கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
எழிதிட எழிதிட ஆசை வர்னங்கள் நிறைந்த எண்னங்களை எழித்தில் வடித்திட ஆசை பொய்கள் நிறைந்த கவிதைகளை எழிதிட ஆசை உன் அழகை முத்தமிழில் வடித்திட ஆசை உன் புன்முறுவலை முத்தமிலில் எழிதிட ஆசை உன் மீதுள்ள காமத்தை கன்னியத்துடன் கதை கதையாய் எழுதிட ஆசை வழமை போல் எழிதிய கிறுக்கலை கிழித்திட நினைத்தேன் என்றாலும் இந்த ஒரு தடவை என் கிறுக்கலுக்காய் நிந்தை அடைந்திட துணிந்தேன்
-
- 6 replies
- 914 views
-
-
நாங்கள் தூக்கத்தில் விழித்து கொண்டு இருப்பவர்கள் நாங்கள் வாழ்வோடு செத்துகொண்டிருப்பவர்கள் நாங்கள் கந்தககாற்றில் கருகி போனவர்கள் நாங்கள் மருத்துவத்துக்காய் மயங்கி விழ்தவர்கள் நாங்கள் ஈழதாகம் கொண்டு தண்ணீர்தாகம் உற்றவர்கள் நாங்கள் ஈழம் எனும் கனவு கண்டவர்கள் நாங்கள் முள்ளிவாய்க்காலில் முடங்கி முட்கம்பி முடிச்சுக்குள் நாங்கள் எங்கள் மண்ணில் அகதியானவர்கள் நாங்கள் நாங்கள் வேறு யாருமல்ல நாங்கள் ஈழத்தமிழர்கள்
-
- 6 replies
- 1.2k views
-
-
எங்கே என் பிள்ளையென ஏங்கும் ஒரு தாயின் உள்ளம் எங்கே என் அண்ணா என விம்மும் ஒரு தங்கையின் மனசு எங்கே என் அக்கா என சத்தமாய்க்கேட்கிறான் ஒரு தம்பி இதையெல்லாம் பார்த்தும் ..... உள்ளுக்குள் மட்டுமே அழுகிறான் ஒரு தந்தை கந்தக சூட்டினில் சந்தண மேனிகள் கருகின குண்டுமழை நடுவினில் குருதியாற்றின் கரையினில் விதைக்கப்பட்டன காந்தள் விதைகள் கண்ணீரும் செந்நீரும் ஊற்றி தியாகங்கங்களையும் வெற்றிகளையும் உரமாக்கி நிமிர்ந்து வளர்ந்தன கார்த்திகைக்கொடிகள் வெட்டிப்போட்டாலும் புடுங்கி எறிந்தாலும் கார்த்திகை மாதமானால் மண்ணை விலக்கி மீண்டும் மீண்டும் வளர்ந்து பூப்பூக்கும் மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் சயணைட் குப்பிகள் துருஏறிப்போனாலும் கார்த்திகை கிழங்குகளாய் மீண்டும் மீண்டும் மண்கிழித…
-
- 6 replies
- 959 views
-
-
நிலவின் நிர்வானத்தால் கடல் தினவு கொள்ளும் இரவுகளில் உன்னிரு இதழ்களிலும் வழிகிறது சுயத்தை தின்றுவிடும் சூட்சுமம்.. நம் அன்பு தொலைந்துபோன எட்டாவது வர்ணம் மழைப்பொழுதில் விழுந்து தொலைக்கும் மின்னலின் கனம் புல்நுனிகளில் திரளும் நீர் யாருமறியாமல் எங்கிருந்தோ எழுகிறது மறைகிறது உனக்குள் தொலைந்து போதலும்.. அபத்தப் பொழுதொன்றில் இளக்காரம் சுமந்து நெளியும் உதடுகளில் நேசத்தைக் கொட்டிவிட முனைந்து தோற்றுவிடுதலுடன் நீள்கிறது நமக்கிடையிலான களவொழுக்கம்.. வியர்வை நாற்றம் அறிய பயணித்து இடைவெளிகளில் பலியாகிக் போகின்றன ஓசையிழந்த முத்தங்களும் தீண்டல் தவிப்புகளும் துப்பிவிட்ட நேசங்களும்.. எட்டாவது வர்ணம் கொள்ளுதல் முரண் முரண்களால்தான் வாழ்வு வீடுபெறடைகிறது நம் அன்ப…
-
- 6 replies
- 813 views
-
-
முன்னழகு முந்திவர பின்னழகு அசைந்து வர என்னருகே வந்தவளே காதல் கனிமொழி தந்தவளே எங்கையடி சென்றாய் நீ என்னை விட்டு? அசைந்துவரும் உன் இடையதிலே கட்டிவிட்டேன் என் மனமதையே மாயமாய் சென்று மறைந்தனையே நீ மங்கை தானா மறுமொழி கூறடியே தங்கம் என மின்னும் உடலோடு சொர்க்கம் எனச் சொக்கும் மன்மதக் கணையோடு அன்னம் என எழிலுறும் நடையோடு மொத்தம் இதுவென நித்தம் பருகிட கருவண்டு நானென ரோஜா நீயென - என் அர்ப்பணம் இதுவென தந்தனை நின் உடலினை பசியாற பணி செய்யும் பாவை நீயென மகிழ்ந்தனன் நான்... இதழதில் இதழ் வைத்து இன்பரசம் அருந்துகையில் மனமதில் கள்ளம் வைத்து நடித்தனையே நீயும் பாவி கொடும்பாவி என்னாவி துடி துடிக்க வைத்த மாபாவி என்னவாகி நான் போனேன்... …
-
- 6 replies
- 1.8k views
-
-
தேடுகிறோம் இப்போது?????? மனிதத்தன்மையை மக்களிடம் என்கவிதை இத்தலைப்பில்.. எங்கே மனிதன்????????என்றே...... அரசியலில் பெரும்புள்ளி ஆளுயர மாலையோடு அவர்வீட்டு வாசலிலே அயராது தொண்டர்படை ... பாமரனும் வந்தானாம் பெருந்தலைவர் புகழ்காண தலைவரவர் குணமறிய தாளாத ஆவலுடன்........ வழியிலே வழிமறித்தார் வலதுகையாம் உதவியாளர் அடுக்கடுக்காய் அளந்தாரே அண்ணலவர் அரும்பெருமையை... சிங்கமென முழங்குவார் சீற்றமுடன் மேடையிலே... புலியென பாய்ந்திடுவார் சட்டசபை கூட்டத்திலே... தொகுதி பத்தி கேட்டாலோ முழிப்பாரே ஆந்தையாய்....... குரைப்பாரே நாய்போல கும்பிட மறந்தாலோ... செவியுந்தான் பாம்பாச்சே வம்புமது கேட்பத…
-
- 6 replies
- 1k views
-
-
கடைசிப் பாலகனின் இரத்தம் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தீபச்செல்வன் மூட மறுக்கும் பாலகர்களின் கண்களில் குற்றங்களின் முடிவற்ற காட்சிகள் அசைகின்றன இறுதியில் எதையோ சொல்ல முயன்றபடியிருக்கும் மூடாத வாய்களில் மறைக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஒலிக்கின்றன இரத்தத்தில் பிறந்து இறுதிவரையில் இரத்தம் காயாமல் பிசுபித்தபடி உடல் எங்கும் வழிய குண்டுகளால்சிதைக்கப்பட்ட பாகங்கள் உதிர எனது நிலத்து பாலகர்கள் திரிகையில் இலையான்கள் காயங்களை அரித்து அவர்களைத் தின்று முடித்தன எல்லோருடைய கண்களின் முன்பாகவும் எனது தேசத்திற்கெதிரான போரில் பாலகர்களை பலியிடும் பொழுது தாய்மார்களை நோக்கி அவர்கள் அழுகையில் தாய்மடிகளில் இரத்தம் பெருகியிருந்தது பெண்…
-
- 6 replies
- 1.6k views
-
-
-
காற்று கொதிக்கிறது நீ மௌனத்தை கரைத்திருக்கிறாய் மரங்களும் ஏரிகளும் கூட எரிந்துபோகலாம் இனி.. ஏன் இந்த இளவேனில் பொழுதில் உன் விழிகள் துயரப் பாடலை கேட்கிறது.. நேற்றைய உறைபனிவிலக்கி, ஒழுகும் கதிர்கள் தரைகளை தழுவுவதைப் பார் வீட்டுக் கூரைகளில், இலைபோர்க்கும் மரங்களில் மின்சாரக்கம்பிகளில் பெயர் தெரியாத பறவைகளின் மகிழ்வைப் பார் நீ புல்லாங்குழல். காற்றை புகவிட மறுக்கிறாய்.. தூசிகளை நிரப்பி பெருமிக் கிடக்கிறாய் அநாதையாகி அலைகிறது நேற்றைய உன் குழலோசை.. நேற்றுக்கும் நாளைக்கும் இடைப்பட்ட பொழுதொன்றை மென்றுவிட்டு போகிறாய்.. எப்போது அசைமீட்கப்போகிறாய்....?
-
- 6 replies
- 570 views
-
-
பெண் அன்பில் ஒருதாய் பெண் அழகில் ஒரு தேவதை பெண் அறிவில் ஒரு மந்திரி பெண் அதரவுயில் ஒரு உறவு பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு பெண் வெற்றிக்கு ஒரு மாலை பெண் தோல்விக்கு ஒரு பள்ளம் பெண் நட்பில் ஒரு நேர்மை பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியார் இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்...
-
- 6 replies
- 1.8k views
-
-
வழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள அட்டையைப்போல செலவு செய்யஎன்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றனசிரியரிப் பிரஜையிடமிருக்கும் இருக்கும்பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல என்னுடைய மண்ணில்ஒரு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறதுமணிப்பூரில் ஒலிக்கும்இந்திய கீதம்போல என்னுடைய மண்ணில்ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறதுதிபெத்தில் பறக்கும்சீனக் கொடி போல என்னுடைய விரலில்நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறதுமியன்மாரியரின் கையில்தீயால் இடப்பட்ட காயத்தைப்போலதீபச்செல்வன் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/article…
-
- 6 replies
- 3.6k views
-
-
அவர்களை விடுவிப்போமா.... முட்கம்பியின் பின்னால் நீர் நிறைந்த விழிகளுடன் பல திசையும் நோக்கி பல ஆயிரம் கண்கள்..... இரவு பகல் பாராது எட்டுத்திசையும் நோக்கி எவராவது வருவாரா எம் ஏக்கம் தீர்க்க.... இது தான் இன்றைய கேள்வி அங்கே... பதில் தெரியாமல் துடித்து பிணமாகும் உயிர்கள் அங்கே.... படுக்கை மலசல கூடத்தில் மலசல கூடமோ படுக்கையில்.... பகைவென்று நிலமாண்ட பிரபாகரன் தேசம் பகைவனின் கூடாரத்தில் பல நூறு சித்திரவதையில்.... ஏங்கும் விழிகளுக்கு தூக்கம் கொடுப்பதற்கும் பட்டினி வயிற்றை பசியாற விடுவதற்கும் நாம் என்ன செய்தோம்...? இனியாவது என்ன செய்வோம்...? முடியாத காரியமும் முடித்துக் காட்டிய தலைவனின் பாசறையில் தவண்ட …
-
- 6 replies
- 1.2k views
-
-
-
நதி என்றோ? ஆரம்பித்து விட்டேன். என் பயணத்தை.. பல தேசங்களின் எல்லைகள் தாண்டி எங்கோ? சென்று கொண்டிருக்கின்றேன். எப்போது போவாய்? என்று ஏசுவோரை கடந்து.. எப்போது வருவாய்? என்று ஏங்குவோரின் வாசலில் இப்போது நான். என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு கூட்டம் தெரிகின்றது. அதோ! அதில் ஒருத்தி உறவையெல்லாம் பிரிந்து வந்து உள்ளத்தில் கனவுகள் சுமந்தபடி வெற்றுக் குடத்தோடு வெயில் கொல்லும் காலப் பெரு வெளியில் கால் கடுக்க காத்து நிற்கின்றாள். என் வருகைக்காக.. இதோ! அவளின் காலடித் திடலில் இப்போது நான்.. நன்று உண்டு உடுத்து உறங்கி நாளாச்சு என்பது நன்றாய் தெரிகின்றது. என்னால் என்ன செய…
-
- 6 replies
- 1.2k views
-
-
அவசரப்படும் மனிதர்கள் அடைக்கப்படும் முன்கதவுகள் அடங்கி கூடடையும் பறவைகள் அமைதியாகிப்போகும் தெருக்கள் - என அந்திகள் அழைத்துவருவன அந்நியமானவொன்றாகவே போய்விடுகின்றன, நழுவிச்செல்லும் கதிர்களும் மினுங்கத்தொடங்கும் நட்சத்திரங்களும் ஒடுங்கிப்போகும் ஓரிரு பூமரங்களும் அந்தரத்தில் எழுந்தலையும் ஒளிப்புள்ளிகளும் புதர்களின் அரவங்களும்- இந்த அந்திகளை கோரமாக்கிவிடுகின்றன. இந்த, அந்திகள் இருளை மட்டும் சுமந்து வருவதில்லை பகல் பற்றிய பெருமூச்ச்சுக்களையும் பயம் நீங்காத சில இரவுகளையும் கூட அழைத்து வந்து விடுகின்றன, அநாயாசமாய் அந்திகளை அனுபவித்து வரவேற்கின்றன அரவங்களும் ஆந்தைகளும் புதிரான சில மனிதர்களும். என்னவோ தெரியவில்லை........... இன்னும், அந்திகள் வருவது …
-
- 6 replies
- 825 views
-
-
செத்தும் காத்த என் அம்மாவின் பிறந்தநாள் நினைவில் . அம்மா பிறந்தது 1917 உடுவில் மகளிர் கல்லூரி வரவேற்ப்பில் மகத்மா காந்திக்கு மாலை சூடி ஆசி பெற்றது நவம்பர் 2017 (இறக்கிற வரைக்கும் காந்திய செல்வாகுடனேயே வாழ்ந்தார், விடுதலையும் சமூக சமத்துவமும் கவிதையும் அவரிடமிருந்து கற்றதுதான்.) . 2013 நவம்பரில் அம்மாவின் சமாதிக்குச் சென்றபோது கோத்தபாய ராசபக்சவின் விசேட உத்தரவின் பேரில் என்னைக் கைதுசெய்ய இராணுவம் எங்கள் பண்ணைக்கும் வன்னிவளான்குழம் கோவிலுக்கும் நடுவிலுள்ள காட்டுக்குள் காத்திருந்தனர், நல்ல வேலையாக நான் கார் சார்தியிடம் ”40 வருடமாக ஒவ்வொரு தடவை பண்ணைக்கு வரும்போதும் வன்னிவிளான்குளம் அம்மன் கோவிலில் கற்பூரம் கொழுத்திவிட்டு வரும்படி சொல்லுவார். 40 வருடங்களாக நான…
-
- 6 replies
- 1.3k views
-
-
சப்பாத்தின் விலை ஒன்பது தொண்நூறு விற்பவனிடம் வாதாடிக் களைத்துவிட்டேன் குறையும் இருபது சதத்திற்காய் வாயாற முடியாது இருந்த காலங்களில் எல்லாம் வறுமையின் கோரத்தை போக்க நட்சத்திரங்களை எண்ணியபடி வயிறை நீரால் நிறப்பியதுண்டு இது சற்றே மாறுபட்டது ஆடம்பரம் என்றோ ஆசைஎன்றோ வரையறுத்து விட்டு விட்டால் கால்கள் தேவையற்றதாய் போய்விடும் ஊரென்றால் பறவாயில்லை சப்பாத்துமுள்ளும் சாணிப் பட்டியும் கிரவல் றோட்டும் பழகிப்போன ஒன்று இது சற்று மாறுபட்டது மண்ணில் கால் படுவதே இல்லை மாறிப்பட்டு விட்டால் குளிரின் கோரம் ஊசியாய் குத்த விறைத்த கால்கள் பாறைபோல் ஆகும். இருக்கும் பழசுகளிலும் இடையிடையே ஓட்டை எப்படியும் இந்தமாதம் …
-
- 6 replies
- 890 views
-
-
இன்பமெங்கே? 1. இன்பத்தைத் தேடுகிறாய் தம்பி இன்பத்தைத் தேடுகிறாய் இங்குள தங்குள தென்றலைந்தே அதை எங்கெங்கு தேடியும் காணக் கிடைக்காமல் இன்பத்தைத் தேடுகிறாய் தம்பி இன்பத்தைத் தேடுகிறாய் 2. ஏழ்மையதின்பமடா தம்பி ஏழ்மையதின்பமடா வாழ்வினில் வீணே வழிகெட்டுப் போகாமல் வாய்த்த தவஞானம் தோய்ந்து சுகம் பெறில் ஏழ்மையதின்பமடா தம்பி ஏழ்மையதின்பமடா 3. அறியாமை இன்பமடா தம்பி அறியாமை இன்பமடா நெறியோடு ஞானப் பிழம்பென வாழ்ந்(து) உள நிம்மதியோடுயர் நன்மதி கூட்டிடில் அறியாமை இன்பமடா தம்பி அறியாமை இன்பமடா 4. புகழின்மை இன்பமடா தம்பி புகழின்மை இன்பமடா இகழ்பவர் யாவரும் ஈசனென்றே மனம் இன்ப நிலை கண்டு துன்பத்தை மாயத்திடில் புகழின்மை இன்பமடா தம்பி புகழின்மை இன்பமடா 5. நோயதும் இன…
-
- 6 replies
- 1k views
-
-
இவர்களை எப்போ புரியப்போகின்றாய்? கழுவும் துடைக்கும் அந்த கண்ணியவான்களை... கலோ என்றால் கிலோ அனுப்பும் அந்த கருணையாளர்களை.... எலும்பு தெரிய உமக்காய் எரியும் தீபங்களை.... எதையுமே தமக்கென தேடாத பாரிகளை.... தலைமுடி துறந்தும் பருவ வயது கடந்தும் தலைவிதியென்று ஓடும் உன்னதமானவர்களை..... புலம் பெயர் தேசத்தை நுகராத இந்த புடுங்கி எறியப்பட்ட அந்த கனவான்களை..... புலம் பெயர் எமது புருசர்களை... இவர்களை எப்போ புரியப்போகின்றாய்?
-
- 6 replies
- 1.4k views
-
-
[size=4]கர்ணனின் கதையில்.[/size] [size=4]புதைந்திருக்கும் அர்த்தங்கள்![/size] [size=4]கால வெள்ளம் கூடக்,[/size] [size=4]கரைக்க முடியாத உண்மைகள்![/size] [size=4]ஆயிரம் திறமைகள்,[/size] [size=4]ஆண்மையின் கம்பீரம்,[/size] [size=4]சத்திரிய வீரம் மட்டுமே,[/size] [size=4]காறித்துப்புகின்ற கர்ச்சனை![/size] [size=4]விசுவாமித்திரனே, [/size] [size=4]வியந்து போன வீரம் தான்![/size] [size=4]பிரமாஸ்திரத்தின் ரகசியம்,[/size] [size=4]மறந்து போகச் சாபமிட்டான்.[/size] [size=4]அன்னைக்குக் கூட,[/size] [size=4]அவனது ரகசியம் தெரியும்![/size] [size=4]அவளின் அரச வாய்கள்,[/size] [size=4]கூடப் பூட்டப் பட்டன![/size] [size=4]தேர்ச் சில்லின் புதைப்பில்,[/size] [size=…
-
- 6 replies
- 852 views
-
-
கசிந்துகொண்டிருக்கிறது தொலைக்கப்பட்ட அன்பின் மீதான கடைசி துளிகளும். முதல் சில நாட்களைப்போலவே இல்லை இந்த பிந்திய நாட்கள், அதீதமான அரவணைப்பை வெறுத்தொதுக்கும் மழலையொன்றின் பக்குவமற்ற நாட்களாய் கடந்துபோனது முந்தைய சில நாட்கள். எல்லை நோக்கி வளர்ந்துகொண்டிருக்கும் மரணமொன்றை, எல்லைகடந்து வளர்ந்துகொண்டிருக்கும் வாழ்தலொன்றை, உணர்த்தியழுதத்துகின்றன இந்த நாட்கள். தொலைக்கப்பட்ட அன்பு அழிந்துபோய்விடுவதில்லை - அது வேர்களில் அடங்கிக்கிடக்கிறது பின் அதுவே இலைநுனிகளில் நீராய் திரண்டும் வருகிறது. யாரவது ஒருவருடைய கண்களை பார்க்கும் போதும், யாராவதொருவர் முகத்தினை தடவும் போதும், யாரவது ஒருவர் கை அசைக்கும் போதும். தொலைக்கப்பட்ட அன்பு மிக கனதிய…
-
- 6 replies
- 677 views
-
-
தத்தித் தவழும் குழந்தை தத்தித் தவழும் கண்ணே நீ...... பூமியில் கால் தடம் பதித்து நடந்து செல்லும் அழகு வெகு தூரத்தில் இல்லை.... இன்னும் நீ தவழ்ந்து சென்று நிற்க முயற்சிக்கும் திறனைப் பார்த்து உன் எதிர் காலத்தைக் கணித்துவிட்டேன்.. நான் உன் அழகிய எதிர்காலத்தைக் கணித்துவிட்டேன்....... உன்னவள் தாய்க்கரங்களிற்கு இனியும் பாரத்தைக் கொடுக்காமல் இந்த வயதிலே பொறுப்பை உணர்ந்தபடி நீ... முயற்சி செய்கின்றாயே... தவழ்ந்து தவழ்ந்து நடக்க முயற்சி செய்கின்றாயே... நீ.. வாழ்வாய் இவ்வுலகில் நலமுடன் சந்தோஷமாக வாழ்வாய் என்றென்றும் வாழ்வாய்.......
-
- 6 replies
- 3.8k views
-
-
-
வேசங்கள்! மனித பிறவியது மண்ணில் சிறப்பு பிறப்பாமே! கவலைகல் கண்ணீர்கள் சந்தோசங்கள் சாகசங்கள் இவை எல்லாம் அனுபவிக்குமாமே! சோதனைகளை விரட்டிவிட்டு சாதனை படிகளை கண்டறிந்து வெற்றிப்பாதையில் செல்லுமாமே! மனிதம் உள்ளோர் மட்டும் தானோ இத்தனைக்கும் உரியவர்கள்! மனிதமின்றி மனிதனாய் நித்திலத்தில் வேசங்கள் போட்டு நடைபோடும் வேடதாரிகளுக்கு என்ன தெரியும்! கவலை மறக்க கண்ணீரும் கண்ணீரை மறக்க புன்னகையும் இறைவன் தந்த வரமென்று அறியா வேடதாரிகளே நில்லுங்கள்! நித்திலம் நின் ஆயுள் தந்தது மனிதனாய் வாழவே -ஆனால் நீயோ வேசங்கள் பல தரித்து வேடதாரி பட்டம் பெற்று நித்திலத்தையே நிலைகுலைக்கின்றாயே உன்னால் முடியாது என்…
-
- 6 replies
- 2k views
-
-
இன்னும் வ.ஐ.ச.ஜெயபாலன் இயற்க்கையின் மயானமாய் விரியும் சென்னை நடுகற் காட்டில் அணில்களின் ஒப்பாரியும் பெருகிக் கொழுத்த காக்கைகளின் பாடலும் நிறைகிற மாலைப் பொழுது. இன்னும் பூந் தென்றல் பெற்றோல் புகை அமுங்க கமழவது மகிழ்ச்சி.. இன்னும் வங்கக் கடலிருந்து ஒரு தாய் ஆமை சென்னையில் கரை எறுவது நம்பிக்கை... . . இன்னும் எஞ்சியிருந்த அணில்கள் காகத்திடம் தங்கள் கடைசிக் குஞ்சையும் இழக்கும் அச்சத்தில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிற நாட்களில் ஒரு கையாலாகாத கவிஞனாய் தவிக்கிறேன். காதல் இழப்புமட்டுமே சோகமல்ல என்பதை உணர்ந்தபடி.. மொட்டைக் கூரைகளில் சுவர் நசித்த மரங்களில் குப்பை மேடுகள் வளரும் தெருக்களில் கோடா கோடிக் கருஞ் சிலந்திகளாய் நூல் இறங்கி ஊர ஆ…
-
- 6 replies
- 2.1k views
-