கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
முள்ளுக் கம்பிக்குள்ளே முடங்கிப் போகிறோம்! துப்பாக்கி முனைகளுக்குள் துவண்டு கிடக்கிறோம்! ஒவ்வொரு வீட்டுச் சுவரிலும் அழகான குழந்தைகளின் படங்கள்!பிறப்பு-இறப்பு திகதிகளோடு! நிவாரண அரிசிக்காய் நிறையில் நிற்கிறோம்! ஊரடங்குச் சட்டத்தால் அடக்கப் படுகிறோம்! சிறைச்சாலை நாற்சுவருக்குள் நசிங்கிப் போகிறோம்! ஆயுத முனையில் சகோதரிகளின் கற்புக்கள் களவாடப் படுகின்றது! தூக்கம் என்பது நாங்கள் தொலைத்தவைகளில் ஒன்று! துக்கம் என்பது நாங்கள் உழைத்தவைகளில் ஒன்று! எங்கள் வீட்டுக்குள் போக அந்நியனின் அனுமத்திதேவை! சொத்துகள் பற்றின கவலையில்லை சொந்தங்கள் பறிபோன கவலையே! யாருக்கு யார் அறுதல் சொல்வது கண்ணீரால்தான் பேசுகிறோம்! …
-
- 3 replies
- 788 views
-
-
இரண்டுக்கும் ஐந்துக்கும் நடுவில், என் இடதுகை இரண்டு விரல்களை... பாலர் பள்ளி செல்லும்வரை... சூப்பிக்கொண்டிருந்த காலமது! எல்லோருக்கும் செல்லமாய்... துள்ளித்திரிந்த காலமது! பசி என்பதே வருவதில்லை... கள்ளத் தீனிகளில் பசியாறியதில், அம்மா அன்போடு ஊட்டிவிடும் உணவுகூட அதிகமாகவே தெரியும்! முழுநேர வேலையென்பது ... நாள்முழுதும், விளையாடிக் களைத்த பின்... விரல் சூப்பியபடியே தூங்கிவிடுவதுதான்! என் கனவுகளில் தேவதைகள் வந்து... பறக்கும் விளையாட்டு விமானங்களை... பரிசளித்துச் சென்றார்கள்! எதைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை! எதிர்பார்ப்புக்களின் உச்சக் கட்டங்கள்... நான் ஆசைப்பட்ட விளையாட்டுப் பொருட்கள்தான்! மூக்கு வழிய அழுது வடித்தால்... என்ன வ…
-
- 16 replies
- 1.9k views
-
-
நான் மறுபக்கத்தைப் பார்க்க விரும்பவில்லை ஒரு நியாயத்தின் மறுபக்கம் நமது நியாயங்களை மறுதலித்துவிடும் ஒரு கண்ணீரின் மறுபக்கம் நமது கண்ணீரை அர்த்தமற்றதாக்கிவிடும் ஒரு மனிதனின் மறுபக்கம் அவனை நிரந்தரமாக நம்மிடமிருந்து பிரித்து விடுகிறது நான் மறுபக்கத்தைப் பார்க்க விரும்பவில்லை நாம் மறுபக்கத்தைப் பார்க்கும்போது நம் கைகள் கட்டப்பட்டுவிடுகின்றன நமது இதயம் கனத்து விடுகிறது நமது அம்புகள் முனை முறிந்துபோய் விடுகின்றன நமது எல்லா வழிமுறைகளும் பயனற்றதாகிவிடுகின்றன நான் ஒரு மறுபக்கத்திற்குள் நுழையும்போது ஒரு இருண்ட அறைக்குள் நுழைகிறேன் நான் ஒரு மறுபக்கத்தை தொடும்போது இருளில் வழுவழுப்பான எதையோ தொடுகிறேன் நான் ஒரு மறுபக்கத்தின் மூச்சுக்காற்ற…
-
- 0 replies
- 1k views
-
-
சுதந்திரம் கறுப்புநாள் சுதந்திம் என்பது ஏது..!? சுதந்திரத்தால் வந்ததே கேடு..! வனவேடன் தருவானா..? மானுக்கு சுதந்திரம் சுதந்திரம் கேட்டால் பரிசாக தருவானே குண்டு..! குளத்து மீனுக்கு கொக்கு கொடுக்கலாம் சுதந்திரம் காட்டு முயலுக்கு வீட்டுநாய் கொடுக்கலாம் சுதந்திரம் சிங்கள ஆட்சி கொடுக்குமா..? தமிழர்க்கு சுதந்திரம் தமிழர் பிணம்தின்னும் இனவாதஆட்சி தந்திடுமா சுதந்திரம்..!? கடலலைக்கு தடைபோட நினைத்திடும் காவிமொட்யைர் ஆட்சி சுடுமணலுக்கு தடைபோட நினைத்திடும் சித்தாத்தர் ஆட்சி வரும் போர்குற்றமென்ற பெரும்புயலை தடுக்க நினைத்திடும் ஆட்சி பொங்கியெழும் உலக நீதிக்கனலில்; வெந்திட போகும் ஆட்சி..! கிழக்குதிக்கும் கதிரவரனை கையால் மறைக்க…
-
- 0 replies
- 390 views
-
-
-
இன்று face book இல் பகிரபட்ட கவிதை ஒன்று பணத்தை தேடி அரபுநாடுகளுக்கு செல்லும் ஒரு கணவனை நோக்கி மனைவி தனது ஏக்கம்களை கூறுவதாக அமைய பெற்ற கவிதை படிச்சு பாருங்க திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்! சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்! என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது ... காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்! சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்! பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்! அம்மா வருவதாக…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
-
உன் நெஞ்சக் கூட்டறையில் நிலவரசி முற்றத்தில் வந்திருந்து கதைபேசும் வரம் ஒன்று வேண்டும் :lol:
-
- 17 replies
- 1.3k views
-
-
ஆதிக்குடி எங்கள் அழகான தமிழரென அகிலத்தில் வாழ்ந்திருந்தோம் - இன்று நீதிக்குப் போராடும் நிலை ஒன்று வந்ததால் நிம்மதி தனை இழந்தோம் சாதித்த புகழதும் சரித்திர வாழ்வதும் சந்ததி தான் கண்டது - நாங்கள் போதித்த பொறுமையால் புகலிடம் பறிபோக புவிதனில் அகதியானோம் வந்தேறு குடியான சிங்களர் வாழவே வகையாக வாழ்வளித்தோம் - அவர் சொந்தமாய் எம்மண்ணைச் சுரண்டியது தெரியாது சுயமாக நாம் இருந்தோம் ஆதிக்க வெறிகொண்ட அந்த ஒரு நிலையதில் அடங்கியே தான் போவதோ சாதி;க்கப் பிறந்திட்ட சந்ததி என்பதை சரித்திரம் மறந்து போமோ எரிமலையாகவே மறவர்கள் கூட்டமது எதிரியைக் களமாடுவார் - அவர் எரிநெருப்பாகவே பொங்கிடும் தீயினில் எதிர்காலம் தனை வெல்லுவார் தென்னை பனையோடு தேமாங்கனி என்று தேனாறு பாய்ந்த எங்க…
-
- 4 replies
- 972 views
-
-
சிறுவயதுகளில் வாழ்க்கையின் வழிகளில் காலம் ஒரு கவிதையாக வழிந்தோடிக்கொண்டிருந்தது கனவில் தோன்றும் கவிதைவரிகளைப்போல வாழ்தலின் இனிமைகளைமட்டுமே கண்களைத்திறந்தபடி ரசித்துத் திரிந்தேன் உடலின் ஒவ்வொரு நுண்ணிய அணுக்களிலும் புகுந்து இயற்க்கை நான் என்னும் ஆன்மாவை வனைந்து கொண்டிருக்க காலமடியில் இளமை வழிந்தோடிக்கொண்டிருந்தது.. அணல் எறிக்கும் புழுதி வீதிகளில் உலாவித்திரியும் என் பாதங்களை பூமித்தாய் வாஞ்சையுடன் நீவிக் கொடுப்பாள் அப்பொழுதெல்லாம் பூமிக்கு நான் பாரமாக இருப்பதாக உணர்ந்ததில்லை... அம்மாதரும் முத்தங்களை வாங்கியவாறே எதற்க்கிந்த வாழ்தலென்ற புரிதல் இல்லாவிட்டாலும் நிறைவாக அறிதல் குறித்த தீராப்…
-
- 7 replies
- 1.2k views
-
-
சுகம் எதுவோ? திங்கள் முகம் சிரிக்க திக்கெட்டும் ஒளி பொங்க தங்க மண் பரப்பில் தலை சாய்ந்தால் அது சுகமா? தென்றல் தாலாட்ட தென்னங் கீற்றிசைக்க தன்னந் தனியிருந்து தான் இரசித்தால் அது சுகமா? முல்லை முகையவிழ முசுரங்கள் தள்ளாட - அதன் எல்லையில் போயிருந்து எழில் பருகில் அது சுகமா? மெல்ல மினுக்கி - வான் மின்மினிகள் கண்சிமிட்ட காத்திருந்நு அவ்வனப்பில் கரைந்திடின் அது சுகமா? இன்னும் வளரும்....... சுகம் தேடும் ஆதிவாசி
-
- 35 replies
- 4.7k views
-
-
என் அக்காச்சி அன்பான பெற்றோருக்கு நிலவொத்த அழகாய் பிறந்தவள் என் அக்காச்சி . அவளின் வேண்டுதலால் ஈரைந்து வருடங்களின் பின் வந்திதுத்த் செல்லப் பயல் நான் ஈரைந்து மாதங்களில் இருந்தே என்னை சீராட்டி பால் புகட்டி தூக்கி திரிந்தவள். துள்ளித்திரியும் பருவத்தே துடுக்கடக்கி தலைசீவி பள்ளிக்கு அனுப்பி வைத்தவள். சக நட்புடன் சண்டை என்றால் கோவித்து நான் முடங்க நீதி கேட்கும் தேவதை அவள். சின்ன சின்ன தவறு செய்தால் திருத்தி விடும் தாயவள். அம்மாவும் அப்பாவும் காய் கறி தோட்டத்தில் பணி செய்ய வேளைக்கு சோறு தந்து வேண்டிய உதவி செய்து சமயத்தில் என் சல்வை தொழிலாளியும் கூட . உயர்கல்வி கற்க வேற்றிடம் செல்ல நேர்கையில் விழி நிறைந்த கண்களுடன் வழிய…
-
- 6 replies
- 1.2k views
-
-
என் தங்கை இசைப்பிரியா கண்ணுக்கு எதிரிலேயே கற்பழித்துக் கொல்லப்பட்ட அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு ஒரு கையாலாகாத அண்ணனின் கண்ணீர் அஞ்சலி. என்ன அழகடி உன் தமிழும் தைரியமும்! சின்னஞ்சிறு இதழ் விரித்து சிங்கார உச்சரிப்பில் செய்திகள் வாசிப்பாயே! இப்போது நீயுமொரு செய்தியாகிப் போவாய் என்று கனவிலேனும் யோசித்தாயா? இப்போதுதான் பூத்த பனித்துளிகூட விலகாத ஒரு காலைரோஜாவின் அழகைக் கொண்டவளே! எப்படியடி சிக்கிக் கொண்டாய் திமிர் பிடித்த சிங்களனின் திணவெடுத்த கரங்களுக்குள்? ஆடையின்றி பிணமாக ஒரு சிங்கள காட்டுக்குள் நீ படுத்திருந்த காட்சி...! நீ துடிதுடிக்க கொல்லப்பட்ட போதும், உன் துணிமணிகள் அவிழ்க்கப்…
-
- 13 replies
- 2.3k views
-
-
வணக்கம், இது கவிதைப் பகுதியில் நான் பதிந்தாலும் இது நிச்சயம் கவிதை அல்ல. பொங்கல் எனக்கு பல வழிகளில் முக்கிய தினம் ஆகின்றது. பொங்கலுடனான என் நினைவுகளை ஒரு கட்டுரையில் சொல்வதை விட கவிதை போன்ற ஒரு மொழியில் உடைத்து சொன்னால் சரியாக இருக்கும் என்று இதை எழுதுகின்றேன்.... எனக்கு இன்னும் என் நினைவுகளில் ஊரில் பொங்கிய பொங்கலின் வாசம் மிச்சம் இருக்கின்றது நாக்கின் ஓரத்தில் இனிப்பின் இறுதி சொட்டுகளை கவனமாக காக்கின்றேன் இன்னும் முன்னொரு காலத்தில் பொங்கல் பொங்கிய என் பாட்டியின் தொலைந்து போன வடையின் ருசியும், அதைக் காவு கொண்ட காக்காவின் பசியும், அதையும் (கூட) சூறையாடிய நரியின் தந்திரமும் இன்னும் என்னுடனே வருகின்றன *************** …
-
- 6 replies
- 1.3k views
-
-
விண்தொடும் கனவுகள் வீணாகிப்போய் மிதியடி மண்ணாய் தட்டப்படுகையில், அடையாளம் பறிக்கப்பட்டு அடையாளம் குத்தப்படுகிறது அறிந்தவர்களின் அறியாமையால் , பிறிதொரு இருப்பிடம் தேடி அலைகிறது அவர்களின் அவதானம் ......................... உள்ளொருபுள்ளியில் இருக்கிறது இன்னும் அவர்களின் எச்சவடு! எனை கடந்து அவனை கடந்து _பின் மற்றொருவனை அனைத்து செல்கிறது அவதானம் ஆங்காங்கே எச்சவிளைவுகள் பயங்கரமாய் எதிரொலிக்க எதையும் கண்டுகொள்ளாத _அதன் பயணம் தொடர்ந்து கொண்டு ............... இருளாய் வியாபிக்கிறது என்னுள் ஒரு கேள்வி ! இன்னவாகி வருவான் _என்ற எதிர்பார்ப்புகளை எங்கு,எப்படி புதைப்பேன் இனி ................!
-
- 5 replies
- 1.2k views
-
-
-
(விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட முன்னாள் தளபதி கேணல் கிட்டு மாமா நினைவாக...) வெடியோசை எழுந்தது எங்கள் நெஞ்சோசை அழிந்தது களத்தோடு களமாடி கோட்டைக்குள் அடித்தெழுந்த அந்தப் புயலும் ஓய்ந்தது...! தங்க தமிழீழ வேங்கையது வங்கக் கடல் நடுவே சரிந்தது...! அசோகச் சக்கரத்தின் அகோரத் தாண்டவம் - எங்கள் மாமாவின் உடல் கிழித்தது...! ஆதிக்க வெறி பிடித்த அகிம்சா தேசமது அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...! தமிழீழ அன்னையவள் கொடிதனைச் சுமந்தவன் ஆழி தன் அலையோடு மீண்டிட்டான் தமிழ் மண்ணை...! குரலோசை எழுந்தது - அது அவன் புகழோசை சொன்னது விடியலின் தாய் மகன் விடிவெள்ளியான கதை முடிவின்றிச் சொன்னது....! தர்மம் வெல்லும் என்பது காலத்தின் கோலம் என்றத…
-
- 11 replies
- 1.9k views
-
-
நான் எப்பவுமே கோவிலுக்கு வந்த உன்னை திட்டுறதுக்கு தான் வருவேன் ஆனா இப்ப உனக்கு நன்றி சொல்ல வந்து இருக்கேன் அந்த பொண்ணு சொன்ன வார்த்தை மட்டும் முதல் சொல்லி இருந்தால் நான் இந் நேரத்துக்கு உயிரோட இருந்திருக்க மாட்டேன் நான் யாரு எப்பல்லாம் மறக்கிறானோ? அப்ப எல்லாம் நீ சரியாய் ஞாபகபடுத்திர எல்லாருக்கும் தெரியுர மாதிரி முகத்தை படைக்கிற நீ ஏன் யாருக்கும் தெரியாத மாதிரி "மனசை" படைக்கிற...
-
- 2 replies
- 901 views
-
-
என் கனவில் வந்த பூதம் ஒன்று விடிந்த பின் நான் பேருந்துக்காக காத்திருக்கையில் அருகில் வந்து bus stand இல் நின்றது நானும் பூதமும் பேசிக்கொள்ளவில்லை பூதம் தன்னைக் கண்டவுடன் நான் அதிர்வேன் என்று நினைத்து ஏமாந்து கொண்டது என்னை நேரில் கண்டவுடன் பூதம் தலை தெறிக்க ஓடும் என்று நானும் ஏமாந்து கொண்டேன் பேருந்தில் பக்கத்தில் அமர்ந்து கொண்டாலும் தன் கண்களை மூடியே பயணித்தது அது அலுவலகத்திலும் என் பக்கமே நின்று கொண்டிருந்தாலும் ஒன்றும் பேசவில்லை அது நானும் ஒன்றும் கேட்கவில்லை இடையிடையே நக்கல் சிரிப்பும் நளினமும் செய்து கொண்டுதான் இருந்தது பூதம் அதன் குளப்படி பழக்கங்களை மாற்ற முடியுமா என்னால்? **…
-
- 6 replies
- 1.3k views
-
-
என் விம்பத்தை கண்ணாடியில் பார்க்கின்றேன் உடைந்து போன ஒரு கண்ணாடியில் தெரியும் சிதறிய முகமாய் எனக்கு என் முகம் தெரிந்தது சிதறல்களில் தெரிந்த என் முகம்கள் ஒவ்வொரு முகமூடி அணிந்து இருந்தது இப்படி முன்னம் என் முகம் இருக்கவில்லை அதற்கே அதற்கு என இரு கண்கள் இருந்தன இரு செவிகள் இருந்தன ஒரே ஒரு நாக்கும் ஒரு சோடி உதடுகள் மட்டுமே இருந்தன எப்ப பார்த்தாலும் இது என் முகம் என்று உரிமை கோரியிருந்தேன் ஆனால் கண்ணாடியில் இப்ப தெரியும் என் முகம் எனதில்லை என் முகத்தை என்னிடம் இருந்து திருடியது யார்? என் கண்களை அகற்றி தம் கண்களை செருகியது எவர்? எனக்கே எனக்காக இருந்த குரலையும் திருடி அதில் தம் குரலையும் பத…
-
- 15 replies
- 2.4k views
-
-
முதல் விசா முடியும் பொழுது முதல் தங்கையின் திருமணம் முடிந்திருந்தது இரண்டாம் விசா முடியும் பொழுது இளைய தங்கைக்கு இருபது பவுன் சேர்க்க முடிந்திருந்தது மூன்றாம் விசா முடியும் பொழுது மூனு சென்ட் நிலத்தில் வீடு வாங்க முடிந்திருந்தது நான்காம் விசா எடுக்க தயாரான போது நரைத்திருந்தது திருமணமாகமலே எனக்கு “தலைமுடி” படித்ததில் பிடித்தது (முக நூல் )
-
- 2 replies
- 869 views
-
-
அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள் ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள் உருகும் உன்னத மெழுகு நீங்கள் தேயும் ஒப்பற்ற சந்தனம் நீங்கள் தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் நீங்கள் திறமைகளை பயிற்று வித்த ஆசான் நீங்கள் சான்றோனாக்கி மனம் மகிழ்ந்தவர் நீங்கள் சந்தோசங்களை வழங்கிய வள்ளல் நீங்கள் ஒய்வறியாது உழைக்கும் செம்மல் நீங்கள் ஒரு நாளும் கவலை கொள்ளாதவர் நீங்கள் கடமையைக் கச்சிதமாய் முடித்தவர் நீங்கள் மடமையை முழுமூச்சாய் எதிர்த்தவர் நீங்கள் பகுத்தறிவை எனக்கு கற்பித்தவர் நீங்கள் மூடநம்பிக்கை அகற்றி தன்னம்பிக்கை தந்தவர் நீங்கள் எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? என்றவர் நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் வாழ்பவர் நீங்கள் வாழ்வியல் கருத்துக்களை வழங்…
-
- 7 replies
- 1.4k views
-
-
நீ எனக்கு வேண்டாமடி சைனாவுக்கு போகவேண்டுமானாலும் சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை என்னைப் பக்கத்து தெருவிற்குக் கூட பைக்கில் போக சொல்லுகிறார் இவரை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது? *** தேர்வு சமயங்களில் இரவு முழுவதும் படித்துக்கொண்டிருப்பதோ நான் விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்! அவளை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது? *** அலுவலகம் செல்லும் அண்ணன் மடித்து வைத்த சட்டையை வெட்டியாய் ஊர்சுற்ற போகும் நான் அணிந்துகொண்டாலும் ஆனந்தப்படுவானே? அவனை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது? *** நான் செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான் நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட புன்னகையோடு தருவாளே என் தங்கை! அவளை விட்ட…
-
- 5 replies
- 1.2k views
-
-
விண்ணை தாண்டி விழிக்க வைக்கிறாய் உன் விழிகளாலே அன்பை காட்டி அரவணைக்கிறாய் உன் அழகாலே காதல் என்று சொன்ன போது மட்டும் ஏனடி அண்ணா என்று சொல்லி என்னை புதைத்து விட்டாய் மண்ணுக்குள்ளே...
-
- 2 replies
- 951 views
-