கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அந்த ஒற்றை மரம் பரந்துவிரிந்த கிளைகளுடன் விருட்சமாயிற்று பலருக்கு பலவாறு பிரயோசனப் பட்டது கூடுகட்டிக் குருவிகள் வசித்தது மரம் முழுக்க மந்திகள் இருந்தது மரங்கொத்தி பறவையும் மறைப்பில் குருவிச்சை கூட குசியாய் இருந்தது எமக்கோ இளைப்பாற நிழல் கொடுத்தது உண்ணக் கனி கொடுத்தது உறங்கப் பாய் கொடுத்தது ஏன் பலசமயம் தன்னையே விறகாய் எரித்தது ஆனால் சிலசமயம் கொப்புமுறிந்து கொலை செய்யவும் துணிந்தது கல்லடி பட்ட மரத்துக்கு தானே காயத்தின் வலிதெரியும் சின்ன மரங்களுக்கெல்லாம் கோவம் இந்த மரத்தை மட்டும் எத்தனை பேர் வழிபடுகிறார்கள் என்று எட்டி நின்று வெட்டிப் பார்த்தன காயம் வந்தது ஆனால் அது களைப்படையவில்லை தனிய முடியாதெனக் கூட்டிச் சேர்ந்த சின்ன மரங்களுக்கு…
-
- 22 replies
- 4.6k views
-
-
ஒற்றை வார்த்தை வேலை முடித்து மாலை வேளையில் சாலை நெரிசலில் சிக்கித் தவித்து விரையும் வண்டியில் வீடு விரைந்து இருட்டும் பொழுதிலே கட்டியணைத்து நெஞ்சில் புதைத்து முத்தம் கொடுத்து ஆரத் தழுவி உச்சி மோர்ந்து உள்ளம் குளிர என் செல்லக் குழந்தை சொல்லி அழைக்கும் "அம்மா" என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனை களைப்பும் அமுங்கிப் போகும்
-
- 0 replies
- 591 views
-
-
ஒற்றைச் சொல்லு வலி(NO VISA) 1990 ஆனையிறவுசமர் தரையிறக்கம் இடப்பெயர்வு அகதிமுகாம் இடப்பெயர்வு முகாம் பசி பட்டினி இழப்பு வலி இடப்பெயர்வு...(3) முகாம் செல்லடி பொம்பர் கெலி நேவிக்காரன் படுகொலை இடப்பெயர்வு முகாம் 1995 யாழ்இடப்பெயர்வு கிளாலி படுகொலை வன்னி முகாம் போராட்டம் இடப்பெயர்வு இடப்பெயர்வு இடப்பெயர்வு......(6) முல்லைத்தீவு ஆனையிறவு வெற்றிகள் சமாதானம் ஏ9 ஓமந்தை கொழும்பு சுனாமி அவலம் சாவு இடப்பெயர்வு மகிந்த சண்டை சண்டை படுகொலை கொத்து குண்டு படுகொலை போராட்டம் சண்டை முள்ளிவாய்க்கால் பாதுகாப்புவலயம் படுகொலை இடப்பெயர்வு வவுனியா முகாம் சித்திரவதை சிறை ஏழாம் மாடி அடி உதை காசு லஞ்சம் புத்தளம்…
-
- 2 replies
- 1k views
-
-
காலக்கரைபற்றி நீள நடக்க முயல்கிறேன் உன்னையும் என்னையும் அறிந்த ஒற்றைத்திங்கள் மட்டும் உடன் வருகிறது. வெட்கமற்று என்னைத் தழுவிய உப்புக் காற்றை உள்ளம் தேடுகிறது. உனக்குமெனக்குமான மோனப் பொழுதுகளில் முகையவிழ்த்த முல்லைகளின் சிரிப்பொலி சில சமயங்களில் இரைச்சலாகவும், சில சமயங்களில் இன்னிசையாகவும்....... காலநதிக்கரையில் பதித்த தடங்கள் இன்னும் சிதையாமல்.... காத தூரம் கடந்தும், கருகியும் பாதைவெளிகள் பிரிந்தும் ..... தொடர்ந்தும்,...... ஒற்றைத்திங்கள் மட்டுமே உடன்வருகிறது சாட்சி சொல்ல.
-
- 11 replies
- 2.3k views
- 1 follower
-
-
"அப்பா கவனமா போய் வாங்கோ " பிள்ளை எல்லாம் எடுத்து வைச்சியே ? "ஓமப்பா " ஈச்சம் பத்தை தாண்டி சைக்கிள் உருண்டது. வடலியின் நடுவே நாப்பது மரம். தடம் காலில் போட்டேன் அவள் சலங்கையும் மெட்டியும் கேட்டிருந்தாள். விறு விறுவென்று ஏறினேன். பெண்பூ தேடிஅறுத்தேன். அவள் தாலிக்கு வீட்டில் தவம் இருந்தாள். பாளையில் சத்தகத்தால் சீவினேன் அவள் இப்போ தலை சீவிக் கொண்டிருப்பாள். வயிற்றில் சுண்ணாம்பு பூசியிருந்த புது முட்டியை பத்திரமாக கட்டினேன். பழைய முட்டியில் பனையின் கண்ணீர் நிரம்பி இருந்தது. அவளும் வீட்டில் அழுது கொண்டிருப்பாள். இடுப்பில் தொங்கிய முட்டியில் ஒவ்வொன்றாய் சேகரித்து இறங்கினேன். தவறணையில் கொடுத்து காசு வாங்கி திரும்புகையில். கள்ளுக்குடித்த கூட…
-
- 2 replies
- 718 views
-
-
வணக்கப்பாடலும் மாவீரர் வணக்கமும் எம் தலைவரின் சிந்தனையும் திருவள்ளுவர் ஆண்டும் மாதமும் திகதியும் நேரமும் கூடவே பண்பலை வானலையில் .. என்ன வேலை இருப்பினும் வானொலி அருகிருக்கும் மறவர் வீரம் பாடி அரசியல் அலசும் தாமரை தட்டாகம் பின்னர் ஒரு குறு நாடகம் ஒலிவடிவில் .. உண்மை வந்திடும் என்னும் பயத்தில் தேடி வந்து தாக்குவார் சிங்களம் கோபுரத்தில் சேதம் வரும் ஆனாலும் கொள்கையில் சிறிதும் வராது ... செய்திகள் இனிதே வரும் வெற்றிகள் சொல்லி எப்படி முடியும் என்பார் அதிர்ச்சியில் பலர் கோபுரம் சாய்ந்ததால் என்ன பற்றி எரிந்தால் என்ன பனையிலும் பாலை மரத்திலும் அண்டனா இருக்கும் .. தவபாலன் குரல் வருமா இனி எமக்கு புதுவையின் கவி வருமா வீரரை போற்றி அண்ணனின் உரைவருமா மாவீர…
-
- 10 replies
- 790 views
-
-
இருளாய்க் கிடந்த எம்வானில் இளம் பௌர்ணமியாய் நீ வந்தாய் முகில்மூடிக் கிடந்த எம்வானில் முழுச் சூரியனாய் நீ வந்தாய் இலையுதிர்ந்து கிடந்த எம்தோப்பில் இனிய வசந்தமாய் நீ வந்தாய் பாழாய்க் கிடந்த எம்தோப்பில் பருவ மழையாக நீ வந்தாய் தவமாய்க் கிடந்த எம்வாழ்வில் தெய்வ வரமாக நீ வந்தாய் வழிதேடிக் கிடந்த எம்வாழ்வில் ஒளி விளக்காக நீ வந்தாய் http://gkanthan.wordpress.com/index/other/villakku/
-
- 5 replies
- 1.3k views
-
-
ஒளிதந்த அந்தப்பேரிரவு (பாகம்1) எப்படியோ இருபத்தாறுவருடங்கள் ஓடிமறைந்து விட்டன.இந்த இருபத்தாறுவருடங் களில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்..தோல்விகள்...பெருவெ ற்றிகள்.. திருப்பங்கள்..அழிவுகள்...!ஆனாலும் அன்றைய்பொழுதின் அதிர்வுகள் இன்னமும் நெஞ்சின்ஓரங்களில்...!எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றம் இன்று எல்லோர்மனங்களினுள்ளும் பிசைந்தாலும் அந்த 23யூலை 1983 ன் நாளில் எதிரிக்கு ராணுவரீதியாக சொன்ன பெரும்செய்தியும் அதைவிட அரசியல்ரீதியாக எம் தாயகமக்களை எழுச்சிபெற செய்ததும் என்றும் நெஞ்சிருத்தி நினைலுகொள்ளத்தக்கது.பார்ப்ப
-
- 0 replies
- 684 views
-
-
உன்னுடைய முத்தங்கள் என் முகத்தில் கறுப்பாக உன் ஒளியில் நானும் என் நிழலில் நீயும் என் மூச்சுக்காற்று-உனை அணைக்கத்தூண்டியது கண்களின் காமத்துக்கு நீயும் ஒளியானாய்-அன்று என் ஆற்றல்களுக்கு தீணி போட்டாய் குப்பிவிளக்கே நன்றியடி.....
-
- 7 replies
- 1.5k views
-
-
எங்கோ ஒளிந்திருக்கிறாய் உனது தேவை என்ன சூடான ஒரு கண்ணீர்த்துளியா ? மரங்களின் மௌனத்தால் பறவைகள் அழுகின்றன யாருக்கு யார் மெல்லியதாக பரவுகிறது ஒரு கேவல் ஒலி என்ன நிகழ்ந்திருக்கும்.. ஒரு பகிரமுடியாத மரணம் ஒரு விபத்து காமம் தீராத ஒரு கலவி குறைந்த பட்சம் இன்னொரு காதல் தோல்வி.. மெல்ல காற்று குளிர்கிறது வானம் அழக் காத்திருகிறது நனையக் காத்திருக்கிறேன் மழையில் கண்ணீரில்
-
- 3 replies
- 795 views
-
-
ஒளித்து வைக்கப்பட்ட நாடு என் கிராமத்தின் பெயரை திரித்தனர் மிக மிக எளிதாக என் தேசத்தின் பெயரை ஒளிக்க முடியுமென நினைத்தனர் என் நாட்டின் அடையாளமோ பாறைகளைப் போல உறுதியானது எனது பெயரின் இறுதி எழுத்தை மாற்றி என்னை அவர்களாக்க முடியுமென நினைத்தனர் சூழச்சிகளால் மறைக்க முடியாத என் நெடு வரலாறோ நதிகளைப் போல நீண்டது எனது அடையாளங்களில் எனது குருதியையே பூசி என் பொருட்களை அழிக்க முடியுமென நினைத்தனர் தந்திரங்களை கடந்து பிரகாசிக்கும் எனது உறுதியான அடையாளங்களோ தீயைப் போலப் பிரகாசமானது கண்ணுக்குப் புலப்படாமலெனை மிக மிக எளிதாக அழிக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஒளியின் நர்த்தனம்! மின்னொளியே! என்னரும் ஒளியே! உள்ளத்துக் கினிய ஒளியே! விழிகள் முத்தமிடும் ஒளியே! உலகை மூழ்க்கிடும் ஒளியே! என் கண்மணியே! நர்த்தனம் ஆடும் ஒளிக்கதிர்கள், வாழ்வின் வாலிபக் காலத்தில்! மோதி மீட்டும் ஒளிச் சிதறல், காதல் வீணையின் நாண்களை! மின்னலிடி திறக்கும் விண்ணை! மீறிக் கொண்டு ஏறி அடிக்கும் காற்று! என் கண்மணியே! வானத்தின் மின்னல் வெடிச்சிரிப்பு ஞாலத்துக்கும் அப்பால் தாவிச் செல்லும்! தமது பாய்மரத்தை விரித்துப் பட்டுப் பூச்சிகள் படகாய் மிதந்தேகும் ஒளிக் கடல் மீது! அல்லி மலர்களும், மல்லிகைப் பூக்களும் ஒளியலைகளின் சிகரத்தில்…
-
- 0 replies
- 736 views
-
-
[size=5]ஆண்டு மூன்றுகள் ஓடி மறைந்தது அத்தனை அவலம் நடந்து முடிந்தது எத்தனை அழிவுகள் எம்மினம் கண்டது இன்னும் தான் எனக்கு [/size][size=5]மறக்கவில்லை பண்பட்டு நாங்கள் பயணித்தோம் பார் புகழ நாம் பார்த்திருந்தோம் பச்சை வயல்களாய் எம் வாழ்வு பரந்திருந்ததாய்க் கனவு கண்டோம் பெண்ணின் சுதந்திரப் பெருமை கண்டோம் போரில் அவர்தம் வீரம் கண்டோம் எண்ணிலடங்கா எக்களிப்பில் எதிரி அறியாதிருந்துவிட்டோம் வண்ணக் கோலம் நாம் போட்டு வட்டத்துள்ளே நாம் நின்றதனால் எதிரி போட்ட கோலத்தை எட்டிப் பார்க்க மறந்துவிட்டோம் மானம் தானே பெரிதென மாண்டுவிடும் மாண்புமிக்க மானர்குலத் தமிழர் நாம் மாளாதின்னும் இருக்கின்றோம் எங்கள் நிலத்தை எடுப்பவனை எங்கள் பெண்…
-
- 9 replies
- 823 views
-
-
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் பறவைகளோடு எல்லை கடப்பேன் பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும் எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன் ஒவ்வொரு புல்லையும்... நீளும் கைகளில் தோழமை தொடரும் நீளாத கையிலும் நெஞ்சம் படரும் எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய் உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் ஒவ்வொரு புல்லையும்... கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும் போதியின் நிழலும் சிலுவையும் பிறையும் பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்! ஒவ்வொரு புல்லையும்... எந்த மூலையில் விசும்பல் என்றாலும் என் செவிகளிலே எதிரொலி கேட்கும் கூண்டில் மோதும் சிறகுகளோடு எனது சிறகிலும் குருதியின் கோடு! ஒவ்வொரு புல்லையு…
-
- 6 replies
- 7k views
-
-
a ஓ ! பிரபாகரனே ! கதிர்க் கையனே ! நீ எங்கே இருக்கிறாய் ? ````````````````````````````````` ஓ ! பிரபாகரனே ! கதிர்க் கையனே! தமிழீழத்தின் அடிமையிருள் ... போக்க வந்த வீரத்திருச்சுடரே! தமிழினத்தின் தன்மான ஒளிவிளக்கே! இந்திய நாய்களின் வேட்டை மானே! நீஎங்கே இருக்கிறாய்? உன்னைச் சுட்டுக் கொல்லப் போவதாய் உன் ஆர்த்த அரியணை மேனிக்குக் குறி வைத்திருப்பதாய்ச் சொல்லிச் சொல்லி எள்ளி நகையாடுகிறார்களே, இராசீவின் வஞ்சக வேடர்கள்! தஞ்சம் கோராத தமிழனே! அஞ்சாமையின் தொகுப்பே! நீ,எங்கே இருக்கிறாய்? கனிவுக்குக் கைகொடுத்து, கல்போன்ற நின்தோளை நீவீ,-உன் கழுத்துக்குக் கத்திவைக்கும் எத்தர்கள், உன்னைச் சுட்டுப் பொசுக்கக் குறிவைத்துத் திரிகிரார்களாமே! மறம் மாண்ட தோற்றமே! அறம் மா…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 4 replies
- 982 views
-
-
-
- 11 replies
- 1.8k views
-
-
ஓ... கனடா ..உங்களை வரவேற்கின்றது -------------------------------------- மார்கழிப் பனிமழையில் மனங்களை இணைத்து வைக்கும் கனடிய நட்பு வட்டம் கன இதயத்தை நெகிழ வைக்கும் சொல்வதைச் செய்து வைக்கும் சாகராவின் சாகசங்கள் மனிதத்தை தேடியலயும் மனிதனின் நேசங்கள் புயலைப் போல புகுந்து சுழட்டும் ஆதியின் வா(ய்)ல் வீச்சுகள் முயலைப்ப்போலப்பதுங்கி புயலைப் போல புரட்டியெடுக்கும் முரளியின் வாய்வீச்சுக்கள் புயலைப்போல எழுந்து மலரைப்போல தழுவும் இரசிகையின் வரவேற்பு கைப்பிடித்த மணிவாசகனின் வரவில் நிகழும் லயிப்பு பாடவென்றே அடம் பிடிக்கும் நிழலின் நிஜம் இன்னும் என்னை கதற வைக்கும் உறவுகள் காத்திருக்க வைத்து கவிதை கொண்டு வரும் எல்லாள மஹாராஜா(அ…
-
- 4 replies
- 2k views
-
-
போதி மரப் புத்தனே..! உன் ஞானம் எங்கே..?? பார்த்தாயா உன் புத்திரரை...??? சிங்கம் வழி வந்த வம்சம்... அசிங்கம் செய்யும் மிருகங்களா? ஐந்தறிவு மிருகங்களுக்குக் கூட கொஞ்சமேனும் இரக்கம் இருக்குமே..! உனைத் துதிக்கும் இனத்திடம் எதுவும் இல்லையே புத்தா...!!! நீ போதித்த பெளத்த தர்மம் இதுதானோ? 'பூமி நோகாமல் நட' என்றாயே..! எறும்புகள் மிதிபடும் என்றுதானே...!! எங்கள் அரும்புகளையெல்லாம் கொத்துக் கொத்தாய்ச் சிதைத்தார்களே...!!! அப்போது... எங்கே போனாய் புத்தா? 'தமிழனைக் கொன்று வா...! வென்று வா...!' என்று நீதான்... வாழ்த்தி வழியனுப்பி வைத்தாயோ..? உன் புத்திரரின் பாதகங்களை பார்த்து ரசித்தாயோ...? தமிழச்சிகளை சீரழிக்க நீ சிரித்து மகிழ்ந்தாயோ...?? எத்தனை இசைப்பிரியாக்களில…
-
- 10 replies
- 1.4k views
-
-
Jan 21 2005, 05:53 AM ஓஓ என் பழையவளே வருடங்கள் எத்தனை போனபின்பும் உன்நினைவுகளில் நான் என்நினைவுகளை நீ எத்தனையாவது பக்கத்தில் பதிந்து வைத்திருக்கறாய் உன்பெயரை மறக்க நான்உண்ட தூக்கமாத்திரை கூட தோத்து போனதே நீ மாறியிருக்கிறாய் கண்ணருகே கருவளையம் கருங்கூந்தல் நிறம்மாறி ஆனால் உதடுகள்மட்டும் அதேசிரிப்பு இப்போதும் நாம் பேச போவதில்லையா?? பேசமுடிந்தபோது பிரிந்தவர்கள் பேச முடியாத போது சந்திக்கிறோம் உன்நினைவுகள் உன்குழந்தையைபோல உறங்கியிருக்கலாம் ஆனாலும் ஒரேயொரு கேள்விதான் நீயும் என்னை காதலித்தாயா?? பழைய பதிவினை தேடிஎடுத்துத் தந்த மேகனிற்கு நன்றிகள்;
-
- 6 replies
- 1.7k views
-
-
ஓஓ..... என் பழையவளே வருடங்கள் எத்தனை போனபின்பும் உன்நினைவுகளில் நான் என்நினைவுகளை நீ எத்தனையாவது பக்கத்தில் பதிந்து வைத்திருக்கறாய் உன்பெயரை மறக்க நான்உண்ட தூக்கமாத்திரை கூட தோத்து போனதே நீ மாறியிருக்கிறாய் கண்ணருகே கருவளையம் கருங்கூந்தல் நிறம்மாறி ஆனால் உதடுகள்மட்டும் அதேசிரிப்பு இப்போதும் நாம் பேச போவதில்லையா?? பேசமுடிந்தபோது பிரிந்தவர்கள் பேச முடியாத போது சந்திக்கிறோம் உன்நினைவுகள் உன்குழந்தையைபோல உறங்கியிருக்கலாம் ஆனாலும் ஒரேயொரு கேள்விதான் நீயும் என்னை காதலித்தாயா?? இது மீள் பிரசுரம் என்னுடைய பழைய வலைப்பக்கத்தை நோண்டிபொழுது அகப்பட்டது
-
- 14 replies
- 1.1k views
-
-
தினம் நினைக்கப்பட திணிக்கப்பட்ட தினமல்ல, மனிதம் பேசும் மரபுக்காயெழுந்த மகத்தான தினமிது ! மூர்க்கம் கொண்ட முதலாளி வர்க்கம் கலைக்கும் வகையறியாது , பார்க்குமிடமெல்லாம் வதைபட்டு வேர்த்தவொருவனின் வேதனை சிதைத்த தினமிது !! புரட்சியின் பரிணாமமாய் எழுந்தான் எங்கெல்ஸ், பொங்கிவெடித்தான் மார்க்ஸ்_அரசியலில் அழைத்துவந்தான் லெனின் . தோழர்கள் தோள்மேல் பயணப்பட்ட எழுச்சி விதைத்துவைத்தது தொழில்புரட்சி. ஓங்கியோலிக்கட்டும் இங்குமினி புரட்சியின் குரல் , அடக்குமொரு அரசினை _மனிதம் மறுக்குமதன் அரசியலிருப்பினை, பாசிச தலைவர்களை _இன அழிப்பின் இயங்குபொறிகளை இனங்காட்டி ஓங்கியோலிக்கட்டும் . உழைக்குமொருவனின் உரிமைகள் இழக்கப்படாதிரு…
-
- 4 replies
- 978 views
-
-
ஓடிடுவீர்..... மூவொரு நாளத முடிந்ததுவே மூடர்கள் பகுப்பு முடியலயே இதுபோலும் இதுபோலும் இவரறிவு....? இவரா உரைத்தனர் பகுத்தறிவு....?? இடியப்ப சிக்கலை கலைவாரோ இன்றதை இவரத குலைப்பாரோ...?? மதியுகியத மதியியுரையோ இவரது சிந்தையின் மதியிதுவோ...??? சேற்றில் விழுந்த வெண்ணாடை சேறாகி வராமல் என் செய்யும்...? காழ்புணர்வு தாங்கிய நெஞ்சில் கடுப்பது பொங்காமல் என் செய்யும்... எடு புத்தி மீதினில் இவர் சென்றால் எங்கனும் தானே போய் முடிவார்.... நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டமே- நானிலம் உம்மை உமிழட்டுமே அதுவரை நீரும் ஆடிடவீர் அட்டம் கலைந்ததம் ஓடிடுவீர்....! எழுத்து பிழைகளை திருத்தி படிக்கவும்...
-
- 9 replies
- 1.5k views
-
-
ஓடிப் போ.... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.... இல்லண்ணை வாயை நீ மூடு.... செய்யல உனக்கது நான் கேடு.... இப்ப இங்கது நீ மோடு... படிக்கனும் நிறைய நீ ஏடு.... முதலில படிக்க அங்கோடு.... விழுந்தது உனக்கது உயர் ஓட்டு.... செய்தாய் அதற்கது வீண் கேடு... அண்டுகள் ஆண்டுகள் இது கேடு.... செய்த தமிழன் அவன் கேடு.... ஆரியன் தினித்தது அது கேடு... அதை எதிர்காத திரவிடன் அவன் மோடு... வார்த்தையால் போடாத நீ சூடு.... உனக்கது பின்னாடி பெருங்கேடு.... இது காறும் உரைத்தது நீ போதும்... இத்துடன் நிறுத்தி நீ ஓடு.... நன்றி - வன்னி மைந்தன் - …
-
- 2 replies
- 1k views
-
-
அந்தி சாயும் அந்த வேளை.. அருவி கீதம் இசைக்க அணில்கள் குத்தாட்டம் போட அண்டங் காக்கைகள் ஆர்ப்பரிக்க அழகிய தோப்பதில் அன்புடன் நான்..! ஆதவனின் மறைவோடு ஆதாம் ஏவாள் நினைவோடு - நிலவை ஆரத்தழுவும் ஆதங்கத்துடன் ஆகி நின்றது செக்கச் சிவந்து வானம்..! இலைகளின் நடுவே இளகிய இதழ் விரித்து இனிமையாய் தேன் சொரிந்து இளமையின் இறுதி நேர உச்சம் கண்டு.. இன்புற்றுக் கொண்டிருந்தன பூக்கள்..! ஈக்களின் கூட்டம் ஈரம் கண்டு மொய்க்க ஈகமே கொள்கை என்று ஈடுகொடுத்து நின்றது காளான்..! உற்றுப் பார்க்கிறேன்... உறவுகள் யாரும் இல்லை உதவிகள் எதுவுமில்லை.. உணவின்றி ஒட்டிய வயிறு உயிரின் இறுதி முனகல்.. உணர்வுகள் மட்டும் எஞ்சிய நிலையில்.... உயிர்ப்புக…
-
- 24 replies
- 2.6k views
-