Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 26-11-2012 அன்று கூடங்குளத்தில் தேசியத் தலைவர் 58 வது பிறந்த நாள் நிகழ்வு மாலை 4 மணியளவில் கூடங்குள மக்கள் முன்னிலையில் உதயகுமார் அவர்கள் தலைவரின் 58 வது பிறந்த நாள் கேக்கை வெட்டி மக்கள் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டார். உலகத் தமிழர் இணைய இணைப்பு தலைவர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வினை முன்னெடுத்துள்ளது இதனை அடுத்து அனைத்து கூடங்குள மக்களுக்கும் மற்றும் பாடசாலை மாணவ மாணவியர்களுக்கும் கேக் கொடுக்கப்பட்டது . இதன்போது மக்கள் அனவைரும் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் படத்தினை கையில் ஏந்தியவாறு பிறந்த நாளினை கொண்டாடியுள்ளார்கள். http://thaaitamil.com/?p=39501

  2. சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), ஜூன் 26ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது. உலகெங்கிலும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையிலும், ஆறுதல் தெரிவுக்கும் வகையிலும், மனோரீதியான முறையில் அவர்களுக்கு விமோசனமளிக்கும் ஏற்பாடுகளை செய்யும் அடிப்படையில் இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் போருக்கு முன்னைய காலப்பகுதியிலும் பின்னரும் தமிழ், சிங்கள மக்களுக்கு எதிராக அரச பாதுகாப்புத் தரப்பினரால் சித்திரவதை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக சான்றுகள் வெளியாகியிருந்தன. இதில் சிங்கள மக்களுக்கு எதிரான சித்திரவதைகள் (நீதி கிடைக்காவிட்டாலும்) ஓரளவுக்காவது வெளி…

    • 0 replies
    • 255 views
  3. (நா.தனுஜா) இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது. வெளிவிவகார அமைச்சரின் கருத்தொன்றை மேற்கோள் காண்பித்து, அதற்கு ஆதரவாக சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் இறையாண்மையை உறுதிசெய்வதில் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதோடு, இலங்கை ஹொங்கொங்குடன் வழமையான தொடர்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார். அதனை …

  4. மன்னார் - யாழ்ப்பாணம் ஏ 32 தரைவழிப் பாதை இன்னும் சில தினங்களில் திறக்கப்படவுள்ளது வீரகேசரி இணையம் 11/13/2008 5:23:54 PM - இருபது வருடங்களுக்குப் பின்னர் மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ஏ - 32 தரைவழிப் பாதை இன்னும் சில தினங்களில் முதல்முறையாகத் திறக்கப்படும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் …

  5. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறீலங்கா பொலீசாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் ஒரு மாணவர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இன்நிலையில் இன்றைய தினம் யாழ் இராணுவ கட்டளைத் தளபதிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=325071670604184305#

  6. வட மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பில் ஏற்பட்டு வந்த இழுபறிக்கு ஒரு முடிவை எட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முதலமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், வட மாகாணத்துக்கென முன்மொழியப்பட்டு வவுனியாவில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய வலயம் எவ்விடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சில காலமாக சரச்சைக்குரியதாகவிருந்ததை சகலருமறிவீர்கள். பல விவசாய அமைப்புக்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், பொது அமைப்புக்கள் போன்றவை இந் நிலையம் ஒமந்தையில் அமைய வேண்டுமென்றே கோரினார்கள்.இன்னும் சிலர் தாண்டிக்குளத்தில் விவசாய பண்ணையில் அமைய வ…

    • 3 replies
    • 417 views
  7. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம் adminFebruary 22, 2026 நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கரிசனை கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியாவை சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான நிமலன் என்பவரை சிறையில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பல வருட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அது தொடர்பிலான முக்க…

  8. 11/18/2008 4:38:04 PM - மத்துகம மகிந்த விஜேதிலக்க என்பவர் எழுதிய 'அப்பட்ட நொபேனென லோக்கய ஹா வெனத் தே' '( எங்களுக்கு கண்ணுக்கு எட்டாத உலகமும் வேறு விடயங்களும்) (பக்கம்137) என்ற நூலில் வண. பலாங்கொட ஆனந்த மைத்ரீய மகா நாயக்க தேரர் வடக்கில் நடைபெற்று வரும் யுத்தம் தொடர்பாக சில தகவல்களை தந்திருக்கிறார். அதன் விபரம் கீழே தரப்படுகின்றது. ''வடக்கு, கிழக்கு பிரச்சினை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. அது இன்று இக்கட்டான சூழ் நிலையை உருவாக்கி உள்ளது. தொடர்ந்து யுத்தம் மேற்கொள்வதால் எவ்வித பயனும் இல்லை. அது பிரச்சினைக்குத் தீர்வும் ஆகாது. நாட்டில் ஒரே நேரத்தில் பல இடங்களில் சிங்களம் - தமிழ் என்ற பேதம் இன்றி அமைதிக்கான பூஜைகள் நடத்தப்பட வேண்டும். சுயநலன் கருதாது பொத…

    • 0 replies
    • 770 views
  9. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கையால் சபையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விசாரணை அறிக்கை பாராளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட போது பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குற்றப்பிரேரணை மீதான விசாரணை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர்களை தாக்கும் நோக்கில் மேர்வின் சில்வா சபைக்கு நடுவே ஓடினார். இதன்போது சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. விரைந்து செயற்பட்ட படைக்கல சேவிதர்கள் அவரை எதிரணியின் பக்கமாக செல்லவிடாமல் தடுத்தனர். தெரிவுக்குழுவின் முன்னாள் உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க மற்றும் விஜித்த ஹேரத் தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டபோதே இந்த கூச்…

  10. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார் என்று சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “இந்த விசாரணைகள் அனைத்தும் உள்ளூர் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இடம்பெறும். வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் உள்ளடக்குவதற்கு, நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் இடமளிக்கவில்லை. இந்த விசாரணைகள் அனைத்துலக கவனத்தைப் பெற்றிருக்கும் நிலையில் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். இதனால், வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனையை இந்த விசாரணைகளுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று சிறிலங்கா அதிபரு…

    • 3 replies
    • 285 views
  11. தேவிபுரத்தில் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவு, தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று (11) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் தேவிபுரம் (அ) பகுதியை சேந்த 11 வயதுடைய வடிவேல் வினுஜன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். இன்று வீட்டில் உணவை அருந்திவிட்டு விளையாடிக்கொண்ட சிறுவனை காணவில்லை என உறவினர்களின் உதவியோடு தேடியபோது கிணற்றுக்குள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை உறவினர்களின் உதவியோடு மீட்டு புதுக்குடியிப்பு வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோது அச்சிறுவன் இறந்திருப்பது தெரியவந்துள்ளது …

  12. 'அரசாங்கத்துடனிருக்கும் கருணா எங்களுக்கு அதிகாரத்தைக கொடுக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார்' சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்): http://www.globaltamilnews.net/tamil_news....=2502&cat=1 13வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு எனக்கு எந்த வித அதிகாரமும் இல்லை. 13வது திருத்தச் சட்டத்திற்கு உரித்தான அதிகாரத்தை வழங்கும்படி மத்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால் அரசாங்கத்துடனிருக்கும் கருணா எங்களுக்கு அதிகாரத்தைக கொடுக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். அவருடனான நேர்காணலின் முழுவடிவம் கீழே: கேள்வி:கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் உங்களுக்கு…

  13. சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு! Published By: Vishnu 17 Mar, 2026 | 05:43 AM வவுனியா, ஒமந்தை பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த தாயின் சகோதரரான குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா, ஓமந்தை, பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயின் சசோகதரான 47 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து 2013 ப…

  14. வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார். புற்றுநோய்க்கான சத்திரசிகிச்சையின் பின்னர் கியூபா வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்துவரும் வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷுக்கு இலங்கையிலிருந்து வைத்திய நிபுணர் ஒருவரை வழங்குவதற்கு விரும்புவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'எனது நாட்டிலிருந்து உங்களுக்காக வைத்திய நிபுணர் ஒருவரை வழங்க விரும்புகின்றேன். உங்கள் தேக ஆரோக்கியம் விரைவில் குணமடைவதற்கு இது உதவியாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.…

  15. சிறிலங்காவில் தொடரப்பட்ட நீண்ட கால யுத்தத்தின் இறுதி மாதங்களில் போரில் சிக்குண்ட தமிழ் மக்களை பாதுகாப்பதில் ஐக்கிய நாடுகள் சபை போதியளவு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு கடந்த மாதம் ஐ.நா இது தொடர்பான உள்ளக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. 2008ன் பிற்பகுதியில் தமிழ்ப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்த போது சிறிலங்காவின் வடக்கில் நிலைகொண்டிருந்த ஐ.நா பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். இந்த நேரத்தில் அங்கு தொடர்ந்தும் பணியில் ஈடுபடுமாறு தமிழ்ப் பொதுமக்கள் ஐ.நா அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்த போதும், தனது பணியாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஐ.நா சுட்டிக்காட்டியது. இதன்பின்னர் தனது பணியாளர்…

  16. நீதி கிடைக்க வேண்டும் மூதூரில் அக் ஷன் பாம் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட 10ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மூதூரில் நடந்த படு­கொ­லைச்­சம்­ப­வத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறு­வ­ன­மான அக் ஷன் பாம் (ACTION CONTRALA RAIM AGAINST HUNGER) என்ற நிறு­வ­னத்தைச் சேர்ந்த 17, தொண்­டர்கள் படு­கொலை செய்­யப்­பட்டு இன்­றுடன் 10, வரு­டங்கள் பூர்த்­தி­யான நிலையில் அப்­பெற்­றோர்­களும் உற­வி­னர்­களும் தங்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வில்­லை­யென்­பதை கவ­லை­யுடன் தெரி­வித்­தமை இங்கு பதிவு செய்­து­கொள்­ளப்­ப­டு­கி­றது. எனது மகள் ரொமிலா சிவப்­பி­ர­காசம் மேற்­படி சம்­ப­வத்தில் படு­கொலை செய்­…

  17. இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 389 views
  18. வடமாகாண முதல்வரின் செயற்பாடுகளால் அதிருப்தியில் அரசு இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் நோக்கில் தேசிய அரசாங்கம் சிந்தித்து, அவதானத்துடன் முன்னேறிச் செல்லும் நிலையில், வடமாகாண முதல்வரின் செயற்பாடுகளும், அவர் முன்வைக்கும் கருத்துக்களும், மிகவும் பாரதூரமானது என அமைச்சர் ராஜித சேனாரத்ன விகனம் தெரிவித்துள்ளார்.. வடக்கு-கிழக்கு இணைப்பு மற்றும் சரவதேச விசாரணை அவசியம் என வடமாகாண முதலமைச்சர் கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அடுத்த ஆண்டு இலங்கை தொடர்…

    • 2 replies
    • 462 views
  19. மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுஜித குரே இன்று மாலை வாதுவையிலுள்ள அவருடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் மின்சார ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மரணத்திற்கான சரியான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் மறைந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் ஜே. குரேயின் மகன் என்பது குறிப்படத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2431

  20. நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கையை ரத்து செய்த மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை பேணிப் பாதுகாக்க சட்டத்தரணிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினால் அதற்கு முழுமையான ஆதரவளிக்கப்படும். நாட்டில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோர் அச்சுறுத்தப்படுகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைச்சர் ஒருவரின் தேவைக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பொலிஸார் இந்த விசாரணைகளை வேறு திசைக்கு திருப்பியுள்ளனர். ஆளும் கட்சி அமைச்சர்கள் தேங்காய் ஒன்றுக்கும் கொலை செய்து கொள்ளும் ஓர் யுக…

  21. கண்டி மாவட்ட தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வங்குரோத்து வேட்பாளர்களின் சேறுபூசும் அரசியலானது, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சவாலாக அமையாது. வாக்காயுதம் மூலம் இம்முறையும் சாதனை படைக்க கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டுவிட்டனர். அதுமட்டுமல்ல வெத்து வேட்பாளர்களுக்கும் தக்கபாடம் புகட்டுவார்கள் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார். கம்பளை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது, “ 2015 இல் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல் மூலம்தான் 15 ஆண்டுகளுக்கு பி…

    • 0 replies
    • 471 views
  22. கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லலாம் என்று கூறப்படுவது தவறானது. அவர் எந்த சூழ்நிலையிலும் இலங்கையை விட்டு வெளியேற மாட்டார் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை நிறுவியவரும், அதன் எம்.பியுமான கருணா கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய தளபதியாக விளங்கியவர் கருணா. பின்னர் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு தற்போது இலங்கை ராணுவத்தின் பாதுகாப்புடன் புலிகளுக்கு எதிராக உளவு சொல்வது, புலிகள் இயக்கத்தினரின் பலத்தை போட்டுக் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. கருணா குழுவினரின் உதவிய…

  23. யாழ். குடாநாட்டில் திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு: - முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் [Tuesday, 2013-01-15 09:50:24] யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். இவ்வாறு தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்றுத் திங்கட்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டடத் திறப்புவிழா இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர், சட்டத் தரணி க.சுகாஷ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில் நீதியரசர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையா…

  24. விக்ரமாதித்தன் கதை - பாகம் 2 கொழும்பு காடுகளுக்குச் சென்று வேதாளத்தைச் சந்தித்து உரையாடி (பேட்டி கண்டு) நீண்ட நாளாகிவிட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அந்த வேதாளம் லக்க லக்கவென சிரித்ததைக் கேட்டு மதியத் துகில் கலைந்து எழுந்த விக்ரமாதித்தன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேதாளம் சிரித்ததற்கான காரணத்தை வினவினான். ‘கிளிநொச்சி என் கையில் விழுந்துவிட்டது’ என்று கூறி மீண்டும் லக்க லக்கவென சிரித்தது வேதாளம். கிளிநொச்சி விழாதா என்று நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விக்ரமாதித்தனுக்கு முகம் மலர்ந்தது. ஒரு மாத காலத்திற்கும் மேலாக உயிரைக் கொடுத்து பெற்ற வெற்றிக்காக வேதாளத்திற்கு வாழ்த்துக் கூறிய விக்ரமாதித்தன், அடுத்தது என்னவென்று கேட்க, சற்றே எகத்தாளத்துடன் ச…

    • 0 replies
    • 1.3k views
  25. என்னுடைய மகளை கொலைச்செய்த சவூதி அரசாங்கத்தினதோ அல்லது அந்த நாட்டைச் சேர்ந்த நபர்களின் எந்த உதவிகளும் தங்களுக்கு வேண்டாம் என்று சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானாவின் தாய் அஹமது செய்யது பரீனா தெரிவித்துள்ளார். அவ்வாறான எந்த உதவிகளையும் தான் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று குறிப்பிட்டுள்ள ரிஷானாவின் தாயார், சவூதியைச் சேர்ந்த பலர் தனக்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவ்வாறான அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57169-2013-01-18-07-17-08.html

    • 12 replies
    • 922 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.