வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
-
டோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்! - மலையாளம் 2016-ன் க்ளைமாக்ஸில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் `விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்' என கமல் ஓடிவந்து வாழ்த்து சொல்வார். நாமும் பார்ட்டி, சபதம் என கொண்டாட்டமாக வரவேற்போம். அதெல்லாம் இருக்கட்டும். இன்னும் இந்த வருஷம் செய்ய வேண்டியவையே நிறைய பாக்கி இருக்கிறது. அதில் ஒன்று சினிமா. இந்த ஆண்டு வெளியான படங்களில் மிஸ் பண்ணக் கூடாத படங்கள் பற்றிய லிஸ்ட்டை ரகம் வாரியாக பிரித்துக் கொடுத்திருக்கிறோம். மறக்காம பார்த்துடுங்க மக்களே! இது மலையாளப் படங்களுக்கான லிஸ்ட். கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! மகேஷின்டே பிரதிகாரம் மலையாள உலகின் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசிலின் யதார்த்த நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான படம். பசுமை போர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
* இது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'கைதி', 'மாநகரம்' அளவுக்குப் புதுமையான கதையோ, நேர்த்தியான திரைக்கதையோ கொண்ட திரைப்படம் அல்ல. இன்னும், விஜய் சேதுபதி, மாதவனுடன் இணைந்து நடித்த 'விக்ரம் வேதா' அளவுக்கு நேர்த்தியான, விறுவிறுப்பான திரைப்படமுமல்ல. * மூன்று மணிநேர நீளமான இத்திரைப்படத்தின் முதல் ஒரு மணிநேரக் காட்சிகளைச் சற்றே இரத்தினச் சுருக்கமாகத் தந்திருந்தால் விறுவிறுப்பாகவும், சுவாரசியமானதுமாகவும் இருந்திருக்கும். எனினும் அடுத்த இரு மணி நேரமும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. * ஒரு சமூகப்பிரச்சினையைத் தெளிவாகவும், அழுத்தம்திருத்தமாகவும் சொல்லியிருக்கும் திரைப்படம் இது. * பல வருடங்களுக்குப் பிறகு விஜய் சற்றே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்; ஆரம்பக் க…
-
- 12 replies
- 2.3k views
-
-
கமல் இயக்கி நடிக்கும் 'உத்தம வில்லன்' திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க மறுத்ததை அடுத்து திவ்யா ஸ்பாந்தனாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிப்பதற்கும் காஜல் அகர்வாலிடம் கால்சீட் பேசி வந்தனர். ஆனால், பேச்சுவார்த்தையில் என்ன பிரச்னை ஏற்பட்டது என்பதை வெளியில் சொல்ல மறுக்கும் காஜல், தன்னிடம் அதுபற்றி விசாரிப்பவர்களிடம், அந்த படத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக இருந்தேன். ஆனால் அவர்கள் கேட்ட தேதியில் எனக்கு வேறு படம் இருப்பதால் என்னால் கால்சீட் தர முடியவில்லை என்று சொல்லி சமாளித்து வருகிறார். இந்நிலையில் காஜலுக்கு பதிலாக திவ்யா ஸ்பாந்தனா(குத்து படத்தில் நடித்த ரம்யாதான் இந்த திவ்யா ஸ்பாந்தனா…
-
- 1 reply
- 682 views
-
-
‘ஆறு மனமே ஆறு’ -இதுதான் ஷாமும் முகவரி துரையும் சொல்ல வந்த 6 ஆக இருக்க வேண்டும். திருக்குறள் சைசுக்கு கதை இருந்தாலும், அதில் முதல் வரி முழுவதையும் ஓ.பி அடிக்க பழகியிருக்கிறார்கள் இப்போதிருக்கும் பல இயக்குனர்கள். மீதி ரெண்டாவது வரியில்தான் கதையும் விறுவிறுப்பும் அடங்கியிருக்கும். (சில படங்களில் அந்த உப்பு சப்பும் இல்லை) ஆனால் 6 அப்படியல்ல, படம் தொடங்கி பத்தாவது நொடியில் கதை தொடங்கிவிடுகிறது. கதை தொடங்கிய பத்தாவது நொடியில் நமக்கும் பதற்றம் தொடங்கிவிடுகிறது. அடுத்த காட்சி அடுத்த காட்சி என்று குரங்கை போல நம்மை தாவி இழுத்துக் கொண்டு ஓடுகிறது படம். முடியும்போது நம்மையறியாமல் சிந்துகிற ரெண்டு சொட்டு கண்ணீருக்குள்தான் இந்த படத்தின் ஹிட்டும் அடங்கியிருக்கிறது. இன்டர்வெல் நேரத்தில்…
-
- 5 replies
- 944 views
-
-
ஆதிமனிதனும் டிஜிட்டல் தமிழச்சியும் காட்டைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்? - ’வனமகன்’ விமர்சனம் காட்டில் வாழும் பழங்குடியின நாயகன், ஒரு விபத்தில் மெட்ரோ சிட்டி நாயகியிடம் வந்து வசிப்பதால் நிகழும் சம்பவங்களே ‘வனமகன்’. கார்ப்பரேட் நிறுவனத் தொழிற்சாலை ஒன்றை அந்தமான் காட்டுக்குள் அமைக்க ஏற்பாடு நடக்கிறது. அதனால் அங்குள்ள பழங்குடியின மக்களை அப்புறப்படுத்த சதித்திட்டம் தீட்டப்படுகிறது. அந்தப் பழங்குடியின மக்களில் ஒருவர்தான் ஜாரா (ஜெயம்ரவி). சென்னையில் வசிக்கும் டாப் பணக்காரர்களில் ஒருவரான காவியா (சயிஷா) சுற்றுலாவாக அந்தமான் வருகிறார். இவரால் ஜெயம்ரவிக்கு விபத்து ஒன்று ஏற்படுகிறது. ஜெயம்ரவியைக் காப்பாற்ற சென்னை அழைத்துவருகிறார் நாயகி சயிஷா…
-
- 1 reply
- 670 views
-
-
நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடமான நிலையில் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களிலும் சின்னத்திரையிலும் நகைச்சுவையில் கலக்கியவர் சிட்டிபாபு. இருதய கோளாறு காரணமாக ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு சிட்டி பாபுவுக்கு பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் 2 வருடங்களாக நடிக்காமல் ஓய்வில் இருந்தவர் அண்மைக்காலமாக மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது சுய நினைவை இழந்து, 'கோமா' நிலையில் உள்ளார…
-
- 3 replies
- 2.5k views
-
-
ரம்பாவுக்கு ரூ 1 கோடி மதிப்பில் மோதிரம் அணிவித்த இந்திரன்! வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2010, 11:17[iST] 'அடப்பாவி... எப்படி கவுந்தான் இந்தாளு' என்று படிப்பவர்கள், கேள்விப்படுபவர்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு சீரும் சிறப்புமாக நடந்து முடிந்துவிட்டது ரம்பா நிச்சயதார்த்தம். இதுவரை மணமகன் புகைப்படத்தைக் கூட வெளியிடாமல் பொத்திப் பொத்தி வைத்திருந்த ரம்பா, ஒருவழியாக இவர்தான் மாப்பிள்ளை என்று ஒரு தமிழ் தொழிலதிபரைக் காட்டியுள்ளார். அவர்தான் இந்திரன். கனடாவில் மேஜிக்வுட்ஸ் எனும் நிறுவனத்தை நடத்துபவர். இதன் தொழிற்சாலை இந்தியாவில், சென்னையில் உள்ளது. விளம்பரத் தூதராக ரம்பாவை ஒப்பந்தம் செய்தார் இந்திரன்... ரம்பாவோ அவரை வாழ்க்கைத் துணைவராகவே ஒப்பந்தம் செய்து அன்லிமிடட் க…
-
- 40 replies
- 3.8k views
-
-
தரணி ஆளும் கணினி இசை 1: முதல் முதலா ஒரு பாட்டு... ‘விக்ரம்’ படத்தில் கமல், லிஸி கமலுக்கும் கம்ப்யூட்டர் இசைக்கும் ஒரு சுவாரசியமான தொடர்பு உண்டு. பல கலைகளில் வல்லவராக விளங்கும் கமலுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது ‘சகலகலா வல்லவன்’. அந்த வெற்றியைச் சிறியதாக மாற்றிவிட ஒரு அதிநவீன திரைப்படத்தை எடுத்து, அதில் நடித்துவிடவேண்டும் என்று முடிவு செய்தார். அந்தப் படம் 1986-ம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’. கம்ப்யூட்டர் இசை தன் முகத்தைத் தமிழ் மக்களுக்கு முதன் முதலாகக் காட்டியது அந்தப் படத்தில்தான். ‘விக்ரம்’ படத்தின் முதல் காட்சி நீதிமன்றத்தில் தொடங்கும். நீதிபதி, வழக்கறிஞர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் காட்சி, பென்ச…
-
- 28 replies
- 8.2k views
- 1 follower
-
-
சென்னை கம்பன் விழாவில், ஈழத் தமிழர் நிலை பற்றிய பேச்சை கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கண்கலங்கினார். கம்பன் கழகம் சார்பில், 36-வது ஆண்டு கம்பன் விழா சென்னை மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இறுதி நாளன்று, “கம்பன் புலமை, திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில், கம்பன் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், புதுவை தர்மராஜன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஏ.வி.எம்.சரவணன், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி மோகன், மூத்த வக்கீல் காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். பட்டிமன்றத்தில் இலங்கையைச…
-
- 1 reply
- 945 views
-
-
சேனாதிபதியின் சீக்ரெட் பிளான் சேனாதிபதி நடிகர் ஈழத்துக்கு எதிரான தேசிய கட்சியின் தலைவரின் மகனை சந்தித்ததில் ஈழத் தமிழர்களுக்கு பெரும் வருத்தம். சில வெளிநாடு வாழ் தமிழர்கள் இவரது படத்தை புறக்கணிக்கவும் செய்தனர். இந்தக் கசப்பை சீறும் தமிழனின் படத்தில் நடித்து போக்கிக் கொள்ள நினைக்கிறார் சேனாதிபதி. இதனால் சீறும் தமிழர் சிறையில் இருந்தாலும் இணைந்து படம் பண்ணுவது உறுதி என தயாரிப்பாளரிடம் வாக்கு கொடுத்திருக்கிறார். http://tamil.webdunia.com/entertainment/film/gossip/1008/25/1100825038_1.htm
-
- 0 replies
- 814 views
-
-
கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு! திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான 75-வது கோல்டன் குளோப் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. த்ரீ பில்ட்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி, லேடி பேர்ட் ஆகிய படங்கள் சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த இயக்குநருக்கான விருது தி ஷேப் ஆப் வாட்டர் படத்துக்காக டெல் டோரோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக, டார்கஸ்ட் ஹவர் படத்தில் நடித்த கேரி ஓல்ட்மேனும் சிறந்த நடிகையாக த்ரீ பில்ட்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி படத்தில் நடித்த ஃபிரான்செஸ் மெக்டோர்மண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தி ஹேண்ட்மெயிட்ஸ் டேல் சிறந்த …
-
- 4 replies
- 870 views
-
-
எம்.ஜி.ஆர். சிலைகள் உடைப்பு: நடிகர் சத்யராஜ் கண்டனம் [வியாழக்கிழமை, 31 ஓகஸ்ட் 2006, 05:35 ஈழம்] [புதினம் நிருபர்] யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் எம்.ஜி.ஆர். சிலைகள் உடைக்கப்பட்டமைக்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: இலங்கையில் எம்.ஜி.ஆர் சிலை உடைக்கப்பட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை தமிழர்கள் மீது பற்றும், பாசமும் கொண்டிருந்தவர், எம்.ஜி.ஆர். அவர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படம் திரைக்கு வந்தபோது, அவரை இலங்கைக்கு வரவழைத்து, உற்சாக வரவேற்பு கொடுத்தது இலங்கை அரசாங்கம். மிகப்பெரிய வள்ளலாக வாழ்ந்து காட்டியவர், அவர். மனிதாபிமானம் மிகுந்தவர். அவர் சில…
-
- 4 replies
- 1.6k views
-
-
தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் வெளிவந்திருக்கும் 75வது கலை படைப்பு, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் 50வது திரைப்படம் என எண்ணற்ற அருமை, பெருமைகளுடன் தைப்பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் தமிழ்படம் தான் இளைஞன்! 50வது ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் நடக்கும் கதை! கதைப்படி ராஜநாயகம் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் தொழிலாளர்களை அடிமையாக நடத்துகிறார் அந்த கம்பெனியின் சிட்டிங் முதலாளியும், சீட்டிங் முதலாளியுமான ராஜநாயகம் எனும் வில்லன் சுமன். அவரது அயோக்கியதனத்தை எதிர்க்கும் தொழிலாளிகள் எல்லோருக்கும் தண்டனை, அதுவும் மரண தண்டனை என்னும் அளவிற்கு கொடூரமான வில்லன் சுமன். அப்படிப்பட்டவரை ஒருநாள் தன் மகன் ஒரு வார்த்தை கேட்டுவிட்டான் என்பதற்காக போதையை ஏற…
-
- 0 replies
- 1.2k views
-
-
Thiruvilaiyaadal Arampam - watch Online http://www.oruwebsite.com/movies/thiru1.html
-
- 1 reply
- 2.4k views
-
-
வெயிலை தணிக்கும் ஏ.சி. பிரபல நடிகர் வீட்டில் வெப்பத்தை ஏற்றியிருக்கிறது. ஈக்காட்டுதாங்கல் கலைமகள் நகரில் இருக்கிறது விஜயகுமாரின் வீடு. அவர் மனைவி மஞ்சுளா, அவரது மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜய்யின் மனைவி ஆகியோர் அதில் வசித்து வருகிறார்கள். நேற்று காலை 11 மணி அளவில் இரண்டாவது மாடியிலிருந்து புகை கசிந்திருக்கிறது. சில நிமிடங்களில் வீடே புகைமண்டலமாக மாற அலறி அடித்து தீயணைப்புத்துறைக்கு போன் செய்திருக்கிறார்கள். அதற்குள் இரண்டாவது மாடியிலிருந்த அறையின் மெத்தை, தரைவிரிப்பு, புத்தகங்கள் என அனைத்தையும் தின்று ஜீரணித்து விட்டார் அக்னிபகவான். 'தாமிரபரணி' ஷுட்டிங்கில் இருந்த விஜயகுமாரும், அவரது மருமகனும் 'தாமிரபரணி' இயக்குனருமான ஹரியும் உடனே வீட்டிற்கு தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/04/provoked-movie.html 1979 ஆண்டு கால கட்டத்தில்லண்டன் சவுத் கோல் பகுதியில் வாழ்ந்த இந்திய பஞ்சாபி பெண்ணொருவர் கணவனின் சித்ரவத்தை தாங்க முடியாமால் கணவனை கொலை செய்தமைக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இன்று விடுதலை பெற்று வாழ்கிறார் .இந்த படத்தை பற்றி தனது பாத்திரம் நடித்த ஜஸ்வரராய் புகழ்ந்து உரைக்கிறார்
-
- 2 replies
- 1.8k views
-
-
பள்ளிக்கூடம் - விமர்சனம் நரேன், சினேகா, தங்கர்பச்சான், ஸ்ரேயா ரெட்டி, சீமான் நடிப்பில் பரத்வாஜ் இசையில் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம். தயாரிப்பு விஸ்வாஸ் சுந்தர். நம் வாழ்க்கையில் பள்ளிப்பருவம் மறக்க முடியாதது. நம் வருங்கால வாழ்வுக்கு அடித்தளமிட்ட அந்தப் பருவத்தைத் திரும்பிப் பார்க்கவோ அந்த நினைவுகளை அசைபோடவோ யாருக்கும் நேரமில்லை. 'பள்ளிக்கூடம்' படம் நம்மை பின்னோக்கி கால வெளியில் இழுத்துச் செல்கிறது. வயதைக் குறைத்து நம்மை மலரும் நினைவுகளில் மூழ்கடிக்கிறது. ஒரு பள்ளிக்கூடம் வெறும் போதனைக் கூடமாக இல்லாமல் ஆண்டுதோறும் அங்கு படித்த, பழகிய, பகிர்ந்துகொண்ட பல மாணவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்து கொண்ட மெளன சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்க…
-
- 8 replies
- 2.5k views
-
-
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் என்று சொல்லும்படி வளர்ந்து விட்டார் தனுஷ். இவர் தற்போது தங்கமகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. இந்நிலையில் இவர் தற்போது ரூ 6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளாராம். இந்த கார் தமிழ் நட்சத்திரங்கள் ஷங்கர், விஜய், ரகுமான் மட்டுமே வைத்திருக்க, தற்போது தனுஷும் இந்த காரை வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. http://www.thinakkural.lk/article.php?cinema/mmwkpg2hbh534748e95c45c821021ppgxb217961bf6cd7696d80d238mhwzw#sthash.3k4yolwJ.dpuf
-
- 0 replies
- 302 views
-
-
தமிழ் திரையுலகில் எல்லோருமே நண்பர்கள்தான் - மம்முட்டி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் நடிக்கிறார் மம்முட்டி. அவர் இப்போது நடிக்கும் படம் 'அறுவடை'. படப்பிடிப்பிலிருந்தவரை அண்மையில் சந்தித்தபோது... மலையாளத்திலிருந்து நீங்கள் ஹீரோவாக தமிழுக்கு வந்தீர்கள். இப்போது அங்கிருந்து நிறைய கதாநாயகிகள் வருகிறார்களே அதுபற்றி...? இது சகஜம். அங்கிருந்து இங்கு வர்றது. இங்கிருந்து அங்கே போறது அப்பப்போ நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. தமிழ், மலையாளம் தொடர்புகள் ரொம்ப நாளா இருந்துக்கிட்டுத்தான் இருக்கு. இந்தத் தொடர்பு எந்த அளவுக்கு உள்ளது? மலையாளம் இளமையான மொழி. தமிழ்தான் பாலி மாதிரி காலத்தால் மூத்த மொழி. தமிழ் இல்லாம மலையாளம் பேச முடியாது.…
-
- 1 reply
- 1.1k views
-
-
நேற்று மாவீரர் நாளில் விடுதலை2 படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இருக்கிறது. யுகபாரதி பாடல் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். யோக்ஃபி பாடியிருக்கிறார். சமயம் பார்த்து பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். படத்தின் Trailer இலே ஒன்றைக் கவனித்தேன். நடிகர் இளவரசு பேசும் வசனம் இப்படி இருந்தது, “என்னை மாதிரி படிக்காத ஒருத்தன் தண்டவாளத்திலை தலை வைச்சு படுத்ததாலேதான் உன்னை மாதிரி..” ஆக ஆளும் கட்சிக்கு நல்ல ‘ஜஸ்’ வைத்திருப்பது தெரிகிறது. எம்ஜிஆரின் தலை நிச்சயமாக உருளும்.
-
- 0 replies
- 719 views
-
-
சென்னை : படத்தின் சில காட்சிகளை பார்த்தபோதே பிரம்மித்து விட்டேன் என்று முதல்வர் கருணாநிதி முதல் அதிரடி நாயகன் ஜாக்கிசான் வரை பாராட்டிய தசாவதாரம் படத்தின் கதை........... வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7017.html
-
- 3 replies
- 2.6k views
-
-
மர்மயோகியில் தனக்கு ஜோடியாக நடிக்க காஜோலிடம் தேதிகள் கேட்டிருந்த கமல், இப்போது அந்த எண்ணத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, நயனிடம் தேதிகள் கேட்டுள்ளாராம். மர்மயோகியில் நடிக்கப்போவதாக மூன்று நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன. காஜோல், ராணி முகர்ஜி மற்றும் பத்மப்ரியாதான் அந்த மூவரும். இவர்களில் முதல் இருவரும் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. ஆனால் பத்மப்ரியா மட்டும், இந்தப் படத்தில் நடிக்கப் போவதாகவும், கமல்ஹாசனே போனில் தன்னிடம் பேசியதாகவும் கூறி வருகிறார். இந்நிலையில், இன்றைக்கு தென்மாநில மொழிப் படங்களில் பரபரப்பாகப் பேசப்படும் நாயகியான நயன்தாராவிடம் மர்மயோகி படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்குமாறு உலகநாயகன் கேட்டுக் கொண்டிருப்பதாக நம்பத் …
-
- 1 reply
- 811 views
-
-
திருமண வாழ்க்கைக்கு உண்மையும் விட்டுத்தருவதும் முக்கியம்: சன்னி லியோன் பேட்டி சன்னி லியோனி | படம்: சந்தீப் சக்சேனா வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு உண்மையும், விட்டுக்கொடுத்தலும் தான் முக்கியம் என்கிறார் நடிகை சன்னி லியோன். திரையுலக நட்சத்திர தம்பதிகளுக்கிடையில் பிரச்சினைகள் எழுவது சகஜம். இந்த வருடம் பாலிவுட்டில், இரண்டு ஜோடிகள் பிரிந்துவாழ முடிவு செய்துள்ள நிலையில், சன்னி லியோன் தன்னுடைய திருமண வாழ்வின் ரகசியத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். 2009-ல் டேனியல் வெபரைத் திருமணம் செய்துகொண்டார் சன்னி லியோன். அவர் சினிமா, திருமண வாழ்க்கை குறித்துப் பேசியதாவது: வெற்றிகரமான மணவாழ்க்கைக்கு என்ன தேவை?…
-
- 3 replies
- 927 views
-
-
நெப்போலியன் மருத்துவமனையில் அனுமதி நடிகரும், மத்திய அமைச்சருமான நெப்போலியனுக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நெல்லை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தசை திறன் குறைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மயோபதி சிகிச்சை மையத்தை அவர் நெல்லையில் நடத்தி வருகிறார். இங்கு நெப்போலியன் மாதந்தோறும் வருவார். நேற்று சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் நெப்போலிஅன் வந்தார். பிறகு அங்கிருந்து தனது மயோபதி சிகிச்சை மையத்திற்கு வீரவநல்லூருக்கு காரில் வன்டு கொண்டிருந்தார். அப்போது கோவில்பட்டியை கடந்து வந்தபோது நெப்போலியனுக்கு திடீர் வாந்தி, தலைச் சுற்றல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவர் நெல்லையில் மருத்துவமன…
-
- 0 replies
- 437 views
-