Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தத்திற்கு பின்பு இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பில் மிகவும் நெருங்கிய ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. நேற்று தென் கொரிய தலைநகரம் சியோல் இல் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இற்கும் தென்கொரிய வெளிநாட்டு அமைச்சர் சுங் ஹுவானுக்கும் இடையில் நிகழ்ந்த கலந்துரையாடலின் போதே தென் கொரிய வெளிநாட்டமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விசேடமாக வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் வலுசக்தி மற்றும் நீர்பாசன துறை அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொரிய நாட்டு முதலீட்டாளருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தென் கொரிய வெளிநாட்டமைச்சர் இலங்கை மேற்கொள்ளும் அப…

    • 31 replies
    • 2.1k views
  2. ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அவர் இந்து நாளிதழின் ஆசிரியர், ஈழப்பிரச்சனைப் பற்றி தவறான தகவல்களை எழுதுகிறார் என்பது மட்டும் தானே ? என்.ராம் ஏன் ஈழப் பிரச்சனைப் பற்றிய தவறான தகவல்களை எழுத வேண்டும் ? அதுவும் ஈழ விடுதலையை வெறித்தனமாக எதிர்த்து சிறீலங்கா ரத்னாவாக வேண்டும் ? கடந்த ஆண்டு என்னுடைய ஒரு கட்டுரையின் மறுமொழியிலே அது பற்றி கூறியிருந்தேன். "ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியம் உள்ளது இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேசியது, அதன் பிறகு அவர் ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களை சந்தித்து பேசியது, ராஜீ…

  3. இலங்கை அரசு சிங்கள மேலாதிக்க உணர்வு காரணமாக யுத்தத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தமிழ் மக்களை அடக்குவதற்கு முயன்றால் சர்வதேச உணர்வு இயல்பாகவே தமிழ் மக்கள் பக்கம் திரும்புமென இந்திய அமைதிப்படை காலத்தில் இலங்கையில் பணியாற்றிய முன்னாள் இந்தியப் புலனாய்வுத் துறை அதிகாரி கேணல் ஹரிகரன் தெரிவித்தள்ளார். கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் விடுதலைப்புலிகள் போன்ற தனிநாட்டிற்காகப் போராடும் கெரில்ல இயக்கங்கள் மீது எத்தகைய செல்வாக்கைச் செலுத்தும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இப்படித் தெரிhவித்துள்ளர். விடுதலைப் புலிகளும் , தமிழ் அரசியல் வாதிகளும் முன்வைக்கும் தமிழீழக் கோரிக்கையிலிருந்து கொசோவோவின் ஒருதலைப்பட்ச சுதந்திப் பிரகடனம் முற்றிலும் மாறுபட்டது எனவும் அவர் கு…

  4. இங்கிலாந்தில் 20/20 கிரிக்கட் சுற்றுப் போட்டிக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி ஓக்ஸ்பேட் நகருக்கான பயணத்தை தாம் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பிரித்தானியாவில் இயங்கும் டைம்ஸ் சஞ்சிகையும், அதன் இணையத்தளமும், கடைசி யுத்தத்தில் இலங்கையில் 20,000 பேர் இறந்துள்ளதாக அறிவித்திருப்பது, தமக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளனர். அத்துடன் இந்த செய்தியானது தமது அணியின் பாதுகாப்பை பெரிதும் பாதித்திருப்பதாகவும், இங்கிலாந்தில் தமக்கு போதியளவு பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் சமீபத்தில் பாக்கிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கிச்…

    • 12 replies
    • 2.1k views
  5. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவு: டிஜிபி எச்சரிக்கை சென்னை: தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பொதுக் கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்டவை நடத்தினால் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி ராஜேந்திரன் எச்சரித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் கூட்டங்கள், பேரணிகள் நடத்தியுள்ளனர். முதல்வர் கருணாநிதியும் இரங்கல் கவிதையை வெளியிட்டிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முத்தாய்ப்பாக, கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில், முதல்வர் கருணாநிதியை விமர்சித்து மத்திய…

  6. ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்ப மறுப்பு: இந்திய அரசைக் கண்டித்து பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டம் [செவ்வாய்க்கிழமை, 5 யூன் 2007, 19:44 ஈழம்] [க.நித்தியா] யாழ்ப்பாணக் குடாநாட்டில் பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். சிறிலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வரும் யாழ்ப்பாணத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் போதிய உணவுப் பொருட்கள் இன்றி பட்டினியால் வாடி வருகின்றனர். பட்டினியால் வாடும் தமிழர்களுக்காக தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் …

  7. இரண்டு வாரங்களுக்கு முன்னர் 13ம் திருத்தமோ அல்லது 13 ப்ளஸ் என்ற அதற்கு மேல் செல்லுவதோ, எதுவென்றாலும், பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து பேசுங்கள், வராவிட்டால் எதுவும் கிடையாது, என்று சொன்ன அரசாங்கம், இன்று என்ன சொல்கிறது? 13ம் திருத்தத்தில் போலிஸ் அதிகாரத்தை தவிர ஏனையவற்றை அமுல் செய்ய தயார் என இந்திய அரசுக்கு செய்தி அனுப்புகிறது. இந்த இரண்டு வாரங்களுக்குள் என்ன நிகழ்ந்தது? பிரதமர் நரேந்திர மோடியின் மோடி மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் …

  8. 'யுத்தம் இடம்பெற்றால் குற்றச் செயல்கள் இடம்பெறுவதனை தவிர்க்க முடியாது' யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரண்டு தரப்பினருமே சர்வதேச சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ளது அதனால் அது பற்றி பேசுவது பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் நடத்தப்பட்டால் புலிகளக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் அரசாங்த்திற்கு எதிராக மட்டுமே விசாரணை நடத்துமாறு கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளினால் யுத்தத்தி…

  9. இலங்கை உட்பட உலக நாடுகளின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு உதவுவதற்காக உயர்மட்ட மத்தியஸ்தர் குழுவொன்றை ஐ.நா. அமைதிருக்கிறது. இந்த மத்தியஸ்தர் குழுவில் சர்வதேசத்தில் முன்னணியிலுள்ள நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். இதனை ஐ.நாவின் அரசியல் விவகாகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் பி.லின் பாஸ்கோ அறிவித்திருக்கிறார். இந்த மத்தியஸ்தர் குழுவானது ஐ.நாவின் அரசியல் விவாகாரத் திணைக்களத்தின் நடவடிக்ககைளுக்கு வலுவூட்டும என்று அவர் தெரிவித்திருக்கறார். இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளுக்கு உதவியளித்தல் மூலம் மோதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு இக்குழுவினர் அரசியல் விவகாரத்திணைக்களத்துக்கு உதவியளிப்பார்கள். யுத்த நிறுத்தம், நீதித்துறை மாற்றங்கள், அதிகாப்பகிர்வு…

  10. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்​டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்... மூவரும் எப்போது வேண்டுமானாலும் தூக்கு மேடையில் நிறுத்தப்படலாம்! 'மரண தண்டனையை பல்வேறு நாடுகள் ஒழித்துவிட்ட பிறகு, இந்தியா அதனைப் பின்​பற்ற வேண்டுமா?’ என்று மனித உரிமையாளர்கள் ஒரு பக்கம் கேட்​கிறார்கள். 'மூன்று தமிழர்கள் உயிரைப் பறிக்கலாமா?’ என்று தமிழின உணர்வாளர்கள் இன்னொரு பக்கம் கேட்கிறார்கள். இதற்கு மத்தியில் ஒரு குரல் வித்தியாசமாக ஒலிக்கிறது. ''ராஜீவ் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு, கொலைச் சதியில் சம்பந்தம் இல்லாதவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவது நியாயமா?’ என்பதுதான் …

    • 3 replies
    • 2.1k views
  11. இசைப்பிரியா எதிராக அரங்கேற்றப்பட்ட கொடுமைகள் கண்டிக்கதக்கதென இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மற்றும் சிறிலங்காவில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்க செயல் என்றார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன எனவும், மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையை இலங்கை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது ப…

    • 12 replies
    • 2.1k views
  12. நோர்வேயிலிருந்து திருமணத்துக்காக யாழ்.சென்ற குடும்பத்துக்கு கொழும்பில் நேர்ந்த பரிதாபம்!? திரு­ம­ணத்­திற்­காக நோர்­வே­யி­லி­ருந்து வருகை தந்த குடும்பம் தங்­கி­யி­ருந்த வெ ள்ள­வத்­தையில் உள்ள வீடொன்றில் 60 இலட்சம் ரூபா­வுக்கு அதி­க­மான பெறு­ம­தி­யு­டைய பணம் மற்றும் நகைகள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. இந்தச் சம்­பவம் வெள்ள­வத்தை பீற்­றர்சன் ஒழுங்­கையில் உள்ள தொடர்­மா­டி வீடொன்றில் நேற்று முன்­தினம் நள்­ளி­ர­வுக்குப் பின்னர் இடம்­பெற்­றுள்­ள­து. எதிர்­வரும் 20 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்தில் திரு­மணம் இடம்­பெ­ற­வுள்­ள­மை­யினால் நோர்­­வேயில் உள்ள மாப்­பிள்­ளையும் குடும்­ப­த்­தி­ன­ரு­மாக 13 பேர் கடந்த வாரம் இலங்கை வந்­துள்­ளனர். இவர்­களில் ஒரு பகு­தி­யினர் யாழ்ப் பாணம் சென்ற நி…

    • 26 replies
    • 2.1k views
  13. தமிழக உறவுகளே! இதையும் கொஞ்சம் பாருங்கள்! கொஞ்சமேனும் இரங்குங்கள்! இந்த காணொளியை காண்பதற்கு...

  14. கரும்புலிகளின் சீருடை அணிந்து புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் கைது; 15 பேருக்கு வலைவீச்சு: ‘படம்’ காட்ட முயன்றார்களாம்! January 28, 2019 விடுதலைப் புலிகளின் கரும்புலி படையணியின் கறுமையான வரி சீருடையுடன் புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர்களே கைதாகியுள்ளனர். வடக்கில் புலிகள் மீளக்கட்டியெழுப்பப்படுவதை போல தோற்றத்தை காண்பித்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதியை பெறவே இவர்கள் நாடகமாடியிருக்கலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர். தகவல் ஒன்றை அடுத்து, வீடொன்றை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். எனினும், பொலிசார் தேடிச்சென்றவர் தப்பிச் சென்றிருந்தார். அந்த வீட்டில் இருந்த கணினியை சோதனைக்குட்படுத்திய போது, …

    • 31 replies
    • 2.1k views
  15. December 29, 2018 “ஏக்கிய இராட்சிய” என்றால் ஒற்றையாட்சியா ? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சுமந்திரன், ஏக்கிய இராட்சி என்றால் ஒற்றையாட்சி இல்லை என தனது வியாக்கியானத்தை முன்வைத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், …

  16. இலங்கை இனப்பிரச்சினை, உள்நாட்டுப் பிரச்சினை, உள்நாட்டினுள்ளேயே பேசித் தீர்வு காணப்பட வேண்டுமென்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் சியாம் சரண். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், மீண்டும் ஞான உபதேசங்களை அள்ளிவிடத் தொடங்கியிருக்கிறார் இவர். மீண்டும் யுத்தம் வெடித்த 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்தவர். இழுபறிப்பட்டுச் செல்லும் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்த விவகாரத்துக்காக மன்மோகன் சிங்கின் பிரதிநிதியாக ஓடித்திரிந்தவர். இராணுவ நிர்வாகத்தின் கீழுள்ள ஆசிய நாடுகள் பலவற்றிற்கும் தூதுவராகவும் இருந்துள்ளார். இந்த வகையில் சியாம் சரணின் கருத்து, இந்திய மத்திய அரசினது கருத்து என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கப் போவத…

    • 8 replies
    • 2.1k views
  17. சிங்களவர்-தமிழர்களுக்கு இடையில் பேதத்தை ஏற்படுத்த சர்வதேச அமைப்புக்கள் முயற்சி: விமல் வீரவன்ச [ புதன்கிழமை, 21 சனவரி 2009, 03:08.15 AM GMT +05:30 ] சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் பேதத்தை ஏற்படுத்த சர்வதேச அமைப்புக்கள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது படையினர் மற்றும் பொதுமக்கள் பெரும் உள ரீதியான தாக்கங்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச நிறுவனங்கள் வெளியிடும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய நூலக கேந்திர மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விடுவிக்கப்பட்ட வடக்கு பிரதேச…

    • 0 replies
    • 2.1k views
  18. அதாவுல்லா அணிந்திருந்த உடையால் நாடாளுமன்றில் குழப்பம் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/09/Athaulla.jpg அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல். எம். அதாவுல்லா அணிந்திருந்த உடை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. அதாவுல்லாவை நாடாளுமன்றத்திலிருந்து நீக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எவ்வாறாயினும், உடையில் எந்த பிரச்சினையும் இல்லை என்று நாடாளுமன்ற செயலகம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்தது. இருப்பினும் அதாவுல்லாவின் உடையை தொடர்ந்து எதிர்த்த ஐக்கிய மக்கள் சக்தி வெளிநடப்பு செய்வதாகவும்…

  19. புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.! தனி ஈழம் கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போருக்கு பின்னர் முற்றாக அழிந்துவிட்டதாக சில கருதுகின்றனர். ஆனால், புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என தெரிவித்துள்ளார் ஈழத்து கவிஞரும், தமிழின உணர்வாளருமான காசி ஆனந்தன். இது தொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணலில், இறுதி கட்ட போருக்கு பின்னர் ஈழத்து மக்கள் எந்த நிலையில் இருந்தனரோ அதே நிலையில் தான் தற்போதும் அம்மக்கள் தங்களது தார்மீக உரிமைகளை இழந்தவர்களாக உள்ளனர். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள்ளாக அங்கே எம் உரிமைகளை மீட்டெடுக்காவிடில…

    • 14 replies
    • 2.1k views
  20. கலைஞருக்கு கடைசி வாய்ப்பு இது! [25 ஜனவரி 2009, ஞாயிற்றுக்கிழமை 1:45 மு.ப இலங்கை] இரையைச்சுற்றிய மலைப்பாம்பாய் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் மூன்று முதல் நான்கு லட்சம் வரை எண்ணிக்கையுடைய அப்பாவித் தமிழ் மக்களை இரத்த வெறி பிடித்த கோரயுத்தம் குரூரமாக சுற்றிவளைத்துக் கவ்வி நிற்கின்றது. பூமிப்பந்து எங்ஙனும் சிதறுண்டு பரந்து வாழும் ஈழத் தமிழினத்தின் ஆன்மா அந்தக் கொடூர சுற்றிவளைப்புக்குள் சிக்குண்டு கிடக்கின்றது. நமது தமிழ் உறவுகள் சகோதரங்கள் தினசரி டசின் கணக்கில் உடல் சிதறிப் பலியாகின்றமை குறித்தும், பல நூற்றுக்கணக்கில் மோசமாக காயமடைந்த அப்பாவித் தமிழர்கள் அடிப்படை மருத்துவ சிகிச்சை வசதிகள் கூட இல்லாமல் அந்தரிப்பது குறித்தும் வெளியாகின்ற செய்திகளும் தகவல…

  21. வடக்கு, கிழக்கு மக்களுக்காக என்ற பெயரில் மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு உதயம் தொலைக்காட்சி அலைவரிசை நேற்று (மே 01) ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது. ”அறிவு, ரசனை மற்றும் அரசியல் கலந்துரையாடல்கள், கலை, கலாசார?????? தொடர்ந்ந்து வாசிக்க................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_595.html ஆங்கிலத்க்டில் படிக்க.......................... http://esoorya.blogspot.com/2008/05/govt-l...-to-target.html

    • 3 replies
    • 2.1k views
  22. வளைந்து கொடுக்காத மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன்: கோத்தபாய ராஜபக்ச. தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்- வளைந்து கொடுக்காத மனிதர். நிலங்களைக் கைப்பற்றுவது இராணுவத்தின் இலக்கல்ல. விடுதலைப் புலிகளை பலவீனமாக்குவது தான் எமது நோக்கம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு வார ஏடு ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: முன்னைய ஈழப் போர்களின் போதைய இராணுவ நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இராணுவ உத்தி என்பது இராணுவத்தினர் தொடர்பானது. இராணுவத்தினருக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். இராணுவ உத்தியை வகுப்பது என்பது முற…

    • 6 replies
    • 2.1k views
  23. கே.பி வவுனியா தடுப்பு முகாமுக்கு சென்றார் திகதி: 22.06.2010 // தமிழீழம் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் கே.பத்மநாதன் அண்மையில் வவுனியாவுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. வவுனியா மகா வித்தியாலத்தில் அமைந்துள்ள முன்னாள் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாமுக்கு இவர் அழைத்து செல்லப்பட்டார் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் போராளிகளுடன் கே.பத்மநாதன் கலந்துரையாடினார் என்றும் அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவேண்டிய தருணம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்புத்திஜீவிகள் சிலர் கே.பத்மநாதனையும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு செயலர் கோத்தபாயவையும்…

  24. இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வந்திருக்கும் சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிக்சிக்கு நேற்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. சீனாவிடமிருந்து முப்பரிமாண ராடர்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இலங்கை அமைச்சர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் சீன வெளிவிவகார அமைச்சருடன பேச்சு நடத்தினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிச்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதியுடனான சந்திப்பு அலரிமாளிகையிலும் பிரதமருடனான சந்திப்பு பிரதமர் அலுவலக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.