வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
சுதந்திரம் தித்திக்கும்பழம் தின்னக் கொடுப்பார்; மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு; பொன்னே. மணியே, என்றுனைப் புகழ்வார்; ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்! உன்னுடன் பிறந்த சின்ன அக்கா, வான வீதியில் வந்து திரிந்து தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச் சோலை பயின்று சாலையில் மேய்ந்து வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்! தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ? அக்கா அக்கா என்றுநீ அழைத்தாய். அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே? http://www.paraparapu.com/
-
- 0 replies
- 779 views
-
-
எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்ஐவி வைரஸôல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி செய்வதற்காக இனி விளம்பரப் படங்களில் நடிக்கப் போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் 5 கோடி நிதியுடன் ""எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தமிழ்நாடு அறக்கட்டளை'' ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. இத்தகைய குழந்தைகளுக்கு மேலும் உதவ "பாப்புலேஷன் சர்வீஸஸ் இண்டர்நேஷனல்' (பிஎஸ்ஐ) என்ற தன்னார்வ அமைப்பு நிதி திரட்டும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், பிஎஸ்ஐ, "ச…
-
- 0 replies
- 724 views
-
-
கௌதம் மேனனனுக்கும் துப்பறியும் கதைக்கும் அப்படி என்னதான் மூன்றாம் பொறுத்தமோ, அஜித்துடன் ‘துப்பறியும் ஆனந்த்’ என்று பரபரப்பாகி, கதை பெரிதாகக் கவரவில்லை என்று கடைசிநேரத்தில் கழன்று கொண்டார். அதே கதையில் ‘ யோஹனாக’ மாற இருந்த விஜய்க்கும் அந்தக்கதையில் நடிக்கும் யோகம் இல்லை! தற்போது சூர்யா - கெளதம் மேனன் கூட்டணியில் அதேகதையில் படப்பிடிப்பிற்கு கிளம்பத் தயாராக இருந்த கடைசி நேரத்தில் 'துருவ நட்சத்திரம்' எரிநட்சத்திரமாகி கண் இமைக்கும் நேரத்தில் அடிவானத்தில் மத்தாப்பாக சிதறுவதுபோல இதுவும் டிராப்பாகி விட்டது என்று சூடு கிளம்பியிருக்கிறது கோலிவுட்டில். See more at: http://vuin.com/news/tamil/surya-to-stay-away-from-detective-script
-
- 14 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 670 views
-
-
எலிசபெத் ரெய்லர் Elizabeth Taylor with Richard Burton in Cleopatra மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணிடம் அழகும் இளமையும் இருக்கும் போது அவள் காலடியில் கூட விழத் தயாராக இருப்பார்கள் ஆண்கள். திரையுலக தேவதை எலிசபெத் ரெய்லர் இன்று தனிமையில் வாடுகிறார். அன்புக்காக ஏங்குகிறார். அவரது தோலில் சுருக்கங்கள் விழ ஆண்களும் அவரை விட்டுப் போய் விட்டார்கள். தற்போது 72வயதுகளைத் தொட்டிருக்கும் எலிசபெத் ரெய்லர், சமையற்கலைஞர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், அரசியல்வாதி, கட்டிடத் தொழிலாளர் என சமூகத்தின் பல மட்டங்களிலும் இருந்தும் எட்டுத் தடவைகள், ஏழு ஆண்களைத் திருமணம் செய்து கொண்டார். எட்டுத் தடவைகள் விவாகரத்தும் செய்து …
-
- 1 reply
- 987 views
-
-
எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துடுச்சு- அஞ்சலி மகிழ்ச்சி. ஹைதராபாத்: என்னைச் சூழ்ந்திருந்த எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டன. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்கிறார் அஞ்சலி. சித்தி கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறி, சில நாட்கள் தலைமறைவாக இருந்து, பரபரப்பைக் கிளப்பி பின் போலீசில் ஆஜரானார். தமிழ் - தெலுங்குப் படங்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் தன் சித்தியுடன் சமரசமும் ஆகிவிட்டார். இதுவரை தன் வாழ்க்கையில் நடந்தவை குறித்து செய்தியாளர்களிடம் அஞ்சலி கூறுகையில், "இதுவரை என் வாழ்வில் நடந்தவற்றை மறக்கவே விரும்புகிறேன். என்னால் சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலையில்தான் வீட்டை விட்டு வெளியேறினேன். இந்த முடிவுதான் என் பிரச்சினைகளுக்கு முற்றுப் …
-
- 7 replies
- 815 views
-
-
எல்லாச் சிலுக்கும் சிலுக்கல்ல! #HBDSilkSmitha -கண்ணபிரான் இரவிசங்கர் சிலுக்கு: இந்தப் பேரே.. பல பேருக்கு.. பலப்பல உணர்ச்சிகளைத் தரவல்லது! *சிலருக்குக் கிளுகிளுப்பு *சிலருக்கு ஒவ்வாமை *சிலருக்கு அழகுணர்ச்சி *சிலருக்கு நடிப்புத் திறமாடல் *சிலருக்கோ.. இவை அனைத்தும் கலந்த கலவை! சமூகம், இவள் கதையை "Dirty Picture" என்று பொய்யான பேரிட்டு எடுத்தாலும்,சிலுக்கு 'டர்ட்டி கேர்ள்' அல்ல என்பதை அன்பறிவுள்ள பெண்கள்/ ஆண்கள் இருவருமே கண்டு கொள்வார்கள்! அக்கால ரசிகர்கள் மட்டுமல்ல, இக்கால ரசிகர்களும் சிலுக்குக்கு உண்டு!அவள் உதிர்ந்து போய்ப் பல ஆண்டுகள் கழித்துப் பிறந்த பைய…
-
- 0 replies
- 922 views
-
-
எல்லாளனை திரையிடுங்கள்… -லீனா மணிமேகலை வேண்டுகோள்! Monday, February 21, 2011, 14:42 விஎஸ் மியூசிக் ட்ரீம்ஸ் சார்பில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வருகிற ஏப்ரல் 20 முதல் 25 ந் தேதி வரை தமிழ் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதில் எந்திரன், அங்காடித் தெரு, களவாணி, மதராஸப்பட்டினம், ஆடுகளம், மைனா, பாஸ் என்கிற பாஸ்கரன், விண்ணை தாண்டி வருவாயா, யுத்தம் செய், தா, பயணம், தென்மேற்கு பருவக்காற்று, என் சுவாசம், மற்றும் செங்கடல், எல்லாளன் ஆகிய படங்கள் போட்டியிடுகின்றன. இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சேரன், மிஷ்கின், வசந்தபாலன், ராஜேஷ்எம், சூரிய பிரபாகர், லீனா மணிமேகலை ஆகிய இயக்குனர்களும் கலந்து கொண்டார்கள். எல்லாளன் படம் குறித்து பேசிய சேரன், ஈழப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
எல்லாளன் எல்லோரும் இணைந்து உருவாக்கிய படைப்பு - ஒளிப்பதிவாளர் சந்தோஷ் ஈழப் போராளிகள் 2007 ஆம் ஆண்டு நடத்திய எல்லாளன் நடவடிக்கையில் அனுராதபுரம் வான்தளம் தகர்க்கப்பட்டது. ராணுவத்தின் 27 வான்கலன்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. உலகப் போராளிகள் சரித்திரத்தில் இதுவொரு தீரமிக்க நடவடிக்கையாக அமைந்தது. 21 கரும்புலிகள் தங்களது உயிரை ஈந்து எல்லாளன் நடவடிக்கையை வெற்றிபெற வைத்தனர். தமிழீழத்துக்கான ஈழப் போராளிகளின் போராட்ட வரலாற்றில் தீரத்தின், தியாகத்தின் அணையாப் பிரகாசம், எல்லாளன் நடவடிக்கை. இந்த நடவடிக்கையை போர் மிகுந்த சூழலில் திரைப்படமாக எடுத்துள்ளனர் போராளிகள். கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் புலம்பெயர் மற்றும் தாய் தமிழர்களின் உள்ளங்களில் விடுதலைக்கான கனவை புதிய எ…
-
- 0 replies
- 402 views
-
-
உலகில் உள்ள எல்லாத் தீமைகளையும் எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது? இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் துப்பாக்கித் தோட்டாக்கள் மூலமாகவே சாதித்து விடலாம் என்று நம்புவதாகத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவின் போலீஸ் பட அபத்த வரலாறு தெரியாததா, இருக்கும் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளுக்கு நடுவே இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று உதறிவிட்டுப் போக முடியவில்லை. இயக்குநர் ஹரி பாணி படங்களாக இருந்தால், அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவருடைய நாயகன்கள் தங்களைப் பற்றிய அறிவிப்புகளைத் தாங்களே அறிவித்துவிடுகிறவர்கள்: “நான் போலீஸ் இல்லடா; பொறுக்கி.” ஒருவிதமான மேட்டிமைத்தனத்தோடும் போலி அறிவு ஜீவித்தன்மையோடும் கட்டமைக்கப்படும் கௌதமின் படங்களையும் சரி, அவை முன்வைக்கும் நியாயங்களையும் சரி... அப்படி ஒதுக்கிவ…
-
- 0 replies
- 562 views
-
-
தேடித் தேடிக் கேட்ட விருப்பப் பாடல்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டிருக்கையில் புதியதாய் காதுவழி புகுந்து இதயம்.. உயிர்.. என உணர்வு மொத்தமுமாய் தமிழின பற்றின் காரணமாக நிறைகிறது அந்த சீனத்து மொழிப் பாடலொன்று. ஒரு தாயிற்கு தாங்கயியலாத இழப்பென்று சொன்னால் அது தான் பெற்றெடுத்த தன் குழந்தையின் இறப்பன்றி வேறொன்று இருக்காது என்பதை நாமறிவோம்; அதே குழந்தை மீண்டும் உயிர்பெற்று வந்தால் அந்த தாயின் நன்றியுணர்வு எப்படி கண்ணீரின் வழியே’ தான் விட்டுப்பெற்ற உயிரென பூக்குமென்பதை ஒரு புதிய கட்டத்திற்குள் காட்டுகிறார் ஏ.ஆர். முருகதாஸ். ஒவ்வொரு முறை என் தமிழன் அடிப்பட்டப் போதெல்லாம் தனியே நின்று அழுத என் உணர்விற்கு ஒரு காலங்கடந்த ஆறுதலாய் அமைந்திருந்தது அந்தக் காட்சி. எதிரி என்று எண்ணி ஆரம்பத்…
-
- 3 replies
- 1.2k views
-
-
எள்ளு வய பூக்கலையே’ பாடலுக்கு பின் இருக்கு ரகசியம் எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம் ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா சாவையும் கூறு போட்டு கொல்லய்யா கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு மல்லாந்து போனாலும் மண்ணோடு சாஞ்சாலும் அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு தலைச்சம் புள்ளை இல்லாம சரிஞ்சது எத்தன ஆட்சி நீயே எங்க ராசா வா வா களத்துக்கு…
-
- 0 replies
- 558 views
-
-
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகுந்த செலவு பிடிக்கும் இந்த அறுவை சிகிச்சையின் மொத்த செலவையும் நடிகர் சிவகுமார் ஏற்றுக் கொண்டார். எழுத்தாளன் என்பவன் ஒரு சமூகத்தை நெறிப்படுத்தும் ஆசிரியன். சமூகத்தின் சீக்குகளை களையும் மருத்துவன். அவனை போஷிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் சமூகத்துக்கு உண்டு. முக்கியமாக அரசுக்கு. ஆனால், தமிழகத்தில் எழுத்தாளனின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கேரளாவில் வைக்கம் முகமது பஷீர் இறந்தபோது அனைத்து ஊடகங்களிலும் பஷீரே நிறைந்திருந்தார். மாநிலமே மூன்று நாள்கள் துக்கம் அனுஷ்டித்தது. அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடந்தது. சமீபத்தில் கவிஞர் அய்யப்பன் இறந்தபோது ஆறு அமைச்…
-
- 2 replies
- 1.7k views
-
-
எழுநூறு பேர் பங்குபெற்ற பாடல் காட்சி! நானூறு துணை நடிகர்கள், முன்னூறு கிராமியக் கலைஞர்கள், மொத்தமாக இவர்களை ஒன்று சேர்ப்பதே இமாலய சாதனை. ஒன்று சேர்த்ததுடன் ஒரு பாடலையும் எடுத்திருக்கிறார் இளவேனில், உளியின் ஓசை படத்தின் இயக்குனர். கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்க ராஜராஜசோழன் வருவது போலவும், அவரை சோழ குடிகள் பாடல் இசைத்து வரவேற்பது போலவும் காட்சி. நானூறு துணை நடிகர்களுடன் மதுரை பக்கமிருந்து முன்னூறு கிராமியக் கலைஞர்களையும் சென்னை ஃபிலிம் சிட்டியில் இதற்காக ஒன்றிணைத்திருக்கிறார்கள். கலா மாஸ்டர் நடனம் அமைக்க, பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய பாடலை படமாக்கினார் இளவேனில். பாடலின் தொகையறாவை முதல்வர் கருணாநிதி எழுதியிருக்கிறார்…
-
- 2 replies
- 1.5k views
-
-
நேற்று மாலை எவரெஸ்ட் என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன், Baltasar Kormákur இயக்கியுள்ள இப்படம் 1996ல் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. எவரெஸ்ட் பயணம் மேற்கொள்வதற்காக நேபாளம் வந்து இறங்கும் குழு ஒன்றுடன் படம் துவங்குகிறது. நாமும் அவர்களுடன் இணைந்து பயணிக்கத் துவங்குகிறோம். பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது இமயம், பனிபடர்ந்த அதன் கம்பீரம் நம்மை மயக்குகிறது. அடிவாரத்தில் நின்றபடியே தாங்கள் செல்ல வேண்டிய சிகரத்தை வியந்து பார்க்கிறார்கள் பயணக்குழுவினர். இமயத்தின் அழகை கண்டு நம் அகம் விழித்துக் கொள்ளத் துவங்குகிறது. பனிமலையின் மீது பறக்கும் பறவை போல காற்றில் மிதக்க துவங்குகிறோம். ஒவ்வொரு நிலையாக மலையேற்றம் எப்படி அமைகிறது என்பதை விரிவாகக் காட்டுகிறது த…
-
- 0 replies
- 433 views
-
-
எஸ் பி பாலசுப்ரமணியம் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி சினிமாவில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியவர் எஸ்.பி.பி. ஆரம்பகாலத்தில் மெல்லிசை குழுவில் கச்சேரி நடத்தியதில் தொடங்கி பின்பு கின்னஸ் சாதனை படைத்தது வரை அவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றில் சில சுவாரஸ்ய துளி....................... 1. சினிமாவிற்கு வருவதற்கு முன் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தி வந்திருக்கின்றார் எஸ்பிபாலசுப்ரமணியம். 2. தெலுங்கு பட இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணி மூலம் திரைப்படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பினை முதன் முதலாக கிடைக்கப் பெற்றார். படம் : "ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா". இதனால் தனது 'ரிக்கார்டிங்' தியேட்டருக்கு 'கோதண்டபாணி' எ…
-
- 1 reply
- 629 views
-
-
சென்னை: பாடகி பி.சுசீலாவின் பெயரில் துவக்கப்பட்டுள்ள அறக்கடளை சார்பில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு அடங்கிய 'பி.சுசீலா தேசிய விருது' வழங்கப்படுகிறது. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய, குறிப்பாக தமிழ் மனங்களில் ரீங்காரமிடும் பெயர் பி.சுசீலா. அவர் திரை உலகில் பாட வந்து இந்த ஆண்டுடன் 57 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுவரை 40 ஆயிரம் பாடல்களை அவர் பாடியுள்ளார். தற்போது, பி.சுசீலா தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் இசைத் துறையில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு விருதும், நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவியும் செய்ய உள்ளார். மேலும், இசைத்துறைக்கென தனி நூலகம் ஒன்றையும் தொடங்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து பா…
-
- 3 replies
- 1.3k views
-
-
இருவரும் தேனியில் திருமகன் படபிடிப்பின் போது இரகசிய திருமணம் செய்து கொண்டதாக வேகமாக ஒரு செய்தி பரவியது எனினும் சூரியாவை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இதனை மறுத்து வெறும் வதந்தி என்று கூயி இருக்கின்றார் சரி சரி நீங்கள் இதெல்லாம் நாட்டுக்கு றொம்ப முக்கியம் எண்டு சொல்றது புரிது..அப்போ நான் வட்டா.. :P
-
- 5 replies
- 1.7k views
-
-
எஸ்.ஜே.சூர்யா - நம்மை ஏமாற்றிய பிரபலங்கள் வரிசை ’100 செக்யூரிட்டியை இறக்கு. மீடியாக்காரன் உட்பட எவனையும் உள்ள விடாத..படத்தோட ஒரு ஸ்டில்லு கூட வெளில போயிடக்கூடாது’என்று நிறைய டைரக்டர்ஸ் ஏகப்பட்ட பந்தா செய்வது கோடம்பாக்க வழக்கம். இதெல்லாம் எதற்காக என்றால் படத்தின் கதை வெளியே தெரிந்து விடாமல் காப்பாற்ற! (படம் ரிலீஸ் ஆன பின், இந்தக் கதைக்கா அப்படி பந்தா பண்ணாங்கன்னு நாம நொந்து போவோம்!) அந்த மாதிரி டைரக்டர்களுக்கு மத்தியில தான் ஆர்ப்பாட்டமா நுழைந்தார் எஸ்.ஜே.சூர்யா. தன்னோட படங்களின் கதையை பூஜையன்றே வெளியில் சொல்லி விடுவது அவர் வழக்கம். ‘முடிஞ்சா அவங்க இந்தக் கதையை சுட்டுக்கட்டும்’ என்று ஒரு பேட்டியில் சொன்னார். யாரும் தன் கதையில் கை வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்…
-
- 3 replies
- 2.8k views
-
-
எ°ஜே.சூர்யா போட்ட ஆட்டம்-அதிர்ச்சியில் உறைந்த டைரக்டர் கலைப்புலி தாணு தயாரிப்பில் எ°.ஜே.சூர்யா, மாளவிகா, மீராஜா°மின், ப்ரீத்தி வர்மா, கார்த்திகா என பலர் நடிக்க டைரக்டர் ரத்னகுமார் இயக்கிய "திருமகன்" பட விவகாரத்தில் ஆபாச காட்சிகளை சேர்க்கமாட்டேன் என்று சொன்ன டைரக்டருக்கு எதிராக எ°.ஜே.சூர்யாவும் தாணுவும் களமிறங்கி மோதிக்கொண்டார்கள். இதனால் ரத்னகுமார் பெயரையே தாணு இருட்டடிப்பு செய்தது பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தோம். தாணு மீதும் எ°.ஜே. சூர்யா மீதும் தயாரிப்பாளர் சங்கத்திலும் இயக்குநர்கள் சங்கத்திலும் புகார் கொடுத்திருந்தார் ரத்னகுமார். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் இந்தப் பிரச்சினையை கை கழுவிவிட்டது. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி இயக்குநர்கள் சங்க செயற்குழு கூட்டத்த…
-
- 0 replies
- 959 views
-
-
எஸ்.ஜே.சூர்யா முதன் முறையாக இசையமைத்து, நடித்து இயக்கிவரும் படம் 'இசை'. இப்படத்தின் கதை இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையேயான பகையைப் பற்றியதாம். இதில் ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா ஏ.ஆர்.ரஹ்மான் பாத்திரத்தில் வருகிறாராம். இவருக்கு எதிராக இளையராஜா பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக இருந்ததாம். படத்தின் கேரக்டர்கள் பெயர் கூட இளையராஜா, ரஹ்மான் பெயரைப் போலவே ஒலிக்கும் பெயர்களாக இருந்ததாம். இது என்னடா வம்பாய்ப் போயிற்று என்று பிரகாஷ்ராஜ் பாதியிலேயே விலகிவிட்டாராம். எஸ்.ஜே.சூர்யா மீண்டும் அலைந்து திரிந்து தேடி கதை சொல்லி இப்போது ஒரு வழியாக அவ்வேடத்தில் நடிக்க சம்மதித்திருப்பவர் சத்யராஜ். பிரச்சனைக்குரிய கதையை ஒன்லைனாக வைத்திருப்பதால் படத்தில் ஏதும் சிக்கல் வருமோ என்று பலரும் யோசிக்…
-
- 0 replies
- 347 views
-
-
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! அமெரிக்காவில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கடவுச்சீட்டு(passport), வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை திருட்டு போனது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு அவரது பை திருட்டு போனதாக கூறப்படுகிறது. அந்த பையில், அவரது கடவுச்சீட்டு, வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை இருந்ததாக தெரிகிறது. பாஸ்போர்ட் திருட்டு போனது குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடனடியாக இந்திய தூதரகத்தில் புகார் அளித்தார். அதைய…
-
- 0 replies
- 263 views
-
-
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள் கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இன்று 74ஆவது பிறந்தநாள். இவர் குறித்த சில முக்கியத் தகவல்கள் இதோ. எஸ்.பி.பியின் தந்தை ஒரு ஹரிஹத கலைஞர். இளம் வயதிலேயே இவருக்கு இசையின் மீது அளாதி பிரியம். இளம் வயதில் தெலுங்கு இசை நிறுவனம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அந்தப் பரிசுதான் பாடகராக வேண்டும் என்கிற ஆர்வத்தை அவருக்குள் விதைத்தது. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் 'ஶ்ரீ ஶ்ரீ மரியாத ராமண்ணா' என்கிற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பா…
-
- 0 replies
- 547 views
-
-
-
- 2 replies
- 879 views
-
-
எஸ்.பி.பி: காதலிக்க வந்த கலைஞன் 1 – டாக்டர் ஜி. ராமானுஜம் September 25, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · மற்றவை இசை ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவுதான். ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும் எஸ்பிபாலசுப்பிரமணியம் இருந்தால்தான் அந்த கச்சேரி மேடை நிறையும். சரீரத்திலும் சாரீரத்திலும் வஞ்சகமில்லாதவர். ‘ஹோட்டல் ரம்பா’ என்ற தமிழ்த்திரைப்படத்தில் ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு ?’ என்ற பாடல்தான் அவர் முதலில் தமிழுக்காகப் பாடியது. எம் எஸ் வி இசையமைப்பில். படம் வரவே இல்லை.பாடலும் நம்மிடம் இல்லை. 1969 இல் வெளிவந்த இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்) , ஆயிரம் நிலவே வா (அடிமைப்பெண்) ஆகிய அவரது முதல் இரண்டு பா…
-
- 4 replies
- 1.6k views
-