Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்!இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421674

  2. அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (11) இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சுனா சென்று அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டார். இதன் போது அங்கு நின்ற நபர் தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்திருந்தார். இதன்போது அர்ச்சனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டார். இந்நிலையில் அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில…

  3. இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம். சட்ட இடையூறுகள் இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்…

  4. Published By: DIGITAL DESK 3 10 MAR, 2025 | 06:27 PM கண்டி பிரதான புகையிரத நிலையத்தில் கவனக்குறைவாகச் செயற்பட்ட புகையிரத சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பொடிமெனிக்கே புகையிரதம் பயணித்த போது சமிக்ஞைகளைக் கையாளும் கடமையிலிருந்த இருவரும் உறங்கிய நிலையில், குறித்த புகையிரதம் கண்டி புகையிரத நிலையத்தின் 3ஆவது மேடையை சென்றடைந்தது. அந்த நேரத்தில் புகையிரத சமிக்ஞைகள் உரிய முறையில் ஒளிரவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த மேடையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு புகையிரதத்துடன் மோதி ஏற்படவிருந்த விபத்து, புகையிரத சாரதியின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைய…

  5. Published By: DIGITAL DESK 7 16 FEB, 2025 | 09:11 AM அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியமைப்பை உருவாக்குவது எமது பொறுப்பாகும். நாட்டினுள் அனைவருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கவும் அவர்களின் தனித்துவ அடையாளங்கள் பேணவும் வழிசமைப்போம் என்று பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டையில் நேற்று சனிக்கிழமை (15) நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் வெற்றிபெற்ற பிரதிநிதித்துவங்களுடன் அரசாங்கத்தினை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி என்ற தனியொரு கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 76வருடங்களாக முன்னெடு…

  6. அம்பாறை (Ampara) - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று (16.02.2025) இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது போராட்டக்காரர்கள் சுமந்திரன் மற்றும் சாணக்கியனை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்திய நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் எதிர்ப்பு இந்நிலையில், இன்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின…

  7. 7 கோள்களும் ஒரே அணிவகுப்பில்; இலங்கையர்களுக்கு அரிதான சந்தர்ப்பம்! இன்றைய நாட்களில் சூரிய குடும்பத்தின் 7 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்று (25) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சூரிய அஸ்தமனத்தின் பின்னர் இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வை இலங்கையர்கள் பார்க்க முடியும் என கொழும்பு, பல்கலைக்கழகத்தின் விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். பூமியைத் தவிர சூரியக் குடும்பத்தின் அனைத்துக் கோள்களும் இந்தக் காலகட்டத்தில் பொதுவான பாதையில் செல்வதைக் காணலாம் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்த சாட்சியின் போது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய ககோள்களை வெற்ற…

  8. நூருல் ஹுதா உமர் முஸ்லிம்கள் ஓர் இனம் இல்லை, அவர்களும் தமிழர்கள் தான் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் (24) பாராளுமன்றத்தில் பேசிய இனவாதப் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். சிங்களவர், தமிழர் எனும் இரண்டு இனங்களே இலங்கையில் உள்ளன. முஸ்லிம்கள் தமிழர்களுக்கு தான் உள்ளனர் என்று நாடாளுமன்றில் அவர் இனவாதம் பேசினார். அர்ச்சுனா ராமநாதன் எம்.பியின் இந்த கருத்து தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் எம்.பியும் கண்டனம் வெளியிடவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கண்டனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், விடுதலை புலிகள் ஆயுதமுனையில் கடந்த காலங்களில் செய்தவற்றை பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு செய்யலாம் என விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாள…

  9. 18 FEB, 2025 | 08:12 PM (எம்.நியூட்டன்) ஒரு இனத்தின் தேசிய அடையாளங்களில் உணவுப் பண்பாடும் ஒன்று. தேசியத்தைக் கட்டமைப்பதில் பண்பாட்டின் ஏனைய கூறுகளைப்போன்று உணவுப் பண்பாடும் காத்திரமான பங்களிப்பைச் செய்கிறது. ஆனால், மதப் பண்பாட்டில் பௌத்தத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்ற நாம், உணவுப் பண்பாட்டில் நிகழும் ஆக்கிரமிப்புகள் குறித்துக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். அண்மைக்காலமாக வெளிநாட்டு உணவகங்கள் பல இங்கு கிளைகளைத் திறந்துகொண்டிருக்கின்றன. எமது உணவுப் பண்பாட்டில் திணிக்கப்படும் மாற்றங்கள் பற்றி நாம் விழிப்படையாவிட்டால் வெளிநாட்டு உணவகங்கள் எமது பாரம்பரிய உணவுகளை மேலும் ஓரங்கட்டிவிடும் எமது ஆரோக்கியமும் மேலும் வீழ்ச்சியடையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்த…

  10. நன்றி கோலங்கள் தொடர்.- இயக்குனர் திருச்செல்வம்..நன்றி ஆம். ஊடகங்கள்.மிகச் சக்திவாய்ந்தவை.மக்கள் மனதை ஊடுருவும் சாதனம் என்பதனால்தான் ஊடகம்.அதைப் பயன்படுத்த தெரிந்தவரின் கைகளில் அது அற்புதமான ஒரு பொருளாகிப் போகிறது... ...என்று நாம் நம்ப முயற்சித்தாலும் அதன் நிஜ முகம் வேறுமாதிரியாகவே இருக்கிறது.என்றாலும் திருச்செல்வம் போன்ற முனைப்பான இளைஞர்கள் தங்கள் எல்லை உணர்ந்து,அதற்குட்பட்டு,ஆனால் கருத்தை ஆணித்தரமாக பதியும் பொழுது படைப்பாளி ஊடகத்தை தன் கைகளில் ஏந்திக் கொள்கிறான். பல வருடங்களாக இழுத்துக்கொண்டு இருந்த தொடரை பாராட்ட...29ம் தேதி பாகம் ஒன்று மட்டுமே போதும் ஒரு இனப் படுகொலையை பதிந்ததற்காக. அந்த பாகத்தை மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனால்... ஆம். ஒர…

  11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கப்படும் - எதிர்க்கட்சிகள் 21 அக்டோபர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. குறிப்பாக ஈ.பி.டி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் கந்தசுவாமி கமலேந்திரன் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். வட மாகாண அபிவிருத்திப் பணிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நடைபெற்று முடிந்த வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கமலேந்திரன் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முரண்பாட்டு அரசியலை வட மாகாணசபை எதிர்க்கட்சி பின்பற்றப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltamil…

  12. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் முக்கியமான மாநாடு இலங்கையில் நடைபெறவிருக்கின்ற நிலையில் ஹலாலுக்கு எதிரான செயற்பாடு என்ற போர்வையில் நாட்டின் அமைதிக்கும் இனங்களின் ஒற்றுமைக்கும் குந்தகத்தை ஏற்படுத்த யாரும் முற்படக்கூடாதெனத் தெரிவித்த நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப்ஹக்கீம் ஹலால் தொடர்பில் சிறுகுழுவினரின் கருத்தல்ல. முழுநாட்டு மக்களின் கருத்துகளும் அறியப்படவேண்டும் எனவும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பௌத்த விகாரைகள் தொடர்பான திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்; ஹலால் என்றதொரு விடயத்தை முன்வைத்துநாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வர…

    • 2 replies
    • 555 views
  13. இலங்கையில் தொடரும் அதிசயம் ; கொழும்பிலும் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம் பழம் நுவரெலியாவை தொடர்ந்து முதன் முறையாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலுள்ள பேரீச்ச மரமும் பூத்து காய்த்துள்ளமை பார்ப்பவர் கண்களை அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளது. இவ்வருடம் நாட்டில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாகவே இவை காய்க்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது என ரயில் நிலையத்தில் பணிப்புரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். Tags http://www.virakesari.lk/article/21731

    • 7 replies
    • 2.1k views
  14. ஜனாதிபதி நல்லாட்சி எனக் கூறி என் கணவனை சிறையிலடைத்து மகனின் எதிர்காலத்தையும் அழித்து விட்டார் ; தமிழ் அரசியல் கைதியின் மனைவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது ஆட்சியை நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு என் கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி சிறையிலடைத்தது மட்டுமல்லாமல் என் 15 வயது மகனை மேசன் தொழிலாளி ஆக்கி ஒரு பாடசாலை சிறுவனின் எதிர்காலத்தையே அழித்துவிட்டார். உண்மையில் இங்கே நடப்பது நல்லாட்சி என்றால் என் கணவனை விடுதலை செய்யுங்கள். என் மகனின் எதிர்காலத்தை பாதுகாத்து கொடுங்கள். என தமிழ் அரசியல் கைதி ஒருவரின் மனைவி கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கை ஒன்றினை விடுத்திருக்கின்றார். கடந்த 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விசா…

  15. மாநாட்டை புறக்கணித்தால் பிரச்சினைகளை யாரிடம் பேசுவது: ஞானதேசிகன்:- இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணித்தால், இலங்கைத் தமிழர்கள் மற்றும் மீனவர்கள் பிரச்சினை குறித்து யாரிடம் பேசுவது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் குறிப்பிடுகையில், இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக்கூடாது என பல்வேறு கட்சிகளும் தமிழக அமைப்புகளும் போராடி வருகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. உயர்மட்டக் குழுவைக் கூட்டி, விவாதித்து மத்திய அரசு முடிவெடிக்கும். தமிழக மக்கள், அரசியல் கட்சித் தலைவர்…

  16. விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடமிருக்கும் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குக்களை அரச உடமையாக்க அனுமதி வழங்குமாறு சர்வதேச இணக்கச் சபையிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கே.பி.யிடமிருக்கும் சகல சொத்துக்களும் அவரது உண்மையான தகவலின் அடிப்படையில் இல்லாமை மற்றும் இந்தப் பணம் வியாபார நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட பணம் என்பதால் அது ஒருநாட்டிற்குரிய சொத்து எனத் தீர்மானிப்பது சிரமம் என்பதாலேயே இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இதற்கு முன்னர் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருக்கும் கே.பி.க்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ள அந்த வங்கியிடம் அரசாங்கம் விடுத்த …

  17. காணாமல் போனோர் தொடர்பில் சிறீலங்கா அரசை பொறுப்புக்கூற வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் வவுனியா நகரப்பகுதியில் எதிர்வரும் 15ம் திகதி காலை 11.00 மணிக்கு மாபெரும் தீப்பந்த ஊர்வலத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. "கொமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள சர்வதேச நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், அரசியல் பிரமுகர்களும், சர்வதேச ஊடகவியலாளர்களும் எதிர்வரும் 15ம் திகதி வட பகுதிக்கு விஜயம் செய்து சமகால நிலைவரங்கள் தொடர்பில் அவதானிக்கவுள்ளதால் காணாமல் போனோரின் பெற்றோர்கள், உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவிருப்பதாக எமக்கு தெரியப்படுத்தியமைக்கு அமைவாக அந்த போராட்டத்த…

  18. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் மீது நம்பிக்கை கிடையாது என இலங்கையின் நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். செனல்4 ஊடகத்திற்கு அளித்த செவ்வி தொகுக்கப்பட்டு திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமது கருத்துக்கள் முழுமையாக ஒளிபரப்புச் செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 45 நிமிடங்கள் செவ்வியை பதிவு செய்து அதில் மூன்று நிமிடங்கள் மட்டும் ஒளிபரப்புச் செய்தமை ஏற்றுக்கொள்ள கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். செனல்4 ஊடகத்தின் மீதான நம்பிக்கை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செவ்வியை திரிபுபடுத்தி ஒளிபரப்புச் செய்வது ஊடக ஒழுக்க விதிகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்கா…

  19. முல்லைத்தீவு, கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்புப் பேரணிகள் -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில், இன்று (31) கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யுத்த காலத்திலும், அதற்குப் பிற்பட்ட காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்துக்கு முன்னால் கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். …

  20. இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் சரத்பொன்செகாவின் உள்ளக தேர்தல் பிரச்சார அலுவலரான ஓய்வுபெற்ற கப்டன் தர இராணுவ அதிகாரி அரச ஆதரவு குழுக்களால் கடத்தப்பட்டுள்ளதாக சரத்பொன்சேகா முறைப்பாடு செய்துள்ளார். இரண்டு நாட்களாக அவரை கானவிlல்லை என்றும் அவர் கடச்த்தப்பட்டுள்ளதாக தகவல்கிடத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளரிடம் நேரடியாக சென்று இன்று முறையிட்டுள்ளார். அத்துடன் பத்திரிகையாளர்களிடம் பேசிய பொன்சேகா அரசாங்க தரப்பு தனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதே நேரம் சரத்பொன்செகா தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக அம்பலாங்கொடவிற்கு செல்லு வழியில் தங்கி இருந்ததாக கூறப்படும் அவரது ஆதரவாளர் வீட்டில் விசேட அதிரடிபொலிஸ்படையினர் தேடுதல் செய்துள்ளனர். நீதிமன்ற அனும…

  21. தாயக விடுதலைக்காக வித்தாகிப் போன மாவீரர்களை நினைவு கூரக் கோரி யாழ், மத்திய பஸ் நிலையத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோக்கிக்கப்பட்டுள்ளன. இத் துண்டு பிரசுரங்கள் நேற்றும் நேற்று முந்தினமும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அத்துண்டுப் பிரசுரங்களில் விடுதலையினை நோக்கமாக கொண்டு களமாடி உயிர் நீத்த எம் மாவீரர்கள் என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள். எம் முச்சுக் காற்று உள்ளவரை எம் மாவீரர்களை மறவோம். என எழுதப்பட்டுள்ளதோடு மாவீரர்களின் கல்லறைகள், கார்த்தீகைப் பூ ஆகியவற்றின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=799762467125270799#sthash.MCWzTLSW.dpuf

  22. பாஸ்போர்ட் எடுப்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற இளைஞர் ஒருவர் யாழ்தேவி புகையிரத நிலையத்தில் வைத்துக் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொட்டடியைச் சோந்த 21 வயதான செல்வகுமார் சத்தியசீலன் எனும் இளைஞனே காணாமல் போயிருக்கின்றார். கடந்த 14ம் திகதி ஏ9 வ|Pதியூடாக வவுனியா பயணித்த இவர் பின்னர் அங்கிருந்து யாழ்தேவி மூலம் கொழும்பு சென்றுள்ளார். இந்த நிலையில் இவர் கொழும்பை சென்றடையவில்லை என குடும்பத்தவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக காவற்துறையினருக்கு குடும்பத்தவர்கள் முறைப்பாடு செய்திருக்pன்றார்கள். மீண்டும் கொழும்பில் யாழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகின்ற சம்பவங்கள் இடம்பெறுகின்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

  23. மீண்டும் அமுலுக்கு வந்தது 25,000 ரூபா அபராதம்.! போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக 25,000 ரூபாய் அபராதம் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், காப்புறுதியின்றி வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், இடமிருந்து முந்தி செல்லுதல், வயதை பூர்த்தி செய்யாது வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக இவ்வாறு 25000 ரூபாய் அபராதம் விதிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. http://www.virakesari.lk/article/22987

  24. தேசியத் தலைவரின் தாயார் ஊறணி மருத்துமனையில் அனுமதி! தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் சுகையினம் காரணமாக வல்வெட்டி ஊறணி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவனின் இறுதி வணக்க நிகழ்வுகளில் பங்கேற்ற இவர், மன அழுத்தம் மற்றும் உடல் பலவீனம் காரணமாக மருத்துமனையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறீலங்காப் படையினர் இவரைத் தடுத்து வைத்திருந்து விடுவித்தபோது அவர் உடுத்திருந்த புடவையோடு வட்வெட்டித்துறைக்கு வந்தபோது, அக்காட்சி பார்ப்பதற்கே மனதை உருக்குவதாய் இருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எம்மிடம் கருத்துரைத்துள்ளார். வயது போனவர்களுக்கே இவ்வாறான நிலை என்றால்? சிறப்பு முகாங்களில் தடுத்து வைக…

  25. வெளிநாட்டு பிரஜைகளுடனான திருமணம் – இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு எதிராக மனுத்தாக்கல்! வெளிநாட்டு பிரஜைகளுடனான திருமணம் தொடர்பில் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறையை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி திஷ்ய வெரகொடவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதிவாளர் ஜெனரல் டபிள்யூ.எம்.எம்.பி. வீரசேகர, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச் முனசிங்க ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். இலங்கை கையொப்பமிட்ட மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனத்தில் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாக, ஒவ்வொரு நபரும…

    • 1 reply
    • 337 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.