வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் 30.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் ரூபாய் இரண்டரை லட்சம் பரிசு வழங்கினார்கள். ஏழை மாணவர்களுக்காக தாய் தமிழ் பள்ளிக்கு ரூபாய் ஒரு லட்சமும், வாழை சமூக சேவை இயக்கத்துக்கு ரூபாய் இரண்டு லட்சமும் வழங்கினர். விழாவில் சூர்யா பேசுகையில், கடந்த 34 வருடமாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வேறு உதவிகளை விட கல்விக்கு செய்கின்ற உதவி ஒ…
-
- 2 replies
- 625 views
-
-
"மிஷ்கினு, ராமு... நீங்க அப்படின்னா, அப்புறம் நாங்க எப்படி?!'' - 'சவரக்கத்தி' விமர்சனம். 'கத்தி எதுக்குத்தான்... தொப்புள்கொடி வெட்டத்தான்' - படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் வரிகள்தான், படத்தின் கதைக்களம். பரோல் முடியும் நாள், மாலை 6 மணிக்கு மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்கிற வெறுப்பில், அழுத்தத்தில் காரில் நகரத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு கேங் லீடர், சந்தர்ப்பவசத்தால் அவனது வழியில் மாட்டிக்கொள்ளும் ஓர் அப்பாவி குடும்பஸ்தன்... இருவருக்குமிடையிலான துரத்தல்களும் ஓட்டமுமான திரைக்கதை, துயரத்திலும் நகைச்சுவையிலுமாக மாற்றி மாற்றி தீட்டப்பட்டதுதான், இந்தக் கூர்மையான 'சவரக்கத்தி'. தன் ஏழ்மையான அன்றாட வாழ்க்கையைச் சுவாரஸ்யமான பொய்களால் …
-
- 2 replies
- 718 views
-
-
அவர் இறந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் அவர் எழுதிய பாடல்களைக் கொண்ட பல படங்கள் திரைக்கு வரக் காத்துக்கொண்டிருக்கின்றன. அதில், சில பெரிய இயக்குநர்கள் படங்களும் அடக்கம். கலைஞனுக்கு அவன் மரணம் முடிவல்ல என்பதையும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார், நா.முத்துக்குமார்! பாடல்களை ரசிப்பதில் இரண்டு வகைகள் உண்டு. குழந்தைப் பருவத்தில் பெரும்பாலும் இசையில் மூழ்குவதே ரசனையின் வடிவமாக இருக்கும். முதிர்ச்சியை நோக்கி வாழ்க்கை நகர நகர இசையைக் காட்டிலும் வரிகளே நமக்கான தேடலாக மாறும். காதல், அன்பு, ஏக்கம், பிரிவு, நட்பு, வலி, ஊக்கம், தேவை, வெற்றி, தோல்வி என வாழ்வின் எந்த ஒரு நிலைக்கும், சூழலுக்கும் ஒரு பாடல் நம்முடைய மனதில் தொடர்புபடுகிறதென்றால், அது பெர…
-
- 2 replies
- 2.8k views
-
-
உடுமலைப்பேட்டையில் சினிமா படப்பிடிப்பின் போது திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக விஜய் மற்றும் மோகன்லால் உயிர்தப்பினர். விஜய், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படப்பிடிப்பு இன்று உடுமலைப்பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி அணைக்கட்டில் நடந்தது. அங்கு கோவில் திருவிழாவில் ஒரு பாடல் காட்சிக்காக நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்–நடிகைகள் பங்கேற்று நடித்து வந்தனர். அப்போது வாண வேடிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்து சிதறின. இதில் துணை நடிகர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். படப்பிடிப்பும் உனடடியாக நிறுத்தப்பட்டது. மேலும் விஜய் மோகன்லால் ஆகியோர் காயமின்றி தப்பினர…
-
- 2 replies
- 763 views
-
-
-
- 2 replies
- 553 views
-
-
எமது நடிகை நிரஞ்சனியுடன் ஒரு பரபரப்பு உரையாடல் மணி ஸ்ரீகாந்தன். ‘வடபகுதி தமிழ்ப் பெண்ணாக தோன்றும் என்னை நிர்வாணமாகக் குளிக்கும் காட்சியொன்றில் நடிக்கும்படி என்னிடம் இயக்குநர் கேட்டுக் கொண்டார். தமிழ் பெண்கள் குளியல் ஆடை இல்லாமல் நீராடும் வழக்கம் இல்லை என்றும் அது யதார்த்தத்துக்கு புறம்பானது என்றும் அவரிடம் விளக்கியதும் அவர் காட்சியை மாற்றிவிட்டார்’ இலங்கை சிங்கள திரையுலகில் ரொம்பவும் பிஸியாக இருக்கும் நடிகைதான் நிரஞ்சனி சண்முகராஜா, கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு தமிழச்சிதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இலங்கையின் முன்னணி இயக்குநர் சோமரத்ன திஸாநாயக்க இயக்கியுள்ள ‘சுனாமி’ படத்தில் நாயகியாக இவர் நடித்துள்ளார். “அட…
-
- 2 replies
- 1.3k views
-
-
நடிகர் விஜய் நடித்த, தலைவா படம், தமிழகத்தை தவிர, தென் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வரும், 22ம் திகதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது. “படம் வெளியிட ஏற்பட்ட தாமதத்திற்கு, தமிழக பொலிஸிற்கு பங்கில்லை´ என்று, டி.ஜி.பி., ராமானுஜம் தெரிவித்துள்ளார். விஜய் – அமலாபால் நடித்த, “தலைவா´ படம், நேற்று (9ம் திகதி) தமிழகம் உட்பட, உலகம் முழுவதும், 2,000 தியேட்டர்களில் வெளியாக இருந்தது. படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு தாமதமானதாலும், அரசியல் கலந்த வசனங்கள் இருப்பதாக தகவல் வெளியானதாலும், இப்படத்தை திரையிடும், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாலும், “தலைவா´ படம், நேற்று தமிழகத்தில் வெளியிடப்படவில்லை. ஆந்திரா, கேரளா, கர்நாட…
-
- 2 replies
- 681 views
-
-
புருஸ் லீ பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு நவம்பர் 27: புருஸ் லீ பிறந்த தினத்தையொட்டி சிறப்பு பகிர்வு.... தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த சிறுவன்.சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடும் ,போலீஸ் உடனும் தொடர்ந்து வம்புக்களில் ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார்.அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே குங் பூ சொல்லித்தந்து கொண்டிருந்தார் லீ அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் "ஆசியர் அல்லாதவர்களுக்கு ஏன் குங் பூ சொல்லித்தருகிறாய்" என்று கேட்க ,"கலை எல்லாருக்கும் பொதுவானது தானே " என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார். "அப்படியில்லை ! வலியவ…
-
- 2 replies
- 587 views
-
-
பத்து வருடங்களுக்கு முன், வருடத்துக்கு ஒரு திரைப்படவிழாவையே சென்னையில் கனவு காண முடியாது. இன்று தடுக்கி விழுந்தால், திரைப்பட விழாக்கள். இந்த ஆரோக்கியமான சூழலை உருவாக்கியதற்காக சென்னையிலுள்ள பிரெஞ்ச் கலாசாக மையமான அல்லையன் பிரான்ஸியசையும், ICAF- யையும் எத்தனை பாராட்டினாலும் தகும். அல்லையன்ஸ் பிரான்சியசும், ICAF-யும் இணைந்து தமிழ், பிரெஞ்ச் வரலாற்று திரைப்பட விழாவை சென்னையில் நடத்துகிறது. இதில் வரலாற்றை பின்புலமாகக் கொண்ட தமிழ், பிரெஞ்ச் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சென்னை அல்லையன்ஸ் பிரான்சியஸ் அரங்கில் இன்று மாலை 6-30 மணிக்கு திரைப்பட விழா தொடங்கப்படுகிறது. முதல் திரையிடலாக ரிட்லி ஸ்காட்(Ridley Scott) இயக்கிய '1492 Christoph Colomb' திரையிடப்படுகிறது. இ…
-
- 2 replies
- 1.3k views
-
-
’கோமாளி கிங்ஸ்’ பலதசாப்த இடைவெளிக்குப் பின்னர், முழுக்க முழுக்க இலங்கைக் கலைஞர்களின் தயாரிப்பில் வெளிவரும் 'கோமாளிகிங்ஸ்' முழுநீளத் தமிழ்த் திரைப்படம், இன்று (23) முதல், நாடெங்கும் திரையிடப்பட்டு உள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தலைநகர் கொழும்பு உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில், இத்திரைப்படம் காண்ப்பிக்கப்பட உள்ளது. இலங்கை உட்பட உலகெங்கும் பரந்து வாழும் சகல தமிழ் சினிமா ரசிகர்களுக்காக, சகலரும் குடும்பத்துடன் சென்றுப் பார்த்து இரசித்து மகிழக்கூடிய ஒரு பொழுதுபோக்கு சித்திரமாக 'கோமாளி கிங்ஸ்'தயாரிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை, காதல், அதிரடி, த்ரில், சஸ்பென்ஸ் என, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 912 views
-
-
ஸ்ரீதிவ்யாவுக்கு திருமணமாம் ; மருத்துவரா மாப்பிள்ளை நடிகை ஸ்ரீதிவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் வெகுவான தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு வரும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், நடந்ததோ வேறு, ஜீவா, விஷால், சிவகார்த்திகேயன், ஜீ.வி.பிரகாஷ், விஷ்ணு விஷால், விஷால் என மூன்றாம் கட்ட நடிகர்களுடனேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிம்பு, தனுஷ் என இரண்டாம் கட்ட நடிகர்களுடன் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம், கவர்ச்சி என்றால் இவருக்கு ஆகவே ஆகாது. இதனால், கவர்ச்சி காட்சிகள் …
-
- 2 replies
- 356 views
-
-
எந்திரன் படத்தின் பாடல்கள் வீடியோ பார்க்க http://www.thedipaar.com/enthiran/
-
- 2 replies
- 1.6k views
-
-
இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பற்றி .... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 2 replies
- 2.8k views
-
-
இயக்குநர் சி.வி.குமாரின் சர்ப்ரைஸ் சிக்ஸர்! - மாயவன் விமர்சனம் சாகா வரத்துக்காக கூடு விட்டு கூடு பாயும் விட்டலாச்சார்யா கான்செப்டை, நியூரோ சயின்ஸ், பிரெய்ன் நியூரான் இன்ஜெக்ஷன் என அல்ட்ரா மாடர்னாக்கினால் கிடைப்பவனே மாயவன்! போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் (சந்தீப் கிஷன்) ஒரு திருடனைத் துரத்தும்போது எதேச்சையாக ஒரு கொலையைப் பார்க்கிறார். கொலையாளியைப் பிடிக்கும் முயற்சியில் இவரும் சாவின் விளிம்புவரை சென்று திரும்புகிறார். நான்கு மாத ஓய்வுக்குப் பின் மீண்டும் வேலைக்குச் சேர முடிவெடுக்கும் சந்தீப்பை, மனநல மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு, அதற்குப் பின் பணியைத் தொடருமாறு உத்தரவிடுகிறார் டி.ஜி.பி. மனநல மருத்துவராக வரும் ஆதிரை (ல…
-
- 2 replies
- 525 views
-
-
ரஜினி படித்த அதே திரைப்படக் கல்லூரியில்தான் நானும் படித்தேன். சுமாரான முகத் தோற்றம் உள்ள ரஜினியால் சினிமாவில் வெற்றி பெற முடிந்தபோது, ஏன் நம்மால் முடியாது என்று என்னையே நான் கேட்டுக் கொண்ட கேள்விதான் என்னையும் சூப்பர் ஸ்டாராக்கியது. அந்த வகையில் நான் ஜெயிக்க ரஜினியும் ஒரு காரணம்!'' -ஒரு பேட்டியின்போது இப்படிச் சொன்னவர் வேறு யாருமில்லை நடிகர் சிரஞ்சீவிதான். திருப்பதியில் பல லட்சம் பேருக்குமேல் திரண்ட கூட்டத்தில் தனது `பிரஜா ராஜ்ஜியம்' கட்சியை பிரமாதமாகத் தொடங்கி, ``சூப்பர் ஸ்டார் ரஜினியும் அரசியலுக்கு வருவாரா? புதிய கட்சித் தொடங்குவாரா?'' என்று பல்லாண்டு காலமாக ரஜினி ரசிகர்களின் மனதில் எரிந்து கொண்டிருந்த ஏக்கத்துக்கு எண்ணெய் வார்த்திருக்கிறார் சிரஞ்சீவி. அவரது அதிர…
-
- 2 replies
- 1.9k views
-
-
நயன்தார காட்டில் கோடி மழை அறிமுகமாகி 10 வருடங்களுக்கு மேலாக நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவின் சம்பளம் இந்திய ரூ.4 கோடியாக அதிகரித்துள்ளமை கோலிவூட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் நயன்தாரா மார்க்கெட் முன்னிலையில் உள்ளதுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கியபோது திரைப்படங்கள் குறையும் என்று சிலர் சொன்னதை நயன் பொய்யாக்கினார். அதிக திரைப்படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நடிகைகளாலும் கூட நயன்தாராவை எட்டிப்பிடிக்க முடியவில்லை. அறிமுகமான புதிதில் நயன்தாராவின் சம்பளம் இந்திய ரூ.40 மற்றும் 50 இலட்சங்களாக …
-
- 2 replies
- 806 views
-
-
மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை கதையை படமாக்கும் ஐஸ்வர்யா தனுஷ் ஷாருக்கான் வெளியிட்ட 'மாரியப்பன்' படத்தின் பர்ஸ்ட் லுக் மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி 'மாரியப்பன்' என்ற பெயரின் படமாக்கவுள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ். 2016-ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட சக போட்டியாளர் வருண் சிங் தாண்டிய உயரம் 1.86 மீட்டர் ஆகும். மாரியப…
-
- 2 replies
- 387 views
-
-
நச்சுன்னு 4 கிலோ எடையைக் குறைத்த நர்கீஸ் பக்ரி. மும்பை: ஒரே மாதத்தில் என்னென்ன செய்ய முடியும்.. நர்கீஸ் பக்ரி 4 கிலோ எடையைக் குறைத்து டிவிட்டரில் அதைப் போஸ்ட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இப்போதெல்லாம் எடைக் குறைப்பு மற்றும் எடை அதிகரிப்பு கை வந்த கலையாகி விட்டது கலைஞர்களுக்கு. தேவையென்றால் குறைகிறார்கள், தேவையில்லாவிட்டால் கூட்டிக் கொள்கிறார்கள். ஒரே படத்தில் தினுசு தினுசான வெயிட்டிலும் வந்து அசத்துகிறார்கள். இந்த நிலையில் அழகுச் சிலையான நர்கீஸ் பக்ரி தனது எடையை 4 கிலோ குறைத்து அசத்தியுள்ளாராம். வாயைக் கட்டியதே இந்த எடைக் குறைப்புக்கு முக்கியக் காரணம். தேவையில்லாமல் உள்ளே தள்ளி வெயிட்டை ஏற்றும் வேலையை முதல் வேலையாக நிறுத்தினாராம். 10 ஆயிரம் படிகள்... அத…
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரான்ஸ் ல் இடம்பெற்ற துயர சம்பவத்தை அடுத்து மக்கள் ஒரு வித அதிர்ச்சியில் இருப்பதினால் துப்பாக்கி படத்தை திரையிடுவதை மக்கள் எதிர்ப்பார்கள் என்ற காரணத்தாலும் இந்த துயர சம்பவத்தில் இந்த படத்தை வெளியிடுவதை தள்ளிப் போடலாம் என்று கருதுகின்றனர் … இந்த காலப் பகுதியில் இந்த திரைப் படத்தை வெளியிடுவது முறையல்ல என்பது மக்கள் கருத்தாகும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ….. துப்பாக்கி பட ரசிகர்கள் கூட இதனை ஏற்றுக் கொள்வார்கள் ….
-
- 2 replies
- 684 views
-
-
சி3 (சிங்கம்3) விமர்சனம்நடிகர்கள்: சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன், சூரி, ரோபோ சங்கர், அனூப் சிங், இமான் அண்ணாச்சி ஒளிப்பதிவு: ப்ரியன் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் இயக்கம்: ஹரி இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று பெயருக்கு போட்டுக் கொண்டு, முந்தைய பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் படமெடுத்து வைப்பார்கள். ஆனால் ஹரி அதில் ரொம்ப தெளிவானவர். உண்மையிலேயே முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக சிங்கம் 3-ஐ எடுத்திருக்கிறார். விசாகப்பட்டணத்தில் போலீஸ் கமிஷனர் மர்மமாகக் கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க தமிழக போலீசின் உதவியை ஆந்திரா நாட, நம்ம துரைசிங்கம் சூர்யாவை அனுப்பி வைக்கிறார்கள். அவர் வி.பட்டணத்தில் இறங்கியதுமே பின் தொடர ஆரம்பிக்கி…
-
- 2 replies
- 2.2k views
-
-
- நீரை.மகேந்திரன் படம் : செங்கடல் ஆண்டு : 2011 மொழி : தமிழ் - ஆங்கிலம் - சிங்களம் - தெலுங்கு இயக்கம்: லீனா மணிமேகலை. செங்கடல்... நீண்ட சட்ட மற்றும் தணிக்கைப் போராட்டங்களை சந்தித்த திரைப்படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. ஏற்கெனவே சென்னையில் சில முறை திரையிடப்பட்ட பொழுது (இரண்டு தடவை என நினைக்கிறேன்) பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையாததால் இந்த முறை தவற விட்டுவிடக்கூடாது முதல் நாளே முடிவு செய்து விட்டேன். இந்தப் படம் குறித்து ஏற்கெனவே ஊடகங்கள் வழி கேள்விப்பட்டிருந்த தகவல்கள், தணிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்ததாக வெளியான செய்திகள், தமிழின் முக்கியமான ஆவணப்பட இயக்குநர் இ…
-
- 2 replies
- 824 views
-
-
கோவா கடற்கரையில் ஹன்சிகா கையைப் பிடித்து இழுத்து அத்துமீறிய ரசிகர்கள்- படப்பிடிப்பு ரத்து. கோவாவில் நடந்த தெலுங்குப் பட ஷூட்டிங்கின்போது நடிகை ஹன்சிகாவிடம் ரசிகர்கள் அத்துமீறியதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகை ஜெயப்பிரதா தனது மகன் சித்தார்த்தை வைத்து தயாரிக்கும் உயிரே உயிரே படத்தின் பாடல் காட்சியைப் படமாக்கினர். அதில் ஹன்சிகா, சித்தார்த் இணைந்து டூயட் பாடுவது போல மாலை 4 மணிக்கு கடற்கரையில் படமாக்கினர். இதனை பார்க்க கடற்கரையில் பெரும் கூட்டம் கூடிவிட்டது. ஆட்டோகிராப். ரசிகர்கள் ஹன்சிகாவின் பெயரை சத்தமாகக் கூவி அழைத்தபடியும், விசிலடித்தபடியும் இருந்தனர். திடீரென்று ரசிகர்கள் கூட்டமாக அங்கு இருந்த பாதுகாவலர்களையும் மீறி ஹன்சிகாவின் அருகில் வந்தனர…
-
- 2 replies
- 1.7k views
-
-
Sunday, December 19th, 2010 அசின் நடிப்பில் வெளிவரும் காவலன் படத்தை புறக்கணிப்போம் தமிழர்களே! அன்பார்ந்த உலகத் தமிழ் மக்களே… வெகு விரைவில் வெளிவர இருக்கும் விஜய் அசின் நடித்த காவலன் படத்தை உலகமெங்கும் புறக்கணிக்குமாறு உரிமையோடு வேண்டும் அதே நேரம் அதற்கான வலுவான காரணங்களையும் முன்வைக்க விரும்புகின்றோம். முதலில் படப்பிடிப்புக்கு மட்டுமே இலங்கை சென்றேன் என்றார் அசின் பின்பு போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவே சென்றேன் என பல்டியடித்தார். எல்லாவற்றையும் விட கொடுமையான விடயம் எதுவெனில் ஒருவருக்கு கண் சிகிச்சை முடிந்த பின் நீங்கள் முதலில் யாரை பார்க்க விரும்புகின்றீர்கள் என கேட்ட கேள்விக்கு நான் அசினை மட்டுமே பார்க்க விரும்புகின்றேன் என அவர் கூற…
-
- 2 replies
- 929 views
-
-
சமந்தாவுடன் காதல் முதல் திருமணம் வரை: மனம் திறந்த நாக சைதன்யா சமந்தாவுடனான காதல் மலர்ந்தது, திருமணம் மற்றும் மதம் மாற்றம் சர்ச்சை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் நாக சைதன்யா மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ப்ரேமம்' படம் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. தெலுங்கிலும் 'ப்ரேமம்' என்ற பெயரிலேயே அக்டோபர் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது. நாக சைதன்யா, ஸ்ருதிஹாசன், மடோனா செபஸ்டின், அனுபமா பரேமஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை சந்து இயக்கி இருக்கிறார். இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அளித்துள்ள பேட்டியில் சமந்தாவுடனான காதல் மலர்ந்தது எப்படி, சமந்தா மதம் மாறுகிறாரா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு…
-
- 2 replies
- 378 views
-