ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142759 topics in this forum
-
விடுதலை புலிகளை இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் பிடிபடவேண்டும் மென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் . இந்தியா ருடே பத்திரிகையின் ஆசிரியருடனான நேர்காணல் ஒன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழான செய்தி வெளியிட்டுள்ளது இதன் போது அவர் மேலும் தெரிவித்தாவது. விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீதான குற்றச்சாட்டுகள் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை போன்ற குற்றங்களிற்கான தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் . அதே வேளை விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வைத்து சமாதான பேச்சுகளில் ஈடுபடதயாரயின் அரசாங்கமும் விடுதலை புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளும் . விடுதலை புலிகள் ஆயுதங்கள் கீழே வைக்காவிடின் அரசாங்கமும் வ…
-
- 6 replies
- 3k views
-
-
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பத்மநாதன் மயூரன் வெற்றி பெற்றுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (30) மதியம் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் குமாரசாமி மதுசுதனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பத்மநாதன் மயூரனும் முன்மொழியப்பட்டனர். தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. இதன்படி மதுசுதனன் 08 வாக்குகளையும் மயூரன் 10 வாக்குகளையும் பெற்றனர். மதுசுதனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்கள் ம…
-
- 32 replies
- 3k views
-
-
மகிந்த ராஜபச்ஸா என்றும் சிங்கள இனவெறி பிடித்த காட்டுமிராண்டி, பதவியேற்று எதிர்வரும் 19ம் திகதி வருடமாகின்றது. 17ம் திகதி வெற்றி பெற்ற அவன், 19ம் திகதி பதவியேற்ற நாளில் இருந்து அப்பாவிக் குழந்தைகள் முதல், முதியவர் வரை வேறுபாடின்றி பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தினமும் ஒரு வீட்டில் சாவுக்குரல் ஒலிக்கின்றது. இந்தக் கொலைக்காரன், மன்னாரில் சிறுமி, சிறுவர், வள்ளிபுனம் சிறுவர் பராமிப்பு இல்லம், கடந்தவாரம் வாகரையில் 6 மாதம் கூட அடையாத பல குழந்தைகள், மாமனிதர்கள் ரவிராஜ், யோசப் பரராஜசிங்கம், என்று ஏனைய சிங்களக் கொலைவெறித் தலைவர்களுக்கு நிகராவும் மேலாகவும் கொன்று குவித்தான். குவிக்கின்றான். இது வரை நாளும், அவனால் கொல்லப்பட்ட, மக்களின் தொகையை விபரங்களோடு, அனைவருக்கும் சுட்…
-
- 11 replies
- 3k views
-
-
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுக்க இயலாது: முதல்வர் கருணாநிதி பேச்சு விழுப்புரம், டிச. 18: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ள இயலாது என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறினார். 2-வது கட்ட இலவச நிலம் வழங்கும் விழாவை விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது: "துணைக் கண்டமான இந்தியாவுக்கு, "கண்டம்" வராமல் பாதுகாக்க வேண்டும். பக்கத்து நாடால் "கண்டம்" வரக்கூடாது என்பதற்காகச் சிந்தித்துச் செயல்படுகிறோம். இலங்கைப் பிரச்சினையில் இதே நிலையைக் கையாள்கிறோம். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதால், அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருவது தொடர்கிறது. அண்மையில் தில்லிக்குச் சென்றபோது இதுகுறித்து …
-
- 15 replies
- 3k views
-
-
சிங்கப்பூரின் தந்தையான லீ குவான் யூ தனது உரையாடல் எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார், இலங்கை இனப்பிரச்சனைக்கு தனி நாடுதான் தீர்வு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தமிழர்கள் அடங்கி ஓடமாட்டார்கள் என்றும் சிங்களவர்க்களுக்கு பயப்படமாட்டார்கள் என்றும் தன்னால் ராஜபக்ஸவை திருத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
-
- 12 replies
- 3k views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துடன் இருநாட்டு உறவில் புதிய ஆரம்பம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்திய பிரதமரின் பாராளுமன்ற உரையை தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, பழமை வாய்ந்த ஜனநாயக முறை இலங்கையில் காணப்படுகிறது. 1835ல் அரசியலமைப்பு சபை இருந்தது. அதில் அங்கம் வகித்த ஆறுமுகம்பிள்ளை குமாரசாமியின் பரம்பரையில் வந்தவரே இன்று எமது மீள்குடியேற்ற அமைச்சராக இருக்கிறார். வெஸ்ட் மினிஸ்ட் முறை அமுல்படுத்தப்பட்ட நீண்ட வரலாறு எமக்கிருக்கிறது. மீண்டும் வெஸ்ட்மினிஸ்டர் முறையை அமுல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். எமது மொழி, கலாசாரம் என்பவற்றுக்கிடையில் நெருக்கம் காணப்படுகிறது. மன்னர் ஆட்சிக்காலம் முதல் பல்வேறு…
-
- 60 replies
- 3k views
-
-
எனக்கு மின்னஞ்சலில் எஸ் .பொ அவர்கள் அனுப்பிய அறிக்கையின் முழு வடிவம் இது "யாதும் ஊரே...... தீதும் நன்றும்' என்ற தலைப்பில் எனக்கு எதிராக சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டின் ஏக தலைவராகத் தம்மை நியமித்துக்கொண்ட முருகபூபதி வெகுண்டெழுந்து உண்மைகளை மறைத்தும் மறுத்தும் யாழ் இணையத்தில் பதிவு செய்த கட்டுரை என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதைப் பார்த்ததும் சர்வதேச எழுத்தாளர்களுடைய தலைவராகிவிட வேண்டுமென்ற பதவி மோகத்திலே அவர் தமது சுயமூளையை இழந்து மனப்பிறழ்விலே அவலப்படுகிறாரோ என்ற அநுதாபமே எனக்கு ஏற்பட்டது. அவருடைய உளறல்களை மதித்து ஒரு பதில் எழுதுதல் அவசியமில்லையாயினும், வரலாற்று ஆவணங்கள் செப்பமாக பாதுகாக்கப்படுதல் என்பது இன்றளவும் என் தர்மமாக விடிந்துள்ளதால் இப்பத…
-
- 4 replies
- 3k views
- 1 follower
-
-
கணக்கறிக்கை (யூன், யூலை, ஓகஸ்ட்)
-
- 30 replies
- 3k views
-
-
மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் இனமோதலுக்கான தீர்வைக்காண இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக விரும்புவதால் தனிநாட்டு கோரிக்கையை கைவிடுமாறு அமெரிக்கா பிரபாகரனை கேட்டுள்ளது. .....நான் நினைக்கிறேன் தனிநாட்டு யோசனையை கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் பேச்சுவார்த்தை வார்த்தை சம்மதிப்பது மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்று இலங்கைகான அமெரிக்க தூதுவர் Robert Blake தெரிவித்துள்ளார். தான் தமிழர்களுடன் நடத்திய பேச்சுகளிலிருந்து 95 வீதமானோர் ஐக்கிய இலங்கைக்குள் தான் ஒரு தீர்வை விரும்புகிறார்கள் என்று நினைப்பதாக Blake தெரிவித்தார். "அவர்கள் (தமிழ் மக்கள்) பிரபாகரன் தேடும் சுதந்திர தமிழ் ஈழத்தை தேட விரும்பவில்லை" என்று Blake சண்டே ஒப்சேர்வர் நாளிதழுக்கு தெரிவித்தார். Prabhakaran…
-
- 15 replies
- 3k views
-
-
லண்டனில் நாடுகடத்தும் திட்டத்துடன் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எம் உறவுகளுக்கு இந்த மனுவில் கையெழுத்து இட்டு எம்மால் முடிந்த அதி குறைந்த பங்களிப்பையாவது செய்வோம்.163 கையெழுத்துகளே இவ்வளவு நேரமும் கிடைத்துள்ளது ஆயிரக்கணக்கில் பதிவோம் இதை வாசிப்பவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதனை தெரியப்படுத்துங்கள் Solidarity with hunger strike of Tamil nationals Created by John Smith on Jul 26, 2007 Category: Human Rights Region: United Kingdom Target: Home Office Web site: http://www.indymedia.org.uk/ Description/History: The Sri-Lankan government is notorious in its treatment of the struggling Tamils. There is a long chain of human right abuses and murde…
-
- 15 replies
- 3k views
-
-
விடுதலைப்புலிகளுடன் போரிட்ட இலங்கை ராணுவத்துக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. எனவே சிங்கள ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டது. ராணுவம் என்ன செய்தாலும் அதை அரசு தட்டிக்கேட்பது இல்லை என்ற நிலை இருந்தது. இப்போது போரில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து விட்டது. எனவே ராணுவத்துக்கு வழங்கப்பட்டிருந்த அதிக அதிகாரங்களை குறைக்க அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளார். ஏற்கனவே ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கியிருந்த அதிக அதிகாரத்தை குறைக்கும் வகையில் அவருக்கு கூட்டு படை தலைமை அதிகாரி என்ற புதிய பதவி வழங்கப்பட்டது. இப்போது ராணுவத்துக்கு உள்ள மற்ற அதிகாரங்களை குறைக்க உள்ளார். இதன்மூலம் மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். இதனால் அதிபர் தேர்தலில் எளித…
-
- 0 replies
- 3k views
-
-
இன்னும் பத்தாண்டில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே: சிவாஜி.! 2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்கு காரணம். இதேவேளை புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்குது தொடர்பாக உத்தேசிக்கப்பட்டு வருகின்றது. அதாவது விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், த…
-
- 26 replies
- 3k views
-
-
கிளிநொச்சி சமரின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள படங்கள் மற்றும் செய்திகள் சிறீலங்காவின் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். சிறீலங்கா படையினர் கிளிநொச்சி நோக்கி 5 கிலோமீற்றர் முன்னேறியுள்ளதாகவும், விடுதலைப்புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் 120 போராளிகள் உயிரிழந்தும் 250 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்காவின் ஊடகங்கள் முன்னர் தகவல் வெளியிட்டிருந்தன. ஆனால் விடுதலைப்புலிகள் வெளியிட்ட உடலங்கள், மற்றும் சிறுவர் படையணி பற்றிய படங்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை. கடந்த வாரம் சிறீலங்காவின் தரைப்படைத் தளபதி வெளியிட்ட கருத்தும…
-
- 6 replies
- 3k views
- 1 follower
-
-
சிங்கள இராணுவத்தினருக்கு இந்தியா ஆயுதம் வழங்கக்கூடாது: தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் கடும் எதிர்ப்பு [திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007, 14:55 ஈழம்] [ந.ரகுராம்] தமிழர்களை வதைக்க இலங்கையில் உள்ள சிங்கள இராணுவத்தினருக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி உதவிடக்கூடாது, தமிழர்களை வதைப்பதற்காக அது பயன்படும் ஆகவே அந்தச் செயலைக் கண்டிப்பாக நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கின்ற உரிமை எமக்கு இருக்கின்றது, பொறுப்பும் எமக்கு இருக்கின்றது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இது தொடர்பாக நடந்த விவாதம்: பாட்டாளி மக்கள் கட்சியின் கோ.க. மணி: இராணுவத் தளபாடங்களை சிறிலங்காவுக்கு மத்திய அரசு கொடுப்பதாக வந்துள…
-
- 19 replies
- 3k views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு பேரணி நடத்தினர். இதில் 13 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு இராணுவத்திற்கும் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்தப் போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இலங்கை தமிழர்களை காக்க வலியுறுத்தி வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு அமைதிப் பேரணி நடத்தினர். 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த பேரணியில் பங்கேற்றனர். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, …
-
- 1 reply
- 3k views
-
-
இதுவரை 'தமிழ்', 'தமிழன்;' என்று தமிழன் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்தித் தம்மையும் தமது குடும்பத்தையும் உயர்த்திக் கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி இந்தத் தள்ளாத வயதிலாவது தமது கடைசிக் காலத்திலாவது ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்ய அவர் ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக் காத்திருந்த உலகத் தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கின்றது. ஈழத்தமிழர்களுக்காகக் கொதித்து எழுந்த தமிழகம் போராட்டம், ஆர்ப்பாட்டம், மனிதசங்கிலி, உண்ணாவிரதம், பதவி விலகல் மிரட்டல், அனைத்துக் கட்சிக் கூட்டம், புதுடெல்லிப் பயணம், பிரதமர் சந்திப்பு என்று பல்வேறு வகைகளில் தனது உணர்வை உச்சமாக வெளிப்படுத்திவிட்டது. ஆனால் பயன் தான் ஒன்றும் விளையவில்லை. இவ்விடயத்;தில் தமிழ…
-
- 17 replies
- 3k views
-
-
சோரன் பற்று கிராமத்தை தாங்கள் கைப்பற்றிஉள்ளதாக இராணுவம் சார்பு ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. 8ம் திகதி மாலை தங்கள் இரணுவத்தின் 55ம் படைப்பிரிவு ஆனையிறவில் இருந்து 9கி.மீ இலும் பளையில் இருந்து 5.2கி.மீ இலும் அமைந்துள்ள சோரன்பற்று கிராமத்திற்குள் நுளைந்ததாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. சோரன்பற்று ஓயாத அலைகள் படை நடவடிக்கையின் போது எமது போராளிகளின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நிலப்பரப்பு ஆகும்.
-
- 10 replies
- 3k views
-
-
கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் வரலாற்றில் முதல்முறையாக சதனை படைத்துள்ளது. இந்நிலையில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று முதல் முறையாக 9,000ஐ கடந்து அதன் உயர்ந்த மதிப்பைப் இன்று பதிவு செய்துள்ளது. இன்றைய நாளின் (01) கொடுக்கல் வாங்கலின் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,163.13 ஆக பதிவாகியிருந்ததாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. முன்னதாக 2021 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி அனைத்து பங்கு விலைச்சுட்டெண் உயர்ந்த மதிப்பை பதிவு செய்திருந்த போது, 8,920.71 ஆக பதிவாகி இருந்தது. இன்றையதினம் பரிமாறப்பட்ட பங்குகளின் மொத்த புரள்வு 14.56 பில்லியன் ரூபாவாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு …
-
- 31 replies
- 3k views
-
-
புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’ தமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதுடெல்லி செல்வதற்கு தயாராகியுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் கொழும்பு வந்த இந்தியப் பிரதமருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அவசரமாக அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்த இந்தியா …
-
- 27 replies
- 3k views
-
-
யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்! வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் ராணுவத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என யாழில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவத்தை கொண்ட கணவனை யுத்தத்தின் போது இழந்த ஒரு குடும்பத்தினருக்கு ஒரு வீட்டினை இராணுவத்தினரால் அமைத்து கொடுத்திருக்கின்றோம். அவர் தனது கணவனை இழந்த பின்னரும் தனது விடா முயற்சியின் காரணமாக சுய தொழிலினை வாழ்வாதாரமாக மேற்கொண்ட…
-
- 39 replies
- 3k views
-
-
ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் சுமந்திரனின் பெயரை உச்சரிக்கவேண்டிய தேவை ஏற்படாது- கஜேந்திரகுமார் July 20, 2020 ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் சுமந்திரனின் பெயரை உச்சரிக்கவேண்டிய தேவை ஏற்படாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சுமந்திரன் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் என்ற தகுதியை இழந்து வெறுமனே ஒரு சட்ட ஆலோசகராகவே இருக்கின்றார் இதன் காரணமாக அவ்வாறான ஒருவருடன் நாம் விவாதிக்கவேண்டிய தேவையுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் கட்சிகளுக்கு இடையிலான விவாதமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் இந்த நிகழ்வு இரத்துச்செய்யப்பட்டது என்பதை அவர…
-
- 33 replies
- 3k views
-
-
முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாக அமையலாம்! [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 03:35.51 AM GMT +05:30 ] வன்னிப் போர்முனை விரித்த வலை புதியது,புரியாதது! பல எண்ணற்ற அரசியல் ஆய்வாளர்களின் தலையில் ஏறித் தாண்டவமாடிக் கொண்டது இந்தப் போர்முனை. பலமான ஒரு மையப்பகுதியாக விளங்கியது கிளிநொச்சி. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியின் முக்கிய தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான காரணம் என்ன? அதன் அறம் புறம் என, உள்ளடகப்பட்ட விடயங்கள் என்ன? வடபோர்முனையில் ஸ்ரீலங்கா இராணுவம் இதுவரை சந்திக்காத பேரிழப்புக்களைச் சந்தித்த போதும் கிளிநொச்சி மண்ணை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான முழுக் காரணம் என்ன?…
-
- 10 replies
- 3k views
-
-
புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை?: இந்தியா தீவிர கண்காணிப்பு on 03-01-2009 12:01 Published in : செய்திகள், இலங்கை இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் போரை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய உளவுத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போது விடுதலைப் புலிகளின் தலைநகராக செயல்பட்ட கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சியை நோக்கி ராணுவம் முன்னேறத் தொடங்கியதுமே முன் எச்சரிக்கையாக விடுதலைப் புலிகள் தலைமையகம் முல்லைத்தீவு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. கிளிநொச்சியை கைப்பற்றிய ராணுவம் முல்லைத்தீவு நோக்கி நகர்ந்து வருகிறது. இலங்கை ராணுவத்தின் கடும் சண்டை குண்டு வீச்சு காரணமா…
-
- 2 replies
- 3k views
-
-
வான்பகுதியால் வருவதற்கு முன்னர் தரையில் விடுதலைப் புலிகளை முறியடிப்போம்: பிரசாத் சமரசிங்க. "தமிழீழ விடுதலைப் புலிகள் வான்பகுதியால் வருவதற்கு முன்னர் அவர்கள் தரையில் முறியடிக்கப்படுவார்கள்" என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஊடகத்துறையினர் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "விடுதலைப் புலிகளை தரையில் அழித்த பின்னர் வான்புலிகள் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பங்குபற்றிய விமானப் படையின் பேச்சாளர் குறுப் கப்டன் அஜந்த குரே தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுக…
-
- 11 replies
- 3k views
-
-
குசந்தன் அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளும் நாடு கடத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. இதில் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் இருந்த குசந்தன் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இவர்தான் சிலின் ரக விமானங்களை தாக்குதல் விமானங்களாக மாற்றியதாக கூறப்படுகின்றது. தென்மராட்சியின் மீசாலையை சேர்ந்த சுந்தரலிங்கம் குசந்தன் என்ற இவர் 1994இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் குசந்தன் மாஸ்ரர், முல்லைசசெல்வன் உள்ளிட்ட பெயர்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் சரத்பாபு 6 பயிற்சிமுகாமில் பயிற்சிபெற்று இம்ரான் பாண்டியன் படையணியில் இணைந்தபோ…
-
- 10 replies
- 3k views
-