கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இயற்கையால் இணைக்கப்பட்ட நம் உறவு ஒன்றோடு ஒன்று கலந்திட்ட அழகிய வாழ்க்கைத் தோட்டம்! இங்கே வாழும் நாம் எப்போது சிந்திப்போம்? ஆண்கள் தப்பா? பெண்கள் தப்பா? சந்தேகப் பட்டிமன்றம் போட்டு வாதிட்டு வாதிட்டுக் களைத்துவிட்டோம் ஆனாலும் தீர்ப்புகள் மட்டும் மாறி மாறி வந்து போகின்றது நாம் இருட்டுக்குள் வாழ்வதால் வெளிச்சத்தில் சண்டை போடுகின்றோமோ எம் அறிவுக்கண் எப்போதுதான் திறக்கும்? எமக்குள் தப்புகள் வரும்போது மட்டும் நானா? நீயா? என சண்டை போடும் நாம் எப்போது இருவருக்கும் பங்குண்டு என ஏற்றுக்கொள்வோம்? வாழ்கை நொந்து கொள்வதற்கு அல்ல அழகாய் வாழ்வதற்கு இது இருவரும் சேர்ந்தால்தானே முடியும் எப்போத…
-
- 10 replies
- 1.8k views
-
-
ஏன் ஏன் இந்த மாற்றம் நம் இன சில பெண்களுக்குள் ஏன் இந்த மாற்றம்???? பரந்து வாழும் நம் இன மக்கள் கடல் கடந்து வந்து அன்னிய நாட்டினிலே... இங்கே கொள்கைகள் உண்டு உதவிகள் பல உண்டு சுதந்திரங்கள் பல பல வகை உண்டு.. போக போக ஆடைக்குறைப்புகள் குறைகின்றதே அத்துமீறிய நம் இன சில பெண்டிர்களால் ஆடைக்குறைப்புகள் குறைந்து போகின்றதே... தினம் தினம் ஆடவரை மாற்றி சேர்ந்து ஊர் சுற்றும் அடக்கமில்லாத நம் இன சில மங்கைகள் உருவாகின்றனரே நாளுக்கு நாள் உருவாகின்றார்களே... ஒரு கையில் ஆறாவது விரலாக சிகரெட்டை புகைவிட்டு கற்புள்ள காற்றை மாசுபடுத்தியும் நம் இன இழ சமுதாயத்தை வீதிக்கு அழைக்கும் தான்தோன்றித்தனமான நம் இன சில பெண்கள் பற்றி வி…
-
- 10 replies
- 1.4k views
-
-
ஏன் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறோம் நாங்கள் இன்னும் ஏன் எரிந்து கொண்டிருக்கிறோம் என்ன பாவம் செய்தோமென்று எங்களுக்குப் புரியவில்லை வாசலில் சுடுகலனேந்திய அன்னியப் படை அடக்குமுறை அரசு சொல்கிறது பாதுகாப்பென்று.. காணாமற் போதல்கள் கைதுகள் பாலியல் வன்புணர்வுகள் அடையாளமற்ற கொலைகள் தொடர்கிறது.. மக்களைப் பேசாத ஊமைகளாக்க முகாம்கள் முளைக்கின்றன புதிய அணிகள் புதிய திசைகாட்டுவதாக உறுமுகின்றன. விசையிருந்தால் பறக்க முயற்சிப்பதாய் சிறகசைக்கின்றன! நாமே ஆசீர்வதிக்கப்படவர்கள் நாமே அனுபவமுள்ளவர்கள் நாமே ஆற்றலாளர்கள் முடிநரைத்துக் கூன்விழுந்தாலும் முடியும் வரை தொடர்வோம் தீர்வுதேடித் தருவோம்…..! சிங்களமும் தொடர்கிறது புதிது புதியாய் நடுகிறது சித்தார்த்தன் சிலைகளை.. வீதி முலையில் இருந்து எங்களுக…
-
- 0 replies
- 676 views
-
-
கனவும் நினைவும் உன்னால் கனத்து காலமும் நேரமும் போகிறதே உணவும் ஊனும் உந்தன் போக்கை தினமும் நினைத்து வேகிறதே! அடுத்து உன்னில் என்ன மாற்றம் என்ற எண்ணம் என்னுள்ளே தடுக்க முடியாப் பெரும் புயலாக இறுக்கி இழுக்குது தன்னுள்ளே! பொய்கையும் நீயாய் புழுக்கமும் நீயாய் வண்ணம் மாற்றி விரிந்தாயே - என் பொழுதும் நீயாய் கொள்கையும் நீயாய் எண்ணம் முழுதும் பரந்தாயே! செய்தியும் அறியேன் முயற்சியும் நாடேன் மெய்யாய் உன்னில் விழுந்தேனே கைதியும் ஆனேன்நீ சிறையும் ஆனாய் மெய்யும் உருக அமிழ்ந்தேனே! நாளை எப்படி நீவருவாய் என நினைத்து நினைத்து பதைத்தேனே காலை மாலை என வந்தாலும் காலம் நீயென துடித்தேனே! வாரா வாரம் தொடர்ந்து என்னை …
-
- 16 replies
- 2.4k views
-
-
ஏன் உதைத்தீ ( ர )ர்களே ?? இருட்டில் இருந்த உங்களுக்கு வெளிச்சம் காட்டியவர்கள் நாங்கள் உங்கள் பசியெடுத்தபொழுது குறிப்பறிந்து ஊட்டியவர்கள் நாங்கள்..... உங்கள் வலி கண்டு எங்கள் வலியாய் துடித்தவர்கள் நாங்கள்....... உங்கள் வெம்பலுக்கும் தேம்பலுக்கும் குளிர்நிலாவாய் இருந்தோம் நாங்கள்..... எங்களுக்கு என்று ஒரு சந்தோசம் நீங்கள் கண்டதுண்டா ?? உங்கள் வாழ்கையில் மெழுகுதிரியாய் எரியும் எங்களை ஒருகணம் உங்கள் , பார்வை திரும்பியதுண்டா ?? உங்கள் ஏற்றம் இறக்கம் எதிலும் ஒன்றாய் கலந்த எங்களை ஏன் எட்டி உதைத்தீ(ர)ர்களே ?? மைத்திரேயி 19/01/2013
-
- 14 replies
- 940 views
-
-
என்னவனே ஏனோ நீயும் என் நிஜபெயரை உச்சரிக்க தயங்குகின்றாய் அன்பே யார் சொன்னார் உனக்கு உறவாட வேணாம் என்று ஏனோ நீயும் மாறிவிட்டாய் எந்த இன்னல்கள் வந்தாலும் தோள் கொடுப்பாய் என்று நானும் பகல் கனவுகள் கண்டுகொண்டிருக்கின்றேன் உனக்கு என்னாச்சடா எனோ நீயும் இப்படி விலகி விலகி செல்கின்றாய்... உறவது நீண்டுசெல்ல நீயோ நினைவுகளை கூட்டிக்கொண்டே செல்கின்றாய் ஏனடா என்னவனே என் பெயரதை உச்சரிக்காது என் புனைபெயரை உச்சரிகின்றாய் ஏன் என்று கேட்டால் இதற்கு அப்படி இப்படி என்று பதில் சொல்லுங்கின்றாய் ஏனடா என்ன நான் செய்தேன் நீயும் எனக்கு இப்படி செய்வதற்க்கு...அன்பே
-
- 8 replies
- 1k views
-
-
ஏன் படைத்தாய்? என்னை ஏன் படைத்தாய்? பெண்ணாக ஏன் படைத்தாய் இறைவா? பெண்ணாக ஏன் படைத்தாய் என்னை பெண்ணாக ஏன் படைத்தாய் பூமியிலே? பெரும் துயரம் தாங்குவேன் என்று எண்ணியா என்னை பெண்ணாக நீ படைத்தாய்! என்னால் முடியவில்லை இன்று-இறைவா என்னால் முடியவில்லை இன்று என்னுள் இருக்கின்ற சோகங்கள் என்னை விட்டு நீங்கமாட்டாதா? ஏமாற்ற என்று எத்தனையோ உயிர்கள் இருக்கும் போது ஏமாற என்று எனை ஏன் படைத்தாய் ? அரக்கர்கள் மத்தியில் இரக்கதோடு எனை ஏன் படைத்தாய்? எல்லொரும் நல்லாயிருக்கனும் என்றென்னும் எண்ணதை ஏன் கொடுதாய்? ஏனக்கு என்று நினைக்காத மனம் ஏன் எனக்கு கொடுதாய்? அன்பாக பேச ஏன் வைத்தாய்? அடுத்தவரையும் நேசிக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஏன் பேச புலி போச்சு....??? மீண்டும் ஒரு ஜெனிவாவில பேச்சு.... அங்கு புலி காண்பதுவோ என்னவென்று போச்சு....??? முன்னர் நடந்த பேச்சுக்கென்ன ஆச்சு....??? இன்று அமைதி கிழித்து போரங்கு மூண்டு போச்சு.... இல்லை தீர்வு எண்ணு உருவாகி ஆச்சு.... அப்புறமா மீண்டும் பகையோடு வேங்கை ஏன் பேச போச்சு....??? வன்னி மைந்தன்
-
- 3 replies
- 1.3k views
-
-
ஏன் மறுக்கிறாய் பெண்ணே!!!!! பட்டுப் புடவை அணிந்து பவுண் கணக்கில் நகை அணிந்து உண்மை முகம் மறைத்து மேக்கப் தனில் உனை அழித்து உன் அழகும் அந்தஷ்தும் காட்டி நிற்கவென உன் வீட்டு மௌசுக் காரில் உனை அழைத்து வந்து தெருவிலே அணிவகுத்து அன்ன நடை போடச் சொன்னால் அணி அணியாய் திரண்டு வர துடிதுடிக்கும் புலத்து பெண்டுகளே......... தாய் மண்ணில் தினம் தினம் செத்து மடியும் எம் உறவுகளிற்காய் பாலின்றி உணவின்றி தவிக்கும் பாலகருக்காய் அரக்கர்களால் தினம் தினம் பாலியல் வதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உன் போன்ற பெண்களுக்காய் ஒட்டிய மார்பை பசியால் துடிக்கும் தன் குழந்தையின் வாயில் திணித்து விட்டு மற்றய கையால் இறந்து போன தன்…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஏன் மௌனமானாய்....??? சிங்களவன் அழிகையிலே சீறி எழும் உலகமே... எம் தமிழ் அழிகையிலே ஏன் உனக்கு மௌனமோ...??? பயங்கர வாதியேன்றேன் பயங்கரமாய் தூற்றுகிறாய்...??? பயங்கரமாய் வந்து அவன் பயங்கரங்கள் ஆடுகிறான்... பார முகமாய் ஏனோ நீ பாரினில் இருக்கிறாய்...?? ஏழை என்றா எம் தமிழை ஏறி இன்று மிதிக்கிறாய்....??? நடு நிலை என்றேன் நா வறள கத்துகிறாய்... இன்று நடு நிலை மறந்தேன் நரகத்திலே கிடக்கிறாய்...??? நா நனைந்து எம் தமிழர் நாட்கணக்காய் ஆச்சு... நலிவடைந்து உடலதுவோ உயிர் பிரியும் நிலை போச்சு.... நின்மதி இன்றியவர் நிர்கதியாய் ஆச்சு... எண் கணக்கில் பயங்கரங்க…
-
- 8 replies
- 1.7k views
-
-
முஸ்லீம் மக்கள் சிங்கள தமிழ் போரில் தேவையான போதெல்லாம் சிங்களத்திற்கு முண்டு தந்தனர் சிங்களனின் புலனாய்வில் முதுகெழும்பாய் இருந்தனர் கிழக்கு தேர்தலிலும் சிங்களத்துடன் கூட்டாகி தமிழரை தோற்கடித்தனர் ஜெனிவாவிலும் சிங்களத்திற்கு தோள் கொடுத்தனர் தமிழ் இலக்கியத்திலும் சிங்களத்திட்காய் பேசினர் கூட இருந்து குழிபறித்தனர் தமிழர்கள் விழும்போதெல்லாம் ஏறி உலக்க தவறவேயில்லை பண்டமாற்றாய் பணம் சிங்கள குடியேற்றம் போல் முஸ்லீம் குடியேற்றத்திற்கும் குறைவில்லை சிங்களம் முகத்தில் குத்த முஸ்லீம் முதுகில் குத்தினர் இன்று சிங்களம் பள்ளிவாசல்களை உடைக்கிறது வாழும் சுதந்திரத்தை பறிக்கிறது தமிழன் மட்டுமல்ல நீயும் அடிமை என்கிறது நாம் குரல் கொடுப…
-
- 3 replies
- 583 views
-
-
நான் எப்பவுமே கோவிலுக்கு வந்த உன்னை திட்டுறதுக்கு தான் வருவேன் ஆனா இப்ப உனக்கு நன்றி சொல்ல வந்து இருக்கேன் அந்த பொண்ணு சொன்ன வார்த்தை மட்டும் முதல் சொல்லி இருந்தால் நான் இந் நேரத்துக்கு உயிரோட இருந்திருக்க மாட்டேன் நான் யாரு எப்பல்லாம் மறக்கிறானோ? அப்ப எல்லாம் நீ சரியாய் ஞாபகபடுத்திர எல்லாருக்கும் தெரியுர மாதிரி முகத்தை படைக்கிற நீ ஏன் யாருக்கும் தெரியாத மாதிரி "மனசை" படைக்கிற...
-
- 2 replies
- 901 views
-
-
ஏன் வந்தாய்? ஊரென்ன பார்க்க வந்தாயா? உன் உறவுக்கு சொல்லி வந்தாயா? சோரம் போகா வன்னி மண் தீரம் தெரியாமல் வந்தாயா? தீயவனே ஆவி ஒடுங்கி-உன் உடல் ஊர்போகும் நாள்தெரிய வந்தாயா? பண்டார வண்ணியனின் பரம்பரை பிறந்த மண்ணில் சிங்கம் புணர்ந்து பிறந்த வம்சத்தின் சிறு நரிக்கென்னவேலை? வணங்கா மண் வன்னியின் வரலாறு தெரியாமல்-மூடனே களங்காணா உன் அமச்சரின் கதை கேட்டு வந்தாயோ? அகங்காரம் தலைக்கேற ஆணவம் மிகக்கொண்டு இளக்காரம் என எண்னி தமிழய்ச்சியின் வளைய்க்கரம் சீண்டிப்பார்க்க வன்னிக்கு வந்தாயோ? வளைக்கரம் வலிமை கொண்ட வண்ணிமண் எங்களது இங்கே கொலைக்களம் உனக்காக கொடியவனே நாளை எண்ணு அடங்காப்பெருவீரம் பிறப்பெடுத்து ஆர்ப்பரிக்கும் …
-
- 3 replies
- 1.1k views
-
-
இன்று மாவீரர் நாள் எமக்காக மரணத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் வருகிறாயா என நண்பரிடம் கேட்டேன் இல்லை என்று பதிலுடன் இன்று எனக்கு வேலை என்ற பொய்யும் வந்தது பின்புதான் அறிந்தேன் அன்றைய தினம் அவன் சாய் பாபா பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினான் என்று நண்பா, அந்த மாவீரன் மில்லர் எனக்கு மட்டுமா நண்பன் உனக்கும் தானே இறந்தவருக்காக happy birthday பாடும் நீ ஏன் எமக்காக மரணித்தவர்களுக்காக திவசம் செய்ய பின் நிக்கின்றாய்.
-
- 1 reply
- 846 views
-
-
ஏன்டா என்னை கொண்டீங்க....??????? பத்தவைச்சா பத்தவைச்சா என்னை ஏண்டா பத்த வைச்சா...??? பாவி புள்ள என்னில் ஏண்டா தீயை வந்து பத்த வைச்சா...??? மூணு புள்ள பெத்த என்னை முளுசாய் ஏண்டா எரிச்சுப் புட்டா...??? உயிர் வதங்கி உடல் கருகி இறக்கும் படி ஏண்டா வைச்சா...?? என்ன பாவம் செய்தேன் என்று என்னை வந்து கொளுத்தி புட்ட....?? கூட்டத்தோடு கூட்டமாக கூடியங்கு நானும் வந்தேன்.... ஜயோ பாவி ஏனோ வந்து என்னை அங்கு கொளுத்தி புட்ட....??? தீக்குளித்து மடிந்தான் என்று ஏண்டா வந்து அறிக்கை விட்ட....??? ஓலம் இட்டு கத்தையிலே ஓடி வந்து அணைக்க வில்லை... கூட எண்ணை ஊற்றி நீயும் ஏண்ட…
-
- 1 reply
- 987 views
-
-
ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ???????? என்இனமும் என்மண்ணும் சிறக்க களமாடிய தவக்கொழுந்துகளுக்கு வடை றோலின் பெயரில் வணக்க விழாவாவாம் கூதல் குடிகொண்ட புலம்பெயர் மண்ணில் புலன் பெயர்ந்தவர்களால் புலம்பெயர்க்கப்பட்ட அந்நியம் தொட்டு அருவருப்படைந்த கார்த்திகைப்பூக்கள் தலைநிமிர்ந்து சிரிக்கவில்லை உங்களை வணங்குகின்றோம் என்றபெயரில் களியாட்டா விழா கொதிக்க கொதிக்க கொத்துறொட்டியும் மொறுமொறுப்பாய் றோல்சும் கல்லா கட்டும் உணவ(ன்வணக்)க விழாவில் இவைகளைப் பாராது ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ?? என்மண்ணில் உயிருடன் உலாவும் கார்த்திகைப்பூ பெற்ற பெயர் வேசி......... அவள் வாழ்வும் அவள் பிள்ளைகளும் நடுறோட்டில் .......... சிங்களத்தின் கொட்ட…
-
- 99 replies
- 6.6k views
-
-
ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...! அந்த நாட்கள் தீயின் நாக்குகளால் தின்னப்பட்ட தீராத்துயர் எங்கள் வீரத்தின் விலாசங்களை வெ(கொ)ன்ற நாட்கள். வெற்றிகள் தந்தெங்கள் விடுதலைச் சுவடுகளில் வீரம் எழுதிய மகனாரும் , மகளாளும் இறுதிச் சமர் புரிந்து எரிந்து கரைந்த 5ம் ஆண்டு நினைவில் ஆனந்தபுரம் அழியாத நினைவாக....! பூக்களின் வாசனை கலந்த பொன்னிதழ் விரியும் புன்னகை முகங்கள் பொசுங்கிக் கிடந்த நாளை வசந்த கால மலர்வாசம் தரும் ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...! இழப்பின் கதைசொல்லும் என்றைக்கும் இதயம் நிரம்பிய துயர் தருமாதம் நஞ்சு கலந்து எங்கள் கனவுகள் பறிக்கப்பட்ட நிலத்தின் கதைசொல்லும் நீங்காத…
-
- 1 reply
- 654 views
-
-
ஏமாற மாட்டேன் வேணாண்டா...வேணாண்டா.... உன்தன் ..ஆசை வார்த்தை......வேணாண்டா...... பாச...மொழி பேசி வந்து எனை பாவியாக்க..வேணாண்டா.... காதல் மொழி பேசி வந்து என்தன் கற்பை பறிக்க வேணாண்டா... உன்தன ஆசை கிளி என்று எனை அசிங்க படுத்த வேணாண்டா.... நல்ல மனம் நீங்க என்று நாடகம் ஆட வேணாண்டா..... இரவல் போகும் இதயம் உந்தன் இழிவுக் காதல் வேணாண்டா.......... பாசம் வைச்சு உன்னில் நானும் பைத்தியமாய் அலைய மாட்டேண்டா.... ஜய்யோ ராசா வேணாண்டா...... உந்தன் மோக காதல் வேணாண்டா..... சத்தியமாய் நீ வேணாண்டா......உந்தன் சாக்கடை காதல் வேணாண்டா..... உந்தன் போலி வாக்குறதியில் மயங்கி நானும்..... எந்தன் வாழ்வை தொலைக்க மாட்டேண்டா....... மொ…
-
- 8 replies
- 1.5k views
-
-
அதிகம் யாரையும் வெறுக்காதீர்கள் அது எதிரிகளை அதிகம் உருவாக்கிவிடும் யாரையும் அதிகம் நேசிக்காதீர்கள் அது ஏமாற்றத்தை கொடுத்துவிடும்...
-
- 4 replies
- 1.3k views
-
-
அதிகம் யாரையும் வெறுக்காதீர்கள் அது எதிரிகளை அதிகம் உருவாக்கிவிடும் யாரையும் அதிகம் நேசிக்காதீர்கள் அது ஏமாற்றத்தை கொடுத்துவிடும்...
-
- 0 replies
- 736 views
-
-
ஏய் சுதந்திரமே உன்னை எம்மால் தொட அகிம்சையாளும் முடியவில்லை ஆயுதத்தினாலும் முடியவில்லை ஆகவே வேண்டாம் நீ என ஒதுங்கிட முட்கம்பி அகதியல்ல புலம்பெயர் அகதி நாம்
-
- 1 reply
- 617 views
-
-
காலை வந்தது காபி வந்தது நா இனிக்கவில்லை! சேதி கேட்டதும் உள்ளம் உடைந்தது யாருக்கும் புரியவில்லை! ஆதி முதல் தலைவன் கூட இருந்த ஒருவன் பாதி வழியில் போவான் என்று யார் அறிவான்? பாவி ஒருவன் செய்த செயல் ஆவி துடிக்க வைத்ததம்மா! சிரிக்கின்ற ஒரு புலி எரிகின்ற தீயில் வேகுதம்மா! தெரிகின்ற ஈழத்துவாசல் பார்க்குமுன் விரிகின்ற சிரிப்படக்கி பறந்தாயே செல்வா...! முதலில் ஒரு சிங்கம் போனது இப்போது ஒரு புலியும் போகுது வலியும் வஞ்சகமும் எம் ஈழப்பாதை எங்கும் விரிந்தே கிடக்குது! தமிழ்ச் செல்வா... வலிக்குது நெஞ்சம்... கோபத்தின் கொந்தளிப்பில் எரியுது உள்ளம்... ஏய்! பகையே அடாது செய்தாய் விடா…
-
- 0 replies
- 994 views
-
-
ஏய் மனிதா நில்லு உலகம் படைச்சது எதற்காக நீ... உலோகம் கொண்டு எல்லையிடவா..??! ஏய் மனிதா சொல்லு இவள் பிறந்தது எதற்காக நீ.. கம்பி வேலியிட்டு அடைத்து வைக்கவா..??! ஏய் மனிதா சொல்லு ஒற்றை மலலாவுக்கு குண்டடி என்றதும் பதறுவது எதற்காக.. நீ இவளை முட்கம்பியால் கட்டி வைக்கவா...??! ஏய் மனிதா சொல்லு உன் குழந்தைக்கு ஐபாட்டும்.. ரெடிபெயரும் எதற்காக நீ இவள் போல் எண்ணற்ற குஞ்சுகளை வதைப்பதை மறைக்கவா..??! ஏய் மனிதா சொல்லு யுனிசெப் என்ற ஒன்று எதற்காக.. நீ உள்வீட்டுப் பிரச்சனைகளில் உளவு பார்க்கவா..??! ஏய் மனிதா சொல்லு மனித உரிமைகள் யாருக்காக.. நீ வெள்ளைத்தோலால் உலகை ஆள்வதற்கா..??! ஏய் மனிதா சொல்லு.. இந்த வேசங்கள் எதற்காக நீ அழிவைத் தேடிச் செல்வதால…
-
- 8 replies
- 1.1k views
-
-
போறன் என்றோ ... போயிட்டு வாறன் என்றோ .. சொல்லிவிட்டுப் போகாத என் அண்ணன் அடிக்கடி வந்து நினைவில் நிக்கிறார்! அவரைப் பாத்தா ரெண்டு கேள்வி கேக்கோணும்; எண்டுதான் நான் நினைச்சிருந்தன்! -ஆனால் நேத்திரவு கூட கனவில வந்தவர்... என்னால ஒண்டுமே கேட்க முடியேல. சத்தியமாச் சொல்லப் போனால்.... அண்ணை செய்தது மெத்தச் சரி! ஏன் தெரியுமோ...!?? எங்கட சனத்தின்ர குணம் உங்களுக்குத் தெரியாதே? போறன் எண்டு சொல்லிட்டுப் போனாலும்... போத்திக்கொண்டு படுத்திருப்பாங்கள்! போயிட்டுவாறன் எண்டு சொல்லிட்டுப் போனாலும்... போத்திக்கொண்டுதான் படுத்திருப்பாங்கள்! என்னைப் பொறுத்தவரையில்........ அண்ணை எல்லாத்தையும் செய்திட்டார்! இதுக்குமேலயும் அந்த மனுஷனே வரோணும் உங்களுக…
-
- 3 replies
- 852 views
-
-
ஏய்.. உலகமே விழித்துக்கொள்.. இரும்புக்கம்பிகள்.. நம்மை என்ன செய்யும்.. உலகமெலாம் தமிழனை உருட்டுவதேன்.. சிறைகள்.. வெறுமையாகும்.. நேரமெல்லாம்.. அப்பாவித்த தமிழனையா உள்ளே... அடைப்பது.. அடிப்பது... உதைப்பது... மனிதாபிமானத்துக்குள்.. அடங்காத மனிதனா கேட்பாரில்லாத.. குடிமகனா தமிழன்... மகிந்த மேய்க்கின்ற மந்தைகளா தமிழன்.. சொந்த நாட்டிலேயே.. அகதியான.. பாவியா தமிழன்.. ஏய் உலகமே.. விழித்திரு.... எங்களைப் பாதுகாக்க.. நீ வரவில்லை.. எங்களை நாங்களே பாதுகாக்க நீ விடவில்லை.. ஒரு கண்ணில் எண்ணெய்.. எம் துயர் உனக்கு தெரியமாலிருக்கலாம்.. என் தங்கையின் அழுகுரல்.. குழந்தைகளின்.. ஓலம்.. தாயின் விசும்பல்.. உன் காதுகளில் விழவில்லை.. கா…
-
- 12 replies
- 2k views
-