கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
எங்கட ஊருக்கும் மின்சாரம்...!!!! எங்கட ஊருக்கும் மின்சாரம் - இனி அவுணில சுடலாம் பணியாரம் சும்மா குடுக்கிறாங்களாம் எல்.சி.டி இனி எல்லா வீட்டிலயும் சண் டி.வி படிப்பு தான்ரா எங்கட சொத்து வச்சான்ரா ஆமிக்காரன் அதுக்கு ஆப்பு ஆருக்கு வேணும் தமிழீழம் அதை மறந்து நாங்கள் கனகாலம்..!!! தூந்து போன துயிலும் இல்லங்கள் மறந்து போனாலும் மனச்சாட்சி கொல்லும் லாம்பு விளக்கில் மங்கிய இரவுகள் இனி ரியூப்பு பல்ப்பில் பளபளக்கும் கனவுகள்..! அன்றைய இரவில் நிலவும் நச்சத்திரங்களும் கூட இருந்தன மங்கிய வெளிச்சத்திலும் தெளிவாய் நடந்தோம் இரவுகளின் நீளங்கள் தெரியாமல் வாழ்ந்தோம். இனி ஆருக்கு வேணும் தமிழீழம் அதை மறந்து நாங்கள் கனகாலம்...!!! எங்கட ஊருக்கும் மின்சாரம்-இனி அவுணில ச…
-
- 8 replies
- 1.4k views
-
-
மானத்தை தேட ஒரு வெளிச்சம் என்னும் ஒளிர்கின்றது நீயும் மனுசன் என்று கூறி உயிர் எரியும் வாசம் வீசுகின்றது பெருக்கெடுத்து ஓடும் குருதியின் மேல் மிதந்து வரும் தீபங்கள் தலை குனிந்து மண்டியிட்டு கூனிக் குறுகியவர்களின் தோழ்களை எப்போதும் தொடும் ஒரு நேச நெருப்பு எல்லாம் இழந்த பின்பும் பயம் சூழ அடிமைத்தனம் வந்த பின்பும் எட்ட இருந்து ஏவல் செய்யும் என்போன்றவர்களும் தூய ஒளியின் முன் குற்றவாளியாய் நிற்கின்றோம் நாங்கள் தவறுடன் தான் பிறக்கின்றோம் தவறை நியாயப்படுத்துவோம் தவிர எப்போதும் திருந்தியதில்லை திருத்தம் பெற்ற ஒளிகள் திசை காட்டி நிற்கின்றது எதிரி கருமேகமாய் கவிழ்ந்து எங்கள் நிலத்தை மறைத்தான் எங்கள் துரோகங்கள் புயலாய் வ…
-
- 8 replies
- 1.6k views
-
-
என் உயிர் எழுத்தே!! அன்பே அன்பே அன்பின் அன்பே என்பை உருக்கி நின்றால் கூட அன்பைக் காட்டும் அன்பே அன்பால் உன்பால் இணைந்தேன் அன்பே அதனால் என்னுள் உயர்ந்தேன் நானே!! ஆறுதல் தரும் ஆருயிர் நீயே ஆறாய் என்னுள் பாயும் தமிழே ஆரிருள் நீக்கிட என்னுள் வந்தாய் செல்லம்! ஆறுதல் என்றும் உன் திருமடியே! இடிகள் கூடத்தாங்கும் இதயம் பழிகள் தாங்க முடியாப்பொழுதில் இன்னிசை தந்து இன் தமிழ் தந்து இன்னல் போக்கி இன்பம் தந்து இணைத்துக்கொள்ளும் இன்னுயிரே இசைந்தே நிறைந்தேன் உந்தன் மடியே!!. ஈட்டி போல குத்தும் வார்த்தைகள் கேட்டதும் உடனே வாடிவிடுவேன்!! ஈர்த்தாய் உன்பால் இணையில்லாத் தமிழால் ஈரம் உள்ள நெஞ்சைக் கண்டேன்…ஈரேழுலுகமும் வாழ்த்தவேண்டும் ஈடில்லா உறவே உனைச் சேர்ந்திட வேண்டும…
-
- 8 replies
- 1.8k views
-
-
காங்கேசன் துறைவீதியில் இணுவைப்பதியின் எல்லையை இரு கூறாய் சமமாய்ப் பிரித்தால் ஊரின் நடுவில் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த மரம். புதிதாய் எங்கள் ஊர் வருபவர்களுக்கு புரியும்படி சொல்லி வைக்கும் அடையாளம். சீனிப் புளியடி பெயர் சொல்லும்போதே நா இனிக்கும் . எங்கள் பள்ளி கூட புளியடிப் பள்ளியென்றுதான் புவி எங்கும் அறிமுகம் குடை போல விரிந்த மரம் குளிரோடு தந்த நிழலில்தான் இடைவேளையில் அம்மா கட்டித் தந்த இடியப்பமும் முட்டைப் பொரியலும் கவளமாய் களம் இறங்கும். வகுப்பறையில் வராத சங்கீதம் - இந்த மர நிழலில் வரும் என்று லேகா ரீச்சர் எங்களோடு தொண்டை தண்ணி வத்த ச ப சொல்லித் தந்தும் அங்குதான். கண்ணன் பாட்டுக்கு அபிநயம் பழகியதும் அங்குதான் உடற்பயிற்சி வேளை முடிய உற்சாகம் த…
-
- 8 replies
- 668 views
-
-
-
ஏமாற மாட்டேன் வேணாண்டா...வேணாண்டா.... உன்தன் ..ஆசை வார்த்தை......வேணாண்டா...... பாச...மொழி பேசி வந்து எனை பாவியாக்க..வேணாண்டா.... காதல் மொழி பேசி வந்து என்தன் கற்பை பறிக்க வேணாண்டா... உன்தன ஆசை கிளி என்று எனை அசிங்க படுத்த வேணாண்டா.... நல்ல மனம் நீங்க என்று நாடகம் ஆட வேணாண்டா..... இரவல் போகும் இதயம் உந்தன் இழிவுக் காதல் வேணாண்டா.......... பாசம் வைச்சு உன்னில் நானும் பைத்தியமாய் அலைய மாட்டேண்டா.... ஜய்யோ ராசா வேணாண்டா...... உந்தன் மோக காதல் வேணாண்டா..... சத்தியமாய் நீ வேணாண்டா......உந்தன் சாக்கடை காதல் வேணாண்டா..... உந்தன் போலி வாக்குறதியில் மயங்கி நானும்..... எந்தன் வாழ்வை தொலைக்க மாட்டேண்டா....... மொ…
-
- 8 replies
- 1.5k views
-
-
நத்தார் நாயகனே பரிசுத்த இளைஞனே.. குழந்தை ஜேசுவாய் அன்னை மேரியின் தவப்புதல்வனாய்... இறை தூது கொண்டு.. நீ வந்தாய் தூசிகள் படித்த மனித மனங்களை தூய்மைப்படுத்த..! அகிலத்தில் - முதலாய் அகிம்சை எனும் ஆயுதம் தூக்கிய இளைஞனே அப்பாவியாய் நீ உலகை வலம் வந்தாய். மனித மனங்களை மாண்பால் பண்படுத்த நீ முயன்றாய்..! ஆனால்... அடப்பாவிகள் உன் தலையில் முட்கிரீடம் இட்டு தோளில் சிலுவை வைத்தார் இறுதியில் அதில் உனை அறைந்தே வீரம் கொண்டார்..! அதர்மத்தின் வீரம் அகோரம் தர்மத்தின் வீரம் சாந்தம்..! இளைஞர் எம் முன்னோடியே விடுதலைப் போராளியே.. நாமும் வருவோம் உனது தடம்படித்தே..! தோழனே ஜேசுவே உன் பிறந்த நாளில் உனை அன்போடே நினைவுகூறுகிறோம்..! வொட்காவுக்கோ.. வைனுக்கோ அல்ல கேக்குக்கோ புடிங்குக்கோ அல்ல சாண்…
-
- 8 replies
- 1.2k views
-
-
சிறையிருக்கும் சிந்தனைகள்.. சிறு வயது - எம் சிந்தனைகள் சிறையிலிருந்த காலம்... தாயின் சொல்லே - என் தாரக மந்திரம்... தந்தையின் சிந்தனைகள் என் செயல் வடிவாகும்... ஆசிரியறின் அறிவியல் என் தீர்மாணங்களாயின...... பிரம்புகளும் முறைப்புக்களும் - என் சிந்ததனைக்கு சிறையாயிருந்தன..... எனினும் .... அடங்கும் வரை தானே அடக்குமுறை .... அணையிருக்கும் நீர் உயர்ந்ந்து உரத்து சொல்வதில்லையா..? திறவுங்கள் -அன்றேல் திறக்கப்படும் என்று.....! அது போன்றே -என் சிந்தனையும் சிறகெடுத்தது புதுத் திசை நோக்கி......! கற்பெனில் கண்ணகி - இது கற்காலக் கருத்து.... கோவில் எடுத்து குடமுழுக்காடி... கற்ப…
-
- 8 replies
- 1.6k views
-
-
புலத்து இளைஞனின் புலம்பல் புரிந்திட முடியாப் புதிராம் எந்தனை புரிந்திட மறுக்கும் உறவுகள் சொல்கிறார் வெந்த என் மனதிலே வேலினைப் பாய்ச்சியே விடுப்பினை அறிந்திடும் விருப்பிலே துடிக்கிறார் கற்பனை ஆயிரம் காண்கிற வயசிலே களிப்புடன் வாழ்ந்திட வழியுள நாட்டிலே இல்லற வாழ்வினை தேடிடாக் காரணம் இயம்பிடச் சொல்லியே தினம்தினம் குடைகிறார் ஆண்டுகள் போகுதாம் ஆயினும் எந்தனை அண்டவே இல்லையாம் திருமண ஆசைகள் கிழவனாய்ப் போனபின் அண்டிடார் பெண்களாம் கிண்டலாய்ச் சொல்கிறார் கோபமும் கொள்கிறார் காதலில் தோல்வியோ கன்னிமேல் வெறுப்போ களவியல் வாழ்க்கையில் நாட்டமோ கேட்கிறார் வாழ்ந்திடும் நாட்டின் மக்களைப் போலவே வாழ்ந்திட மனதில் எண்ணமோ என்கிறார் பேரனைக் கொஞ்சிடும…
-
- 8 replies
- 1.8k views
-
-
நேற்றைய இரவு முழுதும் அழுதபடியிருந்தவர்களை கண்டு தாளாது போரிட சென்றவர்கள் வெற்றியோடு திரும்பினர் மதியம் நமது தோழனென நம்பியிருந்த பகல் பெரும்பூதமென மீண்டுமொரு காரிருளை வாரியிரைத்து போனது வடக்கே அமைதியாக இரவும், பகலென வேடமிட்ட நிசியும் பிணைந்த புணர்வில் பிறந்த குழந்தை பதிமூன்று ஆணா? பெண்ணா? என அறிவதில் கழிந்தது காலம் இடையில் கீரிடத்தை பறிக்க சிந்தனையில்லா கோமகனை கொன்று நம்மை பழிகடாவாக்கின பூதகணங்கள் விதியென நொந்தும் வெயிலென காய்ந்தும் புயலென வீழ்ந்திடாமலும் பூத்தன கார்த்திகை பூக்கள் சூல்கொண்ட மகவு தாயை பிரசவிக்கமுன் விழித்துக்கொண்ட இருளின் பிள்ளைகள் கைகுலுக்கிக் கொண்ட நாட்களில் சிவப்பு கழுத்து…
-
- 8 replies
- 5.2k views
-
-
தாயே அன்று உந்தன் மடியில் மறந்து போன என் எல்லா சோகமும் ஒன்று சேர்ந்து என்னைக் கொல்கிறது எனைத் தூங்க வைக்க தூரத்தில் நீ என்பதால் * இந்த உலகில் எந்த மூலையிலும் கிடைக்கவில்லை உந்தன் கருவறையில் கிடைத்த எனக்கான பாதுகாப்பு * என் மேலான உந்தன் கவனத்துக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் குழந்தையாய் பிறக்கலாம் உனக்கு நான் * எந்தப் பாசப்படியைக் கொண்டு நிறுத்தாயோ தெரியவில்லை உன் எல்லா குழந்தைக்கும் ஒரே அளவிலான அன்பையே காட்டுகிறாயே * என் தாரத்தின் மறுபிறவியில் உணர்ந்து கொண்டேன் நான் பிறக்க நீ தாங்கிய பிரசவ வலியை * உன்னில் தடுக்கி நான் விழுந்தபோதும்…
-
- 8 replies
- 1.5k views
-
-
இளமைக்காலம் இதுவொரு இனிய காலம் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் பட்டாம் பூச்சி போன்று படபடத்து திரியும் காலம் பட்டென்று பாசமும் சட்டென்று காதலும் நச்சென்று கோபமும் கூடியே வரும் காலம் துடி துடிப்புடனே உற்சாகத்துடன் துள்ளித் திரியும் -ஒரு இனிமையான காலமது
-
- 8 replies
- 2.2k views
-
-
அழிக்கப்பட முடியா தேசம் http://www.piraththiyaal.com/ சிறுவயதுக் கரையோரம் கட்டிய மணல் வீட்டை அலை வந்து வந்து அழித்துப் போனது. மீண்டும் மீண்டும் கட்டக் கட்ட அழித்தல் சாத்தியமாயிற்று அலைக்கு பின், என்சிறு கிராமக்கோடியில் வியர்வையாலுங் குருதியாலும் கட்டிய என்சிறு குடிலை சிதைக்க முடிந்தது உங்களால் மீண்டும் மீண்டும் கட்டக் கட்ட அழித்தல் சாத்தியமாயிற்று உங்களுக்கு இப்போ நகரங்களாலும், ஊர்களாலும், கிராமங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட எனது தேசத்தை எந்தப் பீரங்கி கொண்டும், யாராலும் அழித்துவிட முடியாது என்பதை அறுதிட்டுச் சொல்ல முடியுமென்னால். ஏனெனெல், ஓர் அகதியின் கனவுகளாலனவை எனது தேசம். -தமயந்தி - http://www.piraththiyaal.com/2012/12/blog-pos…
-
- 8 replies
- 1.2k views
-
-
சற்று ஆறுதல்…! -------------------- கடந்த சில நாட்கள் கடப்பதே துயரமாய் கடந்து போனது கண்களில் நீருடன் திரண்ட தமிழகம் தீர்ப்பினை மாற்றென நீதியைக் கோரி நீண்டது தெருக்களில் தமிழகத் தாயோ தன்னால் முடிந்தததை அவையிலே செய்தார் அரியதோர் நகர்வாய் அமைந்தது கண்டோம்! மூவரின் உயிரை முழுதுமாய்க் காத்திட உலகம் எங்கும் வாழ்கின்ற தமிழரே உறுதியோடு குரல் கொடுப்பீரா? காப்பது என்ன மூவரின் உயிரா உயிருடன் இணைந்து நீதியுமல்லவா? நீதியை காத்திட நெருப்பென எழுகின்ற தமிழக உறவே பற்றிக் கொள்கிறோம் நன்றியுடனே! நாதியற்றவன் தமிழன் என்பதை நாளைய சந்ததி எதிர்கொள்ளலாமா? மீட்கும் வரைக்கும் நீதியைக் கேட்போம் நீதியை மறுத்தால் தமிழனுக்…
-
- 8 replies
- 1.2k views
-
-
குடிசை என் வீட்டு அலாரம் என்னை எழுப்பியது....ஆம் சூரியன்தான் என் வீட்டு ஷவரில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது....ஆம் மழைதான் என் வீட்டு காத்தாடியில் வந்தது தென்றல்....ஆம் காற்றுதான் இயற்கை என்வீட்டை சூழ்ந்து கொண்டதாலோ என்னவோ ஒன்று மட்டும் தான் இப்போதைக்கு இல்லை....ஆம் உணவேதான்.
-
- 8 replies
- 2.1k views
-
-
இசைப்பிரியாவும் கார்த்திகைப் பூக்களும்...! -எஸ். ஹமீத்- *செந்தாமரைகள் சிலிர்த்துப் பூக்க வேண்டிய அந்த சேற்று நிலத்தில், பெண் தாமரையே உன்னைப் பிடித்துத் தள்ளியது யார்...? *மானமும் கானமும் வாழ்வெனக் கொண்ட மாதரசியே, உன் துகிலைக் கிழித்துத் துப்பிய அந்தத் துச்சாதனர்கள் யார்...? *வெறி பிடித்த நாய்களின் நடுவே- தாயே நீ, தனித்து விடப்பட்ட ஆட்டுக்குட்டியாய்... விஷம் கொண்ட பாம்புகள் நடுவே- அம்மா நீ ஆதரவற்ற அணிற் குஞ்சாய்...! *நீ அசைத்து வந்த வெள்ளைக் கொடியா அது...? அது, உன்னுடையதாகத்தானிருக்கும்! இல்லாவிட்டால், அந்த நேரத்தில் அவர்களுக்கேது அந்தத் துணி...??? *சரணடையச் சென்ற வேளையுந்தன் சமாதானக் கொடியைப் பறித்து வைத்துவிட்டு-தம் பாவக் கரங்களால்-கோர நகங்களால் அவ…
-
- 8 replies
- 818 views
-
-
எங்கே செல்கிறாய் என் தேவதையே? உனைத் தேடி அலைகிறேன் தெரியலையா? என் காதலும் உனக்கு புரியலையா? எதுவுமே உனக்கு நினைவில்லையா? என் பரந்த மனவெளிகளை, நினைவுகளால் நிரப்பிவிட்டு உன் மனம்மட்டும் வெறுமையாகி... என்னையும் வெறுமையாக்கிப் போனதேன்?? பிஞ்சுக் குழந்தையுன் மனதில்... யாரடி... கொடும் நஞ்சை விதைத்தது? கொஞ்சும் குரலில் குழைவாயே... நீயா என் நெஞ்சை வதைப்பது? மனதறிந்து மணங்கொண்ட என் மங்கையே! என் உளமறியும் குணங்கொண்ட நங்கையே! எனை மறந்து நீயும்... உனை மறந்து செல்கின்ற என் தேவியே...! உன்னை நேசிப்பவன் சொல்கிறேன்...! உன் மனதில் குறித்துக்கொள்!! என்றாவது ஒருநாள்... மீண்டும் வருவாய் எனைத்தேடி! அப்பொழுது எல்லாமே மாறிப்போயிருக்கும்... என் காதலைத் தவிர!…
-
- 8 replies
- 963 views
-
-
என் காதல் தேவதை மனதுகளின் சங்கமத்தில் மலர்ந்திடும் ஓர் உறவு குருவிகளின் கொஞ்சல்களில் கொஞ்சமாய் கண்விழித்து ஜன்னலோரம் பார்க்கிறேன். பூ மரங்கள் மேல் பனித்துளியில் தங்க நிற வளையங்களாய் மினுங்கிடும் நீர்துளிகள். அரைத்தூக்கம் கண்களிலே ஆசையாய் இருந்துவிட அவசரமாய் ஜன்னல் கதவுகளை திறக்கின்றேன் பளீரென்று ஓர் வெளிச்சம் என் பார்வையதை பறித்துவிட்டு சில வினாடிகளில் மறைகிறது மறுபடியும் பார்த்தால் புரிந்தது என் புத்திக்கு ஆம்! சூரியனின் விம்பம் சோடி வளையல்களில் எதிரொலித்து ஜன்னல்களின் இடைவெளியால் என் கண்களை தாக்கியது முகம் பார்ப்போம் என்றால் முடியவில்லை பூமரத்தால் அன்று முடிவெடுத்தேன் ஓர் கொள்கை மரம் வளக்கும் கொள்கைவிட்டு மர…
-
- 8 replies
- 1.5k views
-
-
தொலைபேசியும் தொலைத்(த)தொடர்பும்....... கவிதை.... வண்ண வண்ணச் சிட்டுக்கள் என்னை தொலைவில் நின்றும் பார்க்கவில்லை..... காரணம் தெரிந்து கொண்டேன் கையட்டக்கத் தொலைபேசி கூட என் கையில் அன்று இருக்கவில்லை...... கடன் அட்டை ஒன்றெடுத்து கைத் தொலைபேசி வாங்கி வந்தேன் அதன் பெயரோ '' நோக்கியா'' அதைக்கண்டு ஓர் சிட்டு என்னை நோக்கினாள்..... அதன் பின்னர் ''சொனி எரிக்சொன்''கு மாறினேன் அவளை சில படங்களும் எடுத்துக் கொண்டேன் அவளும் சிரிப்புக்கு மாறி தன் கண்களையும் சிமிட்டிக் கொண்டாள்..... பின்னர் ''சாம்சங்''கு மாறி அவளோடு தனிமையில் பேசி வந்தேன் என் காதலுக்கும் சரி சொல்லி என் மார்பிலும் சாய்ந்து கொண்டாள…
-
- 8 replies
- 1.3k views
-
-
-
வெண் மணற் பரப்பில் கால் புதைய கனவுகள் சுமந்து நடக்கையில் காலில் இடறிய கல்லின் காயத்தில் கண்ணீர் கனதியானது காலங்கள் காத்திருக்கலாம் என் காயம் ஆற்ற - ஆனாலும் இழந்த நேரத்தின் இன்பங்கள் கணக்கில் வாராது கனவுகளாய் நீரில் போட்ட கோலம் நினைவில் அழிந்து போவதுபோல் காலத்தின் கணக்குகளும் - ஒருநாள் காலாவதி ஆகலாம் எண்ணற்ற எண்ணங்களின் குவியல் எப்போதும் என்நெஞ்சிருக்க போராடும் தெம்பின்றி போருக்கும் எதிரே யாருமின்றி பொங்கிடும் மனதின் பொழுதுகள் போக்கிடமின்றி போட்டிபோட ஏற்புடையது அல்லவெனினும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எப்போதும் என்னுடனே இருக்கும் சிதைந்துபோன கனவுகளின் சேமிப்பின் நினைவுகள்
-
- 8 replies
- 965 views
-
-
எனது தலைமையில் நடந்த பொங்கல் தினச் சிறப்புக் கவியரங்கம் நன்றி -தியா-
-
- 8 replies
- 956 views
-
-
கருவினில் அவள் வயிற்றினில் உதைந்தோம்..! வளர்கையில் அவள் மார்பினில் உதைந்தோம்..! பள்ளிப் பருவத்தில் அவள் ஆசைகளையே உதைந்தோம்..! வளர்ந்த பின் அவளையே உதைகிறோம் இறுதியில்.. தனிமையில் தள்ளுகிறோம்..! இருந்தும் அவள்.. இன்னும் எங்களையே நினைக்கிறாள்.. உருகிறாள் அழுகிறாள் அன்பைப் பொழிகிறாள்.. அவள் தான் அம்மா...! அன்பு மக்களாய் அவளுக்கு நாம் என்ன அளித்தோம்..???! வெறும்..ஏமாற்றங்களே...! பதிலுக்கு அவளோ இன்னும்.. அளிப்பது அனுதினம் அன்பும்.. ஊக்கமும்..! அன்னையை கடவுளாய் தொழ வேண்டாம் பூக்களால் பூஜிக்க வேண்டாம் பொன்னால் அலங்கரிக்க வேண்டாம் பட்டால் போர்க்க வேண்டாம் பரிசால் குவிக்க வேண்டாம்.. அவள் பேசும் ஒரு வார்த்தை…
-
- 8 replies
- 2.1k views
-
-
எச்சாதி சொல்வீரோ பத்தே வயதான பாலகனாய் இருக்கையிலே பதிலறியாக் கேள்வியொன்றைப் படித்தவரைக் கேட்டிருந்தேன் என்வயதை ஒத்துநிற்கும் எதிர்வீட்டுப் பையனுடன் ஏற்புடனே விளையாட எதற்காகத் தடுக்கின்றீர் முத்தமிழில் புலமைபெற்ற முன்வீட்டுத் தாயிடத்தில் தமிழ்ப்பாடம் படிப்பதற்குத் தடுப்பதுவும் எதற்காக? இத்தனையும் ஏன்என்று இதமாகக் கேட்டதற்கு இழிசாதி அவரென்று இரகசியமாய்ச் சொல்லிவைத்தார் சாதிகளில் பலசொன்னார் சமனுமில்லை எமக்குஎன்றார் சகபாடி எனச்சொன்னால் சண்டைவரும் இங்குஎன்றார் இச்சாதி கணிப்பதற்கு இருக்கிறதோ ஒருமார்க்கம் இடக்காகக் கேட்டதற்கு இலேசாகப் பதில்சொன்னார் பரம்பரையாய் வருகின்ற பழக்கமிது எனச்சொன்னார் செய்தொழிலை வை…
-
- 8 replies
- 1.5k views
-
-
கடவுளின்_கைபேசி_எண்..? ஐந்துவேளை தொழும் முல்லாக்களே உங்கள் அல்லாவின் கைபேசி எண்ணைத் தாருங்களேன் என்னிடம் சில கேள்விகளுண்டு.. புனித இஸ்லாத்தின் பெயரில் பூவுலகெங்கும் நடக்கும் பயங்கரவாதங்களில் பொசுங்கிக் கருகும் பிஞ்சுக் குழந்தைகள் பெண்களின் கதறல்கள் உங்கள் காதுகளில் ஒருபோதும் விழுவதேயில்லையா..? அரை நூற்றாண்டு காலமாக ஒரு அந்திப் பொழுதுகூட அமைதியாகக் கண்ணுறங்க முடியாத காஷ்மீரத்து மக்களின் கண்ணீரைத் துடைக்க கருணையின் வடிவான உங்கள் கரங்கள் ஏன் ஒருபோதும் நீளவேயில்லை..? ஆறுகால பூஜை செய்யும் அம்பாளின் அர்ச்சகரே அம்பாளின் கைபேசி எண்ணைத் தாருங்களேன் அம்பாளிடம் ஒரு கேள்வி... ஆசிஃபா எனும் அப்பாவிக் குழந்தையை ஆறு …
-
- 8 replies
- 1.5k views
-