ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
யாழில்உயர்பாதுகாப்பு வலயங்களிலுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படா-இராணுவம் திட்டவட்டம் யாழ்ப்பாணத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள பொது மக்களின் காணிகளை விடு விக்கும் போது தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. இதனால் இராணுவ முகாம்களுக்குத் தேவையான காணிகள் தொடர்ந்தும் வைத்துக்கொண்டு ஏனைய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவபேச்சாளர் மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். “இராணுவ முகாம்கள் சில காரணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு அமைக…
-
- 1 reply
- 347 views
-
-
இடம்பெயரும் மக்கள் மீது எறிகணைத் தாக்குதல் காணொளி இணைக்கப்பட்டுள்ளது http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> எந்த தடை வந்தாலும் உடைத்து இலக்கை அடைவோம் ..
-
- 19 replies
- 2.4k views
- 1 follower
-
-
ஞானசார தேரருக்கு ஆதரவாக கொழும்பில் சாய்ந்தமருதுாா் பிறப்பிடம் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் Air craft Mechanical Eng. அமீர் இஸ்ஸடீன் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் இவா் கொரோனவுக்கு முன் இலங்கை வந்தவா் மீண்டும் அவுஸ்திரேலியா செல்லவில்லை. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரருக்கு தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்ல இடமளிக்க வேண்டும் எனத் தெரிவித்தே இவா் சிலருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா். இந்த ஆர்ப்பாட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை பகல் கொழும்பு - இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக அமைதியான முறையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிஸ்னுலாபி அமீர் இஸ்ஸதீன், எங்கள் மக்கள் கட்சி ஊடாக கம்பஹா மாவட்டத்தில…
-
- 2 replies
- 1.3k views
-
-
தீவிரவாதத்துக்கு எதிரான போர் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது:பிரிட்டன் டேவிட் மிலிபாண்ட் தீவிரவாதத்தின் மீதான போர் என்பதை பிரிட்டனின் வெளியுறவு செயலர் டேவிட் மிலிபாண்ட் கடுமையாக விமர்சித்துள்ளார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், திசைதிருப்புவதாகவும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அந்த யுக்தி அபாயகரமான அளவின் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் டேவிட் மிலிபாண்ட் கருத்து வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக விரக்தியடைந்தவர்கள் மேற்குலக நாடுகளுக்கு எதிராக ஒன்றாக அணிதிரளுவதற்கு பொதுவான ஒரு களத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு எனும் கொள்கையிலிருந்தும் மிலிபாண்ட் அவர்கள் …
-
- 0 replies
- 1.6k views
-
-
அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 33 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 18 ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் கயந்த கருணாதிலக உட்பட விசேட தூதுக் குழுவொன்று அமெரிக்கா செல்கிறது. இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்மாரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார். …
-
- 0 replies
- 436 views
-
-
மொனராகலை மாவட்டத்திலுள்ள ஒக்கம்பிட்டியக் கிராமத்துக்குள் இன்று (18) இரவு திடீரென நுழைந்த ஆயுதாரிகள், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலரை வெட்டியும் சுட்டும் கொன்றதாகச் சற்று நேரத்துக்கு முன்னர் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படுகாயமடைந்த சிலர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கிராமத்துக்குள் துப்பாக்கிகள், ஆயுதங்கள் சகிதம் திடீரென நுழைந்த சிலரே இவர்களை வெட்டியும் சுட்டும் கொன்றதாக நேரில் சம்பவத்தைக் கண்ட ஒருவர் தெரிவித்ததுடன் இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் ------ எனத் தாம் நம்புவதாகவும் கூறினார். புத்தல பொலிசாரை சற்று நேரத்துக்கு முன்னர் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய அவ…
-
- 1 reply
- 4.5k views
-
-
-க. அகரன் வவுனியா மாவட்டச் செயலகத்துடன் இணைந்தப் பகுதியில், 1981ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பண்டாரவன்னியன் சிலைக்கு அருகாமையில் படி அமைக்கப்பட்டமைக்கு, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தேசிய வீரனான பண்டாரவன்னியனுக்கு அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிவசிதம்பரத்துடன், இணைந்து ஊர் பிரமுகர்கள் மாவட்ட சபை தலைவரும் தற்போதைய ஜனாதிபதி சட்டத்தரணியுமான சிரேஸ்ட சட்டத்தரணி மு. சிற்றம்பலம் ஆகியோர் சிலை அமைத்திருந்தனர். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்தக் காலப்பகுதியில் மாவட்டச் செயலக வளாகத்தில் குறித்த சிலை நிறுவப்பட்டு, பண்டாரவன்னியன் நினைவுதினமும் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் தற்போது வவுனியா நகரசபை, குறித்த சிலையை பராமர…
-
- 1 reply
- 492 views
-
-
காங்கிரஸ் தங்கபாலு, இளங்கோவன் தின்று கொழுத்த கோவில் மாடுகள் - மணியரசன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, ஞானசேகரன் ஆகியோர் கோவில் மாடுகள் போல் தின்று, கொழுத்து, எந்த வேலையும் செய்யாமல் கிடக்கின்றனர் என்று தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணியரசன் கூறியுள்ளார். ஈரோட்டில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில், திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணியரசன் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை புகழ்ந்தும் பேசினார்கள். இதையடுத்து அவர்கள் மூவரையும் ஈரோடு போலீசார் கைது செய்து…
-
- 0 replies
- 2k views
-
-
“தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்பி தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரை ஓட ஓட விரட்டி அடிப்போம்” இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேலும், “இலங்கையில் முதல் இனமும் முதல் மொழியும் சிங்களம். அதேபோல முதல் மதம் பௌத்தம். மற்று இனங்களும், மொழிகளும், மதங்களும் இரண்டாம் பிரிவை சார்ந்தவையாகும். இதை விக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதையும் மீறி அவர் நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவோம்; ஓட ஓட விரட்டி அடிப்போம். தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் ஊளையிடலாம். ஆனால் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் பயணம் அவர்களுக்கு கிடைக்காது. முதலமைச்சராக பதவி …
-
- 231 replies
- 18.9k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு வெறும் ஆயுதப் போர்க்களம் மட்டுமல்ல; உளவியல் போர்க்களமாகவும் உருமாறியிருக்கிறது. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வரும் முல்லைத்தீவு களமுனைச் செய்திகள் நெஞ்சத்தை நெருடி நிற்கின்றது என்னவோ உண்மைதான். போர் என்று வந்தாலே இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை என்பது எல்லோரும் அறிந்த விடயம். இருந்தாலும் அந்த மண்ணில் வாழக்கூடிய எமது தொப்புள்கொடி உறவுகள் ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களுக்கும் இலக்காகி... பச்சிளம் பாலகர் முதலாக வயோதிபர்கள் வரை, வயது வேறுபாடின்றி அரக்கத்தனமான கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகும் போது அதையொரு போர்க்கள நடவடிக்கையாக எம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. தமிழீழ விடுதலை…
-
- 0 replies
- 3.5k views
-
-
சிரானிக்கு உயர் பதவி ஒன்றை வழங்கத் துடிக்கும் மகிந்த பிப் 7, 2013 பதவி நீக்கப்பட்ட தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு மகிந்த உயர் பதவி ஒன்றை வழங்கவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவி நீக்கப்பட்ட நாள் முதல் ஷிரானி பண்டாரநாயக்காவுடன் தொடர்புகொள்ள அரசு தரப்பு முற்பட்டபோதிலும், அவர் அதனை விரும்பவில்லையெனவும், பின்னர் மகிந்த நேரடியாக தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு வரி இல்லாத பெறுமதியான புதிய வாகனம் ஒன்று தற்போது வழங்கப்பட்டுள்ளதெனவும், விரைவில் புதிய பதவி வழங்கப்படுமெனவும் கொழும்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவருக்கு ஆதரவாக தாமும் மக்களும் நடத்திய போராட்டங்களை ஷிரானி பண்டாரநாயக்கா மறந்து செயற்படுவதாக மூ…
-
- 6 replies
- 638 views
-
-
'வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்க்க முடியாது' -சரவணபவஆனந்தன் திருச்செந்தூரன் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக எவரும் போர்க்கொடி தூக்க முடியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “வடக்கு, கிழக்கு இணைப்பை எந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்தார். வடக்கு - கிழக்க…
-
- 0 replies
- 390 views
-
-
முல்லைத்தீவின் விஸ்வமடு சந்தியை 58ஆவது படைப்பிரிவினர் இன்று கைப்பற்றியுள்ளனர். இன்றும் சில மணி நேரங்களில் முல்லைத்தீவு முற்று முழுதாக இராவணுவத்தினரின் வசமாகிவிடும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பல்குழல் பீரங்கித் தாக்குதலையடுத்து விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஏராளமானோர் பலியானதாகவும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. http://www.paristamil.com/tamilnews/?p=25305
-
- 23 replies
- 2.9k views
-
-
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அடுத்த கம்பி பாடு கடற்கரையில் கடந்த 5 ஆம் திகதி மெரைன் பொலிஸாரினால் இலங்கை மொனராகலை பகுதியைச் சேர்ந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் பிரதீப் குமார் பண்டார என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். போதை பொருள் விற்பனை செய்வதில் இவருக்கும் தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை நிழலுலக தாதா அங்கொட லொக்காவுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து 5 நாட்கள் சி.பி.சி.ஐ.டி காவலில் எடுத்து விசாரிக்க இராமநாதபுரம் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (17) அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ் கந்த பகுதியிலுள்ள மர கடையிலிருந்து…
-
- 0 replies
- 357 views
-
-
இலங்கைத் தமிழர்கள் முழு உரிமைகளையும் பெற உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கு கி.வீரமணி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் பூரணநலம் (என்ன வருத்தம்) பெறுவதற்காக ஒத்த கருத்துகளுடைய கட்சிகள்,அமைப்புகள், சான்றோர்களை உள்ளடக்கிய இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை உருவாக்க தி.மு.க செயற்குழு முடிவு செய்துள்ளது. தற்போது இந்தப் பேரவைக்கு துணை அமைப்பாக 11பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக கி.வீரமணி அறிவிக்கப்பட்டுள்ளார். அமைப்பாளராக அமைச்சர் துரைமுருகன். செயலார்கள் மத்திய அமைச்சா ராசா, மாநிலங்களைவை தி.மு.க உறுப்பினர் கனிமொழி ஆகியோர் செயற்படுவர். உறுப்பினர்களாக நீதிபதிகள் மோகன், கோகுலகிரு…
-
- 9 replies
- 1.4k views
-
-
இதற்குப் பின்னால் மாயக்கரமொன்று இருப்பதையே காட்டுகிறது… குருடர்கள் தவிர்ந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும், ஒன்றாக இணைத்து பேச வைக்கும் வல்லமை புகைப்படத்திற்கு உண்டு. ஒரு மனிதன் பேசுவதைவிட அவனுடைய உடல் மொழியின் மூலமாக அவன் உள்ளத்தை அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள் உடலியல் மொழி ஆய்வாளர். புகைப்படங்களை ஆதாரமாக வைத்து நடந்துள்ள சம்பவங்களை கண்டறிவது ஒரு கலையாக இருக்கிறது, கிறிஸ்துவின் கடைசி இராப்போசனம் என்ற ஓவியம்தான் இயேசுநாதர் வாழ்வின் கடைசி நேரத்தின் வரலாறாக இருக்கிறது. செல்வன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், சுடப்பட்ட பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கிறீத்துவின் கடைசி இராப்போசனம் போல பாலச்சந்திரனுடைய கடைசி நேரங்களை நமக்கு தெளிவாக …
-
- 4 replies
- 768 views
-
-
மலையக மக்களின் நிலவுரிமை, வீட்டுரிமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும் இலங்கையைப் பொறுத்தவரையில் ஆகக் குறைந்த மட்ட ஊதியத்தை பெறுவது தோட்டத்தொழிலாளர்களே ஆவர். ஒப்பீட்டு ரீதியல் ஏனைய துறைகளைவிட முறைசாரா தொழிலாளர் பெறும் வேதனத்தைவிட குறைந்த நாளாந்த ஊதியத்தையே பெறுகின்றனர். இலங்கை பற்றிய கவனத்தை செலுத்துகின்ற ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் இம்மக்களின் உரிமைகளும் அபிலாஷைகளும் குறித்து கவனம் செலுத்த வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளன. மலையகப் பெருந்தோட்ட மக்களின் நிலம் மற்றும் வீட்டுரிமை சர்ச்சைக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது. …
-
- 0 replies
- 329 views
-
-
அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ளதாக தெரிவிப்பது கேலிக்கூத்து - மனோ கணேசன் எம்.பி. கூறுகிறார் வீரகேசரி நாளேடு 2ஃ10ஃ2009 10:15:46 Pஆ - இலங்கை தமிழ் மக்கள் மீது இந்திய மத்திய அரசாங்கம்இ தமிழக ஆட்சியாளர்கள் கொண்டுள்ள அக்கறை தொடர்பில் பூரண திருப்தியில்லையென்ற போதும் எம் மக்களுக்காக தமிழக மக்களின் உணர்வு பூர்வமான போராட்டங்கள் உணர்ச்சிவசப்படச் செய்வதோடு தலைவணங்கச் சொல்கிறது. எனவே இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத ராஜ்ஜியத்தை உருவாக்க முயலும் அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை உள்ளதாகத் தெரிவித்திருப்பது கேலிக்கூத்தாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான மனோ கணேசன் தெரிவித்தார். அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறை பேச்சாளரும்இ அமைச்…
-
- 0 replies
- 510 views
-
-
பியர் அருந்திய மாணவிகள் இடைநீக்கம் நடந்துக்கொண்டமையால், பாடசாலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தென் மாகாண கல்வித்திணைக்களத்தின் பாடசாலை ஒழுக்காற்றுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தை பாடசாலையின் அதிபர் மறைப்பதற்கு முயற்சி செய்ததாகவும் எனினும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களால், குறித்த பிரிவுக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, சோதனையொன்றை நடத்திய ஒழுக்காற்று பிரிவு, தவறு செய்த மாணவிகள் தொடர்பில் கண்டறிந்தது. 11ஆம் தரத்தில் கல்விக்கற்கும் குறித்த மாணவிகள், 13 பியர் டின்களை பாடசாலைக்கு கொண்டுவந்து, அவற்றை வகுப்பறையில் வைத்து அருந்தியுள்;ளனர். இதன்போது, மாணவியொருவரது கையிலிருந்த பியர் டின், கைதவறி…
-
- 0 replies
- 338 views
-
-
முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை இழக்கும் : மங்களவை பதவி நீக்குங்கள் : அஸ்வர் தெரிவிப்பு (எம்.ஆர்.எம்.வஸீம்) அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் உலக முஸ்லிம் நாடுகளின் உதவிகளை இழந்துவிடும். பலஸ்தீனுக்கு ஆதரவான பிரேரணைக்கு வாக்களிக்காத மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சுப்பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கவேண்டும் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். பைத்துல் முகத்தஸ் அல் அக்ஸா விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து இன்று கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் ஜும்ஆ தொழுகைக்குப்பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உர…
-
- 0 replies
- 279 views
-
-
அரசும் விடுதலைப் புலிகளும் உடனடியாக யுத்தநிறுத்தம் செய்யவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது. புலிகளுடன் யுத்தநிறுத்தம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் அமைச்சரும் பாதுகாப்பு தொடர்பான பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் வைத்தே அரசின் இந்த நிலைப்பாட்டை அறிவித்தார் ரம்புக்வெல. அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: இலங்கை அரசு பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறது. புலிகளை அழிப்பதற்கான அரசின் செயற்றிட்டம் முடிவடையும் தறுவாயில் இருக்கிறது. புலிகள் அங்கு மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்துள்ளனர். அத…
-
- 0 replies
- 550 views
-
-
U.N. Secretary-General Ban Ki-moon called on Monday for a "suspension in fighting" between the Sri Lanka government and Tamil Tiger separatists to allow civilians to escape. "There is an urgent need to bring this conflict to an end without any further unnecessary loss of civilian life and destruction of Sri Lankan society," Ban told reporters. In recent weeks, Sri Lanka's government has made major advances against the rebels, has cornered them in a small area of the island and expects to end one of Asia's longest-running wars shortly. "The U.N. deplores the increasing casualties among civilians trapped in the intense fighting ... and would strongly sup…
-
- 0 replies
- 634 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவின் நிலைப்பாடு பற்றி இன்னும் முடிவு செய்யப்பட்வில்லை. இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இலங்கையில் கைதான விடுதலைப்புலிகளை விசாரிக்க சிறப்பு இராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும், மனித உரிமைகள் மீறல் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்திருந்தது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அமெரிக்கா திருத்தம் செய்துள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை இல…
-
- 3 replies
- 756 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறிய கொமாண்டோ அணிகள் சிறிலங்கா படையினரின் நிலைகளுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் 'லக்பிம' வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
மும்பை ஆசாத் மைதானத்தில் வருகிற 20–ந் தேதி(புதன்கிழமை) அன்று காலை 11.30 மணிக்கு பா.ஜனதா கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கி நடத்துகிறார். ஆர்ப்பாட்டத்தில் சிவசேனா எம்.பி.சஞ்சய்ராவுத், மும்பை பா.ஜனதா தலைவர் ராஜ்புரோகித், மராட்டிய நவநிர்மாண் சேனா எம்.எல்.ஏ.நந்காவ்ங்கர் மற்றும் மும்பையில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்த தகவலை பாண்டுப் தமிழ்ச்சங்க தலைவர் எஸ்.எஸ்.தாசன் தெரிவித்துள்ளார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=93898
-
- 1 reply
- 613 views
-