ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142921 topics in this forum
-
(நா.தனுஜா) இலங்கைக்கு 15 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளமைக்கும் அரசியலமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உடன்பட்டமைக்குப் பதிலாகவே இந்தியாவினால் அந்த நிதி வழங்கப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கை - இந்திய பிரதமர்களுக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இணைவழி மாநாடொன்று நடைபெற்றது. இதன்போது இருநாடுகளினதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. எனினும் அதுகுறித்து வெளியான செய்திகளில் சில பரஸ்பர முரண்பாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டு, அவைகுறித்த…
-
- 1 reply
- 469 views
-
-
வடக்கில் முழு கதவடைப்பு போராட்டம் – முடங்கியது யாழ்ப்பாணம் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) வடக்கில் முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறித்த அழைப்பிற்கு வடக்கில் உள்ள தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமது ஆதரவினை அளித்துள்ளார்கள். அதற்கமைய யாழ்ப்பாணத…
-
- 4 replies
- 867 views
-
-
தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இராணுவத்தின், பொலிஸார் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து சில கடைகளை திறக்க செய்துள்ளனர். அச்சுவேலி பகுதியில் கடைகளை திறக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில் அங்கு சென்ற வலிகிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோசுக்கு பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்துக்கு முன் இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ உயரதிகாரிகள் சொகுசு வாகனங்களில் அப்பகுதியில் பிரசன்னமாயிருந்தனர். சந்தி…
-
- 0 replies
- 436 views
-
-
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்தார். இன்றய முழு அடைப்புப் போராட்டத்தின் நிறைவில் பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தமிழர் தேசத்தின் தமிழின விடுதலை வரலாறு 70 ஆண்டுகளுக்கும் மேலானது. பல இலட்சம் தமிழ் மக்கள் இனக்கலவரங்களினாலும், போரிலும், போர்க்காலத்திலும், போராட்டங்களிலும் தம…
-
- 1 reply
- 332 views
-
-
நாட்டில் இன்றையதினம் திங்கட்கிழமை மேலும் 02 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில், அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை மற்றும் இரணவில வைத்தியசாலையிலிருந்து தலா ஒருவர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,210 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் 3,360 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 137 பேர் நாடு முழுவதும் உள்ள 05 வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் 38 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர். இ…
-
- 0 replies
- 342 views
-
-
(நா.தனுஜா) இலங்கைக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்ட 21 கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் ஐக்கிய இராச்சியத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டமையைப் பாராட்டியிருக்கும் நோர்வேயின் முன்னாள் இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம், அமெரிக்காவும் ஐரோப்பாவும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு கழிவுப்பொருட்களை அனுப்புவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். கழிவுப்பொருட்கள் நிரப்பப்பட்ட 21 கொள்கலன்கள் இலங்கையினால் மீண்டும் ஐக்கிய இராச்சியத்திற்கே திருப்பியனுப்பப்பட்டிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திலிருந்து 263 கழிவுப்பொருள் கொள்கலன்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 21 கொள்கலன்களே இவ்வாறு மீண்டும் திருப்பி அனுப்ப…
-
- 0 replies
- 240 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது By BATTINEWS MAIN (ரீ.எல்.ஜவ்பர்கான்) மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனை இலங்கை தமிழ் அரசுக்கட்சி உட்பட பல தமிழ் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு நகரம் வாழைச்சேனை செங்கலடி களுவாஞ்சிக்குடி உட்பட பல தமிழ் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. போக்கு வரத்துச் சேவைகள் இடம்பெற்றன.உண்ணாவிரதமிழுந்து மரணமாக முன்னாள் விடுதலைப்புலிகள் முக்கியஸ்தர் திலீபனின் நிவைவு தினத்தை அனுஸ்டிக்க அரசு மறுத்தமையைக் கண்டித்தே இந்த ஹர்த்தால் அனுஸடடிக்கப்படுவதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி தெரிவித்துள்ளது.இது …
-
- 1 reply
- 517 views
-
-
எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 10 தமிழ் அரசியல் கட்சிகள் தற்போது ஒன்றுகூடி ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தன. இதன்போது, எவரும் 26ஆம் தினதி தியாகி திலீபனின் நினைவுக…
-
- 35 replies
- 2.8k views
-
-
பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் கொழும்பிற்கு எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டார். நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காகவே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்கினைப்பெற்று பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்…
-
- 6 replies
- 1.1k views
-
-
வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் ;வவுனியாவில் கடைகளைத் திறக்கக்கோரி பொலிசார் அட்டகாசம் வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வவுனியா பசார் வீதிக்கு இன்றையதினம் காலை சென்ற வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்ததுடன் சில வர்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளை திறக்குமாறு கட்டளையிட்டனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பமான நிலமை ஒன்று ஏற்பட்டிருந்தது. எனினும் பொலிசார்…
-
- 0 replies
- 475 views
-
-
கோட்டாபய -மகிந்த இடையே வெடித்தது பனிப்போர் -புபுது ஜயகொட கண்டுபிடிப்பு அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் பனிப்போர் மூண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் வர்த்தமானியில் வெளியாகிய 20 ஆவது திருத்தத்தை மீளாய்வு செய்ய பிரதமர் 9 பேர் அடங்கிய மீளாய்வு குழுவை நியமித்தார். 20 ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் காணப்படுகின்ற காரணத்தினால் தான் திருத்தம் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவுகள் நாளாந்தம் உயர்வடைந்த நிலையில் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் 20 ஆவது திருத்தத்தினால் அரசாங்கம் முரண்பாட்டுடன் செயற்படும் போது அதன் விளைவையும்…
-
- 0 replies
- 470 views
-
-
கொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான முழுமையான விபரம் ஒக்டோபரில் வெளியிடப்படுமென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 2 ஆம் …
-
- 11 replies
- 1k views
-
-
சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாகாண சபைகள் மாற்றியமைக்கப்படும்?- சரத்வீரசேகர மாகாண சபைகளை சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டும் என்ற யோசனை தன்னிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண சபைகளின் எல்லைகளை பண்டைய காலத்தில் காணப்பட்ட ராஜ்ஜியங்களின் அடிப்படைகளில் மீளவரையறை செய்யவேண்டும் என்ற யோசனை எமக்கு கிடைத்துள்ளது. அதாவது மாகாண சபைகளை, சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கவேண்டும் என்றே பெரும்பாலானோர் யோசனை முன்வைத்துள்ளனர். மேலும், தற்போதைய மாகாண சபை முறையை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களும் விடுக்கப்படுகின்றன. …
-
- 18 replies
- 3k views
-
-
கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கலாம் சிறீலங்காவில் குறைவடைந்திருந்த டெங்கு நோய் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதாக சிறீலங்கா டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது டெங்கு நோயின் தாக்கம் சிறீலங்காவில் மிகவும் குறைவடைந்திருந்தது. ஆனால் தற்போது அது மீண்டும் அதிகரித்து வருகின்றது. கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 9 மாதங்கயில் 30 பேர் இந்த நோயினால் இறந்துள்ளனர். கோவிட்-19 நோயின் தடுப்பு முறைகளால் டெங்கு நோயின் தாக்கம் இந்த வருடம் குறைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. http://www.ilakku.org/கிழக்கு-மாகாணத்தில்-டெங்/
-
- 0 replies
- 423 views
-
-
நாடாளுமன்றில் மக்களின் பிரச்சினைகளை அதிகம் பேசுகிறார் டக்ளஸ்..! நாடாளுமன்றத்தில் தினந்தோறும் ஏராளமான மக்கள் நலன் சார் பிரச்சினைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம் பெற்ற நிதி அறவீடுகள் தொடர்பான விவாதத்தின் போது கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்தனினால் குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் - " பொது மக்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றில் கட்சித் தலைவர்கள் வெளிப்படுத்துவதற்கு எந்தவிதமான வரையறைகளும் கிடையாது " எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தினமும் பல்வ…
-
- 18 replies
- 1.7k views
-
-
திருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை தந்த கப்பலொன்றில் 17 இந்தியப் பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்திற்கு இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் எரிபொருளை கொண்டு செல்வதற்காக வருகை தந்துள்ளது. இந்த நிலையில், கப்பலில் வருகை தந்த ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளான 17 இந்தியப் பிரஜைகளும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பில் உள்ளதுடன், அவர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க கலந்துரையாடல்கள்…
-
- 0 replies
- 411 views
-
-
மட்டக்களப்பில் வன்முறையில் ஈடுபட்டு வரும் பிக்குவை கைது செய்யுங்கள் – கூட்டமைப்பு வேண்டுகோள் மட்டக்களப்பில் வன்முறையில் ஈடுபட்டு வரும் பிக்குவை உடனே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக நேற்றைய தினம் தமிழரசு கட்சியின் சிரேஸ்ட தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தலைமையில் சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் , மட்டக்களப்பு மங்களராம விகாரையின் புத்தபிக்கு அம்பிட்டிய சுமணரத்ண தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கோரிக்க…
-
- 4 replies
- 622 views
-
-
யாழ்பல்கலைகழத்தில் பதற்றம் பொலிஸார் குவிப்பு யாழ் பல்கலைகழகத்தில் பல்கலைகழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்டமுறுகல் நிலையை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது, பல்கலைகழக வாயிலில் கறுப்புடையணிந்த மாணவர்கள்காணப்பட்டவேளை காவல்துறையினர் அவர்களை உள்ளே செல்லுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்தே முறுகல் நிலை உருவானது. மேலதிக காவல்துறையினர் அப்பகுதிக்கு அழைக்கப்பட்ட நிலையில் மேலும் குழப்பமான நிலை உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இராணுவத்தினரும்அப்பகுதிக்கு விரைந்துள்ளதை தொடர்ந்து பதட்டமான சூழல்உருவாகியுள்ளது. யாழ்பல்கலைகழக மாணவர்கள் இன்று திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கத…
-
- 11 replies
- 1.8k views
-
-
பாறுக் ஷிஹான் ஈழவர் ஜனநாயக முன்னணி(ஈரோஸ்) கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம்பெண்களை ஏமற்றிவதாக மனைவி என தெரிவித்து இளம்பெண் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தஞ்சமடைந்த சர்மிலா குணரட்னம் (வயது-35) என்ற பெண் இன்று(26) செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது கடந்த 2010 ஆண்டு காலப்பகுதியில் ஈழவர் ஜனநாயக முன்னணி தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் என்ற ரீதியில் ராஜநாதன் பிரபாகரன் என்னை சந்தித்து தேர்தலில் நிற்குமாறு கேட்டிருந்தார்.இதற்கமைய நானும் உடன்பட்டு தேர்தல் செயற்பாட்டில் ஈ…
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல் தடவையாகும். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது, இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்துக்களை கூறினார். மேலும், தனது அழைப்பை ஏற்று, இந்தியா - இலங்கை நாடுகளுக…
-
- 2 replies
- 638 views
-
-
தமிழில் நீதிமன்றம் உத்தரவு- கொதித்தெழுந்த ‘சுமணரதன தேரர்’ மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிப்பதாகவும் நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாதென்றும் தெரிவித்துள்ளார். சுமணரதன தேரருக்கு அவரின் மொழியில் அதாவது சிங்கள மொழியில்தான் நீதி மன்றம் உத்தரவை பிறப்பித்திருக்க வேண்டும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் அதனால் நீதிமன்றத்துக்கு போகப்போவதில்லை உத்தரவை புறக்கணிக்கிறேன் என்று பொலிஸாரிடம் திருப்பிக்கொடுத்து அனுப்பும் உரிமையை சிறீலங்காவில் ஏனைய பிரஜைகளுக்கும் உண்டா? என்ற கேள்வி எழுகின்றது. குறிப்பாக இத்தனை காலம், அரச நிறுவனங்களில் இருந்தும் தமிழர்களுக்கு கிடைக்கின்ற அறி…
-
- 8 replies
- 1.5k views
-
-
நான் சொன்னதே சட்டம்- கோத்தபாய ராஜபக்ச Rajeevan Arasaratnam September 26, 2020நான் சொன்னதே சட்டம்- கோத்தபாய ராஜபக்ச2020-09-26T10:11:54+05:30 பொதுமக்களின் நன்மைக்காக நான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுங்கள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை புறக்கணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்தெரிவித்துள்ளார். பதுளை ஹல்துமுல்லவில் உள்ள வெலன்விட்ட கிராமமக்களைசந்தித்து உரையாடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளாhர். மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு அவற்றிற்கு தீர்வை அரச அதிகாரிகள் முன்வைக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதி தெரிவித்த…
-
- 0 replies
- 830 views
-
-
(நா.தனுஜா) குற்றச்செயல்களைப் புரியும் சிறுவர்களை நன்னடத்தைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்தல் மற்றும் வேலைக்கு அமர்த்துதல் ஆகிய விடயங்களில் சிறுவர்களின் வயதெல்லையை உயர்த்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு யுனிசெப் அமைப்பு பாராட்டுத்தெரிவித்திருக்கிறது. சிறுவர் மற்றம் இளைஞர்கள் தொடர்பான கட்டளைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய 14 வயதிற்குக் குறைந்தவர்கள் சிறுவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இளம் குற்றவாளிகள், நன்னடத்தைப் பாடசாலை தொடர்பான கட்டளைச்சட்டத்திற்கு அமைய 16 - 22 வயதிற்கு உட்பட்டவர்கள் இளைஞர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளனர். அதன்படி 16 வயதிற்குக் குறைந்த சிறுவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்காக அவர்கள் நீதிமன்றத்த…
-
- 8 replies
- 1.6k views
-
-
மோடி - ராஜபக்ஷே: காணொலி மாநாடு! மின்னம்பலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷேவும் நாளை (செப்டம்பர் 26) இருதரப்பு காணொலி மெய்நிகர் மாநாடு ஒன்றை நடத்துகின்றனர். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு... இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் நட்புறவின் பின்னணியில் நடக்கும் இந்த மாநாட்டின் மூலம், இருதரப்பு உறவுகளுக்கான விரிவான செயல் திட்டத்தை ஆராயும் வாய்ப்பு இரு நாடுகளுக்கும் கிடைத்திருக்கிறது என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது. இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இலங்கை மற்றும் இந்தியாவின் பிரதமர்களுக்கிடையில் 2020 செப்டம்பர் 26 சனிக்கிழம…
-
- 3 replies
- 739 views
-
-
திடீரென அரச அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி! கேள்விகளால் திகைத்துப்போன ஊழியர்கள் நாரஹெபிட்டியிலுள்ள வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்திற்குள் ஜனாதிபதி திடீரென விஜயம் செய்துள்ளார். ஒரு நபர் அளித்த முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி இன்று (23) குறித்த அலுவலகத்திற்கு சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ தேவை ஒன்றுக்காக குறித்த அலுவலகத்திற்கு வந்ததாகவும், எனினும் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தமது வேலையை செய்து கொடுக்கவில்லை எனவும் ஜனாதிபதியிடம் பெண் ஒருவர் முறையிட்டுள்ளார். இதன்படி, வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்தை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், அங்கு போதுமான ஊழியர்கள் இருப்பதையும் அவதானித்தார். இருந்தும் அங்கு சரியாக கட…
-
- 8 replies
- 1.6k views
-