ள வாக்கு 06, புளியமரத்தடி முனியை கண்டதில்லை,பயமுமில்லை கண்டதும் பயமும் வெள்ளை வானுக்குத்தான் 07, நிலவு உறங்கும் இரவு ,நாய்கள் ஊளையிடும், கோழிகள் கூவாது ஏனெனில் களவாடப்பட்டிருக்கும் இந்திய அமைதிப்படைக்காலம் 08, என்னைப்போல்எப்படி நீ நடித்தாலும் என் உணர்வை உணராய் விம்பம் 09, அம்பு துப்பாக்கிரவை ஆயிற்று சேலையும் அப்படித்தான் உலக …
-
- 8 replies
- 21k views
-
-
ஒரு கூட்டு கிளிகளாக, கொட்டில் வகுப்பொன்றில், கூடிப்பழகிய இனிய கணமொன்று நொடிக்கனவாக மலர்ந்ததின்று. நட்பில் வஞ்சமில்லை.... பதற்றமில்லை நெஞ்சத்தில்... நொடிக்கனவை படம் பிடித்து, மனத்திடையே மாட்டி வைக்க, அழுத்தினேன் புகைப்பட கருவியை. பளிச்சென்று ஒரு வெளிச்சம்... மலரும் காலையின் சூரிய கீற்று கலைத்தது என் இனிய கனவை... மலர்ந்தன என் விழிகள் புலம்பெயர் வாழ்க்கையின் புழுங்கும் கணங்களை முழுநீளப்படமெடுக்க... (17/08/2010)
-
- 8 replies
- 869 views
-
-
இரதை வாழையில் இடிவிழும் போது குறுக்க வெட்டி தங்கம் எடுக்க இலவுகாத்த கிளிகளாக காத்து இருந்தோம் இடி தலையில் விழுந்து முகம் உருக்குலைந்துபோனது வேலியில் சற்று சரிந்து நிற்கும் கருகிய கம்பிக் கட்டையாய் பற்றைகள் வளர்ந்த வயல்க் கரைகளில் எஞ்சியவர்கள் நிற்கின்றார்கள் புரட்டாதிச் சனி விரதம் பிடிப்பவர்கள் காகத்துக்கு சோறுவைக்க இன்னும் கம்பிக்கட்டைகளில் குந்தியிருக்கும் காகங்களை கூப்பிடுகின்றார்கள் நலமடித்த நாம்பன்கள் போல் வேரறுந்த மரங்கள் போல் கப்பாத்து பண்ணப்பட்ட நாய்கள் போல் பரிதவிக்கும் இந்த வாழ்க்கையின் வேதனைக்கு விரதமிருந்து காகத்துக்கு சோறுவைத்து விடிவுகள் தேடும் அவல வாழ்வு எமக்கு மட்டும் எல்லாப் பிரச்சனைகளும் எமக்கு வெ…
-
- 8 replies
- 1.6k views
-
-
என்னவனே.. உன்னை நினைத்து நினைத்து வாழ வேண்டும் உந்தன் மடியில் உயிர் துறக்க வேண்டும் வருவாயா? காலை மாலையாவதும் மாலை காலையாவதும் உந்தன் ஆசைக்குள் மறைய வேண்டும் வருவாயா? எந்தன் கோட்டையை விட்டு நீ போனாலும் நீ போட்டு விட்டு போன கோடுகள் ஆறவில்லை அதற்காகவேனும் வருவாயா? கோழி கூவினாலும் கோயில் மணி அடித்தாலும் கோலம் போட மறந்தாலும் உந்தன் மடியில் மறக்க வேண்டும் அதற்காகவேனும் வருவாயா? கனவில் நான் குளித்து நினைவில் காய்கிறேன் என்னை உடுத்திக்கொள்ள உண்ர்வோடு வருவாயா? அங்கத்தில் இடம் பிடித்தாய் ஆசையை தூண்டி விட்டாய் அனுபவத்தை கொளுத்தி விட்டாய் அணையாமல் எரிகிறேன் அதற்காகவேனும் வர…
-
- 8 replies
- 1.5k views
-
-
எழுதவேண்டும் என்பதற்காக எழுதி 2 ஆயிரம் கருத்துக்களை எட்டிவிட்டேன். அதன் சந்தோசத்தில் ஒரு காதல் விதையோடு. . . . மௌனம் கலைந்து விழியுடன் மோதி விடைகள் தேடும் இமைகள் பைங்கிளி பறந்து பருகிடுமோவென பயந்து ஒன்றுடன் ஓன்று உரசி மறையும் கனியிதழ்கள் சலனமற்ற நீர்தடாகததில் வீழ்ந்த துளியாய் அலைவீசிச்செல்லும் கன்னக்குழி வதனம் கூந்தல் மருவி காயமாகிவிடுமோவென கலைத்திட விரையும் கரங்கள் அடடா அழகிய சொர்ப்பனம் அர்ப்புத தரிசனம் விடியலின் எழுச்சியில் வீணாக கலைந்தது
-
- 8 replies
- 1.3k views
-
-
என் சிரிப்புகளும் பொய் சொல்கின்றன இயல்புகளும் தம் இயல்பினை இழந்துவிடுகின்றன மரபியல் தாண்டிய முடிவுகளால்... மரத்துப்போய் விடுகின்றது மனசு...! புதிதாய் எதையோ தேடுகின்றது கிடைக்காது என்று தெரிந்தும் அதற்காகவே ஏங்குகிறது நேரகாலம் தெரியாமல்... வந்துபோகும் நினைவுகளால், கண்களோடு சேர்ந்து... நனைந்துபோகின்றது மனசும். பாரமான இதயம் பற்றியெரிய... ஈரமான மனசு கொதித்து, ஆவியாகிக் கிளம்புகின்றன ஏமாற்றங்கள். கலகலப்பாய் சிரித்துக்கொண்டிருக்கும் என்னில், என் அழுகையைத்தவிர... வேறெதுவும் உண்மையில்லை...!
-
- 8 replies
- 1.9k views
-
-
வேறு ஒரு இணையத்தளத்தில் வெளியான என் கவிதை ஒன்றை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன் . நன்றி http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/114942/
-
- 8 replies
- 1k views
-
-
காதல் சொல்ல முன்.... கனவுக்கும்....நிஜத்திற்கும்...... கடிவாளம் நானிட்டேன். புூவுக்கும்... காற்றுக்கும்..... வேலி நான் போட்டேன். முகிலையும்... பனியையும்... சிறையிலேதானிட்டேன். முட்டாள்..நான்... வாய் விட்ட ஒரு சொல்லலே... கண்ணே உன் நட்பையும் இழந்துவிட்டேன்.
-
- 8 replies
- 1.7k views
-
-
அனைத்திற்கும் இணையானவள் தாய். ..! கோல்களனைத்தும் கொலை வெறியில் பூமியை மோதுவதற்கே சுற்றி வருகின்றன சூரிய குடும்பத்தில் காரணம் தங்களிடத்து அனைத்தும் இருந்தாலும் "தங்குவதற்கு" ஒரு நாதி இல்லையே என்ற பொறமை தான் இப்படி சிறப்புள்ள பூமிக்கு இணையானவள் "தாய்"... விண்வெளியில் விளையாடிகொண்டிருக்கும் தான் பிள்ளைகள் விண்ணிலிருந்து விழும் போது பிரிந்து தான் விழும் இதை எண்ணி விண்னெனும் தாய் கதறி அழும் அந்த கண்ணீர் தான் மண்ணில் மழையை ஒன்று சேர்க்கின்றன …
-
- 8 replies
- 1.4k views
-
-
முட்டையும் விந்தும் முட்டிக்கொள்ள கருக்கொள்ளும் நுகமது கருப்பையில் வளர்ந்திட்டால் வெளிவருவது நாய்க்குட்டி..! கலப்பில் அதை பலவாறு கலந்து பிறப்பித்தால்.. கட்டியதை கூட்டில் வளர்த்திட்டால் Pedigree போட்டு மெத்தையில் படுக்கவிட்டால் அதுவும் ஆகும் உயர் சாதி..! கலப்பில் அதை இயற்கையோடு கலக்கவிட்டால் பிறப்பால் அதை தெருவில் அலையவிட்டால் தாய்மடி பாலுண்டு குப்பைமேட்டில் படுக்கவிட்டால் அதுவும் ஆகும் பற நாய்..! குடிசையைப் பார்த்து மாடி சொல்லும் நீ.. கீழ் சாதி..! உழவைப் பார்த்து உத்தியோகம் சொல்லும் நீ.. கீழ் சாதி..! இதை வேறு பகுத்தறிந்து சொல்லும் நீ..தலித்தியவாதி..! அதை ஒழிக்க கூட்டம் போடும் நீ.. அரசியல்வாதி..! உண்மையில் ஆங்கே இயற்கையின் …
-
- 8 replies
- 1.3k views
-
-
எனக்குமொரு ஆசை --------------------------- தீப்பற்றி உரசிப் போகும் - உன் ஞாபகத் தீண்டல்கள் தீப்பிழம்பாய் எரியும் என் இதயத்தில் - சிறு ஆறுதல் நீரை ஊற்றும் அடிவானத்துக்கும் அப்பாலும் காணவில்லை -உன் இதயத்தின் ஆழம் அருகினில் இருக்கின்றாய் என்பதன்றி -வேறு புரிதல் எதுவும் இல்லை கண்களின் சிமிட்டலில் - என்ன மர்மத்தை வைத்திருக்கிறாய் -என் காதல் அங்கு ஒட்டிக்கொண்டிருக்கிறதே அங்கத்தின் அசைவுகளில் அடைகாத்திருப்பதைப்போல ஒவ்வொரு முறையும் முயற்சிக்கிறேன் உனை விட்டு வெகுதூரம் விலகிப்போக தளும்பி வழியும் மதுக்குவளைபோல -என் இதயமும் உனை இறுக்கிக்கொள்கிறதே சொல்லிவிடு -உன்னைக் காதலிகிறேன் என்று சொல்லிவிடு அறுத்துப் போட்…
-
- 8 replies
- 1.6k views
-
-
காற்றும் வறண்டு கிடக்கும் இதுபோன்ற ஒரு கோடையில் தான் உனை பிரிந்தேன். உனைப்பிரிந்த அந்த காலம் புல் நுனிகள் கருகிய அந்த காலம் காலமாகிப் போய்விடாமல் கிடக்கிறது. அன்று, உயிப்பூவிதழ்களின் சாயங்களை வெளுறவைத்த பெரும் கோடையின் கோபம் நரம்புகளின் பச்சையத்தை தீண்டவே இல்லை........ இன்று, விழிப்பூவிதழ்களில் எழுகின்ற வாசம் தளம்பல்களை தந்தாலும் கோடைக்கு முன்னான அந்த இளவேனிற்காலத்தின் படிமங்களை மீட்டுகின்றன.......... வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் மக்கிக் கிடக்கும் சிறுவெண் நண்டுக்கூடுகளாய் காதல் உனக்குள்ளும் இருக்க கூடும் இன்னும், எனக்குத்தெரியும் இருந்தவரை நல்ல காதலியாக இருந்தவள் நீ. எனக்குத்தெரியும் பிரியும்வரை அன்பை பொழிந்தவள் நீ …
-
- 8 replies
- 936 views
-
-
எப்போதும் நான் ஜன்னல் ஒன்றை தூக்கிக்கொண்டு பயணிக்கின்றேன் அவ்வப்போது கம்பிகளினூடாக காலைக் கருக்கலையும் பொழுதுபடுதலையும் பார்ப்பேன் போறவாற ஆக்களையும் பார்ப்பேன் கம்பிகளினூடாக பர்க்கும் பேதே என்னால் எதையும் எவரையும் புரிந்துகொள்ள முடிகின்றது போற போற இடங்களில் தற்காலிக வீடுகளிலெல்லாம் இருக்கும் ஜன்னலோடு என்ர ஜன்னலையும் பிணைத்துவிடுவேன் வேற ஆட்கள் செய்த ஜன்னலால் பார்த்த மாதிரி இருக்காது ஊரில் தொலைத்த வீடுகள் வளவுகள் உறவுகள் தென்னைமரங்கள் அவை எல்லாம் இல்லாத குறையின்றி ஜன்னல் என்னை பாதுகாக்கின்றது. என் ஜன்னலால் பார்க்கும் போது coniferous மரங்களும் பனைக் கூடல்களாக தெரியும் நான் ஒரு நாடோடி ஆனால் …
-
- 8 replies
- 1.1k views
-