ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பலைக் கண்காணிப்புக் குழு காப்பாற்றியது! விக்கிலீக்ஸ் அதிரடித் தகவல் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-10 08:57:20| யாழ்ப்பாணம்] விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றுக்குச் சரியான நேரத்தில் தகவல்களை வழங்கிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அதனை இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அதிரடித் தகவல் வெளியிட்டுள்ளது. வடகிழக்கு கடற்பகுதியில் பயணித்த விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை இலங்கைக் கடற்படையினர் தாக்க முனைந்த சமயம் விடுதலைப்புலிகளுக்குச் சரியான சமயத்தில் தகவல்களைக் கொடுத்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு காப்பாற்றியதாக 2003ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 23 ஆம் திகதி அனுப்பப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
திங்கள் 23-07-2007 13:19 மணி தமிழீழம் [மயூரன்] மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க இலங்கை பிரதிநிதி தலைமையிலான குழு இஸ்ரேல் செல்கிறது இஸ்ரேலிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய உலகின் மிக் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வரும் இலங்கை பிரதிநிதி தலைமையில் குழு ஒன்றை அனுப்ப ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி பிரசாத் காரியவாசம் தலைமையில் மூவர் அடங்கிய குழு இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக அங்கு விஜயம் செய்யவுள்ளது. இந்த குழுவினர் எகிப்து,சிரியா மற்றும் ஜோர்டான் ஆகிய நா…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழக எம்.பிக்களை தரக்குறைவாக விமர்சித்த இலங்கை தூதர் காரியவாசம்- மன்னிப்பு கேட்டார்! டெல்லி: தமிழக எம்.பிக்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது. அவர்களை விசாரிக்க வேண்டும் என்று திமிராகப் பேசிய இலங்கை தூதர் பிரசாத் காரியவாசத்தை இன்று மத்திய வெளியுறவுத்துறை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து தனது பேச்சுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார். ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் பல ஆயிரம் பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களை லண்டனின் சேனல் 4 நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று இன்னொரு வீடியோ ஆவணப்படத்தை அது வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
மன்னார் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவடைந்த கேணல் சாள்சின் வித்துடல் இன்று தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், மக்கள் ஆகியோர் விடை கொடுக்க முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசின் மீது ஐ.நா நடவடிக்கை! http://www.tamilinsight.com/index.php?news=2592
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழ விடுதலைப் போரின் ஆரம்பக் கல்லாக 1983 ஆம் ஆண்டை மேற்கோள் காட்டி வரைவது பொதுவான விடயமாக இருந்தாலும் அந்த ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்தின் பின் சகல ஆயுதப் போராட்டக் குழுக்களும் இந்தியாவின் தமிழ்நாட்டை தமது தளமாகக் கொண்டன.தமிழ் ஈழவிடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, மாணவர் ஈழப் புரட்சிகர இயக்கம், தமிழ் ஈழமக்கள் விடுதலைக் கழகம், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், ஈ. என். டி. எல். எவ். போன்ற குழுக்கள், அமைப்பாக உருவாக்கப்பட்டு ஈழப்போர் என்ற பொது இலட்சியத்துடன் போராட முற்பட்ட வேளை மக்கள் இந்த அமைப்புக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தார்கள். இவற்றுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும் குழுவாதம் இருந்த போதிலும் 1985 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் திகதி போர் நிறுத்தம் …
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ் மக்களின் காணிகளில் இராணுவத்தையும் தென்பகுதி மக்களையும் குடியேற்ற அனுமதியோம்! – சுமந்திரன் யாழ். வலி. வடக்கில் தமிழ் மக்களது 6 ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளைச் சுவீகரித்து, இராணுவக் குடும்பங்களையும் தென்பகுதி மக்களையும் குடியேற்ற இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனைத் வன்மையாகக் கண்டிப்பதுடன் இதற்கெதிராக தொடர் போராட்டங்களையும் நடத்துவோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இராணுவத்தினர் வடக்கில் அபகரிக்கும் காணிகளில், இராணுவக் குடும்பங்களையும் தென்பகுதி மக்களையும் குடியேற்ற நாம் இடமளிக்க மாட்டோம். இந்தக் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெ…
-
- 5 replies
- 1.2k views
-
-
வணக்கம் எல்லாரும் சுகமாய் இருக்கிறியளோ? உங்கட கருமங்களை பார்க்கிறதுக்காகத்தான் வயதுபோன நேரத்திலயும் உங்களுக்காக வேலை செய்துகொண்டிருக்கிறன். ஓமோம் உந்தக் கறுமத்தை ஏன் கேப்பான் எண்டு முணுமுணுப்பியள். ஆனா ஒண்டை விளங்கிக்கொள்ளுங்கோ இண்டைக்கு இருக்கிற மூத்த அரசியல்வாதி நான் தான். தம்பி நான் 33 இல பிறந்து 56 இல தமிழரசுக் கட்சியில சேர்ந்து 77 இல எம்பி ஆனவன் தம்பி. இண்டைக்கு பார் 59 வருசமாக இந்த அரசியலுக்க தான் நிக்கிறன். இண்டைக்கு 82 வயசிலயும் எங்கட மக்களுக்காக அரசியல் செய்துகொண்டிருக்கிறன் என்ன? தமிழீழம் வேணும் எண்டு கேட்டுப்போட்டு நீங்கள் போயிட்டியள். இண்டைக்கு அந்த இலட்சியத்திற்காக எத்தினை பிள்ளையள் செத்து போச்சுதுகள் ஆனா இண்டைக்கு அந்த விடுதலைப்போராட்டத்தை மதிக்கிற நோக்…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு இத்தாலியின் நிதி உதவி மு.சுப்பிரமணியம் இத்தாலி அரசு சிறிலங்காவில் மீண்டும் நல்லதொரு சூழ்நிலை ஏற்பட தமிழீழ விடுதலைப்புலிகளும் சிறிலங்கா அரசும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கேட்டூள்ளது சர்வதேச ஜக்கிய ஊடகம் தெரிவித்துள்ளது. அண்மையில் இத்தாலிய வெளிவிவகார பிரதி அமைச்சர் கியாணி வெனாட்டி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவை சந்தித்து பேசியுள்ளார் . 20 வருடகால இன மோதல்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் வலியுருத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாலிய வெளிவிவகார பிரதி அமைச்சர் அதியுச்ச மனிதாயின நடவெடிக்கைகளும் உதவும் முகமாகவும் வடக்கு கிழக்கு மோதல்களில் இடம் பெயர்ந்து வாழும…
-
- 1 reply
- 1.2k views
-
-
அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கும் அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏவிற்கும் தொடர்பு இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் மேற்குலக நாடுகளினால் மேற்கொள்ளப்படும் சதித்திட்டமாகவே இது நோக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகளுக்கு எதிராக செயற்படும் அரசாங்கங்களை கவிழ்க்கும் சர்வதேச சதித்திட்டமொன்றை சீ.ஐ.ஏ மேற்கொண்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உள்நாட்டு முகவர்களின் ஊடாக சீ.ஐ.ஏ இந்த சதித்திட்டங்களை கட்டவிழ்த்துவிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனா மற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிங்கள மக்களுக்கு ஏகபோக உரிமையும் வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு எம்.பி. த.கனகசபை துறைநீலாவணை, பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டில் சிங்கள மக்களுக்கு மட்டும் ஏகபோக உரிமைகளையும் சலுகைகளையும் அளித்து விட்டு சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பறித்தும், அவர்களின் நிலங்களை சிங்களப் பேரினவாத சக்திகள் சூறையாடியும் வருகின்றனர். இதனால் இன்று இந் நாட்டில் வாழக்கூடிய சகல தமிழ் பேசும் மக்களும் அகதிகள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளனர். இந்நிலையை மாற்றியமைக்க வேண்டுமாயின் அரசாங்கம் சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்களின் எண்ணங்கள் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தீர்வுத் திட்டத்தினை முன்வைத்து கௌரவமான சமாதான சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பாரா…
-
- 0 replies
- 1.2k views
-
-
கலாநிதி தேவநேசன் நேசையா, தேசமான்ய விருதை ஜனாதிபதியிடம் கையளித்தார்… January 4, 2019 ஜனநாயகத்தை மீறியமைக்காக கலாநிதி தேவநேசன் நேசையா தனக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளித்துள்ளார். ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணான வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக கவலை தெரிவித்திருக்கும் ஓய்வுபெற்ற சிவில் சேவை அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா கடந்த வருடம் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்பப்போவதாக அறிவித்திருக்கிறார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் கலாநிதி நேசையா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பகிரங்கக் கடிதமொன்றை எழுதிய…
-
- 5 replies
- 1.2k views
-
-
உடன்பாடுகளை அமுல்படுத்தாவிடின் எதிர்கால பேச்சுக்கள் பயனற்றது: சி.எழிலன் [செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2006, 16:59 ஈழம்] [தி.நிர்மலா] ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளை சிறிலங்கா அரசு அமுல்படுத்தாவிடின் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பேச்சுவார்த்தைகள் பயனற்றதென விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனத்திற்கு திருகோணமலையில் வைத்து சி.எழிலன் வழங்கிய நேர்காணல்: சிறிலங்கா அரச பாதுகாப்புப் படையினர் தவிர்ந்து ஏனையவர்கள் ஆயுதங்களை ஏந்தவோ ஆயுதங்களைக் கையாளவோ அனுமதிக்கப்பட மாட்டார்களென கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்கம் இணக்கம் தெரிவி…
-
- 0 replies
- 1.2k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில். வாழைப்பழத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் , வாழைக்குலை திருட்டுகள் அதிகரித்துள்ளதாக வாழைக்குலை செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோப்பாய் , நீர்வேலி பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களுக்குள் இரவில் ஊடுருவும் திருடர்கள் அங்குள்ள வாழைக்குலைகளை வெட்டி செல்கின்றனர். …
-
- 7 replies
- 1.2k views
-
-
சீனாவின் 'நாணயம்' இனி சிறிலங்காவில் பயன்படுத்த முடியும்: இரு நாடுகளின் வர்த்தக மேம்பாட்டுக்காகவே இந்தத் தீர்மானமாம் [Thursday, 2011-06-30 10:00:08] சீனாவின் யுவான் நாணயத்தை இலங்கை ஊடாக சர்வதேச நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வசதிகளை மேம்படுத்தும் முகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை மத்திய வங்கி மேலும் 13 நாடுகளின் வெளிநாட்டு நாணயங்களை சர்வதேச வங்கி நடவடிக்கைகளுக்காக இலங்கையில் பயன்படுத்தவும் அனுமதி அளித்துள்ளது. இவற்றில் அவுஸ்திரேலிய டொலர், கனேடியன் டொலர், டொன்மார்க் க்ரோனர், யூரோ, …
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவில் யுத்த நிறுத்தம் வருமா? - பிபிசி http://news.bbc.co.uk/2/hi/programmes/newsnight/7869633.stm http://news.bbc.co.uk/2/hi/programmes/newsnight/7869669.stm
-
- 0 replies
- 1.2k views
-
-
விக்னேஸ்வரன் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம்: இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்ற வட மாகாண முதல்வரின் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, கூட்டமைப்பினர் அமைச்சரவை பதவிகளை ஏற்கக்கூடாது என விரும்புவதாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.இலங்கையில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லையென்று வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் விடுத்திருந்த அறிக்கையில், "கூட்டமைப்பினர் என்னை வட மாகாண முதலமைச்சராகத் தேர…
-
- 6 replies
- 1.2k views
-
-
இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வீமன்காமம் பகுதியில் தற்போது மக்கள் மீள் குடியேற்றத்திற்கு கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந் நிலையில் அங்கு தமது காணிகளை துப்பரவு செய்யச் சென்ற மக்கள் தமது குல தெய்வமான பிள்ளையார் ஆலயத்தை காணாது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள். குறிப்பாக குறிப்பிட்ட பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் தற்போதும் அமைந்துள்ளது. ஆனாலும் கூட இந்தப் பகுதி வீமன்காமம் பகுதியின் வடக்குப் புறத்தில் புகையிரதப் பாதைக்கு அருகாமையில் உயர் பாதுகாப்பு வலய எல்லையில் அமைந்துள்ளன. வீமன்காமம் வடக்கு தெற்கு பகுதியில் தமது காணிகளை துப்பரவு செய்யும் மக்கள் தமது காணிகளுக்கு நேர் எதிரே காணப்பட்ட குமாரத்தி பள்ளத்தில் அமைந்து இருந்த…
-
- 10 replies
- 1.2k views
-
-
தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார். நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஈ.பி.டி.பி. கட்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு சிறந்த வலுவூட்டலை தந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே பின்னடைவிற்கு காரணம் எனவும் தெரிவித்தார். அத்துடன், இந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்களை கட்சி செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் விமர்சனம் சுயவிமர்சனம் செய்து திருத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தை…
-
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
போர் ஏற்பட்டால் காணிகளைக் கையளிப்போம் - கையெழுத்து பெற்றுக்கொண்டே காணிகள் ஒப்படைப்பு. [Wednesday 2014-09-24 13:00] மீண்டும் போர் ஏற்பட்டால் தாம் கையளிக்கும் காணிகள் தமக்கு மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்று தம்மிடம் பத்திரத்தில் கையொப்பம் வாங்கிய பின்னரே, தமது காணிகள் படையினரால் கையளிக்கப்பட்டுள்ளதாக, கேப்பாபிலவில் விமானப்படையினரிடம் இருந்து காணி களை மீளப்பெற்ற மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில், கேப்பாபிலவில் தமிழ் மக்களின் பெருமளவான உறுதிக்காணிகள் போரின் பின்னர் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றுள் அந்த மக்களின் வாழ் வாதாரமாக விளங்கிய வயற் காணிகளும் அடங்கியிருந்தன. கடந்த 18 ஆம் திகதி கேப்பாபிலவு மற்றும் இயன்கன்…
-
- 12 replies
- 1.2k views
-
-
'இலங்கைத் தீவில் இன அழிப்பே இடம்பெறுகிறது': விடுதலைப் புலிகளின் மனித உரிமைகளுக்கான பேச்சாளர். "இலங்கைத் தீவில் தற்போது இடம்பெறுவது மனிதவதை, மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பனவற்றிற்கும் அப்பால், இன அழிப்புக் கூறுகளைக் (Genocide) கொண்டுள்ளது" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பேச்சாளர் திருமதி. செல்வி தெரிவித்துள்ளார். "ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் அமைப்பின் (UN Human rights council) 4 ஆவது கூட்டத்தொடர், தமிழீழத் தாயகப் பகுதிகளில் இடம்பெறும் பெரும் மனிதவதை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக தீவிர கவனத்தைச் செலுத்தி தாக்கமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றும் அவர் நம்பிக்கை தெரி…
-
- 4 replies
- 1.2k views
-
-
கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் தரப்பினர் புதிதாக அலுவலங்களை திறப்பதை எதிர்ப்பது என கருணாத் தரப்பினர் தீர்மானித்துள்ளனர் என நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணாத் தரப்பினருக்கு எதிராக செயற்படும் நோக்கில் பிள்ளையான் தரப்பினர் இவ்வாறு புதிய அலுவலங்களை திறந்து வருவதாக கருணா தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஒருவர் குற்றம்சுமத்தியுள்ளார். கருணா என்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும், பிள்ளையான் என்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இடையிலான முறுகல் நிலைமை இன்னும் தீர்க்கப்படவில்லை என இரண்டு தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். http://www.globaltamilnews.net/tamil_news1...15129&cat=1
-
- 0 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவில் புகையிரதத்துடன் மோதுண்டு யானை உயிரிழப்பு. முல்லைத்தீவு பனிக்கங்குளம் பகுதியில் புகையிரதத்துடம் மோதுண்டு யானை உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் கடந்தகாலங்களிலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/முல்லைத்தீவில்-புகையிரத/
-
- 6 replies
- 1.2k views
-
-
சர்வதேச கப்பற் போக்குவரத்து மற்றும் கடல் மார்க்க வர்த்தக நடவடிக்கைகள் பற்றிய உத்தியோகபூர்வமான தகவல்கள் ஆய்வு, மற்றும் அறிக்கைகள் சமர்ப்பித்தல் போன்ற சர்வதேச கடற்பிராந்தியங்களினூடாக நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளையும் பதிவு செய்யும் சர்வதேச நிறுவனமாகிய லொயிட்ஸ் சர்வதேச அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்குச் சொந்தமானதும் சர்வதேச கடற்பிராந்தியத்தில் போக்குவரத்து செய்து வருவதான கப்பல்களைப் பற்றிய முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது. மேற்படி அறிக்கைக்கு ஏற்ப சிறிலங்காவிலுள்ள புலிகள் அமைப்புக்குச் சொந்தமானதும் சட்டவிரோதமாகப் போக்குவரத்துச் செய்து வருவதுமான கப்பல்கள் சர்வதேச கடற்பிராந்தியங்களில் பயணம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நா. வானது ஐக்கிய நாடுகளாக இருப்பதாலேயே அதற்கு மக்கள் கடிதங்களை எழுதுகிறார்கள். நடவடிக்கையெடுக்குமாறு அவர்கள் கடிதங்கள் மூலம் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், அநேகமான கடிதங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது. இன்னர்சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல்லீ இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது; தற்போதைய உதவிச் செயலாளர் நாயகம் வெளிப்படையாகப் பேசுகிறார். பின்னணியை மட்டும் அவர் பேசவில்லை. இலங்கையின் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பிய மின்னஞ்சல் பற்றி அவர் குறிப்பிட்டார். "அவற்றை நான் நீக்கி விட்டேன்" என்று அவர் தெரிவித்தார். ஆனால், இன்னர்சிற்றி பிரஸ் இதனை அறிக்கையிட்டபோது அவர் ஆத்திரமடைந்தார். ஆனால், இந்த…
-
- 0 replies
- 1.2k views
-