Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிள்ளையைக்கொன்றவரிடம் நீதி கேட்கும் பசு .. கெஞ்சி அழுது புரண்டு நடந்து இறுதியில் பொறுமையிழந்து ஆகக்குறைந்ததது Bus யை முட்டுவாய். அப்பொழுது தான் நீ அவர்களைக்காண்பாய்.. உள்ளே இருப்பவன் வெளியில் நடப்பவன் எங்கேயோ இருப்பவன் உனக்கு உதவாதவன் உன் கதை தெரியாதவர் உன் நிலமே அறியாதவர் எல்லோரும் வருவர் ஒன்றாக திரண்டு உன் மேல் பாய்வர் ரணமாவாய் உயிருடன் உண்பர் மிகுதியைப்புதைப்பர் பயங்கரவாதியை ஒழித்ததாக ஒன்றாக விருந்துண்டு மகிழ்வர் எம் கதையை ஒருமுறை படி பசுவே... யாராவது இந்தப்பசுவைக்கண்டால் சொல்லுங்கள். தமிழரின் கதையைக்கொஞ்சம் படிக்கும்படி.

  2. எம் கரும்புலிகளே! ஜீலை 5 2007 இருளகற்ற கரும்புலியாய் சென்றார்கள்! விடியலுக்கு விளக்காகி நின்றார்கள் 'சாவினை' இவர்கள் தான் வென்றார்கள்- வீர சரித்திரத்தில் பேரெழுதிச் சென்றார்கள்! சந்தனமேனிதனில் கந்தகத்தை கட்டியே களம் நாடிச் சென்றார்கள்! காடையர் கயவர்கள் கூட்டத்தை வெடி மருந்துக்கு பொடியாக்கி வென்றார்கள்! அஞ்சாத தலைவனின் பாதையிலே- நடை போடும் எங்களின் வீரர்களே! உங்களின் நெஞ்சுரம் யார்க்கு வரும்? உங்கள் தியாகமே "ஈழத்தை" வென்று தரும்! தேசத்தின் புயலாக வீசுகின்ற- கரும் புலியே! கடும்பகையைக் கொளுத்துகின்ற எரிமலையே! எம் ஈழச் சோதரரே! -ஈழ வரலாற்றின் நிலைய…

    • 5 replies
    • 1.7k views
  3. எம் தேசம் மீட்டெடுத்தே... ------------------------- உலகின் கண் திறக்க உயிரை விதையாக்கி பெரும் சபதம் எடுத்தவரே மரணம் வருகையிலும் தமிழர் வாழ்கவென உரைத்தவரே உம் பாதம் தொழக்கூட அருகதையற்றோனாய் அன்னியத் தெருக்களில் அலையும் நிலையினிலும் உங்களை மறவோமே! தலைவன் வாழுமிடம் தமது இருப்பிடமாம் என்று அணியம் செய்தவரே பெரும் மனிதப் புதிர்கள் ஐயா மானம் மண் மீட்பில் என வாழ்ந்த தமிழ் மானிடரே உங்கள் பாதம் தொழுகின்றோம்! எமக்கும் சேர்த்தே நீவிர் ஒரு தேசம் படைக்கவென உயிர் தானம் செய்தீரே உமைச் சுமக்க முடியவில்லை! உம் நினைவைச் சுமந்தபடி எம் தேசம் மீட்பதென உறுதி எடுக்கின்றோம்! வலியின் துயர் சுமந்து உம் நினைவின் கருச்சுமந்து எம் தேசம் மீட்ட…

  4. எம் தேசியத்தை இறுதிவரை இழக்கப்போவதில்லை சுனாமிப் பேரலையில் அம்மாவை இழந்தேன் சுற்றிவளைப்பில் அப்பாவையும் இழந்தேன் கண்ணி வெடியில் அண்ணா காலை இழந்தான் கடத்தலிலே அக்கா கற்பை இழந்தாள் செல்வீச்சில் சொந்தங்களை இழந்தேன் குண்டு வீச்சில் குடியிருப்புக்களை இழந்தேன் இப்போது எஞ்சியிருப்பது என்னுயிர்தான் எதை இழந்தபோதிலும் எம்தேசியத்தை நாம் இறுதிவரை இழக்கப்போவில்லை . கனடாவில் இருந்து வெளிவரும் உலகத்தமிழர் பத்திரிகையில் பரமேஸ்வரி துரைசிங்கம் அவர்களினால் எழுதி சிறப்புப்பாராட்டு பெற்ற கவிதை இது.

  5. சிங்கள அரசின் பொருளாதாரத்தை சிதைப்போம்_அவன்... சிரசுக்கு வைப்போம் ஆப்பு சிலேடையாய் இணையத்தில் மட்டும்... சிங்கம் போல சிலிர்ப்போம் சிந்திய ரத்தம் காயும்முன்னே... சிங்களவனுக்கு சீர் பல கொடுப்போம் நலன்புரிமுகாம் எனும் நரகத்தில்..... நம் உறவுகள் படும் துன்பத்திலும் நம்மில் சிலர் செய்யும் செயலை.. நான் எப்படிச் சொல்ல.........? நாற்பதாயிரம் ரூபா கொடுத்தால்... நாளைக்கே ஆளைக்காட்டுவனாம். இருபதாயிரம் கொடுத்தால்... இருசில நிமிடம் போனில் கதைக்கலாமாம் ஜந்து லட்சம் கொடுத்தால் வெளியே விடுவானாம்... காலைப் பிடிச்சுக் கெஞ்சிக்கதறினால் சாப்பாடு கொடுக்கலாமாம்.... விடுவோமா நாம்...? ஆடடிச்சு குழம்பு வச்சு... பூநகரி மொட்டைக்க…

    • 11 replies
    • 1.6k views
  6. எம் மக்களுக்காய் ஓர் முயற்சி... கவிதை..... பலகாலம் தொடரும் தமிழரின் பேரவலம் இருந்தும் சிலவாரம் அதற்கெல்லாம் ஓர் சிகரம்..... கவிதை வடிக்கவென்று கணனிமுன் உட்கார்ந்தால்..... காணும் காட்சியெல்லாம் எங்கள் உறவுகளின் இரத்த வெள்ளம்.... ஐயோ..மனது பொறுக்கல்லையே மனமும் அதைப் பார்க்க மறுக்கிறதே இதை உலகுக்கு அறியவைக்க என் அறிவுக்கு யோசித்தேன்..... பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும் இருந்தும் சொல்லுகிறேன்.... ஏற்கனவே தெரிந்திருந்தால் என்னை மன்னித்திடுங்கள் தெரியாமல் இருந்திருந்தால் என் அறிவுரையை ஏற்றிடுங்கள்... நீங்கள் பார்க்கும் கொடூரக் காட்சிகலில் 'மவுசை' ரயிற் கிளிக் பண்ணிடுங்கள் அங்கே…

  7. எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு வாலியின் இரங்கல் கவிதை எம்.எஸ் .சுப்புலட்சுமி காலமான போது ,வாலி எழுதிய உருக்கமான கவிதை ஒன்று ! நடுத்தமிழ் நிற்கிறது நடுத்தெருவில் .... தன் விலாசத்தை தவறவிட்டு ; அதன் - திருவிழி உகுக்கிறது தீர்த்தச் சொட்டு ! எம்.எஸ் ஏறிவிட்டார் வாகனம் ; எல்லோர்க்கும் இருந்தென்ன ? எமனுக்கு இல்லையே ஏழிசை ஞானம்! இழந்து நிற்கிறது இசைக்கலை - தான் தங்கியிருந்த - எம்.எஸ் என்னும் இன்ஷியலை! ஓதம்சூல் உலகின்காண்- ஓர் ஒப்புலட்சுமி-இல்லாதவர் சுப்புலட்சுமி ; தூய வாய்மலரால்- இசைத் தேனைத் துப்புலட்சுமி என்னணம் எண்டிசை-இனி பயணிக்கக் கூடும் -நம் பண்டிசை? எம்.எஸ் என்பது சங்கீத சாஸ்திரத்தின் ப…

    • 1 reply
    • 2.3k views
  8. எம்.ஜி.ஆரும் இந்திரா காந்தியும் இருந்திருந்தால் இப்போது ஈழத்தில் வாழ்ந்திருப்போம்! Last Updated : இன்னும் உயிருடன் இருக்கின்றன மருதாணி மரங்கள் மற்றும் சில பூவரச மரங்கள் பாதி நிழலை வைத்திருக்கிறது மருத மரம் சாம்பல் சுவடுகளின் மேலாய் புதிய கூடாரம் நாட்டப்பட்டிருக்கிறது வானத்தின் காயம் ஆறிவிடும் என்று அம்மா நம்புவதைப்போல மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள் காணி நிலத்தில் மீண்டும் பாடல்கள் முளைக்கின்றன -தீபச்செல்வன் கவிஞர். தீபச்செல்வன் ( 1983 ) ஈழத்தின் வன்னிப் பிரதேசத்தில் பிறந்தவர். போரின் பூமிக்குள்ளேயே வளர்ந்து வாழ்ந்து வருபவர். 2005ஆம் ஆண்டில் முதல் கவிதை பிரசுரமானது. கண்முன்னால் நடந்த கொடூரங்களை எல்லாம…

    • 0 replies
    • 322 views
  9. சிறீலங்கா இட்டது சிறு ஆணி - அப்போதும் சிந்தை கலங்கவில்லை ஐரோப்பா இட்டது ஐந்தாறு ஆணி - அப்போதும் ஐயோவென்று அழவில்லை அமேரிக்கா இட்டது ஆறேழு ஆணி - அப்போதும் அச்சம் எழவில்லை சீனா இட்டது சில ஆணி - அப்போதும் சிறிதும் வாடவில்லை இந்தியா இட்டது இரும்பாணி - அப்போதும் இதயம் நோகவில்லை பாகிஸ்தான் இட்டது பல ஆணி - அப்போதும் பயந்து போகவில்லை தமிழகம் இட்டது தனி ஆணி - அப்போது தொலைந்தது எம்மூச்சு http://gkanthan.wordpress.com/index/eelam/nails/

    • 6 replies
    • 1.3k views
  10. பனியின்றி குளிரின்றி இந்த வருடத்தின் முதல் சிரிப்பு இயற்கையின் சிரிப்பில் துளிர்ப்பது மரம் மட்டுந்தானா..! மலர்வது மலர் மட்டுந்தானா..! மனிதர்களுந்தான்..! நகரமே சிரித்தது யேர்மனியின் அந்த நகரமே சிரித்தது சிரித்துக் களித்தது இயற்கையும் சிரிக்க மனிதரும் சிரிக்க மலராய்த் தெரிந்தது குட்டைப் பாவாடைகளும் கட்டை ரீசேர்ட்டுகளும் தலை காட்டா விட்டாலும் சிட்டுக் குருவிகளாய் இளசுகள் உதட்டோடு உதடுரசி மூக்கோடு மூக்குரசி கெஞ்சலும் கொஞ்சலுமாய்..... வட்ட மேசைகளைச் சுற்றி வட்ட மிட்ட கதிரைகளில் பெரிசுகளும் சிறிசுகளும் கண் பார்த்துக் கதை பேசி மெல்லுதட்டில் தமை மறந்து ஐஸ் சுவைத்து...... கை கோர்த்து நடக்கையிலும் காதலுடன் இடை தழுவி …

    • 2 replies
    • 1.6k views
  11. படைப்போம் படைப்போம் புரட்சிகள் படைப்போம் உடைப்போம் உடைப்போம் இயலாமை உடைப்போம் எடுப்போம் எடுப்போம் அறிவாயுதம் எடுப்போம் தவிர்ப்போம் தவிர்ப்போம் அறியாமை தவிர்ப்போம் துறப்போம் துறப்போம் சுயநலம் துறப்போம் தடுப்போம் தடுப்போம் இருளினை தடுப்போம் மறப்போம் மறப்போம் வேற்றுமை மறப்போம் நிறைப்போம் நிறைப்போம் ஒற்றுமை நிறைப்போம் மறுப்போம் மறுப்போம் புறங்களை மறுப்போம் தெரியோம் தெரியோம் கறைகளாய்த் தெரியோம் அறிவோம் அறிவோம் தன்பலம் அறிவோம் புனைவோம் புனைவோம் புதியன புனைவோம் அழிப்போம் அழிப்போம் மடமையை அழிப்போம் வளர்ப்போம் வளர்ப்போம் இனமானம் வளர்ப்போம் பயில்வோம் பயில்வோம் சரித்திரம் பயில்வோம் முயல்வோம் முயல்வோம் …

    • 2 replies
    • 793 views
  12. எரி நட்சத்திரம் - கருணாநிதியின் பிறந்த நாள் கவிதை - இளங்கவி கலைஞரே வாழ்க வாழ்க தமிழின் காவியத்தலைவனே வாழ்க எண்பத்தாறு வருடங்களை தமிழருக்காய் அர்ப்பணித்த தமிழ் நாட்டுச் சிங்கமாம் நீ தமிழினத்தின் தங்கமாம்...? விடிவெள்ளியாய் நினைத்து விளக்கின்றிக் காத்திருந்தோம் எரி நட்சத்திரமாய் விழுந்து ஈழத்தின் குலையறுத்தாய் குடும்பப் பாசத்துக்காய் உன் குலத்துக்கே நெருப்பு வைத்தாய் எங்கள் இனத்துக்கோர் சாபக்கேடாய் இன்றுவரை உயிர் வாழ்வாய்.... ஈழத்தில் நிலத்தினிலே குரும்பையெல்லாம் கருகிவிழ வெற்றிக்கொடியோடு டெல்லி சென்றாய் நீயோ வேண்டுமந்த பதவியென்றாய் எதிரியின் தீயிலே நாமெரிய நீ வேண்டிய பதவிபெற்றாய் வேண்டியதை பெற்றதனால் பிறந்த நாள…

  13. இதை அனுப்பி வைத்தவர் ஹரி. http://aycu19.webshots.com/image/18378/2002280218213

    • 3 replies
    • 1.4k views
  14. [size=3] நாட்கள் வாரங்களாய் மாதங்கள் வருடங்களாய் கடந்து கொண்டு இருக்கிறது[/size] [size=3] அறிவியல் யுகத்தில் மனிதனின் சாம்ராஜ்ஜியம் கணினியும் செல்போனும் சட்டைப் பையில் சங்கமிக்கின்றன பெண்களை பற்றிய மதிப்பீடுகளோ குப்பைத் தொட்டியில்[/size][size=3] [/size][size=3] கணவன் சின்ன வீட்டிற்கு சென்ற போது கண்டுகொள்ளாத கண்ணகி பரத்தையர் வீட்டிற்கு கணவனைத் தூக்கி சென்ற நளாயினி நெருப்பில் குதித்து- கற்பை நிலை நிறுத்திய சீதாப்பிராட்டி இவர்கள் தான் பெண் குலத்துக்கு தெய்வங்களாம். சீச்சீ….வெட்கக்கேடு[/size][size=3] வாருங்கள் ஆண்களே அன்பைப் பகிர்ந்து கொள்வோம் புதியதோர் உலகம் செய்ய இருவரும் இணைந்தே செயல்படுவோம் இதில் ஏது ஏற்றத்தாழ்வு?[/s…

    • 0 replies
    • 718 views
  15. முள்ளிவாய்க்கால் முழங்கிய போது மெளனித்துக் கிடந்தாரே... முத்துக்குமார்கள் தீப் பிடித்து எரிந்த போதும் சும்மா கிடந்தாரே.. பூமிப்பந்தில் புனிதராம் மனித உரிமை காப்பவராம்.. வெள்ளாடு வேடம் போட்டு சமாதானம் பேசியே கழுத்தறுக்க அலையும் அந்தக் குள்ள நரிகள் அவர் தம் கொட்டம் அடக்க வெடித்தேன். வன்னி மக்களை சொந்த உறவுகளை விடுதலை.. எரிமலை என்று உசுப்பேத்தி.. போர்க்களம் ஏவிவிட்டு அவர் தம் கதை முடித்து தாம் அசைலம் அடித்து.. இன்று... எதிரி வானில் அவன் விமானத்தில் உல்லாசம் போக நினைத்த ஈனத்தமிழர்களின் ஈவிரக்கமற்ற செயல் கண்டு நெஞ்சு குமுறி வெடித்தேன்.. போட்ட ரிக்கட்டுகளுக்கு பொக்கட் காசு கூட கிடைக்கக் கூடாதென்றே. பூமி …

  16. Started by இளங்கோ,

    எலிகள் அஞ்சி ஓடுகின்றன பிள்ளையார் ஏறி உட்கார்ந்து விடுவார் என்பதால்.

  17. தீபச்செல்வனின் அழகான கவிதை. தரப்பால்களின் கீழாய் கிடந்து அடங்குகிறது நமது எல்லா வழிகளும். துப்பாக்கியின் நுனியில் வடிகிற முகத்தில் எழுகிறது நமது எலும்புக்கூட்டின் நினைவுகள். எல்லாமே சட்டென தலைகீழாகிறது நிலத்தை எரித்துக் கொண்டிருக்கிற துவக்கு சாம்பலை எதிராய் கிளம்புகிறது. சனங்களின் குருதி கடலில் குதித்து தப்பிச் செல்லுகிறது. வழியில் தற்கொலை செய்துகொள்ள துடிக்கிறது மீதமிருக்கிற நகரத்தின் சுவடு. ஒரு மாபெரும் அரசனின் ஒற்றை வாளில் முழுச் சுவரும் வெட்டுண்டுபோகிறது. பிள்ளைகளை அனுப்பிய தாய்மாரின் கண்ணீரைத்தவிர குறுகிய நிலத்தில் எதுவும் இல்லை. மிகவும் கொடுமையான அனுபவங்களை வானத்திற்கு மேலால் கடல் நிரம்புகிறது. இப்பொழுது கடைச…

  18. தினமும் யாரோ ஒரு தோழனின் ஞாபகம் தோழியின் ஞாபகம் வந்தே போகும் அதுவே எங்கள் விடுதலையின் விலாசம். ஆயினும் கார்த்திகை மாதம் கண்ணீரால் கரைந்து கனக்கும் சோகம் சொல்லிப்புரிவிக்க இயலாத பாரம். எல்லா மாதம் போலல்லாத கார்த்திகையே எங்கள் காவியங்கள் கண்திறந்து கதை சொல்லும் காலம். எத்தனையோ ஞாபகங்கள் அத்தனையும் ஒருசேர உயிர் வேகும் மாதமிது. உயிர் போகும் வரையுமெங்கள் ஊர்காத்து உயிர் காத்த வீரர்களை உயிர் கரைய நினைவேந்தும் மாதம். சாந்தி நேசக்கரம் 11. 11. 17

    • 0 replies
    • 886 views
  19. எல்லாமுமாய் எங்களின் வசந்தம் நீ. சுற்றி நிற்கும் இந்தியப்படைகளின் முற்றுகைக்குள்ளால் நீயும் உனது தோழர்களும் இருள் கனத்த பொழுதொன்றில் - எங்கள் ஊரிலிறங்கினாய்....! சிகரங்கள் தொடவல்ல வீரர்களின் முகமாய் அந்த நாட்களில் எங்களின் சூரியன் எங்களின் தோழன் எல்லாமுமாய் எங்களின் வசந்தம் நீ. பூவிதழ் விரியும் அழகாய் புன்னகை யாரெவரெனினும் சினேகப் பார்வை ஊரிலே உனக்காயொரு சிறுவர் படை அங்கே நீயும் சிறுவனாய் ஆசானாய் வீடுகளில் உனக்காயென்றும் காத்திருந்து எரியும் விளக்குகளின் கீழ் உன் வரவைத் தேடும் நாங்கள்....! எப்படியெல்லாமோ எங்கள் மனங்களில் வந்து குடியேறிய புலி எங்கள் அன்புக்குரிய றோயண்ணா உங்களின் வரவில் மகிழ்ந்ததும் உங்களின் அன்பில் நனைந்ததும் இன்று போலவ…

    • 2 replies
    • 872 views
  20. Started by kaviya,

    எல்லாமும் நீயே அன்பாலே கவர்ந்திட்ட கண்மணியும் நீயே ஆவியுடன் இரண்டாகக் கலந்தவளும் நீயே இல்வாழ்வை இனிதாக்க வந்தவளும் நீயே ஈருடலில் ஓருயிராய் இணைந்தவளும் நீயே உணர்வுக்கு உயிரூட்டம் தந்தவளும் நீயே ஊடல்கள் செய்கின்ற முழுநிலவும் நீயே என்மனதை எளிதாகச் சரித்தவளும் நீயே ஏக்கத்தைக் களைந்திட்ட பெருநிதியும் நீயே ஐயங்கள் தீர்க்கின்ற அறிவணங்கும் நீயே ஓன்றித்துப்; போய்விட்ட எனதுயிரும் நீயே ஓயாமல் துன்பத்தைத் துடைத்தவளும் நீயே ஓளசதமாய் வந்திட்ட ஆரணங்கும் நீயே நீயே இனியெனக்கு எல்லாமும் நீயே

  21. எல்லாம் உயிர்பெறும் ச.ச.முத்து எங்கே அந்தக் கவிஞன்? இங்கேதான் நின்றானே.-யாரும் பார்த்தால் மெல்ல என்னிடம் காதருகில் சொல்லுங்களேன். எங்கே அந்தக் கவிஞன்? இங்கேதான் நின்றானே.-யாரும் பார்த்தால் மெல்ல என்னிடம் காதருகில் சொல்லுங்களேன். வன்னிமண்ணின் மொத்தஅழகும் நந்திக்கடலின் அலைவடிவும் அழகான என் தேசத்து எழில்அனைத்தும் அவன் இல்லாமல் எப்படியாய் உறைந்து கிடக்குது பாருங்கள்.-கால் படர்ந்த கல் எழுந்து அகலிகை ஆனதுபோல் அந்தக் கவிஞன் எழுதி என் தேசம் எழுந்து வரட்டுமே. மூச்சும் பேச்சும் இன்றி ஒரு மூலையில் கிடந்துவி;ட்டு போய்விடலாம்.-ஆனால் அவன் பாட்டும் சந்தக் கவியும் இன்றி எப்படியாய் காலம் இனிக் கரையும்.? எதிரிராணுவத்தில் சின்னஓய்வுப்பொழுதில் …

  22. தாரிலும் சுண்ணாம்பிலும் குறியிட்டு செத்த கிளுவங் கதியாலிலும் பனைமட்டை வேலி இடுக்கிலும் கொழுவிவைத்த மூக்குப்பேணியெல்லாம் ஒரே உலோகத்தினால் ஆனவைதான். திசைகள். வடக்கென்றும், கிழக்கென்றும் என்னதான் கதியால் போட்டுக் கூத்தாடினாலும் ஆண்ட பரம்பரை மகுடக் கனவு எல்லா தரப்புக்கும் அழிந்து போகாதவைதான். யாழாதிக்க வசந்தமும் கிழக்கு மேட்டின் முல்லையும் ஏகபோக ஆளுகையின் வெண்புறாவும் கறுப்பு வெள்ளைக் காலத்துக்கும் முன், வெளியிலாடிய வட்டக்களரி, வரப்பிலாடிய கும்மி, கோல், அலையில் பாடிய அம்பா காலத்துக்கு முன்பிருந்தும் இன்றைய உய்யிலாலா வண்ணங்கள் வரை ஒரே தோலினாலானவைதான். வசந்த முல்லை போலே வந்து எத்தனை புறாக்கள் சதிராடினாலும், நடை மாற்றினாலு…

  23. அவள் மேடை ஏறி பேசியதில்லை.. ஆனால் பேச தொடங்கினால் ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்…!! அவள் தன்னைத்தான் “அழகில்லை” என்பாள்… ஆனால் “அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம் அவளை திரும்பி பார்ப்பார்கள்..!! அவளுக்கு “கவிதை” பிடிக்காது… ஆனால் எல்லா கவிதைக்கும் அவளை பிடிக்கும்..!! அவள் யாரையும் காதலிப்பதில்லை… ஆனால் ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது என்னோடு சேர்த்து..!! அவள் பெயரை…, என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்.. காத்திருங்கள்… அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்.. ஒரு “விருந்து உண்டு” எல்லாருக்கும்..!

    • 4 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.