ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
(பெரியபோரதீவு,காங்கேயனோடை நிருபர்கள்) 18 வருடங்களுக்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ இனரால் மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில் வைத்துக் கடத்தப்பட்ட ஹையேஸ் வேன் கொழும்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சமயம் ஏறாவூர் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எஸ்பி. பிரேமதிலக்க தெரிவித்தார். கம்பஹா - வெலிவேரியா பகுதியில் பாதையோரத்தில் வாகன விற்பனைச் சந்தையில் விற்பனைக்கிடப்பட்டிருந்த சமயம் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. வாகனத்தை விற்பனைக்கு வைத்திருந்தவர், வாகனப் பதிவுப் பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, வாகனத்தை விற்றதாகக் கூறப்படும் நபரை பொலிஸார்…
-
- 2 replies
- 638 views
-
-
அனுராதபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா வான் படையின் 18 வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ 6.6 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன விவரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அரசமைப்பின் 18, 19 ஆவது திருத்தங்களை முற்றாக நீக்குவது சிறந்ததென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டம், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/18-19ஆவது-திருத்தங்களை-நீக்குவது-நல்லது/175-234492
-
- 2 replies
- 559 views
-
-
தீபம் டிவி தாயக செய்திகள் 18.01.09 மதியம் ஒளிபரப்பானது. நன்றி http://eelaman.net/
-
- 0 replies
- 1.9k views
-
-
180 சிங்களக் குடும்பங்கள் மீள்குடியமர யாழ்.வந்தன. காணிகள் தருமாறு அரச அதிபருக்கு மனு: திரும்பப் போவதில்லை எனவும் தெரிவிப்பு முப்பது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்வதற்கென 180 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் வருகை தந்துள்ளனர். நகரில் உள்ள ரயில் நிலையத்திலும் வேறுபல இடங்களிலும் தற்காலிக மாகத் தங்கி உள்ள இவர்கள் தம்மை நிரந்தர இடம் ஒன்றில் குடியமர்த்துமாறு அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தரமாகக் குடியேறாமல் திரும்பப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். 1980ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தக் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போதும், அவர்களுக்கான நிரந்தர இருப்பிடங்கள் எவையும் இருக்கவில்லை. வாடகை வீடுகளிலேயே தங்கி இருந…
-
- 1 reply
- 586 views
-
-
180 நாள்களுக்குள், 53 பேர் மட்டு.வில் விபத்தில் சாவு. 180 நாள்களுக்குள் வீதி விபத்துக்களினால் மட்டக்களப்பில் 53 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகா ரசபை மட்டக்களப்பு மாவட்ட நிறை வேற்றுப் பொறியியலாளர் என். சசிநந்தன் தெரிவித்துள்ளார். மே 4 ஆம் திகதியிலிருந்து 10 ஆம் திகதி வரை வீதிப்பாதுகாப்பு வாரம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. அதற்கமைய கடந்த 6 ஆம் திகதி மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகத்தில் இதன் ஆரம்பவிழா கொண்டாடப்பட்டது. இதன்போது, வீதிகளில் பயணிக்கும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டியுள்ள வீதிச் சட்டங்களில்பின் பற்றப்பட வேண்டியுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்…
-
- 0 replies
- 356 views
-
-
180 பேர் உயிரிழப்பு 110 பேரைக்காணவில்லை ஐந்தரை இலட்சம் பேர் பாதிப்பு 76 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம் தொடர்ந்தும் இயல்பு நிலை பாதிப்பு வெள்ள நீர் வழிந்தோட ஆரம்பம் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் (ஆர்.யசி,எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் தொடரும் மோசமான காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தில் சிக்குண்டு பலியானோரின் எண்ணிக்கை 180 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 110 பேர் காணாமல்போயுள்ளனர். அத்துடன் அனர்த்தங்களில் 1 இலட்சத்து 53 ஆயிரத்து 303 குடும்பங்களை சேர்ந்த 5 இலட்சத்து 88 ஆயிரத்து 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 18,845 குடும்பங்களை சேர…
-
- 0 replies
- 777 views
-
-
180 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் தற்போது தடுப்புக் காவலில் உள்ள 500 முன்னாள் புலிகளில் 320 பேர் மட்டுமே புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர். எஞ்சிய 180 போராளிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: போரின் முடிவில் 12,000 விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். இவர்களில் 11,500 முன்னாள் போராளிகள், பல்வேறு கட்டங்களாகப் புனர்வாழவு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது 500 பேர் மட்டுமே தடுப்புக்காவலில் உள்ளனர். இவர்களில் 320 பேருக்கு நீண்டகாலப் புனர்வாழ்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிற…
-
- 1 reply
- 657 views
-
-
[size=4]யாழிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸில் நடத்துனருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக பஸ்ஸிலிருந்து விழுந்து இளைஞரொருவர் மரணமாகியுள்ளார். நேற்றிரவு யாழ். பஸ்தியான் சந்திக்கருகில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.[/size] [size=4]கிளிநொச்சி, ஜெயபுரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 25) என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார். இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]கொழும்பு செல்லும் பஸ்ஸில் ஏறி வவுனியா செல்வதற்கு இளைஞர்கள் டிக்கெட் எடுத்துள்ளனர். 180 ரூபா பெறுமதியான டிக்கெட்டை 250 ரூபாவுக்கு நடத்துனர் கொடுத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கும் நடத்துனருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.[/size] [size=4]இ…
-
- 6 replies
- 663 views
-
-
182 தொண்டராசிரியர்களுக்கு வடக்கில் நிரந்தர நியமனம் கொழும்புக் கல்வி அமைச்சு அனுமதி Share வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களில் நிரந்தர நியமனம் வழங்க தெரிவாகிய 182 பேரின் பெயர்ப் பட்டியல் நேற்றைய தினம் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு கிடைத்தது. வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களிலும் தற்போது தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும் நோக்கில் கொழும்பு கல்வி அமைச்சால் நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டது. நேர்முகத் தேர்வில் ஆயிரத்து 44பேர் பங்கு கொண்டிருந்தனர். …
-
- 0 replies
- 467 views
-
-
183 கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டு - சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் யாழ். மேல் நீதிமன்றால் நிராகரிப்பு 183 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை உைடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவரின் பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்றும் நிராகரித்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாவனை குறைவடைந்து வரும் இந்தத் தருணத்தில் சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் கட்டளையிட்டார். பர…
-
- 0 replies
- 255 views
-
-
வியாழக்கிழமை, அக்டோபர் 7, 2010 முப்பது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்வதற்கென 180 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் வருகை தந்துள்ளனர். நகரில் உள்ள பழைய ரயில் நிலையத்திலும் வேறுபல இடங்களிலும் தற்காலிக மாகத் தங்கி உள்ள இவர்கள் தம்மை நிரந்தர இடம் ஒன்றில் குடியமர்த்துமாறு அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தரமாகக் குடியேறாமல் திரும்பப் போவதில்லை என்றும் அவர்கள் கச்சேரியில் பணியாளர்களுடன் நச்சரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 1980ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தக் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போதும், அவர்களுக்கான நிரந்தர இருப்பிடங்கள் எவையும் இருக்கவில்லை. வாடகை வீடுகளிலேயே தங்கி இருந்துள்ளனர். இவர்களை மீளக்குடியமர்த்துவது தொடர…
-
- 0 replies
- 879 views
-
-
184 பாடசாலைகள் உள்ள வவுனியா மாவட்டத்தில் மட்டும் 66 மதுபான விற்பனைக் கூடங்கள் உள்ளதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் உள்ள இரு கல்வி வலயங்களிலும் மொத்தம் 184 பாடசாலைகள் உள்ளன. ஆனால் இங்கு மொத்தமாக 66 மது விற்பனைக்கூடங்கள் இயங்குகின்றன .இவ்வாறு இயங்கும் குறித்த 66 மது விற்பனை மையங்களிலும் மதுபானச்சாலைகள் வகையில் 14 உள்ளன. அதேபோன்று , 11 ரெஸ்ரூரன்ட்களும் இயங்குகின்றன. இவற்றிற்கு அப்பால் உள்ளூர் கள்ளுத் தவறனைகள் 41ம் இயங்குவதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 89 ஆயிரம் மக்கள் தொகையினைக் கொண்ட இம் மாவட்டத்தில் மொத்தமாக 184 பாடசாலைகளும் சகல தரங்களையும் உடைய 14 வைத்தியசா…
-
- 0 replies
- 440 views
-
-
184 பேர் படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டானில் பாரிய மனிதப் புதைகுழி; இன்றும் பல சாட்சிகள் உள்ளன சத்துருக்கொண்டான் படுகொலை நடைபெற்ற இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில்.1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் பனிச்சையடி கொக்குவில் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் 184 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இலங்கை ராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் இந்த படுகொலை செய்யப்பட்டது. இந்த படுகொ…
-
- 0 replies
- 141 views
-
-
184பேர் பலியெடுக்கப்பட்ட சந்துருக்கொண்டான் படுகொலை! 1990ஆம் ஆண்டு. புரட்டாதி 9ஆம் திகதி. வடகிழக்கே சோகத்தில் மூழ்கிய நாள். வந்தாருமூலைப் பல்கலைக்கழகத்தில் 158பேர் பலியெடுக்கப்பட்டு நான்கு நாட்கள்தான். இலங்கை அரசின் திட்டமிட்ட அடுத்த இனப்படுகொலை கிழக்கை மட்டக்களப்பை உலுக்கியது. மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது சத்துருக்கொண்டான் பிரதேசம். ஊறனி, பிள்ளையாரடி, பனிச்சையடி முதலிய கிராமங்களை உள்ளடக்கியது சத்துருக்கொண்டான். ஒரு ஞாயிற்றுக்கிழமை. நாலு அணியிருக்கும். ஊரை இராணுவம் சுற்றி வளைத்தது. 5.30மணிக்கு மணிக்கு வின்சன் டிப்போ தோட்ட இராணுவமுகாமில் கூட்டம் ஒன்று இருக்கிறது அனைவர…
-
- 4 replies
- 673 views
-
-
186347 புலிகள் பலி - புலிகளிற்கே சிறீலங்கா சொந்தம் என்கிறார் சிங்கள ஆய்வாளர். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 30 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ கடந்த 1983ம் ஆண்டு காலத்தில் இருந்து இன்றுவரை சிறிலங்கா அரச தரப்பு செய்திகள் சிங்கள ஊடகங்கள் லங்க புவத், அரச பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் , இராணுவ பேச்சாளர்கள், பாராளுமன்ற பதிவேடு, என்பவற்றினை தினசரி பதிவிற்கு உட்படுத்திவரும் தென் இலங்கை பந்தி ஆய்வாளரின் கணக்கெடுப்பின்படி நேற்றய இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவின் பத்திரிகையாளருக்கு கொடுத்த செய்தியுடன் இதுவரை தனது தொகுப்பை கணக்கிட்டபோது சிறிலங்கா அரசால் இதுவரை 186347 புலிகள் கொல்லபட்டுள்ளனர். இந்த கணிப்பின்படி தற்கரீதியாக தமிழர்களே சிறீலங்கா நாட்டின் சனத்தொகையில் பெரும்பாண்மையான…
-
- 7 replies
- 2.4k views
-
-
1871இன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் வடக்கு, கிழக்கு தமிழர் இருப்பு இலங்கையின் குடிசனமதிப்பீடு அதாவது மக்கள் தொகைக் கணிப்பீடு முதன்முதலில் 1871ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இலங்கை இருபத்தைந்து மாவட்டங்களாக, நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முழு இலங்கையையும் 1815இல் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஆங்கிலேயர், நிர்வாக வசதிக்காக நாட்டை பதினெட்டு மாவட்டங்களாகப் பிரித்தனர். ஆங்கிலேயரால் பதினெட்டாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் இன்று இருபத்தைந்தாக அதிகரித்துள்ளது. வடமாகாணத்தில் இன்றுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மூன்றாக இருந்துள்ளன. யாழ்ப்…
-
- 0 replies
- 900 views
-
-
1894 சுற்றுலாப்பயணிகளுடன் கொழும்பு வந்தடைந்த அதிசொகுசு சுற்றுலாப்பயணக் கப்பல் Published By: DIGITAL DESK 5 11 MAR, 2023 | 03:41 PM (எம்.மனோசித்ரா) சுற்றுலாப்பயணிகள் 1894 பேர் மற்றும் 906 ஊழியர்களுடன் பிரின்ஸஸ் குரூஸ் அதிசொகுசு சுற்றுலாப்பயணக் கப்பலொன்று சனிக்கிழமை (11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பல் தாய்லாந்திலிருந்து வருகை தந்துள்ளது. இக்கப்பலில் வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகளில் 159 பேர் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியுள்ளதோடு , அவர்கள் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேசங்களுக்கு செல்லவுள்ளனர். குறித்த கப்பல் சனிக்கிழமை மாலை கொழும்பு துறைமுகத்திலிருந்து ட…
-
- 1 reply
- 458 views
- 1 follower
-
-
எதிர்வரும் 18ஆம் திகதி வரை இலங்கையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அமெரிக்க தேசிய வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த மையம் கடந்த 04ஆம் திகதி இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. படங்கள் : http://tamilworldtoday.com/?p=15275
-
- 0 replies
- 398 views
-
-
18ஆவது திருத்தச்சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐ.நா கோரிக்கை! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட 18வது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்யுமாறு ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையொன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், 18வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களின் சூத்திரதாரிகள் பாதுகாக்கப்படுவதற்கு இந்த சட்டதிருத்தமே வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நீதித்துறை அலுவலர்கள் நிறைவேற்று அதிகாரம் அல்லது நாடாளுமன்றம் ஆகியவற்றின் அழுத்…
-
- 0 replies
- 333 views
-
-
அன்று மகிந்த ஆட்சியிலே 18 ஆம் திருத்தம் என்ற அரசியலமைப்பு சட்ட திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக கையை தூக்கிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், இன்று 18 ஆம் திருத்தத்தை இல்லாது ஒழிக்கும் 19 ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக கையை உயர்த்தி ஆதரவளித்து பாவமன்னிப்பு பெற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் நடைபெற்ற தந்தை செல்வா நற்பணி மன்ற நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, நல்லாட்சி, நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், பொலிஸ் காவல்துறை சுதந்திரம் ஆகிய பல விடயங்கள் நமது ஆட்சியின் மூலம் மீண்டும் இந்த நாட்டில் இப்போது கொண்டு வரப்பட்டுள்ளன. இது போதாது. இந்…
-
- 1 reply
- 1.8k views
-
-
[Friday, 2011-09-09 11:08:49] அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 17ஆவது திருத்தத்தை அமுல்படுத்தியிருந்தால் நாடு முகம் கொடுக்கும் சர்வதேச அழுத்ததிலிருந்து 50 வீதமான பிரச்சிரனைக்கு தீர்வு கண்டிருக்கலாம். அதற்காக ஜெனிவாவிற்கு ஓட வேண்டிய தேவையில்லை என்று எதிர்கட்சித் தலைவரும் ஐ.தே.க தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 18ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை நாம் எதிர்க்கின்றோம். நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் இவை நிறைவேற்றப்படவில்லை. இன்று தேசிய துக்தினம். அதேபோல இன்று (நேற்று) �தேசிய துக்க நாள்� "ஜனநாயக மண்சரிவு" சுயதீனதிற்கான அச்சுறுத்தலாகும் என்றும் அவர் சொன்னார். குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின…
-
- 0 replies
- 841 views
-
-
அரசியலமைப்பின் 18ஆவது திருத்திற்கு வாக்களித்தன் மூலம் ஏற்பட்ட விளைவுகளையும் பலா பலன்களையும் அனுபவித்து விட்டோம். அவ்வாறு அச்சட்டத்திற்கு ஆதரவு அளித்தமைக்கு இன்று வருந்துகின்றேன் என்று அமைச்சர் ஹக்கீம் இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 19 ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்து அது நிறைவேற்றப்பட்டதன் மூலம் இன்றுவரை நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றோம். ஊழல் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டன. மத சார்பான பிரச்சினைகள் தூண்டிவிடப்பட்டன. தவறு இழைத்தவர்களுக்கு மேற்படி சட்டத்தின் ஊடாக பாதுகாப்பு வழங்கப்பட்டது. எனவே 18க்கு வாக்களித்தமை…
-
- 4 replies
- 579 views
-
-
18ம் சரத்து The 18th Amendment of the Constitution of Sri Lanka
-
- 1 reply
- 993 views
-
-
18ம் திருத்தச் சட்டம் ஒரே இரவில் நிறைவேற்றப்பட்டது! [ சனிக்கிழமை, 09 சனவரி 2016, 12:27.53 AM GMT ] 18ம் திருத்தச் சட்டத்தை கடந்த அரசாங்கம் ஒரே இரவில் நிறைவேற்றியதாக பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் முழு நாடாளுமன்றை தெளிவுபடுத்தி மக்களின் அனுமதியுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும். கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கம் செயற்படாது. கடந்த அராங்கம் ஜனநாயக விரோதமான முறையில் செயற்பட்டிருந்தது. எனினும், தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அவ்வாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயக விரோத தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் தொடர்பில் பல்வேறு…
-
- 0 replies
- 351 views
-