ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தங்கும் வகையில் திருகோணமலைத் துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவுள்ளதாக சிறீலங்காக் கடற்படை அறிவித்துள்ளது. கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற காலிக் கலந்துரையாடல் எனப்படும், கடல் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும்போதே கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்னர் இதுவரை 95 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் சிறீலங்காத் துறைமுகத்துக்கு வந்து சென்றுள்ன. இவற்றில் ஆறு கப்பல்கள் மாத்திரமே கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்ததாகவும், ஏனையவை அனைத்தும் கொழும்புத் துறைமுகத்திலேயே தரித்து நின்றன. ஆறு கப்பல்கள் மாத்திரமே …
-
- 0 replies
- 280 views
-
-
நாளுக்கு நாள் மணிக்கொரு தடவை நிமிடத்திற்கு நிமிடம் வன்னியில் மனிதப் படுகொலைகள், மனித உரிமைமீறல்கள,; உணவுத் தடை ,மருத்துவத் தடை , கருக்கலைப்பு, சிறுமியர்மீதான பாலியல் வன்புணர்வு ,கல்விப் பாதிப்பு இத்தனையும் உச்சக் கட்டத்தில் தலைவிரித்தாடும் வன்னி நிலம் இன்றைய இந்நிலையில் இவற்றை நிறுத்தவும் ,மேற்குலக நாடு;களுக்கு எடுத்துக் கூறவும். புகலிட மக்கள் தம் முழுப்பங்காக கவனயீர்ப்புக்கள் ,பேரணிகள்,இன்னும் ஒரு படியாக தீக்குளிப்பு இத்தனையும் இன்று முன்னெடுத்து வரும் வரிசையில் முக்கியமான தரவில் பரப்புரையை முன்னெடுக்கும் அத்தியாவசியமும் இருந்த பட்சம் சனிக்கிழமை கம் மாநகரில் உயர்ஜேர்மனியமக்கள் கல்லூரியில் காலை 10 -30 மணியளவில் ஜேர்மனி சர்வதேசப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்ற…
-
- 10 replies
- 4.1k views
-
-
உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் 'புக்கர் பரிசு'ம் ஒன்று. சில வருடங்களுக்கு முன்பு 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' என்ற தன்னுடைய நாவலுக்காக இந்த விருதை வாங்கியவர் இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய். இன்று, இலக்கியப் பணிகளுக்கிடையே சமூகத்தின் தீவிரப் பிரச்னைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கெதிராக களமிறங்கி சமூக சேவை யிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அருந்ததி ராய். இலங்கைப் பிரச்னை குறித்து மேடைகளில் முழங்கத் தொடங்கியிருக்கும் இவர், கடந்த 30-ம் தேதி சென்னைக்கும் வந்திருந்தார். அப்போது விகடன் இதழுக்கு வழங்கிய பேட்டி பின்வருமாறு: ''இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைஉலகின் வேறு எந்த கொடூரத்தோடு நீங்கள் ஒப்பிடுவீர்க…
-
- 2 replies
- 733 views
-
-
வன்னி மக்களின் துயரங்களை உலகு அறியச் செய்வதற்காக ஆபிரிக்காவின் மிக உயர்ந்த மலை மீது ஏறி நின்று கவனயீர்ப்பு போராட்டத்தினை ஈழத் தமிழர் ஒருவர் தொடங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 642 views
-
-
கொழும்பு நகரில் சிங்களவர்களை விட தமிழர்கள் அதிகமாக வாழ்வதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும். கொழும்பு நகரில் 204,520 சிங்களவர்களும், 176,198 தமிழர்களும் வாழ்கிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் புள்ளிவிபர திணைக்களம் 2011ம் வருடம் நடத்திய ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி இதுதான் அதிகாரப்பூர்வ உண்மை. இதைவிட ஜாதிக ஹெல உறுமய வேறு ஒரு புள்ளிவிபர திணைக்களைத்தை நடத்துகின்றதா என கேட்க விரும்புகின்றேன். சிங்கள மக்கள் மத்தியில் தேவையற்ற இனத்துவேச சிந்தனையை விதைப்பதற்காக இத்தகைய உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவிப்பதை அமைச்சர் சம்பிக்க ரணவக்க உடன் நிறுத்தவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். கொழும்பு மாநகரத்தில் வாழும் தமிழ…
-
- 6 replies
- 876 views
-
-
தவறான தகவல்களைப் பரப்பும் இணையதளங்களை மக்கள் நம்பிவிடுகின்றனர்.! கோலாலம்பூரிலிருந்து ரொபட்அன்டனி மீண்டும் நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்படாமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கும்போது நாங்கள் நாட்டை பிரிக்கப்போவதாகவும் இராணுவத்தைப் பலவீனப்படுத்துவதாகவும் பொய்யான பிரசாரங்களை சிலர் மேற்கொண்டு வருகின்றனர் என்று ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன தெரிவித்தார். அவ்வாறு இணையதளங்களில் வருகின்ற தகவல்களை வெளிநாடுகளில் உள்ளவர்கள் நம்பிவிடுகின்றனர். ஆனால் அவை பொய்யான தகவல்களாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மல…
-
- 0 replies
- 148 views
-
-
'பிள்ளைகளுக்கு கொப்பி வாங்க முடியவில்லை' தனது பிள்ளைகளுக்கு பாடசாலைக் கொப்பிகளை வாங்கொடுக்க முடியவில்லை என்று கூறி, நில்வலா ஆற்றின் நடுவில் நடந்துச் சென்ற பெண்ணை, பொலிஸார் காப்பாற்றியுள்ளர். மாத்தறை, கன்தர, நாவோதுன்ன பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே, இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு புதிய வகுப்புச் செல்லவுள்ள தன்னுடைய 6 பிள்ளைகளுக்கும் கொப்பிகளை வாங்கிக்கொடுப்பதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தே, இவர் ஆற்றுக்கு நடுப்பகுதியில் நடந்துச் சென்றுள்ளார். இவருக்கு 6,9,11,13,15 மற்றும் 17 வயதுகளை உடைய பிள்ளைகள் இருப்பதாக தெரியவருகின்றது. அவர், ஆற்றின் நடுப்பகுதிக்கு நடந்துச் செல்லும் போது, 'போக வே…
-
- 1 reply
- 389 views
-
-
மட்டு – வைத்தியசாலை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று – மக்களுக்கு எச்சரிக்கை 27 Views மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பணிப்பாளர் கணேசலிங்கம் கலாறஞ்சினி வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உகன ஆகிய ஆறு வலயங்கள் சிவப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு வைத்த…
-
- 0 replies
- 326 views
-
-
சிறிலங்காவின் மத்திய மலையக மாவட்டமான மாத்தளையில் உள்ள அலவத்துகொட பகுதியில் வைத்து இளம் தமிழ்த் தம்பதியர் காவல்துறையினரால் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 369 views
-
-
யாழ். கந்தரோடையில் இராணுவம் எனக்கூறி இந்து ஆலயக் காணி தொடர்பான விசாரிப்பு- மக்கள் குழப்பத்தில்! யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம் தொடர்பாக இராணுத்தினர் எனக் கூறி விசாரித்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறித்த கோயிலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஐந்து மணியளவில் சென்றிருந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தியுள்ளனர். அத்துடன், கோயிலுக்குச் சொந்தமான தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பாக கேட்டறிந்துள்ளனர். அந்தக் கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என பூசகரிடம் வினவியுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக …
-
- 0 replies
- 544 views
-
-
இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப்பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட மே 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் நான்காவது ஆண்டில் நிற்கின்றோம். ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசு கவனம் செலுத்தியிருந்தது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஏக்கங்களையோ அல்லது எமது மக்களின் நீடித்து நிலைக்கக் கூடிய சுதந்திரமான வாழ்வுக்காக இறுதிவரை போராடிய போராளிகளின் கனவுகளையோ மறைக்க முடியாதபடி, உலகத்தின் கண்களுக்கு ஈழத்தமிழர்களின் அடிப்பட…
-
- 0 replies
- 415 views
-
-
(இராஜதுரை ஹஷான்) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் பௌத்த மதத் தலைவர்கள் ஒருமித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். தனி சிங்கள தலைவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க பௌத்த தேரர்கள் முன்னின்று செயற்பட்டுள்ளார்கள். எனவே அரசாங்கம் பௌத்த தேரர்களின் கருத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , தேசிய வளங்களை பாதுகாப்போம், பிற நாட்டவர்களுக்கு அவற்றை தாரைவார்க்க மாட்டோம் என்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல் பிரச்சாரமாக தேர்தல் காலங்களில்…
-
- 0 replies
- 295 views
-
-
தனித் தமிழீழம் அமைப்பதுதான் ஈழத் தமிழர்களுக்கான ஒரே அரசியல் தீர்வு என தெரிவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு தனது மகிழ்ச்சியினை தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 313 views
-
-
புனர்வாழ்வு பெற்று வரும் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறையின் மகளிர் பிரிவு தலைவி தமிழினி வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளார் என ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என புனர்வாழ்வு ஆணையாளர் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். தமிழினி என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் சிவகாமி தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் அரசியல் துறை மகளிர் பிரிவு தலைவியாக செயற்பட்டார். புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் இவரை இவரை விடுதலை செய்து, அனுதாப வாக்குகளின் மூலம் அரசாங்கம் வெற்றியீட்ட முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், அந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது என புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும், தமிழினி எதிர்வரும் ஜூலை மாதம் விடுதல…
-
- 0 replies
- 799 views
-
-
பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய எழுத்து மூலமான உறுதிமொழியையடுத்து சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்ட சுப்பிரமணியம் பரமேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் தனது போராட்டத்தை நிறுத்தியிருக்கின்றார். எனினும் அங்கு தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 581 views
-
-
அரச அடக்குமுறையின் வெளிப்பாடே பொத்துவில் – பொலிகண்டி பேரணி – பிமல் ரத்நாயக்க 3 Views அரசாங்கத்தின் அடக்கு முறைகளால் அதிருப்தியடைந்த தமிழ்மக்களின் உணர்வு ரீதியான வெளிப்பாடே பொத்துவில் – பொலிகண்டி வரையான பேரணியாகும். எனினும், இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்யும் சரத் வீரசேகர போன்றவர்கள், பேரணியில் கலந்து கொண்டவர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாமல் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று பேசுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை, என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத…
-
- 1 reply
- 498 views
-
-
வன்னியில் பகுதியான இரட்டைவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் கடுமையான மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக விசேட செய்தியாளர் கூறுகிறார். நேற்று மே 2 ஆம் திகதிமுதல் இந்த செய்தியை தட்டச்சுச் செய்யும் இந்த நேரம் வரை அந்த மோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே படையினரின் நிலைகளை ஊடறுத்து உட்சென்றுள்ள புலிகளின் அணியினர் இந்த தாக்குதலை திடிரென நேற்று இரவு ஆரம்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த மோதல்களின் அதிர்வுகள் தென்மராட்சியின் கரையோரம் வரை கேட்கக்கூடியதாக இருந்தது எனவும் கடலிலும் தரையிலும் இருந்து ஏவப்படும் எறிகணைகள் விடத்தல் தீவு, கெற்பலிப் பிரதேசங்களிலும் வடமராட்சியின் சில கரையோர…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவில், பொதுமக்களின் காணிகள் படையினரால் சுவீகரிக்கப்படுவது குறித்து ஆராய்வதற்கு ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு பணியக அதிகாரிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். மேலும் http://tamilworldtoday.com/?p=12062
-
- 0 replies
- 497 views
-
-
ஜனநாயகத்தை நேசிக்கும் தம்மை பயங்கரவாதியாக்கி, பயங்கரவாதியை ஜனநாயகவாதியாக சித்தரிக்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத்சாலி தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=12869
-
- 2 replies
- 563 views
-
-
இறுதிச்சமரில் ஆனந்தபுரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அந்த அமைப்பின் புலனாய்வுபிரிவின் அணியினரால் பலவந்தமாக பின் நகர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவல்கள் காலம் கடந்து வெளிவருகின்றதன் காரணம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனித்த பின்னர் மகிந்தராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் மத்தியில் இலங்கைப் புலனாய்வாளர்கள் தமது வேலைத்திட்டங்களை பலவழிகளில் செயற்படுத்திக் கொண்டிருந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி தொடர்பான ஆய்வுகளும் மற்றும் கலந்துபேசுதல் போன்ற விடயங்களை ஏன் வர்த்தக நிலையங்களில் பழப்புளி கேட்டுப்பெற்றுக் கொள்வதற்கு கூட அச்சமடையும் நிலையே அப்பொழுது காணப்பட்டது. ஆனால் தற்பொழுது நல்லா…
-
- 2 replies
- 442 views
- 1 follower
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மத்திப்பீட்டு அறிக்கை மிகவும் கவலையளிக்கிறது. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அறிக்கை மற்றும் அவரது உரையின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இலங்கையி…
-
- 3 replies
- 612 views
-
-
விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில் தீர்மானம் By சயனொளிபவன் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பதில் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் சரத்துகள் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட வரைவு …
-
- 0 replies
- 250 views
-
-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- முக்கியமான பிரச்சினை ஒன்றை நான் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கை ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் பண்டார தசநாயகே, மேஜர் ஹரீஸ் சந்திரா ஹெட்டியாராய்ச்சி, ஆகியோருக்கு நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 27-ந் தேதி தொடங்கிய பயிற்சியில் அவர்கள் இருவரும் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். இலங்கையில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு ஏவிவிட்டுள்ள கொடூரங்கள் நீடித்து வருவதால் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலை உள்ளது. இந்த உணர்வுப்பூர்மான நிலையில் இலங்கை ராணுவ அதிகாரிகளை அழைத்து பயிற்சி அளிப்…
-
- 1 reply
- 528 views
-
-
சுட்டெரிக்கும் வெயிலில் வீதியில் அமர்ந்து போராட்டம் : கேப்பபுலவில் 9 ஆவது நாளாக தொடர் போராட்டம் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது நிலங்களை விடுவிக்கக்கோரி தொடர்ந்து இன்று ஒன்பதாவது நாளாக போராடிவரும் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வீதியில் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உரியவர்களிடம் இருந்து தகுந்த பதில் கிடைக்கும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்களென அனைவரும் தமது சொந்த நிலத்தை கேட்டு இன்று ஒன்பது நாட்களாக போராடிவருகின்றனர். http://www.virakesari.lk/article/16381
-
- 6 replies
- 462 views
-
-
இலங்கை பிரச்சனை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை இலங்கை பிரச்சனை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ''சிங்கள இன வெறியர்களின் கொலை வெறித்தனமும், பிடிவாதப்போக்கும், சர்வதேச சமூகத்திற்கு கட்டுப்படாத நடவடிக்கைகளும் மிகுந்த அச்சத்தையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த நிலையில் இந்திய அரசின் அதிகார வர்க்கம் இதனை கண்டும் காணாமல் மெத்தனமாக இருப்பதும், வேடிக்கை பார்ப்பதும் சகித்துக்கொள்ள முடியாததாக உள்ளது. ஈழத்தமிழர்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்க சிங்கள அரசுக்கு துணை நிற்போம் என்று…
-
- 2 replies
- 1.4k views
-