கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கடவுளே அங்கே இருந்து இங்கே ஓட்டுபவர்களையும் தெரியவில்லை. இங்கேயிருந்து அங்கே ஓட்டுபவர்களையும் புரியவில்லை அடுத்த பிறப்பிலாவது ஆறறிவைக் கொடு
-
- 7 replies
- 1.2k views
-
-
தேவதையாய் நீ வந்த போதே நான் தெரிந்திருக்க வேண்டும் எனக்கு தெரியாமலே போய்விடுவாயென்று...♥
-
- 0 replies
- 616 views
-
-
ஆண்களின் நட்பு உதை பந்து போல எவ்வளவு உதைத்தாலும் உடையாது பெண்களின் நட்பு கண்ணாடி போல அவர்களை போலவே நொறுங்கி விடுகிறது...♥♥
-
- 0 replies
- 858 views
-
-
தாயின் மடி போல் தலையணை வேண்டும் தூங்கும் நிலையில் மனநிலை இல்லை வந்து போகுது வரவும் செலவும் நொந்து போகுது மானிட இதயம் உழைத்து உழைத்து உருக்குலைந்த பின் எஞ்சி இருப்பது நோயும் நொடியும் குருவித் தலையில் பனம் பழம் போலே ஏழை உழைப்பில் எத்தனை செலவு காற்றும் கூட காசாய் போனதால் வாழ்வில் எப்படி வசந்தம் வீசும் சுரண்டிய மீதியே ஊதியம் ஆகையில் உயர்வது எப்படி? வாழ்வு மலர்வதெப்போ? மனசு நிறைந்து கனவுத் தூக்கம் கண்டு மகிழ்வதெப்போ? தாயின் மடி போல் தலையணை வேண்டும் நோயில் படுக்கினும் தாயின் மடியே தலையணையாய் வேண்டும்.
-
- 6 replies
- 2.8k views
-
-
மஞ்சளும் மண்ணும் கலந்த நிறத்தில் பொன்வண்ண அச்சுடன் என்றோஎடுத்த இன்சுரன்சிற்கு இன்றும் அனுப்புகின்றான் டயரி எழுதாத சில பக்கங்களுடன் கிறுக்கிய பல குறிப்புகளுடன் பழையதை தூக்கி அட பதினொன்றாவதா என அடுக்குகின்றேன். சிரிக்கும் புதுப்பக்கதில் படுக்கும் நேரத்தில் சிவப்பு பேனாவால் வைய படபோகும் மாந்தர் அல்லது மானிடம் எதுவுமாகலாம். அன்றைய நாள் தலைப்பில் எனக்கு எதிரியாக எவன் பட்டாலும் அன்று அவனுக்கு தான் அத்தனை பூசைகளும் அபிசேகமும் போனவருட டயரியின் பக்கங்கள் சில இப்பவும் மணக்குது செம்புதூக்கி சோபா, விட்டுவாங்கி யோ.கா, நாய்வைத்தியன் நடேசன் இலக்கிய கள்ளன் பூபதி என்று மூத்திரம் தொட்டு எழுதியதால், நேரில்காண்கையில் நடுமூஞ்சையில் பிசகாமல் அடிப்பேன் து…
-
- 8 replies
- 1.3k views
-
-
யாழில் செய்தி பார்த்தேன் பியர் உடலுக்கு நல்லது பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4 தற்பால்சேர்க்கை சாத்திரியின் கொலைவெறி அடுத்த பிறவியில் பூனையாகப்பிறப்போம் காணாமல் போகின்றோம் 2012 இல் காணாமல்தான் போவோம்.
-
- 5 replies
- 1.4k views
-
-
-
2012 டே எப்படி உனை நான்... ---------------------------------------- மகிழ்ச்சி வெள்ளத்தில் அகதியாய் நான் வாழும் நாடு யுத்தச் சூறாவளியுள் தொலைந்த எம் தேசமே எப்போது எம் வாழ்வில் புத்தாண்டு மலருமென ஏக்கமுடன் பார்த்திருக்கும் குழி விழுந்த கண்களுடன் கூன் விழுந்த தோற்றமுடன் தேற்றுவாரற்ற இனமாக என் இனமே துவண்டு துரும்பாகிக் கிடக்கையிலே எப்படி உனை நான் மகிழ்வோடு... 2012 டே எம்மினத்தின் ஒற்றுமை கொணரும் ஆண்டாக வேற்றுமை களையும் ஆண்டாக எம் தலைநிமிரும் ஆண்டாக மலராதோ மலராதோ...... மலர்விக்கும் கடனெமதானால் வரும் ஆண்டுகள் யாவும் எமதே!
-
- 1 reply
- 728 views
-
-
புதுமைகள் ஏந்திய, புதிய ஆண்டொன்று பிறக்கட்டும்! பூக்கள் மலர்வது போல! புதுமையாக! பூக்கள் மரங்களில் இருக்கட்டும், பிடுங்கி எடுத்து மாலைகளாக்க வேண்டாம்! சர வெடிகள் இல்லாமல், சாதாரணமாக மலரட்டும்! வெடிச்சத்தம் கேட்டாலே, வேதனை கலந்த நினைவுகளே, வெடித்துக் கிளம்புகின்றன! புத்தம் புதுச் சேலைகளும், பட்டு வேட்டி சால்வைகளும், தொட்டுப் பார்க்க நேரமின்றித், தம் பாட்டில் தூங்குகின்றன! சீர் கொடுத்த நகைகள் கூடச், சேரிடம் தெரியாது, வருடக் கணக்காக, வங்கிப் பெட்டிகளில், வருகின்ற தலைமுறை பார்த்து, ஆறுதலாகத் தூங்குகையில், இன்னும் நகை எதற்கு? கஷ்டமென்று வரும்போது, கை கொடுக்க என்கிறோம்! இதுவரை, இல்லாத கஷ்டமா, இனிவரப் போகின்றது? …
-
- 9 replies
- 1.3k views
-
-
கவிதை எனும் பெயரில்.... நண்பர்களே, கவிதையெனும் பெயரிலிங்கு கண்டபடி கருத்துக்கள் எழுதுகின்றார் சிலபேர்கள்; கவிதை என்றால் என்னவென்று அறிந்திடாத கடைகெட்ட மூடர் அதை ரசிக்கின்றார்கள்! பெண் என்ற பெயராலே எழுதிவிட்டால் பேயாக ரசிப்பது போல் கருத்துச் சொல்லி கண் என்றும் உயிர் என்றும் கசிந்துருகி கருத்துக்கள் சொல்லி,அதை ருசிக்கின்றார்கள். மூடர்கள், முட்டாள்கள், தமிழ் மொழியின் முடவர்கள், குருடர்கள், செவிடு கொண்ட கேடர்கள் அவரைநாம் என்ன சொல்ல? கிறுக்கர்கள்தாம் அவரை மன்னிப்போமா? நல்ல தமிழ் எதுவென்று அறிந்ததில்லை; நயமான கற்பனைகள் கொண்டதில்லை; சொல்ல வரும் கருத்தில் ஓர் புதுமையில்ல; சுவையாக எழுதிடவும் பழக்கமில்லை! ஆனாலும் முகநூலில் எழுது…
-
- 27 replies
- 3.2k views
-
-
யார் சொன்னது வழிந்தோடும் என் இளமைக்கால நினைவுகளை மேய்ந்தபடிபோகும் வயல்க்கரை மாடுகளின் பாசைகளைப் புரிய முடியாதென்று...? யார் சொன்னது நான் தொலைத்துவிட்ட சிறுவன் நடந்துதிரிந்த வீதிகளில் எஞ்சியிருக்கும் புறாக்களினதும் புலுனிகளினதும் கவலைப் பாட்டினை விளங்கமுடியாதென்று....? யார் சொன்னது வெட்டைக் காணிகளின் சம்புப் புற்களுக்கிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குந்தியிருக்கும் தும்பிகளின் இறக்கைகளில் இருந்துதொடங்கும் என் பால்யகாலக் கவிதைகளைப் படிக்க முடியாதென்று...? அவைகளின் மொழிகள் உனக்கெப்படித் தெரியுமென்ற வியாக்கியானங்களை விலத்திவையுங்கள்... அவைகளின் மொழிகளில்தான் மீட்டிக்கொள்கிறேன் கிழித்து வீசப்பட்டதால் பொருளை இழந்துப…
-
- 13 replies
- 2.5k views
-
-
முள்ளிவாய்க்காலும், கொல்லிஅலைக் காலரும் ... அள்ளிய உயிர்கள் கொஞ்ச நஞ்சமல்ல!!! கடவுளரும் கண்மூடிப் பார்த்திருக்க ... கடலன்னைகூட இரக்கமற்றுப் போனாளே!!! போற்றித் துதித்த மரியன்னை கூட ... வேடிக்கைதான் பார்த்திருந்தாராம்! கடவுளர் மேல் நம்பிக்கை போய்.... ஏழு வயசாச்சு எனக்கு! - ஆனாலும், மீண்டும் சோதிச்சு ... மூன்று வருசமாகுது! ! முள் முடி தரித்த யேசு கூட.... செல்லடிக்கு பயந்து ஒளிந்து போனாரோ?! - இல்லை, புத்தரிடம் சரணடைந்து.... முள்வேலிக்குள்.... சிலுவை சுமந்தாரோ?! வைக்கோற் போருக்குள் பாலகன் பிறந்து மகிழ்ந்திருக்க... நம் பாலகர்களை ...பனை வட்டுக்குள்ளும் முள்வேலிக்குள்ளும் அல்லோ, பொறுக்கியெடுத்து... பொங்கியழுது ...பின் பொறுத்துக்கொண்டோம்!!! …
-
- 16 replies
- 1.8k views
-
-
கண்ணாடி அறைக்குள்ளே காற்றாட கணிப்பொறிமுன் கண்கள் தேட கழுத்திலேயே சுருக்கு கயிறை கடிக்கொண்டு திரியும் வாழ்க்கை காதலை கூட கருமியைபோல குறுஞ்செய்திக்குள் குறுக்கிவிட்ட கூரமான வாழ்க்கை போக்குவரத்து நிறுத்தங்களில் நிராகரிக்கப் பட்ட நிமிடங்களை நிம்மதிக்காய் தேடும் நிஜமில்லா வாழ்க்கை கட்டியவளை அணைப்பதை கூட கடிகாரத்துக்குள் ஒதுக்கி வைத்த கயமைதனமான வாழ்க்கை மினுமினுக்கும் விளக்குகொளியில் மிடுக்கான உடையில் போதையில் மிதக்கும் வாழ்க்கை இதுமட்டுமா வாழ்க்கை இலைமீது மழைத்துளி அதை கொட்டி விளையாட காதலி; இமை இடையில் வரும் இன்ப கண்ணீர்துளி அதற்காகவே பிறந்த அம்மா கிள்ளி விளையாடி கிள்ளையோடு சண்டைகள் …
-
- 2 replies
- 1k views
-
-
வேற ஒன்றை தேடும் போது இன்று நான் 1996 இல் 22 வயதில் எழுதிய ஒரு கவிதையை Google ஆண்டவர் கொண்டு வந்து காட்டினார்.
-
- 19 replies
- 3.4k views
-
-
நேசித்து பாருங்கள் முடியவில்லை என்றால் பிறர் நேசிப்பதை யோசித்து பாருங்கள் அன்பு உங்களை அடிமையாக்கி விடும்...
-
- 0 replies
- 1.7k views
-
-
நாவீரமாய், விலக்கவோ இழக்கவோ முடியவில்லை நினைவுகளை ............. கள்,கள்ளகசிப்பு ௬ட தந்ததில்லை வெடித்தெழும் போதை _உன் விழி மடிக்கையில் விழுதுப்பாலாய் ஒட்டிவிட்டது வெண்சிரிப்பு _இனி அழுது முடியுமோவென் பிழைப்பு . பாடை மேளம் எல்லாம் தயாராக, ஊர்வலம் பிந்துகிறது . அட நான் இன்னும் சாகவில்லையே ............! வத்தாக்கிணற்றடியில் முத்தாதகொவ்வை பளபளப்பு , பாவற்காய் மினுமினுப்பு , என்னவோ செய்யுது , சரம் தூக்கி நடப்பது , றோட்டில் நாயை துரத்தி ஓடி மகிழ்வது _என் மட்டுமிருந்த எனை தாடி சொறிந்து வானம் பார்க்க வைத்த கொடுமை ....... காத்தடிக்க நீவர சைக்கிள் கடையிலிருந்த எனக்கல்லவா வேர்த்தது ? எப்பவோ …
-
- 10 replies
- 1.6k views
-
-
மாரீசன் என்ற மாயமானில், மதியிழந்த சீதா தேவியின், மயக்கம் போல, இரவு பகலாகத், தினமும் பூக்கின்ற,, இணையத் தளங்களின் பூக்களால், பாலும், நீரும் கலந்த கிண்ணத்திளிருந்து, பாலை மட்டும் பிரித்தெடுக்கும், வல்லமையில்லாத, பாவப் பட்ட அன்னப் பறவையாய், உண்மையும் பொய்யும், ஒன்றுடன் ஒன்று, குலவிக் கலவும் , உலகத்தில், உண்மையைத் தேடுகின்றேன்! பொன்னும், மணியும், புன்னகைகளும் அணிந்து, பொய்மை வலம் வருகின்றது. மண்ணின் மைந்தர்கள், என்ற கவசம் பூட்டித், தென்றல் காற்றின் மென்மையோடு, பொய்மை உலா வருகின்றது. புனிதமேனும் பேழையில். பத்திரமாகப் பூட்டிவைத்துப், பீடத்தில் அமர்த்தித், தூவிய அர்ச்சனைப் பூக்களிலும், துளித் துளியாய்ச் சிந்திய, துவர்ப்பு…
-
- 23 replies
- 3.1k views
-
-
கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளைக் கனவுகள்.. ஒரு பழங்கிணற்றின் அடியில் உடையும் நீர்க்குமிழியென உடைகிறது என் ஒவ்வொரு ‘தேசத்தின் கனவுகளும்..’ கார்த்திகை தீபத்தன்று பனைப் பூ முடிந்து சிறுவர்கள் சுழற்றும் மாவலியிலிருந்து உதிரும் நெருப்புமீன்களாக பறந்து பறந்து வெளிச்சமிழந்து மண்ணில் புகுகிறது – என்னந்தக் கனவுகளும் ஆசைகளும்.. எட்டி கிளை நுனி பிடித்திழுத்து பறித்துக் கொள்ளும் இலைகளாகவும் உதிர்ந்து காலுக்கடியில் மிதிபடும் மலர்களின் கண்ணீர் தொய்ந்த வாசமாகவும் எம் கனவுகள் இத் துரோக மண்ணில் காய்ந்துப் போவதின்னும் எவ்வுயிர் பிரிந்து மிஞ்சும் கடைசி பொழுது வரைக்குமோ.. அறியோம்; அறியோம்; இறக்கை முறித்து - உயிர் உதிர்த்து - உடல் முடைந…
-
- 1 reply
- 713 views
-
-
நான் என்றுமே நேரம் தவறுவதில்லை எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டதுதான் பிந்திச் செல்வதால் நீங்கள் படும் அவஸ்தையை பக்கத்தில் இருந்து அடிக்கடி பார்ப்பவன் நான் ..... நீங்கள் தள்ளாடி நடந்ததாய் எந்த பதிவும் இல்லை என்னிடம் எத்தனை மணிக்கு வந்தாலும் ''எல்லாரும் சாப்பிட்டாச்சா'' என்று கேட்பதில் நீங்கள் தனிரகம்.... அதிகாரம் செய்வது உங்களுக்கு பிடித்தமானதொன்று ஆனால் பணியாட்களிடமும் அன்பு தான் அடிக்கடி பொறாமைப்படுவேன் உங்களைபார்த்து ''எப்பிடிதான் இவரால மட்டும் முடியுதோ ''என்று ஆனாலும் அருமையான அப்பா எனக்கு !!!!!!! ''செய்யமாட்டேன்'' என்று சொல்லி அதை செய்துமுடித்து செய்யாதது போல இருப்பது உங்கள் கை வந்த கலை அது தெரிந்த போதிலும் உங்களிடம…
-
- 13 replies
- 11.6k views
-
-
இது......... இந்தப் பாலகனது இரண்டாவது பா . எனது சகபடைப்பாளிக்குப் பதிவாகப் போட்டாலும் , பாணர்கள் வரிசையில் இடம்பிடிக்க ஓர் உந்தல் . பாலகனைத் தூக்குவீர்களா உறவுகளே??????????? நிறுத்திடுவோம் இன்னுமோர் நினைவை எம்மனதில் ஊடறுத்து ஆழமாகவே பார் எங்கும் பாங்காகக் களிப்புற்றார் பாலகனின் வருகையை வந்தான் பாலகன் எல்லோருக்கும் மகிழ்சியாக!!!!! எமக்கு மட்டும் ஆழிப் பேரலையாக ஏனேனில் நாம் சபிக்கப்பட்ட ஈனப்பிறவிகளாம்!!!!!!!!!!!
-
- 7 replies
- 1.2k views
-
-
அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும் ஞாபகம் கொள்வோம். அழகிய கனவுகளாலும் ஆயிரமாயிரம் கற்பனைகாளாலும் செதுக்கப்பட்டு சிற்பமானது அவனது வாழ்வு. பாலன் பிறக்க முன்னொரு பொழுதிருந்த 24.12.10 அதிகாலை 5மணியோடு அவனது வாழ்வு முடிந்து போயிற்று. காரணம் அறியப்படாது அவனது கனவுகளை அழித்துக் கொண்டு காற்றாய் ஓடிய புகையிரதப் பாதையில் தலைசிதறிக் கதை முடிந்து 30வயதோடு தன்னை முடித்துக் கொண்டான். உறைபனிக்குளிரில் அந்த விடிகாலையில் அவனது கதை முற்றுப் பெற்றது. தண்டவாளத்தில் தலையைக் கொடுத்துத் தன்னையழித்தானாம்….! விறுவிறென்று செய்தி வீச்சாய் பரவி….. கதைகள் பலவாய் அவன் கூடக் கடைசிவரையும் பியரடித்து நத்தார் தினம் கொண்டாடிய நண்பர்கள் மூலமாய் அவ…
-
- 8 replies
- 1.7k views
-
-
தமிழீழம் கிடைத்தது போல் ஈழமண் துள்ளியது! எமதீழம் வந்து குந்தி... இந்தியமும் சொல்லியது! அமைதி என்று வந்ததற்காய், கொஞ்சக் காலம்... சொந்தங் கொஞ்சித்தான்... கோலம் போட்டார்கள்!!! சில காலை விடிவதற்குள்... கோலங் கலைந்து, அலங்கோலமான காலங்களில்... அரி மிஞ்சிய அசிங்கங்களை அரங்கேற்ற ஆரம்பித்த பாரதம், பாதகம் தனைமட்டும் பதறாமல் தொடங்கியது!!! பஞ்ச வேண்டுதலோடு பட்டினி கிடந்து போராடி... நலிந்து குறுகி, பார்த்தீபன் மடிந்த போதுதான்... உணர்ந்திருப்பார் மகாத்மா, கோட்சேயின் துப்பாக்கிக் குண்டில்... தான் சாகவில்லையென்று! வீணர்கள் பார்த்து ரசிக்க ...வீணாகிப் போனதோர் தியாகம்!!! பாரத தேசத்தின் பாதகங்கள்... புலி தரித்த ஆயுதங்களையும், பறித்து விட்டல்லோ தொடங்கியத…
-
- 14 replies
- 1.7k views
-
-
ஒவ்வொரு கணமும் உன்னை நினைத்திருக்க ஆசை ஓயாது கதை பேசி உன்னுடன் விழித்திருக்க ஆசை. செல்லமாக சீண்டி உன்னைச் சிணுங்க வைக்க ஆசை நீ சிரிக்கும் அழகினிலே சித்தம் பறிகொடுக்க ஆசை.. உறங்கும் போது உன்னைத் தாலாட்ட ஆசை.. ஊரெல்லாம் உன் பேரை சொல்லி வர ஆசை- உன் கோபப் பார்வையிலே குளிர் காய ஆசை. கொஞ்சும் குரல் இசையில் தினம் கூத்தாட ஆசை.. உன்னோடு கை கோர்த்து உலகம் சுற்றி வர ஆசை.. உயிர் பிரியும் போதும் உன் மடி சாய ஆசை...
-
- 14 replies
- 2.2k views
-
-
'வாழ்தல் எனும் மரணிப்பு' எனும் இந்தக் கவிதை சரிநிகரில் என் சொந்தப் பெயரில் வெளியாகி இருந்தது. அந்தப் பெயரை மறைப்பு செய்து இதில் கவிதையை மட்டும் ஒட்டி உள்ளேன் அன்று சிங்களவர்களுக்கு மத்தியில் இருந்து சொந்தப் பெயரில் எழுதும் போது இருந்த அச்சமில்லா மனவுணர்வு, இன்று போலித் தமிழ் தேசியவாதிகள் மலிந்து போன காலத்தில் இல்லை என்பது ஒரு வெட்கப்படவேண்டிய முரண்நகை
-
- 9 replies
- 1.2k views
-
-
காதல் ஒன்றும் பரீட்சையல்ல காகிதத்தில் எழுதிச் சொல்ல கண்களின் உரையாடல் மொழியொன்றும் தேவையில்ல இமைகளின் அசைவில் புகுந்திடும் காதல் இடைவெளியின்றி தொடர்ந்திடும் மோதல் ஆயிரம் கோடி ஆசைகள் ஆன்மாவில் ஊறும் அன்பின் பெருக்கம் அருவியாய்ப் பாயும் இதயத்தின் துள்ளல் இணைவினைச் சொல்லும் விநாடிகள் வந்து உணர்வுகள் ஊறும் விளக்கமின்றி உதடுகள் விரியும் விடிவினைக் கண்கள் விரைவாய் அழைக்கும் காதலன் முகம் காண ஆசைகள் பறக்கும் விழித்துக் கொண்டே கனவுகள் மிதற்கும் காதல் உள்ளம் அத்தனையையும் வெல்லும் ஆழ்கடல் தொலைவில் ஆன்மாக்கள் உலாவும் அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல் உணர்ந்தவர்களுக்கு மட்ட…
-
- 15 replies
- 3.2k views
-