வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
புதன்கிழமை, 17, நவம்பர் 2010 (11:6 IST) ஐஸ்வர்யாராய் மீது வழக்கு ஐஸ்வர்யாராய், ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக நடித்த குஜாரிஷ் இந்திப் படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது. இப் படத்தில் இருவரும் படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக நடித்து இருப்பதாகவும் இதனால் ஐஸ்வர்யாராய் மீது அபிஷேக் பச்சன் கோபப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதற்கிடையில் இன்னொரு சர்ச்சையிலும் ஐஸ்வர்யாராய் சிக்கியுள்ளார். அவர் இப் படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சியை மும்பை நகரம் முழுவதும் போஸ்டர்களாகவும், பேனர்களாகவும் விளம்பரம் செய்துள்ளனர். விளம்பரத்தில் ஐஸ்வர்யாராய் ஸ்டைலாக புகை பிடிப்பது போன்று காட்சி உள்ளது. இதற்கு சமூக சேவை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து…
-
- 1 reply
- 804 views
-
-
2012-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் கடந்த மாதம் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பதினைந்து திரைப்படங்கள் இருபத்து நான்கு பிரிவுகளின் கீழான விருதுகளுக்குப் போட்டியிட்டன. இவற்றில் ஆர்கோ, ஜீரோ டார்க் தர்டி மற்றும் லிங்கன் ஆகிய திரைப்படங்கள் நமது கவனத்துக்குரியவை. ஆர்கோ சிறந்த திரைப்படத்திற்காகவும் மற்றும் வேறு இரண்டு பிரிவுகளின் கீழும், ஜீரோ டார்க் தர்டி சிறந்த ஒலிப்பதிவுக்காகவும், லிங்கன் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக இரண்டு விருதுகளையும் வென்றுள்ளன. இந்த மூன்று திரைப்படங்களும் அமெரிக்காவின் இன்றைய உலக மேலாதிக்கத் திட்டத்துக்குப் பொருத்தமான பிரச்சாரத்தை ஒத்திசைவான முறையில் மேற்கொண்டிருக்கின்றன. ஆர்கோ: 1979 இல் நடந்த இரா…
-
- 1 reply
- 560 views
-
-
நாயகன் விதார்த்துக்கு திருமணம் நடந்தால் குலதெய்வம் கோவிலில் கிடாய் வெட்டி சாமி கும்பிடுவதாக அவரது அம்மா வேண்டிக் கொள்கிறார். இந்நிலையில், விதார்த்துக்கும் ரவீணாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதனால், தனது வேண்டுதலை நிறைவேற்ற குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடிவெடுக்கிறார் விதார்த்தின் அம்மா. அதன்படி, விதார்த், ரவீணா, விதார்த்தின் அம்மா, ரவீணாவின் பெற்றோர், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் என அவரது சொந்த பந்தங்கள் எல்லோரும் ஒரு லாரியில் குலதெய்வம் கோவிலுக்கு பயணமாகிறார்கள். அந்த லாரியை விதார்த்தே ஓட்டி செல்கிறார். கோவிலை நெருங்கும் சமயத்தில் எதிரே வந்த மோட்டார் வண்டியில் லாரி மோதி விடுகிறது. இதில், மோட்டார் வண்டியில் வந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோகிறார். விபத்து நடந…
-
- 1 reply
- 710 views
-
-
தொடர்ந்து தோல்விப்படங்களை கொடுத்து வந்த கவுதம் கார்த்திக் தற்போது வெற்றிப்பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். ரங்கூன், இவன் தந்திரனையடுத்து ஹரஹர மஹாதேவகியும் காப்பாற்றியதா பார்ப்போம். ஹரஹர மஹாதேவகி இந்த வார்த்தையை கேட்டதுமே இளைஞர்கள் சிரிக்கத்தொடங்கி விடுவார்கள். இதற்கு காரணம் அந்த வாட்ஸ்அப் சாமியாரின் ஆடியோக்கள் என்பது பெரும்பாலானவர்கள் அறிந்ததே. 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய படம் தான். படத்தின் முதல் காட்சியிலிருந்து க்ளைமேக்ஸ் வரை சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. டைட்டில் கார்டிலேயே அந்த வாட்ஸ்அப் சாமியாரின் அத்தனை வசனங்களும் இடம்பெற்று விடுகிறது. படத்தில் கதை நகரும்போது பின்னணியில் ஒலிக்கும் குரல் கூட அதே சா…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் திரைப்பட இயக்குனர் லெனின் எம் சிவம் அவர்கள் தீபம் கலையகத்தில் - உடன் யோகா தினேஷ்
-
- 1 reply
- 750 views
-
-
"வேலை சென்னையில; வீடு சென்னைக்கு வெளியில..." - 'டூ-லெட்' கதை சொல்கிறார், சந்தோஷ் நம்பிராஜன். Chennai: "நான் கவிஞர் விக்கிரமாதித்தனோட மகன். அப்பாவை வெச்சுத்தான் செழியன் சார்கிட்ட கேமரா உதவியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். மனைவி, குழந்தைகள் எல்லாரும் சிங்கப்பூர்ல செட்டில் ஆயிட்டாங்க. அம்மா, அப்பா சென்னையில இருக்காங்க. சென்னைக்கும் சிங்கப்பூருக்கு அடிக்கடி பயணம் பண்ண வேண்டிய சூழ்நிலை. இடையிடையில சினிமா வேலைகளையும் பார்த்துட்டு இருக்கேன்." ஆர்வமாக நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார், தேசிய விருது வென்ற 'டூ-லெட்' படத்தின் ஹீரோ சந்தோஷ் நம்பிராஜன். "கணவன்-மனைவி இரண்டு பேர் வீடுதேடிப் போறதுதான் 'டூ-லெட்' படக்கதைனு சொல்றாங்களே..." "20…
-
- 1 reply
- 818 views
-
-
இணையத்தில் நேற்று ‘ஹலோ மீரா’ திரைப்படம் பார்த்தேன். தெலுங்குப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். படத்தின் பெயருக்கு ஏற்ப படம் முழுதும் தொலைபேசி உரையாடல்கள்தான். இது இயக்குனருக்கு ஒரு பரீட்சார்த்தமான முயற்சி. ஆனால் அதை கையாண்ட விதமும் கதையை நகர்த்தும் நேர்த்தியும் நன்றாக இருந்தது. திருமணத்துக்காக தனது சொந்த ஊருக்கு வரும் பெண் எதிர்கொள்ளும் பிரச்சனையை கதை சொல்கிறது. Gargeyi Yellapragada அந்தப் பெண்ணாக நடித்திருக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அவர் மட்டும்தான் நடித்திருக்கிறார். திரையில் அவர் ஒருவரே இருக்கிறார். தாய்,தந்தை,சகோதரன், நண்பர்கள்,எதிர்காலக் கணவன், கடந்தகால காதலன், பொலீஸ் அதிகாரி என பலர் இருந்தும் அவர்கள் திரையில் இல்லை. மாறாக அ…
-
- 1 reply
- 491 views
-
-
சீரியல் கில்லர் Vs சீரியஸ் போலீஸ் ஜெயித்தது யார்? - நிபுணன் விமர்சனம் சைக்கோபாத் சீரியல் கொலையாளி ஒருவனை கண்டுபிடிக்க நடக்கும் விசாரணைகளும், கிடைக்கும் தடயங்களும், சில திருப்பங்களுமாக விரிகிறது நிபுணன். நகரத்தில் திடீரென ஒரு மர்மமான மரணம் நிகழ்கிறது. இறப்பதற்கு முன் சித்ரவதை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டு, இறந்த பின்பு துப்பாக்கியால் சுடப்பட்டு, முதுகில் நம்பர் எழுதி, முகமூடி மாட்டப்பட்டு என சிக்னேசர் கொலையாக இருக்கிறது. இறந்தவர் யார், எதற்காக கொல்லப்பட்டார், கொன்றது யார் என விசாரணையை ஆரம்பிக்கிறது அர்ஜூன் அண்ட் டீம். ஆனால், குற்றவாளியை நெருங்கும் முன் மறுபடி அதே மாதிரி அடுத்த கொலை நடக்கிறது. விஷயம் ரொம்ப ச…
-
- 1 reply
- 783 views
-
-
ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் காவல் துணை ஆணையர், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் போராடினால் அதுவே 'கொலைகாரன்'. கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிகிறார் விஜய் ஆண்டனி. ஒவ்வொரு நாளும் எதிர் வீட்டுப் பெண் ஆஷிமா நார்வல் வேலைக்குக் கிளம்பும்போதே அவரும் வெளியே கிளம்பிச் செல்கிறார். இந்நிலையில் ஒருநாள் ஆஷிமாவைச் சந்திக்க வரும் ஆந்திர அமைச்சரின் சகோதரர் கொல்லப்படுகிறார். காவல் துணை ஆணையர் அர்ஜுன் இந்த வழக்கை விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. குற்றம் நடந்தது என்ன? கொலையாளி யார்? இந்த வழக்குக்கும் விஜய் ஆண்டனிக்கும் என்ன சம்பந்தம்? போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகப் பதில் சொல்கிறது திரைக்கதை. 'லீலை' படத்தை…
-
- 1 reply
- 887 views
-
-
பாபா குகையில் ரஜனிகாந்த். விஜய் தொலைக்காட்சியின் காணொளிக் காட்சி. காணொளியை பார்க்க கீழே உள்ள சுட்டியின் மீது அழுத்தவும். http://ww1.4tamilmedia.com/index.php/2009-...el-rajini-video
-
- 1 reply
- 3.7k views
-
-
பிரபு-குஷ்பூ இருவரும் ஒரு காலத்தில் ராசியான ஜோடியாக வலம் வந்தவர்கள். தர்மத்தின் தலைவன், மைடியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, சின்ன வாத்தியார், கிழக்குக்கரை, பாண்டித்துரை, தர்மசீலன் என பல படங்களில் ஜோடியாக நடித்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கிடையே காதல் இருப்பதாகவும் நீண்டகாலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில பிரபல பத்திரிகைகளில் பிரபு-குஷ்பூவிற்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக செய்தி வெளியாகி, பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதையடுத்து, பிரபு-குஷ்பூ இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்திக்கொண்டனர். பின்னர், திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தபோதும், பிரபுவுடன் எந்த படத்திலும் குஷ்பூ இணைந்து நடிக்கவில்லை.இருவரும் வெவ்வேறு து…
-
- 1 reply
- 1.4k views
-
-
மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் - திரை விமர்சனம் திரைப்படம் மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நடிகர்கள் கென்னத் பிரனா, பெனலோப் க்ரூஸ், வில்லெம் டெஃபோ, டெய்ஸி ரிட்லி, ஜானி டெப், ஜூடி டென்ச். திரைக்கதை மைக்கெல் க்ரீன் இயக்கம் கென்னத் பிரனா. உலகம் முழுவதும் பிரபலமான பிரிட்டிஷ் எழுத்தாளர் அகதா கிரிஸ்டியின் 'மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஏற்கனவே 1974ல் ஒரு முறை திரைப்படமாகவும் பல முறை தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்த கதை என்றாலும் வசீகரம் குன்றாத மர்மத்தைக் கொண்ட கதை. ஜெருசலத்தில் ஒரு சிறிய திருட்டு வழக்கைத் தீர்க்கும…
-
- 1 reply
- 1.3k views
-
-
மதுரை: நடிகர் திலகம் சிவாஜிக்கு பெருமை சேர்த்த திரைப்படம் மட்டுமின்றி அவரையும், அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை பத்மினியையும் உச்சத்துக்கு கொண்டு சென்ற திரைப்படம் ‘தில்லானா மோகனம்பாள்’ இதே நாளில், கடந்த 1968 ஜூலை 27-ம் தேதி திரைக்கு வந்தது. 55 ஆண்டுகளை கடந்துள்ள இப்படம், மதுரை சிந்தாமணி தியேட்டரில் அன்றைக்கு திரையிடப்பட்டது. மதுரைக்கும், இப்படத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. சிவாஜிகணேசனுடன் மதுரையைச் சேர்ந்த சேதுராமன், பொன்னுச்சாமி சகோதரர்கள் படத்தில் நாதசுரம் வாசித்துள்ளனர். பாரம்பரிய கலைகளான நாதசுரம், நடனம் (ஆடல், பாடல்) ஆகியவற்றை உயர்த்தி பிடித்த படம் இது என மதுரையைச் சேர்ந்த திரை விமர்சகர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான கு.கணேசன் கூறுகிறார். அவர் மேலும், கூறியத…
-
- 1 reply
- 306 views
-
-
'மங்காத்தா' படத்திற்கு அஜித்தின் ரசிகர்கள் காத்திருக்கிறார்களோ இல்லையோ, நடிகர் ஜீவா ஆவலுடன் காத்திருக்கிறார். அப்படத்தை பார்க்க மட்டுமல்ல, அப்படத்தை வைத்துதான், தனது அடுத்த படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற ஆசையும்தான் இந்த காத்திருப்பிற்கு காரணம். ஜீவா, டாப்ஸியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வந்தான் வென்றான்'. இப்படம் எப்போதோ தயாராகி விட்டது. இருப்பினும் ஜீவாவின் 'ரௌத்திரம்' இந்த மாதம் வெளியானதால், இப்படத்தை அடுத்த மாதம் திரைக்கு விட திட்டமிட்டிருந்தார். அஜித்தின் 50-வது படமான 'மங்காத்தா' இம்மாத இறுதியில், அல்லது அடுத்த மாதத்தின் துவக்கத்தில் வெளிவரும் என்பதால், 'வந்தான் வென்றான்' படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யாமல் இருந்து வருகிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் இணை…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழ் சினிமாவில் 17 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக இருப்பவர் நடிகை த்ரிஷா, தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை பாதியில் நிறுத்திட்டு பிரபலங்கள் பலரும் வீட்டில் முடங்கி போயுள்ளனர. ஆயினும் வீட்டில் இருப்பது போர் அடிக்காமல் இருக்க ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். அவ்வாறு நடிகை த்ரிஷா தற்போது ரசிகர்களுக்கு ஒரு டெஸ்ட் வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது “என்னுடன் டேட்டிங் வர விருப்பப்பட்டால் என்னை பற்றியும், என்னுடனான நேரத்தை வீணாக்காமல் எப்படியெல்லாம் செலவிடுவீர்கள் என 500 வார்த்தைகளுக்கு…
-
- 1 reply
- 450 views
-
-
சமந்தாவின் குழப்பம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்தாலும் நான் ஈ படத்தின் மூலம்தான் தமிழ் ரசிகர்களிடையே அதிக அறிமுகமானவர் சமந்தா. நீதானே என் பொன்வசந்தம் அவருக்கு சிறந்த நடிகை என்ற விருதினை அளித்தது. சித்தார்த்துடன் காதல் என்ற செய்தி திடீரென்று பரவியது. அப்புறம் நாங்கள் நண்பர்கள்தான் என்று ஸ்டேட்மெண்ட் விடுகின்றனர். பரிகார பூஜை சமந்தாவும், சித்தார்த்தும் இணைந்து கோவில்களுக்கு ஜோடியாக சென்று பூஜைகளில் பங்கேற்றார்கள். விழாக்களுக்கு ஜோடியாக வருகிறார்கள். இருவருக்கும் விரைவில் திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. - பப்ளி ஹன்சிகா இன்றைக்கு இளம் ரசிகர்களின் கனவுக்கன்னி ஹன்சிகாதான். சிம்பு காதலித்தால் அதற்கு மறுப்ப…
-
- 1 reply
- 592 views
-
-
அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18, மழை, சிவாஜி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ‘எனக்கு 20 உனக்கு18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. ஜெயம் ரவியுடன் இவர் நடித்த ‘மழை’ படத்தின் மூலம் பிரபலம் ஆனார். ‘சிவாஜி’ படத்தில் ரஜினியின் ஜோடியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ், விஜய், விக்ரமுடன் நடித்தார். தெலுங்கில், தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது, தமிழில் ‘நரகாசுரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. …
-
- 1 reply
- 286 views
-
-
தற்போது ஜப்பானில் நடைபெற்றுள்ள சுனாமி ஜப்பானின் அணுசக்தி நிலையத்தை தாக்கி அதை உடைத்து அணுக்கதிர்களை பரவச் செய்து பேரவலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடைபெறும்போது இப்படியொரு கதையை இதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே சிந்தித்து திரைப்படமாக தந்துள்ளார்கள் டென்மார்க்கில் உள்ள தமிழர்கள் என்று தமிழக திரைப்பட இயக்குநர் பாவல்சங்கர் தெரிவித்தார். அணு குண்டை வெடித்து செயற்கைச் சுனாமியை ஏற்படுத்தினால் என்னவாகும் என்று இளம்புயல் திரைப்படம் கூறியது. இப்போது அடுத்த பக்கமாக சுனாமியே புறப்பட்டுவந்து அணு உலையை உடைத்து அணுகுண்டு வெடிப்பை ஏற்படுத்தியுள்ளது. அணு குண்டும், சுனாமியும் சந்திக்கும்போது உருவாகும் பேரவலமே எதிர்கால உலகத்தின் பேரவலம் என்று இளம்புயல் திரைப்படம் கூறியது. …
-
- 1 reply
- 1.5k views
-
-
விஜய் சேதுபதி பாடல் படைத்த சாதனை விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், யாழா யாழா என்ற முதல் சிங்கில் பாடலும் டிரெண்டிங்கில் இடம்பெற்றது. விஜய் சேதுபதி இதையடுத்து யாமிலி யாமிலியா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. …
-
- 1 reply
- 1k views
-
-
’சர்கார்’ படத்தின் 'சிம்டாங்காரன்' பாடல் சர்ச்சை: பாடலாசிரியர் விவேக் பாடலில் கையாண்ட சொற்களுக்கு நூதன விளக்கம் YouTube ’சர்கார்’ படத்தின் 'சிம்டாங்காரன்' பாடல் சர்ச்சையானதைத் தொடர்ந்து பாடலாசிரியர் விவேக் பாடல் சொற்களுடன் கூடிய நீண்ட விளக்கமளித்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நவம்பர் 6-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ‘சர்கார்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிக்காக முதலில் படத்…
-
- 1 reply
- 532 views
-
-
தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு புதுடெல்லி, 2019ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: * தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. * விஸ்வாசம் படம் இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது * பார்த்திபன் இயக்கம், நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு விருது * ஒத்த செருப்பு திரைப்படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவாளர் விருது * சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டுள்லத…
-
- 1 reply
- 589 views
-
-
"வேணாம் வேணாம்னு சொன்னேன். இப்போ நான் சொன்னபடியே ஆச்சு..." இரண்டு நாள்களாக இதே புலம்பலுடன் இருக்கிறார் பூஜா. அட, அப்படி என்னதான் ஆச்சு? பூஜா சமீபத்தில் 'அஞ்சலிகா' என்ற சிங்கள படத்தில் நடித்தாரல்லவா? படம் பம்பர் ஹிட்! பூஜாவின் அழகில் மொத்த சிங்களர்களும் சரண்டர். பூஜா மேலும் ஒரு சிங்கள படத்தில் நடிக்க, சிங்கள இளைஞர்களின் புத்தர் ஆனார் பூஜா. கடவுள் ஆனபிறகு கோயில் கட்டாமல் இருந்தால் எப்படி? கொழும்பில் பூஜாவுக்கு ஒரு கோயில் எழுந்தது. இதற்கு பூஜாவிடம் அவரது ரசிகர்கள் அனுமதி கோரிய போது, "தமிழ்நாட்ல குஷ்பூனு ஒரு நடிகைக்கு கோயில் கட்டி அதை இடிச்சுட்டாங்க. அதனால நமக்கு அந்த வம்பு வேண்டாம்" என சரித்திர சான்றுகளுடன் மறுத்திருக்கிறார் பூஜா. எந்த காலத்தில் பக்தன் கடவுளி…
-
- 1 reply
- 935 views
-
-
2022ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 2024ம் ஆண்டு 70வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. 'பொன்னியன் செல்வன்' சிறந்த தமிழ்த் திரைப்படமான தேர்வாகியிருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவு - ரவிவர்மன், சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த ஒலிப்பதிவு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி என 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு மொத்தம் நான்கு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி ( காந்தாரா), சிறந்த நடிகையாக நித்யா மேனன் ( திருச்சிற்றம்பலம்) விருதுகளை வென்றுள்ளனர். சிறந்த நடன இயக்கத்திற்கான விருது ஜானி ( திருச்சிற்றம்பலம்), சிறந்த சண்டைப் பயிற்ச்சிகான விருது அன்பறிவு (கே.ஜி.எஃப் -2) ஆகியோர…
-
-
- 1 reply
- 207 views
- 1 follower
-
-
தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய, ஆடவரி மாட்லகு அர்த்தலே வேருலே படத்தின் ரீ-மேக், யாரடி நீ மோகினி. அப்பா ரகுவரன். மகன் தனுஷ். தறுதலையாக திரியும் மகனை திட்டுகிறார் ரகுவரன். அவன் பொறுப்பானவனாக மாறி, இனி நீ வேலைக்குப் போக வேண்டாம் என்று கூறும்போது, கல்லால் அடிக்கிறார். மகனுக்கு காதல் தோல்வி ஏற்படும்போது, சேர்ந்து தண்ணி அடித்து சோகத்தை பகிர்ந்து கொள்கிறார். கூடவே அடிகட் ஆகாதே என அட்சைஸும் செய்கிறார். எந்த விதிமுறைக்குள்ளும் அடங்க மறுக்கும் இந்த உறவு சிறிய புன்னகையுடன் நம்மை ஈர்க்கிறது. ரகுவரனின் வசன உச்சரிப்பு சர்க்கஸ் சிங்கம் மாதிரி. ரகுவரனின் சாட்…
-
- 1 reply
- 1.8k views
-
-
அண்மையில் வெளிவந்த விக்ரமின் "தாண்டவம்" படம்பற்றிய விமர்சனம் ஒன்றை யூ டியூப்பில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சில தமிழ்ப்படங்களில் கமெடியனாக வந்த மொட்டை பாஸ்க்கி இந்த விமர்சனத்தை செய்கிறார். அதில், படத்தின் கதாப்பாத்திரங்கள் பேசும் மொழி பற்றிய விம்ர்சனம் ஒன்று வருகிறது. அப்போது, விக்ரமும், சந்தானமும் பேசுவது தமிழ், நாசர் பேசுவது :சிங்களத் தமிழ்" என்று எந்தக் கூச்சமுமில்லாமல் பேசிக்கொண்டு போகிறார். அவரது விமர்சனத்துக்கு சரியான தர்ம அடி கிடைத்திருக்கிறது பார்த்தவர்களின் கருத்துக்கள் மூலம். நீங்களும் பாருங்கள். இதோ அந்த விமர்சன ஒளிநாடா..... http://www.youtube.com/watch?v=qYWY73pibeU
-
- 1 reply
- 913 views
-