வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
“இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள்... கலாசாரம் தெரிந்தவர்கள்தான் லீடர் ஆக வேண்டும்!’’ - பிரகாஷ்ராஜ் பன்ச் “ ‘மோடியை, ஓர் அரசியல் கட்சியின் தலைவராக நான் பார்க்கவில்லை. அவரை ஓட்டு போட்டு வெற்றி பெறவைத்தவர்களுக்கும் அவர்தான் பிரதமர்; அவருக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் அவர்தான் பிரதமர். அப்படி நடுநிலையோடு இருக்கவேண்டியவர், ஒரு கொலையைக் கொண்டாடுபவர்களைக் கண்டிக்காமல் அமைதியாக இருப்பதைப் பார்க்கையில் எனக்கு பயம் வருகிறது. ‘என் பிரதமரே அமைதியாக இருக்கிறாரே!’ என்ற பயம். என் பயத்தைப் போக்கவேண்டியதுதானே அவருடைய வேலை. இப்பேர்பட்ட படுகொலையை நிகழ்த்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்கு முன், கொண்டாடுபவர்களைக் கண்டிக்கவேண்டியதுதானே ஒரு பிரதமரின் கடமை?' இந்தக் கேள்வியைக் கேட்டத…
-
- 1 reply
- 330 views
-
-
சென்னை: தமிழ் இனத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இனம் படத்தை எடுத்த லிங்குசாமி படத்தில் பாட்டெழுத முடியாது என முகத்திலடித்தது போல கூறி அதிர வைத்துள்ளார் ஒரு தன்மானக் கவிஞர். அவர்தான் அறிவுமதி! தமிழருக்கு எதிரான எந்த மேடையாக இருந்தாலும் அதில் தன் எதிர்ப்புக் குரலை கம்பீரமாகப் பதிவு செய்பவர் கவிஞர் அறிவுமதி. 'லிங்குசாமி படத்துக்கு எழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம்!' - இவரல்லவா தன்மான தமிழ் கவிஞன்!! தமிழுக்கு இழுக்கு என நினைக்கும் எந்த செயலையும் அறவே ஒதுக்கக் கூடியவர். தனக்கு வரும் எத்தனையோ வாய்ப்புகளை, 'இந்தத் தம்பிக்கு கொடுப்பா' என்று கூறிச் செல்பவர். வெகு அரிதாகத்தான் பாடல் எழுதவே அவர் ஒப்புக் கொள்கிறார். லிங்குசாமியின் நண்பர்களில் ஒருவராகத்தான் இருந்தார் இனம் என்ற…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழர்கள்... வெள்ளை தோல் மோகத்தினை குறைக்குக... மலையாளிகளின் கொட்டத்தினை அடக்குக... நடிக்க வந்து விட்டால் அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் என்று கூறுவது தவறு. (இவர்கள் எல்லாத்துக்கும் ரெடியாகவெ வந்து தமிழ்நாட்டில் டேரா போடுகிற கோஸ்டி... :D ) இயக்குநர் சொல்வதை கேட்பதே நல்ல நடிகையின் குணம். நான் அப்படித்தான் நடந்து கொள்வேன் என்கிறார் அரவான் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் கேரளத்து அர்ச்சனா கவி. தடுக்கி விழுந்தால் பாலக்காடு, தெரியாமல் இடித்தால் திருவல்லா என்ற ரேஞ்சுக்கு தமிழ் சினிமா போய்க் கொண்டிருக்கிறது. யாரைப் பார்த்தாலும் மலையாள நடிகைகளாகவே இருக்கின்றனர். அந்த வரிசையில் ]தற்போது புதிதாக ஒரு நட்சத்திரம்…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஹாலிவுட் ஜன்னல்: கரை சேர்த்த காதல் காதலால் சகலத்தையும் சாதிக்கலாம். நடுக்கடலில் தன்னந்தனியாய் 41 நாட்கள் தவித்த இளம்பெண்ணை அவரது காதல் கரை சேர்த்த உண்மைக் கதையே ‘அட்ரிஃப்ட்’ ஹாலிவுட் திரைப்படம். காதலனுடன் பசிபிக் கடலில் படகொன்றில் பயணம் செல்லும் யுவதியின் வாழ்க்கையைத் திடீர்ச் சூறாவளி ஒன்று புரட்டிப்போடுகிறது. சேதமடைந்த படகில், முடமான காதலனைச் சுமந்துகொண்டு பல வாரங்கள் அலைந்து திரிந்து கரை காணும் அந்த இளம்பெண்ணின் போராட்டத்தைச் சொல்கிறது ‘அட்ரிஃப்ட்’. இது 1983-ல் நடந்த உண்மைக் கதை. கடல் பயணத்தில் ஆர்வமுள்ள இளம் காதலர்கள், திருமணத்துக்கு முன்பாக பசிபிக் பெருங்கடலில் சாகச பயணத்தைத் திட்டமிடுகின்றனர்…
-
- 0 replies
- 341 views
-
-
“சினிமாவை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்!” - ‘அகம்’ திறக்கும் கமல்! பிக் பாஸ் மீசை, அதே டிரேட் மார்க் புன்னகை. உற்சாகமாகவே இருக்கிறார் கமல்ஹாசன். ‘விஸ்வரூபம் 2’ வெளியீட்டுத் தேதியை அறிவித்த அடுத்தநாள், அவரைச் சந்தித்தேன். “ ‘விஸ்வரூபம்’ அறிவிப்பின்போது, படத்தை ‘டிடிஹெச்’சில் வெளியிடுவேன் என்றீர்கள். அதற்கு எதிர்ப்புகள் வந்தன. அந்தப் பிரச்னைகளின் நினைவுகள் இப்பவும் துரத்துகிறதா?” “இப்போது முன்னைவிடத் தெம்பாகவும் புரிந்தநிலையிலும் இருக்கிறேன். அது அரசியல் இடையூறுதான். யாரோ செய்யும் தொழிலில் நான் புகுந்துவிட்டதாக நினைத்துவிட்டார்கள். நியாயமான வருமானம் வேண்டுமென்றால், தியேட்டர்களின் எண்ணிக்கை கூடவேண்டும். ஆந்திராவில் எ…
-
- 1 reply
- 484 views
-
-
எம்.ஆர்.ராதா பரம்பரையில் அடுத்த நட்சத்திரம் சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் என்பது ஒரு தொடர்கதைதான். அந்த வரிசையில் தற்போது இடம் பெற்றிருப்பவர் ரேயான். கிழக்கேப்போகும் ரயில் படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தை தொட்டவர் ராதிகா. தற்போது சினிமா மற்றும் தொலைகாட்சி சீரியல் நடிப்பிலும், தயாரிப்பிலும் கலக்கி வருகிறார். ராதிகாவுக்கும் லண்டன் கணவருக்கும் பிறந்தவர்தான் இந்த ரேயான். வாலிப வயதை எட்டிவிட்ட ரேயானை ஹீரோயினாக்க முடிவு செய்துள்ளார் ராதிகா. அதனால் நல்ல கதையாக இருந்தால் சொல்லுங்கள் என்று இயக்குனர்களிடம் கூறியுள்ளாராம். அதனால் தற்போது புதிய இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் ராதிகா வீட்டிற்கு நடையாய் நடந்து வருகிறார்கள். …
-
- 0 replies
- 954 views
-
-
நடிகர்கள் - ராகவா லாரன்ஸ், வேதிகா, ராஜ்கிரண், கோவை சரளா இயக்கம் - ராகவா லாரன்ஸ் இசை - பரத்வாஜ் தயாரிப்பு - சரண் சிரமமான ஒரு விஷயத்தை நடத்தி காட்டியிருக்கிறார் ராகவா.... இருட்ட ஆரம்பித்தால் போதும், உச்சா போக கூட அம்மா துணை கேட்பான் இந்த லாரன்ஸ்! வயசுப்பையன் இப்படி இருக்கலாமா என்று யோசிக்கிறீர்களா? லாரன்சின் வீக்னஸ் இது. இவரையே ஆவி பிடித்தால் எப்படியிருக்கும்? லாஜிக்காக படத்தை நடத்திக் கொண்டுபோக நினைத்திருக்கிறார் இயக்குனர் கம் நடிகர் லாரன்ஸ் ராகவா. லாரன்ஸ’ன் பயத்தை பற்றி அறிந்த ஒருவரும் அவனுக்கு பெண் தர மறுக்கிறார்கள். ஆனால் லாரன்ஸோ கிராமத்து பெண் வேதிகா மீது காதல் கொள்கிறார். வேதிகாவின் பெற்றோர்களை சம்மதிக்க வைத்து அவரை மணக்கிறார் லாரன்ஸ். இந்த சூழலில் …
-
- 14 replies
- 2.5k views
-
-
Paadhavathi | Vaazhai | Kalaiyarasan | Jayamoorthy, Meenakshi | Santhosh Narayanan | Mari Selvaraj சித்தன் ஜெயமூர்த்தி பாடியது.
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
புகழ்பெற்ற கிறிஸ்மஸ்கால திரைப்படமான ஹோம் அலோனுக்கு 25 ஆண்டுகள் பூர்த்தி வரலாற்றின் மிகச்சிறந்த கிறிஸ்மஸ் கால திரைப்படங்களில் ஒன்றான “ஹோம் அலோன்” திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஹோம் அரோனில் மேக்காலே கல்கின் 1990 நவம்பர் 16 ஆம் திகதி ஹோம் அலோன் திரைப்படம் வெளியாகியது. அமெரிக்க தம்பதியொன்று நத்தார் விடுமுறையில் பாரிஸ் நகருக்கு செல்லும்போது தவறுதலாக தமது 7 வயது மகனை தனியாக வீட்டில் விட்டுவிட்டு சென்றபோது அச்சிறுவன் இரு திருடர்களிடமிருந்து தன்னையும் வீட்டையும் பாதுகாத்…
-
- 2 replies
- 284 views
-
-
நடைபெற்றுக்கொண்டிருக்கும் 5வது ஐ.பி.எல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஷாருக்கான் மதுபோதையில் சண்டையிட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு மும்பை வான்கடே மைதானத்திற்குள் செல்வற்கு 5 ஆண்டுகள் தடைவிதிக்கப் பட்டுள்ளமைக்கு ஹிந்தி சினிமாத் துறையினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்
-
- 0 replies
- 909 views
-
-
[size=4]எத்தனையோ ஜோடிகளைப் பார்த்து விட்ட கமல்ஹாசன் முதல் முறையாக வித்தியாசமான ஒரு அனுபவத்தை சந்திக்கப் போகிறார். ஒரு 7 வயது சிறுமி கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். ஆனால் தமிழில் அல்ல, ஹாலிவுட்டில்.[/size] [size=3][size=4]ஹாலிவுட்டில் முதல் முறையாக இயக்கி, திரைக்கதை எழுதி, நடிக்கவும் போகும் கமல்ஹாசனுக்கு அந்தப் படத்தில் 7 வயது சிறுமிதான் கூடவே வரப் போகிறாராம். பேரி ஆஸ்போர்ன் இப்படத்தை தயாரிக்கிறார்.[/size][/size] [size=3][size=4]இந்த சிறுமி கதைப்படி அமெரிக்காவைச் சேர்ந்தவராம். எனவே நடிக்கத் தெரிந்த, நல்ல முகவாட்டம் கொண்ட, சுட்டித்தனமான 7 வயது அமெரிக்க சிறுமியை வலை வீசித் தேட ஆரம்பித்துள்ளனராம். கமல்ஹாசனுக்கு நிகரான கேரக்டராம் இக்குழந்தையின் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா, வரைந்த ஒவியம்தான் இந்த தாம் தூம். புள்ளியை சரியாக வைத்தவர், கோலத்தை வரையும் முன்பே அமரர் ஆகிவிட்டதால், கதையில் அங்கங்கே தடுமாற்றங்கள். ஆனாலும், தஞ்சாவூர் ஓவியத்தின் மேல் சென்ட் தெளித்த மாதிரி அங்கங்கே மணம். பிரமிப்பு. இளம் டாக்டரான ஜெயம் ரவி, கான்பிரன்சுக்காக ரஷ்யா செல்கிறார். அங்கே அவர் சந்திக்கும் அழகியும், அவரால் வந்த பிரச்சனையும் ரவியை ஜெயில் வரைக்கும் கொண்டு போக, காப்பாற்ற வருகிறார் வக்கீல் லட்சுமிராய். ஆனாலும், சட்டபூர்வமாக இல்லாமல் தன் இஷ்ட பூர்வமாக தப்பிக்க நினைக்கும் ரவி படுகிற துன்பங்களும் துயரங்களும் நம்மையும் தொற்றிக் கொள்ள, விறுவிறுப்பான இறுதிக்காட்சிக்கு ஏங்குகிறது மனசு. நல்லவேளையாக சுப நிறைவு! எப்படியாவது இந்தியாவுக்கு…
-
- 0 replies
- 1k views
-
-
[size=2] அழகான, குடும்பத்தை மட்டுமே கவனிச்சிக்கிற குடும்பத் தலைவி ஸ்ரீதேவி. கணவர், மகள் எல்லாருமே இவங்க அதிகம் படிக்காததுனால அடிக்கடி அவ மரியாதை செய்யறாங்க. அதுக்கு முக்கிய காரணம் நாலு பேர் எதிர்ல ஆங்கிலம் பேசத் தெரியாததுதான்.[/size] [size=2] ஸ்ரீதேவி நேரம் கிடைக்கும் போது அழகழகா லட்டு செஞ்சி வீடு வீடா கொடுக்கிறாங்க. லட்டு மட்டுமே செய்யத்தான் லாயக்குன்னு மத்தவங்க நினைக்கிற மாத்தி எப்படி அருமையா ஆங்கிலம் பேச கத்துகிறாங்க அதற்காக அவர் படும் சிரமம் என்பதே படத்தின் கதை.[/size] [size=2] நியூயார்க்குல இருக்கிற அக்கா பொன்னு கல்யாணத்துக்காக ஸ்ரீதேவி போறாங்க. திடீர்னு ஒரு நாள் நாலு வாரத்தில ஆங்கிலம் கத்துக்கற கிளாஸ்ல சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாங்க. யாருக்கும் தெரிய…
-
- 2 replies
- 1k views
-
-
மண்ணில் இந்த காதல் Spb sirமுச்சுவிடாமல் பாடிய ரகசியம் இதோ
-
- 1 reply
- 533 views
-
-
ராதிகா ஆப்தேயின் 'பார்ச்ட்' திரைப்படம் 23ஆம் திகதி வெளியாகுகிறது ராதிகா ஆப்தே நடிக்கும் பார்ச்ட் எனும் பொலிவூட் திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியிடப் படவுள்ளது. 30 வயதான ராதிகா ஆப்தே ‘கபாலி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். கபாலி படத்துக்கு முன்னர் “பார்ச்ட்” எனும் பொலிவூட் திரைப் படத்தில் அவர் நடித்திருந்தார். அப் படத்தில் நடிகர் ஆதில் ஹுஸைனுடன் ராதிகா ஆப்தே மிக நெருக்கமாக நடித்த படுக்கையறைக் காட்சிகளின் புகைப் படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில…
-
- 0 replies
- 447 views
-
-
வசுந்தராதேவி - வைஜெயந்திமாலா: 1. பாப்புக் குட்டி! ‘இந்தியர்கள் குடியரசு நாளை எதிர்பார்த்துக் காத்திருந்த இன்பத் தருணம். 1949ன் பனி பொழியும் மார்கழி. ‘உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன் டடடா டடடா டடடா டடடா... ’ ‘வாழ்க்கை’ சினிமா படப் பாடலின் ஆரவாரம் தென்னகமெங்கும்! மதராஸப் பட்டணத்தின் குடிமக்கள் அண்ணாந்து பார்த்து... பார்த்து, அவர்களின் கழுத்து வலித்தது. காரணம் ‘வாழ்க்கை’ டாக்கியின் விண் முட்டும் விளம்பரங்கள்! ‘ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் வாழ்க்கை’ என்று கொட்டை எழுத்துக்களில் பளிச்சிட, லட்சக் கணக்கான வண்ண வண்ண பிரம்மாண்ட பல…
-
- 5 replies
- 4.2k views
-
-
என் படத்தை யாரும் பாா்க்காதீா்கள் - சன்னி லியோன் 2016-12-21 21:18:28 ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் இந்தியில் கவர்ச்சி படங்களில் நடிக்கிறார். தமிழிலும் ‘வடகறி’ படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார். சன்னி லியோனால் இந்திய கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது என்று அவர் மீது பொலிவூட் ஹீரோயின்கள் பலர் தொடக்க நாட்களில் விமர்சித்தனர். தற்போது இணைய தளங்களில் பலர் சன்னியை விமர்சித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதில் கோபம் அடைந்த சன்னி லியோன் திடீரென்று விமர்சகர்கள் மீது பாய்ந்திருக்கிறார். ‘நான் நடிக்கும் படத்தையோ, அல்லது எனது புகைப்ப…
-
- 2 replies
- 488 views
-
-
தனுஷ்,ஜெயம் ரவி,ஜீவா,கார்த்தி என தமிழ்சினிமாவின் இளம் ஹீரோக்கள் எல்லோரும் திருமணமாகி குழந்தை, குட்டி என்று இல்லற வாழ்க்கையில் செட்டிலாகி விட அந்த வரிசையில் புதுமாப்பிள்ளையாகப் போகிறார் நடிகர் சிம்பு. நடிகர் சிம்புவின் கைவசம் தற்போது ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இருக்கின்றன. இதையடுத்து அவர் ‘மன்மதன் 2’ம் பாகத்தை டைரக்ட் செய்து நடிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. ஆனாலும் புதிய படங்கள் எதையும் அவர் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. இது குறித்து கேட்டால், பதில் சொல்லாமல் சிரிக்கிறார். ஆனால் தமிழில் பிரபல ஹீரோயினாக இருக்கும் ஹன்சிகா மோத்வானியுடன் இணைத்து வரும் கிசுகிசு பற்றி கேட்டபோது, அதற்கு மட்டும் வாயைத் திறந்தார். இதற்குமுன் என்னையும், சில நடிகைகளையும் இ…
-
- 0 replies
- 505 views
-
-
ஈழத் தமிழர்கள் பெரும் இன்னலில் உள்ள நிலையில் தான் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என்று நடிகர் அஜீத் அறிவித்துள்ளார். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தனர். அதேபோல முதல்வர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோரும் பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தனர். இந்த வரிசையில் தற்போது அஜீத்தும் இணைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அசல் திரைப்பட தொடக்க விழாவில் நேரில் கலந்து கொண்டும், தொலைபேசி மூலமாகவும், தலைமை இயக்கத்தின் மூலமாகவும் வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்…
-
- 4 replies
- 5.4k views
-
-
தேர்தலை ரகளையாக காட்டிய சினிமாக்கள்! மின்னம்பலம் தமிழகமே பரபரக்கும் தேர்தல் களத்தில் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் இறங்கியிருக்கின்றன. தமிழக தேர்தல் கலாச்சாரத்தை ரகளையோடு காட்சிப் படுத்திய முக்கிய சில படங்களும் இருக்கின்றன. அப்படி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தத் தேர்தல் சினிமாக்களை ஒரு ரிவைண்ட் செய்துவிடலாம். அமைதிப்படை தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பொலிட்டிகல் நையாண்டி சினிமா அமைதிப்படை. மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் 1994ல் வெளியானது. தேங்காய் பொறுக்கும் அமாவாசை கையில் ஆட்சி அதிகாரம் வந்தால் ? இதுவே ஒன்லைன். முன்னாள் எம்.எல்.ஏ. மணிவண்னன் மூலமாக அம்மாவாசை எப்படி நாகராஜ சோழ…
-
- 0 replies
- 694 views
-
-
பல தடங்கல்கள், தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை குத்தகைக்கு எடுத்துள்ளவர்களின் உள்ளடி வேலைகள் எல்லாவற்றையும் தாண்டி, தமிழர்களால் நடத்தப்படும் OTT தளத்தில் ஜூன் 25 வெளியாகிறது மேதகு திரைப்படம். எந்த OTT தளமும் வெளியிட மறுத்த படத்தை BS Value என்று தாமே ஒரு தளம் தொடங்கி வெளியிடுவதாக அறிகிறேன். இந்த படத்துக்கு எழுந்த இந்திய ஆளும் வர்கத்தின், அவர்களின் ஏஜென்டுகளின் எதிர்ப்பு, இந்த படம் நமக்கானது என்ற நம்பிக்கையை தருகிறது. படம் பார்த்த பின்தான் சொல்ல முடியும். இந்த படத்தை சமூக வலைதளங்களில் எவரும் டிரெண்ட் செய்யவில்லை என்பது கவலையான விடயம்.
-
- 7 replies
- 3.1k views
-
-
பாகுபலி ட்விஸ்டை மிஞ்சும்... எங்க அம்மா ராணி - படம் எப்படி? தாய் - மகள் பாசக் கதைக்குள், பேய் கதை கலந்து சொன்னால் எப்படி இருக்கும், அதுதான் 'எங்க அம்மா ராணி' படத்தின் கதை. பேய் + நோய் காமினேஷனில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எஸ்.பாணி. தொலைந்து போன தன் கணவனைத் தேடிக் கொண்டு, தன் இரட்டைக் குழந்தைகளுடன் மலேஷியாவில் வசித்து வருகிறார் துளசி (தன்ஷிகா). மீரா, தாரா என்கிற இரட்டைக் குழந்தைகளில் மீரா வினோத வகை நோயினால் இறந்து போகிறார். மீராவுக்கு வந்த நோயின் அறிகுறிகள் தாராவிடமும் தெரிய ஆரம்பிக்கிறது. இதை எப்படி சரி செய்வது என மருத்தவரிடம் கேட்க, இந்த வியாதிக்கான மருந்து என்ன எனத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் வரையில் நோயின் தன்மையைக…
-
- 0 replies
- 744 views
-
-
கணினித் திரை முன்பு அமர்ந்திருக்கும் அந்த இளைஞன் ஆடை எதையும் அணிந்திருக்கவில்லை. மறுமுனையில் அவனோடு ‘அரட்டை’அடிக்கும் பெண்ணும் அதேபோலவே திரையில் தோன்றும் கணத்துக்காகக் காத்திருக்கிறான். அதிரவைக்கும் இந்தத் தொடக்கமே புதுமுக இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணனின் ‘லென்ஸ்’ படத்தின் தீவிரத் தன்மையை உணர்த்திவிடுகிறது. மெய்நிகர் உலகில் நிலவும் வக்கிரங்களையும் அவற்றின் விபரீதமான விளைவுகளையும் பொட்டில் அறைந்ததுபோலச் சொல்கிறது ‘லென்ஸ்’. இளமையும் அழகும் கொண்ட மனை வியை அலட்சியப்படுத்திவிட்டு, இணையத் தில் தன் வக்கிரங்களுக்கு வடிகால் தேடும் அரவிந்த் (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்), ஒருநாள் அதேபோன்ற ஒரு அனுபவத்துக் காகக் காத்திருக்கும்போது, புதிய பெண்ணின் நட்பு கிடைக்கி…
-
- 8 replies
- 1.4k views
-
-
விருதை எதிர்பார்க்கவில்லை: ரஜினிகாந்த் மின்னம்பலம்2021-10-24 தாதா சாகேப் பால்கே விருதினை எதிர்பார்க்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும். இவ்விருதை இதுவரை லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர். தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகியோர் பெற்றுள்ளனர். இந்நிலையில், 2019ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக விருது வழங்கும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் …
-
- 4 replies
- 604 views
-
-
இருபத்தை ஆண்டுகளுக்கு முன் ஜானி படத்தில் ஜீன்ஸ் - டீ.சர்ட் ஆடையில் எத்தனை இளமையான ரஜினியை பார்க்கமுடிந்த்தோ அதே யூத்ஃபுல்னெஸ் இப்போது எந்திரன் ஸ்டில்களில் தெரிகிறது. ஐஸ்க்ரீம் பிரபஞ்சத்தின் பிரமிப்பாண அழகி ஐஸ்வர்யா ராயுடன் இணைந்திருக்கும் புகைப்படங்களில் இன்னும் அழகாகவே இருக்கிறார் சூப்பர் ஸடார். My link
-
- 0 replies
- 792 views
-