வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
களத்தில் கலக்கும் சூப்பர் வில்லன்கள்!- சூசைட் ஸ்குவாட் படம் எப்படி? ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ படங்களில், ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். சொல்லப்போனால், ஹீரோக்களைவிட வில்லன்களுக்கே ரசிகர்கள் பட்டாளம் அதிகம். பேட்மேன், ஃபிளாஷ் போன்ற ஹீரோக்களைவிட, சூப்பர் வில்லன்களான ஜோக்கர், டெட் ஷாட் போன்றவர்களுக்கே மவுசு ஜாஸ்தி. பேட்மேன் சீரியஸில் சூப்பர் வில்லன்களை சிறைக்குள் தள்ளிவிடுவார் பேட்மேன். இந்த சூப்பர்வில்லன்களுக்கும், அல்ட்ரா சூப்பர் வில்லன்களுக்குமான சண்டை தான் இந்த சூசைட் ஸ்குவாட். இந்த படத்தில் வில்லன்கள் தான் ஹீரோஸ்! வில்லனுக்கும் வில்லனுக்கும் சண்டை வந்தால் என்ற ஒன்லைனுடன் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறது இந்த சூசைட…
-
- 0 replies
- 456 views
-
-
களத்தில் சந்திப்போம் ரீமேக் உரிமைக்கு போட்டி போடும் நடிகர்கள் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள படம் களத்தில் சந்திப்போம். என்.ராஜசேகர் இயக்கிய இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி.சவுத்ரி தயாரித்து இருந்தார். இந்த நிறுவனத்தின் 90வது தயாரிப்பு இது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா காரணமாக மக்கள் தியேட்டர்களுக்கு வர தயங்கிய நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைத்தது. அடுத்து களத்தில் சந்திப்போம் படம் தியேட்டர்களுக்கு குடும்ப ரசிகர்களை வரவழைத்துள்ளது. அனைவரும் ரசிக்கும் வகை…
-
- 0 replies
- 592 views
-
-
களறி கற்கும் நடிகைகள் நடிகைகள் களறி கற்றுக் கொண்டால் நல்லது. ஆனால் படத்திற்கு தேவைப்பட்டால் ஒழிய யாரும் அதை செய்வதில்லை. ஆணாதிக்க சினிமாவிலிருந்து விடுபட களறி உதவும் என்றாலும், எந்த நடிகையும் அந்த ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவதாகவும் இல்லை. இந்த வியாக்கியானத்தை மறந்துவிட்டு வேறொரு முக்கியமான விஷயத்துக்கு வருவோம். சந்தோஷ் சிவனின் உருமி படத்திற்காக களறி கற்றுக் கொண்டிருக்கிறார் ஜெனிலியா. கதைப்படி இவர் இளவரசியாம். இவருக்கு படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் இருக்கிறதாம். ஜெனிலியா இப்படத்தில் நடிக்க கமிட் ஆனவுடன், அவசியம் களறி கற்றுக் கொள்ள வேண்டும் என்றாராம் சந்தோஷ் சிவன். இதற்காகவே நேரம் ஒதுக்கி கற்று தேர்ந்திருக்கிறார் ஜெனிலியா. இவரை போலவே நன்கு …
-
- 16 replies
- 6.1k views
-
-
களவுத் தொழிற்சாலை திரை விமர்சனம் எம் ஜி கே மூவி மேக்கர்ஸ் சார்பில் ரவிசங்கர் என்பவர் தயாரிக்க, வெங்கி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், வெங்கடேஷ் ராஜாவும் எஸ் 2 என்ற நிறுவனமும் சேர்ந்து வெளியிட, கதிர் , வம்சி கிருஷ்ணா , குஷி, மு.களஞ்சியம் , செந்தில் , ரேணுகா நடிப்பில் கிருஷ்ணஷாமி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் களவுத் தொழிற்சாலை . எப்படி இயங்குது தொழிற்சாலை ? பார்க்கலாம் . சர்வதேச சிலைக் கடத்தல் முக்கிய அமைப்பின் முக்கிய நபர் ஒருவன் (வம்சி கிருஷ்ணா ) , கும்பகோணம் பகுதியில் உள்ள ராஜ ராஜபுரம் என்ற ஊரின் கோவிலில் உள்ள, ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமையான மருத்துவ குணம் மிக்க, ச…
-
- 0 replies
- 404 views
-
-
கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பியபோது 6-வது மாடியில் இருந்து விழுந்து நடிகர் மரணம். ஹைதராபாத்: கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றபோது, 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து நடிகர் பால பிரசாந்த் மரணமடைந்தார். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல்லைச் சேர்ந்தவர் பால பிரசாந்த் (வயது25). இவர் ஐதராபாத்தில் தங்கி இருந்து குறும் படங்களில் நடித்து வந்தார். இவர், 'இப்பட்லோ ராமுடிலா சீத்தலா எவர் உண்டா பாபு' என்ற தெலுங்கு படத்தில் கதாநாயனாக அறிமுகமாகி நடித்து வந்தார். படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது. அடுத்த மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளது. பால பிரசாந்துக்கும் ஹுக்கட் பள்ளி பவர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 6-வது மாடியில் வசிக்கும் திருமணமா…
-
- 1 reply
- 504 views
-
-
[size=3][size=4]கள்ளத்துப்பாக்கி படத்தில் கொடூரமான காட்சிகள் ஏராளமாக இருப்பதாகக் கூறி 35 இடங்களில் கத்தரி வைத்திருக்கிறது தணிக்கைக் குழு.[/size][/size] [size=3][size=4]ஆனாலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படம் இடம்பெறும் காட்சி மட்டும் தப்பித்திருக்கிறது.[/size][/size] [size=3][size=4]தமிழ் ஈழம், விடுதலைப் புலிகள், பிரபாகரன் போன்ற வார்த்தைகள் இடம்பெற்றாலே, அதை வெட்டி எறியச் சொல்வதில் ரொம்ப கறாராக இருப்பார்கள் சென்சார் குழுவினர்.[/size][/size] [size=3][size=4]ஆனால் கள்ளத்துப்பாக்கியில் இலங்கை வரைபடத்தின் பின்னணியில் பிரபாகரன் படம் இடம்பெற்றுள்ளது.[/size][/size] [size=3][size=4]"இது, ஒரு கூலிப்படையின் கதை. வேலை வெட்டி இல்லாத இளைஞர்களின் கையில் துப்பாக்…
-
- 0 replies
- 446 views
-
-
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை நயனதாரா, தனது உத்தரவையும் மீறி தன்னை வளைத்து வளைத்துப் படம் பிடித்த கள்ளுக்கடை உரிமையாளரின் கேமராவை வாங்கி கீழே போட்டு உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோட்டயம் நகரில் நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு நயனதாரா அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக கோட்டயம் வந்த நயனதாரா அங்குள்ள ஹோட்டலில் தங்கினார். பின்னர் காலை உணவுக்காக ஹோட்டல் வளாகத்தில் உள்ள ரெஸ்டாரென்டுக்கு அவர் போனார். அப்போது நயனதாராவைப் பார்த்ததும் ஏராளமான பேர் அங்கு கூடி விட்டனர். அப்போது ஒருவர் (கள்ளுக்கடை நிர்வாகியாகம்) நயனதாராவை அருகில் பார்த்த உற்சாகத்தில், தனது கேமராவால் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த நயனதாரா, போட்டோ எடுக்க வேண்டாம் என கேட்டுக்…
-
- 17 replies
- 6k views
-
-
கவர்ச்சி என்பது ஒரு ஊறுகாய் போல - லட்சுமி மேனன் சினிமாவில் கவர்ச்சி என்பது ஒரு ஊறுகாய் போலத்தான் என நடிகை லட்சுமி மேனன் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் மலையாளிகளின் ஆதிக்கம் வெகுவாகவே உள்ளதென தற்போது வெளியாகும் படங்களை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். தமிழை குறைவாக கற்றுக்கொண்டாலும் அழகின் மூலமாக இளம் நடிகைகள் நுழைந்து வந்தனர். தற்போது பள்ளிக்கூட மாணவிகளும் படத்தில் நடித்து வருகின்றார்கள். இதற்கு சிறந்த உதாரணம் நடிகை லட்சுமி மேனன். இவர் 10ம் வகுப்பு தான் படிக்கிறார். சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்து வெற்றிநாயகியாக வலம் வரும் இவர், குட்டிப்புலி, மஞ்சப்பை என இரு புதிய படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் இயக்குனர் ஒருவர் இவரி…
-
- 0 replies
- 566 views
-
-
மூக்கு இருக்கும் வரை எப்படி ஜலதோஷம் இருக்குமோ, அதுபோல கவர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை. அட.. அவ்வளவு ஏன்? மசாலா இல்லாமல் சாம்பார் வைக்கமுடியுமா? அதுமாதிரிதான் கவர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை. எந்த டைப் படமாக இருந்தாலும் அதில் கவர்ச்சி கட்டாயம் இருக்கும். சில படங்களில் இலைமறைகாயாக இருக்கும். சில படங்களில் கதைக்கு தேவைப்படுவதால் இருக்கும். சில படங்களில் அது திணிக்கப்படும்போதுதான் பளிச்சென்று தெரியும். தமிழில் 'ரொப் 10' படங்களில் ஒன்றான 'உதிரிப்பூக்கள்' படத்தில் விஜயன் தன் கொழுத்தியாளை பலாத்காரம் செய்யாமல் அவளை நிர்வாணப்படுத்தி "உங்களை இந்தக் கோலத்தில் பார்த்த முதல் ஆள் நான்தான்" என்று சொல்லும் காட்சியும், கொழுத்தியாள் நிர்வாணமாக கிடக்கும் காட்சியும் கவர்ச்சியில்லாமல் வெறெ…
-
- 4 replies
- 5.7k views
-
-
காட்டமாட்டார் ரெஜினா அதர்வாவுடன் நடித்த “ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்” திரைப்படத்தையடுத்து, சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, ராஜதந்திரம்-2, பார்ட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. தெலுங்கில் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அவர் நடித்த நக்ஷ்த்ரம் என்ற திைரப்படம், கடந்த 4ஆம் திகதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் முதன்முறையாக அதிரடியாக கிளாமரை அவர் வெளிப்படுத்தி நடித்திருந்தார் ரெஜினா. ஆனால், அந்தத் திரைப்படம் தோல்வியடைந்து விட்டது. இந்தத் திரைப்படத்தில் ரெஜினாவின் கிளாமரும், அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதனால், கிளாமராக நடித்தால் தனது மார்க்கெட் எகிறி…
-
- 0 replies
- 421 views
-
-
மேலும் புதிய படங்கள்செக்ஸியான ரோல்களில் நடிக்க என்னை யாருமே கூப்பிடவில்லை என்று ஏக்கத்துடன் கூறுகிறார் திரிஷா. குடும்பப் போர்வையுடன் உலா வந்து கொண்டிருந்த பல நாயகிகளும் இப்போது கிளாமர் சால்வையுடன் கிளம்பியுள்ளனர். முதலில் சினேகா இந்த வரிசையை ஆரம்பித்து வைத்தார். பிறகு பிரியா மணி, நயனதாரா, ஆசின், சந்தியா என பலரும் கிளாமர் களத்தில் குதித்தனர். இப்போது திரிஷாவும் செக்ஸி ரோல்கள் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். திரிஷா கிளாமரான ரோல்களில் நடித்திருந்தாலும் செக்ஸியான ரோல்களில் நடித்ததில்லை. அதுபோன்ற வாய்ப்புகள் வந்தால் நடிக்கத் தயார் என திரிஷா கூறியுள்ளார். கிளாமர், குடும்பப் பாங்கு என சம அளவில் கலந்து கலாய்த்து வரும் திரிஷா, தெலுங்கில் இரண்டையும…
-
- 4 replies
- 2.1k views
-
-
லிங்குசாமி இயக்கும் படத்துக்கு ரூ. 1 கோடி சம்பளம் பெற்றார் நயன்தாரா. குசேலன், சத்யம் படங்களில் இவரது கவர்ச்சி ஆட்டத்தை பார்த்துவிட்டு தெலுங்கு தயாரிப்பாளர்கள் புது படத்துக்கு கேட்டுள்ளனர். கொஞ்சம் கவர்ச்சி என்றால் 1 கோடி ரூபாய், அதிகம் என்றால் ஒன்றரை கோடி என மிரட்டியிருக்கிறார் நயன். சமீபத்தில் அவரிடம் கால்ஷீட் கேட்கப்போன தெலுங்கு தயாரிப்பாளரிடம்தான் இந்த சம்பளத்தை கேட்டிருக்கிறார். சம்பளம் அதிகம் வாங்குற நடிகைனு சொல்றாங்க. அது எனக்கு சந்தோஷம்தான். ஆனா இதுதான் என்னோட சம்பளம்னு எந்த நடிகையுமே சொல்லமாடடாங்க. சம்பளம் எனக்கும் தயாரிப்பாளருக்குமுள்ள விஷயம். அதப்பத்தி எதுவும் கேட்காதீங்க என்கிறார் நயன். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=264
-
- 1 reply
- 934 views
-
-
ஜெய் நடித்துள்ள வடகறி படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார் பாலிவுட்டின் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன். அப்படத்துக்காக அவர் ஆடும் அயிட்டம் பாடலும் படமாக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, மேலும் சில படங்களில் நடிப்பது குறித்து ஒரு பக்கம் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார் சன்னி. இந்நிலையில், இந்தியில் அவர் நடித்துள்ள எம்எம்எஸ்-2 என்ற இந்தி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உருவாக்கிவிட்டுள்ளது. ராகினி என்ற பெயரில் பாலிவுட்டில் வெளியான படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில், முதல் பாகத்தை விடவும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை பெரிய அளவில் அட்டாக் பண்ணும் வகையில் ஆவேச புயலாகியிருக்கிறாராம் சன்னி. படத்தின் முன்னோட்டமே அதை உணர்த்தி விட்டதால் இளவட்ட ரசிகர்…
-
- 20 replies
- 9.5k views
-
-
கவர்ச்சியற்ற நாயகிகளும் செக்ஸியான நாயகர்களும் ஆர். அபிலாஷ் Bangalore Daysஇல் சக்கரநாற்காலியில் வரும் ஊனமுற்ற பெண்ணாக பார்வதி மேனன் பெண்களை செக்ஸியாக காட்டுவதற்கு ஆரம்பத்தில் தமிழ் சினிமா வெகுவாக மெனக்கெட்டிருக்கிறது. ஐம்பதுகளின் கறுப்பு வெள்ளை படங்கள் கூட விதிவிலக்கு அல்ல. தொண்ணூறுகள் வரை தமிழகம் ஆடையை பொறுத்தமட்டில் கட்டுப்பெட்டியாகவே இருந்தது. எண்பதுகளில் ஈரத்தில் ஒட்டின ஆடையுடன் மழைநடனம் இன்றைய டாஸ்மாக் பாடல் போல அத்தியாவசிய அங்கமாய் இருந்தது. தொண்ணூறுகளில் பெண் தொப்புள் மீது அசட்டு காதல் ஒளிப்பதிவாளர்களுக்கு இருந்தது. பெரிய திரையில் நாயகியின் தொப்புள் சில நொடிகள் குளோசப்பாய் வருகையில் எப்படி இருக்கும் என நினைத்தால் இன்று குமட்டல் எடுக்கிறது. இன்று த…
-
- 1 reply
- 3.8k views
-
-
அஜித் படத்தில் படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தேன் என்று வந்த செய்தியை மறுத்திருக்கிறார் நடிகை தமன்னா. கேடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த தமன்னா. அதன்பிறகு கல்லூரி, வியாபாரி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் பையா, ஆகிய படங்கள் தான் அவருக்கு ஹிட் ஹீரோயினாக மாற பாதை அமைத்துக் கொடுத்தது. அதன்பிறகு விஜய்யுடன் நடித்த சுறா, தனுஷுடன் நடித்த வேங்கையும் வெற்றி பெறாததால், தெலுங்கு பக்கம் போனார். அதனால் தமிழ்சினிமாவை விட்டு விட்டு முழுக்க முழுக்க தெலுங்கு படங்களில் மட்டும் நடித்த தமன்ன நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத் படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தில் நடிகை தமன்னா படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தார் என்று சொல்ல…
-
- 8 replies
- 5.2k views
-
-
கவர்ச்சியாக நடிப்பேன், ஆனால் 'அதை' காட்ட மாட்டேன்: ஐஸ்வர்யா ராஜேஷ். சென்னை: கிளாமராக நடித்தாலும், தொப்புளை காட்ட மாட்டேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அட்டக்கத்தி படம் மூலம் பிரபலம் ஆனவர் ஐஸ்வர்யா ராஜோஷ். காக்கா முட்டை படத்தில் இரண்டு மகன்களுக்கு தாயாக அருமையாக நடித்திருந்தார். தர்மதுரை படத்திலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் அவர் நடிப்பு பற்றி கூறுகையில், காக்கா முட்டை போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். மோ பேய் படம் என்றாலும் பிற பேய் படங்களில் இருந்து இது வித்தியாசமாக இருக்கும். பறந்து செல்லவா படத்தில் நான் கிளாமராக நடித்திருந்தேன். ஆனால் எந்த காட்சியிலும் தொப்புளை காட்டி நடிக்கவில்லை. கதைக்…
-
- 1 reply
- 419 views
-
-
கவர்ச்சியால் வீழ்ந்த பிரியாமணி- நம்மை ஏமாற்றிய பிரபலங்கள் பாரதிராஜாவின் அறிமுகமாக கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமாகி நம்மை கண்களால் கைது செய்தவர் பிரியாமணி. நல்ல ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்று பாராட்டப்பட்ட அந்தப் படத்தில் வித்யா கேரக்டரில் நடித்த போதே, தன் ‘தமிழ்’ முகத்தால் அனைவரையும் கவர்ந்தார் பிரியாமணி. ஆனால் படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. எனவே பெரிய ஹீரோக்கள் அவரைக் கண்டுகொள்ளாமல் விட, அடுத்து பாலு மகேந்திராவின் ‘அது ஒரு கனாக்காலம்’ துளசியாக வந்தார். அதில் பிரியாமணியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் அந்தப் படமும் பாக்ஸ் ஆஃபீசில் தோல்வியைத் தழுவ, அடுத்து தமிழில் படங்களே இல்லை என்றானது. அடுத்துத் தான் அவருக்குக் கிடை…
-
- 36 replies
- 3.5k views
-
-
பொதுவாக தமிழ் திரையுலகில் ஹீரோயினுக்கு திருமணம் ஆகிவிட்டால் சினிமாவில் இருந்து விலகிவிடுவார். அல்லது டிவி சீரியல், அக்கா, அண்ணி வேடங்களில் நடிகக் போய்விடுவார்கள். ஆனால் ஹாலிவுட்டில் திருமணம் ஆனாலும் ஹீரோயின்களாக வலம் வருவார்கள். இந்த கலாச்சாரம் பாலிவுட்டில் வந்துவிட்டது. கரீனாகபூர், ஐஸ்வர்யாராய் போன்றோர் திருமணம் ஆனபின்பும் ஹீரோயின்களாக அதுவும் கிளாமராக நடிக்க தயங்கியதில்லை. தற்போது இந்த கலாச்சாரத்தை சினேகா கோலிவுட்டில் முதன்முதலாக ஆரம்பித்து வைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கவர்ச்சி வேடங்களில் அக்கறை காட்டாத சினேகா, தற்போது படு கவர்ச்சியாக நடிக்க முன்வந்துள்ளார். இவரது முடிவு பிரசன்னாவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மிகவும் …
-
- 2 replies
- 1k views
-
-
கவர்னேட்டரின் காதல் மனைவி! காலையில் கல்யாணம்.. மாலையில் டைவர்ஸ் என்று வாழும் அமெரிக்க வி.ஐ.பி&க்களுக்கு மத்தியில் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் அர்னால்டு ஸ்வாஷ்னெகர் & மரியா ஷ்ரிவர் தம்பதி மட்டும் ஆச்சர்ய விதிவிலக்கு! அமெரிக்கர்களால், ‘கவர்னேட்டர்’ என்று அன்போடு அழைக்கப்படும் அர்னால்டு கடந்த 2003&ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் முக்கிய மாகாணமான கலிபோர்னியாவின் கவர்னராக இருக்கிறார் (அவர் நடித்து சூப்பர்ஹிட்டான ‘டெர்மினேட்டர்’ படத்தின் பெயரையும் கவர்னரையும் சேர்த்துதான் ‘கவர்னேட்டர்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்)! இந்த ரியல் ஹீரோவின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது மரியா ஷ்ரிவர் என்ற காதல் மனைவிதான்! சமீபத்தில் ‘யாஹ¨’ நிறுவனம் தன்னுடைய கருத்துக்கணிப்…
-
- 0 replies
- 963 views
-
-
நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடமான நிலையில் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களிலும் சின்னத்திரையிலும் நகைச்சுவையில் கலக்கியவர் சிட்டிபாபு. இருதய கோளாறு காரணமாக ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு சிட்டி பாபுவுக்கு பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் 2 வருடங்களாக நடிக்காமல் ஓய்வில் இருந்தவர் அண்மைக்காலமாக மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது சுய நினைவை இழந்து, 'கோமா' நிலையில் உள்ளார…
-
- 3 replies
- 2.5k views
-
-
கவிஞர் கண்ணதாசன் கவிஞர் கண்ணதாசன் சுமார் 5000 திரப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.இவற்றில் 2500 பாடல்கள் தொகுக்கப்பட்டு 5 தொகுதிகளாக 5 புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவரின் சாதனை இந்த பாடல்கள் ஆக்கத்துடன் மட்டும் நிற்கவில்லை.திரையுலகில் இவரின் மற்ற சாதனைகளான; மூலக்கதை,கதை,திரைக்கதை,வசனம்,தயாரிப்பு,நடிப்பு- என்ற இவரின் சாதனைகள் நம்மை வியக்க (மகிழ) வைக்கின்றன.சாதனைகளை சமர்ப்பிக்கின்றோம். கவிஞர் கண்ணதாசன் சாதனைப் பட்டியல் படம்...................சாதனைகள் 1.இல்லற ஜோதி-1954 ...............................கதை,வசனம்,பாடல்கள் 2.சுகம் எங்கே-1954 திரைக்கதை+வசனம்(A.K.வேலனுடன்),3பாடல்கள் 3.மதுரை வீரன்-1956 ................திரைக்கதை,வசனம்,11இல்3பாடல…
-
- 0 replies
- 1.5k views
-
-
கவிஞர் பூலாங்குளம் மாயவநாதன் பற்றி . கவிஞர் மாயவநாதன் பாடல் நயம் 1.வேல்தேடி- - -எறிகின்ற- - -வீரமுண்டு நூல்தேடி- - - -தருகின்ற- - -ஞானமுண்டு இவ்வரிகளின் மூலம்,தமிழனுக்கு வீரமுமுண்டு, விவேகமுமுண்டு எனநயம்படச்சொல்கிறார். 2.எங்கிருந்து- - - - - -வந்தவரோ நெஞ்சில்நின்ற- - பாவலரோ நம் நெஞ்சில் நின்ற இப்பாவலனை புகழுவதற்குகூட,சொற்களை விட்டுச்சென்ற வித்தகனிவன். 3.முத்துநகைப்- - - பெட்டகமோ முன்கதவு- - - - - ரத்தினமோ முத்துப்பற்களின் புன்சிரிப்பு வாய் என்ற பெட்டகத்திலிருந்து வருவதாகவும்,அந்த பெட்டகத்திற்கு, ரத்தின நிறமமைந்த இதழ்கள் கதவுகளாகவும், உள்ளதாகவும் உவமையழகில்உருவாக்கிய வரிகளிவை. 4.மணமகனுக்கு 21 வயதும்,மணமகளுக்கு 18 வயதும் நிறைவுற்றிருந்தால் மட்டுமே, அ…
-
- 0 replies
- 4.7k views
-
-
கவிதை என்பது அறிவு சார்ந்தது அல்ல உணர்வு சார்ந்தது... கவிஞர் யுகபாரதியுடன் நேர்காணல் சந்திப்பு : முத்தையா வெள்ளையன் பாரத நாடு பழம் பெரும் நாடு நாம் அதன் புதல்வர் நாசமாய்ப் போவோம்" என எதார்த்தமான கவிதைகளோடு இலக்கிய உலகில் அறியப்படுகிறவர். பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம். புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்" என்ற அறிமுகப்பாடலோடு சினிமாவுக்குள் நுழைந்த இவர், தமிழின் தனித்தன்மையோடும் அடையாளத்தோடும் அரசியலோடும் இயங்குபவர். இவரை ஒரு மாலை நேரத்தில் “கருஞ்சட்டைத் தமிழர்” இதழுக்காகச் சந்தித்தோம். உங்களுக்கு கவிதை ஏன் எழுதணும்னு தோனுச்சு. முதல் கவிதை எப்போது எழுதினீங்க... என்னுடைய குடும்ப சூழல்தான் என்னை…
-
- 0 replies
- 2.5k views
-
-
கவிஞர் வாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டதட்ட நாற்பது நாட்களாகிவிட்டது. இதில் சுமார் முப்பது நாட்களுக்கு மேலாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். கடந்த ஜுன் 7 ந் தேதி குமுதம் இதழில் வாலி எழுதி வெளிவந்த 'அழகிய சிங்கர்' இலக்கிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் அவர். சுமார் ஐந்து மணி நேரம் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து அமர்ந்திருந்தார். மறுநாளே டைரக்டர் வசந்த பாலனின் 'தெருக்கூத்து' படத்திற்காக அவர் பணியாற்றும்படி ஆனது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கூடத்திற்கு வரவழைக்கப்பட்ட அவர் சுமார் ஏழு மணி நேரம் அங்கு அமர்ந்து படம் குறித்தும், எடுக்கப்பட்ட விதம் குறித்தும் பேசியபடியே பாடல் ஒன்றை எழுதிக் கொடுத்தாராம். அன்றிரவே அவருக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது…
-
- 3 replies
- 521 views
-
-
பச்சையப்பன் கல்லூரியில் வைரமுத்து மாணவனாக இருந்தபோது அந்த கல்லூரிக்கு வருகை தந்த கண்ணதாசனிடம் மாணவர்கள் கேள்வி கேட்கின்றனர், அந்த மாணவர்களில் ஒருவராக வைரமுத்துவும் கேள்வி கேட்கிறார். அரியதொரு ஒலிபதிவு.
-
- 0 replies
- 289 views
-