வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5563 topics in this forum
-
'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜா இருவருமே நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டார்கள். தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் 'சரவணன் மீனாட்சி'. இத்தொடரில் சரவணனாக மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நடித்திருந்தனர். இளைஞர்கள் மத்தியில் 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலமாக இருவருமே பிரபலமாக வலம் வந்தனர். இவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் இருவருமே அச்செய்திகளை மறுத்து வந்தார்கள். செந்திலுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருப்பதியில் செந்தில், ஸ்ரீஜா இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். செந்திலுக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டார்கள். இ…
-
- 2 replies
- 912 views
-
-
-
- 6 replies
- 1.4k views
-
-
பிரசன்ன விதானகேவின் வித் யூ விதவுட் யூ - யமுனா ராஜேந்திரன் 04 ஜூலை 2014 குறிப்பிட்ட இரண்டு பாத்திரங்களில் ஏதாவதொரு பாத்திரத்தின் மீது பார்வையாளர்கள் அனுதாபம் செலுத்த வேண்டும் என நான் விரும்பவில்லை. இந்த இரு பாத்திரங்களையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவே விரும்புகிறேன். இயக்குனர் பிரசன்ன விதானகே The Hindu, 3O june 2O14. I இருபது ஆண்டுகளில் சிங்கள மொழியில் வெளியான முக்கியமான திரைப்படங்கள் அனைத்துமே சிங்கள ராணுவம் குறித்த படங்களாகவே இருக்கின்றன. பிரசன்ன விதானகேயின் பவுர்ணமி நாளில் நிகழ்ந்த மரணம் மற்றும் ஆகஸ்ட் சூரியன், இநோகா சதாயாங்கினியின் காற்றுப் பறவை, அசோகா ஹந்தகமாவின் இந்த வழியால் வாருங்கள் அல்லது கம் அலாங்க் திஸ் ரோடு : ஏ நைன் ஹைவே ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நவ்தீப், தேஜஸ்வி நடித்துள்ள தெலுங்குப் படம் ‘ஐஸ் க்ரீம்’. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக ஒரு காட்சியில் படத்தின் நாயகியான தேஜஸ்வி நிர்வாணமாக நடித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக ஹீரோக்கள்தான் இம்மாதிரியான காட்சிகளில் நடிப்பார்கள், ஹீரோயின்கள் நடிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன் கன்னடப் படம் ஒன்றில் நடிகை பூஜா காந்தி அப்படி நடித்திருந்தார். அதற்குப் பின் ஒரு ஹீரோயின் மீண்டும் இப்படி நடித்துள்ளது இந்தப் படத்தில்தான். அந்த நிர்வாணக் காட்சியை ஒருவரைக் கூட உள்ளே விடாமல் படமாக்கியிருக்கிறார்கள். நான்கு சுவர்களுக்குள்தான் அந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. நான்கு சுவர்களிலும் காமிராவை மாட்டியிருக்கிறார்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
வடிவேலு – பேச்சு வழக்கை மாற்றி அமைத்த கலைஞன் - பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் 1 வடிவேலு ”வின்னர்” படத்திற்குப் பிறகு வேறுவேறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும் அந்தக் பாத்திரங்களின் வழியாக ஒரு தொடர்ச்சியை கையாண்டார். சமூக உற்பத்தியில் எவ்வித பங்கும் இல்லாத ஒரு உபரியாக, பெரும்பாலும் ”உழைப்பற்ற” ஒரு பாத்திரமாக பல படங்களில் நடித்தார். குடும்பத்தினர், குழந்தைகள், உடனிருக்கும் நண்பர்கள், சமூகம் என யாருமே எவ்வித மதிப்பையும் கொடுக்காத, அவரைத் தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏளனம் செய்யும் கதாபாத்திரங்களிலேயே நடித்தார். தமிழ்சினிமா நகைச்சுவை நடிகர்களில் உழைப்பு, உழைப்பிற்கான தகுதியின்மை, உழைத்தாலும் அதில் வெற்றி அடையமுடியாத ஒருவராக நடித்தவர், ஆரம்பகட்ட படங்களில் கூட பெரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
அடுத்த சூப்பர் ஸ்டார் “கருத்துக்கணிப்பில்” வென்றது விஜய் இல்லையாமே, அஜீத்தாமே!! சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு வார பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் உண்மையில் அஜீத் தான் வெற்றி பெற்றாராம். சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வாரப் பத்திரிக்கை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று மக்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. கருத்துக்கணிப்பின் முடிவில் இளையதளபதி விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வேறு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அஜீத். கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் ஏராளமானோர் அஜீத்துக்கு தான் வாக்களித்தார்களாம். குறைவானவர்களே விஜய்க்கு வாக்களித்தார்களாம். விஜ…
-
- 2 replies
- 1.8k views
-
-
நண்பனை திருமணம் செய்துகொண்டார் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி: [sunday 2014-06-29 22:00] விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (எ) டிடி தனது பல ஆண்டு கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை இன்று திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியின் முக்கிய தூணாக விளங்கும் திவ்யதர்ஷினி (எ) டிடியை தெரியாத தொலைக்காட்சி ரசிகர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு நிமிடம் கூட இடைவெளியில்லாமல் தனது கீச் குரலால் பேசிப் பேசி தமிழ்நாட்டு ரசிகர்களை கலங்கடித்தவர் டிடி. அப்படி தனது படபட பேச்சால் ரசிகர்களை பெற்ற டிடியின் வாழ்வில் இன்று முக்கிய தினம். டிடிக்கும் அவரது நீண்டகால நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் பெரியோர்களால் நிச்சயித்தபடி இன்று திருமணம் நடைபெற்றது. திருமத…
-
- 5 replies
- 1.6k views
-
-
என் குடும்பத்தில் ஒருவர் ஆர்யா என 'அமர காவியம்' இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா தெரிவித்தார். ஆர்யா தயாரிப்பில் ஜீவா சங்கர் இயக்கியிருக்கும் 'அமர காவியம்' படத்தில் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமை அன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் இசையினை நயன்தாரா வெளியிட த்ரிஷா பெற்றுக் கொண்டார். இயக்குநர் பாலா, நாயகன் சத்யாவிற்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்தை தெரிவித்தார். தான் நாயகியாக நடித்த படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு கூட வாராத நயன்தாரா, இப்படத்தின் இசையினை வெளியிட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இவ்விழாவில் நயன்தாரா பேசியது, "ஆர்யா எனது குடும்பத்தில் ஒருவர். அவரது நட்பிற்காகவே இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவி…
-
- 0 replies
- 643 views
-
-
கத்தி திரைப்படத்தை நாம் அனுமதிக்க போகின்றோமா? இல்லை அடித்து விரட்ட போகின்றோமா? ஜூன் 25, 2014 கத்தி திரைப்படத்திற்கான சுவரொட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் ஒட்டுப்பட்டுள்ளன. குறித்த திரைப்படத்தில் விஜய் நடிக்கின்ற போதும் அதன் தயாரிப்பு லைக்கா நிறுவனம் என்பதால் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தைத் தயாரிக்கும் லைக்கா மொபைல் நிறுவனம் சிறீலங்காவில் நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டுக்காக தமிழினப் படுகொலையாளன் மகிந்த ராஜபச்சவுக்கு இரண்டாவது பெரிய நிதிப் பங்களிப்பை செய்திருக்கிறது. இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் அடிக்கடி சிறீலங்காவுக…
-
- 0 replies
- 679 views
-
-
https://www.youtube.com/watch?v=jvsqnSyPSwU
-
- 2 replies
- 1.2k views
-
-
சென்னையில் பிரசன்ன விதானகே படத்துக்கு தடை - சரியா தமிழ்த்தேசியவாதிகளின் செயல்? ஜேபிஆர் சனி, 21 ஜூன் 2014 (21:08 IST) சிங்கள திரைப்பட இயக்குனர் பிரசன்ன விதானகேயின் வித் யூ விதவுட் யூ திரைப்படம் சென்னையின் இரு மல்டிபிளக்ஸ்களில் திரையிட்டிருப்பதாக அறிந்த தமிழ்த்தேசியவாதிகள் சிலர் அந்தத் திரையரங்குகளை முற்றுகையிட்டு படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் செயல் சினிமா குறித்தும், கலை குறித்தும் முக்கியமாக பிரசன்ன விதானகே என்ற திரைப்பட கலைஞன் குறித்தும் எந்தப் புரிதலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறது. சிங்கள பேரினவாத அரசை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள மக்களில் குறிப்பிடத்தகுந்த பகுதியினரும் எதிர்த்து வருகிறார்கள். இனப்போர…
-
- 5 replies
- 1.1k views
-
-
பிரபல சினிமா இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராமநாராயணன் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 9 மொழிகளில் 125 படங்களை ராமநாராயணன் இயக்கியுள்ளார். விலங்குகளை ஹீரோவாக காண்பித்து சாதனை படைத்தார். அவருக்கு வயது 67 தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் என்ற சாதனையை தன்வசம் கொண்டிருந்த ராம. நாராயணன், பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் விலங்குகளை வைத்து பல வெற்றி படங்களை இயக்கியவர் . குறிப்பாக, பக்திப் படங்கள் பலவற்றை கொடுத்தவர் இவர். வீரன் வேலுதம்பி, ஆடி வெள்ளி, துர்கா, ராஜ காளியம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர…
-
- 13 replies
- 2k views
-
-
முன்னாள் பாலியல் பட நடிகை சன்னி லியோன் பொலிவூட் திரையுலகை தனது கவர்ச்சியினால் கிறங்கடிக்க வைத்துள்ளார். ஜிஸ்ம் 2 திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான சன்னி லியோன் நடிப்பில் அண்மையில் வெளியான ராகினி எம்.எம்.எஸ் 2 திரைப்படம் பெரு வெற்றி பெற்றது. இதனால் சன்னி லியோனுக்கு பொலிவூட் மாத்திரமன்றி தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட படங்கள் குவிகின்றன. ஆனாலும் இப்படங்கள் அனைத்திலும் சன்னி லியோனுக்கு கவர்ச்சிக்கு பயன்படுத்தவே இயக்குனர்கள் விரும்புகின்றனர். இதனால் நடிப்புக்கு முக்கியதுவமிக்க படங்களில் நடிக்க விரும்புவதாக சன்னி லியோன் கூறிவருகிறார். இந்நிலையில் சன்னி லியோனை ராணியாக சிம்மாசனத்தில் அமர வைக்க ஆசைப்பட்டுள்ளார் இயக்குநர் பொபி கான். இவர் இயக்கவுள்ள புதிய படமான லீலாவில் சன…
-
- 3 replies
- 914 views
-
-
மஞ்சப் பை – திரை விமர்சனம் 08JUN20146 Comments ராஜ் கிரணுக்கு அவார்ட் வாங்கிக் கொடுக்கப் போகும் படம் இது. அற்புதமான நடிப்பு, விமலுக்குத் தாத்தாவாகவே வாழ்ந்திருக்கிறார். துளி பாசாங்கு இல்லை. துளி ஓவர் அக்டிங் இல்லை. நான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் பாராட்டி மகிழ்வேன். நல்ல திரைக் கதை. கிராமத்தில் இருக்கும் ஒருவர் முதல் முறை நகரத்துக்கு வந்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் கிராமத்து வாழ்க்கை வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்கிறார். விமலுக்கும் ராஜ் கிரணுக்கும் இருக்கும் பாசப் பினைப்புக்கானக் காரணம் முன்கதை சுருக்கமாக கனகச்சிதம். பல படங்களில் அஸ்திவாரம் வீக்காகவும் பில்டிங் ஸ்டிராங்காகவும் கட்டி நாம் பார்க்கும் இரண்டரை மணி நேரத்திலேயே கட்டிடம் சர…
-
- 0 replies
- 762 views
-
-
நண்பர்களே, பெண் இயக்குநர்கள் சிலர் இணைந்து, 'விறலி விடு தூது' என்னும் திரைத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மூலக்கதை ஆசிரியர், திரைக்கதையாசிரியர், திரை இயக்குநர், திரைத்தயாரிப்பாளர் இவர்களை ஒருங்கிணைத்துத் திரைப்படைப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மையான நோக்கம். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடருக்கான தரமான கதைகளைக் ...கொடுப்பதிலும், திரைக்கதை எழுதுவதில் ஆர்வமுள்ள இளைய கலைஞர்களை இப்பணியில் ஈடுபடுத்துவதிலும், நவீன சினிமாவைக் கதைகள் வழியாக மாற்றுவதிலும் இந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபடும். இன்றைய சினிமாவில் இருக்கும் கதைப்பற்றாக்குறையைப் போக்குவதிலும், அதற்கான திரைக்…
-
- 6 replies
- 2.6k views
-
-
Posted Date : 12:20 (12/06/2014)Last updated : 12:22 (12/06/2014) சென்னை: இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் இந்து முறைப்படி சென்னையில் இன்று நடந்தது. 'தெய்வத் திருமகள்' படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்க்கும், அமலா பாலுக்கும் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மலர்ந்தது. காதலை மறுத்துவந்த இருவரும் சில வாரங்களுக்கு முன்புதான் தங்கள் காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 7ஆம் தேதி விஜய் - அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து. இந்நிலையில், இந்து முறைப்படி இருவருக்கும் சென்னையில் இன்று காலை திருமணம் நடந்தது. சென்னை ச…
-
- 4 replies
- 833 views
-
-
பூவரசம் பீப்பி பூவரசம் பீப்பி இயக்குனர் ஹலிதா ஷமீம் 'இந்த வாரம் முதல் சென்னையில் தேவி தியேட்டரில் மட்டும் 'பூவரசம் பீப்பீ' திரையிடப்படும். உங்கள் ஆதரவுக்கு நன்றி. தேவியில் படம் பார்க்கலாம்.' சில தினங்களுக்கு முன் 'பூவரசம் பீப்பீ' பட இயக்குனர் ஹலிதா ஷமீம்-மின் முகநூலில் பதிவிடப்பட்ட இந்தப் பதிவு வழக்கமாக கடந்து போகும் ஸ்டேட்டஸ் மெசேஜ்களில் ஒன்றாகத் தோன்றவில்லை. சினிமா ஆர்வலராக தமிழ் சினிமா புதிய பாதையை நாடவேண்டும் என்று நினைப்பவனுக்கு இப்பதிவு வருத்தத்தையும் கேள்விகளையும் ஒருசேர அளித்தது. இதுவரை பார்த்த எந்தப் படங்களின் நினைவுகளையும் மீட்டுக் கொணர்ந்திடாத 'பூவரசம் பீப்பீ' நிச்சயமாக ஒரு மாற்று சினிமா. முழுமையாக என்னை ஈர்த்த ஒரு படம் என்று இதைக்கூற முடியவில்லை. குழந்…
-
- 1 reply
- 680 views
-
-
பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஜெனிலியா. இவர், கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அவருடைய கணவர் ரிதேஷ் தனது டுவிட்டரில் ஊறுதிப்படுத்தியுள்ளார். தங்கள் வீட்டிற்கு புதிதாக வரக்கூடிய தேவதையை இருவரும் பெரிதும் எதிர்நோக்கி காத்திருப்பதாக ரித்தீஷ் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலர் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த வருடமும் இதேபோல் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால…
-
- 14 replies
- 1.3k views
-
-
பொலிவூட், கொலிவூட், டொலிவூட் என எந்த மொழிப் படமாக இருந்தாலும் நீச்சல் உடை, முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகை தமன்னா அறிவித்துள்ளார். தமன்னா நாயகியாக நடித்துள்ள பாலிவுட் படம் ஹம்சகல்ஸ். இந்தப் படத்தில் அவருடன் ஈஷா குப்தா, பிபாஷா பாசு நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் மூவரும் நீச்சல் உடையில் தோன்றுவது போன்ற காட்சி இடம் பெறுகிறது. மற்ற இருவரும் நீச்சலுடையில் தோன்ற தமன்னா மட்டும் மறுத்துவிட்டாராம். பிகினிக்கு பதில், நன்கு மூடப்பட்ட ஒரு உடையை அவர் தேர்வு செய்தாராம். மேலும் நீச்சலுடை, முத்தக்காட்சிகளில் தன்னால் நடிக்க முடியாது என்றும் உறுதியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "முத்தக்காட்சி, நீச்சலுடைக் காட்சிகளில் நடிப்பதில்ல…
-
- 3 replies
- 792 views
-
-
படத்தை ஒருமுறை பார்த்துவிட்டுப் படிப்பது நல்லது. கதை எல்லாம் தெரிந்தால் பரவாயில்லை என்பவர்கள் தொடரலாம். கட்டுரையின் கடைசிப் பகுதியை தவற விட வேண்டாம். ** நீங்கள் இருக்கிறீர்கள். பிறந்து, வளர்ந்து, வேலைக்குப் போய், உண்டு உறங்கி, திருட்டுத்தனம் என்று பலவற்றையும் செய்தவாறு நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால்... ஏதோ ஒன்று உங்களைப் போட்டு அலைகழிக்கிறது. ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றியவாறே. எனது வாழ்க்கை யாரோ எழுதிக்கொடுத்தது போல் போய்க்கொண்டிருப்பதாகப் படுகிறது. தத்துவ ஆன்மிக விசாரத்தில் விரசமாக ஈடுபடுகிறீர்கள். 'உலகமே மாயை' என்றும் 'எதுவுமே இல்லை அல்லது நீங்கள் உணர்வது எதுவும் உண்மையில்லை.. உங்களால் உணரப்படவே முடியாததை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? மீனுக்கு நீர் இன்றி ஓர் உ…
-
- 1 reply
- 5.4k views
-
-
தமிழ் சினிமா கதைச் சுருக்கம் சு.தியடோர் பாஸ்கரன் தென்னிந்தியாவில் முதன்முறையாக சலனப்படம் ஒன்று மதராஸ் விக்டோரியா பப்ளிக் ஹாலில் காட்டப்பட்ட போது இது ஒரு அசுர சக்தியின் பிறப்பு என்று யாரும் அறிந்திருக்கவில்லை. சீக்கிரமே நகரின் சில இடங்களில் சாலையோரக் காட்சிகளாக படங்கள் காட்டப்பட்டன.. மெக்னீஷிய விளக்கு ஒளியில் - நகருக்கு மின்சாரம் இன்னும் வரவில்லை - கையால் சுழற்றப்பட்ட புரொஜக்டர் மூலம் ஐந்தாறு நிமிடங்கள் மட்டுமே ஓடிய துண்டுப்படங்கள், காட்சித்துணுக்குகள் போல, நுழைவுக் கட்டணத்துடன் திரையிடப்பட்டன. இது ஒரு பொழுதுபோக்கு சாதனமாக வளரும் என்ற எதிர்பார்ப்பு அன்று இல்லையென்றாலும் முதல் சில ஆண்டுகளில் திரைப்படக்காட்சிகள் ஒரு அதிசயம் போல மக்களால் எதிர்கொள்ளப்பட்டன. படங்க…
-
- 0 replies
- 3.7k views
-
-
இயக்குனர் விஜய் – நடிகை அமலாபால் இருவருமே தங்களது திருமணம் ஜுன் 12ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர். இயக்குநர் விஜய் – அமலா பால் திருமணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும், அச்செய்தியை இருதரப்பினரும் உறுதி செய்யவே இல்லை. இந்நிலையில் இன்று இயக்குனர் விஜய் – அமலா பால் இருவருமே பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இருவருமே அவர்களது திருமண அழைப்பிதழை பத்திரிகையாளர்களுக்கு கொடுத்துள்ளனர். அப்போது இயக்குநர் விஜய் கூறியது, “என்னோட வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவர்கள் பத்திரிகையாளர்கள் தான். இப்போது என்னோட வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன். உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு வேண்டும். என்னுடைய திருமணம் ஜுன் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்ற…
-
- 2 replies
- 702 views
-
-
நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம்! Posted by: Shankar Published: Monday, March 31, 2014, 10:44 [iST] சென்னை: பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த மனோரமா கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமான நிலையிலிருந்த அவரை மருத்துவர்கள் சிகிச்சையளித்துக் காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் தயாரானார். ஆனால் இப்போது மீண்டும் உடல்நிலை மோசமடைந்துள்ளது …
-
- 16 replies
- 1.4k views
-
-
பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். ஹாலிடே படத்துக்காகதான் இந்த பெருமழை. துப்பாக்கி படத்தின் கதையை இந்தியில் எடுப்பதற்காகதான் எழுதினார் முருகதாஸ். அப்போது முன்னணி நடிகர்களின் கால்ஷீட் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க அனைவருக்கும் ஆர்வம் இருந்தாலும் பிற படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அவருக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. அப்படிதான் துப்பாக்கி தமிழில் உருவானது. இந்திக்கு கச்சிதமாகப் பொருந்தும் துப்பாக்கி இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் அக்ஷய், சோனாக்ஷி நடிப்பில் வெளியாகியுள்ளது. முருகதாஸ்தான் இயக்கம். அதன் ஃப்ரிவியூவை பார்த்தவர்கள் முருகதாஸை வாய் வலிக்க பாராட்டி வருகின்றனர். இன்று படம் வெளியாகும் முன்பே பாராட்…
-
- 0 replies
- 584 views
-
-