கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
பாரிஸ் நகரத் தெருக்கள் எல்லாம் இலைகளுதிர்த்தி ஏங்கும் தனித்த மரங்களைப்போல் ஏதோ ஒன்றிற்காய் வெளித்துக்கிடந்தது ஆங்காங்கே கூடும் சனங்கள் அரசல் புரசலாக அரசியல் பேசினர் அதற்கு பின்னால் உள்ள காரணங்களை மறைக்க மூச்சு விடாமல் ஊடகங்கள் உண்மை எனும் பெயரில் ஒப்பாரி கீதங்கள் இசைத்து மரணத்துக்கு பின்னான கற்பித்தலில் தீவிரவாதமாகச் சித்தரிக்கப் பட்டு அனுதாபத்தில் இனவாதம் மதவாதம் விதைத்தது நாடுபூராவும் துக்கநாள் பிரகடனப்படுத்தப்பட்டு வல்லரசுகளின் தலைவரின் வருகை மனிதாபிமானம் எனும் தொனியில் அவர்களால் மூடிய காலனி நாடுகளின் புதைகுழியில் பூக்கள் சொரிந்தது இதற்கிடையில் தாவீதின் கைகள் மாறிய காசையும் அவர்கள் வரைந்த கோட்டையும் உலகிற்கு க…
-
- 4 replies
- 848 views
-
-
காற்று வெளியிடையே கணங்கள் கனதியாய் நகர்கின்றன காணும் காட்சிகளும் விரைவாய் கடந்து தான் போகின்றன கிழக்கில் காணும் கதிரவன்போல் கீழிருந்து மேலேறும் நினைவுகளில் கிரந்தங்களாய் இடையிடை தோன்றும் கிரகிக்க முடியாத கிடப்பில் போட்ட கீறல் கொண்ட நினைவுகள் குறுக்கும் நெடுக்குமான காலங்களின் கனவுக் கோடுகளில் என்றும் கணக்கிடவே முடியாததான கனமான நினைவுகளின் வரிகள் கண்ணிறைத்துக் கனதியாய்க் காலக் கோடுகளை வரைகின்றன கோலமிழந்த நினைவுகளும் குதூகலிக்கும் கனவுக்களுமாய் காலமிழந்த கணக்கற்ற நாட்களின் கண்டுபிடிக்கவே முடியாத காட்சிக் குவியல்களின் நடுவே கண்மூடிக் கர்வமற்றுக் கிடக்கிறேன்
-
- 6 replies
- 1.1k views
-
-
அதிகாலையில் துயில் எழுந்து … தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் … தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை … கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு … தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே காட்டும் விவசாய பாரதி -நீ யாருக்கு வரும் இந்த தைரியம் ….? கொட்டும் மழையில் உடல்விறைக்க… உழைப்பாய் – வாட்டும் வெயிலில் … குருதியே வியர்வையாய் வெளிவர …. உழைப்பாய் – நட்டுநடு ராத்திரியில் … காவல் செய்யவும் புறப்படுவாய் .. யாருக்கு வரும் இந்த தைரியம் ….? பட்ட விவசாய கடனை அடைக்க பட்டையாய் உடல் கருகி …. விற்று வந்த வருவாயை .. கடனுக்கே கொடுத்துவிட்டு … அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!! அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு யாருக்கு வரும் இந்த தைரியம் ….? உச்ச அறுவடை பொழ…
-
- 6 replies
- 1.1k views
-
-
புல தமிழா!!!! உன் இருப்புக்கு ,இயங்கிகளுக்கும் உனக்கு தேவை சிங்க கொடி துடுபாட்டமும் சிவஜியின் நாயகன் ரஜனியும் சின்ன திரை மெகாசீரியலும் சிங்க கொடி பகிஷ்கரிக்க கோரின் சீ-விளையாட்டு வேறு அரசியல் வேறு என சிந்தாந்தம் பேசுகிறாய் சிவாஜி பகிஷ்கரிக்க கோரின் சினிமா வேறு அரசியல் வேறு என சீற்றம் கொள்கிறாய்....... சின்ன திரை வேண்டாம் எனின் சீரியல் இல்லை எனின் சீவியம் என்கிறாய் முடியவில்லை உன்னால் உறவுகளின் இருப்புக்கும் இயங்கிகளுக்கும் உன் பொழுதுபோக்கை இழக்க தயார் இல்லை.................
-
- 16 replies
- 2.3k views
-
-
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். இறைவனுக்கு என்னோடு வா! இறைவா! என்னோடு வா! அழைக்கின்றேன் - உன்னை துதிக்கின்றேன் உன்னை அருள் தரும் வாழ்வு - இனி புதுசுகம் தரும் வாழ்வு மனிதத்தை விதைத்து நேசத்தை வளர்ப்போம்!! மாயத்தைக் களைந்து உண்மையை உடுப்போம்!!! போர்களை ஒழிப்போம்! புதுமைகள் செய்வோம்! பாவங்களை மன்னிப்போம்! பகைவர்களை நேசிப்போம்!! பயந்துவிடாதே! மரங்கள் இல்லை இங்கே - உனக்கு சிலுவைகள் செய்ய!
-
- 2 replies
- 1.2k views
-
-
என் வானமும் என் தரையும் கந்தக நெடிகளாகி ......... வாழ்வின் அர்தத்தையே அகலப்படுத்தின . தூரத்தே நாளை என்னும் நம்பிக்கைப் பொட்டுகள் கண்சிமிட்டும் நட்சத்திரமாய் கண்ணாம் மூஞ்சி காட்டும் எனக்கு . எட்டுப்பட்டிச் சுற்றமும் ஏறுதளநாருமாய் இருந்த " நாங்கள் " இன்று " நானாகி " போனதில் , இறுக்கமான வலி இறுகியே பாயும் என் மனதில் . இன்பமும் துன்பமும் காலதேவன் வகுத்த சுற்றில் என்கால் நாளையை நம்பி உரமாகவே நடைபயிலும் .
-
- 9 replies
- 817 views
-
-
எங்கள் சாம்பல் மேட்டில். காட்டுமிராண்டித்தனமாகவும் நயவஞ்சகமாகவும் எம் முன்னோர்கள் தோற்கடிக்கப்பட்ட எங்கள் மண்ணில், கனவான்களாகவும் கடவுளர்களாகவும் எங்களில் தம்மைத் திணித்தபடி இன்னும் எங்கள்மேல் தம் வன்மங்களைக் கொட்டித் தீர்க்கப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். மீட்பர்கள் என்று தம்மை அழைத்தபடி தமக்குத் தாமே பட்டங்கள் சூட்டிப் பாணங்கள் ஏவி எம்மைச் சூழ்ந்து கொண்டனர். தம்பக்கம் சார்ந்தால் அரியாசனம் இல்லையேல் அரக்கர் நாமம் காலங் கடந்தும் இதுவே தொடர்கதையாய் நீண்டு கொண்டிருந்தது. மறைந்திருந்து பாணங்கள் ஏவுவதில் வல்ல ராமர்கள் மீண்டும் நாவாய்கள் ஓட்டிப் புதர்களைக் கடந்து கரையைத் தொட்டனர். அம்புகள் வீழ்ந்து மீண்ட…
-
- 3 replies
- 960 views
-
-
தமிழனாய் பிறந்ததனால் தவிக்கின்றோம் பாரினிலிலே தடைநீக்கித் தழிழனுக்கு தரணியிலே – ஒரு தனியரசு வேண்டும். கழிகின்ற ஒரு கணமும் அழிகின்றான் ஒரு தமிழன் இருக்கின்ற இனம் வாழ எமக்கு ஒரு அரசு வேண்டும் பிறக்கின்ற குழந்தைக்கு பெயர் சூட்டத் தந்தை இல்லை பெற்றெடுத்த தாயும் பிணமாகக் கிடக்கின்றாள் பிரசவ வலிதீர்க்க மருத்துவம் எமக்கில்லை துடிக்கின்ற குழந்தைக்கு துயர்; துடைக்கும் ஆச்சிரமம் ஆகாயத் தாக்குதலில் அழிவுற்றுக் கிடக்கிறது நலிவுற்ற எம் மக்கள் நல்வாழ்வுதனைக் காண நல்லரசு ஒன்று நமக்கு வேண்டும். பரம்பரை பரம்பரையாய் பண்டுதொட்டு வாழ்ந்த மண்ணை பாதகச் சிங்களவன் பறித்து எம்மை அகதியாக்கி புதைக்கின்றான் புத்தர் சிலை பூர்வீ…
-
- 0 replies
- 720 views
-
-
மேய்ந்து கொண்டு இருந்த மாடுகள் திடீர் என தலையை நிமிர்த்தி மேல பார்த்து தங்களுக்குள் பேசிவிட்டு கிழக்கே நடக்க தொடங்கின வேகமாக மிக மிக வேகமாக கருமேகம் வடக்கு திசையில் சுழன்று மேலுருளும் காட்சி அமாவாசை இருளை நினைவு படுத்த மாடுகள் வரிசையாய் நடந்தவண்ணம் இருந்தது பட்டியை திறந்து விட்டு பரமர் வானத்தை பார்த்தபடி மிக் 27 தாழபறக்க அவரவர் பக்கத்தில் இருக்கும் மரங்களுக்குள் பாதுகாப்பை தேட அண்ணாந்து பார்த்து சைக்கிள் ஓடி வேலியுடன் மோதியவனும் கிடங்கில் விழுந்தவனும் தங்களுக்குள் சிரித்து விட்டு தம்பாட்டில் அலுவல்களை தொடர ஒலியின் ஓசைகேட்டு என்ன என இனம் கண்டு மக்கள் வீடு போவதும் மாடு மழைவருவது முதலே தெரிந்து பட்டி திரும்புவதும் வன்னியின் அன்றாட வாழ்க்கை ஆகிப்போனது மக்களுக…
-
- 2 replies
- 628 views
-
-
o ------------------------------------------------------------------ நாட்கள் சலித்துப்போன நாட்காட்டியில் குறித்து வைத்த திகதிகள் ஊட்டிய நிறத்தை இழந்துகொண்டிருக்கின்றன. வீடு திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மா மீளவும் ஒரு திகதியை அறிவித்திருக்கிறாள். யரோ ஒருவருடைய வீட்டில் அவிந்துகொண்டிருக்கிறது எங்களுக்கான உணவு. வெளியேறி வருவதற்கான அம்மாவின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட முதல் நாள் மாலை அரிசியும் காய்கறிகளும் வாங்கி வைத்திருந்தேன். புழுதி படிந்து காலம் முடிந்த பேருந்துகள் வந்துகொண்டிருக்கும் வழியால் நகர மறுக்கிற பேரூந்தில் அம்மா வருகிறாள். இன்னும் வளராமல் இருக்கிற தலைமுடியை இழுத்துக்கட்டியபடி தங்கை…
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்று மீண்டும் அகதி முகாமில் கருணாகரன் அலைக்கழிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட அந்தக் காலை நேரத்தில் கொண்டுவந்து இறக்கப்பட்டோம் இலக்கங்களாக எதுவும் தெரியாது அடுத்துவரும் கணங்கள் எப்படியென நீண்டவரிசை வழங்கப்பட்ட இலக்கங்கள் அவரவரக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் அவரவர் அவரவர்க்கருகில் நகராப் பொழுதுகளோடு பிணைக்கப்பட்ட படுக்கை படுக்கையைச் சுற்றி முள்வலைகள் முப்பத்தி ஆறாவது தடவையும் இன்னொரு ஒப்பனை புதிய இடத்தில் பழைய அகதி அகதிகளின் நிழலைக் கண்காணிக்கும் முள்ளரண்கள் பழைய அகதிக்கு புதிய இலக்கங்கள் பழைய இலக்கங்களுக்கும் புதிய இலக்கங்களுக்குமிடையில் முடிவுறாத குழப்பங்களுடன் தூங்கும் கண்களில் துடித்துக்கொண்டிருக்கு…
-
- 0 replies
- 713 views
-
-
ஊரோடு என் உடல் கரையும்! உன்னோடு நானிருந்து உறங்காமல் விழித்திருந்து கண்ணால் தழுவுவதும், - உன் கவின் பூத்த புன்னகையில் நான் காணாமல் போவதுவும், என்னிரு கை விரித்து உன்னை நான் அணைப்பதுவும், உரிமையோடு ஆண்டு நீயென்னை அடக்குவதும் எப்போது நிகழுமென்று என் நெஞ்சம் ஏங்குதிங்கு! உள்ளங் காலடியில் உன்மேனி உரசும் சுகம் என் காயச் சிலிர்ப்பினிலே கவி எழுதத் தூண்டிலிடும். கள்ளமின்றிக் கொள்ளை கொண்ட கனித்தமிழ் காவிரியே! தள்ளாடும் இதயமடி தவிப்பணைக்க ஏது வழி? உன்னடியில் தளமிட்டு உலக உலா செல்வதற்கு கண்ணடியில் கனவு சேர்த்துக் காத்திருக்கேன் கண்ணாட்டி வேளை வரும் என்று நீயும் வெகுநாளாய் இயம்புகிறாய் காலம் வரும் என்று நானும் காதல் கள்ள…
-
- 16 replies
- 2.7k views
-
-
உன் கற்பனை -----------;;;;;? அறிவான புூவே ...நீ அன்புபடைத்த குணமே உனக்கு உன் பேச்சி; ஓர் இiசையே பல சோகங்கள் மனசில் கொண்டு வெளியில் நல்ல மனிதன் போல் நடமாட? உன் மனசி;ல் குடி கொண்டிருக்கும் ஓர் இளம் காற்று--? அந்த காற்றை தேடித் தேடி பாக்கிறாய் காணவில்;லை ? கனவில் வரும் கற்பனைகள் வளர--- கண்களில் நீர்கசிய கல்லான இதையத்தை கனிய வைத்து காற்ரேயே நினைத்த படி கலங்கி நிக்கின்றாய் நீ------? காற்றின் இசையை கேட்டு அழவில்லாத கற்பனைகளை வளர்த்து தல்லாடும்உன் நெஞ்சம் ஏமாத்துவாளா என்று ஓர் பயம் அவளின் இசைகளைஉன் மனதில் அளவில்லாமல் வளர்த்துக்கொண்டாய் --நீ அந்த காற்றின் இசைகளைக் கேட்டு வீனான கற்பனைகளைவளர்த்த நீ அவளை மறக்கவும் முடிய…
-
- 15 replies
- 2.4k views
-
-
அழகான கவிதை வாழ்க்கை ----------------------- மூங்கில் நுனிப் பனியை புகழ்கின்றோம் மூக்கின் நுனிப்பனியைத் துடைக்கின்றோம் இரண்டிலும் பனி பார்வையில் பிணி பச்சை மரக்காட்டிடையும் மரங் கொத்தி தேடுவதென்னவோ பட்ட மரம் நீர் மேல் நிலவு நிமிடத்தில் உடையும் நிமிடத்தில் சேரும் நிலவுக்குக் கவலையில்லை வடி கட்டிப் போகும் அமுதத்தைப் பாரார் வடியில் மிஞ்சும் மிச்சத்தைப் பார்ப்பார் காலையும் மாலையும் அழித்து அழித்துப் போடுகின்றது அழகழகான சித்திரம் வானமும் பகலிலும் இரவிலும் பொட்டு வைத்துப் பார்க்கின்றது பச்சைச் சேலையில் பள பளக்கும் நீர்க்கரை கட்டி பூமியும் அழகுதான் இயற்கை சிரிக்கின்றது மனிதன் அழுகின்றான…
-
- 7 replies
- 2.3k views
-
-
என் இனமே! சாகாவரத்தோடு உயிர்போகும் ரணவலியையும் இலவசமாய்ப் பெற்ற இனம் எம் தமிழினம்! அதனால்தானோ என்னவோ, இன்னும் குற்றுயிராய்த் துடிக்கின்றது! கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய மூத்தகுடியாம் தமிழினம் என்பார்கள்! இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை -இன்னும் தலைகுனிந்தே நிற்கிறது அகதியாய்...வாடகை நிலத்தில் ! கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன், பண்டாரவன்னியனுக்கு ஒரு காக்கைவன்னியன், கரிகாலனுக்கு ஒரு கருணா என தலைமுறையாய் தவறாது தொடரும் தமிழினத்தின் சாபக்கேடுகள்!!! காசுக்குக் காட்டிக்கொடுக்க ஒரு கூட்டம்! காரியத்துடன் காய்நகர்த்த இன்னொரு கூட்டம்!! கேவலமாய் இருக்கின்றது "தமிழன்" என்று சொல்ல!!! வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்ற…
-
- 0 replies
- 621 views
-
-
-
-
வர்ணங்கள் காட்டுகின்றாய் இருக்கும் இடம் கொண்டு படைத்தவன் பெருமையது பாரினில் அது மிகச்சிறப்பு உயிர் காக்கதந்த வரம் உத்தமனார் கொடுத்த நிறம் பகுத்தறிவு கொண்ட மானிடா....................... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்றாய் சந்தர்ப்பம் கண்டு-நீயும் மாறுகின்றாய் பச்சோந்தி மனிதனாக...... நியாயமா?
-
- 9 replies
- 4.4k views
-
-
களத்தில் போராட்டம் கையிலே ஆயுதங்கள் புலத்தில் போராட்டம் கையில் உயிருடன் – பெயர்ந்த புலத்தில் போராட்டம் எதில் என்று தேடுகிறேன் எது எது என்று வரைந்து விட்டுப் பார்க்கிறேன் மாமனிதன் ஜெயக்குமார் உருதான் வரைந்துள்ளேன். மாமனிதர் பலர் கண்டோம் - மறைந்தபின் மாமலையாய் எழுந்ததைக் கண்டோம் மறையாது இருப்பதைக் கண்டோம் - எம் உயிரோடு கலந்ததைக் கண்டோம் அரசியலைத் தொழிலாகக் கொண்டவர் பலர் தலைவருக்கு வாழுமிடம் சமைத்தவர் சிலர் சட்ட நுணுக்கங்கள் கொடுத்தவர் சிலர் அம்மாமனிதர் பலருள்ளே தனித்தவர் இவர் ஊரைவிட்டு வேரோடு வந்தவரெல்லாம் ஊதியம் தரும் உழைப்புடனே மகிழ்ந்திடுவர் மண்ணிண் மணத்தின் சுகத்தில் மிதப்போரோ செய்தியைத் தேடி வெறு…
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 30 replies
- 4.3k views
-
-
இனியவளே .... உன்னை நினைக்காவிட்டால் ... இதயம் இருந்து பயனில்லை ... உன்னை பார்க்கா விட்டால் ... கண் இருந்தும் பயனில்லை .... நீ என்னவள் என்று தான் ... அனைத்தையும் இழந்து ... வருகிறேன் .....!!! + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 01
-
- 2 replies
- 742 views
-
-
ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்! கடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... எண்ணற்ற சினிமாக்களால் உன் புத்தி ரேகை மழுங்கியது........ லாட்டரிச் சீட்டுகளைச் சுரண்டியதாலேயே உன் உழைப்பு ரேகை உருக்குலைந்தது........ தங்கைகளின் திருமண ஏற்பாட்டில் அலைந்து திரிந்ததில் உன் திருமண ரேகையும் தொலைந்து போனது..... முதுமை ரேகை மட்டுமே முறியாமல் உள்ளது....... கொஞ்ச நாட்கள் கழிந்தால் உன் குறையெல்லாம் போய் விடும் போ! -கவிஞர் கலைவேந்தன்
-
- 3 replies
- 2.4k views
-
-
பாவலனா நீ..?...சீ....துா... தோளிலே துண்டிட்டு தோழனாகி நீ வந்தால் கட்சி தலைவனா நீ- உன்னில் காறி உமிழாரா..? குப்பைகளை கூட்டி உன்- இதய கூடையிலே போட்டு விட்டு நாற்றம் அடிக்குதென்றால்-உன்னில் நாறாமல் என் செய்யும்..? பட்டாடை கட்டி வந்த பா வரியை உதறிவிட்டு கவிதை இதுவென்று கருநெஞ்சே நீயுரைத்தால்- உன்னை கல்லால் அடிக்காரா காறி உமிழாரா..? சிலித்தெழுந்த வரிகளிற்கு சிரச் சேதம் செய்பவனே உன்னையா கவிஞனென்று-நீ உலகேறி பறையடிதாய்...?? நல்ல நாடகம் தான் நல்லாய் அரங்கேற்று கண்முன்னே நீ வந்தால்-உன்னை கல்லால் நானடிப்பேன்....! குறிப்பு..- ஒரு பத்திரிகைக்கு எழுதிய கவிதையை-அங்குள்ளவர் அதன் பொருளை வரிகளை சிதைத…
-
- 6 replies
- 2.3k views
-
-
காதல் முதல் காதல் வரை.......... கவிதை பஞ்சு மிட்டாய் வாங்கி பகிர்ந்து அதை உண்டோம்... பட்டாசு கொளுத்தி பயந்து ஓடினோம்...... பம்பரம் விட்டும் பார்த்து ரசித்தோம்..... பக்கத்துவீட்டு மாங்காயும் பிடுங்கினோம்.... நாவற்பழம் தின்று நம் உதடுகள் சிவக்கும்... ஒருவரை ஒருவர் பாசத்துடன் அணைப்போம்.... எமக்கு உள்ளத்து உணர்ச்சிகள் ஒன்றும் தோன்றவில்லை..... சில வருடங்கள் செல்ல எம்மில் சில மாற்றங்கள்.... நீயோ இன்று பருவம் அடைந்து பழிங்குச் சிலையாய் நானோ இன்று பாய்ந்திடும் காளையாய்.... உன் இளமை மாற்றம் என் மனதைக் கவர்ந்திட... என் உடல் தோற்றமோ உன் மனதினை மயக்கிட... அன்று சிறுவயதில் சிரித்திடும் …
-
- 11 replies
- 2k views
-
-
சிறு பொறி - தீபச்செல்வன் மதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில் திரும்ப முடியாமற் போகலாம் என எண்ணுபவனின் கால் தடம் மரணம் சைக்கிளின் பின்கறியலில் ஏறியமர்ந்த தெருக்களில் உள் உறிஞ்சிய பெருமூச்சு நெஞ்சறைகளுக்குள் எழுதியெழுதி தனை அழித்த நாட்களில் நிராகரிக்கப்பட்டவனின் முனகல் தன் தாய் மண்ணில் இறங்கி விளையாட அடம்பிடிக்கும் குழந்தை போலோரு கவிஞனின் குரல் அதிகாரத்தை எதிர்த்தமையால் கொலைப்பட்டியலில் இடப்பட்டவனின் இரகசிய முகம் மூ…
-
- 0 replies
- 890 views
-