கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
யார் தீனி போடுகின்றார்களோ அவர்களுக்கு வாலாட்டிய நாய்கள் தீனியில் பங்கு கேட்ட நாய்களை கடித்துக்குதறியது. சுட்டிக்காட்டியவனை துரத்திக்கடித்தது சில நேரம் தன்பாட்டில் கடித்து எசமானிடம் நல்லபெயரை வாங்க முற்பட்டது வரலாறு முழுக்க வாலாட்டிப்பழகிய நாய்கள் மாறி மாறி எசமானர்களை சுற்றி வந்தநாய்கள் வரலாற்றுத் துயரத்தை சந்தித்தது!! "எசமானர்கள் நாய்களை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள்" சில நாய்கள் எசமானர்களின் பின்னால் சென்றது அவர்கள் நாய்களுக்கு கப்பாத்துப் பண்ணி அழைத்துச் சென்றார்கள் எஞ்சிய நாய்களுக்கு புது எசமானர்கள் வந்தரர்கள் வந்தவுடன் அவர்களும் நாய்களுக்கு கப்பாத்து பண்ணிவிட்டார்கள் இது நாய்களின் அந்திம காலம் வேட்டையாடவும் தென்பில்லை செல்லப்பிர…
-
- 27 replies
- 3.4k views
-
-
சிரங்கள் சிதையினும் எமக்கென்ன -நாம் சிவனைத் தொழுது பயனடைவோம் உயிர்கள் தொலையினும் எமக்கென்ன -நாம் உமையைத் துதித்துப் பயனடைவோம் பிள்ளைகள் இறப்பினும் எமக்கென்ன -நாம் பிள்ளையாரைப் புகழ்ந்து பயனடைவோம் முறை கெட்டாலும் எமக்கென்ன -நாம் முருகனைப் பாடி பயனடைவோம் அநீதி நடந்தால் எமக்கென்ன -நாம் ஆண்டவனைப் போற்றி பயனடைவோம் ஈழமே எரியினும் எமக்கென்ன -நாம் ஈசனை வேண்டிப் பயனடைவோம் இனமே அழியினும் எமக்கென்ன -நாம் இறைவனை நினைந்து பயனடைவோம் http://gkanthan.wordpress.com/index/eelam/payan/
-
- 0 replies
- 756 views
-
-
நான் துரோகி! நீயும் துரோகி! என்னையும் உன்னையும் பெற்ற பெற்றோர் துரோகி! பெற்றவரைப் பெற்ற பேரன்,பூட்டன் முப்பாட்டனாரும் துரோகி! அவன் துரோகி! இவன் துரோகி! அவனைத் தெரிந்த அவள் துரோகி! அவளுக்கு தெரியாமல் தெரிந்த அதுவும் துரோகி! கடல் துரோகி! காற்று துரோகி! கடலையும் காற்றையும் இணைக்கின்ற கதிரவன் துரோகி! கதிரவனை சுற்றிவருகின்ற பூமியும் துரோகி! கடவுள் துரோகி! கடவுளுக்கு கோயில்கட்டிய பக்தன் துரோகி! பக்தனுக்கு சோறுபோட்ட பக்தை துரோகி! பக்தையுக்கு பின்னால் அலைந்த பித்தனும் துரோகி! புத்தனும் துரோகி! பறவைகள் பல்லி பாம்பு பூச்சி புழுக்கள் அனைத்தும் துரோகி! நினைத்துப்பார்க்க நினைவில் வருகின்ற நினைப்பும் துரோகி! நினைப்பைத் தூண்டுகின்ற நரம்பு துரோகி!…
-
- 22 replies
- 5k views
-
-
தேநீர் கவிதை: அம்மாவின் கைராட்டை ஓவியம்: முத்து சிம்னி விளக்கொளியில் இரவும் பகலுமாய் அம்மா சுற்றிய கைராட்டை உறங்கவிடாமல் சுற்றிக் கொண்டேயிருக்கிறது என் கவிதைகளில். அறுந்து புனைந்த நூல்கண்டுகளில் முடிச்சு முடிச்சாய் அவிழ்த்தெறிய முடியாத அவள் ஞாபகங்கள். தனக்கு மட்டும் கேட்கும்படி அவள் பாடிக்கொண்டே நூற்றுக் கொண்டிருந்த பொழுதுகள், சோடி முடிந்த நாட்கள் எல்லாத் திசைகளில் இருந்தும் எதிரொலிக்கிறது எனக்குள். எவருக்கும் தெரியாமல் அவள் அழுத கண்ணீரின் …
-
- 0 replies
- 1k views
-
-
கொஞ்சங் கொஞ்சமாய்க் கொள்ளை அடிக்கிறாள்! என் மனசுக்குள்ளே வெள்ளை அடிக்கிறாள்! வண்ணங்களை அள்ளித் தெளிக்கிறாள்! என் எண்ணங்களைக் கிள்ளி எடுக்கிறாள்! மீண்டுமொரு புயல் வருதா? உயிரோடு சாகடிக்க! இன்னுமொரு முறை வருதா? காதலித்துப் பேதலிக்க! நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - அதுபோல நொந்த மனசுக்கு ஒரு காதல்! தோல்விகள் தருவது... வலிகளை மட்டுமல்ல, நல்ல அனுபவங்களையும்தான்!! காதலித்துத்தான் கட்டுறாங்கள்...! பிறகேன்... சத்தம் போட்டு கத்துறாங்கள்?! காதலித்தபோது இருந்ததெல்லாம், கல்யாணத்தோடு காணாமல் போச்சா?! அவளைத் 'தேவதை' என்றவன்- இப்போது 'அவளே தேவையில்லை' என்கிறான்! இவளே என் வாழ்வென்றவன் - இனி வாழ வழியில்லையென பிரிகின்றான்! காதல் எங்கே போச்சுது? அதுக்கு என்ன ஆச்சுது? காத…
-
- 2 replies
- 1.7k views
-
-
-
-
- 17 replies
- 3.4k views
-
-
முத்து முத்து மாரியம்மா எங்கள் முத்து மாரியம்மா வந்து வினை தீர்த்துடுவாய் செல்லமுத்து மாரி அம்மா வேப்பிலைக் காரி அம்மா வேதனைகள் தீர்த்துடுவாய் எழுதிவைத்த வேண்டுதலை தீர்த்துவைக்கும் வெக்காளி நீ அம்மா மதுரையிலே மீனாச்சிதான் அம்மா வேண்டும் வரம் தந்துடுவாய் நீ அம்மா காஞ்சியிலே காமாச்சிதான் அம்மா கலக்கம் எல்லாம் நீக்கிடுவாய் நீ அம்மா காசியிலே விசாலாச்சிதான் அம்மா எம்மை எல்லாம் ஆட்சி செய்யும் தாயும் நீ அம்மா
-
- 5 replies
- 1.4k views
-
-
பெண்ணினத்தின் விடி வெள்ளி ( மாலதி) கன்னியவள் துப்பாக்கி கைய்யில் ஏந்தினாள்.... கரிகாலன் படையனில் வேங்கை ஆகினாள்... பெண்ணடிமை விலங்குடைத்து பெருமையாகினாள்.... அந்த பெண்களிற்க்கு விடி வெள்ளி இவளே ஆகினாள்... தாய் மாணம் காக்கயிவள் களமே எறினாள்... அந்த கரிய பகை அழித்தேயிவள் நிலத்தை மீட்டினாள்.... பெண்ணினத்தின் சுதந்திரத்தை இவளே மீட்டினாள்... புரட்சி பெண்ணாய் ஈழமதில் வழியை காட்டினாள்....!!! -வன்னி மைந்தன்-
-
- 3 replies
- 1.5k views
-
-
''புலியென எழுக தமிழா நீயும்......'' அழுகிறாய் ஏனடா நீ அடிமையா தமிழா...??? இன்னும் உனக்கென்ன இழப்பதற்கிருக்கு...??? இன்னும் எதற்காய் அமைதியாய் இருக்காய்....??? பொறுத்தது போதும் பொங்கியே எழடா. போர்களம் ஏறியே விடுதலை காணடா... அழுதது போதும் அழுகையை நிறுத்தடா அணியாய் வந்தெங்கள் அணியினில் இணையடா... இதுவரை இருந்தாய் அடிமையாய் நீயும் இனியும் எழுவாய் புலியென நீயும்....!!! - வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 826 views
-
-
இராமயணத்திற்கு அபிநயம் பிடித்தாடும் புலத்தமிழா ஈழத்தின்னலுக்கு எப்பொழுது அபிநயம் பிடிதாட போகிறாய்? மகாபாரத போருக்கு அபிநயம் பிடித்தாடும் புலத்தமிழா மாவீரர்களின் சாதனைகளை சரித்திரங்களையும் எப்போது அபிநயம் பிடிதாடுவாய்? சீதையின் கற்பு பற்றி விவாதிக்கும் புலத்தமிழா சிதைக்கபட்ட எம் பெண்களுக்காக எப்போ வாதாடபோகிறாய்? கற்பனைக்கதையில்லை எம்மவர் கதை கண்ணேதிரே நடலக்கும் உண்மை கதை புலதமிழா அபிநயம் பிடித்தாடு எம்மவர் கதையும்
-
- 7 replies
- 1.5k views
-
-
அவ்வளவு ஆசையா உனக்கு என் மீது கோவத்தில் நீ சட்டி பானையோடு சண்டைபிடித்தும் இவ்வளவு ருசியா சமைத்திருக்கிறாய் * அமாவாசை விரதத்தில் நீ "கா கா கா" என கரைந்து கொண்டு வெளியே வருகிறாய் உன்னைக் கண்டதும் காகங்கள் குழம்பிவிட்டது பெளர்ணமி விரதமோ என்று * இந்த மழை உடனே நின்றுவிடும் பார் எப்படித் தெரியும் நீதான் குடை விரித்துவிட்டாயே * என் கவிதை படிப்பவர்கள் எல்லாரும் என் காதலி கொடுத்து வைத்தவள் என்கிறார்கள் அதற்காகவாவது உன்னைக் காதலிக்க வேண்டும் எங்கே நீ... * என் கண்களுக்கு இமைக்க மட்டும்தான் தெரியும் உன் கண்களில் ஒன்றைக்கொடு உன்னை மாதிரியே உன்னை நான் இமைக்காது பார்க்க வேண்டும் -யாழ்_அகத்…
-
- 4 replies
- 1.2k views
-
-
"இடர்கள் தந்தபோதும்...,எம் இலட்சிய தாகம் தீராது......" கோயில் மணி ஓசையிலும், குயில்களின் இன்னிசையிலும், மங்கள வாத்திய இசையிலும் , மலர்ந்திடும் எங்கள் காலை...., இன்று..., கூவி வரும் செல்(பீரங்கி) ஓசையிலும், பறை எழுப்பும் அவல வசையிலும் , ஐயோ ...என்ற அலறலிலும், விடிகிறது எங்கள் காலை. யுத்தத்தின் வடுக்கள்.... அடுத்தவன் கை ஒன்றை எடுத்து தன் கையோ ?என ஏங்கும் ஒருவன் அங்கே...! பிணமாய் கிடக்கும் ஒருவனுக்கு ......, அவன் குடலே மாலையாய் கழுத்தில் அங்கே...! தமிழன் அல்லவா.....? இறந்தும் அவன் பறவைகளுக்கு தீனி தருகின்றான். பிணக்குவியல் அகற்ற அந்த ஊரில் நாதியில்லை...., நாய்களே நன்றிக்கடன் கழிப்பதாய் இறுதிக்கடன் செய்கின்றன. "இந்தா பிள்ள …
-
- 1 reply
- 656 views
-
-
இழந்து விட்டேன் என்கிறேன் இல்லை இல்லை இன்னும் கொஞ்சம் இருக்கிறது என்கின்றது(நம்பிக்கை)...
-
- 0 replies
- 625 views
-
-
வாழ்க்கை அழகான வாழ்க்கையது கடவுளின் வரம் அழகுற மாற்றுவது மானிடத்திறம் துன்ப இன்பம் விதியின் திடம் நம்பிக்கைதான் வாழ்க்கையின் பலம் அன்பான மனைவி குழந்தை வாழ்க்கையில் சுகம் ஆனால் பணமே தேடுவது மானிட மனம் கடவுள்தான் வாழ்க்கையின் மூலம் இதை மறந்தால் நாமெல்லாம் மடம் காதல் பிரிவு காயானது கனியாகும் வேளைதனில் கருவண்டு துளைத்தால் போல் - என்மனது ஏங்குகிறேன் உன் நினைவால் ஒருமுறை தான் பேசிவிடு - - என்னோடு நண்பர்களே உங்களிடம் இருக்கும் இப்படியான குறுங்கவிதைகளை…
-
- 80 replies
- 8.8k views
-
-
[size=5]கார்த்திகை நாயகரே கைதொழுகின்றோம்[/size] கோரங்கள் கண்டு கொதித்து விடுதலைக் கொள்கைக்காகவே துடித்து வீட்டினை உறவினை மறந்து விடுதலை மண்காக்க விரைந்து நேரிய எம் தலைவன் பாதையில் நிமிர்ந்து களமாடி விழி தமூடி மண்மாதா மடிமீது துயில்கொள்ளும் கார்த்திகை நாயகரே – உமை கண்ணிலொற்றுகின்றோம் கைதொழுகின்றோம் - தூய தீபம் ஏற்றியே வணங்குகின்றோம்… கார்த்திகை மாதமது எம்மூரில் கனத்த மழை பொழியும் நீர் நிரம்பி நிலமெல்லாம் மெதுமையாய்த் தானிருக்கும்… பூச்சொரியும் மரங்களெல்லாம் புன்னகைத்துக் காத்திருக்கும் காற்று வந்து காதோரம் மாவீரரர் கதைபேசும்… ஆர்ப்பரிக்கும் அலைவந்து நுரை நுரையாய் தானிரைக்கும் நேற்றிருந்த வீரர் நினைவு தனைச்சுமந்து …
-
- 2 replies
- 523 views
-
-
-
மரணப்படுக்கையில் மறவர்களும் மக்களும் முள்ளிவாய்க்காலில் இருந்த போதும் மானாட மயிலாட பார்த்து மோட்சம் பெறும் புலத்து தமிழன் நான் மானாட மயிலாடவில் இடைவேளை வரும் போது ஈழம் பற்றி ஆய்வு செய்கிறேன் ஈழத்து அவலத்தை மறந்(றைத்)து எதிரிக்காய் எழுதிக்கொண்டிருக்கிறேன் புலிகள் தேவைப்பட்டார்கள் எம் பொதி சுமப்பதற்காய் இன்று நான் ஜனநாயகவாதி என் தவறை உணராது தோல்விக்கு விடைதேடும் கட்டுரை ஆய்வாளன் எந்த விமானம் எத்தனை பாகையில் குண்டு போட்டது.. எத்தனை அடி ஆழத்தில் பள்ளம் வந்தது எங்கேனும் தண்ணி வந்ததா என பார்க்கிறேன் என்வீட்டு கதவை எதிரி தட்டுவதை மறந்து ஏனென்றால் என்பெருமையை சொல்ல இதை விட்டால் எனக்கு ஏது சந்தர்ப்பம் நான் நாறுவதே தெரியாமல் ந…
-
- 9 replies
- 2.4k views
-
-
1991. 06.12 அன்று மகிழடித்தீவு கிராமம் இரண்டாவது படுகொலையை எதிர் கொண்டது. எரிகிறது வீரம் நிறைந்த மண் உருகிறது உயிர்கள் கருகிறது உறவுகள் ஓடுகிறார்கள் எம் மக்கள் கதறுகிறார்கள் வாலிபர்கள் பாதகர்கள் கையில் யுவதிகள் சிக்குண்டு தவிக்கிறார்கள். தஞ்சமடைந்தனர் ஞானமுத்து குமாரநாயகத்தின் அரிசி ஆலையிலே துப்பாக்கிக்கு இரையாகி வெந்த அனலில் கருகிப் போகியது எம் உறவுகள். தாயவள் முலைப்பால் ஊட்டிய நிலையிலே தான் பெற்றெடுத்த கைக்குழந்தையுடன் கறைபடிந்திருந்தாள் இறந்த உயிர்கள் ஓவியங்களாகவே இருந்தன. அன்றைய நாள் இருட்டானது எம்மூர் மக்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட உறவுகளை இழந்து நின்றோம் கைக்குழந்தையும் வயோதிபத்தையும் பார…
-
- 1 reply
- 1.4k views
-
-
போரியலின் அடிப்படை படைகளின் அணி ஒழுங்கு தகமைகளின் நெறி வழி ஒரு சிறந்த போரியல் ஆசான் .. ஆரம்பிப்பவன் சிப்பாய் ஆனால் கட்டளை பீடம் அரசன் நோக்கம் எல்லாம் தன் தலைவனை காப்பது மட்டுமே சூழ்சி வலையில் இருந்து .. இத்தனைக்கும் படையை ஒழுங்கு படுத்தி பகையை நிலைகுலைய செய்வதும் வைப்பதும் ராணியாம் உதவிக்கு மந்திரி நெடுக்க வழிநடக்க .. முன்னேருவோர் வீழ்வார் என தெரியும் ஆனாலும் அடுத்த கணம் நிலையை பலப்படுத்தி பதில் தாக்குதல் நடக்கும் இறப்பு பெறுமதி வீழ்ந்தவர் பொறுத்து கணிக்கப்படும் ... ஆனாலும் சதுரங்கம் வாழ்க்கையின் மிக சிறந்த ஆசான் போரியலின் ஆசிரியன் களங்களை மாற்றி அமைக்கும் வல்லமை தந்திரங்களை உடைத்து வெளி வரும் கெட்டித்தனம் .. காப்பு தாக்குதல் திறன்களை…
-
- 3 replies
- 629 views
-
-
"யாழ்" என் காதலி கனவுகளின் பெருவெடிப்பில் கண்டுகொண்ட களமிவள் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருக்கவில்லை இருந்தும் என்னைக் கவர்ந்துகொண்டாள் - மோகிக்கவும் முக்குளிக்கவும் கூடச்செய்தேன் விளைவு, என் கிறுக்கல்களையும் கருக்கட்டிக் கொண்டாள்.. களத்து மாற்றங்களையும் கருவறுப்புகளையும் கூடத் தன் காலவோரையில் கல்வெட்டாக்கினாள் - விருந்தினர்களாய் வரும் வேடந்தாங்கல்களுக்கும் விளைநிலமானாள் நச்சுக்களையும், வித்துக்களையும் கூடத்தன் கர்ப்பத்தில் சுமந்தாள்.. வேர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன அறுப்புக்களும், விதைப்புக்களும் தொடர்ந்தாலும் அவள் அப்படித்தான் அவளுக்கு ஆயிரம் குழந்தைகள் இருந்தாலும் என் காதலி அவளின் கரம்பிடித்துக் கரைசேர்ந்தவனல்லவா நான் ..! எண்ணி…
-
- 18 replies
- 1.3k views
-
-
நண்பர்களுக்கு ஓரிரு வார்த்தைகள். எல்லாருக்கும் மணிவாசகனின் வணக்கங்கள். இந்தக் கவிதையும் கொஞ்சம் நீளமாத் தான் போச்சுது. அதுக்காக கோவிச்சுக் கொண்டு இடையிலை நிப்பாட்டிப் போடாமை முழுக்க வாசியுங்கோ சும்மா ஆக்களைக் கவரத் தான் இப்படித் தலைப்பு ஒண்டு போட்டனான். அதுக்காக ஆம்பிளைப் பிள்ளையள் வாசிக்காமை விட்டிடாதேங்கோ. ஆம்பிளைப் பிள்ளைகள் பொம்பிளைப் பிள்ளைகள் எல்லாம் என்ரை கவிதையை முழுசா வாசிச்சுப் போட்டு என்ரை கவிதை மாதிரி நீளமா உங்கடை விமாசனத்தை எழுதுங்கோ. நல்ல பிளைளைகள் தானே. இப்ப கவிதையைத் தொடங்கட்டே? சீர்தூக்கிப் பாருங்கள் சீரழிவாய்ப் போய்விட்ட சீதனம் செய்துவிட்ட சிறுமையினைப் பாரென்று சினந்திருக்கும் பெண்களுக்கு சந்தோச வாழ்க்கைக்கு சாபமாய்ப்…
-
- 29 replies
- 5.9k views
-
-
கவிபாடும் புலவர்களே இங்கே வாருங்கள் யாழ் இணையம் மன்னனுக்கு வாழ்த்துப் பாடுங்கள் தமிழாலே அவனை நீங்கள் குளிப்பாட்டுங்கள் உங்கள் கவிதையலே அவனை நீங்கள் அலங்கரியுங்கள் கப்பம், வரி இல்லாத இந்த மன்னனை வாழ்த்துக்கூறுங்கள் கவிஞர்களை ஊக்குவிக்கும் இவன் பண்பை பாருங்கள் சங்ககாலப் புலவர்போல கவிகள் புனையுங்கள் வீரம் செறிந்த கவிகளையும் இந்தமன்னனுக்குப் பாடுங்கள் வீதி உலா வரும் மன்னன் அழகைப் பாருங்கள் குடிக்கள் குறைகளை எடுத்துக் கூறுங்கள் இந்த தமிழ் மன்னன் நீடூழி வாழ வழிகள் செய்யுங்கள்
-
- 2 replies
- 969 views
-
-
கடவுள்மார் எல்லோரும் பம்மல் கே சம்பந்தம் படம் பார்த்த பின் ஒன்றுகூடி பதிலாக இதை மணிவாசகனிடம் கொடுக்கும் படி என்னிடம் அனுப்பி வைத்தார்கள்........ எல்லாம் தெரிந்தவன் வல்லவன் செய்பவன் என்றது நானா அல்லது நீயா :?: அநியாயகாரனை உருவாக்கியது நானா அல்லது நீயா :?: என்னை பாரென்று சொன்னது நானா அல்லது நீயா :?: என்னுடன் பிரியமா இரு என்றது நானா அல்லது நீயா :?: மனிதராக பக்குவபடாதற்கு காரணம் நானா அல்லது நீயா :?: நடுநிலை தவறியதற்கு காரணம் நானா அல்லது நீயா :?: எல்லாம் கொடுத்தது பறித்தெடுத்தது நானா அல்லது நீயா :?: மனசடங்கை பணசடங்காக்கியது நானா அல்லது நீயா :?: எனக்கு கோபுரம் கட்டி குண்டு போட சொன்னது நானா அல்லது நீயா :?: தர்மாகர்த்தாவை உண்டாக்…
-
- 10 replies
- 1.6k views
-
-
காலைக் கதிரவனின் கனலற்ற கதிர்கள் குளித்தென்னை மகிழென்று கூவி அழைக்கின்றன இதமான சூடற்ற காலை வெயில் எந்திர மனதுக்குப் புத்துணர்ச்சி தருகிறது இரவின் குளிர்மையில் குளித்த மரங்கள் பசுமையும் அழகு கூட்ட பார்க்கும் இடமெங்கும் பரவசம் தருகின்றன குலை தள்ளிக் குனிந்து நிற்கும் வாழை கூம்பான இதழ் கழற்றிக் கொள்ளைச் சிரிப்புடனே நிலம் பார்க்க நிற்கிறது வாசனைப் பூக்களெல்லாம் வாடியவை காற்றில் கழித்து வசதியாய்ப் பார்த்தபடி வகைக்கொன்றாய் இருக்கின்றன வேர்விட்ட நீரல்லி கதிரவனின் வரவில் கண்மலர்ந்து மடல்கள் விரித்தே கதிரவன் கண்பார்க்க காதலுடன் நிற்கின்றாள் கடமை என் காட்சிகள் கலைக்க கவிந்த மனம் கட்டறுத்து வீழ கண்மூடிக் காட்சிகளைக் கைது செய்தபடி காலத்தின் கணக்கில் கரைந்த…
-
- 6 replies
- 7k views
-