கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
முற்றும் துறந்த முனிவர் முற்றும் துறந்த முனிவர் அவர் - வேதம் கற்றுணர்ந்த காரணத்தால் மானைப் போன்ற துணையை விட்டு கானைத் தேடிப் புறப்பட்டார் - திரு மாலைத் தேடித் தவமியற்ற விலங்கினம் வாழும் ஒரு காடு - அங்கு அமைத்தார் தான் வாழ ஒரு வீடு ஏந்தினார் கையில் கமண்டலத்தை மறந்தார் ஊன் முதல் உறக்கத்தை - புந்தியில் வைத்தர் ஐயன் நாமத்தை மறுநாள் காலை விடியும்வேளை புறப்பட்டார் அருவியை நோக்கி சந்தியாவந்தனம் செய்வதற்கு - அங்கு கண்டார் ஓர் இளங் குருவியை ஆடை நெகிழக் குளிப்பதை விடுவாரா! முற்றும் துறந்த மாமுனிவர் விரகம் அவரைத் தலையெடுக்க அடையத் துடித்தார் அந்தப் பெண்மலரை நெருங்கினார் அவளைத் தாகத்துடன் காமம் கண்களில் கொப்பளிக்க விலகினா…
-
- 5 replies
- 7.1k views
-
-
நான் இரசித்த கவிதை -காதல் நட்பு
-
- 0 replies
- 7.1k views
-
-
நான் உனக்கு அன்பான மனைவிதான் உன் சுதந்திரத்தில் நான் தலையிடாமல் இருக்கும் வரை; நான் உனக்கு அன்பான மனைவிதான் உனக்கு மட்டுமே நான் வேலைக்காரியாக இருக்கும் வரை; நான் உனக்கு அன்பான மனைவிதான் உன் குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை நான் உனக்கு அன்பான மனைவிதான் நம் குழந்தையை நானே வளர்க்கும் வரை நான் உனக்கு அன்பான மனைவிதான் என் விருப்பங்களை உன் மேல் திணிக்காத வரை நான் உனக்கு அன்பான மனைவிதான் உனக்காகவே வாழும் வரை!
-
- 23 replies
- 7k views
-
-
மனதை வருடும் ஹைக்கூ....... காலடிப்பதிவை கவிதையாக்கிச் செல்லும் கொலுசுச் சிணுங்கல்... என்னருகில் அமர்ந்திருப்பவர் எழுந்திருக்கிறவராய்த் தெரியவில்லை கர்ப்பிணிப்பெண் நிற்கிறாள்...... - எல்.இளங்கோ. நிமிர்ந்து நின்றது புல் வளைத்துக் காட்டியது ஒரேஒரு மழைத்துளி -ப.ஆனந்தன் குப்பை பொறுக்கும் சிறுமியின் கையில் ஃபிளாப்பி டிஸ்க். அப்பாவுக்கு அறுபதனாயிரம் மனைவிகள் இருந்தும் சந்தேகம் இல்லை. ராமனுக்கு ஒரு மனைவி ஆயிரம் சந்தேகங்கள். -கபிலன் (வைரமுத்துவின் மகன்) பறவை சிறகை மீறின ஆகாயத்தை அளந்து ஓய்ந்து அலகை மீறின வனத்தை உண்ண அமர்ந்தது. -எம்.யுவன் எந்தப் ப…
-
- 4 replies
- 7k views
-
-
ஒரு உண்மையான காதலின் வலிகள் - வரிகளாய்........!!! ஒரு "கவிதை"யின் கண்ணீரில் வரித்த வரிகள் இவை! எழுத்தும் பகிர்தலும் ஆறுதல் அளிக்கும் என்ற நம்பிக்கையில்..............! பெருந்தெருவில் விழுந்த பச்சைப் புழுவாக நான்! காய்ந்து வரண்ட எனக்குள், என் பச்சை இதயம்... படபடத்து பரிதவிக்கும் பரிதாபம்! என்னை நான் ஒருமுறை நினைத்துப் பார்க்கின்றேன்...! இன்னும் உயிரோடு இருப்பதே எனக்கு ஆச்சரியந்தான்!!! நான் புரளும் மண்ணின் வெட்பம் என் மெல்லிய மேனியைச் சுட்டு அவிக்கின்றது! அவிந்து போகையிலும்... உன் நினைவுகளில் பசுமையாய் ஈரமாகின்றேன்...! உப்புக் கரிக்கும் கண் வழி நீரில்...!!! கரைந்து போகும் உன் காதல் கரைகளில்... பெருகிவரும் கடலாய் என் காதல் ! உன் …
-
- 36 replies
- 7k views
-
-
உனக்காக காத்திருப்பேன்.... முதற் சந்திப்பில் என் மனதைக் கவர்ந்தாயடி ஒவ்வரு நாளும் உன் பேச்சால் -என்னை சாகடித்தாயடி ஒரு நாள் என் கூட பேசாமல் - என் மரண வலியை எனக்கு உணர்த்தினாய் பெண்ணே...... தெண்றல் காற்றாய் என் மனதுக்குள் நுழைந்து விட்டாய்... நீ என் மேல் காட்டும் அன்பும் ஆதரவும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆனால் நானோ உன்னை விட பலமடங்கு உன்னை நேசிக்கின்றேன். அது உனக்கும் தெரியும் ஆனால் நீயோ என்னை விட பல மடங்கு இன்னொருவணை நேசிக்கின்றாய் அதுவும் எனக்கு தெரியும்..... அன்பே... அன்பே உன் சந்தோசம் தான் என் சந்தோசம் உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்... உன் சந்தோசத்துக்காக அவனிடம் உன்னை விட்டுக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஆனாலும் உன்…
-
- 6 replies
- 7k views
-
-
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் பறவைகளோடு எல்லை கடப்பேன் பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும் எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன் ஒவ்வொரு புல்லையும்... நீளும் கைகளில் தோழமை தொடரும் நீளாத கையிலும் நெஞ்சம் படரும் எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய் உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் ஒவ்வொரு புல்லையும்... கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும் போதியின் நிழலும் சிலுவையும் பிறையும் பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்! ஒவ்வொரு புல்லையும்... எந்த மூலையில் விசும்பல் என்றாலும் என் செவிகளிலே எதிரொலி கேட்கும் கூண்டில் மோதும் சிறகுகளோடு எனது சிறகிலும் குருதியின் கோடு! ஒவ்வொரு புல்லையு…
-
- 6 replies
- 7k views
-
-
நண்பனுக்கு திருமண வாழ்த்து மடல் -------- என் .... உயிர் நண்பனுக்கு இன்று .... திருமணநாள் .....! வாழ்க்கையின் அனுபவத்தை ..... அணுஅணுவாய் பங்கேற்ற .... என் இனிய நண்பனுக்கு ..... இன்று திருமண நாள் .....!!! நான் வாழ்த்தாமல் அவனை ..... யார்வாழ்த்தினாலும் அவன் .... திருப்தியடைய மாட்டான் ..... அவனை வாழ்த்தும் உரிமையும் .... கடமையும் எனக்கே உண்டு .....!!! சாத்திரங்கள் படி வாழ்வதை .... காட்டிலும் சாதித்து காட்டும் .... மனிதனாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ..... பஞ்சாங்கப்படி வாழ்வதை காட்டிலும் .... பஞ்ச அங்கங்களோடு வாழ்நாள் .... முழுவதும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .....!!! உறவுகளை அரவணைத்து வாழ்ந்து ..... உற்றாரை உள்ளத்தால் நேசித்து ..…
-
- 0 replies
- 6.9k views
-
-
நான் காத்திருந்தது எத்தனை காலம் - இப்போ வாய்த்திருப்பதே நல்ல காலம். உடைமையை காக்க உரியவன் இல்லை - எந்த தடைகளும் இல்லை காரியம் தடுக்க மதில் சுவர் தாண்டி மறுபுறம் குதித்தேன் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்தேன். முற்றம் நடுவே பெற்ற பிள்ளை சற்று தள்ளி எந்தன் கொள்ளை. பெரிய விழியும் கரிய முழியும் தடித்த உதட்டை தடவும் நாக்கும் பருத்த மார்பும் கொழுத்த பின்புறம் கிறங்கி போனது எனது உள்மனம் கதறிய சேயை கட்டி போட்டு பதறிய தாயை பற்றி கொண்டு கொள்ளை பக்கம் கொண்டு சென்றேன் வெள்ளை பெண்ணை கொள்ளை கொள்ள அழகி அவளை நெருங்கிய வேளை புதியவன் என்னை புதிராய் பார்த்தாள் மிரட்சி காட்டி மறுத்து பார்த்தாள் - உடல் திரட்சி காட்டி மிரட்டி பார்த்தாள். …
-
- 11 replies
- 6.9k views
-
-
ஆராரோ பாடிய தாய்க்கு நிகர் ஆனவரே தாய் இறந்தால் தகப்பன் சித்தப்பன் என்ற நிலையை மாற்றியவரே தாய்க்கு பதிலாக பாச மழையில் எம்மை நனைத்தவரே உமது வாழ்வின் இனிமையை எமக்காக துறந்தவரே கண்டிப்புடன் பாசத்தையையும் ஊட்டியது நீங்கள் தானே நாம் தப்பு செய்த போதிலும் உங்களைத் தண்டித்து நம்மைத் திருத்தினீர்களே அளவுக்கதிகமாக செல்லமும் தந்தீர்கள் அலட்டல்களை தவிர்க்க அடியும் தந்தீர்கள் அன்போடு பழகு என்று குட்டும் போட்டீர்கள் அறிவு பசியை நமக்கு உணர செய்தீர்கள் தத்தி தத்தி நடக்கையில் கைப்பிடித்து விட்டவரே வாழ்க்கை பயணத்தில் தடுமாறுகின்றோம் கரம் பிடித்து விடுவதற்கு வருவீர்களா கனவுகளில் என்றாலும் நிஐ வாழக்கையில் நிழல் போலாகி விட்டது உமது உருவம் ஆயிரம் கனவுக…
-
- 43 replies
- 6.8k views
-
-
[size=3]பெயரற்ற யாத்ரீகன் நூலிலுள்ள சுவாரசியமான, சில ஜென் கவிதைகள்[/size] [size=3]1[/size] இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் வசிக்க எண்ணியிருந்தேன். இருந்தும், இதோ என்னிடம் வருகிறது மரணம், வெறும் எண்பத்தைந்து வயதே நிரம்பிய குழந்தையிடம். [size=3]0[/size] [size=4]ஹனபுஸா இக்கீய் ஆண். ஜப்பான். ? – 1843[/size] [size=3]2[/size] எதிலும் நம்பிக்கையின்றி சும்மா அமர்ந்திருக்கிறேன், என் சுவாசத்தைக் கவனித்தவாறு. முப்பது வருடங்களுக்கு பிறகும் அது வெளியில் போகவும் உள்ளே வரவுமாக இருக்கிறது [size=3]0[/size] [size=4]ஆல்பர்ட் கோல்ஹோ ஆண். ஆமெரிக்கா. 20 ஆம் நூற்றாண்டு[/size] [size=3]3[/size] எதிலும் முனைப்பின்றிச் சோ…
-
- 0 replies
- 6.8k views
-
-
காலைக் கதிரவனின் கனலற்ற கதிர்கள் குளித்தென்னை மகிழென்று கூவி அழைக்கின்றன இதமான சூடற்ற காலை வெயில் எந்திர மனதுக்குப் புத்துணர்ச்சி தருகிறது இரவின் குளிர்மையில் குளித்த மரங்கள் பசுமையும் அழகு கூட்ட பார்க்கும் இடமெங்கும் பரவசம் தருகின்றன குலை தள்ளிக் குனிந்து நிற்கும் வாழை கூம்பான இதழ் கழற்றிக் கொள்ளைச் சிரிப்புடனே நிலம் பார்க்க நிற்கிறது வாசனைப் பூக்களெல்லாம் வாடியவை காற்றில் கழித்து வசதியாய்ப் பார்த்தபடி வகைக்கொன்றாய் இருக்கின்றன வேர்விட்ட நீரல்லி கதிரவனின் வரவில் கண்மலர்ந்து மடல்கள் விரித்தே கதிரவன் கண்பார்க்க காதலுடன் நிற்கின்றாள் கடமை என் காட்சிகள் கலைக்க கவிந்த மனம் கட்டறுத்து வீழ கண்மூடிக் காட்சிகளைக் கைது செய்தபடி காலத்தின் கணக்கில் கரைந்த…
-
- 6 replies
- 6.8k views
-
-
உன் எண்ணம் உன் வாழ்க்கை! எண்ணங்கள் வானை நோக்கி! எழுத்துக்கள் உயர்வை நோக்கி! கண்ணிமைக்கும் காலம் கூட எடுத்துவை இலக்கை நோக்கி! நாளை என்று நாளைத் தள்ளி வைக்காதே உயர்வைத் தள்ளி! இன்று" ஒன்றே உண்மை தம்பி உயர்வாய் நீ உன்னை நம்பி! தடுமாற்றம் வந்து உன்னை தடம் மாறச்செய்யக் கூடும்! கொள்கையில் உறுதிகொண்டால் தடையது திரும்பி ஓடும்! கண்களில் தெளிவு கொண்டு எண்ணத்தில் வலிமை கொண்டு! உழைப்பினில் மகிழ்வு கொண்டு! வென்றிடு வாழ்க்கை நன்று! நன்றி.
-
- 10 replies
- 6.8k views
-
-
நீயும்..! நானும்...! நிலாவொளியில் நீல கடலின் நீள் கரையில் நினைவுகள் மறந்து நீயும் நானும் பாலை வனத்தில் பற்றியெரியும் வெய்யிலில் வெற்றுக் கால்களுடன் நீயும் நானும் மாலை நேரத்து மஞ்சள் வானத்து மறையும் சூரிய அழகில் நீயும் நானும் எரிமலை வாசலில் எகிறி பாயும் எரிகுழம்பில் எமை மறந்து நீயும் நானும் வாச மலர் தோட்டத்தின் வண்ண மலர்களிடையே பாச பிணைப்பில் நீயும் நானும் இருபகை நாடுகளின் இடைவிடா யுத்தத்தின் இடை நடுவே நீயும் நானும் இந்த உலகத்தின் அத்தனை முரண்களிலும் இரு முரண்களான நீயும் நானும் ஒருவரையொருவர் பார்த்தபடியே காத்திருப்போம் ஒன்று சேர..!
-
- 56 replies
- 6.8k views
-
-
பாரதியார் காதல் கவிதைகள் சொல்லும் ரசனை காதல் செய்வீர் காதல் செய்வீர் காதல் செய்வீர் 😀
-
- 14 replies
- 6.8k views
-
-
-
- 27 replies
- 6.8k views
-
-
ஒன்பதாவது அகவையில் யாழ் இணையம்! சிறப்பு நிகழ்வு! ***யாழ் கள கவிஞர்கள் வழங்கும் கவியரங்கு 02*** தலைப்பு: யாழ் கீதம்! - யாழ் இணையத்திற்கான ஒரு கீதம்! கவியரங்கின் நடுவர்கள் பண்டிதர் தமிழ்தங்கை குறிப்பு1: யாழ் கள கவியரங்கில் எவரும் எத்தனை முறையும் பங்குபற்றமுடியும். ஆனால், மற்றைய யாழ் கள உறவுகளை தாக்காத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கவிதைகளை பாடவும்! குறிப்பு2: கவியரங்கின் நடுவர்களிற்கு கவியரங்கில் இருந்து ஏதாவது பொருத்தமற்ற கவிதைகளை அல்லது கருத்துக்களை அகற்றுவதற்கு அல்லது செல்லுபடியற்றதாக்குவதற்கு முழு உரிமையும் உண்டு! குறிப்பு3: கவியரங்கம் நிறைவு: மார்ச் 30, 2007 மாண்புமிகு யாழ் கள கவிஞர் பெருமக்கள் கவியரங்கை ஆரம்பித்து வழி…
-
- 36 replies
- 6.7k views
-
-
அதிசய குழந்தை அவன் ... ஆசான் நான் ... என்னைவிட அவனே முன்னுக்கு " அ " நான் "ஆ " இந்த குழந்தை இப்படியெல்லாம் .... பேசுமா....? சிந்திக்குமா ...? நம்ப முடியவில்லை என்போர் ... இந்த கவிதையை மூடிவிட்டு போகலாம் ....!!! இந்த குழந்தை என்னதான் சொல்லப்போகிறது என்பதை ... பார்க்க விரும்புவோர் .... பொறுமையோடு காத்திருந்து .... தொடராக வரும் வசனக்கவிதையை .... பாருங்கள் .....!!! அதிசயக்குழந்தை .... எப்படி இருப்பான் ...? ஆசான் நேரான சிந்தனையில் ... பேசினால் அவன் எதிர் சிந்தனையில் பேசுவான் . ஆசான் எதிர் சிந்தனையில் பேசினால் அவன் நேர் நித்தனையில் ... பேசுவான் - ஆனால் அர்த்தம் இருக்கும் ....!!! ஆன்மீகம் பேசுவான் அரசியில் பேசுவா…
-
- 53 replies
- 6.7k views
-
-
பட்டாம் பூச்சியின் அழகை ..... ரசித்தேன்......!!! பூத்து குலுங்கும் ... பூவை ரசித்தேன் .... ஆயிரம் கனவுகளை .... இரவில் ரசித்தேன் ..... !!! என்னவளே .... உன்னை ரசிக்கவில்லை சுவாசிக்கிறேன் .... உன்னை நினைப்பதில்லை ... துடிப்பாக வைத்திருக்கிறேன் .....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை 01 மன்னித்துவிடு .... உன் அனுமதி இல்லாமல் .... உன்னை என் இதயத்தில் .... குடியமர்த்தி விட்டேன் .....!!! எனக்கு உன் அனுமதி .... கேட்டெல்லாம் உன்னோடு .... பேச முடியாது -நான் ... நினைக்கும் போதெல்லாம் .... உன்னோடு பேசவேண்டும் என்பதால் இதயத்துக்குள் .... உன்னோடு வாழ்கிறேன் .....!!! & கவிப…
-
- 29 replies
- 6.6k views
-
-
ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ???????? என்இனமும் என்மண்ணும் சிறக்க களமாடிய தவக்கொழுந்துகளுக்கு வடை றோலின் பெயரில் வணக்க விழாவாவாம் கூதல் குடிகொண்ட புலம்பெயர் மண்ணில் புலன் பெயர்ந்தவர்களால் புலம்பெயர்க்கப்பட்ட அந்நியம் தொட்டு அருவருப்படைந்த கார்த்திகைப்பூக்கள் தலைநிமிர்ந்து சிரிக்கவில்லை உங்களை வணங்குகின்றோம் என்றபெயரில் களியாட்டா விழா கொதிக்க கொதிக்க கொத்துறொட்டியும் மொறுமொறுப்பாய் றோல்சும் கல்லா கட்டும் உணவ(ன்வணக்)க விழாவில் இவைகளைப் பாராது ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ?? என்மண்ணில் உயிருடன் உலாவும் கார்த்திகைப்பூ பெற்ற பெயர் வேசி......... அவள் வாழ்வும் அவள் பிள்ளைகளும் நடுறோட்டில் .......... சிங்களத்தின் கொட்ட…
-
- 99 replies
- 6.6k views
-
-
நேற்றுத்தான் மொட்டானேன்.. ஆயிரம் கனவுகள் தாங்கி விடிகாலை சூரியத் தழுவலில்.. பூவானேன்..! பனிக் குளியலில் மலர்ந்த என் தளிருடல்.. கூவி வரும் சிங்களத்தான் வீசும் செல்லுக்குக் கருகிய ஈழத்தமிழ் பிஞ்சாய்.. பெப். 14 நாளில் கசங்கிக் கருகிப்போகும். மனித விதி சமைத்த வேளை வரும் பரிசுப் பொருளாக பறித்துப் பரிமாற பாடையேறும் என் உடல்..! சோடி சோடியாய் அலையும் மனிதப் பதர்களின் கரங்கள் கசக்க.. கால்களில் மிதிபடும்..! மனசெல்லாம் கள்ளம் வைத்து நடக்கும் காதல்.. குத்தாட்டம் என் இறுதி யாத்திரையில்…! அது தான் வலண்டைன்ஸ் டே என் சாவுக்கு குறித்த நாள்..!! எங்கோ ஒரு மூலையில…
-
- 40 replies
- 6.6k views
-
-
வடக்கால உள்ள காணியை அடகுக்கு விட்டு ஊர் சாகட்டும் நீ பத்திரமா.. வடக்கை விட்டு ஓடு என்று ஆத்தா விரட்டி அடிக்க.. ஓடி வந்து.. சிங்களக் குகையினில் சிங்கிள் றூமில.. பதுங்கிக் கிடந்து.. எனக்கு முதலாவே செல்லடிக்க முதலே 83 யூலையோட.. வசதியா தாம் வாழ என்று இருந்த இரண்டு மாடி வீட்டை வித்துப் போட்டு.. மேற்கால ஓடி வந்த குடும்பத்தில வந்த ஒருத்தனை செற்றப் பண்ணி.. நானும் மங்கை என்று வந்து செற்றிலாகி இப்ப நாலு குழந்தை பெத்து அதுகளும் குழந்தை பெறும் நிலைக்கு வந்திட்டுதுகள்..! ஒரு நாள் தற்செயலா.. கண்ணாடி முன்னாடி நிதானமா நிற்க.. தலைமுடி ஓரமா டை பூசாமல் விட்டதால தெரிஞ்ச அந்த நரைக்கும் வெள்ளை முடிகள்... ஊரில.. வெத்தில…
-
- 48 replies
- 6.6k views
-
-
ஒரு சொல் கவிதைகள்நீ நான் காதல் @ தீ சுடும் சொல் @ வா போ பிரிவு @ இருந்தாய் சென்றாய் வலி @ நினைவு கனவு தோல்வி ஒரு சொல் கவிதைகள் 02காதல் புரிதல் வாழ்க்கை @ சந்தோசம் சந்தேகம் பிரிவு @ தெரியாது பழகும் நட்பு @ ரசித்தேன் திகைத்தேன் என்னவள் @ சாகாது சறுக்காது உண்மைக்காதல் ஒரு வரி கவிதை 03 சிரித்தாள் சிதறியது இதயம் @ வலிக்கிறது எழுதுகிறேன் கவிதை @ கண்டேன் தொடர்ந்தேன் இணைந்தேன் @ பிரிந்தாள் இணைந்தாள் துடிக்கிறேன் @ நாணயம் இருபக்கம் காதல்
-
- 4 replies
- 6.6k views
-
-
காற்றே நலமா? என்னை தாங்கி நின்ற தாய் நிலமே நலமா? கடலே நலமா? அலையே நலமா? கரை தூங்கும்-கட்டுமரமே நீ- சுகமா? மரத்தடி பிள்ளையாரே நலமா? எங்கள் மனங்களில் வாழும் மறவர் குலமே நீங்களும் நலமா? ஒற்றை பனை மரமே - நலமா? உயிர்வாழ பால் தந்த பசுவே நீயும் நலமா? பள்ளிக் கூடமே நீ நலமா? பாடம் சொல்லி தந்த - குருவே நீங்களூம் நலமா? முரட்டு வீதியே நீ நலமா? அதில் முக்கி முக்கி போகும் மாட்டுவண்டிலே நீ நலமா? தோழர்களே நீங்க நலமா? தோழியரே நீரும் சுகமா? முச்சை கயிறு அறுந்து போக ஓடி போன நான் விட்ட பட்டமே நீ நலமா? எங்கு நீ இருந்தாலும் என்னையும் கேளேன் "நீ நலமா?" வயல் வெளியே நலமா? வரம்புகளே நீங்கள் சுகமா? ஆழக்கிணறே நீ ந…
-
- 41 replies
- 6.6k views
-
-
இரவுகளை ஆட்கொள்ளும் இருளை, நிலவும் நட்சத்திரங்களும் எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் கூட இதமானவைதான்! வெண்மதியை மறைக்கும் மேகங்கள் அங்கேயே நிலைப்பதில்லை! விலகிச்செல்லும் மேகங்கள் போல, கடந்துபோகும் நேரங்கள் நகர்கிறது... விடியலை நோக்கி! வாழத் துடிக்கும் மனசு.... தாழப்பறக்கும் வண்ணத்துப் பூச்சிபோல, சிறக்கடிக்கத் தொடங்கும்! காணத்துடித்த விடியலின் ஒளியில் பூத்த மலர்களில் உட்கார்ந்து... மரகத மணிகளை உருட்டி விளையாடும்! குயில்களின் கானங்கேட்டு துயின்ற கதிரவன் துயிலெழுவான்! மனவறையில் ஒட்டிய பனித்துளித் துயரங்கள் அனைத்தும் கதிரவன் கதிரிலே காணாமற் போகும்! மெல்லப் பரவும் ஒளியில் பிரசவமாகும் விடியலில் பரவசமாகும் பூலோகம்! வலியவன் மனதிலே இருளோடு கரைய..…
-
- 4 replies
- 6.6k views
-