Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நட்சத்திர விடுதிகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆக்கலாம்- சிவமோகன் ஆலோசனை by : Litharsan நாட்டில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளின் அறைகளே தனிமைப்படுத்தும் செயற்பாட்டிற்கான உரிய இடங்கள் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் ஆலோசனை வழங்கியுள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்த அவர் கூறுகையில், “மாவட்டம் தோறும் கொரோனோ வைத்தியசாலை ஒன்றை அமைக்குமாறு அரசாங்கம் அவசரமாக அறிவித்துள்ளது. அந்த அறிவித்தல்கள் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளுக்கு தெரியப்படு…

    • 0 replies
    • 357 views
  2. பெண் ஒருவரை அட்டாளைச்சேனை சம்புநகர் பகுதியில் இன்று (29) கூட்டாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நால்வரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த பெண் வயல் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குறித்த சந்தேக நபர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் அறிந்த அக்கரைப்பற்று பெருங் குற்றப் பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட 42 வயதுடைய பெண் கூலித்தொழில் நிமித்தம் மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து அட்டாளைச்சேனை சம்பு நகர் பிரதேசத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் வந்து வேறொரு பெண்ணின் வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.பாதிக்கப்பட்ட பெண் சிகிச்…

    • 0 replies
    • 499 views
  3. - பாறுக் ஷிஹான் - ரஞ்சன் ராமநாயக்க போல் எத்தனையோ தமிழ் மக்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை வெளியில் கொண்டுவர போராடலாம் .ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்தப் பிரச்சினைகளை பெரும்பாலும் பேசுவதை காண முடியவில்லை என என‌ உல‌மா க‌ட்சி தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி காரியாலயத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு சனிக்கிழமை(25) இரவு இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது ப‌ற்றி மேலும் குறிப்பிட்ட‌தாவ‌து அண்மனை காலங்களாக இந்த அரசாங்கத்தை ஒரு பாரிய பாதிப்புக்கு உள்ளாக்கும…

    • 54 replies
    • 4.9k views
  4. இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் கருவில் வளர்ந்த சிசுவை குறை மாதத்தில் நாவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் அகற்றப்பட்டுள்ளது. அந்த சிசுவை அவர்கள் விடுதியின் முற்றத்தில் வெட்டிப் புதைத்துள்ளனர். யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் இணுவில் – மருதனார்மடத்தில் உள்ள விநாயகர் விடுதிக்குச் சென்ற பொலிஸார், இருவரையும் கைது செய்தனர். கொக்குவிலையைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணும் உடுவிலைச் சேர்ந்த 20 வயதுடைய ஆணும் இவ…

    • 0 replies
    • 640 views
  5. பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை – கமல் குணரத்ன! பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். முப்படையினருக்காகவும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைப்பதற்கு அரசாங்க பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தொடர்ச்சியாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே குறித்த விடயத்தினை அவர் மறுத்துள்ளார். எனினும் மேலதிக முகாமாக பாடசாலைகள் பயன்படுத்தப்படும் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன கூறியுள்ளார். http://athavann…

  6. கொத்தனி முறையில் கொரோனா பரவுவது குறித்து தற்போது எதிர்வு கூற முடியாது – அனில் ஜாசிங்க கொத்தனி முறையில் கொரோனா பரவுவது குறித்து தற்போது எதிர்வு கூற முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடற்படையினரில் தொற்றுக்குள்ளானவர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன. கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவர்களது குடும்பத்தினர் , பிரதேசவாசிகள் எதிர்காலத்தில் தொற்றுக்குள்ளாகக் கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் தொடர்பில் சுகாதாரசேவை சபை மற்றும் புலனாய்வுப்பிரிவினர் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் கொத்தனி முறையில் தீவிரமாகப் பரவலடையாது என்ற…

  7. ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம் – அரசாங்கத்திற்கு உத்தரவாதம் வழங்கினார் ரணில்! ஆட்சியைக் கவிழ்க்கவோ, அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளவோ மாட்டோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு பேரழிவை சந்தித்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து அவதானம் செலுத்தி அதனை அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் முன்னெடுக்கக் கூடிய நிலைமையை ஏற்படுத்த முடியும். நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெறுகின்ற சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்க…

  8. விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்றுவரும் மற்றும் தேசிய விளையாட்டுக் குழாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது. இந்நிலையில், விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. …

  9. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வீடுகளிலிருந்து நினைவு கூருங்கள்: பேராயர் அழைப்பு Bharati April 17, 2020 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வீடுகளிலிருந்து நினைவு கூருங்கள்: பேராயர் அழைப்பு2020-04-17T06:58:25+00:00உள்ளூர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை எதிர் வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில் வீடுகளில் இருந்தவாறு நினைவு கூருமாறு அனைத்து மக்களுக்கும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். இந்த நேரத்தில் பெளத்த, கிறிஸ்தவ மற்றும் பிற சமய ஆலயங்களில் மணியை ஒலிப்பதன் மூலம் நினைவு கூரலில் பங்கேற்குமாறும் அவர் கேட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். …

    • 49 replies
    • 3.8k views
  10. சுவிஸ் பாஸ்டரை இனி இலங்கைத் தீவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. இன அழிப்பு அரசு அதைத் தாமாகச் செய்ய வாய்ப்பில்லை. தமிழ் சிவில் அமைப்புக்களும்/ தமிழ் மக்களும் இதை ஒரு கோரிக்கையாக சிறீலங்கா அரசிடம் முன் வைக்க வேண்டும். அவர் ஒரு நோய்க்காவியாக செயற்பட்டது மட்டுமல்ல தனது மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளின் வழி நின்று மருத்துவ விஞ்ஞானத்திற்கு/ பகுத்தறிவுக்கு ஒப்பாத அழைப்புக்களினூடாக தொடர் மனிதப் பேரழிவுக்கு அறைகூவல் விடுக்கிறார். இது மதப் பிரச்சினை அல்ல – மனிதம் தொடர்பானது. இன அழிப்பிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள போராடும் இனத்தின் வாழ்வு மீது தொடுக்கப்படும் போர் இது. கொரோனாவால் உலகமே பேரபாயத்தில் இருக்கும் சூழலில் இவரது உள் நுழைவு பெரும் மனித…

  11. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி சகரான் என்று நாமெல்லாம் நம்பிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், அந்த தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி என்று மற்றொருவரின் பெயர் தற்பொழுது அடிபட ஆரம்பித்துள்ளது. யார் அவர்.. அவரது பின்னணி என்ன.. அவருக்கு யார் யாருடனெல்லாம் தொடர்பு இருக்கின்றது.. அவருடைய செயற்திட்டங்களுக்கும் இலங்கையின் முக்கியமான ஒரு தமிழ் அரசியல்வாதிக்கும் இடையிலான சம்பந்தம் என்ன… இது போன்ற விடயங்களை பார்ப்பதற்கு முன்பாக முக்கியமான ஒன்றைத் தெரிவித்தாகவேண்டும். இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகமும் கூட, முஸ்லிம் தீவிரவாத ஆயுதக் குழுக்கள் தமது சமூகத்தின் பெயரைப் பாவித்து தமது சமூகத்தினுள் வளர்வதை, செயற்படுவதை துஞ்சற விரும்பவில்லை. கடந்த வருடம் இலங்கையில் க…

    • 5 replies
    • 855 views
  12. மகேஸ்வரி விஜயனந்தன் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹஸீமினால், புத்தளம் - வனாத்தவில்லு பகுதியில் பாடசாலையொன்று நடத்தப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, குறித்த பாடசாலையில் பயங்கரவாதம் தொடர்பான போதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என்றும் தெரிவித்தார். இந்தப் பாடசாலையில் ஆயுதப் பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலமே இது குறித்துத் தெரியவந்ததென்றும் அவர் தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவ…

  13. பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்படுவதற்கு எதிராக முல்லைத்தீவில் எதிர்ப்பு நடவடிக்கைகள்.மேற்கொள்ளப்படுகிறது அந்தவகையில் முத்தையன்கட்டு இடதுகரைப் பாடசாலையின் பெற்றோர் இன்று மாலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான நிலையங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு சில பாடசாலைகளின் தளபாடங்கள் மற்றும் ஆவணங்களும் சீரமைக்கப்பட்டும் அகற்றப்பட்டும் உள்ளன. தனிமைப்படுத்தல் நிலையங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலைகளாக முத்தையன்கட்டு இடதுவரை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை , முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம், அளம்பில் றோமன் கத்தோலிக்க …

  14. (நா.தனுஜா) நாட்டின் பொருளாதாரம் கடந்த வருடம் தளம்பல் நிலையை எதிர்கொண்டதாகவும் இதற்கு உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் முக்கிய காரணமென்றும் மத்திய வங்கி நாணயச்சபையின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி நாணயச்சபையின் 70 ஆவது ஆண்டறிக்கை நேற்று பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் மத்திய வங்கி ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஷ்மனால் கையளிக்கப்பட்டது. அவ் வறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன: கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் மற்றும் அதன் வளர்ச்சியில் ஒரு மந்தநிலை காணப்பட்டாலும்இ நுண்பாகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பெரும்பாகப் பொருளாதாரத்தில் ஓரளவேனும் சமநிலையைப் மேணு…

    • 3 replies
    • 410 views
  15. கோவிட் 19: அரசாங்கத்திடம் பகிரங்கமாக எட்டுக் கேள்விகள் April 29, 2020 தமிழ் சிவில் சமூக அமையம் Tamil Civil Society Forum 29.04.2020 கோவிட் 19: அரசாங்கத்திடம் பகிரங்கமாக எட்டுக் கேள்விகள். ஒரு பொது சுகாதார அபாயக் காலப் பகுதியில் அவ்வபாயத்தை எதிர்கொள்வது தொடர்பில் பொதுத் தொடர்பாடல் (public communication) வெளிப்படையாகவும் (transparent) உண்மையாகவும் (accurate) இருத்தல் வேண்டும். பேரிடர் காலங்களில் அரசாங்கம் சொல்வதையும் செய்வதையும் குடிமக்களும் சிவில் சமூகமும் வெறுமனே நுகர்ந்து கொண்டு இருக்க முடியாது. சனநாயகம் என்பது பொது வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். கேள்வி கேட்பது பேரிடர் காலங்களில் சுமையாகக் கருத்தப்படக்…

    • 1 reply
    • 396 views
  16. நீர் நிரப்பப்பட்ட வாளியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை உன்னிச்சைப் பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய இந்திரகுமார் றுஸ்மிதன் என்ற ஆண் குழந்தை, நீர் நிரப்பப்பட்ட வாளியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம், நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்து குழந்தையும் அதே வயதுடைய அயல்வீட்டுக் குழந்தையும் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, முற்றத்தில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் மேற்படி குழந்தை விழுந்துள்ளது. குழந்தையின் அழு குரலைக் கேட்ட தாய் ஓடிவந்து பார்த்தபோது, குழந்தை நீருக்குள் கிடப்பதைக் கண்டெடுத்து, மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது, குழந்தை உயிரிழ…

    • 2 replies
    • 583 views
  17. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் சிறைவாசம் அனுபவிக்கும் முருகனின் தந்தையார் வைரவப்பிள்ளை வெற்றிவேலு (வயது 83) நேற்று அதிகாலை மரணமடைந்த நிலையில் இறுதிக்கிரியைகள் இன்று காலை நடைபெற்றது. சொந்த இடமான கிளிநொச்சி பளை இத்தாவிலுள்ள அவரின் வீட்டில் உடலம் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் இறுதிக்கிரியைகள் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பூதவுடல் அரசர் கேணி புன்னையடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. https://www.ibctamil.com/srilanka/80/142112?ref=rightsidebar

  18. (செ.தேன்மொழி) கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் அரசாங்கம் 5000 ரூபாவை நிவரணமாக வழங்கி வருகின்றது. இதனை 10 ஆயிரம் அல்லது 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, வைரஸ் பரவலை அரசாங்கம் தேர்தலில் வெற்றிக் கொள்வதற்கு பயன்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பில் அரசாங்கம் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கமைய செயற்படுவதாக தோன்றவில்லை. தேசிய பாதுகாப்பு என்றுக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதனை உறு…

    • 0 replies
    • 314 views
  19. வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசம் மிகுந்த ஆபத்தான கட்டத்தை இன்று எதிர்நோக்கியுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகளவில் பல நாடுகளும் கொரோனா நோய் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறையினர் அந்நோயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கணிசமாகப் போராடி வருகின்றனர். அதற்கு அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களும் சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கமைய ஆதரவு தெரிவித்து வருகின்றது. சிறிலங்காவில் மட்டுமே சுகாதாரத்துறையினரைவிட இராணுவத்துக்கு முதன்மையளிக்கும் செயற்பாடு நடைபெற்று வ…

    • 1 reply
    • 502 views
  20. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் – சுகாதார அமைச்சரை தாக்கும் ஐ.தே.க. by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸுற்கு எதிரான போராட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தோல்வியுற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நாட்டில், குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை அதிகரித்துள்ள என்ற சமீபத்திய அறிக்கைகளால் பெரிதும் கவலையடைவதாகவும் ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் 18 ஆம் திகதி, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை அடுத்து அமுலில் இருந்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீக்கப்படலாம் என்…

    • 1 reply
    • 539 views
  21. தனிமைப்படுத்தல் நிலையத்துக்காக யாழில் இடம் தேடும் படையினர் Bharati April 28, 2020 தனிமைப்படுத்தல் நிலையத்துக்காக யாழில் இடம் தேடும் படையினர்2020-04-28T21:05:42+00:00உள்ளூர் கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் இராணுவத்தினருக்கான தனிமைப்படுத்தல் நிலையத்தை அமைப்பதற்கான முயற்சி வெற்றிபெறாததையடுத்து, வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லுரியை தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தோல்வியடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்களுடைய எதிர்ப்புடன், கல்லூரி நிர்வாகமும், யாழ். மாவட்ட ஆயரும் இதற்காக அனுமதியை வழங்க முடியாது எனத் தெரிவித்துவிட்ட நிலையிலேயே இந்த முயற்சியும் கைவிடப்பட்டது. வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லுரியில் த…

    • 3 replies
    • 398 views
  22. கொரோனா தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டவர்கள் மற்றும் பரப்பியவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் சட்டத்தை மீறியமை தொடர்பில் எச்சரிக்கை மாத்திரம் செய்து, பொலிஸார் சில குழுக்களுக்கு எதிராக பாரபட்சத்துடன் செயற்பட்டமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தவறான தகவல்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை வெளியிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் நபர்கள் கைதுசெய்யப்படும் அதேவேளை, அரச அதிகாரியை விமர்சித்தமைக்கு எதிராக பொலிஸார் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கை கருத்துச் சுதந்திரத்தை பாதித்துள்ளதாக பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு, ஸ்ரீலங்கா மன…

    • 1 reply
    • 293 views
  23. தனிமைப்படுத்தல் முகாம்களாக கிழக்கில் 11 பாடசாலைகள் சகா கிழக்கு மாகாணத்தில் 11 பாடசாலைகள், கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன. கல்முனைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் திருமலைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் அம்பாறைப் பிராந்தியத்தில் 03 பாடசாலைகளும் இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. இத்தகவலை, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் ஊர்ஜிதம் செய்தார். கல்முனைப் பிராந்தியத்தில், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, நாவிதன்வெளி வேப்பையடி கலைமகள் வித்தியாலயம், அக்கரைப…

  24. அனைத்து முகாம்களையும் ஆய்வு செய்ய நடவடிக்கை அனைத்து படை முகாம்களையும் ஆய்வு செய்து முகாம்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது. முகாம்களில் உள்ள சுகாதார நடைமுறைகள் குறித்து அதிக கவனம் செலுத்துவதாக செயலணியின் பிரதானி மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார். அத்துடன், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகள், சரியாக செயற்படுத்தப்படுகின்றதாக என்று ஆராயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். சிறு முகாம்களின் பிரதானிகளை அழைத்து, சு…

    • 0 replies
    • 297 views
  25. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்ட 143 பி.சி.ஆர் பரிசோனையில் இதுவரை 4 பேருக்கு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி காலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார். மட்டு. பேதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், “உலகலவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் என பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் சுகாதார அமைச்சு முன் ஆயத்தங்கள் செய்துள்ளது இதற்கமைய கொரோனா முகாமைத்துவம் செய்யும் வைத்தியசாலையாக எமது வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டது. இதற்கமைய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டாவது மாடியில் கொரோனா தொற்று நோய் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதே கட்…

    • 0 replies
    • 377 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.