கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பாலைப் பாட்டு - வ.ஐ.ச.ஜெயபாலன் வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே நினைந்து உருகிக் கிடந்தேன். அன்பே மஞ்சத்தில் தனித்த என்மீதுன் பஞ்சு விரல்களாய் சன்னல் வேம்பின் பொற் சருகுகள் புரள்கிறது. இனி வசந்தம் உன்போல பூவும் மகரந்தப் பொட்டுமாய் வரும். கண்னே நீ பறை ஒலித்து ஆட்டம் பயிலும் முன்றிலிலும் வேம்பு உதிருதா? உன் மனசிலும் நானா? இதோ காகம் விழிக்க முழங்குமுன் கைப்பறை இனி இளவேனில் முதற் குயிலையும் துயில் எழுப்புமடி. நாளை விழா மேடையில் இடியாய்ப் பறை அதிர கொடி மின்னலாய் படருவாய் என் முகில் வண்ணத் தேவதை. உன் பறையின் சொற்படிக்கு பிரபஞ்சத் தட்டாமாலையாய் சிவ நடனம் தொடரும். காத்தவரா…
-
- 4 replies
- 1.7k views
-
-
வேட்டைக்காறி....... இவள் நச்சுக்குண்டைப் போடவைத்த மோசக்காறி....... நாடு விட்டு நாடு வந்த வேட்டைக் காறி...... இத்தாலி நாடு தந்த அகங்காரி..... அப்பனோ சர்வாதிகாரி..... ஆத்தாளோ இறுமாப்புக்காறி...... மகளோ அடங்கா பீடாறி...... உன்னால் நாம் நிற்கும் நிழலும் இழந்தோம்... இருக்க வீடும் இழந்தோம்.... படுக்க பாயும் இழந்தோம்.... உண்ண உணவும் இழந்தோம்..... உன் தாலி போனதால் எங்கள் தாலியையும்: அறுக்க நினைத்தாயே...? உனக்கு அப்பாவித் தமிழர் நாம் என்னதான் பாவம் செய்தோம்....? காடேறி உனக்கு தாலியின் மகிமை தெரியுமா...? காலையில் ஒண்டு மாலையில் ஒண்டு அது உன் கலாச்சாரம்....! ஒருவனுக்கு ஒருத்தி அது எங்கள் கலாச்சாரம்..... இந்திராவ…
-
- 16 replies
- 1.7k views
-
-
அன்று நாங்கள் அமைதியாக வாழ்ந்தோம் மருதை குறிஞ்சி பhலை முல்லை நெய்தல் என நிலங்களை ஐந்தாக பிரித்து அழகான எம் நிலத்தில் அமைதியாக வாழ்ந்தோம் நெத்தலி மீன்க்ள் துள்ளி விழையாடும் கடற்கரையில் துள்ளி மகிழ்ந்தோம் குடலை நெற்கள் கதிர்விட அக மகிழ்ந்தோம் தடிமன் வந்தால் பாட்டி செய்த ஒடியற் கூழில் பஞ்சாய் பறந்து விட நிம்மதியாய் வாழ்ந்தோம் முற்றத்து செவ்வரத்தம் பூக்களில் முகம் விழித்தோம் துலா கப்பியில் தண்ணி அள்ளி சோம்பல் போக்கி முகம் கழுவினோம் தொட்டாற் சிணுங்கியை தொட்டு மகிழ்ந்தோம் பட்ட காயத்திற்கு வெட்டொட்டியால் கட்டுப்போட்டோம் நாலு மணிப்பூக்களில் நேரம் பார்த்தோம் சாலைகளில் நடக்கும் போது சுகம் விசாரித்தோம் …
-
- 7 replies
- 1.7k views
-
-
என் ரோசாப்பூ சேலைக்காரி.... கவிதை - இளங்கவி........ குட்டைப் பாவாடையுடன் மனதை கொள்ளை கொள்ளும் சிரிப்பு கொண்டு நல்லூர் வீதியெல்லாம் சுற்றிடுவாய் நானும் உன்னை சுற்றிடுவேன்...... கரம்சுண்டல் வாங்கி வந்து என் கைகளிலே வைத்திடுவாய் வாங்க மறுத்துவிட்டால் என் காலை மிரித்திடுவாய்..... கடைக்கண் பார்வைகொண்டும் அடித்திடுவாய்.... நல்லூர் முருகனை மறந்துவிட்டு உனை உன்முடிபோல தொடர்ந்திடுவேன் முழு கண்கள் பார்க்கமுதல் இருளாக மறைந்திடுவேன்.... சில திருவிழாக்கள் ஓடி உன் சிறு அழகெல்லாம் வளர்ந்துவிட ரோசாப்பூ சேலைகட்டி என்மனதை ஜோராக இழுத்தவளே...! சிறுவயதில் நீ தந்த பொரிகடலை சுவையும் போய்.... நீ சிறிதாக வாங்கித்தரும் கரம்சுண்ட…
-
- 12 replies
- 1.7k views
-
-
-
http://vaseeharan.blogspot.com/ பல்லவி தமிழன் தமிழன் ஒருவன் தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள் தலைவன் தலைவன் மறவன் தமிழர் படைத்த பிரமன்- அண்ணன் பிரபா பிரபா பிரபாகரன் பிரபா பிரபா பிரபாகரன் சரணம் 1 தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக் கனவோடு முளைத்த நனவுஇவன் அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள் அன்பை மதிக்கின்ற தலைவன்இவன் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 2 பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும் பண்டார வன்னியனின் ஆசியிருக்கும் பாயும் விழிகளிலே தீயிருக்கும் படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 3 நாட்டை நம்மை நேசிப்பவன் தமிழ்விடுதலையை என்றும் யாசிப்ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஆரிடம் சொல்லியழ? தொலைபேசி வைத்திருப்போரே! தொலைந்து போங்கள்…. தாயகம்பற்றிப் பேசவா? யார் முந்தி நானா?...... நீயா? உணர்வெடுத்து, உரிமைக் குரலெடுத்து ஆகாய வெளிகளை அதிர வைப்போம்..!!!!! திட்டங்களும், கருத்தாடல்களும் கேட்கக் கேட்க உற்சாகம் பிறக்கும். ஆகா இனிக் கவலையில்லை எவ்வளவு குரல்கள்…! உலக அங்கிகாரம் எதற்கு? நாங்களே இராசாங்கம் இதோ தாயகம் எங்கள் கைகளில் இதனைச் சீராட்டுவோம் பாராட்டுவோம். சிரசின்மேல் சுமப்போம். வானலைகள் கதவுதட்டி வார்த்தைகளை குவித்தெறியும்! நம்பி நம்பிக்கை கொண்டேன் வானலை வந்த என்னருந் தோழருடன் பேச தொலைபேசி எடுத்தேன்.. ஆகா நான் கதைத்தது கேட்டீரா? எப்படி இருந்தது? உணர்வாய் இருந்ததா? என ஆயிரம்…
-
- 8 replies
- 1.7k views
-
-
எதிரலை எங்கோ ஒர் கரையின் மடியில் - நமக்கான நாற்காலிகள் காத்திருக்கின்றன எதோ ஒர் கடலின் அலைகள் - நம் வருகை எதிர் நோக்கி நிலம் தொடுகிறது தனக்கான வேக விளிம்பைத்தாண்டி- நம் சந்திப்பின் காலம் நோக்கி - விரைகின்றன கடிகார முட்கள் இனி எப்போதுமே நாம் சந்திக்க - போவதில்லையெனும் உண்மையறியாமல்
-
- 7 replies
- 1.7k views
-
-
சமாதான தேவதை - நீ சமர் கண்டு சோர்வதா? அவமான அர்ச்சனை - நீ அருகிராமல் எங்கெங்கோ போவதே! சுகமான வாழ்வது சுடராமல் அணைவதா? சாவின் கரத்தில் உயிர் சடுகுடு விளையாடி மாய்வதா? நிழலாக எம் கழல் தனை தொடர்கின்ற சுற்றமது சுவர்க்கமதை அணைப்பதா? இமையாக நின்றெமை சுமையாக நினையாத அன்னை, அப்பனை அடுத்தடுத்து அவலமாய் இணைப்பதா? தமையனாய் நின்றவர் தம்பியாய் வந்தவர் தமக்கையாய் அணைத்தவர் தங்கையாய்ச் சிரித்தவர் நீட்டி முழங்கிப் போக அனுமன் வாலாய் நீள்பவர் கவலை மறந்து, சிரித்து மகிழ்ந்து இந்நாட்டு மன்னராய் நின்றவர் அன்பென்னும் ஆகுதியில் உயிர்தனைச் சலவை செய்து அவலம் எதுவென மறந்தவர் பட்... பட்... எனப் பறக்கும் வேட்டுக்கு சட்... ச…
-
- 9 replies
- 1.7k views
-
-
-
- 14 replies
- 1.7k views
-
-
எங்கேனும் இருந்தால் எழுது ஒரு பதில் நீ வருவதாய் கனவுகள் நீ எம்மோடு வாழ்வதாய் நினைவுகள்.... நினைவுகள் தின்று நெஞ்சில் துயர் மீதமாய்க் கனக்கிறது..... இரத்தம் செறிந்த புழுதியில் நீயும் புழுதியாய் கலக்கையில் ய…
-
- 5 replies
- 1.7k views
-
-
பிணம் தின்னி கழுகுளாக மாறிய மனிதர்கள் மதம் என்ற மதம் பிடித்த மடையர்கள் நிலம் கேட்காத நிலத்திற்கு நீட்டிய வாள்கள் தன்னவரையும் எதிரியையும் துளைக்கும் குண்டுகள் கொன்று கூவித்துவிட்டு கூச்சலிடும் பீரங்கிகள் அலைந்து பறந்து மரணத்தை அடித்த உலோகப் பறவைகள் கால்களை காகிதமாய் துண்டித்த கண்ணி வெடிகள் ஆடவரை இழந்து விதவையான பெண்களின் ஒப்பாரிகள் தந்தையை இழந்து அனாதையான பிஞ்சுகளின் கூக்குரல்கள் காதலியை தொலைத்து நாட்டிற்காக உயிர்தொலைத்த வீரர்கள் மரணத்தை விட கொடுமையான ஊனங்கள் அந்த ஊனத்தை குறைக்க மருந்தை விற்கும் வியாபாரிகள் நீர் போல ஓடிய ரத்த ஆறுகள் குருதியை குடித்து குளித்த மானிட ராட்சதர்கள் கன்னிகளின் கற்பை சூறையாடிய கயவர்கள் தாயின் பாலை வற்ற வைத்த நயவஞ்சகர்…
-
- 8 replies
- 1.7k views
-
-
அகதியாக வந்த பறவை ஏன்அங்கு துடிதுடித்தது கடல் கடந்து வந்த உள்ளம் ஏன் பதைபதைத்தது சிங்களத்து படைகளினால் அகதியாகி புலம்பெயர்ந்தது அமைதியாக வாழ என உங்கு வந்தது அகதியாக வந்தவனை தமிழகம் ஏன் மிதித்தது விழுந்தவனைத் தான் அங்கு மாடும் முட்டுது பச்சைபாலன் என்பது அறியாமலா நாய் கடிதது செய்தி படித்த என் மனமோ பதைபதைக்குது ஈனமான தமிழனாக இவனும் தன்னைக்காட்டுது
-
- 8 replies
- 1.7k views
-
-
உன் ..... கண் அசைவில் மதி ...... இழந்தவன் நான் ..... நீ கண்ணை அசைத்தாய் .... என் வாழ்க்கையே அசைந்து ..... விட்டது ..................!!! ^ கவிப்புயல் இனியவன் கடந்த காதல் - குறுங்கவிதை
-
- 6 replies
- 1.7k views
-
-
கடவுள் ஓர் நாள்.. பார்ட்டிக்குப் போய் ஓவரா தண்ணி அடிச்சிட்டு கட்டிலில் வீழ்ந்தவர்.. காலையில் எழுந்து கண் விழிக்க சிந்தனை கொஞ்சம் சிக்கல்பட்டது. சரி போனாப் போகுது இப்படியே விட்டால் மூளை குழம்பிடும்.. பொழுதும் போகுதில்லை.. ஒரு மானிடப் பெண்ணைப் படைக்க சித்தம் கொண்டார்..! சித்தம் கொண்டவர் டிகிரி போல்டரை தூக்கினார். பெண்ணைப் படைக்க.. எனக்கு என்னென்ன தகுதி வேணும் செக் பண்ணத் தொடங்கினார்.. முதலில் நல்ல ஸ்கெச் போட ஒரு வரைகலை டிகிரி வேணும்.. சா.. அதுக்கு முன்னம் நல்ல மனோதத்துவ டிகிரி வேணும்.. நோ நோ.... அதுக்கும் முன்னம் நல்ல சமூகவியல் டிகிரி வேணும்.. ம்ம்ம்... இல்லையே இவை மட்டும் இருந்தால் வெறும் காட்டூன் தான் வரையலாம்.. உயிரை ஆக்க.. நல்ல…
-
- 13 replies
- 1.7k views
-
-
1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உயிர்த்தெழுந்த நாட்கள் -வ.ஐ.ச.ஜெயபாலன் அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல. மீண்டும…
-
- 7 replies
- 1.7k views
-
-
விழித்திடு பெண்ணே! விடியலைப் படைத்திடு சமுத்திரம் ஒன்றே இலக்கெனக்கொண்ட ஆறுகள் சோர்வது உண்டா? சரித்திரம் படைத்திட புறப்பட்ட பின்னால் தடைகளால் உடைந்திடல் நன்றா? வெளுத்தது எல்லாம் பாலென நம்பிய மனத்துக்கு இது ஒரு பாடம்! நீ குழந்தையல்ல குமரி ஆனாய் இனி விழித்திரு பெண்ணே எப்போதும்! இடையினில் தடை வரும் தடுக்கிடப் பார்த்திடும் தலைவலி உடன் வரும் கடு கடு சொல் வரும் களங்கமும் சேர்ந்திடும் நெருப்பென்று ஆனாய் பெண்ணே நெருப்பினை ஈக்கள் மொய்ப்பது இல்லை சளைக்காமல் நீ தொடு இலக்கினை! பொடி வைத்துப்பேசும் நாக்கு பொய் கூசாமல் சொல்வோர்க்கு விளக்கங்கள் கொடுத்திடல் நன்றோ?! சூரியன் மேற்கினில் உதிப்பது உண்டோ? தோல்விகள் வெற்றியின் படிகள் அன்றோ? இறைவனின் அருளொடு நல்லோர்கள…
-
- 0 replies
- 1.7k views
-
-
கட்டியவனோ காலமாகி விட்டான் ! பெற்றவனோ கைகழுவி விட்டான் ! இருக்கின்ற காலங்கள் எதுவரையோ ? அது வரையும் உழைத்தே உண்ணுவேன் ! முதுமை என் சுருக்கங்களுக்கு மட்டுமே ! .......................................................... எனக்கில்லை! வாழும்வரை தன்னம்பிக்கையோடு .... (எங்கேயோ பார்த்ததில் மனதை ...)
-
- 10 replies
- 1.7k views
-
-
உனக்காக இருக்கவா..? உன்னோடு இருக்கவா..? என்றால் உனக்கா எழுதிக் கொண்டு உன்னோடு இருக்கவே விரும்புகிறது மனசு * நியமாக உன்னோடு வரமுடியாமல் போனாலும் என் நிறமாவது வருகிறதே உன் நிழலாக * நீ பயத்தோடு வருவதைக் கண்டாலே நான் தனியா பேச வந்ததை மறந்து விடுகிறேன் * நீ படபடப்பதை யாரும் பார்த்தால் பயத்தை விரும்பும் கோழை என என்னை நினைக்கப் போறார்கள் * நீ என்னைக் காதலிக்கிறாய் என்பதை என்னால் நம்பமுடியாமல் இருக்கிறது பொறுக்கியை எப்பிடி தேவதை காதலிக்கும்..? -யாழ்_அகத்தியன்
-
- 6 replies
- 1.7k views
-
-
விரிகின்ற எந்தன் நினைவதிலே திரிகின்ற ஒர் உரு உன்னையன்றி வேறெது குவிகின்ற உந்தன் இதழ்தனை இமைக்காமல் நோக்குங்கால் அவிகின்றதம்மா எந்தன் மனது! நடக்கின்ற நிலாவோ நீ? அட.... ட... ட... சுவைக்கின்ற பலாவோ நீ? தவிக்கின்ற மனமெங்கும் நீ தவிக்க விடலாமோ என்னை இனி? பிறக்கின்ற கவிக்குள்ளே உள்ள கரு நீ துடிக்கின்ற இதயத் துடிப்பினிலுள்ள சுதி நீ கடக்கின்ற ஒவ்வெரு நாழியும் நான் நினைக்கின்ற பாவையம்மா நீ மொத்தத்தில் மன்மதன் மனதில் நின்று விளையாடும் ரதிக்கு ஒப்பான மதி நீ!
-
- 10 replies
- 1.7k views
-
-
அகதியாய் அலைந்து ஆழ்கடல் கடந்து இன்னல்கள் சுமந்து ஈழத்தைப் பிரிந்து உறவுகளைத் தேடி ஊட்டி வரை ஓடி எல்லாம் இழந்து ஏங்கித் தவித்து ஐயோ அம்மாவென ஒரு பாத்திரம் கொண்டு ஓடும் எங்கள் நிலை கண்டால் ஒளவைப் பாட்டி மட்டும் ஃமாய் நிற்பார் !
-
- 6 replies
- 1.7k views
-
-
நீ என் நிலவரசி முகில்களைக் கிழித்து வெண்புரவி பறக்கிறது. கைக்கெட்டாத் தூரத்தில் என்று காற்று காதில் கிசுகிசுத்தது. ஆழிக்குமிழிகள் போல் வெளியே தெரியாமல் உள்ளத்ததில் பெரிய பெரிய.. முகில்களைக் கிழித்தாயிற்று அடுத்தென்ன? இன்னுமின்னும் அண்டத்தை நோக்கி பயணம் தொடர்கிறது. தொட்டே தீருவேன் வேட்கை வியாபித்து விரிகிறது. கட்டித் தழுவி நீயிடும் முத்தத்திற்கான அவா ஆவியை உசுப்புகிறது. தீபோல் உன்மேல் நான்கொண்ட காதல். என்னை எரித்தெரித்து என் சுயத்தை சாம்பலாக்கி சரசமிடுகிறது. உருவழிகிறாய் என்று ஓரத்தில் ஒருமனம் விசிக்கிறது. உணர்ந்தும், உயிர்ப்பு உன்னை மட்டுமே யாசிக்கிறது. அடி!, என் நெஞ்சக் கூட்டறையில் குடிகொண்ட நிலவரசி என் மஞ்சச் சாய்கைக்கு நீ மடிதருவதெப்ப…
-
- 6 replies
- 1.7k views
-
-
எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை ? - நிர்வாணி - எங்களின் தாய்நிலத்தை அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது காலங்கள் எத்தனை கடந்தாலும் இந்த உடல் கோலங்கள் எத்தனை கண்டாலும் சொந்த மண்ணை மறந்திடமுடியாது மறந்துவிடச் சொல்கிறாள் என் காதலி கனடாவில் குடியேறிவிட்டோம் கனடியனாய் வாழ்ந்திடுவோம் வா என்கிறாள் எனதருமைக் காதலியே எதை மறந்துவிடச் சொல்கிறாய் ? தை பிறந்தால் பட்டம் விட்ட நாட்களையா ? அத்துளு வெளியில் பந்தடித்த நாட்களையா ? கோயில் திருவிழாவில் அழகான பெண்களைப் பார்த்து ஏங்கி நின்ற நாட்களையா? எதை மறந்துவிடச் சொல்கிறாய் ? சொல்லடி பெண்ணே எத்தனை காலமடி ? இன்று நினைத்தாலும் நெஞ்சம் இனிக்குதடி எப்…
-
- 10 replies
- 1.7k views
-
-
கனத்த இதயம் இன்று கனத்த இதயத்துடன் கண்விழித்த எனக்கு, என் இதயம் அடிபட்டு நொந்து கிடப்பதையும், அதன் வலியையும் உணரக்கூடியதாக இருந்தது. எதுவரை இது தொடரப்போகிறது. ஈழத்தமிழனின் வலிமையை அழித்துத் துடைக்கவும், உலகத் தமிழனின் ஆற்றலை முடமாக்கவும் எங்கள் பிராந்திய வல்லரசு சிங்கள ஏகாதிபத்தியத்துடன் இணைந்து வித்தை காட்டிவிட்டது. இதையும் ஒரு சுனாமியாக உலகத் தமிழினம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் விசேடமாக இந்திய இலங்கையின் கூற்றுப்படி நாலாம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இந்த வல்லரசுகள் செய்த, செய்து கொண்டிருக்கும் திருவிளையாடல்களை மறைக்க இப்போதும் பிரபாகரனின் கதை என்னும் படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்திற்கு நல்ல படம் காட்டிய அநேகர…
-
- 0 replies
- 1.7k views
-
-
கோபுரம் கட்டி முடிக்கையில்....... அத்திவாரம் - ஆட்டம் கண்டதோ? மெல்ல முழைத்த உன் பாத விரல்கள்... பூமியில் அழுந்துமுன் - பொசுங்கி போயிற்றோ? ஏதுடா சமாதானம்? என்னையும் -உன்னையும் எரித்தபின் ஏதும் வந்தால் அது - சமாதானமா? அதன் பெயர் சமாதி! நான்கு வருடங்களாச்சு ....... கண்டதென்ன?...... செம்பருத்திக்கும் ....... தெருவினோர .......கழிவு நீருக்கும்...... வேறுபாடு............... பிரித்து பார்க்க முடியாமல் பேதலித்து கிடக்கிறாய்......! உன் பிறப்பின் அடையாளம் மெல்ல மெல்ல ....... அதன் ஆயுள் முடிக்கிறதே ..... அறிந்தாயா- நீ? கண்மணிக்குள் இரத்தம் பாயாதுதான்......... இல்லையென்று இல்லை....... உன் இதயத்தில் கூட அதன் இயக்கம் …
-
- 9 replies
- 1.7k views
-