வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வெற்றியை குவித்த விஷால் அணியினர்! தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பாக துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ் வெற்றி பெற்றனர். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பாக செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா வெற்றி பெற்றார். ஆனால், விஷால் அணி சார்பாக செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் மிஷ்கின் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, கேயார் அணியின் கதிரேசன் வெற்றி பெற்றார். விஷால் அணி சார்பில் தயாரிப்பாளர் சங்க பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட, எஸ்.ஆர். பிரபு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின் விஷால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்ப…
-
- 3 replies
- 849 views
-
-
நடிகர்களுக்கு உண்மையை உணர்த்திய நடன இயக்குநர் லாரன்ஸ்- ஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய உண்ணாநிலை போராட்ட மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அந்த மேடையில் அனைவரையும் அதிக அளவில் புருவம் உயர வைத்தவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்தான். இலங்கைத் தமிழர்களுக்காக தான் சேகரித்த ரூபாய் பத்து லட்சத்துடன், தன் பங்கிற்கு இரண்டு லட்சத்தையும் சேர்த்து, பன்னிரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கி அனைவரையும் ஒருகணம் ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஒட்டுமொத்தமாக வழங்கிய தொகை சூப்பர் ஸ்டார் ரஜினி வழங்கிய தொகையான பத்து லட்சத்தைவிட அதிகம். அதுமட்டுமல்ல, ``விஜய், அஜித் போன்றவர்கள் நினைத்தால் தங்கள் ரசிகர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை இலங்கைத் தமிழர்கள…
-
- 1 reply
- 848 views
-
-
இதில் லின்கனாக நடித்திருப்பவர் டானியல் டே லூயிஸ் .இவர் ஒரு மிக சிறந்த நடிகர் (எனக்கு பிடித்தவர்). இவரின் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள் . THERE WILL BE BLOOD,IN THE NAME OF THE FATHER,MY LEFT FOOT. IN THE NAME OF THE FATHER இங்கிலாந்தில் இருப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒருபடம் .ஐரிஷ் குண்டுவெடிப்பு சூத்திரதாரிகள் என்று பொய்யாக சோ டிக்கப்படவர்களின் உண்மை கதை.
-
- 3 replies
- 848 views
-
-
தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய விஜய் சேதுபதி
-
- 7 replies
- 848 views
-
-
அண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் ! உணர்ச்சிகரமான நடிப்பாலும், கணீர் குரலாலும் தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய எஸ்.எஸ். ராஜேந்திரனின் நினைவு தினம் இன்று. 60 களில் எம். ஜி. ஆர், சிவாஜி என்ற மாபெரும் ஆளுமைகள் கொடிகட்டிப்பறந்தபோது, அவர்களிடமிருந்து தனித்து, தன் திறமையை வெளிப்படுத்தி, தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த சாதனையாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரையை அடுத்த உசிலம்பட்டியில் 1928-ம் வருடம் பிறந்த ராஜேந்திரனுக்கு, சிறுவயதிலேயே நாடகங்களின் மீது காதல். கல்வித்துறையில் பணியாற்றி வந்த அவரது தந்தை சூரியநாராயணனுக்கு, மகனை அரசுப் பணியில் சேர்க்க வேண்டும் என்பது ஆசை. வெற்றி என்னவோ ராஜேந்திரனுக்குதான் கிடைத்தது. தனது 6 வயதில் நாடகங்களில் நடிக…
-
- 0 replies
- 848 views
-
-
அழகோ... அழகு... பரினிதி சோப்ராவின் இடுப்பை வர்ணித்த ரசிகர்கள் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையும், நடிகையுமான பரினீதி சோப்ரா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது இடுப்பை சகட்டு மேனிக்கு வர்ணித்துள்ளனர். இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினிதி சோப்ராவும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கொஞ்சம் குண்டாக இருந்த இவர், உடல் எடையை தீவிர பயிற்சி செய்து குறைத்துள்ளார். இந்த படத்தை பரினிதி, கூலிங்கிளாஸ் அணிந்து இடுப்பு தெரி…
-
- 0 replies
- 848 views
-
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் நடிகர், நடிகைகள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என திரையுலக கூட்டமைப்பு தடை விதித்தது. இதையடுத்து தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெறவில்லை. நடிகர், நடிகைகளும் இலங்கை பயணத்தை இரத்து செய்து விட்டனர். சினிமா பின்னணி பாடகர்கள் பலர் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இலங்கைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள். தமிழ் அமைப்புகள் எதிர்ப்பால் அவர்களும் இசை கச்சேரியை இரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினர். ஆனால் அசின் மட்டும் எதிர்ப்பை மீறி இலங்கையில் நடந்த ரெடி ஹிந்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். இதற்கு நடிகர் சங்க செயற்குழுவில் பேசிய சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழ் படங்களில…
-
- 6 replies
- 848 views
-
-
என் இனிய வலைத்தமிழ் மக்களே..! தமிழ் ஈழப் போராட்டம் பற்றி இதற்கு முன் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மெட்ராஸ் கபே-யை தவிர மற்றவைகள் பெரிதாகப் பேசப்படவில்லை.. ஆனால் திரையிடுவதற்கே தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று. 'உச்சிதனை முகர்ந்தால்' படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளும், தடைகளும் அது போன்ற படங்களையே தயாரிக்கும் முடிவோடு யாரும் கோடம்பாக்கத்திற்குள் கால் வைக்க்க் கூடாது என்பதையே உணர்த்தியது. ஆனாலும் அதற்குப் பின்பும் 'மிதியடி' என்றொரு படம் வந்தது.. நீலிமாராணி நடித்தது. யுத்தக்களத்தில் புதைக்கப்பட்ட கன்னிவெடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.. இயக்குநர் நண்பர் இகோர் இப்போது 'தேன்கூடு' என்றொரு படத்தை தயாரித்து இயக்கிவிட்டு சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் அல்லாடிக்…
-
- 0 replies
- 847 views
-
-
தில்லாலங்கடி திரைபடத்தினை முன்கூட்டியே காண விரும்புபவர்களுக்கு..... தில்லாலங்கடி - 1 தில்லாலங்கடி - 2 பிரம்மானந்தம் பாத்திரத்தில் வடிவேல்.. இலியானா பாத்திரத்தில் தமன்னா.. ரவிதேஜா பாத்திரத்தில் வழக்கம் போல அவரை காப்பி அடிக்கும் நம்ம ஜெயம் ரவி.....
-
- 0 replies
- 847 views
-
-
http://youtu.be/Ys2sBJJV7dY தமிழுக்கு போட்டோகூட கிடையாது - தெலுங்குக்கு என்றால் நேரடி அறிமுகம்! - இதான் மணிரத்னம் பாணி கடல் படத்தின் டீஸர் என்ற பெயரில் சமீப காலமாக மணிரத்னம் அண்ட் கோ செய்து வந்த அழிச்சாட்டியத்தைப் பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் காட்டமாகிவிட்டிருக்கும் நேரத்தில், அவர் செய்துள்ள இன்னொரு வேலை, தமிழ் சினிமாவை அவரைப் போன்றவர்கள் எந்த அளவு கிள்ளுக் கீரையாக மதிக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. மணிரத்னம் எடுத்துவரும் கடல் படத்தில் ஹீரோவாக கார்த்திக் மகனும், ஹீரோயினாக ராதாவின் இளையமகளும் அறிமுகமாகிறார்கள். தான் அறிமுகப்படுத்தும் இந்த இரு புதுமுகங்களின் படங்களைக் கூட யாருக்கும் காட்டாமல் ரகசியம் காத்த மணிரத்னம், ஒரு நாள் ஹீரோவின் தலைமுடி, அடு…
-
- 3 replies
- 846 views
-
-
86வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு! லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகத் திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலக திரைப்படங்களில், சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து அதற்காக ஆஸ்கார் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 86வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் உலக திரைப்பட பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவின் 'டல்லாஸ் பையர்ஸ் கிளப்' படத்துக்காக ஜார்டு லெடோவுக்கு சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது, கேத்தரின் மார்ட்டினுக்கு 'தி கிரேட் கேட்ஸ்பை" படத்த…
-
- 2 replies
- 846 views
-
-
நானே முதலில் கொஞ்சம் இரக்கப்பட்டிட்டன்.. பாவமா இருந்திச்சு.. இதைப் பார்க்க..! என்ன கொடுமை.. இத்தனை சின்ன சின்ன ஆசைகள் அத்தனையும்.. மறைக்கப்படும் போது..???! ஏன் இந்த மறைப்பு..??! யாரின் விதிப்பு..! இல்ல கள்ளம் பண்ணப் பிளான் போடுறாவோ அக்காச்சி என்று பாவம் பார்த்த மனசை கட்டி இழுத்து வந்து பழைய நிலையில் விட்டுவிட்டேன்.
-
- 4 replies
- 845 views
-
-
நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி! பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாலினி பொன்சேகா சில காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் நோய் நிலைமை அதிகரித்தமையைத் தொடர்ந்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலினி பொன்சேகா இந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424657
-
-
- 17 replies
- 845 views
-
-
இந்திய திருநாட்டின் நீண்ட நாள் பிரச்சனை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அபிஷேக்பச்சன் நேற்றுமாலை ஐஸ்வர்யாராயின் கழுத்தில் தாலி கட்டி, இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா மாட்டார்களா என்ற நீண்ட நாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவர்கள் திருமணம் ஜுஹு பகுதியில் அமிதாப்பச்சனுக்கு சொந்தமான பிரதிக்ஷா பங்களாவில் நடந்தது. மணமகள் ஐஸ்வர்யாராய் காக்ரா உடை அணிந்திருந்தார். மணமகன் அபிஷேக் ஷெர்வானி. பங்களாவுக்கு சிறிது தூரம்வரை காரில் வந்த அபிஷேக் பின் குதிரையில் ஏறிக் கொண்டார். அதற்குமுன் உற்சாக மிகுதியில் சிறிது நேரம் நடனம் ஆடினார். பதினொரு புரோகிதர்கள் மந்திரம் சொல்ல திருமண சடங்கு நடந்தது. முன்னதாக பிரதிக்ஷா பங்களாவின் வெளியே ஜானவி கபூர் என்ற நடிகை கையை கிழித்து தற்கொ…
-
- 0 replies
- 844 views
-
-
"தோற்றம் முதல் லைஃப்ஸ்டைல் வரை... பெண் சுதந்திரத்தின் பேக்கேஜ்!" - 'வீரே தி வெட்டிங்' படம் எப்படி? #VeereDiWedding ஒரே மாதிரியான மனநிலை கொண்ட நான்கு பெண்கள் வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வைப் பற்றி சிந்திக்கிறார்கள். அதில் ஒருவர், மற்ற மூன்றுபேர் எந்த விஷயத்தில் தோற்றுப்போனார்களோ, அதே விஷயத்தைச் செய்ய நகர்கிறார். அதுதான், திருமணம்! அந்தப் பெண்ணும் மற்றவர்களைப்போல தோற்றுப்போகிறாரா அல்லது ஜெயித்துக் காட்டுகிறாரா, மற்ற மூவரின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதுதான் 'வீரே தி வெட்டிங்' சொல்லும் கதை. #VeereDiWedding இந்தக் காலத்து நியூ ஏஜ் பெண்களின் திருமணம் குறித்த ஃபோபியாவை மையமாக வைத்து கதை பின்னப்பட்டிருக்கிறது. எப்போதும் குடும்ப…
-
- 0 replies
- 844 views
-
-
பில்லாவைத் தொடர்ந்து அஜீத் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவரது ஜோடியாக ஷ்ரியா நடிக்கவுள்ளார். கிரீடம் படத்தை முடித்து விட்ட அஜீத், அடுத்து பில்லா ரீமேக்கில் நடித்து வருகிறார். பில்லாவுக்குப் பிறகு நடிக்கவுள்ள படம் குறித்தும் அவ்வப்போது டிஸ்கஷனில் ஈடுபட்டு வந்தார்.அதில் ஒரு கதையை முடிவு செய்து விட்டார். ஆனால் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் நாயகி முடிவாகி விட்டாராம். அதாவது அஜீத்தே ஹீரோயினை பிக்ஸ் செய்து விட்டார். அது ஷ்ரியா என்கிறார்கள். ரஜினியுடன் சிவாஜியி்ல நடித்ததால் பிரபலமாகி விட்ட ஷ்ரியாவைத் தேடி பல வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் நடித்து வரும் ஷ்ரியா, ஜெயம் ரவியுடனும் ஒரு படத்தில் இணைகிறார்.…
-
- 0 replies
- 843 views
-
-
மங்காத்தா' படத்தினை அடுத்து வெங்கட்பிரபு 'ஸ்டூடியோ க்ரீன்' நிறுவனத்திற்காக படம் இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. அதனை வெங்கட்பிரபுவும் உறுதிப்படுத்தினார். சூர்யா தான் நாயகன் என்ற நிலைமாறி தற்போது கார்த்தி நாயகனாக நடிக்க இருக்கிறார். படத்திற்கு 'பிரியாணி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். படத்தின் caption வரிகளாக 'A VENKAT PRABHU DIET' என வைத்திருக்கிறார்கள். 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 'பிரியாணி' படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு தனது டிவிட்டர் இணையத்தில் " பிரியாணி படத்தில் எனது முந்தைய படங்களில் பணியாற்…
-
- 0 replies
- 843 views
-
-
-
- 0 replies
- 843 views
-
-
படையப்பா பற்றிய முதன் முதல் செய்தி 98ஆம் வருடம் வந்தது. வழக்கம்போல் ஒரு பிரஸ் மீட் வைத்து, படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர் போன்றோரை சம்பிரதாயமாக அறிவித்து படப்பிடிப்புக்கு கர்நாடகா நோக்கி பயணப்பட்டனர் படக்குழுவினர். அவ்வளவுதான் தமிழகமே தீப்பிடித்துக்கொண்டது. அந்த பிரஸ்மீட்டில், ரஜினி படையப்பா என்றால் படைகளுக்கு அப்பன், கமாண்டர்-இன் – சீஃப் போல என்று சொல்லிவிட்டு, இந்த படத்தின் மூலம் வரும் லாபத்தில் கட்டமைப்பு இல்லாத பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று சொல்லிவிட்டு,. ”படிங்கப்பா இருக்கிறான் படையப்பா” என்று ஒரு பஞ்ச்சையும் சொன்னார். ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிடப்பட்ட ஸ்டில்லில் ரஜினி, ஜீன்ஸ் அணிந்து, சுருட்டு குடிப்பது போல இருக்கவும், க…
-
- 0 replies
- 843 views
-
-
ஸ்ரேயாவுடன் மோதல் இல்லை- திரிஷா கிரீடம் படத்தில் அஜீத் ஜோடியாக ஆரம்பத்தில் ஸ்ரேயா நடிப்பதாக இருந்தது. பின்னர் அந்த வாய்ப்பு திரிஷாவுக்கு கிடைத்தது. ஸ்ரேயாவுக்கு வந்த வாய்ப்பை நீங்கள் பறீத்தீர்களா...? அல்லது அவர் வேண்டாம் என்று கைவிட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா? என்று திரிஷாவிடம் கேட்டபோது. அஜீத்துடன் கிரீடம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தானாக வந்தது. இதைப்பற்றி யார் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. ஒரு படத்தின் கதை சிலருக்கு பிடித்திருக்கும் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். இந்த படத்தின் கதை எனக்கு நன்றாக பிடித்திருக்கிறது. எனவே இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். வேறு காரணம் எதுவும் இல்லை. ஸ்ரேயா எனது நெருங்கிய தோழி. இதுபோல் என் …
-
- 0 replies
- 843 views
-
-
ஆட்டோகிராஃப் பாடகர் கோமகன் கொரோனாவால் மரணம். சென்னை: ஆட்டோகிராஃப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் மூலம் புகழ் பெற்ற பாடகர் கோமகன் கொரோனாவால் மரணமடைந்தார். கடந்த 2004ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த திரைப்படம் ஆட்டோகிராஃப். இந்தப் படத்தில் ஸ்னேகா, கோபிகா, மல்லிகா, என பலர் நடித்திருந்தனர். ஒவ்வொரு பூக்களுமே .. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் பாடலில் இடம்பெற்ற மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் என்ற வரிகளை பாடி புகழ் பெற்றவர் பாடகர் கோமகன் பார்வை குறைபாடு இப்பாடலில் நடித்த கோமகன் அந்த வரிகளை கடைசியில் உணர்வுபூர்வமாக பாடி கலங்குவார். அவரது நடிப்பு பலரின் கவனத்தையும் பெற்றது. பி…
-
- 3 replies
- 843 views
-
-
ஒடுக்கப்பட்டவர்களின் ஒடுக்கப்பட்டவர்களான புதிரை வண்ணார்களின் வாழ்க்கையையும் வலியையும் எதார்த்தமும் புனைவும் கலந்து பேசும் படைப்பு, Neestream ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘மாடத்தி.’ தீண்டாமையின் உச்சமான ‘பார்த்தாலே தீட்டு’ என்னும் துயரத்துக்கு உள்ளான புதிரை வண்ணார்கள், சாதியப்படிநிலையில் பட்டியலின மக்களுக்கும் கீழாக வைக்கப்பட்டவர்கள். பட்டியலின மக்களின் அடிமைகளாக, அவர்களின் துணிகளை வெளுக்கும் புதிரை வண்ணார்கள், ‘மேல்சாதிக்காரர்கள்’ பார்வையில் படாதவாறு மறைந்து வாழவேண்டும். அவர்கள் வழியில் வந்துவிட்டால் பார்வையில் படாதவாறு மறைந்துகொள்ளவேண்டும். அப்படிப்பட்ட புதிரை வண்ணார் தம்பதி வேணியும் சுடலையும். அவர்களின் மகள் யோசனாவுக்கு ஒருமுறையாவது ‘ஊருக்குள்’ போய்ப்…
-
- 1 reply
- 842 views
-
-
வல்லவன் திரைப்படத்தில் சிம்புவுடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி அது உண்மையானது. ஆனால் திடீரென அவர்கள் காதல் முறிந்து போனது. இருவரும் கண்ணீருடன் விடை பெற்றனர். பின்பு நயன்தாராவும் பிரபுதேவாவும் காதலித்தனர். இவர்கள் காதல் கல்யாணம் வரை சென்று இறுதியில் கல்யாணம் நடைபெறும் முன்பே நின்று போனது. தொடர் காதல் தோல்வியால் மனமுடைந்து போன நயன்தாரா ஒரு வழியாக அதில் இருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வந்தார். சினிமாவில் இரண்டாவது ரவுண்டை தொடங்கிய நயன்தாரா நடிப்பில் மீண்டும் பிஸியாகினார். பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் பழைய காதலரான சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. அதோடு, இப்படத்தில் கிறிஸ்தவ பெண்ணாகவே நடிக்கிறாராம் நயன்தா…
-
- 0 replies
- 842 views
-
-
இது நம்ம ஆளு - திரை விமர்சனம் கல்யாண ஏற்பாட்டுக்குக் குறுக்கே பழைய காதலும் புதிய சந்தேகங்களும் நுழைந்தால் என்ன ஆகும்? அதுதான் ‘இது நம்ம ஆளு.’ ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க் கிறார், சிவா (சிம்பு). ‘சகோ... சகோ’ என்று அவரை சதா வம்புக்கு இழுத்துக் கொண்டே உடன் இருக்கும் நண்பன் வாசு (சூரி). சென்னையில் ஒரு அறை எடுத்துக்கொண்டு வேலைக்குப் போவது, ஊர் சுற்றுவது என்று இருவரும் ஜாலி யாக வலம் வருகிறார்கள். மகன் சிம்புவுக்கு அப்பா ஜெயப்பிரகாஷ் திருவையாறில் வரன் பார்க்கிறார். அவர்தான் மைலா (நயன்தாரா). அவரைப் பார்த்ததும் சிம்புவுக்குப் பிடித்து விடுகிறது. ஆனால் தன் பழைய காதலி பிரியா (ஆன்ட்ரியா) பற்றி நயன் கேட்டதால் சிம்பு…
-
- 2 replies
- 842 views
-
-
எதேச்சையாகப் பார்த்த பாடல். நன்றாக இருக்கிறது. நீங்களும் பாருங்களேன் !
-
- 1 reply
- 841 views
-