ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசபடையினருக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனழதவுரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு வலியுறுத்த தமக்கு பிரதான உதவியாளர் ஒருவர் கிடைத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதற்கான பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ள ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்காவின் மனித உரிமை கவுன்ஸில் ஜெனீவா தூதுவர் ஈலின் டொனஹோ தெரிவித்துள்ளார். நாங்கள் ஒரு குறியீட்டு வாக்காக இதனை யோசிக்க கூடாது, என இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் என்ற கருத்துக்கு பதிலளித்துள்ள அமெரிக்காவின் ஜெனீவா தூதுவர…
-
- 0 replies
- 866 views
-
-
நாடு பூராகவும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய கோசம் எழுப்பப்பட்டு வருகின்றது. ஒரு பக்கம் கோத்தாபாய ராஜபக்ஸவின் பெயரும் இன்னொரு பக்கம் சஜித் பிரேமதாசவின் பெயரும் முன் மொழியப்படுகின்ற போதும் இன்னும் பல பெயர்காலும் முளைக்கின்றது. ஆனாலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வரும் போது தமிழ் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் ஜோசவாஸ் நகர் மற்றும் ஜோசப் நகர் ஆகிய இரு மாதிரிக் கிராமங்களில் உள்ள வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று (8) இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்ற…
-
- 0 replies
- 525 views
-
-
சிறிலங்காவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் வடமேல் மாகாண சபையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா அணியும் ஒன்றுசேர முயற்சி! ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா அணியின் மட்டு.-அம்பாறை மாவட்ட தலைவர் இரா.துரைரெட்னத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (24) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியை ஒருங்கிணைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டு மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். இந்த சந்திப்பில் அக்…
-
- 5 replies
- 851 views
-
-
இலங்கையில் தடைச்செய்யப்பட்ட அமைப்பான ஜமாஅத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த மூவரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் பயங்கரவாதி சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/62702
-
- 1 reply
- 621 views
-
-
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள் சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். பத்தேகமவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது கவனித்துக்கொள்வது மக்களின் வேலையில்லை என தெரிவித்துள்ள அவர் சுற்றுநிரூபங்கள், நாடாளுமன்ற சட்டங்கள் அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசேட சலுகைகள் சிறப்புரிமைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அந்த சுற்றுநிரூபங்களில் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/1…
-
- 1 reply
- 291 views
- 1 follower
-
-
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, புதிய இரத்திரனியல் அடையாள அட்டைகளில் தனி நபர்களை அடையாளப்படுத்தும் பயோ மெட்ரிக் (Biometric) அதாவது கைவிரல் அடையாளம், விழித்திரை, குருதி பிரிவு உள்ளடக்கப்படுமென்று ஆட்பதிவு திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://tamilwin.com/article/electronic-national-identity-card-begin-december-1730789508
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
பாரிய நெருக்கடிக்குள் படை நகர்வுகள் -விதுரன்- வன்னிக்கள முனையில் கடந்த சில தினங்களாக மோதல்கள் சற்றுத் தணிந்துள்ளன. எதிர்பார்த்தபடி முன்நகர்வுகளை மேற்கொள்ள முடியாத நிலையிலும் விடுதலைப் புலிகளின் கடுமையான பதில் தாக்குதல்களால் படையினர் பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலையிலும் வன்னிக்கள முனையில் பாரிய முன்நகர்வு முயற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. வன்னிக்கள முனையில் பாரிய அளவில் படைநகர்வு, சிறு சிறு குழுக்களாகச் சென்று தாக்குவதென்று படையினர் தங்கள் தந்திரோபாயங்களையும், உத்திகளையும் மாற்றி மாற்றி அமைக்கின்றபோதும் விடுதலைப் புலிகளும் அதனை மிக நுட்பமாக எதிர்கொண்டு அவர்களது தந்திரோபாயங்களுக்கும், உத்திகளுக்கும் பதிலடி கொடுக்கின்றனர். இது படை…
-
- 1 reply
- 2.5k views
-
-
முஸ்லிம் சமூகத்தை பெரும்பான்மை சமூகம் சரியாக புரிந்துகொள்ளவில்லை: நீதியமைச்சர் முஸ்லிம் சமூகம் அரசியல் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தாத சமூகமாக இருப்பினும் பெரும்பான்மை சமூகம் முஸ்லிம் சமூகத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கெலிஓயா கலுகமுவ தரீக்காக்கள் சம்மேளனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடத்திய 'வாழ்வோரை வாழ்த்துவோம்' பெருவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 'இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் தனது வரலாற்றில் ஆயுதம் ஏந்தாத அரசியல் போராட்டத்தையே புரிந்து வருகின்றது. ஆனால், பெரும்பான்மை சமூகம் இதுவரை முஸ்லிம் சமூகத்தை சரியாகப் புரிந்துகொள்ளவி…
-
- 10 replies
- 732 views
-
-
மகிந்தவின் முட்டாள்த்தனமான போரினால் என்றேனும் ஒருநாள் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் கொசோவோவாக பிரியும் என்று சிங்கள வார ஏடான "இருதின" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.9k views
-
-
சர்வதேச தொண்டு நிறுவனங்கள்கூட தலையாட்டிப் பொம்மைகளாக இசைந்து சென்றமை கடந்த கால அரசிற்கு மேலும் வலுச்சேர்த்தது : வடக்கு முதல்வர் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அரச பயங்கரவாத செயற்பாட்டு நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்பவே அரச சார்பற்ற நிறுவனங்கள் கடமையாற்ற வேண்டிய ஒரு கட்டுப்பாடு அல்லது பயமுறுத்தல் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு முகம் கொடுக்கத் தேவையற்ற அல்லது மறுத்துரைக்கக்கூடிய சக்திகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நிறுவனங்களும் , சர்வதேச தொண்டு நிறுவனங்களுங் கூட தலையாட்டிப் பொம்மைகளாக அப்போதைய அரசாங்கத்திற்கு இசைந்து சென்றமை அரசுக்கு மேலும் வலுவூட்டியது இவ்வாறு வடக்கு முதல்வர் சி.வி விக்கினே…
-
- 4 replies
- 670 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு(Ramanathan Archchuna) எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடானது இன்றையதினம்(20.11.2024) சமூக செயற்பாட்டாளர் எல். எம்.ஏ.ஜி அதிகாரி என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகப்புத்தக நேரலை நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் வெளியிட்ட முகப்புத்தக நேரலை தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த காணொளியில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கருத்தை தெரிவித்ததாகவும், மேலும் அவரது முக நூலில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு புகைப்படம் ஆகியவை தொடர்பாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். https://tam…
-
-
- 49 replies
- 2.8k views
- 2 followers
-
-
தமிழீழத்தை இருட்டாக்கிய சிங்கள வெறியருக்கு தமிழக மின்சாரம்! இலங்கை தமிழீழப் பகுதிக்குக் கடந்த 25 ஆண்டுகாலமாக மின்சாரம் அளிப்பதை சிங்கள அரசு அறவே நிறுத்திவிட்டது. இரவு நேரங்களில் தமிழ் மக்கள் சொல்லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். மண்ணெண்ணெய் விளக்குகள் எரிப்பதற்கு மண்ணெண்ணெயும் வழங்க சிங்கள அரசு மறுத்து வருகிறது. தமிழ்க் குழந்தைகளின் படிப்பு இதன் விளைவாகக் கெடுகிறது. மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவர்கள் தடுமாறுகிறார்கள். நோயாளிகள் படும் துயரம் அளவுகடந்ததாகும். தமிழ்நாட்டிலும் மின்சாரப் பற்றாக்குறையினால் மக்கள் படாதபாடுகின்றனர். விவசாயிகளுக்கு போமான அளவு மின்சாரம் கிடைக்காததினால் விவசாயம் பெரும் பாதிப்புக்க…
-
- 0 replies
- 3k views
-
-
தமிழீழம் மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம், தமிழ் வித்தியாலயத்தில் 32 வருடங்களின் பின்னர் சதாதேவன் தர்மிதா என்ற மாணவி ஒன்பது பாடங்களிலும் ஏ. தரச்சித்தி பெற்றுள்ளதாக அதிபர் சி.பேரின்பராசா தெரிவித்தார். பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட இப்பாடசாலையில் இருந்து கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு கடந்த வருடம் தோற்றிய 28 பேரில் 20 பேர் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார். அத்துடன் கடந்த வருடங்களை விடவும் இந்த வருடம் சிறந்த பெறுபேறு தமது பாடசாலைக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை யாழ் மாவட்டம் தற்போது கல்வியில் பிந்தங்கிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈழதேசம்
-
- 2 replies
- 631 views
-
-
புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் வரவேற்கப்பட வேண்டியது – HRW:- 29 நவம்பர் 2015 புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் வரவேற்கப்பட வேண்டியது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்ட 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 424 தனி நபர்களை கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தடை செய்திருந்தது. எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமயிலான புதிய அரசாங்கம் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த அமைப்புக்களில் எட்டு அமைப்புக்களையும் 267 நபர்களையும் தடைப் பட்டியலிலிருந்து நீக்கியது. இந்த நடவடிக்கையானது வரவேற்கப்பட வேண்டியது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய …
-
- 1 reply
- 659 views
-
-
“தி டைம்ஸ் ஹையர் எடியுகேஷன்” (Annual Times Higher Education world rankings 2020 ) பத்திரிக்கை, உலகில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 92 நாடுகளில் இருந்து 1400 பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பட்டியலில் உலகிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக 4 ஆவது தடவையாக முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 3 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. இந்நிலையில், முதல் பத்து இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் வருமாறு, 1. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் - பிரித்தானியா …
-
- 1 reply
- 569 views
-
-
http://youtu.be/gvzBKKFDFb4 இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். அத்துடன் இன்றைய தினம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவைச் சந்தித்துள்ள குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்டதவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த குழுவினர் நாடாளுமன்றத்திற்கு இன்று விஜயம் செய்து அங்கு சபாநாயகர் சமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. http://www.globaltam...IN/article.aspx
-
- 4 replies
- 435 views
-
-
மன்னார் முன்னரங்க நிலைகளில் புலிகளால் விதைக்கப்பட்ட பொறிவெடிகளில் சிக்கி ஏராளமான இராணுவத்தினர் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர
-
- 7 replies
- 2.9k views
-
-
கொழும்பு மாநகர சபையினட எதிர்க்கட்சித் தலைவர் மிலிந்த மொரகொட அந்த பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் அவர் எதிர்வரும் 25 ஆம் திகதி தனது ராஜினாமா கடிதத்தை கொழும்பு மாநகர சபையில் கையளிக்க உள்ளதாகவும் தெரிவருகிறது. உலக வங்கியில் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளதை அடுத்தே மிலிந்த மொரகொட இந்த பதவியில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொரகொட பதவியை ராஜினாமா செய்ய உள்ளதை அடுத்து, அந்த பதவியில், அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் மஹ்ருப் நியமிக்கப்பட உள்ளார். http://www.globaltam...IN/article.aspx
-
- 2 replies
- 641 views
-
-
அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் மீண்டும் நாடகம் ? [ Wednesday,9 December 2015, 03:26:11 ] பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலை புலிகள் இயக்க சந்தேகநபர்கள் 20 பேரை விடுதலை செய்ய முடியுமா என்பது குறித்து சட்டமா அதிபர் ஆராய்ந்துவருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் உரிய அதிகாரிகளை சந்தித்து இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பாரிய பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் குற்றஞ்சாட்டுக்களில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின…
-
- 0 replies
- 479 views
-
-
கோட்டாவிற்கு எதிராக களமிறங்குகிறார் மகேஸ் சேனநாயக்க – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது! தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இடம்பெற்றது. இதன்போதே இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாஸவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும், தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பின் ஊடாக அ…
-
- 8 replies
- 846 views
-
-
தமிழர்கள் மீது இலங்கையரசு தாக்குதல்களை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையரசுக்கு எந்தவித இராணுவ உதவிகளையும் இரகசியமாகவும் வழங்கக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா, மாநிலங்களவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து பேசினார். இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை அந்நாட்டு ராணுவம் அதிகரித்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. அந்நாட்டு ராணுவத்தின் அத்துமீறல்களை கண்டித்து இந்திய அரசு ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் ரகசிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்விஷயத்தில் மத்திய அரசின் கொள்கையை விளக்க வேண்டும் என்றார் ராஜா. இலங்கை ராணுவத்துக்கு ரகசியம…
-
- 7 replies
- 1.8k views
-
-
2025 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி! இலங்கையின் வடக்கில் உள்ள மிகப் பெரிய நானாவித வர்த்தக கண்காட்சியாகக் குறிக்கப்படும், யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 15ஆவது வருடமாக நடைபெறும் இந்த கண்காட்சி ஜனவரி மாதம் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 'வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்' என்ற தொனிப் பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வில், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் முயற்சியாளர்கள், வர்த்தக வல்லுனர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைத்து பொருளாதார நிகழ்வாக நடைபெறவுள்ளது. குறிப்பாகப் பிராந்தியத்தின் பொருளாதார ஆற்றல் மற்றும் செழிப்பான தொழில்துறை என்…
-
- 0 replies
- 629 views
-
-
தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து December 31, 2024 “தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக உள்ளமையால் அந்தக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது.” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மேலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையைத் தொடர்கின்ற வகையில் கட்சியின் முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பைச் சரியாகப் புரிந்துகொண்டு, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரின் ஆதிக்கத்தைக் கட…
-
-
- 16 replies
- 1.3k views
-
-
ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை! இஸ்லாம் மததத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு மேலதிகமாக அவருக்கு 1500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2016 ஜூலை 16 அன்று, கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்… அதை ஒழிக்க வேண்டும்” என்று அவர் கூறினார். இது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கை என்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர். https://athavannews.com/2025/1415834
-
-
- 14 replies
- 649 views
- 1 follower
-