வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
சமூக வலைத் தளங்களின் அந்தரங்க வெளியை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்ட சந்தைப்படுத்தல்கள்: நடிகர் தனுஷின் ’கொலவெறி’ நடிகை ஐஸ்வர்யா ராயின் பிரசவத்தையும் குழந்தையையும் எப்படியெல்லாம் செய்தியாக்கக்கூடாது என்று பத்து கட்டளைகள் விதிக்கும் அளவுக்கு இந்திய காட்சி ஊடகங்கள் இருக்கும் ஒரு யுகத்தில் சமூக வலைத் தளங்களும் அதே திசையில் செல்லத் தொடங்கியிருக்கின்றன. ‘3 ’என்ற படத்தில் நடிகர் தனுஷ் பாடியிருக்கும் "கொலவெறி" பாடல் பெற்றுள்ள "உலக மகா வெற்றியை" இந்தியாவின் மிகவும் கவனிக்கத்தக்க செய்தியாக தேசிய நாளிதழ்களும் டிவி சேனல்களும் கொண்டாடி வருகின்றன. புதிய சந்தைப்படுத்தல் உத்தியாக இந்தப் பாடலை இணையத்தில் வெளியிட்டதில் ஒரு மில்லியன் (10 லட்சம்) தரவிறக்கங்கள் நடந்திருப்பதாக பிறரால் எளிதாக…
-
- 0 replies
- 1k views
-
-
(நவம்பர் மாதத் தொடக்கத்தில் அகரம் சஞ்சிகைக்காக எழுதப்பட்டது) பெரும் ஆர்ப்பாட்டத்தோடு வெளிவந்த „ஏழாம் அறிவு' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. ரமணா, கஜனி என்று வெற்றப்படங்களைத் தந்த ஏஆர் முரகதாசின் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருக்கின்ற படம் இது. படம் வெளிவருவதற்கு முன்பு செய்யப்பட்ட விளம்பரத்தால் படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் இருந்த சீனாவிற்கு சென்று பல கலைகளையும் தத்துவங்களையும் பரப்பிய போதி தர்மனை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம் என்பதும் „ஏழாம் அறிவு' பற்றிய எதிர்பார்ப்புக்கு காரணமாக இருந்தது. ஆயினும் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வு ரசிகனுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கையில் பயங்கரவாதியாக ஆக்கப்பட்டு இருக்கும் பிரிட்டன் நடிகர் கிங்ஸ்லி! ஒஸ்கார் விருது பெற்ற பிரித்தானிய நடிகர் சேர் பென் கிங்ஸ்லி இலங்கையில் பயங்கரவாதி ஆக்கப்பட்டு உள்ளார். இயக்குனர் சந்திரன் இரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகி உள்ளது த கொமன் மான் என்கிற ஹொலிவூட் படம். இதில் கிங்ஸ்லி பயங்கரவாதியாக காட்டப்பட்டு உள்ளார். ஆனையிறவு, கொழும்பு உட்பட பல இடங்களிலும் படப்பிடிப்பு இடம்பெற்று உள்ளது. பட்த்தின்படி கொழும்பில் ஐந்து இடங்களில் குண்டு வைக்கின்றார் கிங்ஸ்லி. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=amwmxceN49g இலங்கையில் ஒரு பறக்கும் மீன்! பறக்கும் மீன் என்பது உண்மையில் யதார்த்தத்துக்கு புறம்பான…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிகினி - பின் வாங்கும் நடிகை கொளுக் மொளுக்கென்று விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை போலிருக்கிறாரா... போட்டி போட்டு மோத்வானி நடிகையை ஒப்பந்தம் செய்கிறார்கள். அவரும் தனது கோதுமை உடம்பை ஓவர் எக்ஸ்போஸ் செய்ய தயங்கினதில்லை. ஆனாலும் இதிலெல்லாம் அடங்கிற தாகமா நம்மவர்களுடையது? தெலுங்கில் மோத்வானி நடிக்கும் படமொன்றில் பிகினியில் நடிக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். எக்ஸ்ட்ரா பேட்டா ஆசையும் காட்டப்பட்டிருக்கிறது. மோத்வானி உசார்.. முழுக்க நனைந்தால் பிழிந்து காயப் போட்டு அடுத்த ஆளுக்கு போய்விடுவார்கள் என்பது தெரிந்திருக்கிறது. அப்படியெல்லாம் முடியாது, மம்மி வையும் என்று பின் வாங்கியிருக்கிறார். சே.. வட போச்சே. http://tamil.webdunia.com/entertainment/f…
-
- 0 replies
- 1.3k views
-
-
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால்.... சர்ச்சைப் படம் எடுத்த மலையாள இயக்குநர்! தமிழக மக்களின் உணர்வுப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி ஒரு படம் ஆங்கிலத்தில் உருவாகியுள்ளது. டேம்999 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை எடுத்திருப்பவர் ஒரு மலையாளி. இந்தப் படம் தமிழிலும் வெளியாகப் போகிறது. இந்தப் படத்தில் அணை உடைந்தால் என்னவாகும் என்பதை கிராபிக்ஸில் காட்டி மக்களைப் பீதிக்குள்ளாக்கியுள்ளனர். சொத்தை விற்று அணை கட்டிய பென்னி குக் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது முல்லைப் பெரியாறு அணை. ஆங்கிலேயர்தான் என்றாலும் பென்னிகுக் என்ற மக்கள் நல விரும்பியால் கட்டப்பட்ட இந்த அணை தமிழகத்தின் ஜீவாதாரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த அணை கட்டும் பணியின்போது …
-
- 0 replies
- 796 views
-
-
தேடித் தேடிக் கேட்ட விருப்பப் பாடல்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டிருக்கையில் புதியதாய் காதுவழி புகுந்து இதயம்.. உயிர்.. என உணர்வு மொத்தமுமாய் தமிழின பற்றின் காரணமாக நிறைகிறது அந்த சீனத்து மொழிப் பாடலொன்று. ஒரு தாயிற்கு தாங்கயியலாத இழப்பென்று சொன்னால் அது தான் பெற்றெடுத்த தன் குழந்தையின் இறப்பன்றி வேறொன்று இருக்காது என்பதை நாமறிவோம்; அதே குழந்தை மீண்டும் உயிர்பெற்று வந்தால் அந்த தாயின் நன்றியுணர்வு எப்படி கண்ணீரின் வழியே’ தான் விட்டுப்பெற்ற உயிரென பூக்குமென்பதை ஒரு புதிய கட்டத்திற்குள் காட்டுகிறார் ஏ.ஆர். முருகதாஸ். ஒவ்வொரு முறை என் தமிழன் அடிப்பட்டப் போதெல்லாம் தனியே நின்று அழுத என் உணர்விற்கு ஒரு காலங்கடந்த ஆறுதலாய் அமைந்திருந்தது அந்தக் காட்சி. எதிரி என்று எண்ணி ஆரம்பத்…
-
- 3 replies
- 1.2k views
-
-
நான் அன்னிக்கே சொன்னேன் .. http://www.youtube.com/watch?v=bMBV3uh0BGU நான் அன்னிக்கே சொன்னேன் .. தொடர்புடைய செய்திகளையும் எடுத்துபோட்டேன்.. இந்த எளியவனை யாரும் நம்பல.. டிஸ்கி: விஜய் பூமிய குளிரவைக்கிற சீன்ஸ் எல்லாம் என்னால பாக்க ஏலாது. நான் கண் ஆஸ்பத்திரிக்கு போய் கண் தேவைபடுவர்களுக்கு கண் தானம் செய்துடலாம் என இருக்கன்.. :icon_idea:
-
- 2 replies
- 1.7k views
-
-
இளையராஜாவுடன் மீண்டும் இணையாதது ஏன்? - பாரதிராஜா அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் இளையராஜாவுடன் மீண்டும் இணையாதது ஏன் என்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் இயக்குநர் பாரதிராஜா. தேனி அல்லி நகரத்தில் தனது குல தெய்வமான வீரப்ப அய்யனார் கோயிலில் கிடா வெட்டி அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு பூஜைபோட்ட பாரதிராஜா, மாலையில் தேனி நகரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை என் படம் தொடர்பாகச் சந்திக்கிறேன். இதுவரை தேனி அல்லிநகரம் பகுதியில் எந்த விழாவிலும் நான் பங்கேற்றதில்லை. தேனி மாவட்டத்தில் சின்னமனூர், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் பேசி இருக்க…
-
- 0 replies
- 783 views
-
-
அது ஏன் எப்போதும் நடிகைகள் மட்டுமே தற்கொலை செய்து கொள்கிறார்கள்? நடிகர்கள் படம் பார்க்க வருபவர்களை கொலை செய்வதோடு மட்டுமே நின்றுவிடுகிறார்கள். அண்மையில் சின்னத்திரை நடிகை வைஷ்ணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக சக நடிகர் தேவ் ஆனந்த்துக்கு நீதிமன்றம் ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தது. ( வைஷ்ணவி தூக்கு போட்டு இறந்தது ஐந்து வருடங்களுக்கு முன்பு). கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போவது புரியும். 'சில்க்' ஸ்மிதா வறுமையான, படிக்காத ஒரு கிராமத்துப் பெண். சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு, கணவனின் கொடுமை தாங்காமல் ஆந்திராவில் இருந்து ஓடி வந்து ஒரு மாவு மில்லில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது வினு சக்கரவர்த்தியின் கண்ணில…
-
- 2 replies
- 5.6k views
-
-
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கடந்து வந்த பாதை ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஹா ங்காங்கில் பிறந்த அந்தக் குழந்தையை மருத்துவர் வியப்புடன் பார்த்தார். எடை 12 பவுண்டு. எப்படியாவது அக்குழந்தையை தான் வளர்க்க வேண்டுமென்று அந்த மருத்துவர் விரும்பினார். குழந்தையின் பெற்றோரிடம் கேட்க வும் செய்தார். ஆனால் சார்லஸ் சானும் சரி, லீ & லீயும் சரி அதற்கு சம்மதிக்கவில்லை. இத்தனைக்கும் சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். லீ & லீ, வீட்டு வேலைகளை செய்பவர். http://www.youtube.com/watch?v=cI1AwZN4ZYg போதிய வருமானம் ஒருபோதும் வந்ததில்லை. ஆனாலும் தங்கள் குழந்தையை தாங்களே வளர்க்க விரும்பினார்கள். சான் காங் & காங் என நாமகரணமும் சூட் டினார்கள். ஹாங்காங்கி…
-
- 0 replies
- 797 views
-
-
சங்க இலக்கியங்கள் காதலையும், காமத்தினையும் கைக்கிளை, பெருந்திணை எனும் இரு வேறு பிரிவுகளினூடாகப் பிரித்து நிற்கின்றன. ஆனால் இன்றைய மாறி வரும் நாகரிகச் சூழலுக்கு அமைவாகவும், மனித உணர்வுகளை மதிக்கப் பழக வேண்டும் எனும் நல் எண்ணத்தின் வெளிப்பாட்டிற்கமைவாகவும் ஓரினச் சேர்க்கையினையும் தமிழ் இலக்கியப் பகுப்பினுள் உள்ளடக்கி அங்கீகரிக்க வேண்டிய நிலைக்கு எம் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டிருக்கின்றது. கைக்கிளை என்பது ஒரு தலைக் காதலாகவோ அல்லது ஒருவர் தனது மனதுக்குப் பிடித்தவரைப் பற்றி மனதால் விரும்பி வாழுதலை குறித்து நிற்கிறது. பெருந்திணை என்பது பொருந்தாத காதல் மற்றும் காமத்தினைப் பற்றிப் பேசி நிற்கிறது. அண்மைக் காலத்தில் எம் சமூகத்தில் காலாதி காலமாக நிலவி வந்த ஓரினச் சேர்க்கைய…
-
- 1 reply
- 1.5k views
-
-
படங்கள்தான் டெய்லி பாக்குறோமே.... அத எப்டி எடுத்தாங்கன்னு பார்த்தா.. வெறுப்பு வராதா?? படம்: கோ காவலன்: அயன்: எந்திரன்: http://www.youtube.com/watch?v=vjQmOTiRP3w&feature=related மங்காத்தா: http://www.youtube.com/watch?v=YE1Ejxr4Z8Q பாஸ் எங்கிற பாஸ்கரன்! http://www.youtube.com/watch?v=8NnEex9o4FE தொடரணுமே..... !!
-
- 0 replies
- 891 views
-
-
சினேகா – பிரசன்னா விரைவில் திருமணம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இருவரும் இதுகுறித்து எந்த மறுப்பும் தெரிவித்ததில்லை. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தங்கள் பிஆர்ஓ ஜான் மூலம் தெரிவித்துள்ளனர். இருவீட்டாரின் …
-
- 27 replies
- 3.2k views
-
-
ஜெனிலியாவுக்கு டோலிவுட்டில் நடிக்கத் தடை. தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராகததால் நடிகை ஜெனிலியாவுக்கு தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஜெனிலியா அதை கண்டுகொள்ளவில்லை. நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகர் சங்கம் உறுப்பினர் ஆகும்வரை தெலுங்கு படங்களில் நடிக்க ஜெனிலியாவுக்கு தடை விதித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே காரணத்திற்காக த்ரிஷா, ஸ்ரேயா, இல…
-
- 5 replies
- 1.3k views
-
-
கமல் என்ற சகாப்தம்... சக கலைஞர்களின் வாழ்த்து மழை! இன்று பிறந்த நாள் காணும் கமல் ஹாஸனுக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர். களத்தூர் கண்ணம்மாவில் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும் உலக தமிழ் நாயகன் கமல்ஹாஸனுக்கு இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்துத் தெரிவித்தார். அவருடன் மேலும் பல பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அவர்கள் விவரம்: சரத்குமார் - தலைவர், திரைப்பட நடிகர் சங்கம் பத்மஸ்ரீ கமல் ஹாஸன் அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழர்களுக்கு மிகவும் பெருமையைத் தந்துள்ள மாபெரும் கலைஞர் அவர். இன்னும் பல்லாண்டுகள் திரையுலகில் புதுப்புது …
-
- 1 reply
- 1k views
-
-
தோற்கடிக்க முடியாதவன் நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள். கண்ணுக்குக்கீழ் கருமையைப் போக்க ஏதோ மாவைப் பூசினார். முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டார். புருவத்தைச் சீராக்கினார். நான் சிரித்தேன். ‘நான் என்ன சினிமாக்காரனா? எனக்கு எதற்கு இந்த மேக்கப் எல்லாம்? இதனால் என்ன பிரயோஜனம்?’ என்றேன். ‘இல்ல சார், வயசை ஒரு 15 வருஷமாவது குறைச்சுக் காட்டும்’ என்றார். ‘அது எனக்கு எதுக்கு? வயசு ஆகிட்டுத்தானே இருக்கு? முன்னாடி தலை எல்ல…
-
- 1 reply
- 1k views
-
-
இந்த படம் பார்த்து முடித்து போது மனதில் நான் வடிவமைத்திருந்த ஹிட்லர் அந்த மனிதனின் வேறுமுகம் எனக்கு தெரிந்தது உலகத்தையே தன் வசபடுத்த நினைத்தவனின் வாழ்க்கையை இந்த படத்தில் பார்த்த போது இந்த மாமனிதன் மீது மிகப்பெரிய மதிப்பு வந்தது....இப்படியும் ஒரு மனிதனின் முன்னேற்றம் இருக்குமா? என்று என்னை வியக்கவைத்தன... ஹிட்லர்- ஜெர்மன் மட்டுமே உலகை ஆள வேண்டும் என்று இரண்டாம் உலக போரை ஆரம்பித்து வைத்து விட்டு 5 கோடி பேரின் இறப்புக்கு கரணமாய் இருந்து, போதமைக்கு 50லட்சம் யூதர்கள் இறக்க காரணமாக இருந்த கொடுர மிருகம் என்பதாய் நாம் எல்லோரும் மனதில் வைத்து இருந்த பிம்பம். இரண்டாம் உலக போரை மையபடுத்தி நிறைய படங்கள் வந்து விட்டன...அதில் ஹிட்லரின் கொடுரத்தை சொல்லி அழுத படங்கள் ஏராளம் …
-
- 0 replies
- 877 views
-
-
நான் இன்னும் ஏழாம் அறிவின் தெலுங்குப் பதிப்பையோ அல்லது ஹிந்தி பதிப்பையோ பார்க்கவில்லை; ஆனால் facebook இல் மற்றும் விகடனின் பின்னூட்டங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் இதனை எழுதுகின்றேன் :நிழலி ------------------------------------------------------------------------------------- ஏழாம் அறிவின் தமிழ் (Original) பதிப்பில் போதி தர்மனை தமிழ் மன்னன் ; பல்லவ மன்னனின் வாரிசாக 5 ஆம் நூற்றாண்டினை சார்ந்தவர் என்றும் காஞ்சிபுரத்தில் பிறந்தவர் என்றும் காட்டிய முருகதாஸ் தெலுங்குப் பதிப்பில்: அவர் குண்டூர்ல (கவனிக்க: கேரளாவின் குன்னூர் அல்ல) பிறந்தவர் என்றும் ஹிந்திப் பதிப்பில் அவர் தாராவில் பகுதியில் பிறந்தவர் என்றும் காட்டியுள்ளாராம் ..தமிழர் பெருமையை ஒரு…
-
- 10 replies
- 3.2k views
-
-
கொழும்பைத் தட்டிக் கேட்குமா கோடம்பாக்கம்? வெடிக்கிறார் சசிகுமார் இரா.சரவணன் ''நீங்க அழுதால் ஆறுதல் சொல்லி உங்கக் கண்ணீரைத் துடைப்பேன். தேற்ற முடியாத துயரம் என்றால், உங்களோடு சேர்ந்து நானும் அழுவேன். இதுதான் என் குணம், இயல்பு. மத்தபடி ஒருத்தனோட கண்ணீரை விற்கவோ, வெகுஜனப் பார்வைக்கு வைக்கவோ என்னால முடியாது. 'போராளி’ங்கிற தலைப்பை வெச்சுக் கிளம்புற பரபரப்பை நான் பயன்படுத்திக்க விரும் பலை. எந்த எதிர்பார்ப்பும் ஏற்படுத்தாமல், துடைச்சுப்போட்ட மனசோடுதான் ரசிகர் களை நான் எதிர்கொள்ள விரும்புறேன். 'ஈழத்து சோகங்களை நாசூக்காச் சொல்லி இருக்கேன்’, 'இலைமறை காயா விளக்கி இருக்கேன்’னு சொல்லி, தூண்டில் வீச நான் விரும்பலை. மழைக்கான அறிகுறி தெரிஞ்ச தும் பாதுகாப்பான இடத்துக்கு உணவைத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
நடிகை மனோரமாவுக்கு தலையில் உறைந்திருந்த ரத்தம் நேற்று ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டதால் அவர் கோமாவிலிருந்து மீண்டார். ஆனால் அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு செயற்கை சுவாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடிகை மனோரமா கழிவறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட்டது. முறையாக சிகிச்சை பெறாததால் மூளையில் ரத்தம் உறைந்தது. தேனாம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஆபரேஷன் மூலம் ரத்தக் கட்டி நேற்று அகற்றப்பட்டது. பின்னர் மனோரமா அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. டியூப் மூலம் மனோரமாவுக்கு திரவ உணவு கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து ஓரிரு நாட்கள் அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பார் என்று கூற…
-
- 16 replies
- 1.8k views
-
-
தமிழ் திரையுலகில் 950 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. சென்னை தி.நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவியும், கார்த்திக் ராஜா, யுவன்சங்கர்ராஜா என்று இரு மகன்களும், பவதாரணி என்ற மகளும் உள்ளனர். இளையராஜா மனைவி ஜீவாவிற்கு திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த ம்ருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இசையமைப்பதற்காக ஹைதராபாத் சென்று இருந்த இளையராஜாவிற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இன்று காலை சென்னை வருவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இளையராஜா பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிற…
-
- 21 replies
- 2.5k views
-
-
7ம் அறிவு திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட காட்சி!(exclusive Video) நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த 7ஆம் அறிவு திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்பட்டதாக முன்னர் பரபரப்பு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அது பின்னர் குறிப்பிட்ட சில வசங்களை உள்ளடக்கிய காட்சிகள் கத்தரிக்கப்பட்டு வெளியிட அனுமதி வழங்கப்பட்டது. பாவம் இலங்கை ரசிகர்கள் காசு கொடுத்து வரிசையில் நின்று அலைமோதி டிக்கட் எடுத்து படம் பார்க்கும் போதும் அங்கு படத்தில் 5 நிமிட காட்சிகள் காணமல் போயுள்ளது. அதை தவறவிட்ட ரசிகர்கள் அது என்ன காட்சி என பார்க்க ஆவலாக இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்காகவே புதியஉலகம் அந்த காட்சிகளை வழங்குகிறது.- http://youtu.be/Wv2JEIO--HE http://puthiyaulakam.com/?p=3578
-
- 0 replies
- 1.5k views
-
-
M.G.R.- அறிந்ததும் அறியாததும் எம்.ஜி. ஆரின் பிறந்த தினமான இன்று அவரை பற்றிய சில நினைவுகளைசுருக்கமாக பார்ப்போமா? . ஜனவரி 17-1917- ஆம் ஆண்டு இலங்கை கண்டியில் பிறந்தார். 24-12-1987-ஆம் ஆண்டு மறைந்தார் பெற்றோர்: மருதூர் கோபால மேனன்- சத்ய பாமா முதல் படம்: சதிலீலாவதி (1935) கடைசி படம்: மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1978 முதலில் கதாநாயகனாக நடித்த படம்: கலைஞரின் ராஜகுமாரி இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த படம்: ரிக்சாக்காரன் இவரின் மறைவிற்கு பிறகு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் இயக்கிய படங்கள் நாடோடி மன்னன் 1958 உலகம் சுற்றும் வாலிபன் 1973 மதுரையை மீட்ட சுந்தர பாண…
-
- 2 replies
- 1.6k views
-
-
தொடை தெரியும் வகையில் உடை அணிய நடிகைகளுக்கு நடிகர் சங்கம் தடை? பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரிய உடை அணிவதற்கு தடைவிதிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்பவர்கள் படத்தை பற்றி மட்டும் தான் பேச வேண்டும். தேவையில்லாத விஷங்களைப் பற்றி பேசக் கூடாது. அவ்வாறு பேசுவதால் தான் பிரச்சனை கிளம்புவதால் இனி தேவையில்லாதவற்றை பேச தடைவிதிக்க இயக்குனர் சங்கர் முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. இது மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரியும் அளவுக்கு உடை அணியவும் தடை விதிக்கப் போவதாகப் பேசப்படுகிறது. சேலைக்கு பெயர் போன தமிழகத்தில் நடக்கும் சினிமா விழாக்களி…
-
- 9 replies
- 5.1k views
-
-
அண்மையில் வெளியாகிய 7ம் அறிவு திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இலங்கை தமிழர் பற்றிய பேச்சு ஒளிப்பேளை ஒன்று கீழே இணைக்கப்பட்டுள்ளது. http://akkinikkunchu...-news&Itemid=18
-
- 0 replies
- 1.9k views
-