ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142965 topics in this forum
-
தினமும் 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! யாழில் ஏன் இந்த நிலைமை? யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றச் சாட்டில் தினம் 200 க்கும் மேற்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழில் வீதி விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்து உள்ளமையால் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களில் உள்ள போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுது்து வருகின்றனர். இதனால் தினமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சுமார் 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் சுமார் 10 …
-
- 2 replies
- 417 views
-
-
குடாநாட்டு குடிநீர் நெருக்கடியில் எந்த ஓர் விடயத்தையும் நாம் மறைக்க வேண்டிய தேவையோ, அழுத்தங்களோ எமக்கில்லை: விக்கினேஸ்வரன் குடாநாட்டு குடிநீர் நெருக்கடியில் எந்த ஓர் விடயத்தையும் நாம் மறைக்க வேண்டிய தேவையோ அழுத்தங்களோ எமக்கில்லை என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுன்னாகம் குடிநீரில் கழிவு எண்ணெய் கலந்த விவகாரம் அண்மைய காலங்களில் பெரும் சிக்கலுக்குரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இது தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். குடிநீர்ப் பிரச்சினையில் அரசியலை புகுத்தாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் அவர் இப்பிரச்சினைக்கு சரியான தீர்வை பெறமுடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்…
-
- 0 replies
- 289 views
-
-
December 14, 2018 எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளதாகவும் இந்த அரசாங்கத்தில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளதோடு ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த பலருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் சிலர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக அரியவருகின்றது. மேலும் இவ்விடயம் தொடர்பில் நேற்றிரவு ஜனாதிபதியை சந்தித்து தெரியப…
-
- 0 replies
- 610 views
-
-
இந்தியாவிற்கு விஜயம் செய்வதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவின் தமிழக மற்றும் மத்திய அரசாங்கங்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சென்னை உயர் நீதிமனறத்தில் ஆஜராகத் தயார் எனவும் அவர் தெரிவித்தார். 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜனநயாக வழிமுறைகளுக்கு திரும்பிய அனைத்து போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தா படுகொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் உரிய சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை என இந்திய காவல்துறையினர் குற்றம் சுமத…
-
- 3 replies
- 537 views
-
-
(எம்.நியூட்டன்) மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது. நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வலி தென்மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களால் நடத்த தடைவிதிக்கக் கோரியே மல்லாகம் நீதிமன்றில் மானிப்பாய் பொலிஸார் மனுத் தாக்கல் செய்தனர். இது தொடர்பிலான விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை (17) …
-
- 0 replies
- 176 views
-
-
இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அவசரகாலச் சட்டத்தை தொடரும் உத்தேசம் கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 25ம் திகதி விடுத்த அறிவிப்பு பாராட்டப்பட வேண்டியது என ஐரோப்பிய ஆணைக்குழுவின் துணைத் தலைவர் கெதரீன் அஸ்டான் தெரிவித்துள்ளார். நாட்டில் இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முக்கியமான தீர்மானமாக அவசரகாலச் சட்ட நீக்கம் கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அவசரகாலச் சட்ட நீக்கத்தின் மூலம் முக்கியமான அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தை நீக்குவதன்மூலம் ந…
-
- 3 replies
- 850 views
-
-
கோப்பாய் வெளியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு- போதையில் காரினை செலுத்தியவர் மோதி தள்ளினார் December 27, 2018 வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வேகமாக வந்த மோட்டார் கார் மோதியலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (25) இரவு 10.45 மணியளவில் கோப்பாய் கைதடி செல்லும் வீதியில் இடம்பெற்றுள்ளது. அளவெட்டி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோப்பாய்வெளி ஊடாக கைதடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை அவ்வழியே வேகமாக சென்ற மோட்டார் கார் மோட்டார் பின்னால் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் அவ்விடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மோதிய மோட்டார் கார் அருகே உள்ள நீரேரிக்குள் பாய்ந்துள்ளது. இந…
-
- 0 replies
- 419 views
-
-
Published By: DIGITAL DESK 3 28 NOV, 2023 | 04:10 PM வெளிநாட்டுக்கு அனுப்புதல் தொடர்பாக கொடுங்கல் வாங்கலில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வவுனியா நீதிமன்றத்தால் இன்று செவ்வாய்க்கிழமை (28) பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், நெஞ்சுவலி என கூறி நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போது, அவர் செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார். வெளிநாடு செல்வதற்கு சிலர் குறித்த நபர் ஊடாக பிறிதொருவருக்கு பணம் கொடுத்துள்ளனர். பணம் பெற்றுக் கொண்டவர் பணம் வழங்கியவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமையால், குறித்த நபருக்கு எதிராக பணம் கொட…
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
ஜூலை 1 ஆம் நாள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 24 மணி மணி நேர சேவை: அனுரா பிரியதர்சன யாப்பா [புதன்கிழமை, 27 யூன் 2007, 17:18 ஈழம்] [செ.விசுவநாதன்] கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் எதிர்வரும் ஜூலை 1 ஆம் நாள் முதல் 24 மணி நேரமும் இயங்கும் என்று அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறியதாவது: கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் எதிர்வரும் 1 ஆம் நாள் முதல் 24 மணி நேர சேவையை தொடங்க உள்ளது. கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் நடவடிக்கைகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக இரவு நேரத்தில் இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டது. இது போன்ற நிலைமைகள் பெரிய வல்லரசு…
-
- 1 reply
- 1k views
-
-
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக சட்டப் பேரவையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுமாறு தீர்மானம் நிறைவேற்றியதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். இந்த தீர்மானத்தை டெல்லியில் உள்ளவர்கள் கொச்சைப் படுத்துகின்றனர். இதனை தமிழக மக்களுடன் இணைந்து தமிழக ஊடகங்களும் கண்டிக்க வேண்டும். கருணை மனு பற்றி இரண்டு வருடத்தில் பதில் அளிக்க வேண்டும். ஆனால ஏதோ ஒரு அமைச்சரவை சக்தியால் இது கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றார். http://www.nakkheera...ws.aspx?N=60657
-
- 0 replies
- 715 views
-
-
ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியும் மகளுக்கு விடுதலையில்லை- உதயசிறியின் தாய் கண்ணீர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியும் எனது மகள் உதயசிறி இன்னமும் விடுதலைசெய்யப்படாதது பெரும் கவலையளிக்கிறது என சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் கைதாகிச் சிறைத்தண்டனை பெற்றுவரும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறியின் தாய் எஸ். தவமணி தெரிவித்தார். சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதிய குற்றத்திற்காக அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறியை அவரது தாய் எஸ். தவமணி நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார். ஜனாதிபதி எனது மகளுக்குப் பொத…
-
- 0 replies
- 556 views
-
-
விளங்காமல் பேசும் தலைவர்கள் தற்போது ஆளும் தரப்பு முன்வைத்திருக்கும் தேர்தல் சீர்திருத்த ஆலோசனைகளை நாடாளுமன்றம் மூலம் நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், அவற்றை நடை முறைப்படுத்தும் அனுமதியை மக்களிடம் நேராகப் பெறுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும். அரசமைப்பு விவகார அமைச்சரும் மூத்த இடதுசாரியுமான டி. ஈ. டபிள்யூ. குணசேகரா இப்படி உரைத்திருக்கின்றார். நாட்டின் அரசமைப்பு விவகார அமைச்சரே இவ்வாறு கூறியிருப்பது குறித்து அழுவதா, சிரிப்பதா என்ற நிலைக்குத் தள்ளப்பட் டிருக்கின்றார்கள் மக்கள். நாட்டின் அரசமைப்புச் சட்டம் புரியாமல் அரசமைப்பு விவகார அமைச்சர் பேசுகின்றாரோ என்ற சந்தேகம் சட்டம் புரிந்த சாதாரண மக்களுக்கும் …
-
- 0 replies
- 980 views
-
-
[Thursday, 2011-09-08 10:48:17] கிறீஸ் பூதம் விவகாரம் தரம்குறைந்த பெற்றோல் சிமெந்து விவகாரம்; ஆசனிக் விவகாரம் ஆகிய வற்றின் பின்னணியில் சர்வதேசத்தின் சூழ்ச்சிகள் உள்ளன என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அந்தச் செவ்வியில் அவர் முக் கியமாகத் தெரிவித்துள்ளவை வரு மாறு: நாட்டில் அண்மையில் பரவலாகப் பேசப்படும் விடயங்களுள் பிரதானமானது கிறீஸ் பூதம் விவ காரம். மற்றது தரம் குறைந்த பெற் றோல் விவகாரம். உண்மையாகவே இவற்றின் பின்னணியில் சர்வதேச சூழ்ச்சிகள் இருப்பதாகவே நான் நினைக்கின்றேன்.ஏனென்றால் பெற்றோல் விநியோகிக்கும் நிறுவனங் கள் நாளாந்தம் கோடிக்கணக்கில் கொடுக்கல் வாங…
-
- 0 replies
- 665 views
-
-
கிளிநொச்சி பளை இயக்கச்சிப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பேரின் சடலங்கள் பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மற்றுமொரு சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு உயிரிழந்தவர்கள் பளை புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http:/…
-
- 5 replies
- 2.5k views
-
-
போதைப் பொருள் விற்பவர்கள் யார் என்பது தெரிந்தும் முறையிட பயப்படுகிறார்கள் : ஜெயசேகரம் கிராமிய மட்டத்திலும் போதைப்பொருள் அதிகரித்துள்ளது. இதனை யார் விற்கின்றார்கள், எங்குள்ளது என்பது பற்றி கிராமிய மட்ட அமைப்புக்களுக்கு தெரிகின்றது. ஆனால் அவர்கள் முறைப்பாடு செய்வதற்கு பயப்படுகின்றார்கள் என்று, யாழ். வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். அவ்வாறு முறைப்பாடு செய்து குற்றம் சுமத்தப்பட்டவர் பிணையில் வெளிவந்து, தன்னை யார் காட்டிக்கொடுத்தார்கள் என்பதை அறிந்துகொள்கின்றார். இதனால் முறைப்பாடு செய்தவருக்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. இதனால் தகவல்கள் தருபவரின் பாதுகாப்பு பேணப்பட்டு, அவரது இரகசியமும் பேண பொலிஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். …
-
- 1 reply
- 589 views
-
-
‘வடக்குக்கு சட்ட அதிகாரம் வழங்கப்படமாட்டாது’ - ஜே.வி.பி Editorial / 2019 ஜனவரி 14 திங்கட்கிழமை, மு.ப. 09:14 Comments - 0 புதிய அரசமைப்பினூடாக, வடக்கு மாகாணத்துக்கு, பொலிஸ், சட்ட அதிகாரம் கோரப்படுவதாகவும், இதற்கு, தமது கட்சி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் கூறிய ஜே.வி.பி, கடந்த 3 வருடங்களில் நிறைவேற்ற முடியாதுபோன அரசமைப்பை, அடுத்த ஒன்றரை வருடங்களுக்குள் நிறைவேற்றக்கூடிய இயலுமை, தற்போதைய நாடாளுமன்றத்துக்கு இல்லையென்றும் கூறியது. தற்போது நடைமுறையிலிருக்கும் 1978ஆம் ஆண்டு அரசமைப்பு, நடைமுறையில் இந்த நாட்டுக்குப் பொருத்தமற்றுள்ளதால், புதிய அரசமைப்பொன்றின் தேவை அவசியமாகியுள்ளதென, கொழும்பு - பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில், …
-
- 0 replies
- 899 views
-
-
ஜெனிவா களத்தில் யாருக்கு வெற்றி? நன்கு திட்டமிடப்பட்ட ஒரு அதிரடித் தாக்குதலை ஜெனிவாவில் சந்தித்துள்ளது இலங்கை அரசாங்கம். இப்படியொரு தாக்குதலை அரசாங்கம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப் போகிறார் என்ற தகவல் கூட இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. எல்லாமே தயாராகி விட்ட பின்னர் தான் தகவல் சொல்லப்பட்டது. அது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் ஏதும் கொண்டு வரப்பட வாய்ப்பில்லை என்றே அரசாங்கம் நம்பியிரு…
-
- 1 reply
- 1.2k views
-
-
மட்டக்களப்பில் உள்ள கிரிமிச்சை கிராமத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலி மீண்டும் காணிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதேச வாசிகள் இதனைத் தெரிவிக்கின்றன. இந்த பகுதி பூர்வீகமாக தமிழர்களுக்கு சொந்தமானது.பதிவு இணைய செய்தி கடந்த 2004ம் ஆண்டு காலப்பகுதியில் இதனை ஆக்கிரமிக்க அந்த நாட்டிகளில் அமைச்சராக இருந்த அமீர் அலி நடவடிக்கை எடுத்த போதும், பின்னர் அது நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் புதிய அரசாங்கத்தில் அவர் அமைச்சுப் பதவியை பெற்றுள்ள நிலையில் இந்த ஆக்கிரமிப்பு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பதிவு இணைய செய்தி இதனுடன் காத்தான்குடி பகுதியில் உள்ள செல்வந்த முஸ்லிம்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.pathivu.com/…
-
- 3 replies
- 632 views
-
-
January 21, 2019 முல்லைத்தீவு, நெடுங்கேணி – தட்டாமலை வீதியில் இராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மேஜர் ஒருவரும், கோப்ரல் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 4 இராணுவ அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்புக்காகச் சென்ற இராணுவ கொமாண்டோ படையணி வாகனங்கள் பாதுகாப்புப் பணியை நிறைவு செய்துவிட்டு இன்று மதியம் வவுனியா நோக்கிப் பயணித்தபோதே அதில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நெடுங்கேணி – தட்டாமலை வீத…
-
- 2 replies
- 916 views
-
-
அனைத்து பேருந்துகளிலும் CCTV கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அண்மைக் காலமாக வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோக சம்பவங்கள் பாரிய அளவு அதிகரித்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/287971
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி (இராஜதுரை ஹஷான்) ஐக்கிய தேசிய முன்னணியுடன் கூட்டணி அரசாங்கத்தின் கொள்கையினை ஏற்றுக் கொண்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து தேசிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மீள் செலுத்த வேண்டிய அரசமுறை கடன்களை மீள்செலுத்துவதுடன், மக்களுக்கான அபிவிருத்தியினையும் முன்னெடுக்க ஐக்கிய தேசிய முன்னணியுடன் கூட்டணியமைத்துக் கொள்வதுடன் அனைத்து பங்காளி கட்சிகளையும் தேசிய அரசாங்கத்தின் ஊடாக ஒன்றிணைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதர கட்சிகளுக்கிடையி…
-
- 0 replies
- 386 views
-
-
நடிகைகளால் சிக்கலில் சிக்கிய அமைச்சர் ஜீவன்! ஹட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா மேனன் மற்றும் மீனாட்சி (பிங்கி சர்க்கார்) ஆகியோர் கலந்துகொண்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சர்ச்சைக்குரியவராக மாறியுள்ளார். அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்த போதிலும், இந்த தென்னிந்திய கலைஞர்கள் வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்தி நிதியுதவி செய்தார்களா? என்று அவரைக் கேள்வி எழுப்பும் அவரது அரசியல் எதிரிகளின் விமர்சனத்திற்கு அவர் ஆளாகியு…
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஆகஸ்ட் 27ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல்? [sunday 2015-05-24 08:00] நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 27ம் நாள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தேர்தலை நடத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 27ம் நாள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன, அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது. 20வது திருத்தச்சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சபை தொடர்பான இணக்கப்பாடுகள் காணப்பட்ட பின்னர், நாடாளுமன்ற…
-
- 0 replies
- 236 views
-
-
சிறிலங்காவுக்கு 150 கோடி ரூபா ஒதுக்கியது இந்தியா இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 1000 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், சிறிலங்காவுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை. இந்திய மத்திய அரசாங்கத்தின் 2019-20 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் பியூஸ் கோசலினால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வரவுசெலவுத் திட்டத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 16,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட 1000 கோடி ரூபா அதிகமாகும். இதில், இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்காக, 6,447 கோடி ரூபா ஒதுக்க…
-
- 2 replies
- 401 views
-
-
சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விதிவிலக்கு – அமெரிக்கா உறுதிப்படுத்துகிறது Sunday, October 9, 2011, 10:40 நியுயோர்க் நீதிமன்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராஜதந்திரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜத்தந்திர விதிவிலக்கு இருப்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவிருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இராஜதந்திர உறவுகள் தொடர்பான 1961ம் ஆண்டின் வியன்னா உடன்பாட்டின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜத்தந்திர விதிவிலக்கு இருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வழங்கும் சான்றிதழை, சவீந்திர சில்வாவின் சட்டவாளர் தெற்கு நியுயோர்க் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ள…
-
- 1 reply
- 1.4k views
-